Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகதர்மர்களுக்கு இது சமர்ப்பணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சில வாரங்களின் முன்னொருத்தியின் உடலையும்

அவள் அணிந்த ஆடைகளையும்

அநியாயத்தின் சாட்சியமென ஆளுக்காள்

படம்காட்டி செய்தியாய் செவ்வியாய்

செத்துப்போனவளை பலதரம் கொன்று புதைத்தோம்…..

இன்றொருத்தி 17வயதுப் பள்ளிமாணவி

76பேருடன் உடலுறவு கொண்டாளாம்…..

அடி சக்கை அந்தமாதிரிச் செய்தி…..

ஆளாளுக்கு விளக்கங்கள்

அடங்கொய்யாலா அதுவும் சாதனைதான்.

மெளதீக யுத்தம் உயிர் ஆயுதம்

அச்சாப் பொருத்தமான ஒப்பீடுகளும் ஒப்பனைகளும்

பதின் வயது தாண்டாத 17வயதுச் சிறுமியைக் கூட

விட்டு வைக்காத இனம் நாங்கள்.

நமக்கெல்லாம் சமூகமும் அக்கறையும் அதிகம் தான்.

விட்டுத் தொலையாத நாற்றங்கள் முட்டிக் கிடக்க

சொகுசுக் கதிரைக்குள் சுகமாய் தட்டச்சி

ஒரு தமிழச்சியைக் கூறுபோடும்

கொடுமைக்கு யாரிங்கு குரல் கொடுப்பர்……?

கெளரவம் கவரிமான் சாதியாய்

தன்னையே பெருமைகொள் தமிழினம்

உயர்ந்த பண்பிலும் வரலாற்றிலும்

வனையப்பட்ட சித்திரமென்ற கதைகளை

இனியாவது நிறுத்திக் கொள்வோம் தமிழர்களே…!

எங்கள் வீட்டின் மகளை இப்படியா ஏலம் விடுவோம்…?

மனசைத் தொட்டுச் சொல்லுங்கள்…..!

இதுவா மனிதப் பண்பு…?

இதுவா சீர்திருத்தம்…..?

இதுவா தமிழினப் பெருமை….?

ஒன்று முடிய ஒன்றாய் தமிழச்சிகள்

தமிழர்களால் விற்கப்படும் வியாபாரம்

இன்றோடு நிறுத்துவோமா…..?

31.12.10

(28.12.10 அன்று இணையங்களில் வெளிவந்த செய்தியின் தலைப்பிது:-17வயது மாணவி 76 பேருடன் பாலியல் தொடர்பு! யாழில் அதிர்ச்சி! பெருமளவானோர் படையினராம்! இச்செய்தியின் நாயகி ஒரு 17வயதுச் சிறுமி. அவளை ஆளுக்காள் அவரவர் திறமைக்கேற்ப விமர்சனங்களால் வியாபாரம் செய்கின்றனர். இசைப்பிரியாவின் நிர்வாண உடலைக் காட்டி ஊடகவிபச்சாரம் செய்த ஊடகர்களும் ஊடகங்களும் இன்று இந்தப் 17வயதுச் சிறுமியைத் தண்டிப்பதாய் நினைத்து ஒவ்வொரு தமிழ்ச்சிறுமியையும் தண்டித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் பரபரக்க பலியிடப்படும் உயிர்கள் வரிசையில் இன்று பேசப்படும் சிறுமிக்கு அவள் போல ஆயிரமாயிரமாய் காயங்களுடன் வாழும் பெண்களை அவமதிக்கும் ஊடகதர்மர்களுக்கு இது சமர்ப்பணம்)

கவிதைக்கு நன்றி.

எங்களில் இருக்கும் மனவக்கிரகங்களே இவற்றை முதன்மைபடுத்தி வியாபாரமாக்குவது.

முதலிலும் ஒரு பதிவு இட்டேன் சிங்களவன் உடலை நிர்வாணமாக்கி கொண்டான் ஆனால் தமிழன் அந்த நிர்வாணத்தை வியாபாரமாக்கினான் என்று.அதற்கு ஒருவர் பின்னோட்டமும் விட்டிருந்தார் போர்க்குற்றத்திற்கு முக்கியமான ஆதாரம் அதைவிடக்கூடாது என்று.

அடுத்ததற்கும் யாழ்களத்தை சாடியே எனது கருத்தை வைத்தேன்.அறிவுக்கொழுந்துகளின் கருத்துகள் புல்லரிக்குதென. அதற்கும் ஒருத்தர் பின்னோட்டம் விட்டார் உங்களுக்கு பிடிக்காவிடில் எழுதாமல் விடுங்கோவன் அண்ணை என்று.

அனேகமான எம்.ஜீ.ஆர் படங்களில் பாலியல் வல்லுறவு காட்சியிருக்கும்.அவருக்கு தெரியும் தனது ரசிகர்கள் எப்படிபட்டவர்களென்று.அதை தான் தடுப்பது போல் நடித்தாலும் உண்மை நோக்கம் அந்தக் காட்சியை படத்தில் கொண்டுவந்து உணர்சியை தூண்டும் மூன்றாம் தர வக்கிரமே நோக்கமே.

இவைகளும் அவைகளேதான்.நாம் போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம்.

.

மற்றவர் துன்பத்தைப் புரிந்து கொள்ளுங்கள் என்பதற்கு ஆங்கிலத்தில் ஓர் பதம் உண்டு

put yourself in my shoes.

உடனுக்குடன் பதில் கருத்து எழுத விருப்பமில்லாவிடினும் தமிழனின் துன்பத்தை உணராதவன் யார்?

புரிந்துகொள்வதில் தான் வேறுபாடு?.

இதை அறிய, பொய் சொல்லும் இயந்திரத்தை நாடுவதுபோல் உண்மையாக எழுதுபவனையும் கண்டுபிடித்தால் நல்லது.

உணர்சிவசப்பட்டு அள்ளுப்படுவதில்,இன்னமும் ஒன்றிற்குமே லாயக்கில்லாதவர்களை நம்பிக்கொண்டிருப்பதில் காலம் கழித்து ஆகப்போவது ஒன்றுமில்லை.

சகலதிலும் இருந்து வெளிவந்து புதிதாய் உலகம் படைத்தால் ஒழிய எமக்கு விடிவு இல்லை.

அந்த topic log பண்ணபட்டு விட்டது அக்கா

நன்றி உங்கள் கவிதைக்கு ....

மோகன் அண்ணாவிற்கும்... nanri log panninathukku.. :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி உண்மையா? இது நடக்ககூடியவிடயமா?ஒரு பாடசாலை மாணவியிடம் காதலை வெளிப்படுத்த சகமாணவுக்கு பல வருடங்கள் எடுக்கும் இந்த இலட்சணத்தில் 3 வருடத்தில் 76 பேருடன் உடலுறவு என்பது எப்படி சாத்தியம் .....அவள் விளம்பரம் செய்து வியாபாரம் செய்திருந்தால் சாத்தியம் அப்படி செய்பவர்களை மாணவி என்று அழைப்பது இல்லை.இவர்களுக்காக கருத்து போர் நடத்த வேண்டிய அவசியமும் இல்லை.அவளுக்கு எப்படியான விளைவுகள் நடக்கும் என்று தெரிந்தும் அவள் இதை செய்திருக்கிறாள் .

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா இந்த விடயங்களில் எவருடனாவது வீண் விவாதங்களில் ஈடுபட்டு தனது நேரத்தை வீணடிப்பதை என்னால் ஆதரிக்கமுடியவில்லை. மன்னிக்கவும். :)

இசைப்பிரியாவுக்காக கவிதை எழுதும்போது கவிதைக்குத் தான் பெருமை. தமிழின மானத்தினையே காவு கொள்ளும் இந்த கேவலமான பிறப்புக்களுக்காக கவிதை எழுதி கவிதையையே தலைகுனிய வைத்துவிடாதீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம்.

நாங்கள் கன தூரத்தில நிக்கிறம் நீங்கள் போக இன்னும் கன தூரமெண்றியள்.

பல இடங்களில் உங்கள் கருத்துக்களுக்கு பதில் எழுத முடியாதபடி பதிவிடுறீங்கள். அதுபோலத்தான் இப்பக்கத்தில் உங்கள் கருத்தும். பதில் எழுத முடியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா இந்த விடயங்களில் எவருடனாவது வீண் விவாதங்களில் ஈடுபட்டு தனது நேரத்தை வீணடிப்பதை என்னால் ஆதரிக்கமுடியவில்லை. மன்னிக்கவும். :)

மன்னிக்கவும் விசுகு.

ஒருத்தியை படம்போட்டுக் காட்டி அவள் சார்ந்த உறவுகள் ஒவ்வொருவரையும் தினம் தினம் சாக வைத்தது நமது ஊடகங்கள். அவளோடு அவளது சந்ததியும் அழியவில்லை அவளைச் சூழ்ந்த உறவுகளும் அழியவில்லை. அவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள்.

அதுபோல இன்னொருத்தியை பாலியல் தொழிலாளியெனக் கொல்கிறோம். உண்மையில் சரியாக இச்செய்தியை கையாண்டதாய் செய்தியை வெளியிட்டோர்களை சொல்லச்சொல்லுங்கள் பார்ப்போம் ? இவ்விடயத்தில் உடன்பட முடியவில்லை விசுகு. ஆனாலும் விவாதிக்கவும் விருப்பமில்லை.

இசைப்பிரியாவுக்காக கவிதை எழுதும்போது கவிதைக்குத் தான் பெருமை. தமிழின மானத்தினையே காவு கொள்ளும் இந்த கேவலமான பிறப்புக்களுக்காக கவிதை எழுதி கவிதையையே தலைகுனிய வைத்துவிடாதீர்கள்.

மிக மிகக் கொடுமையான வரலாறுகளையும் கொடுமையானவர்களையும் கவிதைகளும் கதைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருக்குத்தான் கவிதை இவருக்குத்தான் இதனால் பெருமையென்று எங்கேயும் இலக்கிய உலகம் வகைபிரித்து வைக்கவில்லை.

உண்மையாக சொல்வதானால் இசைப்பிரியாவைவிட மற்ற அந்தபெண்ணில் தான் நான் கூட அனுதாபம் கொண்டேன்.

கமலின் "மகாநதி" படத்தை முடிந்தால் ஒருமுறை பாருங்கள் உங்களுக்கு பதில் கிடைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.