Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதீ!

Featured Replies

சாதீ!

பனங்காயின் பனக்காய்த்தனமான ஆய்வு.

இன்று இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லாமையினால்.. சாதி வேறுபாடுகள் தலைதூக்கத்தொடங்கியிருப்பத்தாக எமது யாழ்ப்பாண நிருபர் அறியத்தந்தார் ( அதான் பச்சை சட்டை போட்டு மூனாவில் தொடங்கும் தெருவுக்கு பக்கத்து தெருவில் இருப்பவர்)

இந்தியாவினால் மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழர்கள் இதை உக்கிரமாக பரப்புவதாக சொல்கிரார்கள். ஐரோப்பாவில் இருக்கும் மூளை சலவை செய்யப்பட்ட தமிழர்களும் இதில் அடக்கம்.. எமக்கு இருக்கும் சுயநலம், விண்ணானம் ஆகியவற்றுடன் சாதிவெறியும் சேர்ந்தால் ரத்த ஆறு ஓடுவதை தடுக்கமுடியாது. இந்த சாதி பிரச்சினையை நுளைப்பதில் லோக்கல் தமிழ் அரசியல்வாதிகள் ஆதரிப்பதாகவும் தெரியவருகிறது.

விடுதலை, போர்குற்றம், மண்ணாங்கட்டி எண்டு வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டிருக்கும் வீணாப்போனதுகள் இதில் கவணம் செலுத்தினால் புன்னியமாய் போகும்.

நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்

சுகனை மேடைக்கு அழைக்கிறேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டத்தில் ரதி மட்டும்தான் தனியாக நிற்கிறா போல?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் படைகள் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்து நின்ற அதே நிலை இன்று. இந்தத் துரோகிகள் அன்றும் தமிழ் மக்களிடையே ஒற்றுமையை குலைக்க விரும்பும் எதிரிகளின் நோக்கங்களை நிறைவு செய்யும் வகையில் இப்படியான சாதிய சொற்பதங்களையும் சாதியையும் முன்னிலைப்படுத்தி பேசி வந்திருக்கின்றனர்.

சில ஈழத்து எழுத்தாளர்கள்.. அல்லது படைப்பாளிகள் என்று சொல்வோர்... உதாரணம் பலர்.. அவர்களில் ஒருவர்.. டொமினிக் ஜீவா போன்றவர்கள்.. புலிகள் இருக்கும் போது ஒரு குணம்.. புலிகள் இல்லாத போது இன்னொரு குணம்.

போராட்ட ஆரம்ப கட்டத்திலும் கூட ஒவ்வொரு இயக்கங்களும் (புலிகளைத் தவிர) சாதிய அடையாளங்களோடு நிற்க முற்பட்டன என்று வரலாறு சொல்கிறது. வெளிப்படையாக சாதி எதிர்ப்பை கடைப்பிடிப்பதாக காட்டிக் கொண்டாலும்.. சில இயக்கங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்ற பதத்தைப் பாவித்துக் கொண்டு வறுமையில் வாடிய மக்கள் மீது சவாரி விடத்தொடங்கின.

அதில் புளொட்.. ஈபி ஆர் எல் எவ்.. ஈ என் டி எல் எவ்.. முதன்மையானவை.

அந்த நாதாரிகளே இன்று சிறீலங்கா சிங்கள அரசோடும்.. சேர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

டக்கிளஸ் தேவானந்தா - மானிப்பாயில் சாதியக் குறியோடு.. PLA நடத்தி அடிவாங்கிக் கொண்டு ஓடினவன்.

வரதராஜப் பெருமாள்.. அப்படி.

சித்தார்த்தன் அப்படி.

சங்கரி அப்படி.

இதுகளோடு அதுகளின் வால்கள். இந்த புலம்பெயர் நாடுகள் எங்கனும்.

இதுகள் ஒருபோதும் இன ஒற்றுமையை விரும்பாத கூட்டங்கள். இனம் பிளவுபடுவதால் கிடைக்கும் ஆதாயத்தை வைத்து அரசியலும்.. புகழும் வளர்க்க நிற்கும் தறுதலைகள்.

இதனால் தான் இவர்களோடு ஜனநாயகம் பேச முடியாது.. துப்பாக்கிகளால் பேச வேண்டிய நிலை வந்தது. அதையே இவர்கள் இன்னும் இன்னும் வளர்த்துக் கொள்ளவும் விரும்புகின்றனர்.

மாற்றுக்கருத்து ஜனநாயகம் என்பது இவர்கள் பாசையில் இதுதான். சாதி பேசுவது.. புலிப் பாசிசம் என்று திட்டுவது.. சிங்கள அரசுக்கு நோகாமல் கண்டிக்கிறதாப் போல அதை அரவணைப்பது. இந்திய அரசுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தெரிவிப்பது.

இதுகள்.. திருந்தாத ஜென்மங்கள். அப்பாவிகள் மக்கள் எல்லாம் இறக்கினம். இந்த நாதாரிகளுக்கு சாவும் வருகுதில்லை. இனத்துக்கு பிடிச்ச சனியன்கள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் ஈழத்து எழுத்தாளர்கள் டொமினிக் ஜீவாவுக்கு [அவரது சாதியை காரணம் காட்டி] உரிய அந்தஸ்து கொடுக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் ஈழத்து எழுத்தாளர்கள் டொமினிக் ஜீவாவுக்கு [அவரது சாதியை காரணம் காட்டி] உரிய அந்தஸ்து கொடுக்கவில்லை

படைப்பாளியோ எழுத்தாளனோ அவரின் படைப்பு, எழுத்தின் அடிப்படையில் தான் அங்கீகரிக்கப்படுகின்றனரே தவிர.. சாதிய அடிப்படையில் அல்ல. ஆனால் டொமினிக் ஜீவா போன்றவர்கள் விடுதலைப்புலிகள் இருக்கும் காலத்தில் சாதியை முன்னிறுத்தாது.. படைப்பை முன்னுறுத்தி மதிப்பு மரியாதையும் பெற்றவர்கள். ஆனால் புலிகளின் வீழ்ச்சியோடு அவர்களும் மீண்டும் மீண்டும் சாதியை பற்றி சொல்லி தாங்கள் புறக்கணிக்கப்படுவதற்கு சாதி காரணம் என்று சொல்லிக் கொள்கின்றனர்.

ஆனால் அங்கு சாதி காரணமா அல்லது அவர்களின் படைப்புகளின் நோக்கத்தில் மாற்றமா.. அல்லது அவர்கள் சார நினைக்கும் அரசியல் தரப்புக்களுக்காக இவர்கள் தமக்குள் ஏற்படுத்தும் மாற்றம் காரணமா என்று ஆராய்ந்தால்.. சாதியை வைத்து அரசியல் புகழை செய்ய நினைப்பவர்கள் ஆதிக்கம் செய்யும் போது டொமினிக் ஜீவாவும் சாதியை சொல்லி பிழைப்பை ஓட்ட நினைப்பதை பலர் உணர்ந்திருக்கிறார்கள்.

மல்லிகையில் புலிகள் இருக்கும் போது வராத சாதியப் படைப்புக்கள்.. இல்லாத போது பூக்கும்... அது எதுக்கோ...???!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நான் நினைக்கிறேன் ஈழத்து எழுத்தாளர்கள் டொமினிக் ஜீவாவுக்கு [அவரது சாதியை காரணம் காட்டி] உரிய அந்தஸ்து கொடுக்கவில்லை

இது காப்பிலிகளின் கதை போல..

மண்டையில் ஒண்டுமில்லை எண்டு ஒதுக்கிவைத்தால்.. தான் கருப்பு எண்டு ஒதுக்கிவைக்கிறாங்கள் சொல்லுவதைப்போல....

இது காப்பிலிகளின் கதை போல..

மண்டையில் ஒண்டுமில்லை எண்டு ஒதுக்கிவைத்தால்.. தான் கருப்பு எண்டு ஒதுக்கிவைக்கிறாங்கள் சொல்லுவதைப்போல....

:lol:

முன்பு ஒரு ஜேர்மனியில் இருந்து இயக்கப்பட்ட வானொலியில் ... சாதியம் தொடர்பாக ... கேட்டதில் ... போராட்ட உச்ச காலங்களில் ....

... சாதீயத்தை/சாதீய வெறியை நாம் ஒழிக்கவில்லை/அழிக்கவில்லை! மாறாக உறைநிலையில் வைத்திருக்கிறோம், அது ஒருநாள் வெளியில் எடுக்கப்படும் அப்போது, அதுசிறு சிறு துளிகளாக கரைந்து சிந்ததொடங்கி, வெள்ளமாக பாயும்!!! ....

... அவ்வானொலியின் அக்காலத்து கூற்று, இன்று ...

அதற்குமேல் இந்த சாதிய சாக்கடையில் ... எமக்காக போராடவென புறப்பட்ட எல்லோரும் தடம் புரண்டனர்!!! ... இதில் புலிகளில் இருந்த சில தலைவர்களும் அடக்கம்!

மே18இற்கு முன் ... இங்கு ஐரோப்பாவில் ... தலித் உரிமை மாநாடு நடத்தினார்கள் ... யார்???? ... அப்போதே சிலரை இங்கும் வைத்து இச்சாதீய பிளவை ... பலகாலமாக அமர்ந்து போயிருந்ததை ... கிளற சிங்களம் தொடங்கி விட்டது!!! ...

மே 18இற்குப்பின் ... என்ன உடனடியாகவே ... புலத்தில் புலிகளின் புலனாய்வுத்துறையென திரிந்தவர்களையும், ஊடகத்துறையென திரிந்தவர்களில் பலரை வாங்கி ... புலத்திலும் ... வெற்றிகரமாக கிளறி எறிகிறது! ... சிங்களம்!!

இவைகளுக்கு மேல் ... வடகிழக்கில் இன்று ... கொடி கட்டி பறக்கவிடப்பட்டிருக்கிறதாம், இந்த சாதியம்!! ... இந்த இனம் நிச்சயமாக விடுதலை பெறும்!!!

தமிழனை அழிக்க பிற நாட்டவர் தேவை இல்லை. தமிழனே தமிழனை அழிப்பான்! எந்த நாட்டவனும் தன் நாட்டை,தன் இனத்தை விட்டுக் கொடுக்க மாட்டன். ஆனால் தமிழன் தன் இனத்தையே சாதியின் பெயரால் தூற்றி தன் நாட்டையே விற்று விடுவான்! விசேடமாக இதில் தமிழ்நாட்டுத்தமிழனை யாரும் வெல்லமுடியாது...

  • கருத்துக்கள உறவுகள்

படைப்பாளியோ எழுத்தாளனோ அவரின் படைப்பு, எழுத்தின் அடிப்படையில் தான் அங்கீகரிக்கப்படுகின்றனரே தவிர.. சாதிய அடிப்படையில் அல்ல. ஆனால் டொமினிக் ஜீவா போன்றவர்கள் விடுதலைப்புலிகள் இருக்கும் காலத்தில் சாதியை முன்னிறுத்தாது.. படைப்பை முன்னுறுத்தி மதிப்பு மரியாதையும் பெற்றவர்கள். ஆனால் புலிகளின் வீழ்ச்சியோடு அவர்களும் மீண்டும் மீண்டும் சாதியை பற்றி சொல்லி தாங்கள் புறக்கணிக்கப்படுவதற்கு சாதி காரணம் என்று சொல்லிக் கொள்கின்றனர்.

ஆனால் அங்கு சாதி காரணமா அல்லது அவர்களின் படைப்புகளின் நோக்கத்தில் மாற்றமா.. அல்லது அவர்கள் சார நினைக்கும் அரசியல் தரப்புக்களுக்காக இவர்கள் தமக்குள் ஏற்படுத்தும் மாற்றம் காரணமா என்று ஆராய்ந்தால்.. சாதியை வைத்து அரசியல் புகழை செய்ய நினைப்பவர்கள் ஆதிக்கம் செய்யும் போது டொமினிக் ஜீவாவும் சாதியை சொல்லி பிழைப்பை ஓட்ட நினைப்பதை பலர் உணர்ந்திருக்கிறார்கள்.

மல்லிகையில் புலிகள் இருக்கும் போது வராத சாதியப் படைப்புக்கள்.. இல்லாத போது பூக்கும்... அது எதுக்கோ...???!

புலிகள் இருக்கும் போது எல்லோரும் புலிகளுக்கு கட்டுப்பட்டு இருந்தார்கள்...சாதிப் பிரச்சனை அப்போது பெரிதாக இருக்கவில்லை அதனால் டொமினிக் ஜீவா போன்றவர்களுக்கு உரிய அந்தஸ்து கிடைத்தது...தற்போது புலிகள் இல்லை என்பததால் மற்றவர்கள் அவருக்கு[டொமினிக் ஜீவாவுக்கு] உரிய அந்தஸ்து கொடுக்கவில்லை.

இது காப்பிலிகளின் கதை போல..

மண்டையில் ஒண்டுமில்லை எண்டு ஒதுக்கிவைத்தால்.. தான் கருப்பு எண்டு ஒதுக்கிவைக்கிறாங்கள் சொல்லுவதைப்போல....

பனங்காய் நாங்கள் தான் காப்பிலியை நக்கலடித்துக் கொண்டு இருக்கிறோம் ஆனால் அவன் படித்து பட்டம் பெற்று வெள்ளைகளிலும் பார்க்க முன்னேறிக் கொண்டு போய்க் கொண்டே இருக்கிறான்.

இது காப்பிலிகளின் கதை போல..

மண்டையில் ஒண்டுமில்லை எண்டு ஒதுக்கிவைத்தால்.. தான் கருப்பு எண்டு ஒதுக்கிவைக்கிறாங்கள் சொல்லுவதைப்போல....

இது ஒரு அப்பட்டமான இனவாத சிந்தனை முறை. இந்த மாதிரி காழ்ப்புணர்வை ஒரு இனத்தின் மேல் காட்டிக் கொண்டு சிங்கள பேரினவாதம் எங்களை ஒடுக்குதெண்டு பிரச்சாரம் வேறை...

போராட்ட ஆரம்ப கட்டத்திலும் கூட ஒவ்வொரு இயக்கங்களும் (புலிகளைத் தவிர) சாதிய அடையாளங்களோடு நிற்க முற்பட்டன என்று வரலாறு சொல்கிறது. வெளிப்படையாக சாதி எதிர்ப்பை கடைப்பிடிப்பதாக காட்டிக் கொண்டாலும்.. சில இயக்கங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்ற பதத்தைப் பாவித்துக் கொண்டு வறுமையில் வாடிய மக்கள் மீது சவாரி விடத்தொடங்கின.

உண்மையில் எல்லா இயக்கங்களுமே ஊர், சாதி, சமயம் என்று எங்கள் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சிந்தனைமுறையுடனேயே வளர்ந்தன. இதில் யாருமே விதிவிலக்காக இருக்கவில்லை, சிலர் குறைவாகவும் சிலர் அதிகமாகவும் சவாரி விட்டார்கள் என்பதே சரியாக இருக்கும்.

  • தொடங்கியவர்

இது ஒரு அப்பட்டமான இனவாத சிந்தனை முறை. இந்த மாதிரி காழ்ப்புணர்வை ஒரு இனத்தின் மேல் காட்டிக் கொண்டு சிங்கள பேரினவாதம் எங்களை ஒடுக்குதெண்டு பிரச்சாரம் வேறை...

காழ்புனர்வு = நல்லம் - யுதர்கள் தொடக்கம் சிங்களவர்கள் வரை பாருங்கள்... எப்படி ஒற்றுமையாய் வாழ்கிறார்கள்.. இதுக்கு காரனம் காழ்ப்புணர்வு..

தமிழர்களை பாருங்கள்.. எல்லொரையும் சக மனிதர்களாக மதிக்கிரார்கள். மற்றவர்கள் தமிழர்களாய் மிருகங்கள் மாதிரி வைத்திருக்கிறார்கள்..

நம்பிக்கைதான் வாழ்க்கை.. போய் புக்கை சாப்பிடுங்கோ... :lol:

  • கருத்துக்கள உறவுகள்
:(
  • கருத்துக்கள உறவுகள்

இது காப்பிலிகளின் கதை போல..

மண்டையில் ஒண்டுமில்லை எண்டு ஒதுக்கிவைத்தால்.. தான் கருப்பு எண்டு ஒதுக்கிவைக்கிறாங்கள் சொல்லுவதைப்போல....

தமிழர் கதையும் அது தானா?

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலைகளினூடு நிறுவப்படும் சாதீயமும் மதமேலாதிக்கமும்;

பிந்தைய நிலவரங்கள்

யாழ்ப்பாணத்தின் பிரபலமிக்க ஆண்கள் பாடசாலையான யாழ் இந்துக்கல்லூரியில் கல்விகற்றுக்கொண்டிருக்கும் நண்பர்கள் அக் கல்லூரியின் வெள்ளாள பார்ப்பனச் சாய்வு குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பலவற்றை கூறுவார்கள். நாவலர் பற்றிய சரிநிகர் விவாதங்களை ஆழமாய்க் கற்று கறுப்பு போன்ற விளிம்புநிலைக்குரல்த் தொகுப்புகள் வாசித்துக் கருத்தாடும் நண்பரொருவரும் யாழ் இந்துவில் கல்விகற்பதனால் ஏற்படும் உடலுபாதைகள் பற்றி நகைச்சுவையாகக் கூறுவார். பலவகைகளிலும் யாழ் இந்து, சென் ஜோண்ஸ் பாடசாலைத் தோழர்களின் விபரிப்புகளே எனது கட்டுரைக்கான மூல்கங்களும் தூண்டுதல்களுமாகும். பெயர்வெளியிட முடியாத நிலையிலிருக்கும் அம்மாணவர்களுக்கான நன்றியுணர்வுடன் நாம் பாடசாலை விடயங்களுக்குள் நுழையலாம்.

***

நான் இங்கு முக்கியமாக எடுத்துக்கொள்கிற களம் பாடசாலைகளே. பல்கலைகழகம் போன்ற இதர கல்விநிறுவனங்களிலும் கீழ்விபரிக்கப்படும் சாதிமேலாதிக்கத்தின் இணைத்தன்மைகள் அவதானிக்கப்பட்டுள்ள போதும் தரவு மற்றும் ஆதாரங்கள் போதாமையை மனங்கொண்டு அவை பற்றிய தகவல்கள் இங்கு தரப்படவில்லை.

***

எனக்குக் கிடைக்கும் வாய்மொழித் தகவல்களின்படி யாழ் இந்துவைவிட மற்றைய இந்துக்கல்லூரிகள் முற்போக்கானவையாகக் காட்டிக்கொள்ள முற்பட்டாலும் யாழ் இந்துவிற்கும் மற்றையவற்றுக்கும் இடையே துளியளவும் வித்தியாசம் கிடையாது என்பதுதான் உண்மை. கீழே பட்டியற்படுத்தப்படும் தகவல்கள் ஒன்றிரண்டு மாற்றங்களுடன் அனைத்து இந்துக்கல்லூரிகளுக்கும் பொருந்திப் போகக்கூடியவையே.

· பாடசாலைகளுக்கு புதுமுக மாணவர்களை உள்ளீர்க்கும் செயன்முறைகளின் போதே இந்துவேளாள வடிகட்டல் தொடங்கி விடுகிறது. தரம் ஐந்து புலமைப்பரிசிலும் நுழைவுத்தேர்வுகளும் அனுமதிக்கான முன்நிபந்தனைகள். புலமைப்பரிசிலில் பெரும்பான்மை புள்ளிகள் பெற்றுவருவது அதிகமும் டாக்குத்தர் இஞ்சினியர் லோயர் அன்ன பிறரின் பிள்ளைகளாகவே இருந்துவிடுவதால் அதிகம் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. ஆயினும் பொஸ்கோ போன்ற கத்தோலிக்க வெள்ளாள பாடசாலைகளூடு புலமைப்பரிசிலைத் தட்டிவிடும் கிறிஸ்தவர்களும் அபூர்வமாக சித்தியடைந்துவிடும் தலித்துக்களும் புலம்பெயர் உறவுகளால் புதுப்பணக்காரர்களாகிய தலித்துக்களும் தான் இந்துக்கல்லூரிகளுக்கு இருக்கும் முக்கிய சவால்கள். நேர்முகத் தேர்வின் போது மேற்குறித்தவகை மாணவர்கள் வேறுபாடசாலைகள் குறித்துச் சிந்திக்கும்படி தூண்டப்படுகிறார்கள். நன்கொடைத்தொகையைக் கூட்டிக் கேட்டல் போன்ற பொருத்தமான உத்திகள் மூலம் இது நடக்கிறது.

· 8ம் வகுப்பு வரையான மாணவர்களிடம் மாத்திரமே வாத்தியார்களதும் சட்டம்பிமார்களதும் (கவனிக்க ஆசிரியர்கள் அல்ல) செல்வாக்கு எடுபடுகிறது. 9ம் 10ம் தரங்களில் ஆயுதக்கலாச்சாரம் ஊடுருவிவிடுவதால் வாத்திகள் பெரிதும் அடக்கியே வாசிக்கும். 8ம் ஆண்டு வரையிலான மாணவர்கள் அனுபவிப்பது நரகம். மாணவர்கள் நெற்றியில் திருநீறு அணிந்து வராத பட்சத்தில் தண்டிக்கப்படுகிறார்கள். ‘ஏன் அணிந்து வரவில்லை’ என்ற அதட்டலுக்கும் உறுக்கலுக்கும் பின்பே நீ வேதமா என்ற கேள்வி வரும்.

· பாடங்கள் தொடங்குகையில் சில ஆசிரியர்கள் தேவாரம் பாடியே கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றனர். கிறிஸ்தவ மாணவர்களும் மதாவனம்பிக்கையுடைய மாணவர்களும் கூட எழுந்து நிற்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அநேக சந்தர்ப்பங்களில் இந்தக்கட்டாயப் படுத்தலுக்கு எந்த தேவைகளும் இருப்பதில்லை; மாணவர்கள் தாமே எழுந்து நிற்கிறார்கள்.

· தண்டனை மற்றும் விசாரணைகளில் இருந்து பிராமண மாணவர்களும் பிரபலங்களின் பிள்ளைகளும் மிக இலகுவாக தப்ப முடிகிறது.

· கிறிஸ்தவ சமயம் இந்துக்கல்லூரிகளில் கற்பிக்கப்படுவது கிடையாது. மாற்று ஏற்பாடுகள் ஏதுமில்லை. சமய பாட நேரங்களில் நூலகத்துக்கோ மைதானத்துக்கோ அனுப்பிவைக்கப்படுவார்கள். ஆங்கிலமொழிவழிக் கல்வி வகுப்புகளில் முதல் மூன்று இடங்களில் ஒன்றை யாரேனுனுமொரு கிறிஸ்தவ மாணவன் பெற்றுவிடுகிற நிலையிலும் கூட இந்த அவலம் தொடர்கிறது. கிறிஸ்தவ மாணவர்கள் சைவசமயம் பாஸ்பண்ண இலகுவானது என்றவகைப் போதனைகள் மூலம் திசைதிருப்பப் ப்டுகிறார்கள். 2007 ஓகஸ்ட் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதப் போகிற அணியில் இருக்கும் மாணவர்களில் இரு கிறிஸ்தவர்கள் சாதாரண தரத்தில் சைவ சமயத்தையே எழுதினார்கள். கிறிஸ்தவம் தொடர்பாக அவர்களுக்கு ஒன்று தெரியாது. தேவாரம் நன்றாகப் பாடுவார்கள்.

· பிரார்த்தனை ஒன்றுகூடலில் பஞ்சபுராணம், பஜனை, மந்திரம், தியானம் என்று நடாத்துகிறார்கள். உடற்பயிற்சி நடாத்தப்படுவதில்லை – ஓங்கார மூச்சுப் பயிற்சியில் அவ்வளவு நம்பிக்கை. எவ்வளவுதான் தாமதமானாலும் பார்ப்பன மாணவன் இருந்தால்தான் நடராஜர் சிலைக்கு வழிபாடு நடக்கும். மேலும் அனைத்து மாணவர்களும் தலா 2/= இந்துமாமன்றத்துக்கு வழங்க வேண்டும். கிறிஸ்தவ மாணவர்களுக்கென்று தனியாகப் பிரார்த்தனை நடாத்தப் படுவதில்லை. கிறிஸ்தவ மாணவர்கள் திருநீறணிந்து சப்பாத்துக்கழட்டிப் பிறகு பிரார்த்தனை மண்டபத்தினுள் நுழையலாம். பிறர் பிரார்த்தனை மண்டபத்துக்கு வெளியே கால் கடுக்க நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. கிறிஸ்தவ மாணவர்கள் பிரார்த்தனை நேரம் முடிய பாடசாலை வரலாம் / பிரார்த்தனை நேரங்களில் வகுப்பறைகளில் அமர்ந்திருக்கலாம் போன்ற் எவ்வித நெகிழ்வுகளும் நிர்வாகத்திடம் கிடையாது. வகுப்பில் உட்கார்ந்திருந்தால் மாணவத்தலைவர்களும் ஒழுங்குபேண் வாத்திகளும் அந்தரப்பட்டு எப்படியாவது விறாந்தைகளுக்கு விரட்டிவிடுவார்கள்.

· பாடசாலைக் கீதம் இசைக்கப் படுவதற்கு முன்பாக தேவாரம் இசையுடன் பாடப்படும். கிறிஸ்தவ மாணவர்களும் எழுந்து நின்று கண்மூடி கைகூப்ப வேண்டும். சற்றே முரண்டுபிடிக்கும் இளம் மாணவர்களுக்கு சொல்லப்படும் சமாதானம் ‘நீ உன்ர கடவுள நைச்சுக்கொள்’

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி உள்ளிட அனைத்துப் பாடசாலைகளிலும் வெள்ளாள மேலாதிக்கப் போக்கு சமீபகாலங்களில் கேள்விக்குள்ளாகி வருவது வெறும் மேல்மட்டத் தோற்றப்பாடே தவிர உண்மையல்ல. மேலும் இந்தக் கேள்விக்குள்ளாக்கல் எவ்வாறு அமைகிறது என்பதை நாம் உற்று நோக்க வேண்டும். (உதாரணங்கள் – மாணவர்களது விநோத சிகையலங்காரங்களை, ரைற்றாக ஜீன்ஸ் அணிவதை முன்புபோல் எதிர்க்க முடிவதில்லை, பெண்களை மிக மோசமாக துன்புறுத்தும் கேலிகளில் ஈடுபடும் மாணவர்களைக் கண்டிப்பது கூட பெரும்பாடாய் இருக்கிறது) இப்படியான கேள்விக்குட்படுத்தல்கள் நமது சமூகம் வீழ்ந்துகொண்டிருக்கும் வீழ்ச்சியின் இன்னொரு நோய்க்கூறான சாட்சி என்பதற்கும் மேலாக எதிர்காலத்தில் அறநெறி/மதம் போன்றவற்றின் மீள்வலிதாக்கத்துக்கு துணைபோகக் கூடும்.

2

கிறிஸ்தவப் பாடசாலைகள்-முக்கியமாக அங்கிலிக்கன் திருச்சபையின் சமயப் பரப்புக் கருவியும் மறுகாலனியாதிக்க சக்தியுமான சென்.ஜோன்ஸ், சுண்டுக்குளி மகளிர் போன்றவை- இதுக்கல்லூரிகளை விடவும் மிக நுண்மையான கட்டமைப்புகளைக் கொண்டியங்குபவை. மேலும் இவை வெளித்தள்ளும் மாணவ சமூகம் மேட்டுக்குடி கத்தோலிக்க வெள்ளாள சமூகத்தின் பிரதிகளாகவே பெரும்பாலும் அமைந்து விடுவர்.

இவை இந்துக்கல்லூரிகளைப் போலல்லாது சைவ சமயத்தைப் பேரளவிலாவது கற்பிக்கின்றன. சந்தனப் பொட்டு திருநீறு அணிந்து செல்லும் மாணவர்கள் முன்பெல்லாம் தண்டிக்கப் பட்டார்கள். 90களின் நடுப்பக்தியில் நிலவரங்கள் மாறி வெளிப்படையான தண்டனை நீக்கப் பட்டது. நுண்ணிய செயற்பாடுகள் மூலம் ‘சந்தனப் பொட்டு மாணவன்’ புறமொதுக்கலை உணரும் படி செய்யப் படுவான். யாழ்ப்பாணக் கல்லூரி பற்றிக்ஸ், திருக்குடும்பக் கன்னியர்மடம், சென்.ஜோன்ஸ், அன்னபிற பாடசாலைகளில் இதுதான் நிலமை.

நன்கொடையாளர்களைத் திருப்திப் படுத்தும் ஓர் உத்தியாகவும் இந்த semi-secular நிலைப்பாடு கடைப்பிடிக்கப் படுகிறது. இதற்குச் சிறந்த உதாரணம் பொஸ்கோ ஆரம்பப் பாடசாலை. பொஸ்கோவிற்கு முன்புறமுள்ள பிள்ளையார் கோவிலில் நவராத்திரி காலப் பிரார்த்தனைகளுக்கு சைவப் பிள்ளைகளை அழைத்துச் செல்கிறார்கள்.

சென்.ஜோன்ஸ், சுண்டுக்குளி, போன்றவை தலித்துகளுக்கான கல்விக்கூடங்கள் அல்ல. கத்தோலிக்க வெள்ளாளர்களும் மேட்டுக்குடிக்குமான பாடசாலைகள் இவை. 90களுக்குப் பின்பு யாழ். சமூக அமைப்பில் உருவாகின்ற தலித் பணக்காரர்கள் (புலம்பெயர் உறவுகள் உதவியால்) மட்டும் விதிவிலக்காக இப்பாடசாலைகளில் அனுமதியைப் பெற்றுக் கொள்ளமுடிகிறது. இவர்கள் நிர்வாகத்துக்குப் பெரும் தலையிடியாக இருப்பதில்லை. தலித் பணக்காரர்கள் மிக விரைவாகவே தம்மை நவவேளாளகுடிகளாய் வடிவமைத்துக் கொண்டுவிடுவதால் இப்பாடசாலைகளின் புனிதமிக்க நளினமிக்க இருப்பு பேணப்படுகிறது. புகுமுக வகுப்புகளில் உள்ளீர்க்கப்படும் மாணவர்களிடமிருந்து 75000/= வரை நன்கொடையாக வசூலிக்கப்படுகிறது. தவணைக்குத் தவணை அறவிடப்படும் கட்டணமும் சராசரிக்கு மிக அதிகமானது. இத்தனைக்கும் மாணவர்களுக்கு புத்தகங்கள் சீருடை பாடசாலையின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் அரசு கவனிக்கிறது. மேலதிக உட்கட்டமைப்பு வசதிகளை பெரிதும் OBA க்கள் பொறுப்பேற்கிற நிலையில் நன்கொடையாகப் பெறப்படும் நிதிகளில் பெரும்பங்கு திருச்சபையின் சமயப் பரப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கே செல்கிறது.

இந்த பாடசாலைகள் மிக உறுதியான ஆனால் இலகுவில் கண்ணுக்குப் புலப்படாத பிரச்சாரக்கட்டமைப்பு ஒன்றை சமூகத்தினுள் நிறுவி வைத்திருக்கின்றன. பாடசாலை பற்றிய உயர்வான் எண்ணத்தை சமூகமனதில் பதிய வைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் கனகச்சிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. பரப்புரைகளை நிறைப்பதற்கென்றே சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு பெருந்தொகைப் பணம் அவர்களுக்காக செலவிடப்படுகிறது.

இந்த நுணுக்கமன செயன்முறை அடுக்குகள் குறித்து அறியமுடியாதளவு திறம்படச் செய்கிறார்கள். புலனாய்வுப் பத்திரிகையியல் கற்றுத் தேர்ந்தோர் கூட இந்த வலையமைப்புக்களின் துளைத்தறியமுடியா மூட்டத்தன்மையையும் சிக்கலையும் புரிந்து கொள்வதில் பல இடர்களுக்கு முகங்கொடுக்க நேரும்.

3

யாழ்ப்பாணத்து இந்துக்கல்லூரிகள் தொடர்ச்சியாகப் பண்ணிக்கொண்டிருக்கிற இந்துமயமாக்கல்/வேளாளமயமாக்கலுக்குத் தக்க சான்றாதாரங்கள் யா.இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியிட்டிருக்கும் நூற்றாண்டு விழா மலரில் நிறையவே கொட்டிக்கிடக்கின்றன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பின்வருமாறு:

· பக்.212 – அ.பி.மரியதாஸ் என்ற கிறிஸ்தவர் (வடிவமைக்கப் பட்ட இந்து?!) கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:

‘மேலைத்தேய ஆட்சியாளரின் வலைக்குள் சிக்கிய பிரதேசங்கள் ஆட்சியாளர்களைத் தொடர்ந்து வந்த பாதிரிமாரின் முயற்சியினால் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு ஆங்கிலக்கல்வி போதிக்கப்பட்டது. அது மட்டுமன்றி மெல்ல மெல்ல மக்கள் மத மாற்றத்துக்கு உள்ளாக்கப் பட்டனர். அரச சலுகைகள் அவர்களின் முயற்சியை இலகுவாக்கின. கீழைத்தேய மக்களின் மேலைத்தேய நாகரீக மோகம் பாதிரிமாரின் நோக்கத்தை வெற்றி பெற வைத்தன.’

‘இரண்டாயிரம் ஆண்டு தொன்மை கொண்ட நம் பாரம்பரியப் பெருமை மெல்ல மெல்ல வீழ்ச்சியுறத் தொடங்கும் விபரீதம் கண்ட சில தமிழ்ச்சான்றோர் அந்ந்நிலை தடுக்க முயன்றோர்’

..’இக்கிளர்ச்சியின் வெளிப்பாடே தமிழ்ப்பாடசாலைகளின் தோற்றமெனலாம். இப்பாடசாலைகளின் தோற்றத்துக்கு நாவலர் பெருமானின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கதாகும்.’

*—கட்டுரையாளர்— நாம் இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டிய அம்சம் மரியதாஸ் கத்தோலிக்க மதகுருமாரை ‘பாதிரிமார்’ எனக் குறிப்பிடப் படுவதைத் தான். இந்துக்கள் தான் கத்தோலிக்க மதகுருக்களை பாதிரியென அழைப்பது வழக்கம். மற்றபடிக்கு வெறியிலிருக்கும் அதிருப்தியடைந்த மீனவர்கள் இவ்வாறு விளித்துத் திட்டுவது வழக்கம். பெரும்பாலும் ‘மதகுருமார்’ ‘மதத்தலைவர்கள்’ ‘சுவாமி’ ‘பங்குத்தந்தை’ போன்ற சொற்பிரயோகங்களே அச்சு ஊடகங்களில் பயன்படுத்தப்படுவது வழக்கம்.

மேலும் மரியதாஸ் ஓர் வரலாற்றுண்மையைக் கவனிக்க விரும்பவில்லை. கத்தோலிக்க மதப் பரவலும் விளிம்புகளின் மட்டுப்படுத்தப்பட்ட விடுதலையும் உடனிகழ்வுகளாயிருந்த உண்மையை அவர் லாவகமாக மறைத்து இந்து வெள்ளாளனுக்கு உவப்பான உண்மையைக் கட்டமைக்கிறார்.

‘நாவலர் பிரான்’ பற்றிய கட்டுடைப்பு ஆய்வுகளை மரியதாஸ் அறிந்திருக்காவிடினும் கூட நாவலர் பற்றி யாழ்ப்பாணத்தில் நிலவிவரும் சுவாரசியமான வாய்மொழிக்கதைகளைக் கூடவா அறிந்து கதைக்கமுடியாமல் போயிருக்கிறது? இதைக் கூட மரியதாஸின் தெரிவுக்கானது என நாம் விட்டுவிடலாம். மேலும் மரியதாஸ் ஓர் இந்துவைப் போல வரலாற்றுண்மைகளைத் திசைதிருப்புவதும் அவரது தெரிவுக்கானதே. நமது கேள்வி என்னவெனில் அவரது இத்தகைய தெரிவுகளை மேற்கொள்ளும் படியாக அவரது மனத்தை வடிவமைத்தது எது என்பது தான்.—

· பக்.216 – சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் இவ்வாறு எழுதுகிறார்:

‘யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பெரும் அறிஞர்களையும், கல்விமான்களையும், ஆன்மீகவாதிகளையும் உருவாக்கிய பெரும் கோவில் ஆகும்’

‘காத்தார் சமூகத் தொண்டன். புகழுக்காக! விளம்பரத்துக்காக! சமூகத்திற்குள் நுழைந்தவர் அல்லர்! உண்மைக் கம்யூனிஸ்ட் இவர் இந்துக் கல்லூரியை நடாத்துவாரா என..’

*—கட்டுரையாளர்—செஞ்சொற்சொல்வருக்குக் கூற எம்மிடம் ஒன்றுமில்லை. வாசகர்கள் அவரது கூற்றுக்களுடன் சேர்த்து வாசிக்க வேண்டிய ஓர் பிற்குறிப்பு இது : ஆணாதிக்க, இந்துத்துவ, உயர்குடியாதிக்க மலத்தை தன் வாயாலேயே கழித்துவரும் கம்பவாரிதிகளையும் அசட்டுத்தனமாக கோவில் கோவிலாய் ஏறி கத்திக் கொண்டிருக்கும் சொல்லின் செல்வர்களையும் உருவாக்கிய அற்புத உன்னத கோவில் இந்த இந்துக்கல்லூரி.

· பக்.223 – செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுகனார் உரைப்பது யாதெனில்:

‘திரு.யோசேப் மரவேலை பொறிமுறை வரைதல் கற்பித்தவர் ஒரு கிறிஸ்தவர் என்றாலும் பிரார்த்தனைக் கூட்டத்துக்குத் தவறார். திரு சந்தியாபிள்ளை, திரு.மரியதாஸ் இவர்கள் கிறிஸ்தவ ஆசிரியர்கள். ஆனால் கல்லூரியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் எம்மை நெறிப்படுத்துவதில் முதன்மை வகிப்பர். இந்துக்கல்லூரி ஒரு பெரிய குடுமபம்.’

*—கட்டுரையாளர்—இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் இந்து மயமாக்கலுக்கான உதாரணம்.

· பக்.253 – சமீப காலமாக இலக்கியவாதியாக அறியப்பட்டுவரும் த.ஜெயசீலன் (கைகளுக்குள் சிக்காத காற்று – அரச விருதொன்றைப் பெற்றது, வார்த்தைகளை இடைனடுவில் முறித்துப் போட்டவுடன் பிரசுரிக்கத் தயாராயிருக்கும் சிறுபத்திரிக்கைகளில் இவரது கவிதைகளைக் கண்ட ஞாபகம்) எழுதிய கவிதையிலிருந்து:

‘சந்தனப் பொட்டுப்பள்ளி

என்றவர் வாயடைக்க

விந்தை விஞ்ஞானம், நூறு

விளையாட்டு, கலைகள், கல்வி

என்றெந்தத் துறை என்றாலும்

“இந்துவே முதலில் இன்று”!

சந்தது சைவ மேன்மை

காக்குது.. தளராதிங்கு!’

*—கட்டுரையாளர்—ஜெயசீலன் நம்மையெல்லாம் பார்த்து அவரது கவிதையின் இறுதிப்பகுதி மூலம் ஒன்று கேட்கிறார்: ‘நாம் இந்துமைந்தர் என்னும் நட்புக்கெது ஈடாகும்?’ என்ன சொல்லலாம் தோழர்களே? தயவு செய்து ஒன்றும் கூறாதிருப்போம். நிச்சயமாய் நாம் அவருக்கு ஈடு கிடையாது தான்.

3

பாடசாலைகள் விடயம் சமூக அமைவாக்கத்தில் செலுத்தும் செல்வாக்கு பெரிதுபண்ணப்பட வேண்டிய விடயம் கிடையாது என்று வாதிடுபவர்களுடன் குஸ்திபோடும் எண்ணம் எனக்கில்லை. பாடசாலைகளின் சமூகவடிவமைப்புச் சக்தியை விளங்கிக் கொள்ள நான் இக்கட்டுரைக்குச் சற்றும் பொருத்தமற்ற விடுதலைப் போராட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பேரினவாத சக்திகளுக்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் ஒரு பெரும் தலையிடியாகவே தொடர்ந்தும் இருந்து வந்திருக்கிறது. எதிர்ப்பின் வலுமிக்க சக்தியாக அது இருந்து வருவதில் சந்தேகமில்லை. தமிழ்த்தேசியத்துக்கு அளப்பரிய பங்களிப்புச் செய்த கல்லூரி என்கிறார் இ.விஸ்வநாதன் (பக்.18-19, நூற்றாண்டுவிழா மலர்) நூற்றாண்டுவிழா மலரில் கல்லூரியன் வரலாற்றை எழுதுகிற பேரா.ச.சத்தியசீலன் குறிப்பிடுகிறார்:

“தமிழீழ சுதந்திரப் போராட்டம் முளைவிட்ட காலத்தில் இருந்து யாழ் இந்துவின் மாணவ மணிகள் தங்களையும் இப்போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவிலே இணைத்துக் கொண்டனர். இவ் விடுதலைப் போராட்டத்தில் முதல் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட பொன்னுத்துரை சிவகுமாரன், உலகே அதிசயிக்கத் தக்க வகையில் தன்னுயிரை தமிழினத்துக்காக அர்ப்பணித்த தியாகி திலீபன் (இராசையா பார்த்தீபன்) தளபதி இராதா எனப் பலர் இந்த வரிசையிலே திரள்வர்.”

தமிழீழ விடுதலைக்கென பல மாணவர்களைத் தளபதிகளாகவும் உயர்பீடங்களிலிருப்போராகவும் உருவாக்கிக்கொடுத்த யாழ்.இந்துக்கல்லூரியின் நூற்றாண்டு விழா மலரின் பக்கநிரப்பிகளாகத் தரப்பட்டிருக்கும் ‘பொன்

மொழி’களில் சிலவற்றின் பட்டியல் இது. (தமிழீழத்துக்குப் பொருத்தமான குடிமக்களை வடிவமைப்பதற்கான ஒழுங்கு விதிகளாகவும் இவற்றை வாசிக்க முடியும் என்பது கூடுதல் தகவல்.) அவர்கள் களங்களிலும் கோட்பாடுகளிலும் எட்டிய வெற்றியின் பின் யாழ்.இந்துவின் பங்களிப்பும் உள்ளது என்பது போலவே கறுப்புப் பக்கங்களுக்கும் யாழ் இந்துவும் காரணமாயிருக்கலாம் என்பதற்கான சான்றுகள் இதோ:

· நிலமைக்குத் தக்கபடி நடந்துகொள்

· உயரவேண்டுமானால் பணிவு வேண்டும்

· நாட்டுப்பற்றை விட அதிகமான அன்பு வேறொன்றில்லை

· இன்னுயிர் நீர்ப்பினும் நம் தமிழ் காப்போம்

· முதலில் கீழ்ப்படிதற்குக் கற்றுக்கொள், பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாகவே வந்து சேரும்

· நீ எதைச்செய்தாலும் அதன் பொருட்டு உனது மனம், இதயம், ஆன்மா முழுவதையும் அர்ப்பணித்துவிடு.

· எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ, சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.

· அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்

· கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள், அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்துகிறார்கள்.

· மன அமைதி வேண்டுமானால் பிறரிடம் குற்றம் காணாதே.

· சுடர்விடவேண்டுமானால் சூடுபட வேண்டும்.

***

ஹரி இராசலெட்சுமி

muranveliarchives.wordpress.com

... அண்மையில் "சர்வதேச தமிழ் எழுத்தாளர் நாநாடு" எனும் பெயரில் ஒரு கும்பல் நாட்டிலும், புலத்திலும் வைத்து ஆட்டுவிக்கப்பட்டார்கள். அதில் பலதுகள் கையொப்பமும் இட்டார்கள்! .... இந்த மாநாடு எனும் போர்வையில் எவ்வாறு சாதியம் அதுக்குள் கொண்டு செல்லப்பட்டதென்பது ... வெளிச்சம்!

“சர்வதேச எழுத்தாளர் மாநாட்டிற்கு” சார்பு நிலை கொண்டுள்ள இலங்கை அரச துணைக்குழுக்களைச் சார்ந்தோரும், ஏனைய இலங்கை அரச சார்பு அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் பெரும்பான்மையாகக் கொண்ட குழுவினர் கையொப்பமிட்டு ...

அறிக்கையில் இலங்கையிலிருந்து கையொப்பமிடுபவர்கள்:

தெணியான் (எழுத்தாளர், சிறுபான்மைத் தமிழர் மகாசபை)

கவிஞர் சோ.பத்மநாதன்

சுமதி சிவமோகன் (பேராசிரியை, பேராதெனியா பல்கலைக்கழகம்)

ரியாஸ் குரானா (எழுத்தாளர்)

பெர்னாண்டோ ஜோசப் (பத்திரிகையாளர்)

தமிழழகன் (சிறுபான்மைத் தமிழர் மகாசபை)

மஜீத் (எழுத்தாளர்)

மு.மயூரன் (எழுத்தாளர்)

தேவராஜன் ரெங்கன் (சட்டத்தரணி, சமூகவியலாளர், பத்திரிகையாளர்)

ஏ.சி.ஜோர்ஜ் (ஆசிரிய ஆலோசகர், சமூகவியலாளர், எழுத்தாளர்)

சே.சிவபாலன் (மனித உரிமை செயற்பாட்டாளர்)

பூபாலசிங்கம் சிறீதர்சிங் (பதிப்பாளர்)

கிருஸ்ணசாமி கிருபானந்தா (எழுத்தாளர்)

சிவநாமம் சிவதாசன் (எழுத்தாளர்)

பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா (யாழ் பல்கலைக்கழகம்)

கே.வி.குணசேகரன் (ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளர்)

வை.சிவசுப்பிரமணியம் (எழுத்தாளர்)

த.பாலதயானந்தன் (ஊடகவியலாளர்)

மதுரகவி காரை எம்.பி.அருளானந்தம்

ந.சதீஸ் (ஊடகவியலாளர்)

ஜெ.பாலகுமரன் ( ஊடகவியலாளர்)

பா.கலைவாணி (பத்திரிகையாளர்)

க.சோபனா (பத்திரிகையாளர்)

வல்லி தாமோதரராஜா (பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர், பளை)

சின்னத்தம்பி தங்கராசா (உதவி அரச அதிபர், சாவகச்சேரி)

தியாகராஜா சண்முகவடிவேல் (ஊடகவியலாளர்)

செல்லத்துரை நவநாதன் (பத்திரிகையாளர்)

செல்லத்தம்பி மாணிக்கம் (விரிவுரையாளர்)

அறிக்கையில் புகலிடத்திலிருந்து கையொப்பமிடுபவர்கள்:

வி.ரி. இளங்கோவன் (எழுத்தாளர்)

சரவணன் நடராசா (ஊடகவியலாளர்)

கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன்

சுமதி ரூபன் (எழுத்தாளர்)

ஹரி இராசலட்சுமி (எழுத்தாளர்)

த. அகிலன் (எழுத்தாளர், வடலி பதிப்பாளர்)

கரவைதாசன் (எழுத்தாளர்)

நிர்மலா ராஜசிங்கம் (இலங்கை ஜனநாய ஒன்றியம்)

சந்துஷ் (எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்)

நட்சத்திரன் செவ்விந்தியன் (எழுத்தாளர்)

ரவிநேசன் பொன்னுத்துரை (பத்திரிகையாளர்)

உதயகுமார் (ஊடகவியலாளர்)

ஜீவமுரளி (எழுத்தாளர்)

விஜி (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

தேவதாசன் (தலைவர் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி, இணைப்பாளர் சிறுபான்மைத் தமிழர் மகாசபை)

நோயல் நடேசன் (எழுத்தாளர்)

அசுரா (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

அன்ரன் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

சிவசாமி சிவராசன் (புலம் பெயர்ந்த இலங்கையர்களிற்கான வலையமைப்பு)

எஸ்.சுந்தரலிங்கம் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

அருந்ததி (திரைப்பட இயக்குனர், தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

எஸ். காசிலிங்கம் (இலங்கை கிராம அபிவிருத்திச் சங்கம்)

யோகரட்ணம் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

ப.பகீரதன் (தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)

தர்மினி ( ‘தூமை’ இணையத்தளம்)

தேவகாந்தன் (எழுத்தாளர்)

எம்.ஆர்.ஸ்டாலின் (ஜனநாயத்திற்கான கிழக்கிலங்கை முன்னணி)

ஷோபாசக்தி (எழுத்தாளர்)

உமா (எழுத்தாளர்)

கற்சுறா ( ‘மற்றது’ இணையத்தளம்)

ராமமூர்த்தி ராஜேந்திரன் (முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்)

ச.வாசுதேவன் (நாடகக் கலைஞர்)

செ.கிருஸ்ணமூர்த்தி (எழுத்தாளர்)

டி.பி.எஸ்.ஜெயராஜ் (பத்திரிகையாளர்)

நா. ஸ்ரீ கெங்காதரன் (சமூக சேவையாளர்)

அகிலன் கதிர்காமர் ( இலங்கை ஜனநாயக ஒன்றியம்)

நஜா முகமட் (இலங்கை இஸ்லாமியர் முன்னணி)

மாணிக்கம் நகுலேந்திரன் (ஆசிரியர் -தாகம், நிரூபம்)

ராகவன் ( (இலங்கை ஜனநாய ஒன்றியம்)

http://inioru.com/?p=19097

இவர்கள் எழுத்தாளர்கள் என்றா கைநாட்டு வைத்தார்கள்????

காழ்புனர்வு = நல்லம் - யுதர்கள் தொடக்கம் சிங்களவர்கள் வரை பாருங்கள்... எப்படி ஒற்றுமையாய் வாழ்கிறார்கள்.. இதுக்கு காரனம் காழ்ப்புணர்வு..

தமிழர்களை பாருங்கள்.. எல்லொரையும் சக மனிதர்களாக மதிக்கிரார்கள். மற்றவர்கள் தமிழர்களாய் மிருகங்கள் மாதிரி வைத்திருக்கிறார்கள்..

நம்பிக்கைதான் வாழ்க்கை.. போய் புக்கை சாப்பிடுங்கோ... :lol:

பனங்காய், நீங்க என்ன சொல்ல வாறீங்க.!?

  • தொடங்கியவர்

பனங்காய், நீங்க என்ன சொல்ல வாறீங்க.!?

ஆக சொரகாய்க்கு உப்பில்லேங்கிறேன்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.