Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பிரதாயங்களும்,மூட நம்பிக்கையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்மக்களிடையே பல சம்பிரதாயங்கள்,பழக்கவழக்கங்கள்,நம்பிக்கைகள்,மூட நம்பிக்கைகள் ஊறிப் போய் கிடக்கிறது...சிலவற்றில் உண்மை இருந்தாலும் பல்வற்றில் உண்மை இல்லை என நினைக்கிறேன்.உதாரணமாக யாருடைய வீட்டுக்குப் போனாலும் சப்பாத்தை,செருப்பை வாசலில் கழட்டி வைத்து விட்டு உள்ளே செல்ல வேண்டும் காரணம் வீதியில் உள்ள அழுக்குகள் எல்லாம் வீட்டுக்குள் வந்து விடும் என்ட காரணத்தால் ஆகும் இது நல்லதொரு பழக்கமாகும் ஆனால் சில பேர் சொல்வார்கள் இரவு லைட் போட்டு விட்டால் ஒன்டுமே ஆத்திர அவசரத்திற்கு மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது என சொல்கிறார்கள் இதில் உண்மை இருக்கா எனக்குத் தெரியவில்லை? தெரிந்தவர்கள் சொல்லவும்.

நாங்கள் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களில் எது நல்லது?...எது மூட நம்பிக்கை என கருதுகிறீர்கள் என எழுத முடியுமா?...மற்றவர்களும் அறிந்து கொண்டால் அவர்களுக்கும் பிரயோசனமாய் இருக்கும்.

நான் அண்மையில் எனது நண்பி ஒருவருக்கு பேனா பரிசளித்தேன்.பரிசளித்த கொஞ்ச நாட்களுக்குள் எங்களுக்குள் கருத்து வேற்றுமை வந்து நாங்கள் பிரிந்து போய் விட்டோம்.இரு நாட்களுக்கு முன் ஒரு அம்மா சொன்னார் நண்பர்களுக்கு ஒரு நாளும் பேனா,சென்ட்,கைக்குட்டை,குடை போன்றவற்றை பரிசளிக்க கூடாது என? எனக்கு இதில் நம்பிக்கை இல்லா விட்டாலும் என் நண்பி பிரிந்து போன படியால் இது உண்மையாய் இருக்குமோ என மனதிற்குள் ஒரு நெருடல்.இது பற்றிய தங்கள் கருத்து என்ன?

Edited by ரதி

நீங்கள் பேனா கொடுத்திராவிட்டாலும் கருத்துவேற்றுமையினால் அவர் பிருந்துதானிருப்பார். காகமிருக்கப் பனம்பழம் விழுந்த கதைமாதிரித்தான் ,

எங்கட கடந்த கால சந்ததியினர் அந்தக் காலத்திற்கு ஏற்றது போல் ஏதாவது உருவாக்கி இருப்பார்கள். :rolleyes: உதாரணத்திற்கு இரவில் நகம் வெட்டக் கூடாது என்பார்கள், ஏன் எனக் கேட்டால் 'வீட்டிற்கு கூடாது' என்பதோடு சரி... நான் நினைக்கிறன் இரவில் நகம் வெட்டும் போது சிறு துண்டு நகங்கள் சிதறிப் போவதுண்டு அதனை இரவு வெளிச்சத்தில் தேடி எடுப்பது கொஞ்சம் சிரமம். (எனது நகத்தில் ஒரு சிறிய பகுதி உடைந்தது விட்டது என்று வைத்துக் கொள்வோம் அதனை வெட்டி விட்டால் அதிலிருந்து வரும் வலியைக் குறைக்க முடியும் என்று எனது மனம்/ மூளை அறிவுறுத்துகிறது, ஆனால் அதை சம்பிரதாயம் என்று நினைத்து அடுத்த நாள் காலை வரைக்கும் வைத்துருப்பது எனது மூடத்தனம்.) அது போல தான் மூளைக்கு சரி என படுவதை நாம் செயல்படுத்துவது ஒன்றும் பிழை இல்லை.

உங்கள் நண்பிக்கு நீங்கள் பரிசளித்த பேனாவில் இருந்தா கருத்து வேற்றுமை ஆரம்பித்தது? இருக்காது என்று நினைக்கிறன். ஒவ்வொரு பிரச்சனைக்குரிய அடிப்படைக் காரணத்தை அறிந்து கொள்ளவதால் மட்டுமே அப்பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் Southall இல் பவுண்டுக்கு மூண்டு எண்டு வாங்கின பேனாவை பரிசாக் குடுத்தால் கோவம் வராமல் என்ன செய்யும்? ^_^:lol:

நீங்கள் Southall இல் பவுண்டுக்கு மூண்டு எண்டு வாங்கின பேனாவை பரிசாக் குடுத்தால் கோவம் வராமல் என்ன செய்யும்? ^_^:lol:

என்ன கொடுக்கிறோம் என்பது பெரிதல்ல, ஏதாவது கொடுக்கவேணும் என்று நினைப்பதே பெரிது! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேனா கொடுத்ததால் எங்களுக்குள் பிரச்சனை இல்லை ஆனால் பழைய ஆட்கள் சொன்ன மாதிரி பேனா குடுக்கக் கூடாது கொடுத்தால் பிரிவார்கள் என்ட கூற்று உண்மையாகி விட்டதல்லவா :unsure:

நீங்கள் Southall இல் பவுண்டுக்கு மூண்டு எண்டு வாங்கின பேனாவை பரிசாக் குடுத்தால் கோவம் வராமல் என்ன செய்யும்? ^_^:lol:

எவ்வளவுக்கு வேண்டிக் கொடுக்கிறோம் என்பதை விட அன்பாய் கொடுக்கிறோம் என்பதே முக்கியம்

நான் சவுத்தோல் பக்கம் இருக்கேயில்லை உங்கட ஆட்கள் தான் அங்காலப் பக்கம் இருக்கினம் போல :D

  • கருத்துக்கள உறவுகள்

அர்த்தமற்ற சடங்குகள், சம்பிரதாயங்கள், சகுனங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் உள்ள பிற்போக்குக் குணங்களால் முன்னேற்றமான சமூகமாக மாறமுடியாமல் உள்ள இனங்களில் தமிழர்களும் அடங்குவர். எனவே "அது அப்படித்தான்" என்று வாழப் பழகினால் கேள்விகள்/சந்தேகங்கள் பிறக்காது! <_<

கல்வியறிவு வளர்ந்து, வசதிகள் பெருகி, பல நாடுகள் என்று புலம்பெயர்ந்து, நடையுடை பாவனை, நாகரிகம் எல்லாம் கண்டாலும் ஒருசிலவற்றில் மட்டும் அவை அவசியமானதா இல்லையா எனத் தெரியவில்லை என்றாலும் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதில் படாத பாடுபடுகிறார்கள்.

ஒரு விடயத்தைச் செய்யாமல்விட்டால் ஒரு தீங்கும் வராது என்று புரியும்பட்சத்தில் அவற்றை கைவிடுறார்கள். உதாரணமாக வெள்ளிக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடாமல் இருந்த பலர் தற்போது வெள்ளிக் கிழமைகளில் மாமிசம் சாப்பிடுவதில்லையா? இப்படி கைவிடப்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள் பலவுண்டு.

ஒன்றைச் செய்யவில்லை எனில் துன்பம் வந்து விடுமோ என்ற பயத்தில், அது அவசியமா இல்லையா என்று யோசிக்காமாலேயே பழைய சடங்குகள் சம்பிரதாயங்களை கைவிடாமல் இருக்கின்றோம். தேவையற்றது/பிழையானது என்று நினைத்தாலும் மற்றவர்கள் ஏதும் சொல்வார்களோ என்று சமூகத்திற்குப் பயந்து சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்கின்றோம்.

எனவே, நாங்கள் செய்வது சரியானதா/தேவையானதா என்பதைச் சிந்தித்துச் செயற்பட்டால் சடங்குகளும் சம்பிரதாயங்களும் மூடநம்பிக்கைகளும் காணாமல் போகும். தேவையானவை மட்டுமே தொடர்ந்தும் இருக்கும்.

இதற்குள் நண்பர்களுக்கு பேனா பரிசளிக்கக்கூடாது என்பதும் சிலருக்குப் பொருந்தலாம் ^_^

  • கருத்துக்கள உறவுகள்

அர்த்தமற்ற சடங்குகள், சம்பிரதாயங்கள், சகுனங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் உள்ள பிற்போக்குக் குணங்களால் முன்னேற்றமான சமூகமாக மாறமுடியாமல் உள்ள இனங்களில் தமிழர்களும் அடங்குவர். எனவே "அது அப்படித்தான்" என்று வாழப் பழகினால் கேள்விகள்/சந்தேகங்கள் பிறக்காது! <_<

ஒரு விடயத்தைச் செய்யாமல்விட்டால் ஒரு தீங்கும் வராது என்று புரியும்பட்சத்தில் அவற்றை கைவிடுறார்கள். உதாரணமாக வெள்ளிக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடாமல் இருந்த பலர் தற்போது வெள்ளிக் கிழமைகளில் மாமிசம் சாப்பிடுவதில்லையா? இப்படி கைவிடப்பட்ட சடங்குகள், சம்பிரதாயங்கள் பலவுண்டு.

அர்த்தமற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று சொல்ல முடியாது. அவை உருவாக்க பட்ட காலத்தில் அவை அர்த்தம் உள்ளதாகவே இருந்திருக்கும். இந்த காலத்திற்கு பொருந்தாததாக இருக்கலாம் ... அதற்காக அர்த்தமற்ற என்று சொல்ல முடியாதே.

சகுனங்களும் மூட நம்பிக்கைகளும் வேறு. அது எல்லா சமூகதினரிலும் இருக்கும் ஒன்று. இங்கு 13 ம் இலக்கம் இராசி அற்றது தீங்கு விளைவிக்கும் இலக்கம் என்று கருதுபவர்கள் இப்பவும் இருக்கிறார்கள். பல தொடர் மாடி கட்டடடங்களில் 13 மாடி இருந்தாலும் அதை ஸ்கிப் பண்ணி... 12 க்கு அடுத்ததாக 14 என்று பார்த்திருக்கிறேன். கனடாக்கு வந்த புதிதில், மொக்கங்கள் என்று நினைத்திருக்கிறேன். 13 ம் திகதி வெள்ளிகிழமை வந்தால் அதை ஒரு செய்தியாக இப்ப கூட சொல்லுர்கிரார்கள்.

வெள்ளிகிழமை மாமிசம் சாப்பிடாமல் மரக்கறி (சைவ) உணவு சாப்பிடும் (இது தமிழர்களுக்கு இல்லை - சைவர்களுக்கு மட்டும் - சமைய காரணம்), காரணம், சாப்பாட்டில் ஒரு balance இருக்க வேண்டும் என்ற காரணமாக இருக்கலாம். சைவ உணவின் போது ஒரு கறியுடன் சாப்பிட முடியாதெண்டு 4 கறி வைப்பினம். மாமிச நாள் என்றால், ஒரு கோழிக்கால் கறி, மீன் கறி என்று ஒற்றை கறியே இருக்கும். அதன் காரணமாகவே வெள்ளிகிழமை சைவம் எனக்கு பிடிக்கும். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அர்த்தமற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று சொல்ல முடியாது. அவை உருவாக்க பட்ட காலத்தில் அவை அர்த்தம் உள்ளதாகவே இருந்திருக்கும். இந்த காலத்திற்கு பொருந்தாததாக இருக்கலாம் ... அதற்காக அர்த்தமற்ற என்று சொல்ல முடியாதே.

ஒரு காலத்தில் அர்த்தமுள்ளவையாக இருந்திருக்கலாம். அதற்காக தற்போதும் அவற்றை அப்படியே கடைப்பிடிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியுமா? எனவே தற்போதைய காலத்திற்கு ஒவ்வாத சடங்குகள், சம்பிரதாயங்கள் தற்போது அர்த்தமில்லாதவை என்றே கொள்ளப்படவேண்டும்.

வெள்ளி 13ந் தேதியை நம்பும் மேற்கத்தையர்கள் உள்ளனர். அதற்காக இது அர்த்தமுள்ள நம்பிக்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது!

தற்போதைய காலத்திற்கு ஒவ்வாத என்பதற்காக அர்த்தம் இல்லாதவை என்று கூற முடியாதே. அதற்காக, அப்பிடி கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நான் சொல்ல வர இல்லை.;)

வெள்ளி 13ந் தேதியை நம்பும் மேற்கத்தையர்கள் உள்ளனர். அதற்காக இது அர்த்தமுள்ள நம்பிக்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது!

உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய காலத்திற்கு ஒவ்வாத என்பதற்காக அர்த்தம் இல்லாதவை என்று கூற முடியாதே. அதற்காக, அப்பிடி கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நான் சொல்ல வர இல்லை.;)

அப்படியானால் சிலவற்றை அர்த்தம் தெரியாத சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் என்ற கூடைக்குள்ளும் சிலவற்றை அர்த்தம் தெரிந்த சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள் என்ற கூடைக்குள்ளும் போட்டுக்கொள்ளலாம். :blink:

முன்னோர்கள் காலத்தின் தேவை கருதி சில பழக்க வழக்கங்களை கடைப்பிடித்திருக்கிறார்கள். உதாரணமாக இரவில் வீட்டை கூட்டுதல் நல்லதல்ல என. காரணம் வெளிச்சம் குறைவான படியால் பெறுமதியான சிறிய பொருட்களையும் தெரியாமல் எறிந்து விட சந்தர்ப்பம் அதிகம். ஆனால் தற்காலத்திலும் ஒரு விடயத்தை பகுத்தறியாமல் சகுனம் பார்ப்பது எதிர்மறையான எண்ணங்களைத் தூண்டி அழிவிற்கே வழிவகுக்கும்.

நான் ஒரு நாள் நேர்முகப்பரிட்ச்சைக்கு போகும் வழியில் எனக்கு தெரிந்த ஒருவரைச் சந்தித்தேன். எங்கு போகிறாய் என கேட்ட பொழுது விடயத்தை சொன்னேன். அதற்கு அவர் இன்றைக்கு 13 ம் திகதி செவ்வாய்க்கிழமை போதாததிற்கு ராகு காலமோ ஏதோ கேட்ட நேரமும் வேற எனச் சொன்னார்.

எனக்கு அந்த வேலை கிடைத்தது. அதைவிட அந்த வேலையில் கிடைத்த பணமும் சந்தோசமும் இற்றை வரை வேறு எந்த வேலையிலும் கிடைக்கவில்லை.

நீங்கள் Southall இல் பவுண்டுக்கு மூண்டு எண்டு வாங்கின பேனாவை பரிசாக் குடுத்தால் கோவம் வராமல் என்ன செய்யும்? ^_^:lol:

:lol:

நல்லாத்தான் லண்டனைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். Southkall இற்கு இந்தியப் பெண்களை சைட் அடிக்கவா போனீர்கள்? கவனம் சீக்கியர்கள் பொல்லாத கோபக்காரர் வெட்டிவிடுவார்கள். :lol:

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாத்தான் லண்டனைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். Southkall இற்கு இந்தியப் பெண்களை சைட் அடிக்கவா போனீர்கள்? கவனம் சீக்கியர்கள் பொல்லாத கோபக்காரர் வெட்டிவிடுவார்கள். :lol:

சேச்சே.. என்னதான் இருந்தாலும் அப்பிடிச் செய்வனா? :unsure: நான் எப்பவும் எங்கடை ஆக்களைத்தான்..! கொலியர்ஸ்வுட், டூட்டிங் பக்கம்.. :wub::lol:

ரதி நீங்களுமா???? மூடநம்பிக்கைகளை இந்த காலத்திலும் நீங்கள் நம்புவது ஆச்சரியமாக உள்ளது. பேனாவிற்கும் உங்கள் நண்பி பிரிந்ததற்கும் என்ன சம்பந்தம்? :rolleyes: மூடநம்பிக்கைகள் சிலவற்றில் அர்த்தம் உள்ளது உண்மை அதற்காக அர்தமில்லாதவற்றை நான் நம்புவதில்லை :) உதாரணத்திற்கு ஏணியின் கீழ் போனால் சகுணம் சரியில்லை என்பார்கள்....ஆனால் உண்மையான காரணம் ஏணி தலை மேல் விழுவதற்காக சந்தர்பம் உள்ளமையே. அதே போன்று இரவில் நகம் வெட்டுதல்-ஊசி முட்டை எண்ணெய் போன்றவை மற்றவர்களுக்கு கொடுக்காமல் இருப்பது போன்றவற்றை சொல்லலாம். இவற்றை செய்யவேண்டாம் என்னால் யார் கேட்பார்கள் அதனால் தான் கெட்ட சகுணம் என்று சொல்லி அவற்றை செய்யாமல் தடுத்திருப்பார்கள். நான் எந்தவித சகுணங்களையோ மூடநம்பிக்கைகளையோ அறவே நம்புவதில்லை. நடப்பது தான் நடக்கும் நாம் தலைகீழாக நின்றாலும் :lol::wub:

அதிலும் இந்த ராகு காலம் அட்டமி நவமி வியாழக்கிழமை போன்றவை நமக்கு ரொம்பவே அலர்ஜி

:D:lol:

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

சேச்சே.. என்னதான் இருந்தாலும் அப்பிடிச் செய்வனா? :unsure: நான் எப்பவும் எங்கடை ஆக்களைத்தான்..! கொலியர்ஸ்வுட், டூட்டிங் பக்கம்.. :wub::lol:

அடுத்தமுறை வந்தால் சொல்லுங்கள். ரூட்டிங்கில் சந்திக்கலாம் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி நீங்களுமா???? மூடநம்பிக்கைகளை இந்த காலத்திலும் நீங்கள் நம்புவது ஆச்சரியமாக உள்ளது. பேனாவிற்கும் உங்கள் நண்பி பிரிந்ததற்கும் என்ன சம்பந்தம்? :rolleyes: மூடநம்பிக்கைகள் சிலவற்றில் அர்த்தம் உள்ளது உண்மை அதற்காக அர்தமில்லாதவற்றை நான் நம்புவதில்லை :) உதாரணத்திற்கு ஏணியின் கீழ் போனால் சகுணம் சரியில்லை என்பார்கள்....ஆனால் உண்மையான காரணம் ஏணி தலை மேல் விழுவதற்காக சந்தர்பம் உள்ளமையே. அதே போன்று இரவில் நகம் வெட்டுதல்-ஊசி முட்டை எண்ணெய் போன்றவை மற்றவர்களுக்கு கொடுக்காமல் இருப்பது போன்றவற்றை சொல்லலாம். இவற்றை செய்யவேண்டாம் என்னால் யார் கேட்பார்கள் அதனால் தான் கெட்ட சகுணம் என்று சொல்லி அவற்றை செய்யாமல் தடுத்திருப்பார்கள். நான் எந்தவித சகுணங்களையோ மூடநம்பிக்கைகளையோ அறவே நம்புவதில்லை. நடப்பது தான் நடக்கும் நாம் தலைகீழாக நின்றாலும் :lol::wub:

அதிலும் இந்த ராகு காலம் அட்டமி நவமி வியாழக்கிழமை போன்றவை நமக்கு ரொம்பவே அலர்ஜி

:D:lol:

நானும் பெரிதாக இந்த சம்பிர‌தாயங்கள் பார்ப்பதில்லை ஆனால் சில நேர‌ங்களில் பழைய பெரியவர்கள் சொன்ன மாதிரியே நட‌ந்து விடும்...என் நண்பி பிரிந்து போனதையிட்டுக் கவலையில்லை ஆனால் கைக்குட்டை பரிசளிக்கக் கூடாது என்ட‌ பெரியவர்களின் கருத்து உண்மை தானே தமிழினி...

அதை விட சில பேரை நான் கண்டிருக்கிறேன் இப்பவும் இர‌வில் சாப்பாடு வாங்கி வந்தால் கொஞ்ச‌த்தை அதில் குப்பைக்குள் போட்டு விட்டு தான் சாப்பிடுவார்கள்

அடுத்தமுறை வந்தால் சொல்லுங்கள். ரூட்டிங்கில் சந்திக்கலாம் :D

ஆஹா போயும்,போயும் டூட்டிங்கிலா...

இந்த கைக்குட்டை மற்ரர் எனக்கு விளங்கல ரதி. ஏன் கைக்குட்டை பரிசளிக்கக்கூடாது? யாராவது தாங்கள் பாவிச்சதை பரிசளித்துவிடுவினம் என்ன பயத்தில அப்படி சொன்னார்களோ தெரியல :lol: கைக்குட்டை பரிசளிக்கக்கூடாது என்பதில் உள்ள உண்மை என்ன என்று சொன்னால் தெரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும். :)

ஆஆஆ நான் இன்று தான் கேள்விப்படுகின்றேன் சாப்பாட்டில் கொஞ்சத்தை குப்பையில் போட்டுவிட்டு சாப்பிடுவது பற்றி....ஏன் ரதி அதற்கு என்ன விஞ்ஞான விளக்கம் கொடுக்கின்றார்கள்? எனக்கு இந்த மூடநம்பிக்கைகளுக்கான அறிவு ரொம்பவே மட்டம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தமுறை வந்தால் சொல்லுங்கள். ரூட்டிங்கில் சந்திக்கலாம் :D

ஏப்ரல் மாதம் சந்திப்போம்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா போயும்,போயும் டூட்டிங்கிலா...

அங்குதானே நல்ல தமிழ்க் குட்டிகள் இருக்குதென்று இசை சொன்னார்! நீங்கள் ரூட்டிங்கில் இல்லையென்பதில் இருந்து அது உறுதியாகின்றது :wub::lol:

ஏப்ரல் மாதம் சந்திப்போம்..! :D

வரும்போது இரகசியமாகவோ/பரகசியமாகவோ சொல்லிவிட்டு வாருங்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் சில பழக்கங்கள் உண்டு

காகிதங்களை புத்தகங்களை காலால் மிதிக்கமாட்டேன்

எந்த சாமி படம் என்றாலும் கீழே கிடந்தால் எடுத்துவைக்காமல் போகமாட்டேன்

பால் குடிக்கும் தண்ணி சாப்பாடு போன்றவற்றை காலால் தொடமாட்டேன் (தட்டமாட்டேன்)

தலைவர் படம் இருக்கும் பக்கம் கால் வைத்து படுக்கமாட்டேன்

இரவில் நகம் வெட்டமாட்டேன்

பெரியோருக்கு முன் கால்மேல்கால்போட்டுக்கொண்டு இருக்கமாட்டேன்

செத்தவீட்டுக்கு போய்வந்தால் நேரே குளியறைக்குத்தான் போவேன். வீட்டில் எங்கும் போகமாட்டேன். எவரும் என்னைத்தொடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் சில பழக்கங்கள் உண்டு

காகிதங்களை புத்தகங்களை காலால் மிதிக்கமாட்டேன்

காகிதங்கள் எனக்கு பிரச்சனை இல்லை. புத்தகங்களை தெரிந்து உளக்க மாட்டேன், தவறுதலாக உளக்கி விட்டால், எனது மனைவி போல் பதட்ட படாமல் எடுத்து வைத்து விட்டு போவேன். அப்பிடி உழக்கினால், சிலர் அதை தொட்டு கும்பிடுவதை பார்த்து இருக்கிறேன்

எந்த சாமி படம் என்றாலும் கீழே கிடந்தால் எடுத்துவைக்காமல் போகமாட்டேன்

என்ன பொருள் என்றாலும் கீழே கிடந்தால் எடுத்து வைப்பேன். சிலர் போல சாமி படத்தை (கலண்டர் மட்டை) எறிய கூடாதென வருடக்கணக்காக சேர்த்து வைக்க மாட்டேன்.

பால் குடிக்கும் தண்ணி சாப்பாடு போன்றவற்றை காலால் தொடமாட்டேன் (தட்டமாட்டேன்)

அசுத்தம் ஆகிவிடும் என்று நானும் சாப்பாடு தண்ணியை காலால் தொடுவது இல்லை

தலைவர் படம் இருக்கும் பக்கம் கால் வைத்து படுக்கமாட்டேன்

இரவில் நகம் வெட்டமாட்டேன்

வெளிச்சம் இருப்பதால் இரவு பகல் பார்ப்பதில்லை. எப்ப வசதியோ, அப்போ வெட்டுவேன்

பெரியோருக்கு முன் கால்மேல்கால்போட்டுக்கொண்டு இருக்கமாட்டேன்

பொதுவாகவே கால் மேல் கால் போட்டு இருப்பதில்லை. ஒரு காலை மடிச்சு இருக்கையில் வைக்கும் பழக்கம் இருக்கு.. ஆர் இருக்கினம் எண்டு பார்ப்பதில்லை. என் வசதிக்கு இருந்து கொள்வேன்

செத்தவீட்டுக்கு போய்வந்தால் நேரே குளியறைக்குத்தான் போவேன். வீட்டில் எங்கும் போகமாட்டேன். எவரும் என்னைத்தொடக்கூடாது.

இறந்தவர் தொற்ற கூடிய நோயினால் இறந்தவராயிநும், மரண வீட்டில் யாரையாவது கட்டி அணைத்திருந்தால் கட்டாயம் வீட்டுக்கு போன உடனே தோய்வேன். மற்ற படி, வீட்டில் யாரும் கவனிக்க இல்லை எண்டால் பேசாமல் இருந்திடுவேன். ஆனால் நான் இப்பிடி என்று தெரிந்ததால், வீட்டிற்கு வந்த உடனேயே குளியலறைக்கு போக உத்தரவு வழங்கப்படும் :rolleyes:

Edited by Sabesh

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட சபேஸ் மாதிரித்தான் நானும் இவற்றை அணுகுகின்றேன். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் புத்தகங்கள்,பேப்பர்கள் கீழ் கிடந்தால் எடுத்து மேலே வைத்து விடுவேன் தவறுதலாக விளக்கி விட்டால் தொட்டுக் கும்பிட்டு விட்டு தான் எடுத்து வைப்பேன்.

கலண்டர்களை அதுவும் சாமிப்படக் கலண்டராய் இருந்தால் கூட அந்தந்த வருடம் முடிய எடுத்து எறிந்து விடுவேன்.

எங்கேயாவாது வெளியே போய் விட்டு வரும் போது கால்,கை,முகம் கழுவிப் போட்டு தான் மற்ற வேலை பார்ப்பேன்.

இங்கு புலம் பெயர்ந்து வந்த பிறகு செத்த வீட்டுக்குப் போனது குறைவு...ஒர்,இரண்டு செத்த வீட்டுக்குப் போய் இருக்கிறேன் ஆனால் வந்தவுடன் குளித்து விட்டுத் தான் மற்ற வேலை பார்ப்பேன்.

இரவிலும்,வெள்ளிக்கிழமையிலும் நகமும்,தலைமுடியும் வெட்டியதில்லை.

நான் பொதுவாகவே கால் மேல் கால் போட்டு இருப்பதில்லை.

இவை தான் நான் பொதுவாக கடைப்பிடிக்கும் பழக்கவழக்கம் ஆனால் சிலபேர் இந்தக் காலத்திலும் பூனை குறுக்கால போனால் திரும்பி வந்து விடுவார்கள்...கோயில்களில் பிள்ளைகள் இல்லாத பெண்ணோ அல்லது விதவைப் பெண்ணோ பூ,குங்குமம் போன்ற பிரசாதம் கொடுத்தால் வாங்க மாட்டார்கள்...இதே போன்ற சம்பிரதாயங்களை இன்னும் கடைப்பிடிப்பவர்கள் உள்ளனர்.

எதிலும் நம்பிக்கை இல்லை.ஆனால் பல முறை எனக்கு அதிஸ்டமானதென்று அவ்வளவு கொம்பேட்டபிள் இல்லாத ஒரு டீ-ஷேர்ட்டுடன் தான் பற் (கிரிகெட்) பண்ணபோனேன்.மாத்திப்போட்ட நாளெல்லாம் எனோ பற்றிங் சரிவரவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.