Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை அழித்த சோனியாவுடன் கை கோர்க்கும் பிரித்தானிய தமிழர் போரவை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளை காட்டிக்கொடுத்து கோடிக்கண்ணகான பவுன்சுகளை தம்வசப்படுத்திய பிரித்தானிய புலிகளின் செயற்பாட்டாரளர்களான பீரிஎப் புலிகளால் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தயின் துணைவியை சந்தித்து பேசியுள்ளனராம். புலிகளின் அழிவிற்கு காரணமாயிருந்த வெளிநாட்டு சக்தி யார் என்பது இன்று சந்தேகத்தற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது.

"தமிழர் பிரச்சனையில் சோனியாவுக்கு அக்கறையுள்ளது" காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இலங்கைப் பிரச்சனை தொடர்பாக உண்மையான கரிசனைகளை கொண்டிருப்பதாக தாம் கருதுவதாக இலண்டனில் அவரை சந்தித்த உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கை அரசு ஒரு கருவியே! அதை ஏவிய இந்தியாவே புலிகளின் அழிவிற்கு காரணமாயிருந்தவர்கள் என்பதை விக்கி லீக்ஸே உறுதிப்படுத்தியுள்ளது. புலிகளை காப்பாற்ற பலர் ஐரோப்பிய அமரிக்க நாடுகள் ஊடாக முயற்சித்த போது அதற்கு தடை போட்ட இந்திய காங்கிரசினதும் சோனியாவினதும் கூட்டாளி நாராயணன் என்பது இன்று தெரிய வந்துள்ளது. அந்த நாராயணனை ஆட்டு வித்ததே இந்த சோனியா தான். அனால் இன்று இந்த சோனியாவுடன் பிரீஎப் சுரேன் 15 நிமிடம் கதைதுள்ளார். யுத்த காலத்தில் இந்தியாவிற்கு விசுவாசமாக இருந்த ஈ.என்.டீ.எல்.எப் பிரதிநிதிகளை சந்திக்க நேரம் கொடுக்காத சோனியா பீரிஎப்பிற்கு பேச நேரம் கொடுத்துள்ளார்.

புலிகள் அழிவின் மூலம் கோடிக்காணக்கான சொத்துகளை சுருட்டிய பீரிஎப் அணியினர்தான் புலிகளின் பிரித்தானிய சொத்தகளை தம் வசம் வைத்திருப்பவர்கள். புலிகள் சம்பந்தமான அனைத்து விழாக்களையும் ஏகபேக உரிமையுடன் பிரித்தானியாவில் கொண்டாடும் ஒரே நிறுவனம் இந்த பீ.ரி.எப் இவர்கள் நோர்வே நெடியவன் அணிக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள். அது மட்டுமன்றி ரீஆர் ஓவின் சொத்துகளை தன வசம் வைத்திருக்கும் ரெஜியும் இந்த கூட்டிற்குள் அடங்கும்.

சோனியவின் வரவை எதிர்த்து லண்டன் மக்கள் ஆர்ப்பாட்ட்ம் செய்த போது பின்கதவால் பீரிஎப் சோனியாவை சந்தித்து கைகுலுக்கி பேசி வந்துள்ளனர். 2009 மே மாதத்திலும் மக்கள் லண்டன் வீதிகளில் படுத்து போராட்டம் செய்த போது புலிகளின் அழிவை காட்டிக்கோடுக்கும் வேலையில் பீ.ரி.எப் இந்தியாவுடன் இணைந்து செய்துள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது. புலிகளின் தலைவரை காப்பாற்றி வன்னியில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முயன்ற அனைத்து நடவடிக்கைக்கும் முட்டுக்கட்டையாக இரந்த பீ.ரி.எப் இந்திய உளுவுப்படைக்கு இது சம்பந்தமான அனைத்து தகவல்களையும் வழங்கியுள்ளனர். இது பற்றி அண்மையில் லண்டன் வந்த ஒரு இந்திய உளவுப்பிரிவின் முக்கிய நபர் உறுதிப்படுத்தியுமுள்ளார். இவருடனான இரகசிய சந்திப்பை மேற்கொண்ட பீ.ரீ.எப் சோனியாவுடனான சந்திப்பை ஏற்படுத்தி தருமாறு கோரியுள்ளனர். புலிகளை அழிக்க உதவிய நன்றிக்கடனிற்காகவே தற்போது பி.ரி.எப் சோனியா சந்திப்பை இந்த இந்திய உளவுத்துறை செய்து கொடுத்துள்ளது.

இந்த துரோக கூட்டு பற்றிய பல உண்மைகள் வெகுவிரைவில் வெளியில் வர உள்ளது. விக்கி லீக்ஸில் வந்த உண்மைகள் உங்கள் மீளாய்விற்காக....

இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் ஒரு தீவிர தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க எதிர்ப்பாளர் என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி நாராயணன் மீண்டும் மீண்டும் தெரிவித்திருந்த கருத்துக்களின் அடிப்படையில் சென்னையில் இருந்த அமெரிக்கத் தூதரக கொன்ஸுலேட் ஜெனரலும், அதிகாரிகளும் இந்த முடிவுக்கு வந்திருந்தனர் என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்திய சமாதானப் படை இருந்த காலத்திலும், வன்னி யுத்தத்தின் போதும் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவரே நாராயணன் ஆவார்.

இலங்கை யுத்தத்தில் இந்தியாவின் பங்களிப்பைக் கையாண்டவர்கள் இவரும், தற்போதைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இந்தக் காலப்பகுதியில் இருவருக்கும் மேலதிக அதிகாரங்கள் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாராயணன் சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சியின் ஒரு பாரம்பரிய புள்ளி என்றும், பிரதமர் அலுவலகத்தில் உள்ள கேரளா மாபியா என்றும் அமெரிக்க ராஜதந்திர கேபிளில் அவர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி ராஜதந்திர கேபிளில் ஒரு பகுதி மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய புலனாய்வுச் சமூகத்தில் 40 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்டவரே நாராயணன்.

அதுமட்டுமன்றி அவர் காந்தி குடும்பத்தின் நீண்டகால விசுவாசி என்றும் அவர் பற்றி இந்த கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸ்: சர்வதேச நெருக்கடியில் இருந்து இலங்கையை காத்த இந்தியா!

கடந்த 2008-ல் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிப் போர் நின்றுவிடாத வகையில், சர்வதேச நெருக்கடிகளில் இருந்து இலங்கை அரசை இந்தியா தான் காப்பாற்றியது என வாஷிங்கடனுக்கு அனுப்பிய அமெரிக்க தூதரக கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது, 'தி' ஹிந்து' வாயிலாக வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் அம்பல ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கையில் அப்பாவி மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுப்பதற்கு பல தடவை குரல் கொடுத்த இந்திய அரசு. அதுகுறித்து தனது கவலையையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தது. அதேவேளையில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துமாறு கேட்கவே இல்லை என அமெரிக்க தூதரக கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் முடியும் தருவாயில், இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து சர்வதேச நாடுகளுடனும், அமைப்புகளுடனும் தனது கவலையைப் பகிர்ந்துகொண்டாலும், இலங்கையின் ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்கான மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தை மழுங்கடிக்கும் முயற்சியில் இந்தியா முனைப்புடன் ஈடுபட்டது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: இது எனக்கு மின்னஞ்சல் மூலம் கிடைக்கப் பெற்றது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பீபீசியில் அவரது பேட்டியை கேட்ட போதே நினைத்தேன் வசமாகமாட்ட போறார் என்று, நாங்கள் என்ன கேட்டோம், அவர் என்ன சொன்னார், இந்தியா வன்னியில் என்ன செய்தது என்பதோடு நிறுத்தி இருந்தால், அவரது வேலை முடிந்து இருக்கும், சோனியாவின் கண்ணில் அது தெரிந்தது, காதில் இது தெரிந்தது, மூக்கில் உது தெரிந்தது என்று மனோதத்துவ, உளவியல் ஆளராக மாறபோக வீண் சந்தேகம் வரும் என்று, அதுவும் இந்திய உளவுதுறையான றோவின் கட்டுபாட்டில் இருக்கும் பீபீசிதமிழுக்கு அள்ளி விட்டு இருகிறார், காங்கிரசை ஒட்டு மொத்தமாக வீழ்த்தவேனும் என தமிழகம் பொங்கி நிற்கும் நேரத்தில் உது எல்லாம் அதிகம், காங்கிரஸ் ஈரை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்கும் கட்சி, 90 இல் தமதுகட்சியின் தலைவரின் பின்பக்கத்தை மட்டும் போஸ்ரரில் அடித்து, ஆட்சி பிடித்த கட்சி. உந்த சின்ன பிட்டையே போட்டு போட்டு பெரிசாக்கி போடுவாங்கள். காங்கிரசிற்கு எதிராக விழ போகும் வாக்குகள் பிரிந்து விடுமோ என்ற ஜயத்தில் முன்றாவது கூட்டனி அமைக்காமல் அமைதிகாக்கும் வைகோ போன்றவர்களின் பொறுப்பில் சிறிதாவது இருக்க வேண்டாமோ :D

பீபீசியில் அவரது பேட்டியை கேட்ட போதே நினைத்தேன் வசமாகமாட்ட போறார் என்று, நாங்கள் என்ன கேட்டோம், அவர் என்ன சொன்னார், இந்தியா வன்னியில் என்ன செய்தது என்பதோடு நிறுத்தி இருந்தால், அவரது வேலை முடிந்து இருக்கும், சோனியாவின் கண்ணில் அது தெரிந்தது, காதில் இது தெரிந்தது, மூக்கில் உது தெரிந்தது என்று மனோதத்துவ, உளவியல் ஆளராக மாறபோக வீண் சந்தேகம் வரும் என்று, அதுவும் இந்திய உளவுதுறையான றோவின் கட்டுபாட்டில் இருக்கும் பீபீசிதமிழுக்கு அள்ளி விட்டு இருகிறார், காங்கிரசை ஒட்டு மொத்தமாக வீழ்த்தவேனும் என தமிழகம் பொங்கி நிற்கும் நேரத்தில் உது எல்லாம் அதிகம், காங்கிரஸ் ஈரை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்கும் கட்சி, 90 இல் தமதுகட்சியின் தலைவரின் பின்பக்கத்தை மட்டும் போஸ்ரரில் அடித்து, ஆட்சி பிடித்த கட்சி. உந்த சின்ன பிட்டையே போட்டு போட்டு பெரிசாக்கி போடுவாங்கள். காங்கிரசிற்கு எதிராக விழ போகும் வாக்குகள் பிரிந்து விடுமோ என்ற ஜயத்தில் முன்றாவது கூட்டனி அமைக்காமல் அமைதிகாக்கும் வைகோ போன்றவர்களின் பொறுப்பில் சிறிதாவது இருக்க வேண்டாமோ :D

சோனியா காந்தியுடன் மட்டுமல்லை சிறீலங்கா அரசாங்கத்துடனும் இரகசிய பேச்சுவார்ததை நடத்தப்படுகிறது இந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் நோர்வே இருக்கிறது.இதற்கான ஏற்பாடுகள் “சிங்கள நெட்”கூடாரத்தில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன.மா.. பேரவைகள் நாடுகடந்த அரசாங்கத்தின் ஜனநாயக அணி என்பவற்றின் உருவாக்கம் உருத்திராவை கேபியோடு சம்பந்தப்படுத்தி சேறடிப்பது இவையெல்லாம் இந்த நிகழ்ச்சி நிரலுக்கு கீழேயே அதாவது கொத்துபாயாவின் நடைபெறுகின்றன.

இன்னும் பல இரகசியங்கள் விரைவில் ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு வரும்;.

சிறீலங்கா அரசு மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் போர் குற்றம் புரிந்தார்கள் என்று ஜநா நிபுணர் குழு தீர்பளிக்கும் போது மே 18 ஐ போர்குற்றநாள் என்று பிரகனப்படுத்தியதன் பின்னணியும் வெளிச்சத்துக்கு வரும்

துயரநாட்கள் நினைவு நாட்கள் அல்லது இனப்படுகொலை நாள் என்று பிரகடனப்படுத்த வேண்டியதை போர் குற்ற நாள் என்று பிரகடனப்படுத்தியதன் பின்னணி என்ன என்று ஒவ்வொரு வரும் கேட்டுப்பார்த்தால் இந்த சதிவலை எங்கே இருக்கிறது என்பது சுலபமாக அடையாளம் காணலாம்

புலிகளை அழித்த சோனியாவுடன் கை கோர்க்கும் பிரித்தானிய தமிழர் போரவை

ஆமா .... புலிகளை அழிக்க .... இந்தியா மட்டுமா??? ... பாகிஸ்தான், பங்களாதேஸ், மாலைதீவு, அரபுநாடுகள், ரஷ்யா, உக்ரேன், இஸ்ரேல், அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் ... எது சிங்களத்துடன் கை கோர்க்கவில்லை என்று யாராவது சொங்லுங்கோவேன்???????????????????

.... அப்ப நாம் வரலாற்றில் ஒருதரோடையும் கதைக்கவும் கூடாது!!!!!!!!!!!!!!!! ஒருதரின் உதவியையும் பெறவும் கூடாது!!!!!!!!!!!!! ............... அப்படித்தானே???????????????????

.... உந்த மின்னஞ்சலுகள், இணையங்கள் நடத்துகிறதெல்லாம் ... தமிழ்த்தேசியம் எனும் பெயரில் .... சிங்களத்தின் முகவர்கல்??????????? .... என்னத்தை செய்கிறார்கள் என்றால் ஈழத்தமிழா, நீ எக்காலத்திலும் பரதேசியாகவே வாழு, என்கிறார்கள்!!!!!!!!!!!! ... சிங்களமும் இதைத்தானே விரும்புகிறது??????????????!!!!!!!!!!!!!!!! <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா .... புலிகளை அழிக்க .... இந்தியா மட்டுமா??? ... பாகிஸ்தான், பங்களாதேஸ், மாலைதீவு, அரபுநாடுகள், ரஷ்யா, உக்ரேன், இஸ்ரேல், அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் ... எது சிங்களத்துடன் கை கோர்க்கவில்லை என்று யாராவது சொங்லுங்கோவேன்???????????????????

.... அப்ப நாம் வரலாற்றில் ஒருதரோடையும் கதைக்கவும் கூடாது!!!!!!!!!!!!!!!! ஒருதரின் உதவியையும் பெறவும் கூடாது!!!!!!!!!!!!! ............... அப்படித்தானே???????????????????

.... உந்த மின்னஞ்சலுகள், இணையங்கள் நடத்துகிறதெல்லாம் ... தமிழ்த்தேசியம் எனும் பெயரில் .... சிங்களத்தின் முகவர்கல்??????????? .... என்னத்தை செய்கிறார்கள் என்றால் ஈழத்தமிழா, நீ எக்காலத்திலும் பரதேசியாகவே வாழு, என்கிறார்கள்!!!!!!!!!!!! ... சிங்களமும் இதைத்தானே விரும்புகிறது??????????????!!!!!!!!!!!!!!!! <_<

நீங்கள் சொன்னதில் எதுவும் பிழையில்லை. ஆனால் சொல்லுகிற நேரம்தான் பிழை. இந்தமுறை காங்கிரசையும் கருணாதியையும் உப்பு தின்ன வைத்தால், அடுத்தமுறை "கொஞ்சமாவது" வன்னியிலேயும் மற்ற மற்ற தமிழ் மாவட்டங்களிலும் 4 காலில்லாமல் 2 கால் விலங்குகள் இருக்குதுகள் என்று நினைவு வரும்.

எங்கட பிரச்சனை சின்னனாக இருக்கலாம் ஆனால் இப்ப இருக்கிற சமூக தொலைதொடர்பு வசதிகளை பாவித்தால் - அதுக்கென்று கொஞ்ச பேர் மினக்கெட்டால் செய்யலாம்..இந்தியாவில் இருக்கிற டெலிபோன் நம்பர், facebook கூட்டங்களுக்கு உள்ளதை சொன்னால் செய்து பார்க்கலாம். என்ன இப்ப கனபேற்ற ஸ்டைல் கத்து கத்து என்று கத்திப்போட்டு தலைகனரமாய் காலில் விழுகிறது..எகிப்தில் சோசியல் மீடியாவின் பங்கு என்று விவரணம் போடுகிற ஊடகங்கள் கனடாவில் ஹை வேய் மறித்ததை என்ன வென்று மறந்து போட்டினம்..

எங்களுக்குள் இருக்கம் புடுங்குபாடுகள் குறைந்தால் ஏதாவது செய்யலாம், ஆனால் அதற்கான பயணம் தொடங்கவே திரணியற்று இருப்பதுதான் வேதனை..

  • கருத்துக்கள உறவுகள்

<_< நாடுகடந்த தமீழீழ அரசு கே.பீ யின் ஆட்களால் நடத்தப்படுகிறது என்று முதலில் சொன்னார்கள். இப்போது உலகத் தமிழர் பேரவையும் புலிகளை அழிக்கத் துணை போனது என்கிறார்கள். இனி யாரைத் துரோகிகளாக்கப் பார்க்கிறார்கள் ?

நெடியவனைத் தவிர மற்றவர்களெல்லாம் துரோகிகளா??

ஒருவர் பேசத் தெரியாமல்ப் பேசி மூக்குடைப் பட்டால் உடனேயே பிரித்தானியத் தமிழர் பேரவை புலிகளை அழித்தார்கள் என்று சொல்லுகிறார்கள். பிரித்தானிய தமிழர் பேரவை கோடிக்கணக்கான பணம் அடித்திருந்தால், நெடியவனிடம் எவ்வளவு கோடிப் பணமிருக்கிறது ? அதென்ன அவரது சொந்தப்பணமா??

ஒருவரைச் சரியென்று நிரூபிப்பதற்காக எத்தனை பேரை துரோகிகளாக்குகிறோம் பார்த்தீர்களா??

இந்தியா எங்களுக்குச் செய்த துரோகத்தை யாரும் மறக்கவில்லை. சோனியாவும் காந்திகுடும்ப விசுவாசிகளுமே இதற்குக் காரணம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். முள்ளிவாய்க்காலில் எமதினம் படுகொலை செய்யப்பட்ட போது வெளியுலக அழுத்தங்கள் வராமலிருந்ததற்குக் காரணமே இந்தியாதான். உச்சகட்டப் படுகொலையின்போதே வெளியுலகத்தால் எமக்காதரவாக ஒரு துர்ம்பைத்தானும் அசைக்க இந்தியா விடவில்லை. அப்படியானால் இப்போதும் கூட இந்தியா விரும்பாவிட்டால் ஒரு நாய்கூட எங்களைத் திரும்பிப் பார்க்கப்போவதில்லை. நந்தியாகக் குறுக்கே நிற்கும் இந்தியாவை சமரசம் செய்து அகற்ற முடியுமானால் முயன்று பார்ப்போமே?!

இந்தியாவுடன் கதைப்பதன் மூலம்தான் எமக்கு தீர்வொன்று கிடைக்குமென்றால் அதைச் செய்வதில் தவறேதுமில்ல என்பதுதான் எனது வாதம். நாடுகடந்த அரசின் பிரதமர் கூட இந்தியாவுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதில் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

சந்தர்ப்பம் கிடைக்கும்போது சோனியாவையும் அவளது விசுவாசிகளான கேரள...நா...க்கூட்டத்தையும் நிச்சயம் நீதிமன்றில் ஏத்துவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: பிரித்தானியத் தமிழர் பேரவைக்கும் சோனியா கும்பலுக்கும் புலிகளின் தலமையைக் காட்டிக்குடுப்பதில் பங்கிருப்பதாக எந்த விக்கிலீக்கில் சொல்லப்பட்டிருக்கிறது ? உங்களுடைய சொந்த விக்கி லீக்கிலா?? அல்லது உங்களின் சர்வதேசப் புகழ் பெற்ற புலநாய்வுத்துறை கண்டு பிடித்ததா??

சோனியாவுடன் பின்கதவால் பிரித்தானிய தமிழர் பேரவை குசலம் விசாரித்தது என்று உங்கள் அரிய கண்டுபிடிப்பை நிரூபிக்க முடியுமா?? அல்லது உங்கள் நண்பரின் கற்பனைக் குதிரையின் இன்னொரு மரதனோட்டமா அது??

பிரித்தானிய தமிழர் பேரவை மட்டும்தான் தலைவரைக் கொலை செய்யச் சொல்லி சோனியாவிடம் கேட்டதா அல்லது, உலகத் தமிழர் பேரவை, இதர தமிழ் அமைப்புக்கள், மொத்தத் புலம்பெயர் தமிழினம்... இப்படி எல்லோருமே சோனியாவிடம் தலைவரைக் கொல்லும்படி வேண்டிக்கொண்டனரா?? அதையும் உங்கள் "சர்வதேச புலநாய்வுப் பொறுப்பாளரிடம்" கேட்டுச் சொல்லுங்கள்!!!

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

<_<:lol: இதில் வேடிக்கை என்னவென்றால், முதற்பகுதிக் கட்டுரையில் விக்கிலீக்கினால் அம்பலப்படுத்தப்பட்ட இந்திய வெளியுறவுத்துறையிலும், புலநாய்வுத்துறையிலும் கேரள மாபியாக்களின் அதிகார ஆட்டம் பற்றியும், அந்தக் கூட்டத்தின் தமிழின எதிர்ப்புப் பற்றியும் மட்டும்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அங்கே சோனியாவினதும் பிரித்தானியத் தமிழர் பேரவையினதும் கூட்டுச் சதி பற்றி ஒரு எழுத்தைக் கூடக் காணவில்லை.

செய்தியின் ரெண்டாம் பகுதியில் விக்கிலீக்கில் சொல்லப்படாத ஆனால் தமது சொந்த "விக்கி லீக்கில்" சொல்லப்பட்ட சோனியா - பிரித்தானியத் தமிழர் பேரவை கூட்டுப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.

"இந்தக் கூட்டுச் சதியின் ஆதாரம்" என்று கூறிவிட்டு தங்களின் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டிருக்கிறார் ஒருவர்.

முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கு முடிச்சுப் போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், இன்றுதான் அதனர்த்தம் புரிகிறது.

எழுதுவது பொய்யென்று தெரிகிறது, அதை நம்பக் கூடியவாறு எழுத முயற்சிக்கலாமே??!!!

  • கருத்துக்கள உறவுகள்

சந்தித்ததில் பிழையில்லை.ஆனால் வெறும் 10 நிமிட சந்திப்பில் அவர்கள் எங்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் உண்மையாக உறுதியாக இருக்கிறார்.என் கண்களைப் பார்த்துக் கூறினார்.நடந்த சம்பவங்களையிட்டு கவலைப்பட்டதாகக் கூறினார் என்று அவர் கூறியதைக் கூறுவதில் பிழையில்லை. ஆனால் அவர் தமிழ்மக்களின் பிரச்சனையில் உண்மையில் கரிசனையோடு இருக்கிறார் என்று தமிழ் மக்களை நம்ப வைக்க முயற்சிப்பது முற்றிலும் தவறான கண்ணோட்டமாகும்.சுரேன் நம்பியிருக்கலாம் ஆனால் நாங்கள் நம்பத் தயாராக வில்லை.போர்க் குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்குமா என்று முதல் கேள்விக்கு தன்னால் பதிலளிக்க முடியாது என்று மளுப்பல் பதில் சொன்ன சோனியாவை மடக்கி மெக்சிக்கோ கொண்டு வந்த சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஏன் எதிர்த்து வாக்களித்தது என்று ஏன் கேட்கவில்லை.பிரித்தானிய தமிழரை பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் பிரிஎப்இன் பேச்சாளர் சோனியாவிற்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்கியிருப்பது.தமிழக சட்ட மன்ற தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க வேண்டுமென்று முனைப்புடன் இருக்கின்ற தமிழக உணர்வாளர்களை சோர்வடையச் செய்வதுடன் மட்டுமல்லாமல் காங்கிரஸ் இதனை தனக்கு சாதகமாகப் பாவிக்கும்.ஏற்கனவே ஒரு தொலைக் காட்சி விவாதத்தின் போது சந்தர்பத்தை சரியாகப் பயன்படுத்தாமல் சொதப்பிய இவர் மீண்டும் சொதப்பியிருக்கிறார். பிரிஎப் இதற்கு உரிய விளக்கம் அளிக்கத் தவறின் அதன் நம்பகத்தன்மை கேள்விகுள்ளாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

சில சந்திப்புக்களை நடத்துவதும் பேரம் பேசுவதும்.. ராஜதந்திர நகர்வுகளுக்கு அவசியம்.

இந்தியா என்ற சக்தியை வெல்ல வேண்டும் என்றால்.. அதை ஆயுத ரீதியில் ஒன்றுமில்லாத நாம்.. ஆயுதத்தால் அதை செய்ய முடியாது. இந்தியா என்ற சக்தியை வெல்ல.. எதிரி பிரேமதாசாவோடு கூட்டுச் சேரும் நிலைக்கு போன காலமும் உண்டு. அதன் பின் எதிரி எதிரியாக நோக்கப்பட்டதும் உண்டு.

சோனியாவை வெல்லனும் என்றால்.. வெறும் வாய்சவடால்.. காட்டூன்கள்.. வீடியோக்கள்.. போடுவதும்.. யாழ் களத்தில்.. பேஸ் புக்கில் வெறுப்பை உமிழ்வதாலும் மட்டும் அது நடக்க முடியாது. அவரின் பலம் பலவீனம் அறிந்து அவரின் காய் நகர்த்தல்களை சரிவர கணிப்பிட்டு நாம் நகர வேண்டும். பிரபாகரன் ராஜீவ் காந்தியின் பலம் பலவீனம் அவரின் காய் நகர்த்தல்களை விளங்கிக் கொள்ள... அவரோடு சந்தித்து பேசிய தருணங்கள் உதவி இருந்தன. இன்றேல் பிரபாகரனின் அந்த மதிப்பீடு பிழையாக இருந்திருக்கும்.

எதிரிகளை வெல்ல வேண்டின் எதிரிகளின் பலம் பலவீனம் தொடர்பான தொடர்ச்சியான.. மதிப்பீடு அவசியம். அவனின் அடுத்த காய் நகர்த்தல்களுக்கான வாய்ப்புக்களை அவதானிப்பது அவசியம். தமிழர்கள் அந்த நிலையில் மிகப் பிந்தங்கி நிற்கின்றனர். ஒரு சந்திப்பை நடத்தியவுடன் துரோகி என்று சொல்வதெல்லாம் இன்று பஷன் ஆகிவிட்டது. இதனால் எமது இனத்தின் விடிவுக்கு எதுவும் ஆகப் போவதில்லை.

நாம் விலைபோகாத படிக்கு உறுதியாக இருந்து கொண்டு கொள்கைகளை விட்டுக்கொடுக்காத உறுதியை காத்துக் கொண்டு.. எதிரியை நெருங்கிப் போய் அவனை அவதானிப்பது.. கணிப்பிடுவது தவறல்ல. அதேவேளை எமது எதிரிக்கு எதிரான நகர்வுகளை நிறுத்தவோ.. தடுக்கவோ கூடாது. அவையே எதிரியை நோக்கி நாம் நெருங்க எமக்கு உதவும். எதிரி எம்மை நோக்கி வரவும் தூண்டும். எதிரியை எதிரியாக தூர வைத்திருந்தால் வெற்றி என்பது எட்டாக் கனியே..! எமது இனத்தின் விடிவும் சாத்தியமாகாது.

உ+ம்:-

நோர்வே மூலம் புலிகளை அணுகிய மேற்குலகம் அவர்களை உள்ளிருந்து மதிப்பிட்டு.. அதன் பின்னர் தான் பயங்கரவாதப் பட்டியலில் இட்டு.. அவர்கள் மீதான தமது கொள்கைகளை திணிக்க வெளிக்கிட்டனர். புலிகள் மேற்குலகை விட்டு தூர விலகி இருந்த காலங்களில் இருந்த ஆபத்தை விட மேற்குலகோடு நெருங்கிய பின் வந்த ஆபத்துக்களே அதிகம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

.

உ+ம்:-

நோர்வே மூலம் புலிகளை அணுகிய மேற்குலகம் அவர்களை உள்ளிருந்து மதிப்பிட்டு.. அதன் பின்னர் தான் பயங்கரவாதப் பட்டியலில் இட்டு.. அவர்கள் மீதான தமது கொள்கைகளை திணிக்க வெளிக்கிட்டனர். புலிகள் மேற்குலகை விட்டு தூர விலகி இருந்த காலங்களில் இருந்த ஆபத்தை விட மேற்குலகோடு நெருங்கிய பின் வந்த ஆபத்துக்களே அதிகம்.

அதாவது கூட இருந்து குழி பறிக்க வேண்டும் எண்டு சொல்லுங்கோ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol: :lol: :lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பு: இது எனக்கு மின்னஞ்சல் மூலம் கிடைக்கப் பெற்றது....

இப்பிடியான ஈமெயில் அனுப்பிற ஆட்களோடை சகவாசம் வச்சுக்காதீங்க சுடரொளி..! :D

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியான ஈமெயில் அனுப்பிற ஆட்களோடை சகவாசம் வச்சுக்காதீங்க சுடரொளி..! :D

கண்டவர்களின் கண்ணில் ஈமெயில் அட்ரசைக் காட்டாமல் இருக்கவேண்டும் ^_^

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.