Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் மக்களே இந்த வேண்டுகோளை ஓரு கணம் செவிமடியுங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைப்பிரியாவை தமிழ்ப்பிரியா எண்டு எழுதிக்கொண்டு மற்ற ஆக்களுக்கு ரெஸ்ட் வைக்கிறீங்கள்??!! :rolleyes::wub:

[/quote ]

:lol: :lol: :lol:

....

அதே நேரம் நான் மட்டுமல்ல எனது கணவரும் முன்னாள் போராளியென்பதை யாழில் எற்கனவே எழுதியிருக்கிறேன்

...

உலகமே படம்போட்டு காட்டிய தமிழ்பிரியாவுடன் பணியாற்றியவர். அவர் காயமடைந்ததன் பின்னர் ஆளைத்தான் அடையளம் தெரியாவிட்டால் குரலையாவது அடையளம் தெரிந்திருப்பீர்கள் என நினைத்தேன். ஆனால் டப்பிங் மேக்கப் என்று உங்களிற்கு பழகிப்போன தென்னிந்திய சினிமாத்தனமாய் நிக்கிறீங்களே .இங்கு யாழில் பலரிற்கும் அவரை அடையாளம் தெரிந்திருக்கும் ஆனால் எதுவும் எழுத துணியமாட்டார்கள்.

அவை உங்களிற்கானது

ஒரு ஆள் இல்லை, இரண்டு பேராம்... கணவனும் மனைவியும் முன்னாள் போராளியாம். ம்ம்ம்... பார்றா......!! :lol:

ஆனால் இங்க பதியும் போது இரண்டு பெயரில ஒருத்தருக்குக் கூட இசைப் பிரியா என்று சரியான பெயர் ஞாபகத்தில வர இல்லை. (சரியான டுபாக்கோர் கோஸ்டியா இருக்கும் போல...) இந்த லட்சணத்தில இவக சொல்லுறாக 'டப்பிங் மேக்கப் என்று உங்களிற்கு பழகிப்போன தென்னிந்திய சினிமாத்தனமாய் நிக்கிறீங்களாம்.'

நீங்கள் எந்த மாயைக்குள்ள இருந்து எழுதுறீங்கோ? :rolleyes:

சுட்டிக் காட்டிய இசைக்கலைஞனுக்கு ஒரு பச்சை! :)

சுபமங்களா நீங்கள் இவர்களுடன் சீரியசாக விவாத்தில் ஈடுபடுவதைப்பார்க்க சிரிப்பாக இருக்கின்றது.இது ஒரு பொழுது போக்கு தளம்.எப்படிவிளயாட்டுதிடலும்,வண்ணத்திரையுமோ அதே போல்தான் எமது அரசியலும் எமது மக்களுக்கான வாழ்வும் இவர்களுக்கு..அங்கு தொடர்ந்து கொலைகள்,கொள்ளைகள் நடைபெறவேண்டுமெனவே இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.அதேபோல் வெளிநாட்டிகிருந்து போய்வருபவர்களுக்கு ஏதும் நடக்கக்குடாதது நடக்காதா என ஏங்குகின்றார்கள்.இங்கு வியாபாரம் ஓடவேண்டுமாயின் இவர்களுக்கு இதுவெல்லாம் தேவை.

இலங்கையில் பிரச்சனை தீர்ந்துவிட்டது பாலும் தேனு ஓடுது என எவரும் சொல்லவில்லை ஆனல் கடந்த ஆவணி மாதம் மாத்திரம் லட்சக்கணகானோர் ஊர் போய் பத்திரமாக திரும்பிவந்திருக்கின்றார்கள்.உலகம் முழுக்க உள்ள புலிகளின் ஊடங்கள் இதே ஒப்பாரி தான் இப்போது.விடிந்தால் ஏது இழவு விழாதா என தவம் கிடக்கின்றார்கள்.உலகும் கூட்டமைப்பும் கூட இதை நன்கு புரிந்து வைத்திருக்கின்றன.இருப்பில் இருக்கும் பணம் தீர மட்டும் இந்த ஊடகங்கள் இதே பல்லவியத்தான் பாடிக்கொண்டிருக்கும்.

இங்கும் பலர் இதே ஒப்பாரிதான்.அங்கு தீர்வுவந்தால் இங்கு பை நிரம்பாது.

இங்கபாருடா..சிம்பதியை..! வெளிநாட்டிலிருந்து போய்வருபவர்களுக்கு ஏதும் நடக்கக்குடாதது நடக்காதா என இங்கிருப்பவர்கள் ஏங்குகின்றார்களாம்....என்ன ஒரு கருத்துக்கண்டுபிடிப்பு...என்னவோ நாங்கள் ஏங்கினாத்தான் சிங்களவன் சுடுவானாம் கடத்துவானாம்..ஆவணி மாசம் ஊர்போய் வந்தலட்ச்சத்தில உங்களப்போல மாற்றுக்கருத்தால் மகுடி வாசிக்கும் ஒரு ஆயிரம் பேர் பயமில்லாமல் ஏற்கனவே ஒட்டுகுளுக்களிற்கு அறிமுகம் என்பதால் ஆடிப்பாடி ஆனந்தம்கண்டு வந்திருக்கும்கள். மிச்சம் எல்லாம் உசிரை கையில புடிச்சுக்கொண்டு தம்பி தமையன் தாய் சகோதரங்களை பார்க்கவும் சொந்தங்களை கலியாணம் கட்டப்போனதுவளும்தானப்பா...என்ன இருந்தாலும் எங்கடை வேர் அங்கதானையப்பா இருக்கு..கொல்லுறான் எண்டாப்போல எங்கட அப்பா அம்மாவை பாக்காமல் இருக்கமுடியுமோ..அங்க இருக்கிறதுவள் பயத்தில வரவேண்டாம் வரவேண்டாம் எண்டு சொல்ல சொல்ல பாசத்தில எங்கட சனம் உசிரையும் வெறுத்துப்போறதை எப்பிடி வளமா பிரட்டி உங்கட பிரச்சாரத்திற்கு எடுக்கிறியளப்பா..இப்பிடி உங்கடை பிழைப்பு ஏதோ ஓடிக்கொண்டிருக்கு..இந்த லட்ச்சணத்தில அடுத்தவனைப்பற்றி விமர்சனம்....

  • தொடங்கியவர்

இசைப்பிரியாவை தமிழ்ப்பிரியா எண்டு எழுதிக்கொண்டு மற்ற ஆக்களுக்கு ரெஸ்ட் வைக்கிறீங்கள்??!! :rolleyes::wub:

எனக்கு இங்கு பலரும் கருத்தெழுதினார்கள் பலர் படித்திருந்தார்கள்.ஆனால் நான் விட்ட எழுத்துத் தவறை கண்டுபிடித்து கருத்தெழுதிய இசைக்கலைஞனிற்கு ஒரு பச்சை புள்ளிஆனால் நுணாவிலானிற்கான அடுத்த பதிலில் இசைப்பிரியா என்றே குறிப்பிட்டுள்ளேன்அதில் திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை யாரும் பார்க்கலாம். அதோடு முதலாவது ஜில்லிற்கான பதிலில்பெயரை இசைப்பிரியா என திருத்தியுள்ளேன தவறைத் திருத்த நான் தயங்கியதில்லை.அடுத்ததாய் அடுத்து எனக்கெதிராய் கருத்தெழுதியவர்களின் இலட்சணம் இப்போதாவது அவர்களிற்கு புரிந்திருக்கும். மன்மதன் அம்பு படத்திற்கு கமலிற்கு தென்னிந்தாவிலிருந்து அதே சினிமாத்துறையில் இருப்பவரான அறிவுமதி கவிதை எழுதிய பின்னர்தான் ஈழத்தமிழரை கேவலமாக கையாண்டது எம்மவர்க்கு தெரிந்தது ஆளா ளிற்கு பொங்கியெழுந்தனர்.அதுவரை கும்பலிலை கோவிந்தா போட்டு விசிலடித்து படத்தை பார்த்துக்கொண்டிருந்தோம். அதை;hபோலத்தன் இங்கும் பலர் ஏன் எழுதுகிறோம் எதற்கு எழுதுகிறோம். எதைப்பற்றி எழுதுகிறோம் எதைப்புரிந்து எழுதுகிறோம் என்றும் தெரியாது .கேட்டால் தமிழ்தேசியமாம். :D

Edited by சுமங்களா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுபமங்களா நீங்கள் இவர்களுடன் சீரியசாக விவாத்தில் ஈடுபடுவதைப்பார்க்க சிரிப்பாக இருக்கின்றது.இது ஒரு பொழுது போக்கு தளம்.எப்படிவிளயாட்டுதிடலும்,வண்ணத்திரையுமோ அதே போல்தான் எமது அரசியலும் எமது மக்களுக்கான வாழ்வும் இவர்களுக்கு..அங்கு தொடர்ந்து கொலைகள்,கொள்ளைகள் நடைபெறவேண்டுமெனவே இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.அதேபோல் வெளிநாட்டிகிருந்து போய்வருபவர்களுக்கு ஏதும் நடக்கக்குடாதது நடக்காதா என ஏங்குகின்றார்கள்.இங்கு வியாபாரம் ஓடவேண்டுமாயின் இவர்களுக்கு இதுவெல்லாம் தேவை.

இலங்கையில் பிரச்சனை தீர்ந்துவிட்டது பாலும் தேனு ஓடுது என எவரும் சொல்லவில்லை ஆனல் கடந்த ஆவணி மாதம் மாத்திரம் லட்சக்கணகானோர் ஊர் போய் பத்திரமாக திரும்பிவந்திருக்கின்றார்கள்.உலகம் முழுக்க உள்ள புலிகளின் ஊடங்கள் இதே ஒப்பாரி தான் இப்போது.விடிந்தால் ஏது இழவு விழாதா என தவம் கிடக்கின்றார்கள்.உலகும் கூட்டமைப்பும் கூட இதை நன்கு புரிந்து வைத்திருக்கின்றன.இருப்பில் இருக்கும் பணம் தீர மட்டும் இந்த ஊடகங்கள் இதே பல்லவியத்தான் பாடிக்கொண்டிருக்கும்.

இங்கும் பலர் இதே ஒப்பாரிதான்.அங்கு தீர்வுவந்தால் இங்கு பை நிரம்பாது.

உங்கடை பகிடிக்கு ஒரு அளவேயில்லை இல்லை அண்ணை.

கொஞ்சநாளாய் நீங்கள் இஞ்சை நிண்டு தையக்கத்தை தை எண்டு குத்தி முறிஞ்சதை ஒருக்கால் மீட்டு பாரண்ணை

  • கருத்துக்கள உறவுகள்

வேணுமெண்டுதான் எழுத்துப்பிழையும் விட்டனான் எண்டு சுமங்களா எழுப்போறா நான் நினைச்சன் சரி ஏதோ நடக்கட்டும். :lol: :lol: :lol:

அண்ணை என்ன முழு நேரமும் மப்போ?

அரசியலிலும் உங்கள் பலரின் சீரியஸ் இல்லாத தன்மையைதான் குறிப்பிட்டேன்.நீங்கள் சும்மா வந்து இங்கு கருத்து எழுதினாலும் அங்கிருக்கும் மக்களின் உயிருடனும் வாழ்வாதரத்துடனும் விளையாடுகின்றீர்கள் என்பதை புரிந்தவர்களாக நீங்களில்லை.சுபமங்களா இயக்கமில்லை என்று நிறுவ நீங்கள் பலர் படும் பாடே உங்கள் குற்ற உணர்சியை காட்டி நிற்கின்றது.

நான் இதுவரை எனது கடந்தகாலத்தைபற்றி ஒரு சொல் கூட பொய் சொல்லவில்லை இருந்தும் இங்கு, பலர் அதை நம்ம தயாராக இல்லை எனெனில் உங்கள் தராசில் தான் நீங்கள் எல்லோரையும் எடை போடுகின்றீர்கள்.

அல்லது உங்களுடன் வந்து மல்லு கட்டுவது எனது பிழையாகவும் இருக்கலாம். பலர் போல் நானும் மவுனமாக் இருக்க நான் விரும்பவில்லை.

இனிவரும் காலங்களில் ஈழத்தில் இருக்கும் தமிழர்களும்-புலம்பெயர்நாடுகளில் இருக்கும் ஈழத்துதமிழர்களும் எப்படியான போக்கை கடைப்பிடிக்க வேண்டும்?

இனிவரும் காலங்களில் ஈழத்தில் இருக்கும் தமிழர்களும்-புலம்பெயர்நாடுகளில் இருக்கும் ஈழத்துதமிழர்களும் எப்படியான போக்கை கடைப்பிடிக்க வேண்டும்?

இப்படி ,மொட்டையாக அவரை கேட்டால் எப்பிடி....??

முந்தி PLO வை வால் பிடிச்சியள் அதுக்கு பிறகு CIA யை பிடிச்சு கப்பலிலை ஆயுதம் கொண்டு வந்து இந்தியனிட்டை பறி கொடுத்தியள்.... பிறகு அதுக்கு பழியாய் அமெரிக்கன் எம்பசிக்கு முன்னாலை உங்கட தலைவரை போட்டியள்... பிறகு இந்தியாவுக்கு வால்பிடிச்சு மாலை தீவு வரை போனியள்... பிறகு இலங்கைக்கு வால்பிடிச்சு வவுனியாவிலை லக்ஸ் பிறே லொறி எல்லாம் கடத்தினீயள்...

இனிவரும் காலத்தில் யாருக்கு வால் பிடிக்க போறியள் எண்டு கேழுங்கோ... ! சர்வதேச அரசியலை புரிந்து கொண்டதே யார் வசதியா கிடைப்பினம் எண்டு கண்டு பிடிக்க மட்டும் தானே...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வெளிநாட்டில வாழுற ஆக்கள்.. வீதியில் இறங்கிப் போராடினம்.. குளிரிக்க நின்று போராடினம்.. என்று சொல்லிக் கொண்டிருக்கிறமே தவிர..

எந்தப் போராட்டமும் தாய் நிலத்தில் உயிர் பலிகளை தடுத்து நிறுத்தவில்லை என்ற யதார்த்ததை உணரவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

தாய் மண்ணின் விடிவுக்காக தங்களின் வாழ்க்கை வசதி எல்லாவற்றையும் அர்ப்பணித்தவர்கள் இன்று சாவுக்கும் விடுதலைக்கும் இடையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

எமக்கு ஒழுக்கம் போதித்தவர்கள் இன்று ஒழுக்கக் கேடாக நடத்தப்படுகின்றனர்.

எம்மை காத்து நின்றவர்கள் இன்று மரணப் படுகுழிகளுக்குள் புதைக்கப்பட்டுள்ளனர்.

ஏன் இவர்களுக்கு இந்த நிலை வர அனுமதித்தோம்..??! ஏன் அவர்களை நோக்கி அந்த நிலை வந்த போது நாம் அவர்களை எல்லாம் மீட்டு பாதுகாக்க முடியவில்லை..???!

இன்று சாவை விஞ்சி உள்ளவர்களையாவது எப்படியாவது காக்க வேண்டியது கடமை. அதை செய்பவர்களை அரசியலுக்கு அப்பால் காட்டிக் கொடுப்புகளுக்கு அப்பால் வைத்துக் கொண்டு நோக்க வேண்டும்.

இன்று கூட புலிகள் மகிந்தவால் அழியலாம்.. நாங்கள் மகிந்தவோடு வாழலாம் என்று இருக்கும் எம்மவர்கள் மத்தியில்.. ஏன் புலிகளும் மகிந்தவோடு சேர்ந்து வாழ முடிந்தால் வாழட்டேன் என்ற நிலையை எம்மால் பெற முடியவில்லை...???!

தாயகம்.. விடுதலை.. மண்மீட்பு.. இவை ஒரு தொகுதி மக்களுக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. இந்த உலகெங்கும் பரந்து வாழும் பலகோடி தமிழர்களுக்குமானது. அவர்கள் எல்லாம் பேர்தேடே பாட்டி கொண்டாடிக் கொண்டிருக்க இவர்கள் தானா மரணவீடு கண்டு கொண்டிருக்க வேண்டும்.

இன்றைய நிலையில் தேசிய தலைவர் இருந்திருந்தால் கூட சிங்களத்தோடு சமரசம் செய்து.. இந்த உயிர்களை எல்லாம் காக்க நின்றிருப்பாரே தவிர.. யார் எதற்குப் பின்னால் இருந்து செயற்படுகினம்.. என்று நோண்டி உயிர்களின் அழிவிற்கு வித்திட்டுக் கொண்டிருக்க மாட்டார்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்டது உங்களிடம் மட்டும் தான் அதாவது இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருக்கும் நெடுக்காலைபோவான் எனும் புனைபெயரில் வாழ்ந்து கொண்டிருப்பவரிடம்...

பந்திபந்தியாக எனக்கு வசனங்கள் தேவையில்லை.

யாழ் களத்துக்குள் கருத்து வடிவில் மட்டும் என்னால் அறியப்பட்ட உங்களின் கருத்தால் ஆவேசப்பட்டு.. எனது தனிப்பட்ட விடயங்களை எந்த வகையிலும் நேரடி அறிமுகமற்ற உங்களோடு பகிர்ந்து கொள்ள நான் ஒன்றும் கேண கிடையாது. அதற்கான தேவையோ அவசியமோ எனக்கில்லை...!

இது விடயத்தில் எனது கருத்து எவராக இருந்தாலும் தாயகத்தில் உயிர் அச்சுறுத்தலுக்கு இலக்காகி அவல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போராளிகள் மற்றும் பொதுமக்களை காப்பாற்ற அனுமதிக்க வேண்டும். அவர்கள் மீதான கண்மூடித்தனமான விமர்சனங்களை விட்டுத்தள்ளி யதார்த்தத்திற்கு ஏற்ற வகையில் சாத்தியமானவற்றை பேச வேண்டும் என்பதுதான். அதை ஏற்றுக் கொள்வதும் விடுவதும் உங்கள் விருப்பு வெறுப்பை . கருத்து உணர்தலைப் பொறுத்தது. அதற்காகவெல்லாம் நான் அடையாள அட்டையோடு வந்து கருத்துச் சொல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அப்படி ஒரு விதி யாழிலும் இல்லை. :D:)

குமாரசாமியண்ணை நீங்கள் என்னிடம் கேள்விகேட்க தயா அதற்கு பதில் சொல்லுகின்றார்.

இதுதான் தமிழன் புத்தி.திரும்ப திரும்ப கிருபன் தயாவிற்கு பதிலளித்திருந்தார்.நீர் நினைப்பத்துதான் எனது பதிலில்லை என்று.

அண்ணை உங்களுகொன்று சொல்லுகின்றேன் நானும் சும்மா இயக்கத்தில் முக்கிய இடத்தில் இருந்தனான்,நாலு பேரை சந்தித்தானன்,முடிந்தவரை தமிழனின் விடுதலைக்கு பாடுபட்டனான்,அகதிகளுக்கு உதவியும் செய்தனான் பின்னர் பல பிரச்சனைகளால் தோல்வியுடன் வெளிநாடு திரும்பியவன். எனது தொடர்பில் உள்ள பல முன்நாள் போராளிகள் போல் நானில்லை.அவர்கள் எல்லாம் முடிந்த கதை என்கின்றார்கள் அல்லது அதைபற்றியே கதைக்க விருப்பமில்லாமல் இருக்கின்றார்கள்.

எனக்கு தெரிந்ததை,என் மனதில் பட்டதை நான் இங்கு வந்து எழுத இடம் கொடுத்த யாழுக்கு நன்றி.

எனக்கு தெரிந்ததும் எனக்கு சரியாகப் பட்டதும் தான் நான் எழுதுவது.தேசியம் என்ற போர்வையில் நாடகம் போட நான் தயாரில்லை.

இன்றும் என்னுடன் பலர் தொடர்பில் உள்ளார்கள்.பல இயக்கங்களின் முக்கிய உறுப்பினர்கள் பத்திரிகையாளர்கள் உட்பட.இங்கு வந்து மல்லு கட்டுவதால் நான் சிறுமை படுவதாக நான் ஒரு போதும் உணர்ந்ததில்லை.

தமிழனின் விடிவிற்காக ஒரு மனம்விட்டு உண்மைபேசும் ஒரு அமைப்பு உருவாகவேண்டும் என என்றும் நினைப்பவன்.

இவன் சும்மா சுத்துகின்றான் என நினைப்பீர்கள்.புலிகளில் இருந்து திம்பு பேச்சுவார்க்தைக்கு போன திலகர்,அன்ரன் இருவரில் திலகர் ஆமியிடம் அன்ரன் எங்கே?இவர் புலிகளின் மத்திய கொமிட்டி தெரிவிற்கு பிரபாகரனை விட கூடிய வாக்கு பெற்றவர்.(ஜ்யரின் பதிவுகளை பார்க்கவும்).இதே போல் பலர் .அவர்கள் எவரின் அனுமதியில்லாமல் என்னுடன் அவர்களுடனான தொடர்புகளை உங்களுடன் பகிர முடியாது.

எமது இனத்திற்கான விடுதலை என்பது நாம் சும்மா ஒரு பொழுது போக்குவதற்கான விடயமல்ல.

உங்கட கொள்கைகள் செயற்பாடுகள் பற்றி பலர் பல கேள்விகளை கேட்டும் இருக்கினம் அதுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒழிஞ்சு போட்டு புலிக்கு சொறியிறதுக்கு மட்டும் அடிக்கடி தலை காட்டுற உங்களை வேறை எப்படி சொல்ல முடியுது...

இதுக்கை பதில் தர முடியாமல் சும்மா நம்பிக்கை தான் வாழ்க்கை எண்டு சொல்லுற ஆளிலை கிருபனும் விதிவிலக்கு இல்லை... ஆனால் கிருபனை போல பதில் சொல்லும் ஆளா நீர்...?? உமக்கு அரசியல் என்பது எழுதில் மட்டும் தான் தெரிந்து இருக்கிறது...

உண்மை எண்டு நீங்கள் புலியை பற்றி பேசுவது சரி எண்டால் நாங்கள் மட்டும் உங்களை பற்றி ஒண்டும் சொல்லக்கூடாதாக்கும்... !

நீங்கள் உங்கட கோவணங்களை அவிட்டு தலைப்பாகை கட்டிக்கொள்ளுவீங்கள்... உங்கடயள் நாத்தம் அடிக்குது எண்டு நாங்கள் கருத்துச்சொல்லக்கூடாதாக்கும்...

அதோடை நீர் வெட்டி முறிச்ச எல்லாத்தையும் நீர் மட்டும் தான் மெச்சிக்கொள்ள வேண்டும்....

Edited by தயா

தமிழனின் விடிவிற்காக ஒரு மனம்விட்டு உண்மைபேசும் ஒரு அமைப்பு உருவாகவேண்டும் என என்றும் நினைப்பவன்.

இவன் சும்மா சுத்துகின்றான் என நினைப்பீர்கள்.புலிகளில் இருந்து திம்பு பேச்சுவார்க்தைக்கு போன திலகர்,அன்ரன் இருவரில் திலகர் ஆமியிடம் அன்ரன் எங்கே?இவர் புலிகளின் மத்திய கொமிட்டி தெரிவிற்கு பிரபாகரனை விட கூடிய வாக்கு பெற்றவர்.(ஜ்யரின் பதிவுகளை பார்க்கவும்).இதே போல் பலர் .அவர்கள் எவரின் அனுமதியில்லாமல் என்னுடன் அவர்களுடனான தொடர்புகளை உங்களுடன் பகிர முடியாது.

எமது இனத்திற்கான விடுதலை என்பது நாம் சும்மா ஒரு பொழுது போக்குவதற்கான விடயமல்ல.

உண்மை பேசும் ஆக்கள் நீங்கள் எண்டால் நீங்கள் செய்த குழறுபடிகளை மட்டும் ஏன் மூடி மறைக்கிறீர்கள்...?? ஐயர் தனது பார்வையில் தனது கோணத்தில் எழுதியது தான் உண்மை சரியான நிலைப்பாடு எண்டு ஒரு போடு போட்டு கொண்டு இருக்கிறீர்கள் பாருங்கள்.. இங்கை மனித நாகரீகத்தை நீங்கள் புரிஞ்சு கொள்ள இல்லை எண்டதை சொல்லுது...

முதலிலை மற்றவர்களின் பார்வை எப்படி இருந்தது என்பதை பாருங்கள்... ! மற்றயவரின் கோணத்தை உள்ள நியாயத்தை கூட ஐயரோ நீங்களோ புரிந்து கொள்ள முயலவில்லை...

ஐயரின் பதிவு நிறைவாக சொன்னது PLOT அமைப்புக்கு பிரபாகரன் பட்டுமே பிரச்சினையாக எப்போதும் இருந்தார் என்பது தான் அது... அவரை ஒடுக்கவே நிறைய வேலை செய்து இருக்கிறீர்கள் கட்ச்சி சேர்ந்து வேலை செய்து இருக்கிறீயள் எண்டது மட்டும் புரிகிறது...

தனி மனிதனாக நிண்ட பிரபாகரனை கூட எதிர்க்க முடியாத கூட்டம் என்னதை சாதிச்சு போடுவியள்....??

இங்கை தான் உங்கட தோல்வி ஆரம்பிச்சது... இப்ப பிரபாகரன் கட்டி வைச்சதுகளிலை இருந்து புலியை துரத்திப்போட்டு நீங்கள் ஏறி பயணம் செய்ய நிக்கிறீயள்....!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

திரும்ப திரும்ப கிருபன் தயாவிற்கு பதிலளித்திருந்தார்.நீர் நினைப்பத்துதான் எனது பதிலில்லை என்று..

கிருபனின் கருத்தெழுதலையும் தங்களது வாந்தியெடுத்தலையும் ஒன்றாக பார்க்கமுடியாது.கிருபனிடம் தன் இனம் மீதான தேடல் அக்கறை மக்களுக்காக செய்தவர்கள்மேல் மரியாதை இருக்கிறது. தங்களிடம் எதுவுமில்லை. ஆகக்குறைந்தது கிருபன் எமது கேள்விக்கு தனது பதிலை அல்லது தீர்வை முன்வைக்கின்றார். நீங்கள் எங்கெல்லாம் ஏதோ கிழித்தேன் அவரைத்தெரியும் இவரைத்தெரியும் என்பதற்கு அப்பால் இதுவரை என்ன செய்தீர்.....?

  • கருத்துக்கள உறவுகள்

போன வருடம் முள்ளிவாய்க்கால் அழிவிக்குப் பிறகு அந்த மக்களுக்கு டக்லஸ் உதவி செய்கிறார் என கலைஞன் எழுத எல்லோரும் கலைஞனை திட்டினார்கள்...ஒரு தமிழின துரோகியிடம் இருந்து உதவி பெறுகிறதா என எழுதியிருந்தார்கள்...என்ட கேள்வி என்ன என்டால் கேபியின்ட உதவியைப் பெறலாம் என்டால் ஏன் டக்லஸ்சின் உதவியைப் பெறக் கூடாது..கேபியை விட டக்லஸ் மேல் தானே...அதுக்காக அந்த மக்களுக்கு உதவ வேண்டாம் என சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

.என்ட கேள்வி என்ன என்டால் கேபியின்ட உதவியைப் பெறலாம் என்டால் ஏன் டக்லஸ்சின் உதவியைப் பெறக் கூடாது..கேபியை விட டக்லஸ் மேல் தானே...அதுக்காக அந்த மக்களுக்கு உதவ வேண்டாம் என சொல்லவில்லை.

எனது கருத்து

யார் வேண்டுமானாலும் உதவலாம்.

நீங்கள் யார்?

உங்கள் பின்னணி என்ன? என்ற உண்மையை மட்டும் மக்களுக்கு சொல்லுங்கள் :(

  • கருத்துக்கள உறவுகள்

போன வருடம் முள்ளிவாய்க்கால் அழிவிக்குப் பிறகு அந்த மக்களுக்கு டக்லஸ் உதவி செய்கிறார் என கலைஞன் எழுத எல்லோரும் கலைஞனை திட்டினார்கள்...ஒரு தமிழின துரோகியிடம் இருந்து உதவி பெறுகிறதா என எழுதியிருந்தார்கள்...என்ட கேள்வி என்ன என்டால் கேபியின்ட உதவியைப் பெறலாம் என்டால் ஏன் டக்லஸ்சின் உதவியைப் பெறக் கூடாது..கேபியை விட டக்லஸ் மேல் தானே...அதுக்காக அந்த மக்களுக்கு உதவ வேண்டாம் என சொல்லவில்லை.

டக்கிளஸ் தேவானந்தா ஈபிஆர் எல் எவ் இல் இருந்த காலத்தில் இருந்து விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப்புலிகளையும் மக்களையும் கொன்று வருகிறான். கொள்ளையடித்து வருகிறான். அவன் திட்டமிட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதக் குழுவாக எதிரிக்காக இயங்கிக் கொண்டிருப்பவன். அவன் தோள்கொடுப்போடுதான் முள்ளிவாய்க்கால் துயரம் செம்மணித்துயரம் எல்லாம் அரங்கேறின.

அப்படிப்பட்ட ஒரு துரோகி உண்மையில் போராளிகளின் விடுதலையில் அக்கறை செலுத்த வாய்ப்பு மிகக் குறைவு. அது இப்போ வெளிப்படை உண்மையாகியும் உள்ளது.

டக்கிளஸோ கருணாவோ புலிகளின் தலைமையை தான் வெறுத்திருந்தால்.. இசைப்பிரியா உட்பட்ட நூற்றுக் கணக்கான போராளிகள் சிங்களப்படைகளால் சரணடைந்த பின் சித்திரவதை செய்து கொல்லப்பட விட்டிருக்கமாட்டார்கள். உண்மையில் அவர்களிடம் இனப்பற்றோ மனிதாபிமானமோ இல்லை. அவர்கள் மனித உருவில் அலையும் கொடிய விலங்குகள். எதிரிக்கு கூட்டிக் கொடுத்து இனத்தை விற்று அதன் வழியில் வாழ நிற்பவர்கள்.

இவர்களுக்கு எதிரி சங்கூதும் காலம் வெகுதொலைவில் இல்லை. அதை மகிந்த பொங்கலோடு சொல்லிவிட்டுத்தான் சென்றுள்ளார். வடக்கில் அரசியல் செய்தது போதும் எனி ஒட்டுமொத்த சிறீலங்காவிற்கும் சேர்த்து அரசியல் செய் இல்லை என்றால் ஓடு என்பதுதான் அது.

டக்கிளஸ் கருணா போன்று கேபி ஆயுதக்குழு வைத்து போராளிகளை கொன்றுகொண்டிருக்கவில்லை. கேபி காட்டிக் கொடுத்தார் என்பது செய்தி. அதற்கு எந்த ஆதார அடிப்படைகளும் கிடையாது. ஆனால் இந்தத் துரோகிகளால் மக்களில் பெரும்பாலானோரில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

டக்லஸாலேயோ,கருணாவாலேயோ போராளிகளுக்கு உதவ முடியாது சரி...ஏன் கேபியாலா என்ன செய்ய முடிந்தது?...கேபியால் இசைப் பிரியாவையோ அல்லது போராளிகளையோ காப்பாற்ற முடிந்ததா?...சிங்கள அரசு யாரை எல்லாம் தனது தேவைக்கு பயன்படுத்துகிறதோ பயன்படுத்தி முடிந்ததும் அவர்களை சுடத் தான் வேண்டும் என்டால் சுடுகிறது அதை தடுக்க டக்லசாலோ,கருணாவாலோ அல்லது கேபியால் கூட முடியாது...நான் இங்கு கேபி மூலம் ஒருவரும் உதவி செய்யக் கூடாது என சொல்லவில்லை...கேபி மூலம் உதவி செய்யலாம் என்டால் ஏன் டக்லஸீன்,கருனாவின் உதவியை அங்குள்ளவர்கள் ஏற்க கூடாது என்பது தான் கேள்வி...தற்போது அங்கு உள்ளவர்களுக்கு உடனடி தேவை மீள் கட்டுமாணம்,அவர்களுக்கு என்டொரு புது வாழ்க்கை அதை யார் கொடுத்தால் என்ன?

எனது கருத்து

யார் வேண்டுமானாலும் உதவலாம்.

நீங்கள் யார்?

உங்கள் பின்னணி என்ன? என்ற உண்மையை மட்டும் மக்களுக்கு சொல்லுங்கள் :(

அண்ணா உங்கள் கேள்வி எனக்கு விளங்கவில்லை யார் முகம் காட்ட வேண்டும்?..யாரின் பின்னனி விளங்க வேண்டும் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா உங்கள் கேள்வி எனக்கு விளங்கவில்லை யார் முகம் காட்ட வேண்டும்?..யாரின் பின்னனி விளங்க வேண்டும் :unsure:

உதாரணமாக

கேபி அவர்கள்

எப்போதிருந்து அரசிற்கு சார்பாக மாறினார் என்ற உண்மையை மக்களுக்கு சொல்லவேண்டும்

போன வருடம் முள்ளிவாய்க்கால் அழிவிக்குப் பிறகு அந்த மக்களுக்கு டக்லஸ் உதவி செய்கிறார் என கலைஞன் எழுத எல்லோரும் கலைஞனை திட்டினார்கள்...ஒரு தமிழின துரோகியிடம் இருந்து உதவி பெறுகிறதா என எழுதியிருந்தார்கள்...என்ட கேள்வி என்ன என்டால் கேபியின்ட உதவியைப் பெறலாம் என்டால் ஏன் டக்லஸ்சின் உதவியைப் பெறக் கூடாது..கேபியை விட டக்லஸ் மேல் தானே...அதுக்காக அந்த மக்களுக்கு உதவ வேண்டாம் என சொல்லவில்லை.

உங்கள் கேள்விக்கு இந்த படம் சாட்சி!!!!!!!!

soosaibrother.jpg

Uploaded with ImageShack.us

இந்த காட்சி க்கு கதையை எழுதினால் விடைகிடைக்கும்.

உதாரணமாக

கேபி அவர்கள்

எப்போதிருந்து அரசிற்கு சார்பாக மாறினார் என்ற உண்மையை மக்களுக்கு சொல்லவேண்டும்

கேபி தான் கைது செய்யப்பட்டார் என்று தானே சொல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா நம்பிக்கை தான் வாழ்க்கை எண்டு சொல்லுற ஆளிலை கிருபனும் விதிவிலக்கு இல்லை...

ஒரு மாதிரி என்னை கேபியின் குறூப்பில் சேர்த்துவிட்டீர்கள். மெம்பெர்ஷிப் படிவத்தில் கள்ளக் கையெழுத்துப் போட்டது யார்? :lol:

என்னுடைய பெரிய பிரச்சினை என்னவென்றால், அரசியல் ரீதியாக சிந்திக்கத் தெரிந்த காலத்தில் இருந்து (பதின்ம வயதில் இருந்து) எந்தவொரு அமைப்பினருடனும் சேர்ந்துகொள்ளாததுதான். கொள்கை, கோட்பாடுகளைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் உறுப்பினராக எந்த அமைப்பிலும் சேரமுடியாது என்பது இந்திய இராணுவம் இருந்த காலத்தில் பதுங்கி அரசியல் செய்த புலி நண்பர் ஒருவருடனான விவாதத்தில் புரிந்துகொண்டது. இத்தனைக்கும் அப்போது 15 வயது கூட ஆகவில்லை! புலி நண்பர் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் காரண காரியம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது; அதற்கு நேரத்தைச் செலவழிக்கும் நேரத்தில் சிலவேளை உயிர்கூடப் பறிபோய்விடலாம். எனவே கட்டளைக்குக் கீழ்படிந்து உடனடியாகச் செயற்பட முடிந்தால் மாத்திரம்தான் அமைப்பில் சேரலாம் என்று சொன்னார். அதாவது "true soldier" ஆக இருக்கவேண்டும்! தனித்துவமான சிந்தனையுள்ளவர் "true soldier" ஆக இருக்கமுடியாது என்பது அப்போதே விளங்கியது.

எனவே "நம்பிக்கைதான் வாழ்க்கை" என்று சோர அரசியலையோ அல்லது தோற்றுப்போன அரசியலையோ ஏற்றுக்கொள்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனிடம் தன் இனம் மீதான தேடல் அக்கறை மக்களுக்காக செய்தவர்கள்மேல் மரியாதை இருக்கிறது. தங்களிடம் எதுவுமில்லை. ஆகக்குறைந்தது கிருபன் எமது கேள்விக்கு தனது பதிலை அல்லது தீர்வை முன்வைக்கின்றார். ?

புரிந்து கொண்டமைக்கு நன்றி விசுகு அண்ணா. தீர்வு எல்லாம் என்னிடம் கிடையாது. எனினும் தொடர்ந்து ஆரோக்கியமாக எந்த விடயத்தைப் பற்றியும் உரையாடவேண்டும் என்ற விருப்பம் உள்ளது. சரி, பிழைகள் எல்லோரிடமும் உள்ளது போல என்னிடமும் இருக்கின்றது, அத்துடன் தவறு என்று சுட்டிக் காட்டினால் ஏற்கும் பக்குவமும் வளர்ந்து வருகின்றது (இன்னும் நிறைய வளரவேண்டும் என்றும் தெரிந்து இருக்கின்றது!)

ஒரு மாதிரி என்னை கேபியின் குறூப்பில் சேர்த்துவிட்டீர்கள். மெம்பெர்ஷிப் படிவத்தில் கள்ளக் கையெழுத்துப் போட்டது யார்? :lol:

என்னுடைய பெரிய பிரச்சினை என்னவென்றால், அரசியல் ரீதியாக சிந்திக்கத் தெரிந்த காலத்தில் இருந்து (பதின்ம வயதில் இருந்து) எந்தவொரு அமைப்பினருடனும் சேர்ந்துகொள்ளாததுதான். கொள்கை, கோட்பாடுகளைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் உறுப்பினராக எந்த அமைப்பிலும் சேரமுடியாது என்பது இந்திய இராணுவம் இருந்த காலத்தில் பதுங்கி அரசியல் செய்த புலி நண்பர் ஒருவருடனான விவாதத்தில் புரிந்துகொண்டது. இத்தனைக்கும் அப்போது 15 வயது கூட ஆகவில்லை! புலி நண்பர் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் காரண காரியம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது; அதற்கு நேரத்தைச் செலவழிக்கும் நேரத்தில் சிலவேளை உயிர்கூடப் பறிபோய்விடலாம். எனவே கட்டளைக்குக் கீழ்படிந்து உடனடியாகச் செயற்பட முடிந்தால் மாத்திரம்தான் அமைப்பில் சேரலாம் என்று சொன்னார். அதாவது "true soldier" ஆக இருக்கவேண்டும்! தனித்துவமான சிந்தனையுள்ளவர் "true soldier" ஆக இருக்கமுடியாது என்பது அப்போதே விளங்கியது.

எனவே "நம்பிக்கைதான் வாழ்க்கை" என்று சோர அரசியலையோ அல்லது தோற்றுப்போன அரசியலையோ ஏற்றுக்கொள்வதில்லை.

நன்பர் கிருபன் அவர்களே,,,,,,,,,,,

தேசத்துரோகி கே பியுடன் கூட்டா?

  • கருத்துக்கள உறவுகள்

நன்பர் கிருபன் அவர்களே,,,,,,,,,,,

தேசத்துரோகி கே பியுடன் கூட்டா?

பிழையாக கூட்டுக்க்களுடன் நான் சேர்வதில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.