Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விளையாட்டில் விளையாடப்போகும் அரசியல்

Featured Replies

விளையாட்டில் விளையாடப்போகும் அரசியல்!

ஒரு வழியாக தமிழர்களை கருவறுத்த நாடும் துணைபோன நாடும் விளையாடப்போகும் உலகக் கோப்பை மட்டையாட்டப் போட்டியில் இரு நாட்டு அரசியலும் சேர்ந்து விளையாட தயாராகின்றது.

இக்கோப்பையை வெல்வதால் இந்தியாவுக்கு என்ன நன்மை? சிறீலங்காவுக்கு என்ன நன்மை ? இந்தியாவுக்கு கௌரவம், சிறீலங்காவுக்கு வியாபாரம்.

ஆம் சிறீலங்கா வென்றால் உலக மட்டத்தில் பொருளாதாரத்தை சற்று தூக்கி நிறுத்த முடியும். சுற்றுலாத்துறையை சற்று ஆசுவாசப்படுத்தவும் முடியும் என நம்புகின்றது சிறீலங்கா அரசு.

அதே நேரம் அவப்பெயருக்கு உள்ளாகியிருக்கும் சிறீலங்காவுக்கு இவ் வெற்றி சற்று ஆறுதலாக அமையவும் வாய்ப்புள்ளதாக கருதுகின்றது.

அதன் ஒரு கட்டமாகத்தான் நியூசிலாந்து அதிபருக்கு அழைப்பு விடுத்துப்பார்த்தது சிறீலங்கா அரசு ஆனால் திட்டம் கைகொடுக்கவில்லை அவமானவே பரிசாக கொடுத்தது நியூசிலாந்து.

ஆனால் இந்தியாவுக்கு அது கைகொடுத்தது. பாகிஸ்தான் அதிபர் வந்துவிட்டுப்போனார் சிறீலங்கா அதிபர் வந்துகொண்டு இருக்கின்றார்.

இதில் என்ன இருக்கின்றது என்கிறீர்களா? இனித்தான் ஆட்டமே துவங்கப்போகின்றது.

இந்தியாவுக்கு இது கௌரவப்பிரச்சனை ஆகவே சிறீலங்கா வெல்லுவதை இந்திய அரசு ஒருபோதும் விரும்பாது அதுவும் தன்னுடைய மண்ணில் நிச்சயமாக விரும்பவே விரும்பாது.

அதுவும் சிறீலங்கா அதிபரை அழைப்பிதல் கொடுத்து அழைத்தது தாம் தோற்பதை தம்மோடு இருந்து பார்ப்பதற்கு அல்ல.

விளையாட்டில் என்ன அரசியல் என்கிறீர்களா? விளையாட்டு கூட இரு நாடுகளுக்கான போர்தான் என்ன உயிர்ச்சேதம் மட்டும் இருக்காது.

இந்தியாவே இப்போட்டியில் வெற்றி பெறலாம், இது முடிவுசெய்யப்ப****** மன்னித்துக்கொள்ளுங்கள் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

இதில் எங்கே அரசியல் வந்தது என்கிறீர்களா? அரசியல் மூலம்தானே அந்த வெற்றியே வரப்போகின்றது.

பணம்+பதவி+அரசியல் எதையும் தீர்மானிக்கும் சக்தியாக உருப்பெற்றுள்ளதை மறுக்க முடியாது.

கௌரவமா? வியாபாரமா? பெருத்திருந்து பார்ப்போம் எமது கணிப்பு சரியானால் வெற்றி இந்தியாவுக்கே.

Short URL: http://rste.org/?p=887

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes:

:rolleyes:

அது எப்பவோ முடிவாச்சு. முரளியையும் இறங்க விடவில்லை சிங்களம்.

  • கருத்துக்கள உறவுகள்

:( முரளி இல்லாமல் அவர்களது சுழல்ப் பந்து வீச்சு சோபிக்கப்போவதில்லை. கால், அடிவயிற்று மற்றும் இன்னோரென்ன் உபாதைகளுக்காக முரளி விளையாடுவது கேள்விக்குறி என்றுதான் சொல்கிறார்கள். இதுவரையில் முரளியை விளையாட அனுமதித்த சிங்களப் பேரினவாதம் இப்போது மட்டும் ஏன் தடுக்கப்போகிறது? உண்மையிலேயே முரளியால் முடியாவிட்டாலும் கூட அவரை விளையாடச் சொல்லி வற்புறுத்தினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. தற்போதுவரை அவர் விளையாடுவார் என்றுதான் சிங்கள அணியின் பயிற்றுவிப்பாளர் கூறிவருகிறார். வாசும் இன்னொரு சுழல்ப் பந்து வீச்சாளரும் அழைக்கப்பட்டிருப்பது முரளியும், ஆஞ்செலோ மத்தியூஸும் காயத்தினால் விளையாட முடியாது போனால் ஈடு செய்வதற்காகவே.

இந்த பிரதியீடுகளை விட முரளியும், மத்தியூஸும் மிகவும் பெறுமதியானவர்கள் என்பது சிங்களத்திற்குத் தெரியும். ஆகவே முடிந்தவரையிலும் முரளியும் மத்தியூஸும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனாலும் யார் விளையாடினால் என்ன இந்தியா உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றப்போவதைத் தடுக்க முடியாது.

சிங்களத்தின் முகத்தில் கரிபூசப்படுவதில் மகிழ்ச்சிதான், ஆனாலும் வெல்லப்போவதுகூட இனக்கொலையில் சரி பங்கு வகித்த இன்னொரு நாடென்பதில்த்தான் வருத்தம்.

எம் கைய்யில் என்ன இருக்கிறது ??!!!

சிங்களத்தின் முகத்தில் கரிபூசப்படுவதில் மகிழ்ச்சிதான், ஆனாலும் வெல்லப்போவதுகூட இனக்கொலையில் சரி பங்கு வகித்த இன்னொரு நாடென்பதில்த்தான் வருத்தம்.

எம் கைய்யில் என்ன இருக்கிறது ??!!!

என்னால் இரண்டு போரையும் ஏற்க முடியுது இல்லை...ஆகவே நாளை விளையாட்டை பார்ப்பது இல்லை என்று முடிவு பண்ணி இருக்கின்றன்

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் இரண்டு போரையும் ஏற்க முடியுது இல்லை...ஆகவே நாளை விளையாட்டை பார்ப்பது இல்லை என்று முடிவு பண்ணி இருக்கின்றன்

எனக்கும் அப்படித்தான்

அதேநேரம்

நேற்று ஒரு சீக்கியனைக்கண்டேன். அவன் சொன்னான் இதுவரை நடந்தது வேணுமானால் சிலவேளை விளையாடடாக இருக்கலாம். இனி நடக்கப்போவது வியாபாரம் மற்றும் அரசியல். பெட்டிகள் கை மாறியிருக்கும். வெற்றி தோல்வி முடிவு செய்யப்பட்டிருக்கும் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

அது எப்பவோ முடிவாச்சு. முரளியையும் இறங்க விடவில்லை சிங்களம்.

எந்த மடையன் சொன்னது அவர் விளையாட வில்லை என்று...நாளைக்கு விளையாடப் போர வீரர்களின் பட்டியலில் முரளியின் பெயர் அவனால ஒட முடியா விட்டாலும் சிங்களவன் அவனை மைதானத்துக்குள்ள விடுவான் பந்து போட :lol: :lol:

ஆதாரம் / cricinfo

India 1 Virender Sehwag, 2 Sachin Tendulkar, 3 Gautam Gambhir, 4 Virat Kohli, 5 Yuvraj Singh, 6 MS Dhoni (capt & wk), 7 Suresh Raina, 8 Harbhajan Singh, 9 Zaheer Khan, 10 Sreesanth/Ashwin, 11 Munaf Patel.

Sri Lanka 1 Tillakaratne Dilshan, 2 Upul Tharanga, 3 Kumar Sangakkara (capt & wk), 4 Mahela Jayawardene, 5 Chamara Silva, 6 Thilan Samaraweera, 7 Thisara Perera, 8 Lasith Malinga, 9 Nuwan Kulasekara, 10 Muttiah Muralitharan, 11 Suraj Randiv/Rangana Herath.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.