Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனி நாடு அல்லாத ஒரு கூட்டாட்சித் தீர்வுக்கு பிரபாகரன் தயாராக இருக்கவில்லை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Monday, December 20th, 2010

தனி நாடு அல்லாத ஒரு கூட்டாட்சித் தீர்வுக்கு பிரபாகரன் தயாராக இருக்கவில்லை! எரிக் சோல்ஹைம் கருத்து

சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்கு குறித்து அமெரிக்கா திருப்தி கொண்டிருக்கின்றமையும், மீண்டும் போர் மூண்டமைக்கு நோர்வே காரணமல்ல என்கின்றமை குறித்தும் தான் மகிழ்ச்சி அடைவதாக சமாதான தூதுவராக பணியாற்றிய எரிக் சோல்ஹைம் ஆப்தன்போஸ்தன் நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்கா சமாதான முயற்சியில் அதீத ஈடுபாடு காட்டியது. எனது நோக்கு நிலையில் வேறேதும் மறைமுக நோக்கங்கள் அற்ற, நேர்மையான ஈடுபாட்டினை அமெரிக்கா கொண்டிருந்தது என்றார்.

சமாதான முயற்சி மிக நுணக்கமாகக் கையாளப்பட்டது.

அமெரிக்காவின் சிறந்த ஒத்துழைப்பு இருந்தது. நோர்வேயிடமிருந்து பெற்ற தகவல்களை அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்க மாட்டார்கள் என்பது எமக்குத் தெரியும். அதேபோல இந்தியாவும் எமக்கு சிறந்த ஒத்துழைப்பினை வழங்கியிருந்தது.

சமாதான முன்னெடுப்பில் இரண்டு அடிப்படையான சவால்கள் இருந்தன. ஒன்று சிறிலங்கா அரசாங்கக் கட்சிகளுக்கிடையிலான ஒத்துழையாமைச் சிக்கல். மற்றையது தமிழர்களுக்கான தனி நாடு அல்லாத ஒரு கூட்டாட்சித் தீர்வுக்கு பிரபாகரன் தயாராக இருந்தாரா என்பதாகும்.

அவர் அதற்குத் தயாராக இருக்கவில்லை என்பதையே பல நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இவ்வாறு எரிக் சோல்ஹைம் ஆப்தன்போஸ்தன் நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.

Short URL: http://thaynilam.com/tamil/?p=713

  • கருத்துக்கள உறவுகள்

அரசிடமும் சர்வதேசத்திடமும்

பலமுறை தமிழருக்கான ஒரு தீர்வை வையுங்கள் ஆராய தயாராக இருக்கின்றோம் என்று கேட்டாரே.................

முழுப்பூசனிக்காயை மூடநினைக்கிறார் சோல்கெய்ம்

வரலாற்றில் பதிவாவார்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஒத்துழைப்பைத் தந்தது என்ற சொல்லி உண்மையை உளறி விட்டாரே!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=wIEerTp3r1Y

அவனவன் கோவணம் (வாழ்வு ).... அவரவர் கையில் என்பதை மறைமுகமாக சொல்லுறார்.. கிந்தியா... அண்டார்டிக்கா.... ஆஸ்திரிலியா... என அனைவருக்கும் ஒரு கிளுகிளுப்பு ஏற்படுத்தும் வண்ணம் ஈழ தோழர்கள் அணுக்கரு ஆராய்சிகளில் ஈடுபடவேண்டும் .. அப்பத்தான் எவனும் கை வைக்க யோசிப்பான் ..ரூம் போட்டு பலபல டிஸ்கசன்களை மேற்கொள்ளவேணும்... நமக்கு இடமில்லை என்றால் உலத்தில் எவனுமே வாழவே தேவையில்லை...(அந்தரும் பரலோகம் போகுஸ்குண்ணாரு) கெஞ்சுவாதோ கூத்தாடுவதோல அல்ல இப்ப உலக நியதி.. கூழுக்கும் கஞ்சிக்கும் தன் நாட்டு மக்கள் லாட்டரி அடித்தாலும்(கிந்தியா).... அறிவியல் வலிமை...இதான் உலக நியதி.. முதலில் ஈழ த்தினை எவனும் அங்கரிக்க தேவையே இல்லை.. பெட்ரோல் இல்லையென்றால் அவர்கள் நடந்து போவார்கள்... இந்த மனநிலை அவரவர்க்கு உருவாக வேண்டும்.. அப்பத்தான் சில உயிர்களாவது மிஞ்சும்.... இனி வரும் காலத்தில் .. மூன்றாம் உலக போருக்கு ஏற்ற அளவில் ஈழ தோழர்கள் டங்களை தயார் செய்யவேணும்.. வெறும் ஈழம் வடக்கு கிழக்கு என கும்மியடிக்காமல் மொத்த இலங்கையும் என து என்று கூறுதல் வேண்டும் ... அதை தெற்காசிய ரவுடிகள் கணகில் எடுத்து கொண்டு சிங்களவர்க்ளுக்கு ஏதாவாது ஒரு தீவை ஒரிசபக்கம் ஒதுக்கி கொடுப்பார்கள்..அதான் அவர்களினட புர்வீக இடம்.... அதான் இதற்கு தீர்வு ரைட்டு. :wub: ..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

தனிநாடு அல்லாத ஒரு கூட்டாட்சித் தீர்வுக்குப் பிரபாகரன் தயாராக இல்லாததால் எமது சமாதான முன்னெடுப்பில் சவால்கள் தோன்றின. இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் இலங்கை இனப்பிரச்சினையில் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம். நாளிதழொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எமது சமாதான முயற்சிகளில் அமெரிக்கா அதீத ஈடுபாடு காட்டியதுடன் திருப்தியும் வெளியிட்டது. இந்தியாவும் எமக்குச் சிறந்த ஒத்துழைப்பினை வழங்கியிருந்தது. என்னைப்பொறுத்த வரையில் அமெரிக்கா இலங்கையின் இனப் பிரச்சினை தொடர்பாக மறைமுக நோக்கங்கள் அற்ற நேர்மையான ஈடுபாட்டைக் கொண்டிருந்தது என்று சொல்வேன்.

சமாதான முயற்சிகள் யாவும் மிகவும் நுணுக்கமான முறையில் கையாளப்பட்டன. அமெரிக்காவின் சிறந்த ஒத்துழைப்பும் கிடைத்தது. எம்மிடமிருந்து பெற்ற தகவல்களை அவர்கள் ஊடகங்களுக்குத் தெரி விக்கமாட்டார்களென நாம் உறுதியாக நம்பினோம்.

ஆனால் சமாதான முன்னெடுப்பில் இரு அடிப்படையான சவால்கள் காணப்பட்டன. இதில் முதலாவது இலங்கையரின் கட்சிகளுக்கிடையிலான ஒத்துழையாமைப் போக்கு. அடுத்தது தமிழர்களுக்கான தனிநாடு அல்லாத ஒரு கூட்டாட்சித் தீர்வுக்குப் பிரபாகரன் தயாராக இல்லாமை. இதனைப் பல நிகழ்வுகள் எமக்கு உணர்த்தின என அவர் மேலும் தெரிவித்தார். பிரபாகரன் கூட்டாட்சியை ஏற்கவில்லை ஆனால் அதனை விட மிகவும் இலகுவான இடைக்கால அரசை நிறுவுமாறு அவர்கள் கேடார்களே அதனைக்கூட சொகெய்ம் அவர்களால் உருவாக்கி கொடுக்க முடியவில்லை.

சொல்கெய்ம் அவர்களே இடைக்கால நிர்வாக சபையினை புலிகள் பரிந்துரைத்தது பேச்சுவார்த்தை தடங்கல் அடைய கூடாது என்பதற்கே என்பதனை மறக்க வேண்டாம்.

Add new comment

ஈழ நாதம்

... உண்மைகளை ....

... இந்த கருத்து சர்வதேச நாடுகள் அதிலும் மேற்குலக அரசுகளிடம் உறுதியாக எடுபட்டது! இதனை மாற்ற கலாநிதி அன்ரன் பாலசிங்கம், பேச்சுவார்த்தையின் போது பெரிதும் முயன்றார் ... ஆனால் தமிழ்ச்செல்வன் போன்றவர்களின் செயற்பாடுகள் அவரின் முயற்சிகளை தோல்வியடையச் செய்தது!!!! ... அது சிங்களத்தின் யுத்த முனைப்பிற்கு மேற்கும் பச்சைக்கொடி காட்ட இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்கி விட்டது!!

  • கருத்துக்கள உறவுகள்

' :Dகிராம சபைதான் தீர்வு' என்று சொன்ன மஹிந்தரிடம் , கூட்டாட்சி [ CONFEDERATION ] பற்றி பேசுவது மடமைத்தனம்

... உண்மைகளை ....

... இந்த கருத்து சர்வதேச நாடுகள் அதிலும் மேற்குலக அரசுகளிடம் உறுதியாக எடுபட்டது! இதனை மாற்ற கலாநிதி அன்ரன் பாலசிங்கம், பேச்சுவார்த்தையின் போது பெரிதும் முயன்றார் ... ஆனால் தமிழ்ச்செல்வன் போன்றவர்களின் செயற்பாடுகள் அவரின் முயற்சிகளை தோல்வியடையச் செய்தது!!!! ... அது சிங்களத்தின் யுத்த முனைப்பிற்கு மேற்கும் பச்சைக்கொடி காட்ட இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்கி விட்டது!!

நீங்கள் சொல்லுறதிலை துளி கூட உண்மை இருக்கிற மாதிரி தெரியவில்லை... வரலாறுகள் அப்படியாக இருக்கு...

மேலை புலிகளுக்கு தனிநாட்டை விட வேறை விருப்பு இருக்கவில்லை எண்டு சொல்லக்கு முன்னம் சிங்களவர் கட்ச்சிகளை பற்றி ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார் சொல்கைம்... அதை சொன்னவர் தமிழருக்கு தமிழீழத்தை விட வேறை தீர்வு இல்லை எண்டு விளங்கிக்கொள்ளாமலா அந்த கருத்தை சொன்னவர் எண்டுறீயள்... ???

சிங்களவன் தமிழனுக்கு எதுவும் கொடுக்க விரும்பவில்லை எண்டது சொல்கைமுக்கும் நன்கு தெரியும்... இதை பற்றி சொல்கைமுடன் புலிகள் பேசாது இருக்கவும் வாய்ப்பு இல்லையே...??

Edited by தயா

... உண்மைகளை ....

... இந்த கருத்து சர்வதேச நாடுகள் அதிலும் மேற்குலக அரசுகளிடம் உறுதியாக எடுபட்டது! இதனை மாற்ற கலாநிதி அன்ரன் பாலசிங்கம், பேச்சுவார்த்தையின் போது பெரிதும் முயன்றார் ... ஆனால் தமிழ்ச்செல்வன் போன்றவர்களின் செயற்பாடுகள் அவரின் முயற்சிகளை தோல்வியடையச் செய்தது!!!! ... அது சிங்களத்தின் யுத்த முனைப்பிற்கு மேற்கும் பச்சைக்கொடி காட்ட இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்கி விட்டது!!

நீர் என்ன புதுக்கரடி விடுகிறீர்.

ஒரு இடைக்கால நிர்வாகத்தை பெற்று தர வக்கில்லாமல் இருந்த சோல்கைம் இப்ப கதை சொல்கிறார்.

பிறகேன் உலக்கெல்லாம் திரிந்து சட்ட நிபுனர்களை சந்தித்து ஒரு வரபை தயாரித்து கொடுத்தார்கள்.

சொல்கைம் நோர்வே தமிழர்களின் கூட்டத்த்தில் இப்படி சொல்லட்டும் பார்ப்பம்.

நீர் என்ன புதுக்கரடி விடுகிறீர்.

... முன்பு சில தடவை இதைப்பற்றி எழுதி ... அந்தப்பட்டங்களெல்லாம் இலவசமாக ...!!! ... மீண்டும் .... ஏன்? வேண்டாம்!

சொல்ஹேயம் கிறிஸ்மஸ் போதையில் உளறியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.