Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டில் மீண்டும் படுகொலைகள் .....

Featured Replies

29mmm8.jpg

கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்று வந்த யுத்தத்தினை முடிவு செய்து தமிழ் மக்கள் குறிப்பாக குடா நாட்டு மக்கள் தற்போது சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கும் அமைதியை நேசிப்பதற்கும் வழியமைத்துக் கொடுத்த அதியுத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவை பாராட்டுகின்றோம் என்று யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி வருகை தருகின்ற அமைச்சர்கள் வாயார புகழ்ந்து நெஞ்சார வாழ்த்துத் தெரிவித்துச் செல் கிறார்கள்.

"யுத்தம் முடிவடைந்துள்ளது இனி மேல் எந்தத் தமிழ் மகனும் துப்பாக்கி யால் சாகமாட்டான்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்ததும் இந் தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூரப்பட வேண்டும்.

ஆனால் கள நிலைமைகள் அப்படி யில்லை.தற்போது குடாநாட்டில் மீண்டும் துப்பாக்கி முனைகள் நீட்டப் பட்டு உயிர் களைத் துவம்சம் செய்யும் பட லம் தொடங்கி விட்டது. மக்களின் முகங் களில் அச்ச உணர்வுகள் ஊறிப்போய் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்கிற பயப் பீதியுடன் உறைந்துள்ளனர்.

கொள்ளையடிப்பு என்ற போர்வை யில் உன்னதமான உயிர்களைப் பறித் துக் கொண்டிருக்கிறார்கள் முகமூடி அணிந்த சிலர். சங்கானையில் அண்மை யில் அந்தணர்களைக் குறிவைத்து கொள்ளையர்கள் மேற்கொண்ட கொடூர மூர்க்கத்தனமான சூட்டுச் சம்பவத்தில் பிரதம குருக்கள் ஒருவரின் உயிர் பறி போனது. அத்தோடு நின்றுவிடாது. அப் பகுதியில் தொடர்ச்சியாக துப்பாக்கி முனையில் பல வீடுகளில் கொள்ளை யிடப்பட்டுள்ளது.

அளவெட்டிப்பகுதியில் உள்ள வீட் டுக்குள் புகுந்த ஆயுததாரிகள் அங்கு நின்ற காவல் நாயினைச் சுட்டுக் கொன்று அங்கிருந்தவர்களை அச்சத்துக் குள் ஆழ்த்திவிட்டு பெருமளவான நகை களைச் சூறையாடிச்சென்றுள்ளனர்.

இது இவ்வாறிருக்கையில் உரும்பிரா யில் மூன்று கோயிலடிப்பகுதியில் நேற்றுமுன்தினமிரவு 10.30 மணியள வில் வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மா. சிவலிங்கம் அவரது வீட் டில் வைத்து ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தச் சூட்டுச்சம்பவம் கொலையா? கொள்ளையா? என்பதை ஆராயும் பொருட்டு சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்றோம்.

இங்கு நடந்தவற்றை அலசி விசாரித் தோம். அப்போது கிடைத்த தகவல்கள்.

"மரணமான பிரதிக் கல்விப் பணிப் பாளரின் மனைவி ஓர் ஆசிரியை, இவ ருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். இவ ரது தாயார் பாரிசவாத நோயினால் பாதிக் கப்பட்டுள்ளார். அவரது தாயாரின் வீடு இவரது வீட்டுக்கருகில் சுமார் 200 மீற்றர்தூரத் தில் தான் அமைந்துள்ளது. சம்பவதினம் இரவு மனைவியும் இரண்டு ஆண்மகன் மாரும் அந்த தான் வீட்டில் தங்கியிருந் தனர். பிரதிக் கல்விப் பணிப்பாளர் தனது 13 வயதுடைய மகளுடன் வீட்டில் இருந்துள்ளார்.

தகப்பனும் மகளும் தமது வழமை யான பணிகளை நிறைவு செய்துவிட்டு நித்திரைக்குச் செல்லமுற்பட்டபோது, "முகமூடி எதுவும் அணியாது கையில் துப்பாக்கியுடன் வீட்டு விறாந்தையில் ஒருவன் நிற்கிறான். இதைக் கண்டு அச் சமடைந்த மகள் தகப்பனின் கழுத்தி னைக் கட்டிப் பிடித்துக் கதறினாள் என் கின்றனர் உறவினர்கள்.

"சத்தம் போடக்கூடாது உன்ர காதி லிருக்கும் தோட்டைக் கழற்றித் தா.." என்று அந்த ஆயுததாரி அதட்டுகின் றான். பிள்ளை தோட்டைக் கழற்றிக் கொண்டிருந்தது. அந்த ஆயுததாரி தகப் பனின் நெஞ்சில் படபடவென துப்பாக் கியால் சுடுகின்றான். அவள் திகைத்துப் போய் மௌனித் துப் போகிறாள்...

ஆயுததாரி வீட்டின் கதவினைத் திறந்து கழற்றிக் கொடுத்த தோட்டினை யும் பெற்றுக்கொண்டு தன்பாட்டில் செல்கிறான்.

அதிர்ச்சியில் அடிபட்டுப் பீதியில் உறைந்திருந்த அந்தச் சிறுமி தந்தை குற்றுயிராய்க் கிடக்கும் அவலக் காட்சி யைக் கண்டு அலறுகிறாள்.

அப்போதுதான் அவரது மனைவியும் இரண்டு மகன்மாரும் அயலில் உள்ள வர்களும் அங்கு ஓடிப் போகிறார்கள்.

உடனடியாகக் கோப்பாய்ப் பொலி ஸாருக்குத் தகவல் கொடுத்தார்கள். அங்கு இரவு 11 மணிக்கு விரைந்த பொலிஸார் சுடுபட்டுக் கிடந்த பிரதிக் கல்விப் பணிப்பாளரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

அவரைக் கொண்டு செல்லும் போதே அவரது உயிர் பிரிந்துவிட்டதாகக் கூறப் படுகின்றது. குறித்த ஆயுததாரி வீட்டுக்குள் எவ் வாறு சென்றான்? புதிர் விடுபட வில்லை. கதவு உடைக்கப்பட வில்லை. யன்னல்களும் அவ்வாறு தான். கூரைப் பகுதியால் சென்றதற்கான சான்றுகளை யும் காணமுடியவில்லை.

அப்படியிருக்கையில் உள்ளே எப் படிச் சென்றிருக்க முடியும் என்கின்ற கேள்வி எழுகிறது. தன்னந் தனியாக முக மூடியில்லாமல் ஆயுதத்துடன் என்ன துணிவோடு அங்கு சென்றுள்ளான்.

வீட்டில் ஏராளமான பெறுமதி மிக்க பொருள்கள் உள்ளதாகவும் அவை எதுவு கொள்ளையிடப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. ஆக ஒரு சோடித் தோட்டுக்காகவா அங்கு சென்றான்? அல்லது அவரைக் கொலை செய்யத் தான் போனானோ என்ற பலத்த சந்தேகங் கள் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந் ததுள்ளன. அங்கு வந்து வெறியாட்டம் நடத்திய ஆயுததாரி எவ்வாறு திரும்பிச் சென்றுள் ளான் என்பது மர்மமாகவே உள்ளது. ஏனென்றால் அப்பகுதியில் வாகன இரைச்சல் எதுவும் கேட்கவில்லை என் றும் அப்பகுதியில் உள்ள அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், வீட்டின் வளாகத்தில் சிகரட் பிடித்ததற்கான பெட்டியொன்று உள்ள தாக இறந்தவரின் மகன் சொன்னார். மரணமான பிரதிக் கல்விப் பணிப்பா ளர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் னர் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் விரிவுரையாளராகக் கடமையாற்றியுள் ளார் என்றும் அவர் எந்தவிதமான பிரச்சி னைகளுக்கும் செல்லாதவர். தான் உண்டு தன்பாடுண்டு என்ற மென்மை யான சுபாவம் நிறைந்தவர் என்றும் வலி காம் வலயத்தில் கடமைபுரியும் இவரது சக உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

அங்கு நடந்த சம்பவங்களையும், பிற காரணிகளையும் ஆராய்ந்து பார்க்கும் போது அங்கு நடந்தது கொள்ளையல்ல கொலை என்பதை ஓரளவு ஊகிக்க முடி கின்றது.

கொள்ளையடிப்பு என்ற போர்வை யில் தோரணையில் மீண்டும் படு கொலைகள் யாழில் நடக்கப் போகின் றனவா? என்ற அச்சம் எல்லோரு டைய மனங்களிலும் ஆழப் பதியத் தொடங் கியுள்ளது.

எல்லாவற்றையும் இழந்து என்ன செய் வது, ஏது செய்வது என்ற நிலை தடு மாறி நிற்கும் குடாநாட்டு மக்களுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழல் ஓரளவு மகிழ்ச்சியைக் கொடுத் துள்ளது என்று எல்லோரும் மனதைத் தேற்றிக் கொண்டிருக்கும் போது மீண் டும் துப்பாக்கி முனைகள் தமிழ் மக் களை நோக்கி நீள்வதைக் கண்டு அவர் கள் அச்சம், பீதியால் உறைந்து போய் உள்ளார்கள்.

ஆயுதம் கொண்டு நடமாடும் சூழ் நிலையை உருவாக்கும்போது அது இன் னும் கொலைகள் நடக்க ஏதுவாக அமை யப் பெறும். ஆகையால் இத்தகைய வேண்டத் தகாத சம்பவங்கள் மேன்மேலும் நடக்க விடாமல் உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். "ஏனெனில் எல் லாப் பொறுப்பும் அவர்களுக்கே". *

http://www.uthayan.innovay.net/pages/article_full_view.php?nid=32

  • தொடங்கியவர்

‘SL forces planned Jaffna education officer’s assassination’

[TamilNet, Tuesday, 28 December 2010, 21:56 GMT]

281210sivalingamfuneral.jpg

Obituary address by Rev. Fr. Jesudas at the funeral [Photo: TamilNet]

Sri Lankan forces occupying Jaffna planned the assassination of the Deputy Director of Education for Valikaamam, Mr. Markandu Sivalingam, on Sunday night, media sources in Jaffna said. “We cannot keep quiet seeing such murders. If we do so, tomorrow even we will not remain. We have to mobilise ourselves very urgently,” said Rev. Jesudas, the principal of St. Hendry’s College, I’lavaalai, speaking at the funeral of Mr. Sivalingam at Maruthanaamadam, Tuesday. It was attended by large number of students, teachers, principals and the public. But neither SL military officials, nor the officials of the provincial administration attended the funeral. On the day of his assassination there was the ‘disaster management’ gala attended by SL prime minister forcing students to ‘sing’ Sinhala anthem.

281210sivalingamfuneral.jpg

Funeral of late Sivalingam

“Whenever academics and intellectuals were assassinated in the past, we were keeping quiet. But we have not achieved anything by that silence. Such assassinations are escalating now. Our continued silence will invite dangerous consequences,” Fr. Jesudas further said in making obituary.

Speaking at the funeral, the Director of Education for Jaffna, Mr. Ratnam Tamilmaran asked all sections to condemn such assassinations of academics. Attack on academics in on the escalation. Stopping that is in the hands of everybody, he said.

The funeral procession started from the house of Mr. Sivalingam at Urumpiraay. Amidst heavy rains there was a big crowd. His colleagues took charge of the body at Maruthanaamadam junction, where the Valikaamam regional education office is located. Principals of all leading schools, teachers, students and education officers paid homage.

The cremation took place at Maruthanaamadam Saiva crematorium.

There was public anger on the absence of any provincial administration officials at the funeral. Just on the previous day these Tamil officials were in the retinue of the colonial governor Maj. Gen. Chandra Sri, when he came to open an education office at Kaarainakar.

As some stunning details of the assassination of Mr. Sivalingam is being circulated in Jaffna, the absence of the SL military and administration officials at his funeral have evoked further suspicions among the public.

In a territory where thousands of military were needed for the security of visiting SL politicians, only three policemen were at the procession and funeral of Mr. Sivalingam.

யாழ் - வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் கொள்ளை முயற்சி என்ற போர்வையில் சுட்டுக் கொலை:-

யாழ் - வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளரின் கொலையின் பின்னணியில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் கையிருப்பதாக ஜீரீஎன்னின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

52 வயதுடைய மார்க்கண்டு சிவலிங்கம் என்ற வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத ஆயததாரிகளினால் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உரும்பிராய் மேற்கு மூன்று கோவிலடியைச் சேர்ந்த இவரை நேற்று முன்தினம் 26.12.10) மாலை வான் ஒன்றில் சென்ற ஆயததாரிகள் சுட்டுக் கொன்றபின் தப்பிச் சென்றனர்;.

எனினும் அவரது மகளின் நகைகளை அங்கு சென்றவர்கள்; கேட்டதாகவும் மகள் கூக்குரலிட்டபோது அங்கு சென்ற தந்தையை ஆயுததாரிகள் சுட்டதாகவுமே இந்தக் கொலை திசைதிருப்பப்பட்டு இருந்தது.

அண்மைக் காலமாக திருடர்கள் என்ற போர்வையில் ஆயுததாரிகள் தமக்குத் தேவையானவர்களை சுட்டுக் கொல்லும் புதிய பாணியிலான நடவடிக்கைகளை ஆரம்பித்து உள்ளார்களோ என்ற சந்தேனம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக ஜீரீஎன் நேற்றைய (27.12.10) செய்தியில் தெரிவித்திருந்தது.

உண்மையில் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த இலங்கைப் பாதுகாப்பு தினம் தொடர்பான பிரதமர் பங்குகொண்ட நிகழ்ச்சியில் பாடசாலை மாணவர்கள் சிங்களத்தில் தேசிய கீதம் பாடவைக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை நிகழ்வுகளிலும் சிங்களத்தில் தேசிய கீதம் பாடப்பட வெண்டும் என விடுக்கப்பட்ட பணிபுரை குறித்து பரவலாக அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் கடுமையான அதிர்ப்திகள் வெளியிடப்பட்டு வந்தமை அவ்வப்போது ஜீரீஎன் செய்திகளில் வெளியிடப்பட்டன.

இவ்வாறு எதிர்க் கிழம்பிய குரல்களில் அல்லது கடுமையாக விமர்சித்தவர்களில் வலிகாமம் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் ஒருவர் என ஜீரீஎன்னின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனாலேயே இலங்கைப் பாதுகாப்பு தின நிகழ்வுகள் நேற்று முன்தினம் நிறைவு பெற்று பிரதமர் கொழும்பு திரும்பியவுடன் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டு இந்தக் கொலையை கொள்ளை முயற்சின் பெயரில் மேற்கொண்டதாக் ஜீரீஎன்னிற்கு தகவல் கிடைக்கப்பெற்றது.

இனிவரும் நாட்களில் அரசாங்கத்தினதோ அல்லது படைத்தரப்பினதோ நடவடிக்கைகள் குறித்து வடக்கில் எவரும் விமர்சிக்கவோ, கேள்வி கேட்கவோ கூடாது என்பதற்கான முதலாவது கொலை இது என ஜீரீஎன்னிற்குத் தெரியவருகிறது.

நேற்று முன்தினம் (26.12.10) இடம்பெற்ற கொலையின் போது வான் ஒன்றில் சென்ற இனம் தெரியாதவர்கள் பிரதிக் கல்விப் பணிப்பாளரின் மகளிடம் நகையை தருமாறு பயமுறுத்தி உள்ளனர். மகள் சத்தமிட்டு உள்ளார். அதனைக் கேட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளரான மார்க்கண்டு சிவலிங்கம் ஓடிவர ஆயததாரிகள் அவரை சுடுவதற்கு முனைந்தனர். அதன் போது தந்தையைச் சுடவேண்டாம் என மகள் மன்றாடிக் கும்பிட்டு கேட்டதுடன் தம்மிடம் உள்ள நகை அனைத்தையும் தருவதாக கூறியும் உள்ளார். எனினும் பிரதிக் கல்விப் பணிப்பாளரான மார்க்கண்டு சிவலிங்கத்தை சுட்டுக் கொல்வதனை இலக்காகக் கொண்டு அவரது வீட்டிற்குச் சென்ற ஆயததாரிகள் வீட்டாரின் அவலக் குரல்களுக்கு இடையே அவரைச் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தந்தையின் மீது துப்பாக்கிச் சன்னம் பாய்ந்த வேளை அவர் மயங்கி விழவே அவரது காதில் இருந்த தோட்டையும் சில தங்க ஆபரணங்களையும் புடுங்கிச் சென்றதாக ஜீரீஎன்னின் புலனாய்வுத் தகவல்மூலம் தெரியவருகிறது.

இதேவேளை சம்பவம் இடம்பெற முன்னதாகவே இராணுவத்தினரின் சப்பாத்துக் காலடையாளங்கள் வீட்டின் பின்புறமும், மலசலகூடம் மற்றும் குளியலறைப் பகுதிகளில் கானப்பட்டதாக அங்கு சென்று திரும்பிய புலனாய்வாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தப் பகுதி அதிகமாக படை யினரின் நடமாட்டம் உள்ளதெனவும் குறிப்பிடப்படுகின்றது.

ஏற்கனவே இதே பாணில் கொள்ளை முயற்சி என்ற போர்வையில் சங்கானை ஆலையக் குரக்கள் அவரது இரு பிள்ளைகள் ஆகியோர் சுடப்பட்ட சம்பவமும் படைப்புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கையே என தற்போது ஜீரீஎன்னிற்குத் தெரியவந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் புலம்பெயர் அரசியலோடு சம்பந்நதப்பட்ட காரணி ஒன்றிற்காகவே கொள்ளை என்ற போர்வையில் ஆலையக் குருக்கல் சுட்டுக் கொல்லப்பட்டார் என பிரதிக் கல்விப் பணிப்பாளரின் கொலை தொடர்பாக ஆராய்ந்த ஜீரீஎன்னின் புலனாய்வுத் தகவல் உறுதிப்படுத்தி உள்ளது.

ஆலையக் குருக்கல் அவரது இரு பிள்ளைகள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு ஆளுநரும் முன்னள் யாழ் படைத்தளபதியுமான சந்திரசிறீ மன்னிப்பும் கேட்டு இருந்தார். அது மட்டும் அன்றி படையினரின் துப்பாக்கிகளே இந்த சம்பத்தில் பயன்படுத்தியதாகவும் ஒப்புக்கொண்டார். ஆனால் புலிகளில் இருந்து விலகிய முன்னாள் புலிளே படையினரிடம் ஆயதங்களைப் பெற்று இதனைச் செய்ததாகவும் கூறியிருந்தார். இதன்மூலம் படைத்தரப்பினரே இதன் பின்னணில் இருப்பதனை சூசகமாகத் தெரிவித்திருந்தார். அத்துடன் இனிவரும் நாட்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என உறுதிமொழி காதில் கேட்பதற்கு முன்பே அதே பாணியில் மற்றும் ஒரு கொலை நிகழ்ந்துள்ளது. அந்தக் கொலை சிங்களத் தேசியகீதத்திற்கான வேள்வியாக, பலியெடுப்பாக அமைந்துவிட்டது.

2ம் இணைப்பு யாழ் - வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் கொள்ளை முயற்சி என்ற போர்வையில் சுட்டுக் கொலை

27-12-2010 - 01:27am

வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளரான 52 வயதுடைய மார்க்கண்டு சிவலிங்கம் அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

உரும்பிராய் மேற்கு மூன்று கோவிலடியைச் சேர்ந்த இவரை நேற்று மாலை வான் ஒன்றில் சென்ற ஆயததாரிகள் சுட்டுக் கொன்றபின் தப்பிச் சென்றதாக ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவரது மகளின் நகைகளை அங்கு சென்றவர்கள்; கேட்டதாகவும் மகள் கூக்குரலிட்டபோது அங்கு சென்ற தந்தையை ஆயுததாரிகள் சுட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக் காலமாக திருடர்கள் என்ற போர்வையில் ஆயுததாரிகள் தமக்குத் தேவையானவர்களை சுட்டுக் கொல்லும் புதிய பாணியிலான நடவடிக்கைகளை ஆரம்பித்து உள்ளார்களோ என்ற சந்தேனம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அண்மையில் சங்கானையில் ஆலய குருக்களும் அவரது புதல்வர்களும் கொள்ளை முயற்சியின் ஒன்றின் போது சுடப்பட்டதும் ஆலைய குருக்கள் மரணமானதும் குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/55772/language/ta-IN/article.aspx

Edited by Nellaiyan

வளமை போல பழியை போட புலி இல்லாதது ஒரு பின்னடைவு... !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடாநாட்டில் மீண்டும் படுகொலைகள் .....

என்னெண்டப்பா?

அவங்கள் எல்லாரையும் போட்டுத்தள்ளியாச்செல்லே?

புண்ணியபூமியிலை பிறகென்ன புதுக்கதை?

  • தொடங்கியவர்

... யாழில் பல பாடசாலை அதிபர்கள்/ஆசிரியர்கள் ... சிங்கள கொலைவெறி புலனாய்வுத்துறை/ஒட்டுக்க்குழுக்களின் கொலைப்பட்டியலிலாம்!!!! ... நமோ நமோ சிங்களத்தில் பாட வேண்டுமோ? என முணுமுணுத்ததற்காகவாம்!!!! ..... யாழில் ... வடக்கே வசந்தமாம்????????

போட்டுத்தள்ளுறதிற்கே புதிசு புதிசா ஐடியா போடுறாங்களே... என்ன செய்யலாம்??

தேசிய கீதத்தினைப்பாட சொல்வதற்கு இத்தனை கொலை, கொள்ளை, துன்புறுத்தல்.. குடா நாட்டு மாணவர்கள் கல்வி சமூகம்.. இதனை நிறுத்த முடியாவிட்டாலும் எல்லோரும் இணைந்து போராட்டங்களை செய்து இதனை வெளியுலகிற்கு கொண்டுவரவேண்டும்.

தடுத்து நிறுத்தாவிட்டாலும் எல்லோரும் ஒன்றுபட்டு வெளிக்கொண்டு வரமுடியும்..

வெளி நாட்டில இருந்து கொண்டு ஐடியா கொடுக்குறது நல்லா இல்லைத்தான் ஆனால் .. என்னைத்தவிர என் குடும்பம் எல்லாம் யாழ்ப்பாணத்தில இருக்கிறபடியால்... அவர்களின் ஆதங்கம் எனக்கு விளங்குது...

கடவுளே.. என்னதான் செய்ய முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

றோக்காரர் சொன்னவங்கள் தானே!இந்தியத் தலைவர்களைக் கொல்லவந்த புலிகள் திட்டம் தெரிய வந்ததால் திரும்ப சிறிலங்காவிற்குள்ள போயிற்றங்களாமெண்டு.இது அவங்கட வேலையாத்தான் இருக்கும்.

இது எப்பிடி இருக்கு?
  • தொடங்கியவர்

வடக்குக் கொலைகள்; கருணா கருத்து

[29 டிசம்பர் 2010, புதன்கிழமை 7:30 மு.ப இலங்கை]

கொழும்பு, டிசெ. 29

வடக்கில் கடந்த சில தினங் களில் இடம்பெற்றுள்ள துப் பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டுள்ள னர். இது மீண்டும் பயங்கர வாதம் தலைதூக்குவதற்கான ஆரம்பமாகவிருக்கலாம்.

இப்படி மீள்குடியேற்ற பிர திய அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளவை வருமாறு:

பல உயிர்களைப் பலி கொடுத்து நாட்டை மீட்டெடுத்த படையினருக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் மீண்டும் அமைதியையும், சட்டத்தை யும் பாதுகாக்குமாறு பொலிஸ் மா அதிபரையும், பிரதிப் பொலிஸ் மா அதிபரையும் கேட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

10_1_138.gif

Abducted vehicle-deader found dead in Jaffna

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33294

கடந்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் மீசாலையில் சடலமாக மீட்பு

80 இலட்சம் ரூபா கப்பம் கோரி கடந்த மூன்று தினங்களுக்கு முதல் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் இன்று மீசாலை கனகம்புளியடிச் சந்திக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீசாலையைச் சேர்ந்த 26 வயதுடைய 3 வயது குழந்தையின் தந்தையான மகேந்திரம் செல்வம் என்ற இந்தக் குடும்பஸ்தரோ சடலமாக மீட்கப்பட்டவராகும்.

கடந்த 27 ம் திகதி வீடு புகுந்து இவரைக் கடத்திய கடத்தல்காரர்கள் அவரின் பெற்றோரிடம் 80 இலட்சம் ரூபா தருமாறு கோரியுள்ளனர். இத்தொகையை தம்மால் தரமுடியாது என அவரின் குடும்பத்தினர் தெரிவித்திருந்த நிலையில் இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் உடலில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக யாழ் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வன்னியில் இருந்து போரின் இறுதிப் பகுதியில் இராணுவப் பகுதிக்கு வந்திருந்த இவர் மணல் வியாபாரியாகவும் வாகன விற்பனை முகவராகவும் தொழில் புரிந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு கடத்தல்காரர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் 80 இலட்சம் ருபா வழங்கினால் மட்டுமே கடத்தப்பட்ட மகேந்திரன் செல்வத்தை விடுவிக்க முடியும் என கோரியிருந்தனர் என அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

கப்பத்தை கொடுக்க மறுத்த குடும்பத்தினர் காவல்துறையினரின் உதவியை நாடியிருந்த நிலையில் அவரது சடலம் இன்று மீசாலையில் மீட்கப்பட்டுள்ளது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={2C2C691E-9A75-4722-8AB4-2473D6CF7F2B}

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தலைவன் தோன்றுவதற்கான காரணிகள் இவை :lol:

  • தொடங்கியவர்

கொலைகார கூட்டம், கொலையுண்டவரின் வீட்டிற்கு சென்று முதலைக் கண்ணீர் ......

murder1.gif

murder2.gif

murder3l.gif

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டில் தொடர்கிறது படுகொலைப் பயங்கரம்:- மீசாலையில் இளைஞன் படுகொலை!!!

[ பிரசுரித்த திகதி : 2010-12-30 05:57:07 AM GMT ]

மூன்று நாள்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து தந்திரமாகக் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் வெட்டுக் காயங்களோடு சடலமாக நேற்று மீட்கப்பட்டார். இந்த அதிர்ச்சிதரும் சம்பவம் தென்மராட்சி சரசாலைப் பகுதியில் நடைபெற்றுள்ளது. மீசாலை, புத்தூர் சந்தியைச் சேர்ந்த மகேந்திரசெல்வம் திருவருட்செல்வன் (செல்வன்) (வயது 28) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். தொடர்ச்சியாக அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் படுகொலைச் சம்பவங்களால் குடாநாட்டு மக்கள் பயத்தால் உறைந்துபோயுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

வாகனங்களைக் கொள்வனவு செய்து பின்னர் அவற்றை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுவந்த இந்த இளம் குடும்பஸ்தரின் வீட்டுக்குக் கடந்த திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் மோட்டார் சைக்கிளில் இரு நபர்கள் வந்தனர். கனகம்புளியடிச் சந்தியில் ஒரு வாகனம் விற்பனைக்காக இருக்கிறது. வந்து பார்க்க முடியுமா?` என்று கூறித் தந்திரமாகக் குறித்த குடும்பஸ்தரான செல்வனை அழைத்துச் சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்களோடு சென்ற செல்வனைக் காணாது இரவு முழுதும் குடும்பத்தினர் தேடியலைந்தனர். இந்தச் சமயத்தில் வீட்டாரின் தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள் பெருந்தொகைப் பணத்தைக் கேட்டு மிரட்டினர். குறித்த தொகைப் பணத்தைத் தராவிட்டால் செல்வனைக் கொலை செய்து விடுவோம் எனவும் அச்சுறுத்திவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டனர். அடுத்த நாள் காலை செல்வனின் குடும்பத்தினர் சாவகச்சேரிப் பொலிஸில் அதுகுறித்து முறைப்பாடு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று புதன்கிழமை மாலை மூன்று மணியளவில் சரசாலை, வேம்பிராய் வீதியில் இயற்கைத்திடல் காளிகோயிலுக்கு அண்மையாக உள்ள கல்குவாரி ஒன்றின் அருகே வெட்டுக் காயங்களோடு உடைகள் களையப்பட்டு உள்ளாடையுடன் மாத்திரம் செல்வனின் சடலம் வீசப்பட்டுக் கிடந்தது. இதுபற்றி அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

படுகொலை செய்யப்பட்ட செல்வன் நீண்டகாலமாக வன்னிப்பகுதியிலும் வசித்து வந்தாரெனவும், ஒரு வருடத்துக்கு முன்னரே நலன்புரி நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியேறினார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. செல்வன் கொண்டுசென்ற மோட்டார் சைக்கிளையும் ஆவணங்களையும் கொலையாளிகள் எடுத்துச் சென்றிருப்பதாகவும், சடலத்தின் நிலையைப் பார்க்கும்போது செல்வன் இரு நாள்களுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் எனவும் சடலத்தை நேரில் பார்த்த அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

சரசாலைச் சம்பவம் குறித்து இராணுவப் பேச்சாளர் உபயமெதவெலவிடம் வினவியபோது, மேற்குறித்த சம்பவம் தொடர்பாகத் தனக்கு இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார். இதேவேளை பொலிஸ் தரப்புத் தகவல்களைப் பெறுவதற்காகச் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டபோது,"தற்போதுதான் விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறோம். நாளை (அதாவது இன்று) காலைதான் விளக்கமளிக்க முடியும்` என்ற பதிலே கிடைத்தது.

கடந்த மூன்று வாரங்களுக்குள் நடைபெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் இருவர் காவுகொள்ளப்பட்ட அதிர்ச்சியிலிருந்து பயங்கரத்திலிருந்து குடாநாட்டு மக்கள் மீள்வதற்கிடையில் மூன்றாவது கொலைச் சம்பவமும் நடைபெற்றிருக்கிறது. இதனால் குடாநாட்டு மக்கள் மத்தியில் பெரும் பீதிநிலை உருவாகியுள்ளது.

valampurii.com

  • கருத்துக்கள உறவுகள்
:) சிங்கள அரசாங்கம் தமிழர்க்குச் செய்துவரும் உதவிகளில் இதுவும் ஒன்று. தமிழர்கள் சந்தோஷமாக வாழவேண்டும் என்பதற்காக அவர்கள் மத்தியிலிருந்து புல்லுருவிகளைக் களையெடுக்கிரது என்று நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.