Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்முலா1 2011 - Formula1 2011

Featured Replies

போர்முலா 1 போட்டிகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன.

வாகன ஓட்டப் போட்டிகளில் மிகவும் உயர்வானதாகக் கணிக்கப்படும் போர்முலா 1 போட்டிகள் இவ் வருடம் 19 நாடுகளில் நடக்கவுள்ளன (முதலாவது போட்டி Bahrain இல் நடைபெறுவதாக இருந்தது. கலவரங்களினால் அது நடைபெறவில்லை.). 12 கார் நிறுவனங்கள் பங்குகொள்ளும் இப் போட்டிகளில் தலா 2 கார் வீதம் 24 கார்கள் போட்டியிடவுள்ளன. இவ்வருடம் போட்டியிடும் 24 ஓட்டுனர்களில் 5 பேர் வெற்றிவீரர்கள் (World champion) ஆவர்.

புதிய விதிகளுக்கமைய ஒவ்வொரு நிறுவனமும் தமது கார்களைப் புதிதாக வடிவமைத்துள்ளன. முன்பில்லாதவாறு இப்போதெல்லாம் கார் ஓட்டுனர்களைவிட தொழில்நுட்பத்திற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. தெரிவுப் போட்டிகளின்போது சுமார் 5 km நீளமுள்ள ஓடுபாதையைச் சுற்றி வர எடுக்கும் நேரம் முதல் தர ஓட்டுனர்களுக்கிடையே சில நூறில் ஒரு வினாடி மட்டுமே வித்தியாசப்படும். ஆகவே இந்தக் குறுகிய நேரத்தை எப்படிக் குறைப்பது என்பதும் காரின் வேகம் இன்னொரு காரின் வேகத்தைவிட எங்கு வித்தியாசப் படுகின்றது என்பதைத் தேடி அறிந்து அதற்கேற்றவாறு காரில் மாற்றங்களைக் கொண்டு வருவதிலுமே வெற்றி தோல்வி தங்கியுள்ளது.

அநேகமாக போட்டிகளின் பரீட்சார்த்த ஓட்டம் வெள்ளிக் கிழமைகளில் ஆரம்பமாகும். வெள்ளியன்று இரண்டு மணி நேரத்திற்கு போட்டி நடைபெறும் ஓடுபாதையில் விரும்பியவாறு ஓடலாம். இந்த நாளில் பொறியியலாளர்கள் தாம் வடிவமைத்தை கார் குறிப்பிட்ட மைதானத்தில் எப்படி ஓடுகின்றது என்பதைப் பரிசோதிப்பார்கள். அதற்கேற்றவாறு காரில் சில மாற்றங்களைக் கொண்டு வருவார்கள். வெற்றி தோல்வி யாருக்கென்று பார்க்கப்படுவதில்லை. ஓட்டுனர்கள் எதிர் அணிகளுடன் தம்மை பரீட்சித்துப் பார்க்க இந்நாளைப் பயன்படுத்துவார்கள்.

சனிக்கிழமை காலையும் விரும்பியவாறு ஓடலாம். சனி பின்னேரம் ஒவ்வொரு காரின் வேகமும் கணிக்கப்படும். ஒவ்வொரு காரும் தனித் தனியாக பல தடவை ஓடுபாதையை அதி வேகமாகச் சுற்றி வர வேண்டும். ஒரு ஓட்டுனர் பல தடவை சுற்றி வந்தாலும் அவர் மிகக் குறைந்த நேரத்தில் சுற்றிவந்தது மட்டுமே குறித்துக் கொள்ளப்படும். பின்னர் அவர்களுக்குள் அதிவேகமாக ஓடியவர்களைத் தெரிவு செய்து மீண்டும் ஓடுபாதையைத் தனித் தனியாகச் சுற்றி வர வேண்டும். இவர்களில் மிகக் குறுகிய நேரத்தில் ஓடி வந்தவர் போட்டி தொடங்கும்போது முதல் வரிசையில் இடம்பெறும் தகுதியைப் பெறுகிறார். அடுத்த குறைந்த நேரத்தில் ஓடியவர்கள் இவரின் பின் வரிசைகளில் இடம்பெறுவார்கள்.

ஞாயிற்றுக் கிழமை போட்டி ஆரம்பமாகும். இரண்டு நிரைகளில் கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தைப்பட்டு, ஒரே நேரத்தில் எல்லாக் கார்களும் ஓடத் தொடங்கும். கார்கள் சுமார் 50 தரம் ஓடுபாதையைச் சுற்றி ஓடும். காரின் டயர்களை மாற்ற வேண்டுமானால் அக் கார் நிறுவனத்தின் தரிப்பிடத்திற்குச் சென்று மாற்றிவிட்டுத் தொடர்ந்து ஓடலாம். டயர் மாற்றும் நேரம் 10 வினாடிகளுக்குக் குறைவானதாகவே இருக்கும். இந்த நேரமும் வெற்றியைத் தீர்மானிப்பதாகவே இருக்கும். முன்னர் ஒரே நேரத்தில் எரிபொருளையும் நிரப்பிக் கொள்ளலாம். ஆனால் புதிய விதிகளின்படி போட்டி ஆரம்பித்ததும் எரிபொருள் நிரப்புவது தடை செய்யப்பட்டுள்ளது.

ஒரு போட்டி முடிவடைந்ததும் ஒவ்வொருவருக்கும் புள்ளிகள் வழங்கப்படும். ஏனைய 19 போட்டிகளிலும் இவாறே புள்ளிகள் வழங்கப்படும். இறுதியில் மொத்தமாக அதிக புள்ளிகளைப் பெற்றவர் உலக வெற்றியாளராகக் கொள்ளப்படுவார். அதிக புள்ளிகளைப் பெற்ற கார் நிறுவனமும் அவ்வாண்டின் சிறந்த நிறுவனமாக அறிவிக்கபப்டும்.

இவ் வருடம் யார் வெற்றிபெறுவார்கள் என்று எதிர்வுகூற முடியாத அளவிற்று கார்களில் ஒவ்வொரு நிறுவனமும் தமது கைவரிசையைக் காட்டியுள்ளன. போட்டிகள் தொடங்கினால்தான் தெரியும்.

  • Replies 67
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

போட்டிகள் நடைபெறும் இடம் - நாள் - நேரம்

1 - Bahrain BIC March 11-13 | 12:00 GMT |

2 - Australian Albert Park March 25-27 | 06:00 GMT |

3 - Malaysian Sepang April 8-10 | 08:00 GMT |

4 - Chinese Shanghai April 15-17 | 07:00 GMT |

5 - Turkish Istanbul May 6-8 | 12:00 GMT |

6 - Spanish Catalunya May 20-22 | 12:00 GMT |

7 - Monaco Monaco May 26-29 | 12:00 GMT |

8 - Canadian Gilles Villeneuve June 10-12 | 17:00 GMT |

9 - European Valencia June 24-26 | 12:00 GMT |

10 - British Silverstone July 8-10 | 12:00 GMT |

11 - German Nürburgring July 22-24 | 12:00 GMT |

12 - Hungarian Hungaroring July 29-31 | 12:00 GMT |

13 - Belgian Spa August 26-28 | 12:00 GMT |

14 - Italian Monza September 9-11 | 12:00 GMT |

15 - Singapore Singapore September 23-25 | 12:00 GMT |

16 - Japanese Suzuka October 7-9 | 06:00 GMT |

17 - Korean KIC October 14-16 | 06:00 GMT |

18 - Indian Noida October 28-30 | 08:30 GMT |

19 - Abu Dhabi Yas Marina November 11-13 | 13:00 GMT |

20 - Brazilian Interlagos November 25-27 | 16:00 GMT |

  • தொடங்கியவர்

போட்டியில் பங்குபெறும் கார் நிறுவனங்கள் :

Ferrari

Engine Ferrari

First Grand Prix 1950

Seasons 61 - Races 812 - Wins 215

Championships 16

Force India

Engine Mercedes

First Grand Prix 2008

Seasons 3 - Races 53 - Wins 0

Championships 0

HRT

Engine Cosworth

First Grand Prix 2010

Seasons 1 - Races 18 - Wins 0

Championships 0

Lotus

Engine Renault

First Grand Prix 1958

Seasons 38 - Races 509 - Wins 79

Championships 7

McLaren

Engine Mercedes

First Grand Prix 1966

Seasons 45 - Races 684 - Wins 168

Championships 8

Mercedes

Engine Mercedes

First Grand Prix 1954

Seasons 3 - Races 30 - Wins 9

Championships 0

Red Bull

Engine Renault

First Grand Prix 2005

Seasons 6 - Races 107 - Wins 15

Championships 1

Renault

Engine Renault

First Grand Prix 1977

Seasons 18 - Races 281 - Wins 35

Championships 2

Sauber

Engine Ferrari

First Grand Prix 1993

Seasons 13 - Races 216 - Wins 0

Championships 0

Toro Rosso

Engine Ferrari

First Grand Prix 2006

Seasons 5 - Races 88 - Wins 1

Championships 0

Virgin

Engine Cosworth

First Grand Prix 2010

Seasons 1 - Races 18 - Wins 0

Championships 0

Williams

Engine Cosworth

First Grand Prix 1975

Seasons 35 - Races 554 - Wins 113

Championships 9

  • கருத்துக்கள உறவுகள்

red-bull-new-car.jpg

இவ்வாண்டில் எனக்குப் பிடித்த கார். :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இவ்வாண்டில் எனக்குப் பிடித்த கார். :)

சென்ற வருடம் Champion ஆக வந்த Sebastian Vettel ஓட்டிய கார் இவ்வாண்டின் புதிய வடிவமைப்புடன். சென்ற வருடத்தைப் போன்ற வேகம் இவ்வருடமும் இருக்குமா என்று பார்க்கலாம்.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன,; போட்டி ஆரம்பித்ததும் எரிபொருள் நிரப்பமுடியாது எனக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள் இது சரியான தகவல்தானா? முன்னைய ஒழுங்குவிதிகளின்படி முதல்நாள் சோதனை ஒட்டம் நடைபெற்றபோது காரில் எந்தஅளவில் எரிபொருள் இருந்ததோ அதேஅளவிலேயே போட்டி ஆரம்பிக்கும்போதும் இருத்தல்வேண்டும் எனும் ஒழுங்குவிதியே இருந்தது, பின்பு போட்டி ஆரம்பித்தபின்னர் இடையிடையே எரிபொருள் நிரப்பிக்கொள்ளலாம் என்பதே சென்றவருடம்வரை இருந்த நடைமுறை. இம்முறை ஏதாவது மாற்றத்தினைக் கொண்டுவந்துவிட்டார்களா?

  • தொடங்கியவர்

ஆம் எழுஞாயிறு, கார் ஓட்டம் தொடங்கும் கோட்டிற்கு வந்தபின்னர் எரிபொருள் நிரப்புவது இந்த வருடத்திலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக காரின் குறைந்த நிறை 20 kg களினால் அதிகரிக்கப் பட்டுள்ளது. இது மேலதிகமாக எரிபொருளைக் கொண்டு செல்லவோ அல்லது KERS (Kinetic Energy Recovery System) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவோ உதவியாக இருக்கும். KERS என்பது கார் வேகமாக ஓடி திடீரென அதன் வேகத்தைக் குறைக்கும்போது வெளியிடப்படும் மேலதிக சக்தியைச் சேமித்து பின்னர் வேகத்தை திடீரென அதிகரிக்கும்போது சில வினாடிகளுக்கு 80 குதிரைவலு அளவிலான மேலதிக சக்தியைக் கொடுக்கும்.

220px-Flybrid_Systems_Kinetic_Energy_Recovery_System.jpg

குறைந்த எரிபொருளில் அதி உச்சமான வலுவைப் பாவிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இது எதிர்கால வாகன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவியாக இருக்குமெனக் கூறப்படுகிறது. கார்களில் பாவிக்கப்படும் எரிபொருளும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டபின்னரே பாவிக்கலாம். ஓட்டம் முடிந்த பின்னரும் காரில் எஞ்சியிருக்கும் எரிபொருளைச் சோதனையிட முடியும். இதில் கட்டாயமாக Bioethanol போன்ற மாசு விளைவிக்காத கலவை 5.75 வீதம் கலக்கப் பட்டிருக்க வேண்டும். வேறு எந்த விதமான இரசாயனப் பொருட்களும் கலப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டளவில் போர்முலா1 100 வீதம் மின்வலுலில் செலுத்த்க் கூடிய போட்டியும் நடத்தப் படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

  • தொடங்கியவர்

போட்டியில் கலந்துகொள்ளும் கார் - நிறுவனம் - ஓட்டுனர் ஆகியவை ஏராளமான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

காரின் சகல உதிரிப் பாகங்களும் குறிப்பிட்ட நீள, அகல, உயர, நிறைகளுக்கு உட்பட்டதாக இருத்த்ல் வேண்டும்.

2010%2BCosworth%2BF1%2BEngine.jpg

இயந்திரத்ததின் (Engine) முக்கிய விதிகளை எடுத்துக் கொண்டால் :

அ - 8 சிலிண்டர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் (V 90°)

ஆ - 2400 கன சென்ரிமீற்றர்களுக்கு (2400cc அல்லது 2.4 லீற்றர் ) உட்பட்டதாக இருத்தல் வேண்டும்

இ - நிமிடத்திற்கு 18000 தடவைகளுக்கு மேல் சுற்றுதல் கூடாது

ஈ - 95 kg ற்குக் குறைவான நிறையுடன் இருக்க வேண்டும்

உ - ஒரு ஓட்டுனர் 8 இயந்திரங்களை வைத்திருக்கலாம் (19 போட்டிகளிலும் ஓடுவதற்கு). பழுதுகள் வரும்போது மாற்றி ஓடலாம். அதற்குமேல் மாற்றினால் அடுத்த ஓட்டப் போட்டியின் தொடக்கத்தில் 7 இடங்கள் பின்தங்க வேண்டியிருக்கும்.

எ - .........

இந்த இயந்திரங்கள் சுமார் 700 குதிரை வலுக்கள் கொண்டவை. முன்பு 1000 குதிரை வலுக்களாக இருந்தது. இவற்றின் ஆயுட்காலம் 2000 கிலோமீற்றர்களுக்கும் குறைவானது. ஏறத்தாள 5000 உதிரிப் பாகங்களால் ஆக்கப்பட்டிருக்கும். 2013 ஆம் ஆண்டு இந்த இயந்திரங்களின் அளவு மேலும் குறைக்கப்பட உள்ளது.

Edited by இணையவன்

  • தொடங்கியவர்

நாளை அவுஸ்திரேலியா - மெல்பேணில் ஆரம்பமாகும் முதலாவது போட்டிக்கான ஆயத்தங்கள் முடிவடைந்துள்ளன. நாளை பரீட்சார்த்த ஓட்டங்கள் மட்டுமே நடைபெறும்.

428.jpg

படம் : ESPN.COM

இந்த ஓடுபாதையின் நீளம் 5.303kms

ம் இது 16 வளைவுகளைக் கொண்டுள்ளது.

88 ஆயிரம் பார்வையாளர்கள் நேரடியாகப் பார்க்க முடியும்.

நாளை வெள்ளிக் கிழமை அவுஸ்திரேலிய நேரம் 12-30 ற்கு முதலாவது பரீட்சார்த்த ஓட்டமும் 16-30 ற்கு இரண்டாவதும்

சனிக் கிழமை 14-00 மணிக்கு மூன்றாவது பரீட்சார்த்த ஓட்டமும் நடைபெறும். இவை கார்களில் ஓடுபாதைக்கேற்றவாறு இறுதி மாற்றங்களைச் செய்ய உதவும்.

சனிக் கிழமை 17-00 இல் இருந்து 17-20 வரை எல்லோரும் சில தடவை வேகமாக ஓடுவார்கள். இதில் அதி வேகமாக ஓடியவர் ஓடுபாதையை ஒரு தடவை சுற்றிவர எடுத்த நேரம் குறித்துக் கொள்ளப்படும். இவர் எடுத்த நேரத்தை விட 107 வீதத்திற்கும் அதிகமான நேரத்தில் சுற்றி வந்தவர்கள் விலக்கிக் கொள்ளப் படுவார்கள். விலக்கிக் கொள்ளப் பட்டவர்கள் போட்டி தொடங்கும்போது கடைசி நிலையிலிருந்து ஓடத் தொடங்குவார்கள். இவர்களின் எண்ணிக்கை 7 ற்கும் குறைவாக இருந்தால் வேகம் குறைவாக ஓடியவர்களில் மேலும் சிலர் நீக்கப்பட்டு மொத்தமாக 7 பேர் நீக்கப்படுவார்கள். இதை Q1 என்பார்கள்.

அடுத்து

Q2. மீதியுள்ளோர் 17-20 முதல் 17-40 வரை ஓடுவார்கள். இதிலும் வேகம் குறைவாக ஓடியவர்கள் 7 பேர் நீக்கப் படுவார்கள்.

மீதியுள்ள 10 பேர் Q3 இனை 17-40 முதல் 18-00 வரை ஓடுவார்கள். இதில் வேகமாக ஓடியவர் போட்டி ஆரம்பக் கோடில் முதலில் நிலையில் ஓடத் தகுதி பெறுவார். ஏனையவர்கள் அவர்களில் தகுதிக்கேற்ப பின்னால் நிறுத்தப் படுவார்கள்.

ஞாயிற்றுக் கிழமை போட்டி ஆரம்பிக்கும். இவ்வொடுபாதையில் 58 சுற்று ஓடி முடிக்க வேண்டும்.

ஐரோபிய நேரம் ஜாயிறு காலை 8 மணிக்கு ஐரோப்பிய தொலைக்காட்சிகளில் நேரடியாகப் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கை ஆரும் என்னதான் வெட்டிப்புடுங்கினாலும்..... உந்த கார் ரேசுகள்ளை ஒண்டில் ஜேர்மன் றைவர் வெல்லுவான் இல்லாட்டி ஜேர்மன் கார் வெல்லும்.ஜேர்மன்காரனை உங்கை ஒருத்தனாலையும் அசைக்கேலாது :wub: :wub:

கு.சா அண்ண கார் நல்ல மாதிரி இருந்தாலும் அதை ஓடுறவனுக்கும் பங்கு இருக்குமெல்லோ? ^_^

http://news.bbc.co.uk/sport1/hi/motorsport/formula_one/9434431.stm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை, கார் ஒட்டப் போட்டியை மைதானத்தில் நேரடியாக பார்க்கப் போயிருந்தேன்....

காது இரைச்சல் எடுபட, இரண்டு நாள் எடுத்தது. :D

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

உங்கை ஆரும் என்னதான் வெட்டிப்புடுங்கினாலும்..... உந்த கார் ரேசுகள்ளை ஒண்டில் ஜேர்மன் றைவர் வெல்லுவான் இல்லாட்டி ஜேர்மன் கார் வெல்லும்.ஜேர்மன்காரனை உங்கை ஒருத்தனாலையும் அசைக்கேலாது :wub: :wub:

கடந்த 5 வருடங்களில் வெற்றி பெற்றோர் விபரம் :

2005 - Fernando Alonso ( ஸ்பெயின் ) - கார் Renault (பிரான்ஸ்)

2006 - Fernando Alonso ( ஸ்பெயின் ) - கார் Renault (பிரான்ஸ்)

2007 - Kimi Räikkönen (பின்லாந்து) - கார் Ferrari (இத்தாலி)

2008 - Lewis Hamilton (இங்கிலாந்து) - கார் McLaren (இங்கிலாந்து - எஞ்சின் Mercedes - ஜேர்மனி)

2009 - Jenson Button (இங்கிலாந்து) - கார் Brawn (இங்கிலாந்து - எஞ்சின் Mercedes - ஜேர்மனி)

2010 - Sebastian Vettel (ஜேர்மனி) - கார் Red Bull (இங்கிலாந்து - எஞ்சின் Renault - பிரான்ஸ்)

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 5 வருடங்களில் வெற்றி பெற்றோர் விபரம் :

2005 - Fernando Alonso ( ஸ்பெயின் ) - கார் Renault (பிரான்ஸ்)

2006 - Fernando Alonso ( ஸ்பெயின் ) - கார் Renault (பிரான்ஸ்)

2007 - Kimi Räikkönen (பின்லாந்து) - கார் Ferrari (இத்தாலி)

2008 - Lewis Hamilton (இங்கிலாந்து) - கார் McLaren (இங்கிலாந்து - எஞ்சின் Mercedes - ஜேர்மனி)

2009 - Jenson Button (இங்கிலாந்து) - கார் Brawn (இங்கிலாந்து - எஞ்சின் Mercedes - ஜேர்மனி)

2010 - Sebastian Vettel (ஜேர்மனி) - கார் Red Bull (இங்கிலாந்து - எஞ்சின் Renault - பிரான்ஸ்)

என்ன குசா, ஒண்டும் பெரிசா ஜேர்மன் புடுங்கினதாத் தெரியேல்ல?

Edited by இணையவன்

ஒரு முறை, கார் ஒட்டப் போட்டியை மைதானத்தில் நேரடியாக பார்க்கப் போயிருந்தேன்....

காது இரைச்சல் எடுபட, இரண்டு நாள் எடுத்தது. :D

:D மணி இலையான் காதில் நுழைந்தது மாதிரி இருந்திருக்குமே?

  • கருத்துக்கள உறவுகள்

:D மணி இலையான் காதில் நுழைந்தது மாதிரி இருந்திருக்குமே?

ஓம்... குட்டி, காதுக்குள்ளை பெரிய அரியண்டமாய் இருந்தது.insekten-0044.gif

பலர் அந்த... மணி இலையான் சத்தத்தை... நேரில் கேட்பது.... தனிச் சுகம் என்று சொன்னார்கள். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா அண்ண கார் நல்ல மாதிரி இருந்தாலும் அதை ஓடுறவனுக்கும் பங்கு இருக்குமெல்லோ? ^_^

http://news.bbc.co.uk/sport1/hi/motorsport/formula_one/9434431.stm

உங்கை ஆரும் என்னதான் வெட்டிப்புடுங்கினாலும்..... உந்த கார் ரேசுகள்ளை ஒண்டில் ஜேர்மன் றைவர் வெல்லுவான் இல்லாட்டி ஜேர்மன் கார் வெல்லும்.ஜேர்மன்காரனை உங்கை ஒருத்தனாலையும் அசைக்கேலாது :wub: :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன குசா, ஒண்டும் பெரிசா ஜேர்மன் புடுங்கினதாத் தெரியேல்ல?

8750936686_michaelschumacher.jpg

அமெரிக்காவிலை இருந்துகொண்டு கனக்க முறுகாதையும்...

படத்திலை சிவப்புதொப்பியோடை இருக்கிறவர் வீட்டுக்கை போர்த்து படுத்துக்கொண்டு ஏழுதரம் உலகசம்பியன் பட்டத்தை எடுத்தவராம். ஏலுமெண்டால் நீங்களும் பண்ணிப்பாருங்கோ... நீங்கள் இருக்கிற நாடு அமெரிக்காவெல்லே.. :o .நாங்களும் கொஞ்சம் அடக்கி வாசிக்கோணும்.. :(

அதுசரி இணையவன் வெட்டுற அளவுக்கு என்னத்தை அப்பிடி எழுதினியள்????? :D

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம கார் (red bull) முன்னால ஓடிக்கிட்டு இருக்குது. ஜேர்மனி வீரரின் கையில் அது.

இங்கிலாந்து வீரர்.. கமில்ரன் இரண்டாம் இடத்தில் நிற்கிறார்.

Live Leaderboard

Position Country Driver Team

1 Germany S Vettel Red Bull

2 Great Britain L Hamilton McLaren

3 Australia M Webber Red Bull

4 Great Britain J Button McLaren

5 Spain F Alonso Ferrari

6 Japan K Kobayashi Sauber

7 Russian Federation V Petrov Renault

8 Germany N Rosberg Mercedes

9 Brazil F Massa Ferrari

10 Switzerland S Buemi Toro Rosso

11 Germany M Schumacher Mercedes

12 Spain J Alguersuari Toro Rosso

13 Mexico S Perez Sauber

14 Great Britain P Di Resta Force India

15 Venezuela P Maldonado Williams

16 Germany A Sutil Force India

17 Brazil R Barrichello Williams

18 Germany N Heidfeld Renault

19 Finland H Kovalainen Lotus

20 Italy J Trulli Lotus

21 Germany T Glock Virgin

22 Belgium J d'Ambrosio Virgin

23 Italy V Liuzzi Hispania

24 India N Karthikeyan Hispania

http://news.bbc.co.uk/sport1/hi/football/9435659.stm

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இன்று நடந்த தெரிவுப் போட்டியில் Red Bull தனது வேகத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

image11y.png

கார்த்திகேயன் கடைசி இடத்தில் நிற்கிறார். :( அவரது காரில் சில பிரச்சனைகள் இருப்பதாகத் தெரிகிறது. நேற்று நடந்த பரீட்சார்த்த ஓட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. அவரது கார் முழுமையாகத் தயார் படுத்தப் படவில்லை என்று சொன்னார்கள்.

விற்றலுக்கும் கார்த்திகேயனுக்கும் ஓடுபாதையை ஒரு தடவை சுற்றி வர எடுத்த நேரம் 10 வினாடிகளுக்கு அதிகமாக உள்ளது. இது மிக அதிகம்.

நாளை காலை ஐரோப்பிய நேரம் 8 மணிக்குப் போட்டி ஆரம்பமாகும்.

Edited by இணையவன்

  • தொடங்கியவர்

நான் மேலே குறிப்பிட்டது போலன்றி ஓட்ட விதிகளின்படி முதலாவது குறைந்த நேரத்தில் ஓடியவரை விட 107 வீதத்திற்கு அதிகமான நேரத்தில் ஓடியவர்கள் போட்டியில் பங்குபற்ற முடியாதாம்.

இதன்படி கார்த்திகேயனும் அவரது சக போட்டியாளரும் இப் போட்டியிலிருந்து நீக்கப்பட்டனர். :(

இவர்களது கார்கள் போட்டியில் பங்குபற்ற முன்னர் சரியான முறையில் தயார்படுத்தப் படவில்லை.

முன்னணியில் இருக்கும் இரண்டு Red bull கார்களும் இன்றைய ஓட்டத்தில் KERS இனைப் பயன் படுத்தவில்லையாம். இது எதிர் அணிகளுக்கிடையே சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளைய ஓட்டத்தில் இதைப் பயன்படுத்துவார்களா என்பது தெரியாது. இந்த ஓடுபாதையில் 867 மீற்றர் நீளமான பகுதி மட்டுமே நேரான பாதையாகும். இதில் மட்டுமே 300 கிலோ மீற்றர் வேகத்தைத் தாண்ட முடியும்.

காரின் பின் சிறகுகளை வேகத்திற்கேற்றவாறு திருப்புவதும் இவ்வருடம் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இவ் வேகமான பகுதியயில் ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கேற்ப அதி கூடுதலான வேகத்தில் கடப்பார்கள்.

இவ் வருடம் ரயர் ஒரு பிரச்சனையாக இருக்கு. எல்லோரும் Pirelli ரயர்களையே பாவிக்க வேண்டும். Pirelli ரயர்கள் மென்மையானவை. போட்டியில் சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு தடவை ரயர் மாற்றுவார்கள். ஆனால் Pirelli ரயர்கள் 3 அல்லது 4 தடவை மாற்ற வேண்டும் போலுள்ளது. நாளைதான் இவற்றின் தரம் தெரியும்.

Edited by இணையவன்

  • தொடங்கியவர்

நேற்று அவுஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் 23 வயதான விற்றல் இலகுவாக முதலாம் இடத்தில் வென்றார். வேறு யாரும் எதிர்க்க முடியாத அளவு 22 வினாடி இடைவெளியில் வெற்றிபெற்றார்.

93071.jpg

படம் :

ESPN.com

இடமிருந்து வலமாக Lewis Hamilton (இரண்டாம் இடம்), Sebastian Vettel (முதலாம் இடம்), Vitaly Petrov (மூன்றாம் இடம்)

நேற்றைய போட்டியில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது Petrov வின் ஓட்டம்தான். 6ஆவதாக ஆரம்பித்து 3 ஆம் இடத்தை வென்றார். இது இவரது முதலாவது வெற்றிப் படி. சென்ற வருடம் பல ஓட்டங்களில் புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் வெற்றிப் படிகளில் ஏறியது இதுவே முதல் தடவை. இவரிடம் கெட்டித்தனம் இருந்தும் சென்ற வருடம் பல பிழைகளை விட்டும் விபத்துக்கள் அடைந்தும் பல வாய்ப்புக்களை நழுவ விட்டிருந்தார். இவரே வெற்றிக் கிண்ணம் பெறும் முதலாவது ரஷ்ஷியர் என்ற பெருமையையும் பெறுகிறார். ரஷ்ஷியப் பிரதமர் Poutine மொரு போர்முலா1 பிரியர். Petrov வின் காரை சென்ற வருடம் ஓடிப் பார்த்திருந்தார். Petrov இந்த வருடம் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அரச மட்டத்தில் ஒரு கூட்டமே நடைபெற்றிருந்தது. இவர் போர்முலா1 இல் பங்குபற்றுவதற்கு மாற்றீடாக Renault நிறுவனத்துடன் ரஷ்ஷியா சில வர்த்தக உடன்படிக்கைகளையும் செய்திருந்தது.

Edited by இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.