Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பீற்றூட் கறி.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி அண்ணை ஜேர்மனியிலை உங்களுக்கு டாக்குத்தரிட்டை 10 € கட்டினால் மூன்று மாதத்துக்கு குளிசை குறைஞ்ச விலையிலை கிடைக்குது.... மற்ற நாட்டுக்காரர் என்ன செய்வது. :unsure:

சிறித்தம்பி! நான் அந்த பத்தும் கட்டத்தேவையில்லை.அவ்வளவுத்துக்கு செல்வாக்கான வருத்தங்களை வைச்சிருக்கிறன் :icon_idea:

  • Replies 56
  • Views 18.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி! நான் அந்த பத்தும் கட்டத்தேவையில்லை.அவ்வளவுத்துக்கு செல்வாக்கான வருத்தங்களை வைச்சிருக்கிறன் :icon_idea:

குமராசாமி அண்ணை இப்படி செல்வாக்கான வருத்தங்களை வைச்சுக் கொண்டு, குசும்பாய் இருப்பதை நினைக்க..... ஒரு மாதிரி இருக்குது.

உங்களின் மனோதிடத்தை பாராட்டுகின்றேன். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பீற்ரூட் நல்ல சாப்பாடு மடடுமல்ல

எழுபதுகளுக்குப் பின் தமிழீழ நிலப்பரப்பில் பலர் பயிரிட்டு வந்துள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த காய் கறியும் அவித்தால் வைட்டமின் எல்லாம் அழிந்திடும் என்று எங்கேயோ வாசித்த ஞாபகம்.

சபேஷ், Pressure Cookerல் சமைத்தால் கூடியளவு விற்றமின்களை பாதுகாக்க முடியும்.

cooker2.JPG

உண்மை தான் சபேஸ் அண்ணா!

மரக்கறிகளை வெட்டிய பின்பு கழுவக் கூடாது என்று சொல்வார்கள் காரணம் அதில் உள்ள சத்துக்கள் கழுவும் நீருடன் போய்விடும் என்று பொதுவாக கழுவிய பின்பே மரக்கறிகளை வெட்டுவார்கள்.

பீற்றூட்டை அரை அவியல், அல்லது அவிக்காமலும் தோலை நீக்கிய பின்னும் சாப்பிடலாம் (கரட்டையும் பச்சையாக பலர் சாப்பிடுவார்கள். ஆனால் பீட்ரூட்டின் இலையை அவித்த பின்பே சாப்பிடவேண்டும் என்று சொல்லுவார்கள்.

குட்டி, நீங்கள் சொல்வது சரி. மரக்கறியை கழுவிய பின்பே.... வெட்ட வேண்டும்.

ஆனால் மீனை, வெட்டிய பின்பே... கழுவ வேண்டும்.

காரணம் மீன் நீரில் வாழ்வதால்..... அதன் வெளிப்பக்கம் கழுவியே இருக்கும். :)

fish-animation.gifani-fish-02.gifFISHAN.GIF

மீனின் வயிற்றுப் பகுதியில் நீர் பட்டிருக்க சந்தர்ப்பம் இல்லையாததலால்... :)

மீனை... வெட்டிய பின்பு... குளிர் நீரில் நன்கு அலசி கழுவ வேண்டும். :D

.

Edited by தமிழ் சிறி

எங்கட வீட்டில பீற்றூட் சம்பல் தான் செய்வோம். சம்பல் செய்வது போல், பீற்றூட்டை அவித்து தோலை நீக்கி விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகுதூள், கறிவேப்பிலை, தேசிக்காய் புளி, உப்பும் சேர்த்து செய்வது வழக்கம்.

பீட்ரூட்டை அவிக்காமல் கரட் ஸ்க்ரேப் பண்ணுவது போல் மெல்லியதாக சீவி சம்பல் போட்டால் சுவையாக இருக்கும்.

  • 4 weeks later...

kohlrabi.jpgkohlrabi.jpg

தப்பிலி, நான் வெள்ளை முள்ளங்கி (Kohlrabi) இலையில் மாசிக்கருவாடு போட்டு வறை செய்துள்ளேன். ஆனால், பீற்றூட் இலையில் வறை செய்து பார்க்கவில்லை.

இப்போ..... குளிர்காலம் என்ற படியால்... பீற்றூட் இலை கிடைக்காது. வரும் கோடை காலத்தில் நிச்சயம் செய்வேன்.

Kohlrabi ஜேர்மன் பெயர் என நினைக்கின்றேன். ஆங்கிலப் பெயரும் Kohlrabiஆ தப்பிலி.

சிறி இந்த முறை வரும் கோடைக்கு வித்தியாசமாய் ஏதும் பயிரிடலாமென இணையத்தில் தேடிப்பார்த்தேன். Kohlrabi தான் வந்தது. சுண்டலுக்கு இலையும், கறிக்கு கிழங்கும் நன்றாக இருக்குமென நினைக்கிறேன். இங்கும் Kohlrabi என்றுதான் உள்ளது. ஊரில் முள்ளங்கி அதிகம் சாப்பிட்டதில்லை. இந்த முறை பயிரிட்டுப் பார்ப்போம். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறி இந்த முறை வரும் கோடைக்கு வித்தியாசமாய் ஏதும் பயிரிடலாமென இணையத்தில் தேடிப்பார்த்தேன். Kohlrabi தான் வந்தது. சுண்டலுக்கு இலையும், கறிக்கு கிழங்கும் நன்றாக இருக்குமென நினைக்கிறேன். இங்கும் Kohlrabi என்றுதான் உள்ளது. ஊரில் முள்ளங்கி அதிகம் சாப்பிட்டதில்லை. இந்த முறை பயிரிட்டுப் பார்ப்போம். :D

தப்பிலி, முள்ளங்கி கிழங்கில் பால் கறி சமைத்தால்.... அந்தமாதிரி இருக்கும். :)

Kohlrabi மூன்று மாதத்திற்குள் விளையும் கிழங்கு என நினைக்கின்றேன்.

மாசிக் கடைசியில் வெப்பமான இடத்தில் வைத்து நாற்று நடலாம்.smileys-free-download-2111.gif

ஒரேயடியாக விதைகளைப் போடாமல் ஒவ்வொரு மாத இடைவெளிவிட்டு விதைகளை முளைக்கப் போட்டால்... நவம்பர் மாதம் மட்டும் விளையக்கூடிய கிழங்கு தான் இது. விளைந்தவுடன் சொல்லுங்கள் அருமையான, கொலராபி பால் கறி செய்யும் முறையை பதிகின்றேன். :D

நன்றி சிறி. நீங்களும் மரக்கறித் தோட்டம் செய்யபவராக இருந்தால் ஒரு தனித் திரி தொடங்கி விடயங்களைப் பகிர்ந்து கொள்வது நல்லது. பார்ப்போம். யாழில் தோட்டம் செய்பவர்கள் யாராவது இருந்தால் உதவியாக இருக்கும். நாங்களும் புதியவற்றை அறிந்து கொள்ளலாம். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி. நீங்களும் மரக்கறித் தோட்டம் செய்யபவராக இருந்தால் ஒரு தனித் திரி தொடங்கி விடயங்களைப் பகிர்ந்து கொள்வது நல்லது. பார்ப்போம். யாழில் தோட்டம் செய்பவர்கள் யாராவது இருந்தால் உதவியாக இருக்கும். நாங்களும் புதியவற்றை அறிந்து கொள்ளலாம். :D

முன்பு நான் மரக்கறித் தோட்டம் செய்தனான் தப்பிலி. ஆனால் அங்கு வரும் நத்தைகளால்.... எனது பயிரை பாதுகாக்க முடியவில்லை.

ஒரு இரவில் எல்லா இலைகளையும் கடித்து, பயிரை நாசம் பண்ணிவிடும்.

நத்தைக்கு போடும் மருந்து சரியான விலை,என்ற படியால்.... மரக்கறி செய்யும் எண்ணத்தை கைவிட்டு.... ரோஜாத் தோட்டமாக்கி விட்டேன். :)

எனக்குத் தெரிந்து, ஈழப்பிரியன் தோட்டம் செய்பவர்.

உங்கள் தோட்டத்தில் மஞ்சள் (செடி) போஞ்சி, பச்சை போஞ்சி நடுங்கள். ஆறு கிழமையில் பலன் தரும்.

கொடி போஞ்சியும் உள்ளது. அதற்கு தடி கட்டி கனக்க மினக்கெடவேணும்.

schnecken-24446.gifschnecke_0053.gif

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தோட்டத்தில் மஞ்சள் (செடி) போஞ்சி, பச்சை போஞ்சி நடுங்கள். ஆறு கிழமையில் பலன் தரும்.

கொடி போஞ்சியும் உள்ளது. அதற்கு தடி கட்டி கனக்க மினக்கெடவேணும்.

உண்மை தான் சிறி அண்ணா.... கோடி போஞ்சிக்கு தடி கட்டி மினக்கெடுரதிலும் பார்க்க செடி நல்லது. நான் போன முறை கவனிக்காமல் வாங்கி, எதிர்பார்த்த பலன் கிடைக்க இல்லை. பதி போட்டு நடுகிறதை விட, நேரடியாவே நிலத்தை பதப்படுத்தி நாடும் போது எனக்கு செழிப்பாக வளர்கிறது.

முன்பு நான் மரக்கறித் தோட்டம் செய்தனான் தப்பிலி. ஆனால் அங்கு வரும் நத்தைகளால்.... எனது பயிரை பாதுகாக்க முடியவில்லை.

ஒரு இரவில் எல்லா இலைகளையும் கடித்து, பயிரை நாசம் பண்ணிவிடும்.

நத்தைக்கு போடும் மருந்து சரியான விலை,என்ற படியால்.... மரக்கறி செய்யும் எண்ணத்தை கைவிட்டு.... ரோஜாத் தோட்டமாக்கி விட்டேன். :)

schnecken-24446.gifschnecke_0053.gif

நத்தைகளுக்கு பியர் என்றால் நல்ல விருப்பம். ஒரு பாத்திரத்தை நிலமட்டம் வரை பதித்து விட்டு அதற்குள் பியரை ஊற்றினால் அதை குடிக்க வரும் நத்தைகள் பாத்திரத்திற்குள் விழுந்து இறந்துவிடும். :)

Edited by thappili

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் சிறி அண்ணா.... கோடி போஞ்சிக்கு தடி கட்டி மினக்கெடுரதிலும் பார்க்க செடி நல்லது. நான் போன முறை கவனிக்காமல் வாங்கி, எதிர்பார்த்த பலன் கிடைக்க இல்லை. பதி போட்டு நடுகிறதை விட, நேரடியாவே நிலத்தை பதப்படுத்தி நாடும் போது எனக்கு செழிப்பாக வளர்கிறது.

சபேஷ், போஞ்சி செடியை நேரடியாகவே நிலத்தில் நடுவது நல்லது. காரணம் அதன் விதையை நிலத்தில் போட்டவுடன் முளைவிட ஆரம்பித்து விடும்.

ஆனால் தக்காளி, கத்தரி, மிளாகாய் போன்றவற்றை முதலில் வேறு ஒரு வெப்பமான இடத்தில் முளைக்கப் போட்டு.... 2, 3 அங்குலம் வளர்ந்த பின் நிலத்தில் நடலாம். வேளைக்கே நிலத்தில் விதை போட்டால் தக்காளியை தவிர மற்றவைக்கு தேவையான சூரிய வெப்பம் கிடைக்காது என நினைக்கின்றேன்.

4458796651_f31284ba0c_o.jpg95__640x360_P1080040_thai_auberginen_jungpflanzen.JPG

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நத்தைகளுக்கு பியர் என்றால் நல்ல விருப்பம். ஒரு பாத்திரத்தை நிலமட்டம் வரை பதித்து விட்டு அதற்குள் பியரை ஊற்றினால் அதை குடிக்க வரும் நத்தைகள் பாத்திரத்திற்குள் விழுந்து இறந்துவிடும். :)

தப்பிலி, நீங்கள் சொன்ன முறையையும் செய்து பார்த்தேன்....

ஒவ்வொரு நாள் காலையிலும் இறந்த கன நத்தைகளை தூக்கி எறிந்தது தான் மிச்சம்.

அடுத்த நாள் எங்கிருந்தோ... வேறு நத்தைகள் பியர் குடிக்க வருகின்றது.

வீட்டிற்கு அருகில், பெரிய புல் வெளி இருப்பதால் இது சாத்தியப் படவில்லை.

66071.jpgbierfalle_menue.gif

சிறி இங்கு நத்தைக்கு நல்ல கிராக்கி.இனி நத்தைகளை எறியாமல் இங்கை அனுப்புங்கோ.இரன்டு பேரும் விரைவில் தொழில் அதிபலாகி விடலாம். :lol:

[

பெரிய புல்வெளி இருந்தால் கொஞ்சம் கஷ்டம். எனது தோட்டத்தில் தவளைகளும் உண்டு. அதுவும் நத்தைகளை சாப்பிடும். உள்ளி நாட்டினாலும் நத்தை வராது. வெள்ளைப்பூண்டை எந்த காலநிலையிலும் நடலாம். மிகவும் இலகுவான பயிர். நத்தை விரும்பிச் சாப்பிடும் தாவரத்திற்குப் பக்கத்தில் உள்ளி நாட்டிவிடுவேன்.

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/3104302.stm

'Nematodes ' எனும் நுண்ணுயிரையும் பாவிக்கிறார்கள். விலை அதிகம்.

Edited by thappili

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறி இங்கு நத்தைக்கு நல்ல கிராக்கி.இனி நத்தைகளை எறியாமல் இங்கை அனுப்புங்கோ.இரன்டு பேரும் விரைவில் தொழில் அதிபலாகி விடலாம். :lol:

சஜீவன், இங்கு தோட்டத்திற்கு கோது இல்லாத நத்தை தான் அதிகமாக வரும்.

அதுக்கு, நல்ல கிராக்கி என்றால்.... சொல்லுங்கோ இப்ப செய்யிற வேலையை ராஜினாமாப் பண்ணிப் போட்டு..... smilie_be_069.gif

ஒரு கிழமைக்கு ஒரு லொறி நத்தை ஏற்றுமதி செய்யிறன். கெதியிலை தொழிலதிபராகிவிடலாம். :lol:

பெரிய புல்வெளி இருந்தால் கொஞ்சம் கஷ்டம். எனது தோட்டத்தில் தவளைகளும் உண்டு. அதுவும் நத்தைகளை சாப்பிடும். உள்ளி நாட்டினாலும் நத்தை வராது. வெள்ளைப்பூண்டை எந்த காலநிலையிலும் நடலாம். மிகவும் இலகுவான பயிர். நத்தை விரும்பிச் சாப்பிடும் தாவரத்திற்குப் பக்கத்தில் உள்ளி நாட்டிவிடுவேன்.

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/3104302.stm

'Nematodes ' எனும் நுண்ணுயிரையும் பாவிக்கிறார்கள். விலை அதிகம்.

தப்பிலி உங்கள் தோட்டத்தில் தவளை நிற்பது நல்லது. frosch.gif

இங்கு சின்ன தவளை 3 ஐரோ frosch2.gif கொடுத்துத் தான் வாங்கிவிட வேணும்.

வாங்கி விட்டாலும்.... frosch-smilies-0004.gif அது வேறை தோட்டத்துக்கு மேயப் போய் விடும்.

அதை விட அந்த தவளையை விட நத்தை பத்து மடங்கு பெரிசாய் இருக்கும்.smiley_emoticons_frosch01.gif

உள்ளிக்கு நத்தை வராது என்ற மேலதிக தகவலுக்கு நன்றி. :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தோட்டத்தில் எலிகள் இல்லையா? இங்கு தோட்டத்தில் பூனையளவு எலிகள் உண்டு. அதப் பிடிக்க பாம்புகளும் வரும். கோழிக் குஞ்சுகளை, முட்டைகளை இரண்டும் ஒற்றுமையாக பிடித்து விழுங்கும்.

எலிக்கு மருந்து வைத்தாலும் முடிவில் அதுகள்தான் வென்று விடுகின்றன! :)

அதப் பிடிக்க பாம்புகளும் வரும்.

பிரான்சில பாம்பு இருக்கிறதா? :blink:

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் தப்பிலி! மஞ்சள், கருப்பு நிறங்களில் நிறைய உண்டு. சில காட்டுப் பகுதிகளில் போர்டில் எழுதி இருப்பார்கள் பாம்புகள் நிறைந்த பகுதி கவனம் என்று! :D

  • 4 months later...

சிறியின் தகவலின்படி சித்திரை மாதத்திலிருந்து 'கோல்ரபி' விதைகளை நட்டு வந்தேன். இரு மாதங்களில் சாகுபடிக்கு தயாராகி விடுகின்றது. விரைவில் வளர்வதால் பூச்சிகளின் தாக்கம் குறைவு. பராமரிப்பும் குறைவு. தண்ணீர் மாத்திரம் ஊற்றினால் போதுமானது. இப்பொழுது ஒவ்வொரு கிழமையும் 3 , 4 செடிகள் சமையலுக்குத் தயாராகி விடுகிறது. காயை கறி சமைத்தும், இலையை சுண்டல் செய்தும் உண்ணலாம்.

நன்றி சிறி.

dscn8541t.jpg

dscn8555.jpg

Edited by thappili

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

------

dscn8555.jpg

கொலராபி வறைக்கு மாசிக்கருவாடு எல்லாம் போட்டுள்ளீர்கள்.

பார்க்க.... வாயில் நீர் ஊறுகின்றது, தப்பிலி. :D

மிக நன்றாக உள்ளது தப்பிலி

மிக நன்றாக உள்ளது தப்பிலி

நன்றி குட்டி.

இறாலையும் பருப்பையும் விட மற்றதெல்லாம் சொந்தமாகப் பயிரிட்டவைதான். நீங்களும் செய்து பாருங்கள். மிகச் சிறிய துண்டு நிலம் இருந்தாலும் மாறுபட்ட மரக்கறிகளை நட்டு வீட்டுத் தேவைக்குப் பாவிக்கலாம். நிலம் அற்றவர்கள் அடுக்களை யன்னல் கட்டில் சிறு பெட்டியில் மல்லி, புதினா, dill, basil, oragano.... போன்றவைகளை நட்டு உபயோகிக்கலாம்.

இரசாயன மருந்துகள் அற்ற சுத்தமான உணவு, உடலுக்கும் கொஞ்சம் தேகப் பயிற்சி, மனதுக்கும் சந்தோசமான விடயம்

வெட்டுறேன், புடுங்குறேன் என்று ஒரு உசாரில் கீரை, தக்காளி, பீற்றூட், கரட், Marrow, Basil, Dill, Rosemary, கொத்தமல்லி, கருவேப்பிலை கூட வீட்டில் இருந்தது... பச்சைத் தக்காளி உட்பட பல கறிகள் சமைத்து நண்பர்களோடும் பகிர்ந்து கொள்வேன், நண்பர்கள் தமது தோட்டத்தில் இலைக்கோவா, lettuce பயிரிட்டார்கள், அது ஒரு கனாக் காலாம்... :rolleyes::wub: உண்மையில் மனதில் ஒரு விதமான சந்தோசம் வரும் அதை உணர்ந்து இருக்கிறேன்...

கொஞ்ச காலம் தோட்டத்தைக் கவனிக்காமல் விட்டதால நத்தைகளின் ஆக்கிரமிப்பு வேறு... அதன் பின்பு மரக்கறிகள் பயிரிடும் எண்ணம் அறவே இல்லாமல் போய்விட்டது. இப்ப செய்ய மனம் இருந்தாலும், நேரம் ஒதுக்குவது கொஞ்சம் சிரமமாக உள்ளது, அதோடு பழைய நண்பர்களும் இடம் மாறி போய்விட்டார்கள்..

நீங்கள் இணைத்த படத்தைப் பார்த்த போது மலரும் நினைவுகள் நெஞ்சில் அசைபோடுகின்றன... :wub::(:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொந்த வீடு வளவோடை இருக்கிறவங்கள் தோட்டம் தொழில் எண்டு அனுபவிக்கிறாங்கள்.

டேய் குமாரசாமி நீயும் இருக்கிறியே...........?சொந்த வீடுமில்லை...ஒருபரப்பு காணியுமில்லை........... ஆனால் பழைய காயெண்டு சொல்லி மட்டும் தம்பட்டமடி.

இவ்வளவுகாலமும் இஞ்சையிருந்து என்னத்தை சேர்த்து வைச்சிருக்கிறாய் எண்டு உன்ரை மனுசி கேக்கிறதிலையும் நியாயமிருக்கடா பன்னாடை. :D:lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.