Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரளியுடன் முன்னாள் இங்கிலாந்து அணி வீரர்கள் வடக்கிற்கு விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tuesday, March 29th, 2011 | Posted by thaynilam

முரளியுடன் முன்னாள் இங்கிலாந்து அணி வீரர்கள் வடக்கிற்கு விஜயம்

பவுண்டேஷன் ஒஃப் குட்னஸ்’ என்ற அமைப்பொன்றின் மூலம் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் ஆரம்பித்துள்ள சமுகப்பணியின் ஒருகட்டமாக, முன்னாள் இங்கிலாந்து அணி வீரர்கள் இயன் பொத்தம் மற்றும் மைக்கல் வோன் ஆகியோருடன் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குமார் சங்ககார மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் ஞாயிற்றுக் கிழமை வடக்கில் மாங்குளம் பிரதேசத்துக்கு சென்றிருந்தனர்.

வடக்கு சிறார்களிடம் கிரிக்கெட் திறமைகளை ஊக்குவிப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்ற தொனிப்பொருளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இயன் பொத்தம், வடக்கில் போரினால் ஏற்பட்டுள்ள அழிவுகளைப் பார்த்து அதிர்ந்து போனதாக பிபிசியிடம் கூறினார்.

வடக்குச் சிறார்களிடமுள்ள திறமைகள் தம்மைக் கவர்ந்ததாகவும் அவர் கூறினார்.கடந்த முப்பது வருடங்களாக தெற்கில் மக்கள் அனுபவித்த வசதிகள் வடக்கு கிழக்கு மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்ததாக இலங்கை அணித்தலைவர் குமார் சங்ககார தெரிவித்தார்.

அந்த வசதிகளை அவர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பது தமது கடமையென்றும் அவர் கூறினார். பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள இலங்கைக்கு மேற்குலக நாடுகள் உதவ முன்வரவேண்டும் என்று நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் கூறினார். இந்த உதவிகள் மூலம் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏதேனும் நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் முரளி தெரிவித்துள்ளார்.

Short URL: http://thaynilam.com/tamil/?p=4182

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் போர் அழிவைப் பார்த்து அதிர்ந்துபோன கிரிக்கெட் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குமார் சங்ககார மற்றும் முத் தையா முரளிதரன் ஆகியோருடன் முன்னாள் இங்கிலாந்து அணி வீரர்கள் இயன் பொத்தம் மற்றும் மைக்கல் வோன் ஆகியோர் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை வடக்கில் மாங்குளம் பிர தேசத்துக்குச் சென்றிருந்தனர்.

"பவுண்டேஷன் ஒஃப் குட்னஸ்' என்ற அமைப்பொன்றின் மூலம் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் ஆரம்பித்துள்ள சமுகப் பணியின் ஒரு கட்டமாக அவர்களின் பயணம் அமைந்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு சிறார்களிடம் கிரிக்கெட் திறமைகளை ஊக்குவிப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்ற தொனிப்பொருளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இயன் பொத்தம், வடக்கில் போரினால் ஏற்பட்டுள்ள அழிவுகளைப் பார்த்துத் தான் அதிர்ந்து போனார் என்று கூறினார்.

வடக்குச் சிறார்களிடமுள்ள திறமைகள் தம்மைக் கவர்ந்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த முப்பது வருடங்களாக தெற்கில் மக்கள் அனுபவித்த வ\திகள் வடக்குகிழக்கு மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்ததாக இலங்கை அணித் தலைவர் குமார் சங்ககார தெரிவித்தார். அந்த வசதிகளை அவர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பது தமது கடமையென்றும் அவர் கூறினார்.

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள இலங்கைக்கு மேற்குலக நாடு கள் உதவ முன்வரவேண்டும் என்று நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான முரளி தரன் கூறினார்

இந்த உதவிகள் மூலம் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏதேனும் நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் முரளி தெரிவித்துள்ளார்.

29 மார்ச் 2011, செவ்வாய் 6:55 மு.ப

uthayan

  • கருத்துக்கள உறவுகள்

இறால் போட்டு சுறா பிடிக்கப் போறாங்கள்.இதன் மூலம் வெளிநாட்டு உதவிகளை அப்பிடியே தென் பகுதிக்கு திருப்பப் போறாங்கள்.விளையாட்டு வீரர்கள் ஒரு பகடைக் காய்கள் மட்டுமே.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

மாங்குளத்தை சுற்றி சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டு வரும் நிலையில்.. இந்த தகவல் வந்துள்ளது. வடக்கு கிழக்கு எங்கும் போரழிவு.. பேரழிவாக இருக்க.. மாங்குளம் மட்டும் தெரிவு செய்யப்பட்டு காண்பிக்கப்பட்டுள்ளதன் பின்னணி.. மர்மம் என்ன..???!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர் நிலை... அதிர்ச்சியடைந்த இயன் போத்தம்!

செவ்வாய்க்கிழமை, மார்ச் 29, 2011, 11:38[iST]

மாங்குளம்: வட இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், சிறுவர்கள் மற்றும் அந்தப் பகுதியின் மோசமான நிலை கண்டு தான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர் இயன் போத்தம் தெரிவித்தார்.

இலங்கையின் வட பகுதியில் முத்தையா முரளிதரன் உருவாக்கவிருக்கும் சர்வதேச ஸ்போர்ட்ஸ் அகாடமி தொடர்பாக ஆராயும் நோக்கில் சர் இயன் போத்தம் மற்றும் மைக்கேல் வாகன் ஆகியோர் இலங்கைக்கு வந்துள்ளனர்.

போரில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுள் ஒன்றான மாங்குளத்துக்கு இருவரும் ஹெலிகாப்டரில் சென்றனர். அங்குள்ள மக்களை, குறிப்பாக சிறுவர்களிடம் அதிக நேரம் உரையாடினார். சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார் போத்தம். நீண்ட நேரம் அந்தப் பகுதியைப் பார்த்தபின்னர் அவர் கூறுகையில், "இலங்கையின் வடபகுதி முற்றாக சிதைந்து போயிருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெறுமையான நிலங்கள், மொட்டையாக நிற்கும் மரங்கள், குண்டு துளைத்து சிதிலமான வீடுகள்... பார்க்க மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது.

அங்குள்ள சிறுவர்கள் மிக மோசமாக பாதித்துள்ளனர். ஒரு விளையாட்டு பொம்மையைக் கூட பார்த்தறியாத அந்த சிறுவர்கள், துப்பாக்கியைத் தூக்கினார்கள் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. நிச்சயம் இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். நிதி திரட்டித் தருவது பற்றி யோசித்து வருகிறேன்," என்றார்.

போத்தம் இலங்கைக்கு புதியவரல்ல. 2004-ம் ஆண்டு சுனாமியால் அந்நாடு பெருமளவு பாதித்தபோது, இயன் போத்தம் மனிதாபிமான நோக்கில் இலங்கைக்கு பயணம் செய்து பல்வேறு உதவிகளைச் செய்தார்.

பிரிட்டனில் 1000 மைல்கள் நடந்து சென்று கோடிக்கணக்கில் நிதி திரட்டிய போத்தம், உலகில் சிறுவர்கள் நலனுக்காக அதை வழங்கியது நினைவிருக்கலாம். மீண்டும் அதுபோல ஒரு முயற்சியை போத்தம் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிகிறது.

முரளிதரன் உருவாக்கும் ஸ்போர்ட்ஸ் அகாடமி

போரினால் பாதிக்கப்பட்ட வட பகுதி தமிழ் சிறுவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் மாங்குளத்தில் விளையாட்டு அகாடமி ஒன்றை உருவாக்குகிறார் இலங்கை அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரன். பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்துடன் இணைந்த விளையாட்டு வளாகமாக இந்த அகாடமி இருக்கும்.

அவரது இந்த திட்டத்தில் போத்தம் மற்றும் வாகன் இருவரும் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த விளையாட்டு அரங்கைக் கட்டுவதற்கான பணம் முழுவதையும் வெளிநாடுகளில் திரட்ட முரளிதரன், போத்தம் மற்றும் வாகன் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து முரளிதரன் கூறுகையில், " இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆதங்கம். போர்க் காலங்களில், நெருக்கடியான நேரத்தில் கூட இவர்கள் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அளித்த ஆதரவை மறக்கமுடியாது.

உலகக் கோப்பைக்குப் பிறகு, நான் ஓய்வு பெற்றதும் வட பகுதி சிறார்களுக்கு ஒரு தரமான பள்ளியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளேன். மேலும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி மையம் ஒன்றையும், முதியோர் இல்லம் ஒன்றையும் உருவாக்கப் போகிறேன்...", என்றார்.

போர்காலத்திலும், அதற்கு பிந்தைய நாட்களிலும் தன்னை ஒரு தமிழராகவே காட்டிக் கொள்ளாமல் இருந்தவர் முரளிதரன். இப்போதுதான் முதல்முறையாக, வெளியில் வந்திருக்கிறார். இந்தத் திட்டங்களை, அரசின் ராஜபக்சே அரசின் ஆதரவோடே அவர் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தில் இலங்கையின் முக்கிய கிரிக்கெட் வீரர்களான சமிந்த வாஸ், குமார சங்ககரா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

திட்டம் நிறைவேறும்போது அந்தப் பகுதியில் தமிழர்கள் இருப்பார்களா... அல்லது முழுமையாக சிங்கள குடியேற்றம் நடந்து முடிந்திருக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

http://thatstamil.oneindia.in/news/2011/03/29/sir-ian-botham-makes-emotional-visit-lanka-aid0091.html

அப்பாடா.. நல்லவேளை... இந்த ஆட்கள் எல்லாம் இலங்கைக்கு வெளியே இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா.. நல்லவேளை... இந்த ஆட்கள் எல்லாம் இலங்கைக்கு வெளியே இருக்கிறார்கள்.

ஏன் சிங்களத்துக்கு இடைச்சல் இல்லாமல் வேலை நடக்க அது வசதியாக இருக்கும் என்றோ..!!! :unsure::o

இல்லை அண்ணை... ஏதோ இந்தப் பக்கம் வரும் ஒன்றிரண்டாவது வராமல் போய்விடுமோ என்று!

உங்களுக்குத் தெரியுமா அண்ணை... இன்றுவரை யாழ்ப்பாணத்தின் லான்ட்மார்க் என்று காட்டக்கூடிய இடம் துரையப்பா விளையாட்டரங்கு மாத்திரம்தான் என்று! அந்தத் துரையப்பா யார் என்று கேட்டால் கதை கந்தலாகிப் போகும். உங்கள் பிள்ளைகள் விளையாடுவதற்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் நல்ல மைதானங்கள் இருக்கின்றனவா அண்ணை?

சிங்கள இராணுவ மயமாக்கலை நிறுத்திவிட்டு சிங்களப் படைகளை தமிழர் பாரம்பரிய மண்ணில் இருந்து அகற்றிவிட்டு.. திட்டமிட்ட அரச ஆதரவு சிங்களக் குடியேற்றங்களை நிறுத்திவிட்டு.. தமிழீழத் தனியரசை அமைக்கவிட்டிட்டு.. இந்தக் கேள்வியை கேளுங்கள்... உங்களுக்கு சர்வதேச தரத்தில் நிறைய லான்மார்க்குகளை காட்டுகின்றோம். எமது வீரமரபின் சின்னங்களாக இருந்த மாவீரர் இல்லங்களையே தகர்த்தழித்தவனிடம் போய் கேட்க முடியுமா.. அந்த லார்மாக்குகளை காட்டு என்று..??????????????!

சிங்களவனே பிச்சை எடுத்து எங்களுக்கு எதுவும் தர வேண்டியதில்லை. எங்களை எங்கள் பாட்டில் வாழ விடட்டும். அதுபோதும். இல்ல தன்னோடு தான் சேர்ந்து வாழனும் என்றால் மாங்குளத்தை மட்டும் அபிவிருத்தி செய்வதை விட்டு அபிவிருத்தியை போரழிவு கண்ட பிரதேசமெங்கும் சமாத்திரமாக சம அளவில் மேற்கொள்ள வேண்டும். மாங்குளத்தை மட்டும் குறிவைப்பதும் அதைச் சுற்றி சிங்கள மயமாக்கலை மேற்கொண்டு நிலங்களை அரசே கபளீகரம் செய்வதும் அங்கீகரிக்கக் கூடிய லாண்ட்மார்க் ஆகாது. :(:o

Edited by nedukkalapoovan

அண்ணை... நான் உண்மையாகத்தான் கேட்கிறேன். நான் யாழ். இந்துவில் படித்தேன். என்னுடைய காலத்தில் இதே துரையப்பா விளையாட்டரங்குதான். இப்போது எனது மகன் அதே யாழ். இந்துவில் 7ம் வகுப்பு படிக்கிறான். இப்பவும் அதே துரையப்பா விளையாட்டரங்குதான். என்னுடைய மகன் க.பொ.த. உயர்தரம் முடித்து வெளியே போகுமுன் ஏதாவது நடக்குமா? அப்படியான சூழ்நிலைகள் ஏதாவது இருக்கா? நம்பிக்கை ஒளி தெரியுதா?... இல்லாவிட்டால் பேரனுக்கும் துரையப்பா அரங்குதானா?

அண்ணை... இல்லாவிட்டால் இன்னொரு யோசனை. இப்ப விளையாட்டரங்கை அவர்கள் கட்டட்டும். நீங்கள் ஈழம் எடுத்துத் தரும்போது சிங்களவர்கள் கட்டியதை கிண்டி எடுத்துக்கொண்டா போகமுடியும்? அப்ப அதை எடுத்துக் கொள்ளலாம். அதை அப்படியே விட்டுவிட்டு போக பாதிக்குப் பாதி சந்தர்ப்பம் இருக்கு. ஒருவேளை பவிலியனுக்கு வெடி வைத்துவிட்டுப் போனால் ஏற்கனவே கட்டடம் கட்டிய இடத்தில் கட்டித்தர மாட்டீர்களா? முதலில் இருந்து கட்டுவதைவிட செலவு குறைவுதானே!

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை... நான் உண்மையாகத்தான் கேட்கிறேன். நான் யாழ். இந்துவில் படித்தேன். என்னுடைய காலத்தில் இதே துரையப்பா விளையாட்டரங்குதான். இப்போது எனது மகன் அதே யாழ். இந்துவில் 7ம் வகுப்பு படிக்கிறான். இப்பவும் அதே துரையப்பா விளையாட்டரங்குதான். என்னுடைய மகன் க.பொ.த. உயர்தரம் முடித்து வெளியே போகுமுன் ஏதாவது நடக்குமா? அப்படியான சூழ்நிலைகள் ஏதாவது இருக்கா? நம்பிக்கை ஒளி தெரியுதா?... இல்லாவிட்டால் பேரனுக்கும் துரையப்பா அரங்குதானா?

நானும் அதே யாழ் இந்துவில் தான் படித்தேன். துரையப்பா விளையாட்டு அரங்கு என்ற ஒன்றுக்கு போனதே இல்லை. எனக்கு பொன்னம்மான் பூங்காவும்.. கிட்டு பூங்காவும்.. திலீபன் அண்ணாவின் தூபியும்.. சங்கிலியன் சிலையும் தான் லாண்ட்மார்க். கல்லூரி வீதி.. கஸ்தூரியார் வீதிச் சந்தியில் இருந்த போராளிகள் ஞாபகார்த்த சின்னம் எங்கே...??????????!

எங்கள் காலத்தில் யாழ் நூலகமே இல்லை. துரையப்பா விளையாட்டரங்கு இல்லை. யாழ் கோட்டை சிங்கள கூடாரம். சிங்களப் படைகளின் செல்களும்.. சகடை விமானங்களின் பீக்குண்டு பரல்களும்.. சியாமா செட்டி கொட்டிய குண்டுகளும்.. கண்ணிவெடிகளும் தான் அங்கு விளையாடின. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் சிவப்பு குறஸ் தான் எங்களுக்கு சிங்களம் காட்டிய லாண்ட்மார்க்.

மிச்சம் எல்லாம் எமக்கு லாண்ட்மார்க்காக இருக்கவும் இல்லை. இருக்கப் போவதும் இல்லை. அது சிங்களவர்களுக்கு என்றால் லாண்ட்மார்க்காக இருக்கலாம். எமக்கு அவை சிங்களப் பயங்கரவாதத்தின் அடையாளமாக பயங்கரங்களின் நினைவிடங்களாகவே இருக்கும்.

நாங்கள் வரலாற்றை மறக்கமாட்டோம். சிங்களவனை மன்னிக்கவும் மாட்டோம். எங்களுக்கு சிங்களவன் லாண்ட்மார்க் கட்ட வேண்டிய அவசியமில்லை. எங்கள் தேசத்தை விட்டு அந்தப் பிசாசுகள் போனாலே காணும். அதுவே பெரிய லாண்ட்மார்க். :)

இதற்கு நான் என்ன சொல்வது? நீங்கள் அங்கேயிருந்து எழுதுகிறீர்கள். ஒரு 3 மாதமாவது இங்கே வந்து எங்களுடன் இருந்துவிட்டுப் போங்கள். எங்களது உணர்வுகள் புரியும். நீங்கள் சொன்னதெல்லாம் 95ம் ஆண்டுடன் போய்விட்டன. இப்போது இங்கு படிக்கும் பிள்ளைகள் அனைவரும் அதற்குப் பிறகு பிறந்தவர்களே. எங்களுடைய காலம் இன்னமும் ஒரு 20 வருடம். அதற்குப்பின் இங்கே இருக்கப்போகும் அனைவருமே 95க்குப் பிறகு பிறந்தவர்களாக இருப்பார்கள்.

நாங்கள் சங்கிலியனுக்கு மிக நீண்ட காலத்துக்குப் பின் தான் பிறந்தோம். 16 ஆண்டுகளுக்குள் சொந்த வரலாற்றை சொந்த தலைமுறைக்கு எம்மால் காவிச் செல்ல முடியவில்லை.. ஆனால் எத்தனையோ 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சங்கிலியனை.. நாம் சரியாக இனங்காணவில்லையா.

எம்மால் எமது 16 ஆண்டுக்கு முன்னாலான வரலாற்றை 1000 தலைமுறைக்கும் காவிச் செல்ல முடியும். புலம்பெயர் நாடுகளில் பிறந்த பிள்ளைகளுக்கே அந்த வரலாறு தெரியும் போது.. வரலாற்றை படைத்த மண் அதை மறந்து நிற்பதற்கு காரணம்.. எதிரியின் ஆக்கிரமிப்பு மட்டுமே ஆகும். அவன் இருக்கும் வரை எமது வரலாறு மறைக்கப்படுவது நடக்கும். அதையும் தாண்டி.. நாவலர் ஆங்கிலேயர் காலத்தில் சைவமும் தமிழும் வளர்த்தது போல யாரும் வந்து ஏதாவது செய்தால் அன்றி.. உங்களைப் போன்றவர்களே எதிரியோடு சேர்ந்து வரலாற்றை மறக்கச் செய்திடுவீர்கள் போல இருக்கே..! :unsure::o:)

எங்களைப் போன்றவர்களால் ஒரு வரலாற்றை மறக்கச் செய்ய முடியுமென்றால் அது வரலாறே இல்லை!

நீங்கள் அவசியம் இங்குள்ள இளைய தலைமுறையினருடன் பேசிப்பார்க்க வேண்டும். பேசிப் பார்ப்பதென்றால் போனில் அல்ல... அவர்களுடன் ஒரு நண்பனைப்போல பேசிப் பாருங்கள். அவர்களுக்கு எந்தளவு விடயம் தெரியும்... அவர்களது கோணம் என்ன... மனப்போக்கு என்ன... என்று தெரிந்து கொள்ளலாம்.

அண்ணை... என்னிடமும் ஒரு வெளிநாட்டுப் பிரஜாவுரிமை இருக்கிறது. அதை மூட்டைகட்டி வைத்துவிட்டுத்தான் நான் இங்கு என் பிள்ளைகளை வளர்க்கிறேன். ஆதுவும் தற்போதுள்ள சுலபமான காலத்தில் வரவில்லை... யுத்தம் நடந்த காலத்திலிருந்தே இங்கே இருக்கிறேன்.

Edited by Raja Senthooran

இதற்கு நான் என்ன சொல்வது? நீங்கள் அங்கேயிருந்து எழுதுகிறீர்கள். ஒரு 3 மாதமாவது இங்கே வந்து எங்களுடன் இருந்துவிட்டுப் போங்கள். எங்களது உணர்வுகள் புரியும். நீங்கள் சொன்னதெல்லாம் 95ம் ஆண்டுடன் போய்விட்டன. இப்போது இங்கு படிக்கும் பிள்ளைகள் அனைவரும் அதற்குப் பிறகு பிறந்தவர்களே. எங்களுடைய காலம் இன்னமும் ஒரு 20 வருடம். அதற்குப்பின் இங்கே இருக்கப்போகும் அனைவருமே 95க்குப் பிறகு பிறந்தவர்களாக இருப்பார்கள்.

இப்ப என்ன சொல்ல வாறியள் அண்ணை நீங்கள் இப்ப நிம்மதியாக இருக்கிறீயள் எண்டே ....??? உங்கை உங்களுக்கு எந்த அடக்கு முறையோ, இல்லை எந்த பயமும் இல்லாமல் வாழுகிறீர்களோ....??

உது தான் சுந்தந்திரம் எண்டு உங்களை போல சிலபேர் நினைச்சுக்கொண்டு இதுவே போதும் எண்டது கிணத்து தவளையின் நிலை... !

உதை எல்லாரும் பெற்று கொண்டு வாழட்டும் எண்டு சொல்லும் கூட்டம் எதை இதுக்கும் மேலை சாதிக்கும் எண்டுறீயள்....???

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

எங்களைப் போன்றவர்களால் ஒரு வரலாற்றை மறக்கச் செய்ய முடியுமென்றால் அது வரலாறே இல்லை!

நீங்கள் அவசியம் இங்குள்ள இளைய தலைமுறையினருடன் பேசிப்பார்க்க வேண்டும். பேசிப் பார்ப்பதென்றால் போனில் அல்ல... அவர்களுடன் ஒரு நண்பனைப்போல பேசிப் பாருங்கள். அவர்களுக்கு எந்தளவு விடயம் தெரியும்... அவர்களது கோணம் என்ன... மனப்போக்கு என்ன... என்று தெரிந்து கொள்ளலாம்.

அண்ணை... என்னிடமும் ஒரு வெளிநாட்டுப் பிரஜாவுரிமை இருக்கிறது. அதை மூட்டைகட்டி வைத்துவிட்டுத்தான் நான் இங்கு என் பிள்ளைகளை வளர்க்கிறேன். ஆதுவும் தற்போதுள்ள சுலபமான காலத்தில் வரவில்லை... யுத்தம் நடந்த காலத்திலிருந்தே இங்கே இருக்கிறேன்.

சொந்த மண்ணின் வரலாறு சொல்லும் அளவுக்கு சரியான ஆட்கள் மண்ணை ஆளாது எதிரி அதனை ஆள்வது

தான் பிரச்சனையே அன்றி வேறில்லை.

எதிரிக்கு எழுதப்படும் முடிவில் தான்.. வரலாறு நீள்வதும் சுருங்குவதும் இருக்கிறது. இளைய தலைமுறையை கையாள வேண்டிய வழியில் கையாண்டால் வரலாறு தன்பாட்டில் அவர்களாலும் படிக்கப்படும் இயற்றப்படும். :) :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Tuesday, March 29th, 2011 | Posted by thaynilam

முரளியுடன் முன்னாள் இங்கிலாந்து அணி வீரர்கள் வடக்கிற்கு விஜயம்

அந்த வசதிகளை அவர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பது தமது கடமையென்றும் அவர் கூறினார். பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள இலங்கைக்கு மேற்குலக நாடுகள் உதவ முன்வரவேண்டும் என்று நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் கூறினார். இந்த உதவிகள் மூலம் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏதேனும் நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் முரளி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இனப்பிரச்சினையே இல்லை. தமிழருக்கு எல்லா உரிமைகளும் இங்கு சமமாக உண்டு என்று கருத்துக்கூறிய முரளிதரன் இன்று போரினால் பாதிக்கப்பட்ட பகுதி என்று ஒன்றை எதற்காக கையில் எடுக்கவேண்டும்....? :(

அண்ணை... என்னிடமும் ஒரு வெளிநாட்டுப் பிரஜாவுரிமை இருக்கிறது. அதை மூட்டைகட்டி வைத்துவிட்டுத்தான் நான் இங்கு என் பிள்ளைகளை வளர்க்கிறேன். ஆதுவும் தற்போதுள்ள சுலபமான காலத்தில் வரவில்லை... யுத்தம் நடந்த காலத்திலிருந்தே இங்கே இருக்கிறேன்.

அவ்வளவு நாட்டுப்பற்றோ அண்ணைக்கு.....?

உண்மையில் புல்லரித்துப்போய்த்தான் கேட்கின்றேன்.

இலங்கையில் இனப்பிரச்சினையே இல்லை. தமிழருக்கு எல்லா உரிமைகளும் இங்கு சமமாக உண்டு என்று கருத்துக்கூறிய முரளிதரன் இன்று போரினால் பாதிக்கப்பட்ட பகுதி என்று ஒன்றை எதற்காக கையில் எடுக்கவேண்டும்....? :(

அவ்வளவு நாட்டுப்பற்றோ அண்ணைக்கு.....?

உண்மையில் புல்லரித்துப்போய்த்தான் கேட்கின்றேன்.

அண்ணை... ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விஷயத்தில் Priority. நீங்கள் வெளிநாட்டில் இருப்பது உங்கள் Priority. அது உங்கள் சொந்த விஷயம். நான் கேட்பது நாகரீகமில்லை. நான் இங்கே வசிப்பது எனது மற்றும் எனது குடும்பத்தின் Priority. நீங்கள் புல்லரித்துப்போய் கேட்பதால் கூறுகிறேன். எனது குழந்தைகளின் ஆரம்பம் இந்த நாட்டில் இருக்க வேண்டும் என்பது எனது மற்றும் எனது குடும்பத்தினரின் முடிவு. வளர்ந்தபின் பிள்ளைகளின் விருப்பம். இங்கு விரும்பினால் இருக்கலாம் அல்லது வெளிநாட்டுப் பிரஜாவுரிமையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை. போதுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இனப்பிரச்சினையே இல்லை. தமிழருக்கு எல்லா உரிமைகளும் இங்கு சமமாக உண்டு என்று கருத்துக்கூறிய முரளிதரன் இன்று போரினால் பாதிக்கப்பட்ட பகுதி என்று ஒன்றை எதற்காக கையில் எடுக்கவேண்டும்....? :(

அண்ணா முரளி ஒரு தமிழனாகவோ அல்லது சிங்களவாகவோ இந்த மைதானத்தை கட்ட முன் வரவில்லை.அவர் ஒரு விளையாட்டு வீரரான படியால் தான் மைதானம் கட்ட முன் வந்தார்...உங்கள் பிள்ளைகள் அங்கே போய் விளையாட மாட்டார்கள் ஆனால் அங்கிருக்கும் எமது சந்ததியினருக்கு அந்த மைதானம் தேவையாய் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை... ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விஷயத்தில் Priority. நீங்கள் வெளிநாட்டில் இருப்பது உங்கள் Priority. அது உங்கள் சொந்த விஷயம். நான் கேட்பது நாகரீகமில்லை. நான் இங்கே வசிப்பது எனது மற்றும் எனது குடும்பத்தின் Priority. நீங்கள் புல்லரித்துப்போய் கேட்பதால் கூறுகிறேன். எனது குழந்தைகளின் ஆரம்பம் இந்த நாட்டில் இருக்க வேண்டும் என்பது எனது மற்றும் எனது குடும்பத்தினரின் முடிவு. வளர்ந்தபின் பிள்ளைகளின் விருப்பம். இங்கு விரும்பினால் இருக்கலாம் அல்லது வெளிநாட்டுப் பிரஜாவுரிமையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை. போதுமா?

நீங்கள் ஊரில் போய் பிள்ளை வளர்ப்பதன் தார்ப்பரியத்தை நான் கேட்கவில்லை.

ஆனால் வேற்று நாட்டு பிரஜாஉரிமையும் என்னிடமுள்ளது என்று எமக்கெழுதுவதன் உள்குத்து எதற்காக....? :(

இப்ப என்ன சொல்ல வாறியள் அண்ணை நீங்கள் இப்ப நிம்மதியாக இருக்கிறீயள் எண்டே ....??? உங்கை உங்களுக்கு எந்த அடக்கு முறையோ, இல்லை எந்த பயமும் இல்லாமல் வாழுகிறீர்களோ....??

உது தான் சுந்தந்திரம் எண்டு உங்களை போல சிலபேர் நினைச்சுக்கொண்டு இதுவே போதும் எண்டது கிணத்து தவளையின் நிலை... !

உதை எல்லாரும் பெற்று கொண்டு வாழட்டும் எண்டு சொல்லும் கூட்டம் எதை இதுக்கும் மேலை சாதிக்கும் எண்டுறீயள்....???

அண்ணை... நான் சொல்ல வருவது சத்தியமாய் உங்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் இருக்கும் சூழ்நிலையில் உங்களுக்குப் புரியவும் சந்தர்ப்பம் இல்லைத்தான். ஏனென்றால் நானும் அப்படியொரு சூழ்நிலையில் முன்பு இருந்திருக்கிறேன். பரவாயில்லை. இன்னொருமுறை முயன்று பார்க்கிறேன்.

அடக்குமுறையோ.. சுதந்திரம் இல்லையோ.. இங்கேயும் தமிழ் மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அவ்வளவுபேரையும் இங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு நீங்கள் தமிழீழம் எடுத்தபின் மீண்டும் இங்கே கொண்டுவருவது நடக்கக்கூடிய காரியமல்ல.

அப்படி இங்கிருக்கும் மக்களின் இளைய தலைமுறைக்கு நீங்களும் நானும் பேசும் விஷயம் சிதம்பர சக்கரம் என்பதைத்தான் சொல்ல முயன்றிருக்கிறேன்.

கடந்தவாரம் ஒரு மாணவர் குழுவுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் கதையோடு கதையாகக் கூறிய சில பழைய நிகழ்வுகள் (இயக்கங்கள் அரசியல் பற்றிய கதைகள்) பற்றி அவர்கள் அறியவே இல்லை. காரணம் அவர்களில் யாரும் 95க்கு முன் பிறக்கவே இல்லை. இப்படியொரு தலைமுறை இங்கு இருக்கக்கூடாது என்று எனக்கும் உங்களைப்போல விருப்பம்தான். ஆனால் யதார்த்தம் அதுவல்ல. இவர்களின் உலகம் வேறு. அந்த உலகம் இவர்கள் பிறந்ததிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் உலகம். இன்னமும் ஒரு 5 வருடம் போனால் இவர்கள்தான் பெரும்பான்மை!

எனக்கு நீங்கள் எழுதும் எழுத்துக்களில் இருக்கும் கிண்டல் அல்லது இடக்கு மிக நன்றாகவே புரியும். அப்படியிருந்தும் இவ்வளவு விலாவாரியாக ஏன் சொல்கிறேன் தெரியுமா? ஒருகாலத்தில் நானும் நீங்கள்தான்!

நீங்கள் ஊரில் போய் பிள்ளை வளர்ப்பதன் தார்ப்பரியத்தை நான் கேட்கவில்லை.

ஆனால் வேற்று நாட்டு பிரஜாஉரிமையும் என்னிடமுள்ளது என்று எமக்கெழுதுவதன் உள்குத்து எதற்காக....? :(

உள்குத்து! ஐயா... ஆளை விடுங்கள்.. நானும் நீங்களும் இருப்பது வெவ்வேறு அலைவரிசையில்! நான் சரண்டர். சத்தியமாய் நீங்கள் வெற்றி!

ராஜா செந்தூரன்,

யாழில் பலர் எதை எழுதினாலும் பொறுப்பார்கள் தாங்கள் நாட்டைவிட்டு ஓடிவந்ததுபற்றி எழுதினால் பொத்துக்கொண்டுவந்துவிடும்.

நாட்டில் இருந்து உயிரை விட்டபோராளிகளை விட தாங்கள் தான் கஸ்டப்பட்டது போல் எழுதுவார்கள்.இவர்கள் கதை சொல்லி மாளாது.தற்செயலாக வெளிநாட்டில் சொகுசாக இருக்கின்றீர்கள் அல்லது உயிருக்கு பயமில்லைத்தானே என்று கருத்துவைத்தால் துலைந்துது.

வீடு,வேலை,குடும்பம்,பிள்ளைகுட்டியின் படிப்பு,அதைவிட சேமிப்பு எல்லாம் அந்த மாதிரி அலுவல்பார்த்துவிட்டு ஒரு அரைமணி நேரம் வந்து இணையத்தில் நாட்டில இருந்து போராடினவர்களை விட தாங்கள் தான் ஏதோ தேசியத்திற்காக உயிரை விடுகின்றார்களாம்.

நாட்டில இப்ப என்ன நடக்கின்றதென்றே தெரியாது அதற்குள் வந்து சங்கிலியனையும் பொன்னம்மானையும் ஒப்பிட்டு கணக்கு விடுகின்றார்கள்.நானும் யாழ் இந்துதான் இந்துவுக்காக பொன்னம்மான் பல வருடங்களின் பின் கிரிக்கெட்டில் 100 ரன்கள் அடிக்கும் போது கைதட்டி ரசித்தவன் தான்.மாவீரர்களை மதியுங்கள் அதற்காக சரித்திரத்தையே மாத்திவிடாதீர்கள்.

இது வடிவேலுவின் கறுப்பு எம்.ஜீ.ஆர், கறுப்பு நேரு பகிடிமாதிரி இருக்கு.

என்ன ராசா

புது ஆள் என்பதற்கான வகுப்பெடுத்தலா இது...???

நடக்கட்டும் நடக்கட்டும் :(

அண்ணை... நான் சொல்ல வருவது சத்தியமாய் உங்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் இருக்கும் சூழ்நிலையில் உங்களுக்குப் புரியவும் சந்தர்ப்பம் இல்லைத்தான். ஏனென்றால் நானும் அப்படியொரு சூழ்நிலையில் முன்பு இருந்திருக்கிறேன். பரவாயில்லை. இன்னொருமுறை முயன்று பார்க்கிறேன்.

அடக்குமுறையோ.. சுதந்திரம் இல்லையோ.. இங்கேயும் தமிழ் மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அவ்வளவுபேரையும் இங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு நீங்கள் தமிழீழம் எடுத்தபின் மீண்டும் இங்கே கொண்டுவருவது நடக்கக்கூடிய காரியமல்ல.

அப்படி இங்கிருக்கும் மக்களின் இளைய தலைமுறைக்கு நீங்களும் நானும் பேசும் விஷயம் சிதம்பர சக்கரம் என்பதைத்தான் சொல்ல முயன்றிருக்கிறேன்.

கடந்தவாரம் ஒரு மாணவர் குழுவுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் கதையோடு கதையாகக் கூறிய சில பழைய நிகழ்வுகள் (இயக்கங்கள் அரசியல் பற்றிய கதைகள்) பற்றி அவர்கள் அறியவே இல்லை. காரணம் அவர்களில் யாரும் 95க்கு முன் பிறக்கவே இல்லை. இப்படியொரு தலைமுறை இங்கு இருக்கக்கூடாது என்று எனக்கும் உங்களைப்போல விருப்பம்தான். ஆனால் யதார்த்தம் அதுவல்ல. இவர்களின் உலகம் வேறு. அந்த உலகம் இவர்கள் பிறந்ததிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் உலகம். இன்னமும் ஒரு 5 வருடம் போனால் இவர்கள்தான் பெரும்பான்மை!

எனக்கு நீங்கள் எழுதும் எழுத்துக்களில் இருக்கும் கிண்டல் அல்லது இடக்கு மிக நன்றாகவே புரியும். அப்படியிருந்தும் இவ்வளவு விலாவாரியாக ஏன் சொல்கிறேன் தெரியுமா? ஒருகாலத்தில் நானும் நீங்கள்தான்!

இளைய தலைமுறை எண்டு நீங்கள் யாரை சொல்கிறீர்கள் எண்டு விளங்க இல்லை.... ! உங்களை விட அனேகமான அதிகமான இளையவர்களை எனக்கு தெரியும் எண்டு என்னாலை சொல்ல முடியும்.... ! அதுவும் இண்டைக்கும் அங்கை வசிப்பவர்கள்.... ! காரணம் எனக்கு உறவுகளின் எண்ணிக்கையும் அவர்களுக்கு நானும் எனது உறவுகளும் சேர்ந்து செய்ய வேண்டிய உதவிகளின் அளவும் அவ்வளவு... அதனால் தொடர்புக்களும் அதிகம்...

மற்றது நீங்கள் சொன்ன சம்பவங்களை மாணவர்கள் அறியவில்லை என்பது அவர்களுக்கு எதையுமே அறியாதவர்கள் எனும் வகைக்குள் அடக்க முயல்வது உங்களின் அறியாமையே.... அதை அவர்கள் அறிந்து கொள்ள அவர்களுக்கு சில மணித்துளிகள் போதும்...

அவர்களுகளுக்கு எது தெரிந்து இருக்க வேண்டுமோ அவை தெரிந்து இருக்கின்றது... பழைய சம்பவங்கள் அவர்களை புடம் போட மட்டும் உதவுமே அண்றி உணர்வு கொள்வதுக்கு தேவையானது இல்லை... ! மாணவர்கள் ஊரில் பிரச்சினை இருக்கிறது எண்று அறிந்து இருக்கிறார்களா இல்லையா இதுதான் இருக்கும் கேள்வி...??? என்ன பதில் சொல்ல போறீர்கள் இல்லை எண்டா....?? இல்லை உங்கட பிள்ளையளுக்கு தெரியவில்லை எண்டதுக்காக யாருக்கும் தெரியவில்லை எண்டு சாதிக்க போகிறீர்களோ....??

இண்டைக்கும் அனேகரின் பிரச்சினையாக இருப்பது ஒரு பிரச்சினைக்கும் போகாமல் விலகி நிக்க வேண்டும் அனியாயமாக சாக கூடாது . என்பதுதானாக இருக்கிறதே அண்றி பிரச்சினையே இங்கை( இலங்கையில்) இல்லை என்பதாகவோ இல்லை இருக்கும் பிரச்சினையை விளங்கி கொள்ளாமை இல்லை... உங்களால் அவர்களை புரிய முடியவில்லை என்பது தான் எனக்கு புரிய முடிவது...

வெளிநாட்டில் இருந்து காசு மட்டும் அனுப்பி உங்களை கொழுக்க வைக்க மட்டும் தான் தமிழர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள் எனும் மன நிலையில் ஊறிய உங்களை போண்ற ஆக்களிட்டை இதை விட பெரிசா எதையும் எதிர்பார்க்க முடியாதுதானே....??

உங்கட பிரச்சினை என்ன ? எங்கட சில்லறை வேணும் ஆனால் பிரச்சினைக்கு தீர்வுக்காக முன்னெடுப்புக்களை செய்யக்கூடாது அதுதானே... அதை வெளிப்படையாக சொல்லுங்கோவன்....

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.