Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லிபியா வழியில் சிறீலங்கா மீதும் போர் குற்ற விசாரணை வரலாம் - அமெரிக்கா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகத்தை முற்றாக ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறீலங்கா சிங்கள அரசும் அதன் படைகளும் செய்த இனப்படுகொலை யுத்தத்தின் 2009ம் ஆண்டு இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களின் படுகொலை சார்பில் சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டு சிறீலங்கா போர்குற்ற விசாரணை செய்யவில்லை என்றால் அது அனைத்துலக மட்ட போர்குற்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

லிபியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்ற கிளர்ச்சியில் லிபிய அரசு மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களோடு சிறீலங்காவை ஒப்பிட்டு கருத்துக் கூற முடியாது என்று கூறியுள்ள சிறீலங்காவிற்கான முன்னாள் அமெரிக்க தூதுவரும் இன்னாள் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க தூதவருமான Robert Blake சிறீலங்காவை சற்று மென்போக்கோடு எச்சரித்துள்ளார்.

சிறீலங்கா தன்னிச்சையாக முன்னெடுத்துள்ள போர் குற்றவிசாரணைகளில் அது சர்வதேச தரத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால் சிறீலங்கா அனைத்துலக போர்குற்ற விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐநா கணிப்பீட்டின் படி பல ஆயிரம் மக்கள் இறுதிப் போரில் கொல்லப்பட்டுள்ளதால் அது குறித்து விசாரிக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

--------------------------------------

After Libya referral to ICC, US warns Sri Lanka on war

[TamilNet, Tuesday, 01 March 2011, 13:12 GMT]

The United States warned this week that Sri Lanka could be hauled before a war crimes tribunal over the killing of “many thousands of civilians” in the final months of its armed conflict, if it is not willing hold to meet international standards in its own investigations into the mass killings, AFP reported. The warning, described by AFP as “the toughest yet” came in comments by US Assistant Secretary of State for South and Central Asian Affairs, Robert Blake, in an interview with the agency. Blake also cited the UN Security Council referring Libya to the International Criminal Court last week as a signal of global concern over human rights.

Blake, a former ambassador to Sri Lanka, said it was "preferable"for Sri Lanka to have its own investigation in line with internationally accepted human rights standards, rather than face an external inquiry.

However, "It's important to say that if Sri Lanka is not willing to meet international standards regarding these matters, there would be pressure to appoint an international commission to look into these things," Blake told AFP.

"The UN has estimated that many thousands of civilians were killed in the final few months of the war," Blake said.

Blake, who was in Colombo during the final stages of the armed conflict, said the Tamil Tigers had put civilians in harm's way, but Colombo too should be held accountable.

He said he was not comparing Sri Lanka with Libya, but said the UN security council's unanimous decision against Libya over the weekend underscored the resolve of the international community regarding crimes against humanity.

In the video interview from Washington yesterday, Blake said reconciliation, accountability and human rights were among the key elements the US wanted to see to normalise ties with Sri Lanka.

The US official said there had been improvements in re-settling thousands of people displaced by the conflict and attempts by the government to address some of the issues, but more progress was needed.

Washington was "particularly concerned" that attacks against the independent media continued two years after the end of fighting, Blake said, adding that Sri Lanka must ensure freedom of expression and dissent.

"Sri Lanka's international friends scratch their heads and wonder why there is still this kind of intimidation is occurring," he said referring to recent attacks against an office of a pro-opposition website and journalists.

His remarks came as the UN Human Rights Council was meeting in Geneva.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33613

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் நட்பு வட்டம் முழுவதுமே.. கிளர்ச்சியின் பிடியில்.. பயத்தில் சிக்கி தவிக்கும் இந்த வேளையில்.. அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையை தமிழர்கள் தமக்கு சாதமாகப் பாவித்துக் கொள்ள வேண்டும். இரண்டு தளங்களில் இதனை செய்ய வேண்டும். தாயகத்தில் எதிரியுடனான பேரம் பேசலுக்கான ஒரு வாய்ப்பாக இதனை மாற்றி அமைக்கும் அதேவேளை அவனுக்கு முண்டு கொடுத்து நின்றவர்களின் மீதான இராஜதந்திர அழுத்தத்திற்கும்.. அதன் கீழ் பயனடைய விளையும் மேற்குலகிற்கும் ஏற்ப இன்னொரு தளத்திலும் தமக்கான விடுதலையை நீதியை உறுதி செய்துக் கொள்ளும் வகையில் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ மக்களும் பிரதிநிதிகளும் நன்கு ஒழுங்கமைத்து திட்டமிட்டு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தின் தமிழர்களுக்கு பேரழிவின் பின்னும் ஒன்றும் இல்லை என்ற நிலை மாற வழி பிறக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை நடத்த நேரிடலாம் - ரொபர்ட் ஓ பிளக்

இலங்கை அரசாங்கம் விரும்பாவிட்டால், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த சர்வதேச குழுவொன்றை அமைப்பதற்கு உந்தப்படலாம்...

eouploader.848e4e18-73c2-4292-9f5b-be3cb3b96264.1.data.jpg

இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை நடத்த நேரிடக் கூடிய அபாயம் காணப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அதிகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஜெனீவாவில்; ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த தடவை இலங்கைக்கு எதிராக மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் சீனா, ரஸ்யா போன்ற நட்பு நாடுகள் குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்கு உதவிகளை வழங்கியிருந்தன.

சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களுக்கு அமைவான வகையில் யுத்தக் குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கமே விசாரணை நடத்துவது சாலச் சிறந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அல்லது சர்வதேச நாடுகளினால் விசரணை நடத்த நேரிடலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச தரத்தில் விசாரணை நடாத்த இலங்கை அரசாங்கம் விரும்பாவிட்டால், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த சர்வதேச குழுவொன்றை அமைப்பதற்கு உந்தப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படாது என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருந்தது. எனினும், 2002ம் ஆண்டு சமாதான உடன்படிக்கை முறிவடைந்தமைக்கான காரணிகளை அறியும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை நிறுவியுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவில்லை எனவும், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஓர் கண்துடைப்பு நாடகம் எனவும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இரண்டு தரப்பினரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நல்லிணக்கம், குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் மனித உரிமைகள் ஆகிய முக்கிய காரணிகள் தொடர்பில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/58547/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்க்குற்ற நீதிமன்றில் சிறிலங்கா நிறுத்தப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை

[புதினப்பலகை - செவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2011, 12:39 GMT ] [ கார்வண்ணன் ]

பிரிவினை கோரிய தமிழ்ப் போராளிகளுக்கு எதிரான இறுதிப்போரில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக போர்க்குற்ற விசாரணைத் தீர்ப்பாயம் ஒன்றின் முன்பாக சிறிலங்கா நிறுத்தப்படக் கூடும் என்று கூறியுள்ளார் அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்.

‘ஸ்கை நியூஸ்‘ தொலைக்காட்சிக்கு வொசிங்டனில் அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை சிறிலங்கா எதிர்கொள்ளும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.

“சிறிலங்கா அனைத்துலக ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்க- மேம்பட்ட விசாரணைகளை மேற்கொள்ளத் தவறினால் அனைத்துலக விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும்.

இந்த விடயத்தில் சிறிலங்கா அனைத்துலக தரத்துடனான விசாரணைகளை நடத்தத் தவறினால்- அனைத்துலக ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கான அழுத்தங்கள் அதிகரிக்கும்.

சிறிலங்காவுடனான நெருக்கத்தை வலுப்படுத்துவதற்கான முக்கிய விடயங்களாக நல்லிணக்கமும், பொறுப்புக் கூறுதல், மனிதஉரிமைகள் ஆகியவற்றை அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

போரின் இறுதி சில மாதங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா மதிப்பீடு செய்துள்ளது.

அதேவேளை, சிறிலங்காவை லிபியாவுடன் நான் ஒப்பிடவில்லை.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20110301103298

In the toughest warning since the end of fighting in May 2009, US Assistant Secretary of State for South and Central Asian Affairs, Robert Blake, said Sri Lanka risked a forced international investigation.

- AFP

http://news.yahoo.com/s/afp/20110301/pl_afp/srilankausdiplomacyrightswarcrimes_20110301143224

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைய கூற்று! நெடுக்ஸ் அவர்களுக்கு ஒரு பச்சை.

ஒட்டுமொத்தத் தமிழினத்தினது சுதந்திரமான வாழ்வுக்காகவே இத்தனை ஈகங்களும் அர்ப்பணிப்பகளும் அழிவுகளும். ஆனால் தாயகத்திலும் சரி, புலத்திலும் சரி, ஒன்றிணைந்து நிற்க வேண்டிய தருணத்தில் தமிழினத்தின் காவலர்கள் நாமே என்றும், எமக்கே அந்த உரிமை இருக்கிறதென்றும் ஒவ்வொரு தரப்பும் பல கூறுகளாகப் பிரிந்து நின்று இலக்கற்ற திசைகளில் பயணிக்க முனைவதானது முழுத்தமிழினத்துக்கும் பேரிழப்பாகும். எனவே மாறிவரும் அனை;துலக சூழலுக்கு இசைவாக எமது விடுதலையை வென்றெடுக்க அனைவரும் முதலில் ஒன்றுபடுவதும் செயற் திட்டங்களை வகுத்துக் காத்திரமான முறை அவரவருக்குட்டபட்ட தளங்களில் பயணிப்பதனூடாக மட்டுமே எமது விடுதலையை விரைவுபடுத்துவது சாத்தியமாகும்.

Edited by nochchi

சிறீலங்காவின் நட்பு வட்டம் முழுவதுமே.. கிளர்ச்சியின் பிடியில்.. பயத்தில் சிக்கி தவிக்கும் இந்த வேளையில்.. அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையை தமிழர்கள் தமக்கு சாதமாகப் பாவித்துக் கொள்ள வேண்டும். இரண்டு தளங்களில் இதனை செய்ய வேண்டும். தாயகத்தில் எதிரியுடனான பேரம் பேசலுக்கான ஒரு வாய்ப்பாக இதனை மாற்றி அமைக்கும் அதேவேளை அவனுக்கு முண்டு கொடுத்து நின்றவர்களின் மீதான இராஜதந்திர அழுத்தத்திற்கும்.. அதன் கீழ் பயனடைய விளையும் மேற்குலகிற்கும் ஏற்ப இன்னொரு தளத்திலும் தமக்கான விடுதலையை நீதியை உறுதி செய்துக் கொள்ளும் வகையில் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ மக்களும் பிரதிநிதிகளும் நன்கு ஒழுங்கமைத்து திட்டமிட்டு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தின் தமிழர்களுக்கு பேரழிவின் பின்னும் ஒன்றும் இல்லை என்ற நிலை மாற வழி பிறக்கும்.

நல்ல கருத்து நெடுக்கர் .... இதை யார் உணரப் போகிறோம்/பயன்படுத்தப் போகிறோம்??????? ..... நாம் இன்னும் எம்மீதே சேற்றை அள்ளி கொட்டுவதிலேயும்/மக்களை குழப்பி அடிப்பதிலேயுமே நிற்கிறோம், சிங்களம் செய்ய முடியாததை நாமே செய்து கொடுக்கிறோம் ... சாபம்!!!

இன்று அமெரிக்கா தனது வெளிவிவகார கொள்கையில் மாற்றம் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தான் மாறாவிட்டால் உலகம் தன்னை மீறி சென்றுவிடும் நிலையை உணரத்தொடங்கியுள்ளது.

இந்த மாற்றங்களுக்கு இந்தியா, சீனா கூட தமது சொந்த இருப்புக்களை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்த உலக மாற்றத்தில் மேலே உறவுகள் கூறியது போன்று நாம் ஒற்றுமையாக செயற்பாட்டின் தாயக மக்களுக்கும் ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும். பொறுப்பில் உள்ளவர்கள், ஊடகத்தினர் எல்லோரும் மக்கள் இழப்புக்களை, போராளிகள் தியாகங்களை நினைவில் நிறுத்தி உண்மையுடன் செயல்படல் வேண்டும்.

சந்தரப்பங்கள் இலகுவில் கிடைப்பதில்லை. கிடைப்பதை நழுவ விடல் கூடாது.

நிச்சயம் எமக்கு விடிவு உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

soical network கில் இணைத்துவிடுங்கள்

Edited by Muhil

சிறீலங்காவின் நட்பு வட்டம் முழுவதுமே.. கிளர்ச்சியின் பிடியில்.. பயத்தில் சிக்கி தவிக்கும் இந்த வேளையில்.. அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையை தமிழர்கள் தமக்கு சாதமாகப் பாவித்துக் கொள்ள வேண்டும். இரண்டு தளங்களில் இதனை செய்ய வேண்டும். தாயகத்தில் எதிரியுடனான பேரம் பேசலுக்கான ஒரு வாய்ப்பாக இதனை மாற்றி அமைக்கும் அதேவேளை அவனுக்கு முண்டு கொடுத்து நின்றவர்களின் மீதான இராஜதந்திர அழுத்தத்திற்கும்.. அதன் கீழ் பயனடைய விளையும் மேற்குலகிற்கும் ஏற்ப இன்னொரு தளத்திலும் தமக்கான விடுதலையை நீதியை உறுதி செய்துக் கொள்ளும் வகையில் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ மக்களும் பிரதிநிதிகளும் நன்கு ஒழுங்கமைத்து திட்டமிட்டு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தின் தமிழர்களுக்கு பேரழிவின் பின்னும் ஒன்றும் இல்லை என்ற நிலை மாற வழி பிறக்கும்.

தமிழர்களின் பிரதிநிதிகளாக அங்கீகாரம் பெற்றிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் தமது உடனடியான நேரடியான / மறைமுகமான நடவடிக்கைகளால் தேவையான திருப்பங்களை ஏற்படுத்துவார்களா?

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும்!

இதே ரொபேட் பிளேக்கை திட்டாத தமிழரில்லை.

நாளை இவர் ராஜபக்சா மிகவும் சிறந்த ஜனாதிபதி எனவும் கூறவாய்ப்புள்ளது.அப்போது பார்க்கவேண்டும் எமது தூசண பூசணங்களை.

  • கருத்துக்கள உறவுகள்

இதே ரொபேட் பிளேக்கை திட்டாத தமிழரில்லை.

நாளை இவர் ராஜபக்சா மிகவும் சிறந்த ஜனாதிபதி எனவும் கூறவாய்ப்புள்ளது.அப்போது பார்க்கவேண்டும் எமது தூசண பூசணங்களை.

அப்போ நீங்கள் யார் யார் நல்ல ஆட்கள் என்றொரு லிஸ்ட்டை தந்தீர்கள் என்றால் எங்களுக்கு வசதியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ நீங்கள் யார் யார் நல்ல ஆட்கள் என்றொரு லிஸ்ட்டை தந்தீர்கள் என்றால் எங்களுக்கு வசதியாக இருக்கும்.

இது தான் நுணாவிலான் இவர்கள் இயக்கமும் அரசியல் நடாத்தியவிதமும்.

எதை எடுத்தாலும் குண்டக்க மண்டக்க பேசுவது.....

ஒன்றுமே செய்யாது சோறுவாங்கி சாப்பிட்டுவிட்டு தூங்குவது.....

இது மாதிரி நாலு .................. தான் நாம் அழிந்தோம் அழிகிறோம். அழிவோம். இதுகளை அகற்றும்மட்டும் பாதை திறக்காது. :(:(:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே ரொபேட் பிளேக்கை திட்டாத தமிழரில்லை.

நாளை இவர் ராஜபக்சா மிகவும் சிறந்த ஜனாதிபதி எனவும் கூறவாய்ப்புள்ளது.அப்போது பார்க்கவேண்டும் எமது தூசண பூசணங்களை.

மகிந்தருக்கு எதிரான நகர்வுதனை ரணில் செய்தாலும் அது எங்களை ஆரவாரப்படுத்தும். அந்த வகையாகவேதான் இந்த பிளேக்கும். எங்கள் மனங்களை ஆரவாரப்படுத்தும் ஒவ்வொறும் உங்கள் மனக்களை எரிச்சப்படுத்தும் ஒன்று என்றும் தெரியும்தானே.

நூறு பொதுமகனின் குருதியால் ஒரு புலியின் குருதியை சிந்தவைக்கும் செயல் உங்கள் குரூரமனத்தை ஆற்றுப்படுத்தும் ஒன்று என்று நாம் அறிவோம். இத்தகைய சிந்தனைத்தளம் தமிழத்தேசியம் பேசுவதை என்னவென்று சொல்வது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ நீங்கள் யார் யார் நல்ல ஆட்கள் என்றொரு லிஸ்ட்டை தந்தீர்கள் என்றால் எங்களுக்கு வசதியாக இருக்கும்.

துலைஞ்சுது போ....இனி கொஞ்சநாளைக்கு மனிசனை இந்தப்பக்கம் காணக்கிடைக்காது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா... ஏதோ செய்யப் போகிறது[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-03 07:57:54| யாழ்ப்பாணம்]

சர்வதேச நியமங்களுக்கு அமைவாக போர்க்குற்ற விசாரணைகள் இலங்கையில் மேற்கொள்ளப்படவேண்டும் என அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசுகளும் விடுதலைப் புலிகளும் பேச்சுக்கள் நடத்தியபோது- யுத்தம் புரிந்தபோ தெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளாத அமெரிக்கா, இப்போது இலங்கை மீது அதிக கரிசனை காட்டிவருவது இங்கு நோக்குதற்குரியது.

வன்னி யுத்தம் நடைபெற்றபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசு ‘கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு’ ஒன்றை நியமித்து விசாரணைகளை மேற் கொண்டது. உலக நாடுகளையும் ஐ.நா.சபையையும் சமாளிக்கும் வகையில் அந்த விசாரணைகள் இடம்பெற்றாலும் அதனை சர்வதேசம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இலங்கைக்கான அமெரிக்காவின் மீள்அறிவுறுத்தல் நிரூபித்துள்ளது.

அதேவேளை சர்வதேச அரங்கில் நாடுகள் சிலவற்றின் ஆட்சித் தலைமைகள் சந்திக்கும் பிரச்சினைகளிலும், அந்த ஆட்சி அதிகாரத் தை அகற்றுவதிலும் அமெரிக்காவின் பங்கு காத்திரமாக இருப்பதை மறுப்பதற்கில்லை. இதன்காரணமாக மக்களின் எதிர்ப்பை சந்தித்துள்ள வெளிநாடுகளின் அரசியல் கள நிலைமைகளை இலங்கையுடன் ஒப்பிட்டு நோக்கும் அளவிற்கு உலக அரசியல் திசைதிரும்பியுள்ளது. நிலைமை இதுவாக இருக்கும்போது இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மேற் கொள்ள வேண்டும் என அமெரிக்கா கூறியிருப்பது சாதாரண விடயமன்று.

விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றிக்குப் பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் இலங்கை அரசு அசமந்தமான அணுகு முறையையே பின்பற்றி வந்துள்ளது. விடுதலைப் புலிகளை தோற்கடித்த பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படும் என்றே யுத்தத்திற்கு முன்னரும் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோதும் இலங்கை அரசு கூறி வந்தது. ஆனால் யுத்தம் வெற்றியில் முடிபடைந்த பின்னர் அரசின்போக்கு மாற்றமடைந்தது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற சர்வதேச நம்பிக்கை பலவீனப்பட்டபோது போர்க் குற்ற விசாரணைக்கான அழுத்தம் வலுப் பெற்றுள்ளது.

இதன் அடுத்த கட்டம் அமெரிக்காவின் தலையீடாக இருக்கும். அதற்கான பூர்வாங்கக் கிரிகைகளே அமெரிக்கா விடுக்கின்ற எச்சரிக்கை ஆகும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=16840

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.