Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்ல சமயம் இது! இதனை நழுவ விடக்கூடாது!

Featured Replies

நல்ல சமயம் இது! இதனை நழுவ விடக்கூடாது!

தமிழீழம் விடுதலை பெறவேண்டும் என்ற வேட்கையோடு தீக்குளித்து தன்னைத்தானே அழித்துக் கொண்ட வீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உணர்வோடு கொண்டாடப்பட்டுள்ளது. முத்துக்குமார் மட்டுமல்ல மேலும் 16 இனவுணர்வாளர்கள் தங்கள் இனிய இளைய உயிர்களை தீக்குத் தீனியாக்கினார்கள். ஆனால் முத்துக்குமார் மற்றும் அவரோடு தங்களைத் தாங்களே அழித்துக் கொண்ட உணர்வாளர்களால் தமிழகத்தில் ஒரு சிறு கலகத்தைத்தானும் உருவாக்க முடியவில்லை. ஒரு சிறு நெருப்பையேனும் ஏற்றிட முடியவில்லை. என்ன காரணம்?

தியூனிஷா நாட்டில் ஒரு இளைஞன். பெயர் மொகமது பூசிசி (Mohammed Bouazizi) அகவை 23. வேலை இல்லா பல்கலைக் கழகப் பட்டதாரி. காய்கறி பழங்கள் விற்று குடும்பத்தைக் காப்பாற்ற நினைத்தான். ஆனால் அந்த நாட்டுக் காவல்துறை அவனை நடைபாதை வியாபாரம் செய்ய அனுமதிக்கவில்லை. விரட்டி அடித்தது. விளைவு? கடந்த டிசெம்பர் மாதம் 17 ஆம் நாள் பெட்ரோலை உடம்பு முழுதும் ஊற்றித் தனக்குத்தானே தீ மூட்டி இறந்து போனான். அவன் மூட்டிய தீ அவனை மற்றும் பற்றவில்லை. தியூனிஷாவைப் பற்ற வைத்தது. நாட்டின் ஆட்சித்தலைவர் குடும்பத்தோடு நாட்டை விட்டு விமானத்தில் பறந்து சவுதி அரேபியாவில் அரசியல் அடைக்கலம் கேட்டார். மொகமது பூசிசி மூட்டிய தீ இன்று துயூனிஷாவையும் கடந்து மத்திய கிழக்கில் பரவி வருகிறது. யோர்டான் தொடக்கம் எகிப்து வரை மக்கள் புரட்சி வெடித்துள்ளது. எகிப்தின் ஆட்சித்தலைவர் கொசனி முபராக்கின் பதவி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் அவர் நாட்டை விட்டு விமானத்தில் ஓடித் தப்பிக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

Toronto Star நாளேடு தனது முன்பக்கச் செய்திக்கு "Mubarak, your plane is waiting” என மகிடமிட்டுள்ளது!

ஆனால் முத்துக்குமார் மூட்டிய தீ மட்டும் தமிழகத்தில் பரவ வில்லையே? காரணம் என்ன? ஒவ்வொரு தமிழ்த் தேசியவாதியும் தன்னைத்தானே கேட்க வேண்டிய கேள்வி இது.

தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்கள் இனமானத்தைவிடப் பதவி சுகம் பெரிது என்ற எண்ணியதே காரணமாகும். குறிப்பிட்டுக் கேட்ட அமைச்சர் பதவிகள் கிடைக்கவில்லை என்றால் கருணாநிதி சோனியாவின் உறவையும் அறுத்தெறியத் அணியமாக இருந்தார். மந்திரிப் பதவிகள் வீடு தேடியே வந்தன. ஈழத் தமிழர்கள் கொலைக்களத்தில் நின்று அவலக் குரல் எழுப்பிய போதும் பொய்யாகக் கூடக் கருணாநிதி கோபம் காட்டவில்லை. தனது தொப்புள்க் கொடி உறவுகள் முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாய் செத்து மடிந்ததைப் பற்றி ஒரு எள்முனை அளவுகூட கருணாநிதி கவலைப்படவில்லை. முள்ளிவாய்க்காலில் ஓடிய குருதி காயு முன்னரே முதல்வர் கருணாநிதி தில்லி சென்று தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அமைச்சர் பதவிகளை வாங்கிக் கொடுப்பதிலேயே கண்ணாய் இருந்தார். 'வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கவேண்டும்' ' 'தமிழா! தமிழா!! என்னைக் கட்டிக் கடலில் போட்டாலும் நான் கட்டுமரமாக மிதப்பேன். அதில் ஏறி நீ பயணம் செய்யலாம்' எனற வீரப் பேச்சு எல்லாம் வெற்றுப் பேச்சாகப் போய்விட்டது.

எனவேதான் எதிர்வரும் ஏப்ரில் மாதத்தில் நடக்க விருக்கும் சட்ட சபைத் தேர்தலில் பதவி சுகத்துக்காக தமிழினத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் தோற்கடிக்கப் படவேண்டும். சிறீலங்கா நடத்த வேண்டிய போரை காங்கிரஸ் - திமுக அரசு நடத்தியது என கொடுங்கோலன் மகிந்த இராசபக்சே ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருக்கிறான். இந்த இரண்டகத்துக்கு உரிய தண்டைனையை உணர்வுள்ள தமிழர்கள் காங்கிரஸ் - திமுக இரண்டுக்கும் வழங்க வேண்டும். தன் இனிய உயிரை ஈகை செய்த முத்துக்குமாருக்கு நாம் எழுப்பக் கூடிய நினைவாலயமும் இதுதான்.

தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே எஞ்சியுள்ளன. நல்ல சமயம் இது! இதனை நழுவ விடக்கூடாது!

"ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு வரலாற்று நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது."(தமிழீழத் தேசியத் தலைவர்)

திருமகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்களில் அனேகர், புலத்தின் அனேகர் விழித்தெழுவதென்றால் அவர்களது இருப்பில் தீ வைக்கவேண்டும். இங்கு இருப்பென்று கருதப்படுவதை எதுவென அறிந்துகொள்ளவும், நாணயம்கருதி நேரடியாகக் குறிப்பிடவில்லை. வெறும் ஐந்துவீத வாக்குகளையே உள்வாங்கி ஒரு ஆயுதக்குழு முகவரை யாழ் மாநகர முதல்வராக அமரவைத்த யாழ்மக்களை இப்படியல்லாது எப்படிச்சொல்ல. அது இப்போது புலிகள் இப்போதும் யாழ் குடாநாட்டில் இருக்கிறார்கள் என்றுகூறி யாழ் இளையோரைக் கொலைக்களத்துக்கு அனுப்புது. எக்கேடும் கெட்டுப்போங்கோ என விட்டிட்டிருக்க மனம்வருகுதில்லை, ஆனால் காலப்போக்கில் அதுதான் நடக்கும். புலம்பெயர் தமிழர்களது நியாயபூர்வமான ஆலோசனைகளை மதித்துச் செயற்படாதவிடத்து புலத்துத் தமிழர்கட்கு பாரிய அழிவுகள் காத்திருக்கின்றன. இதை ஒரு எச்சரிக்கையாகவே கூறுகிறேன். தமிழர் விரோததேசமாம் இந்தியவையும் அதனது அடிவருடிக்கூட்டத்தையும் புறந்தள்ளுவதே தற்போதைய காலத்தின் கட்டாயம். அதற்கான வேலைத்திட்ங்களை முன்னின்றெடுப்பதே நன்மைபயக்கும்.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

எழுஞாயிறு,

நீங்கள் சொல்லிவிட்டீர்கள், என்னால் சொல்ல இயலவில்லை. எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று இருக்க முடியவில்லை. அது நானும் பிறந்து வளர்ந்த ஊரல்லவா?? எப்படி அவ்வளவு இலகுவில் விட்டு விட முடியும்? அங்கிருக்கும் இன்றைய சமுதாயத்திற்குத்தான் இனவுணர்வு இல்லையென்றால் எம்மாலும் அப்படி இருக்க முடியவில்லை.

:huh: ரு காலம் வரும், அவர்கள் உணருவார்கள். அடிமைகளிலும் கீழாக சிங்களவன் அவர்களை நடத்துவான், அப்போதாவது விழித்துக்கொள்வார்களா என்று பார்க்கலாம்.

இல்லாவிட்டால் தமிழ்நாட்டுத் தமிழனிலும் கீழானவனாகத்தான் அவர்கள் வாழவேன்டும்.

சர்வாதிகாரத்தாலும் ஆயுதத்தாலும் மக்களை நீண்ட காலம் அடக்கி வைக்க முடியாது. இது இன்று துநீசியாவிலும் மற்றும் எகிப்திலும் நிதர்சனமாகிவிட்டது. இந்த "தொடர் எழுச்சி" ( domino effect) மற்றைய அரபு சர்வதிகார நாடுகளுக்கும் பரவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் தாக்கம் வரும் மாதங்களில், ஆண்டுகளில் உலகம் முழுவதும் உணரப்படலாம்.

அதன் விளைவுகள் நல்ல மாற்றங்களை தமிழகத்திலும், தமிழீழத்திலும் கொண்டுவரும் என நம்பலாம்.

ஓடிவந்தவன் தியாகியாகவும் நாட்டில் இருப்பவன் துரோகியாகவும் மாறும் அவலம் தமிழனுக்கு மட்டுமே சொந்தம்.

போராட்டம் என்றவுடன் அகதியாக புலம் பெயர்ந்து எப்போ நாலு காசு கண்டானோ தமிழன் அன்று அழிந்தது எமது போராட்டம்.

ஓடி வந்த நீங்கள் தியாகி போலவும், ஊரிலை இருந்த புலிகள் துரோகி போலவும் சொல்லுறது நீங்கள் தானே....?? :unsure:

துனிசீயாவையும்,எகிப்தையும் பார்த்து மக்கள் போராட்டம் என்று இப்ப கதையுங்கோ? மக்கள் போராட்டம் என்றவர்களை பார்த்து நையாண்டிபண்ணியது தான் உந்தக்கூட்டம்.கேள்வி ஏது கேட்காமல் அண்ணைக்கு காசு கொடுங்கோ தமிழீழம் என தான் தப்புவதற்கு அலுவல் பார்த்ததுதான் உந்த புலம் பெயர் கூட்டம்.

தமிழனின் பிரச்சனை தான் நாம் இங்கு விவாதிப்பது தனிநபர் பிரச்சனையல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் முத்துக்குமார் மூட்டிய தீ மட்டும் தமிழகத்தில் பரவவில்லையே?

ஸ்பெக்ரம் தீயாவது பரவி கொழுந்து விட்டு எரிகிறதா என பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

துனிசீயாவையும்,எகிப்தையும் பார்த்து மக்கள் போராட்டம் என்று இப்ப கதையுங்கோ? மக்கள் போராட்டம் என்றவர்களை பார்த்து நையாண்டிபண்ணியது தான் உந்தக்கூட்டம்.கேள்வி ஏது கேட்காமல் அண்ணைக்கு காசு கொடுங்கோ தமிழீழம் என தான் தப்புவதற்கு அலுவல் பார்த்ததுதான் உந்த புலம் பெயர் கூட்டம்.

தமிழனின் பிரச்சனை தான் நாம் இங்கு விவாதிப்பது தனிநபர் பிரச்சனையல்ல.

ஓ.. ஒரே அடி.. 24 மணித்தியாலத்தில் தமிழீழம்.. இப்பிடி ஒரு குறூப் அப்ப சொல்லிக்கொண்டு திரிஞ்சது.. அந்தவகையான மக்கள் போராட்டமா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

துனிசீயாவையும்,எகிப்தையும் பார்த்து மக்கள் போராட்டம் என்று இப்ப கதையுங்கோ? மக்கள் போராட்டம் என்றவர்களை பார்த்து நையாண்டிபண்ணியது தான் உந்தக்கூட்டம்.கேள்வி ஏது கேட்காமல் அண்ணைக்கு காசு கொடுங்கோ தமிழீழம் என தான் தப்புவதற்கு அலுவல் பார்த்ததுதான் உந்த புலம் பெயர் கூட்டம்.

தமிழனின் பிரச்சனை தான் நாம் இங்கு விவாதிப்பது தனிநபர் பிரச்சனையல்ல.

ஊர் மக்களிடம் சோத்துப்பாசலை வாங்கி சாப்பிட்டு விட்டு நாலு சிவப்பு புத்தகங்களை மக்களிடம் சோ(show) காட்டினதும், தாடிகள் வேறு (லெனினின் ஆட்களாம் :lol: ) வைத்துக்கொண்டு "தோழர் என்று கூவி அழைக்கினமாம் (வெள்ளை வான் கடத்தலில் மட்டும் கறுப்பு துணியால் மூடி விடுவினமாம்).மொத்தத்தில் இவர்களுக்கு மக்கள் போராட்டம் என்பது மக்களிடம் வாங்கி தின்னுவது பிறகு அதே மக்களை வெள்ளை வானில் கடத்தி கப்பம் கேட்பது இல்லாவிட்டால் போட்டுத்தள்ளுவது. இறுதியில் அரசோடு சேர்ந்து மக்களையும் , புலிகளையும் போட்டுத்தள்ளுவது.உ+ம் புளட் மோகன்.

இவர்களை மக்கள் நையாண்டி பண்ணாமல் மாவீரர் என கூப்பிடுவார்கள் என்று அர்ஜுன் அண்ணை தனது 30 வருட அரசியல் ஞானத்தால் சொல்கிறாருங்கோ. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓடிவந்தவன் தியாகியாகவும் நாட்டில் இருப்பவன் துரோகியாகவும் மாறும் அவலம் தமிழனுக்கு மட்டுமே சொந்தம்.

போராட்டம் என்றவுடன் அகதியாக புலம் பெயர்ந்து எப்போ நாலு காசு கண்டானோ தமிழன் அன்று அழிந்தது எமது போராட்டம்.

சிங்கள-பயங்கரவாதத்தின் அடக்குமுறையை தொட்டாலே கோவம் புட்டுக் கொண்டுவதும் அர்யுன், நீர் மட்டும் ஓடிவராமல், ஈழத்தில் ஒட்டிக் கொண்டிருந்தா புலிகளை விமர்சித்தீர்? உமது வசதனத்தை திருப்பி உமக்கே பிடித்து பார் அப்பு!

ஒரு போராட்டம் மக்கள் போராட்டமா இல்லை ஆயுதப்போராட்டமா இல்லை அடிமையாக வாழ்வதா என்பதில் எதிரியின் கைகளில் அதிகமாகவே தங்கியுள்ளது.

எகிப்தில் தனது மக்களே என்ற காரணத்தால் இன்று இராணுவம் "சுட மறுத்துள்ளது". பல நாட்கள் ஊரடங்கு சட்டத்தையும் மக்கள் மீறியபோதும் இன்றுவரை 150க்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டுள்ளனர். இதில் பலரும் கொள்ளை அடிக்க முயன்றவர்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=80894&st=20

இதையே தான் தமிழர்கள் 1950- 1970 ளில் செய்தனர். இன்றும் கிடத்தட்ட நூறு வீதம் சிங்களவர்களை கொண்ட தமிழின அழிப்பு இராணுவம் ஒரு தோட்டாவையும் வீணாக்காது! சிங்கள மத்தியில் ஒரு மக்கள் போராட்டம் வெடித்தால் மட்டுமே இலங்கையில் "மக்கள் போராட்டத்திற்கு" சாத்தியம் அதிகம் உள்ளது.

சர்வதேசத்தை (இந்தியாவை), எமது தாயக கொள்கையை ஏற்றுகொள்ள வைக்கும் வழிமுறைகளை தமிழர் நாம் வெற்றிகரமாகமுன்னெடுக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் உருப்படியான மாற்றம் நடந்தால் மட்டுமே ஈழதமிழருக்கு விடிவு வரும். மானாட மயிலாட மயக்கமும் , சினிமா நடிகர்களுக்கு பாலபிஷேகம் செய்யும் வியாதியும் மாறினால் தான் இது நடக்கும். ஈழ தமிழர் போராட்டத்தை தமது அரசியல் பிழைப்புக்கு பாவிக்கும் அரசியல் வாதிகளும் திருந்தினால் தான் எமக்கு விடிவு.

சிங்களவனின் அடக்குமுறை உங்கள் அடக்குமுறையுடன் ஒப்பிடும் போது இரண்டாம் பட்சமாகிவிட்டது.அதனால் தான் உலகம் முதல் உங்களை அழித்தது.அடுத்ததுதான் சிங்களம்.

உங்களுக்கு எவர் அழிந்தாலென்ன என்ன அநியாயம் நடந்தாலென்ன நீங்கள் கோலோச்சவேண்டும்.கனடாவில இப்ப முழுச்சொத்தும் முடக்கம்.ஏன் எனக் கேட்க கூட ஒருத்தரும் போகவில்லையாம்.

எந்த இயக்கமாயினும் போராளிகளிகளில் பிழை இல்லை அவர்கள் வெறும் அம்புகள்.

நுணாவிலான் தனிநபர் விளக்கம் அடிக்கடி சொல்லுகின்றார்.தேசம் நெற் இல் எமது,எனது விளக்கம் 200 மேற்பட்ட பதிவுகளில் இருக்கு போய்பார்க்கவும்.

எமக்கு தேவை தமிழனுக்கு ஒரு விடிவு தனிநபர்களின் வீரப்பிரதாபம் அல்ல.

இங்கு கேள்வி கேட்டால் தேசம் நெற்றை காட்டுகிறீர்கள்.நீங்கள் புலிகளின் பிழைகளை சுட்டிக்காட்டும் போது நீங்கள் முன்பிருந்த இயக்கத்தின் கடந்த கால நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினேன். நானறிந்த சில சம்பவங்களையும் சுட்டிக்காட்டினேன்.பல இடங்களிலும் கேள்விகளை கேட்டிருந்தேன்.ஏனோ உங்களை பற்றி எழுத விரும்பாமல் புலிகளில் மட்டும் பிழை பிடித்த வண்ணம் உள்ளீர்கள்.இப்படி தொடர்ந்து நீங்களும் எழுதினால் தொடர்ந்து கேள்விகளும்,சம்பவவங்களும் யாழ் களத்தை நிரப்பும் என்பதை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தொடர்ந்து நீங்களும் எழுதினால் தொடர்ந்து கேள்விகளும்,சம்பவவங்களும் யாழ் களத்தை நிரப்பும் என்பதை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.

உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள் :(

சிங்களவனின் அடக்குமுறை உங்கள் அடக்குமுறையுடன் ஒப்பிடும் போது இரண்டாம் பட்சமாகிவிட்டது.அதனால் தான் உலகம் முதல் உங்களை அழித்தது.அடுத்ததுதான் சிங்களம்.

உங்களுக்கு எவர் அழிந்தாலென்ன என்ன அநியாயம் நடந்தாலென்ன நீங்கள் கோலோச்சவேண்டும்.கனடாவில இப்ப முழுச்சொத்தும் முடக்கம்.ஏன் எனக் கேட்க கூட ஒருத்தரும் போகவில்லையாம்.

எந்த இயக்கமாயினும் போராளிகளிகளில் பிழை இல்லை அவர்கள் வெறும் அம்புகள்.

நுணாவிலான் தனிநபர் விளக்கம் அடிக்கடி சொல்லுகின்றார்.தேசம் நெற் இல் எமது,எனது விளக்கம் 200 மேற்பட்ட பதிவுகளில் இருக்கு போய்பார்க்கவும்.

எமக்கு தேவை தமிழனுக்கு ஒரு விடிவு தனிநபர்களின் வீரப்பிரதாபம் அல்ல.

ஆகா உங்கட உலக அறிவு மயிர் கூச்செறிய செய்யுது... உங்களிட்டை அறிய எனக்கு நிறைய இருக்கும் போல கிடக்கே....

நாசமாய் போன தமிழீழத்தை விடுங்கோ எனக்கு விளங்காத வேறை ஒண்டைப்பற்றி சொல்லுங்கோ....!

சில மாதங்களுக்கும் முன்னம் காஸ்மீரகத்திலை மக்கள் எழுச்சியோடை போராட்டங்கள் நடந்தது ஞாபகம் இருக்கோ.... இந்திய படைகள் கொடூரமான முறையை கையாளுது எண்டு ஐநா எல்லாம் கவலை வெளியிட்டது... ! ஞாபகம் இருக்கோ...??

காஸ்மீரிகளை பொறுத்தவை தமிழீழத்தை விட அதிகமான சர்வதேச ஆதரவு கொண்டவர்கள்... பாக்கிஸ்தான், அமெரிக்கா சீனா வரைக்கும் அவர்களுக்கு ஆதரவு தளம் இருக்கு... அங்கை இருக்கும் ஒரு அமைப்பு மட்டும் தான் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டது.... மற்றய அமைப்புக்கள் தடை செய்ய படாதவர்கள்....!

நிலைமை இப்படி இருக்க அரசியலில் சிறந்து விளங்கும் காஸ்மீரிகளால் மக்கள் போராட்டம் கெம்பி எழும்பி வீதிகளில் இறங்கி இந்திய படைகளுக்கும் ஆட்ச்சியாளர்களுக்கும் எதிராக போராடினர்... ஆனால் சில நாட்களிலேயே இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது போண்ற கொடூரமான முறையில் அவர்களின் போராட்டம் பெரும்பான்மை இந்தியர்களின் ஆதரவோடை அடக்க ப்பட்டு இருக்கு...

இண்டைக்கு போராட்டத்தை ஒப்பிடுவதாக இருந்தால் காஸ்மீரிகளுக்கும் ஈழத்தமிழருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை... பல நாடுகளின் வெளிப்படையான ஆதரவு கொண்டவை காஸ்மீரிகள், என்பதை விட... ஆனால் நிலைமை ஈழத்தமிழருக்கும் காஸ்மீரிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை... அதோடை பெரும்பான்மை சமூகத்தை எதிர்த்து சிறுப்பான்மையினரின் போர் இது...

நான் கேக்க நினைக்கிறது ஒண்டு தான்... பல நாடுகளின் ஆதரவை பெற்று அரசியலில் சிறப்பாக விளங்கும் காஸ்மீரிகளால் ஏன் உரிமையை பெற்றுக்கொள்ள முடியாது இருக்கு....??

இதுக்கு மட்டும் உங்கட விளக்கத்தை தாங்கோ பிறகு எங்களுக்கு தமிழீழ அரசியல் பாடம் எடுக்கலாம்... பதில் தராமல் ஓடுவது உங்களுக்கு புதுசு இல்லை... ஆனால் நீங்கள் அரசியல் எண்டு எழுத வாற எல்லா இடத்திலையும் இந்த கேள்வியை கொண்டு வந்து ஒட்டுவன்... :)

Edited by தயா

அண்ணை என்னோட நேரத்தை வீணாக்கவேண்டாம்.

உங்களுக்கு பண்ணயார் வேலை பார்கவும்,உங்கள் பிள்ளைகளை பார்க்கவும் தான் நேரம் காணும்.மற்றவன்ரை பிள்ளைகள் குண்டைக்கட்டி உங்களுக்கு விடுதலை எடுத்து தரவேண்டும்.

அண்ணை என்னோட நேரத்தை வீணாக்கவேண்டாம்.

உங்களுக்கு பண்ணயார் வேலை பார்கவும்,உங்கள் பிள்ளைகளை பார்க்கவும் தான் நேரம் காணும்.மற்றவன்ரை பிள்ளைகள் குண்டைக்கட்டி உங்களுக்கு விடுதலை எடுத்து தரவேண்டும்.

நாங்கள் கேட்டனாங்களே உங்களை விடுதலை எடுத்து தாங்கோ எண்டு இல்லை அறிவுரை கேட்டனாங்களோ எப்படி செய்யிறது எண்டு சொல்லுங்கோ எண்டு...?? வந்தியள் இலவசமாய் நொட்டையளும் அறிவுரையும் சொல்லுறதுக்கு... கேள்வி கேட்டால் வேறை ஏதோ பினாத்துறீயள்...

எங்களுக்கு தெரியும் நீங்கள் உங்கட இருப்பையும் விருப்பையும் பாதுகாக்க மட்டும் தான் நிற்பீர்கள் எண்டு...

இல்லை எண்டால் செத்த பிணத்தை வைத்து அரசியல் செய்யுறது தமிழர் தான் எண்டு உங்களாலை இயலாததை செய்யிறவையை நொட்டை பிடிக்க வர மாட்டியள்...

***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.