Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தெரியாத பாதை தெளிவானபோது

Featured Replies

சாத்திரி, உங்கட ஐரோப்பிய அவலம் தொடருக்காக உங்களை சுற்றுலா போகும் நேரம் யாரும் போட்டு தள்ள வாய்ப்பிருக்கு கவனமா போய் வாருங்க. எதுக்கும் இந்த தொடர்கதையை முக்கியமான இடத்தில விட்டுட்டு போகாம் எழுதிட்டு போனால் நல்லாருக்கும் :wink: :lol:

  • 3 weeks later...
  • Replies 189
  • Views 26k
  • Created
  • Last Reply

சாத்திரி சுற்றுலா போய் வந்தும் மிகுதி தொடரை காணலையே?

சாத்திரி சுற்றுலா போய் வந்தும் மிகுதி தொடரை காணலையே?

அடிச்சது இன்னும் இறங்கேலைப்போல கொஞ்சம் பொறுங்கோ....

சாத்திரி வந்து ஒரு கிழமையாச்சு எங்க இன்னும் தொடரை தொடரக் காணவில்லை :evil:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே சுற்றுலா முடிந்து வந்ததும் உடல் நிலையும் சரியாக இல்லை அதோடை வீடும் மாறி கொண்டிருப்பதால் நேரமின்மை ஆனாலும் கதையின் தொடருக்கு ஆவலாய் காத்திருந்த உங்களிற்காய் இதோ.....

சிகரற் புகையை மேலே நேக்கி ஊதிவிட்டு மீதியை தரையயில் எறிந்துவிட்டு ரவி வாடி வா நான் நினைச்சனான் என்னடா இப்ப கொஞ்ச நாளா என்னை எதிர்த்து கதைக்கிறயெண்டு அந்த தைரியம் எங்கை இருந்து வந்ததெண்டு இப்ப தெரியிது நான் சந்தேக பட்டதும் சரியா தான் போச்சுது.

அதாலை தான் இண்டைக்கு வேலைக்கு பேகாகாமல் ஒளிச்சிருந்து பாத்தனான் என்ன நடக்குதெண்டு

அப்பிடி யென்னத்தையடி என்னட்டை இல்லாததை அவனிட்டை கண்டனி யென்றபடி சாந்தியை நெருங்கி அவளது தலை முடியை கொத்தாய் பிடித்து இழுத்து வந்து லிப்ற்றினுள் தள்ளினான்.

சிவா எதுவும் செய்ய முடியாதவனாக ரவி அவசரப்படாதை நீ நினைக்கிற மாதிரியில்லை..என்றவும் ரவி ஆவேசமாக சிவா பக்கம் திரும்பி டேய் சிவா பொத்து வாயை இது எனக்கும் மனிசிக்கும் உள்ள பிரச்சனை நீ தலையிடாதை எண்று கையை நீட்டி விரலை சுண்டியவாறு கூறிவிட்டு லிப்றினுள் நுளைந்தவன் அவனது சப்பாத்து கால் சாந்தியின் அடி வயிற்றில் இறங்கியது.

அய்யோ அம்மா என்ற சாந்தியின் அலறலுடன் லிப்ற் மூடிக் கொள்ள அதுதான் சமயமமென்று காத்திருந்த ரவியின் கால் கை எல்லாமே சாந்தியை பதம் பாத்தது. அடி வயிற்றை பொத்தி பிடித்தபடி அவன் அடிப்பதைகூட தடுக்க முடியாமல் சாந்தி லிப்றின் முலையில் சுருண்டு போய் இருந்துவிட்டாள்.

லிப்ற் அவர்கள் மாடியில் நின்றதும் ரவி சாந்தியை ஒரு கையால் தலை முடியை பிடித்து இழுத்து சென்று வீட்டை திறந்து உள்ளே தள்ளசாந்தி தட்டு தடுமாறி உள்ளே ஒடிப்போய் படுக்கையறையினுள் நுளைந்து கதைவை புூட்டி கொண்டு படுக்கையில் விழுந்தவளிள்கு தலை சுற்றி கொண்டு கண்கள் இருண்டு கொண்டு வருவதை போல இருந்தது அப்படியே மயங்கி போய் விட்டாள்.

கீழே ரவி சாந்தியை உதைந்ததையும் அவளது அலறலையும் பார்த்து திகைத்து போய் நின்ற சிவா சில கணங்களில் தன்னை சுதாகரித்தவன் தனது கை தொலை பேசியை எடுத்து காவல் துறையின் இலக்கங்களை அழுத்தி விபரத்தை கூறி விட்டு அந்த குடியிருப்பின் கீழேபேய் நின்று கொண்டான்.

; ரவியோ சாந்தியிடம் படுக்கையறையை திறக்கும்படி கத்தி கதைவை தட்டி உதைந்து பார்த்து விட்டு இரடி உனக்கு பிறகு வந்து மிச்சம் கவனிக்கிறன் என்று கத்திவிட்டு வீட்டை விட்டு வெளி யேறவும்.சில நிமிடங்களில் வந்த காவல் துறையினர் அங்கு வந்ததும் சிவா தன்னை அறிமுகபடுத்தி தான் தான் அழைத்ததாககூறி அவர்களுடன் ரவியின் வீட்டிற்கு அழைத்து சொல்லவும் நேரம் சரியாக இருந்தது.

வந்த காவல் துறையினர் ரவியை கைது செய்துவிட்டு சாந்தியின் படுக்கையறையை தட்டி தாங்கள் காவல்துறை வந்திருப்பதாகவும் பயப்படாமல் கதைவை திறக்கும்படி கூறியும் எந்தவித பதிலும் இல்லாததால் உடனடியாக முதலுதவிபிரிவை அழைத்துவிட்டு கதைவை உடைத்து உள்ளே போன காவல்துறை மயங்கி கிடந்த சாந்தியை அவசரமாக வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்து விட்டு சிவாவின் விபரங்களை பெற்று கொண்டுதேவையேற்பட்டால் அழைப்பதாக கூறி விட்டு ரவியின் வீட்டை சோதனை செய்து விட்டு ரவியை அழைத்து சென்று விட்டனர்.

வைத்திய சாலையில் சாந்தி மெல்ல மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்தாள் உடலை அசைக்க முடியவில்லை கையில் மூக்கில் என்று வயர்கள் பொருத்தபட்ட நிலையில் கட்டிலில் படுத்திருந்தாள்.மெல்ல அசயமுயன்றபோது அங்கு அவசரமாக நுளைந்த தாதியர் இருவர் அவரை அசைய வேண்டாம் என கூறிய போதுதான் தான் வைத்திய சாலையில் இருப்பதை சாந்தி உணர்ந்தாள்.

வந்த தாதியரில் ஒருவர் சாந்திக்கு கையில் ஒரு ஊசியை போட்டுவிட்டு. உங்களிடம் காவல்துறை விசாரணைக்கு வருவார்கள்.அத்துடன் உங்களுடன் வந்த உங்கள் நண்பர் ஒருவரும் வெளியில் காத்து நிக்கிறார்.அவரை அனுப்புகிறோம் என்று விட்டு போய் விட்டனர்.

சில நிமிடங்களில் சாந்தியின் அறையில் நுளைந்த சிவா சாந்தியை பார்த்படி நான் சரியா பயந்திட்டன் டொக்ரர் சொன்னார் நீங்கள் உடல் மன நிலையாலை சரியா பலவீன பட்டு இருக்கிறியள் அதுதான் மற்றபடி பெரிய பிரச்சனை இல்லையெண்டார் இப்பதான் நிம்மதியாயிருக்கு எண்றவாறு சாந்திக்கு நடந்தவற்றை விபரித்தான்.

அசையாமல் எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்த சாந்தி .சிவா நீங்கள் ஏன் பொலிசை கூப்பிட்டனீங்கள்.இனி இது எங்கை போய் முடிய போகுதோ தெரியேல்லை.கடவுளே இனி நான் வீட்டு காரருக்கு என்ன சொல்ல மனிசனை பொலிசிலை பிடிச்சு குடுத்திட்டாள் எண்டு எல்லாசனமும் இனி கதைக்கபோகுது.இனி ரவி வேறை வெளியிலை வந்து பிரச்சனை வளர போகுதே ஒளிய குறையாது பேசாமல் விட்டிருந்தா நான் அப்பிடியே செத்து போயிருப்பன் ஒரு பிரச்சனையும் இல்லை .

கதிரை ஒண்ரை எடுத்து சாந்தியின் அருகில் போட்டு அமர்ந்த சிவா.

சாந்தி வடிவா கேளும் அப்போதை நான் பொலிசை கூப்பிடாட்டிலும் வேறை யாராவது கட்டாயம் கூப்பிட்டிருப்பான்.அதை விட இப்ப பொலிஸ் உங்களிட்டை வாக்கு மூலம் எடுக்க வருவினம் உங்களிற்கு பாசை பிரச்சனையெண்டா என்ரை பெயரை சொல்லுங்கோ நான் உதவி செய்யிறன் வாக்கு மூலம் குடுக்க.

ஆனால் நீங்கள் குடுக்கிற வாக்கு மூலத்தை பொறுத்துதான். ரவியை பற்றின முடிவுகளை பொலிஸ் எடுக்கும் இப்ப ரவிக்கு எதிரா சரியான சாட்சியள் பக்கத்து வீட்டு காரனின்ரை சாட்சி எண்டு கனக்க இருக்கு. நீங்கள் இன்னமும் இவ்வளவும் நடந்தா பிறகும் பத்தாம் பசலித்தனமா புருசனை காப்பாத்திறணெண்டு வெளிக்கிட்டா.அது நீங்களே உங்கடை தலையிலை மண்ணள்ளி போடுற மாதிரி முடியும்.

ரவி நாளைக்கு வெளியிலை வந்து இதை தான் தொடர போறான். அதாலை இது சரியான சந்தர்ப்பம் உங்கடை நன்மைக்கு சொல்லுறன் யோசிச்சு முடிவெடுங்கோ.

அதோடை இப்ப ரவிக்கு எல்லா ஆத்திரமும் என்னிலை வெளியிலை வந்தாலும் முதல் என்னோடைதான் கொழுவுவான். எனக்கு பிரச்:சனையில்லை நான் வேறை இடம் மாறி போடுவன்.பிறகு நீங்களாச்சு ரவியாச்சு கொங்ச நேரத்திலை பொலிஸ் வரும் ரவிக்கு எதிரா வாக்கு மூலம் குடுக்கிறதா இல்லையா எண்டதை யோசிச்சு முடிவெடுங்கோ நான் வெளியிலை நிக்கிறன்.

எண்றவாறு சிவா போய்விட சாந்திக்கு இந்த உலகத்திலிருந்து தன்னை மட்டும் தனியே வெளியே தூக்கி போட்டு விட்டதை போன்றதொரு உணர்வு.கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி சிவா சொல்லுறதும் நியாயமாக பட்டாலும் பின்னர் புருசனை யெயிலுக்கு அனுப்பினவள் எண்று தனது தாய் தந்தையரே தன்னுடன் கதைப்பார்களா??சரி அப்pடித்தான் செய்தாலும் அடுத்து தான் என்ன செய்வது ?? அல்லது பேசாமல் ரவியுடன் மீண்டும் சேர்ந்தாலும் வாழ ஏலாது அது நிச்சயம் ???பேசாமல் தற்கொலை செய்து விட்டால் எல்லாத்திற்கும்ஒரு முடிவு வருமா???

என்று யோசித்தவள் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தாள். :arrow:

உறவுகளே சாந்தி எடுத்த முடிவு எப்படிப்பட்டது ரவிக்கு எதிரான முடிவா?? அல்லது ரவியுடன் சேர்ந்து வாழ்ந்தாளா?? அல்லது தற்கொலை செய்து கொண்டாளா?? உங்கள் ஊகம் என்ன ????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியாரே தெரியாத பாதை தெளிவானபோது மறுபடி கண்டதில் மகிழ்ச்சி.. ம் என்ர ஊகம் சாந்தி நடந்ததெல்லாத்தையும் பொலீஸ்க்கு சொல்வா. :wink: :P

http://www.yarl.com/forum/viewtopic.php?t=8594

இந்தக்கதையைப்பாருங்க.. இதில உள்ள மாதிரி பேசாமல் இரண்டு போட்டிட்டு பொலிஸ்க்கு அடிச்சுவிட கதை முடிஞ்சுது. :wink: :P

ஆகா சாத்திரி கதையை தொடர்ந்தமைக்கு நன்றி.

அதுசரி எங்கட ஊகம் இருக்கட்டும் உங்கட ஊகத்துல கதையை முடியுங்கோ.

அப்புறம் நாங்கள் ஒன்டு சொல்லப் போய் நீங்கள்:

ஒன்டு சொல்லப்போய் கதையை குழப்பாமல் நீங்களே எழுதுங்கோ.

முடிவுக்கு காத்திருக்கிறோம்

தொடர் கதையின் அடுத்த பாகத்தை தொடர்ந்தமைக்கு நன்றி சாத்திரி. நேரம் கிடைக்கவில்லை என்றால் அவசரப்பட்டு சுருக்கிவிடாமல் அத்துடன் கதையை எங்களுக்காக மாற்றால் அதன் போக்கிலேயே எழுதி முழுமையாக தாருங்கள்.

ம்ம்..நானும் ஊகிக்க விரும்பவில்லை சாத்திரி அண்ணா...

சாந்தியின் எதிர் காலத்தை நீங்களே சொல்லுங்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எப்படி ஊகித்தாலும் கதை அதன் உண்மை போக்கிலேயே போகும் ஆனாலும் உங்கள் ஊகங்களையும் தெரிந்து கொண்டால் ஒரு வித்தியாசமான தொடராக இருக்குமல்லவா அதனால் தான் கேட்டேன் மற்றபடி கதை முடிய இன்னும் பல தொடர் உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன்

இப்பத்தான் முழுக்கதையையும் வாசிச்சு முடிச்சனான் சாத்திரி.நல்லா எழுதிறீங்கள்.ரவி என்ன சைக்கோவா...காலால எல்லாம் அடிப்பினமா?கடவுளே...

அடுத்த பகுதியைக் கெரியா எழுதுங்கோ.

இப்பத்தான் முழுக்கதையையும் வாசிச்சு முடிச்சனான் சாத்திரி.நல்லா எழுதிறீங்கள்.ரவி என்ன சைக்கோவா...காலால எல்லாம் அடிப்பினமா?கடவுளே...

அடுத்த பகுதியைக் கெரியா எழுதுங்கோ.

சாத்திரி கதையை மீண்டும் தொடர்ந்தமைக்கு நன்றிகள்....

எனது ஊகம் சாந்தி ரவியைப் பற்றி உண்மைகள் எல்லாம் பொலிசிடம் சொல்லுவார்...

யோவ் சாத்திரி

ஒழுங்காய் கதையில் எந்தவித கற்பனைகளுக்கும் இடம் கொடுக்காமல் உள்ளதை உள்ளபடியே எழுதப் பாரும். இல்லையேல் வதந்தி பரப்புகின்றீரென்று உம்மையே உள்ளே தள்ள வேண்டிவரும். :roll: :lol:

வணக்கம் சாத்திரி சாந்தின்ரை முடிவை எங்களுட்டைக் கேட்டு கதையை மாற்றாமல் இருந்தா காணும் ........ எங்கடை களத்திலை இருக்கிற ஆட்கள் கட்டாயம் சொல்லுவினம் பொலிசிட்டை போட்டுக் குடுக்கத்தான் வேணுமெண்டு ஆனா. .சாந்தின்ரை குணத்தைப் பாத்தா பெற்றேர் ஊர் உறவுக்கு பயந்த பிள்ளை மாதிரிக் கிடக்கு ஆனா படியால் புருஷனைக் காப்பாத்திவிட்டு வேறு முடிவுவை எடுக்கலாம் (ஆனா அது தற்கொலை முயற்சியாக இருக்காது)

வணக்கம் தாத்தா

நானும் உங்கள் கதையின் ரசிகை

உங்கள் கதை நன்றாக உள்ளது மிகுதிப்பாகத்தையும் எதிர் பார்க்கின்றோம்

சாத்திரியண்ணா என்னாச்சு உங்கட கதைக்கு சாந்தி இன்னுமாஒரு முடிவுக்கு வரேல்ல.

சாத்திரி ஒரு தரம்

சாத்திரி இரண்டு தரம்

சாத்திரி மூன்று தரம்

சீக்கிரம் வந்து கதையின் அடுத்த பகுதியை தாருங்கள்.

எங்கை போட்டார் இந்த சாத்திரி?? :evil: என்ன கதை தொடருமா இல்லையா?? :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் இப்ப மரத்தடியில கிளியோட இல்லை... அதால தான் அவர் கதை நிறுத்தீட்டார்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா ஐயா சாத்திரி ஐயா

வாங்கோ வாங்கோ கெதியா வாங்கோ :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வணக்கம் நான் வீடு மாறியதில் கணணி இணைப்பை மீண்டும் பெற தாமதமாகி விட்டது எனவேதான் கள பக்கம் வரமுடியவில்லை இனி தொடருவேன்

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வணக்கம் நான் வீடு மாறியதில் கணணி இணைப்பை மீண்டும் பெற தாமதமாகி விட்டது எனவேதான் கள பக்கம் வரமுடியவில்லை இனி தொடருவேன்

செல்லலம்ம்ம்ம்ம்ம்,,,, ஐ***********$$$$$$..... :wink: :):lol:

நானும் ஏதோ, சாட்றீ ஐரோப்பிய அவலமெண்டுபோட்டு டென்மார்க் ஹீரோயினோட தனகினவர்(அதானப்பா உண்மையை எழுதினவர்), அந்த ஹீரோயினியின் அடாவடி பக்தர்கள் சாட்றியை கிட்னாப் பன்னீட்டாங்களோ எண்டு நினைச்சுவிட்டேன்,, :oops: :) :cry: அப்படி ஒண்டு நடக்கல்லையா? :roll: :? :shock: சா, யஸ்ற் மிஸ்,,, :evil: :evil:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆகதையை எழுதிட்டு அனுப்புவமெண்டா :twisted: வருகுது இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆ என்றால் எப்படி சாத்திரியாரே

அ ஆ இ என்று போடுங்கள் வரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.