Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயத்தை கேளுங்கோவன்!?

Featured Replies

நியாயத்தை கேளுங்கோவன்!?

கல்யாணம் ஆன நாளில் இருந்து இப்படிதான் என்ட மனிசன். எனக்காக எதையும் செய்வார், ஆனால் ஊருக்கு எங்கட மக்களுக்கு கொஞ்சம் பணம் அனுப்பலாம் என்றால் மட்டும், மனிசன் அசைய மாட்டுது.

சரி நானும் அதிகம் இவரிட்ட எதிர்பார்க்க கூடாது தானே? என்ன என்று கேக்கிறியள் போல?

நானும், என்ட மனிசனும் காதல் திருமணம் புரிந்தவர்கள். பல்கலைக்கழகத்துக்கு போன காலத்தில இவரை பார்த்து, பழகி, மனசு ஒத்து போனதால் திருமணம் செய்யலாம் என நினைத்து என்ட அப்பரிட்ட கேட்டா.. தாம் தீம் தான்.

யோசிக்காமலே "வேண்டாம் இவன்".

எனக்கு சரியான கோவம் பாருங்கோ. நான் சரி என்று இருப்பேனா? கேட்டனே "அவருக்கு நல்ல மனம்,நல்ல படிப்பு,நல்ல குடும்பம்..நல்லத எல்லம் சொல்லி பார்த்தேன்.

என்னை பெத்தவர் சும்மா வாயை பொத்திட்டு இருப்பாரோ, பதிலாக எனக்கு கிடைத்தது என்ன தெரியுமா?

"என்ன மொழி?"

"சிங்களம்"

"அது தான் சொல்லுறன், கதை இதோட முடியணும்"

எனக்கு பாருங்க அழுகையே வந்திட்டுது. பெத்த மனம் தாங்குமா?

"இதோ பாருடா ராஜாத்தி. நாங்கள் இவங்கள் சிங்களவங்களோட சண்டை சண்டை என செத்து கொண்டு இருக்கிறம். உன்ட மாமா, அண்ணாக்கள் எல்லாரையும் இவங்கள் தானே சாக்கடிச்சது. எங்கட குடும்ப்பதில இப்படி ஒரு திருமணம் தேவைதானா?"

"அப்பா நாங்கள் சிங்கள அரசாங்கத்தோட தான் சண்டை போடுகிறோம், மக்களோட இல்லையப்பா." ..இது நான்.

எனக்கு தெரிந்ததே பிடிவாதம் தானே, ஒரு மாதிரி சில நிபந்தனைகளுடன் பெற்றோர் சம்மதிக்க எங்கட திருமணம் இனிதே நடந்தது.

பாருங்கோ இவர் இருக்கார் தானே என்ட மனிசன்... இவள் என்னடா பெயரை சொல்லாமலே கதைக்கிறால் என்று நினைக்கிறிங்க போல??

என்ட அவரின்ட பெயர் "சுகந்தன்". என்னடா தமிழ் பெயர் என்று பார்க்கதிங்க, என்ட மாமியார் சின்னனில தமிழ் படிச்சவவாம். அதில மாமியாருக்கு தமிழ் மேல ஈடுபாடுதான். பிள்ளையளுக்கு தமிழ் பெயரும் வச்சிட்டா பாருங்கோ.

ம்ம்ம் பாருங்க சொல்லவந்ததை விட்டுட்டு வள வள என்டு பேசுறேன். ஆனா இவர் சொல்லுவார், உன்ட கதையை பார்த்து தானே காதலிக்க ஆரம்பித்தேன் அன்று.

அதை விடுங்கோ இப்படியெல்லாம் சொல்லுற மனிசன் இந்த பணம் அனுப்புற கதை வந்தா மட்டும் அடம்பிடிக்குது.

என்ன செய்ய? அதுக்காக "என் தலை எழுத்து அப்பவே என்ட அப்பர் தமிழ் மேல பற்றுள்ள ஒருத்தரை கட்டிக்கோ அப்பிடின்னார்" என்று சொல்ல மாட்டேன். இதுக்கெல்லம் போய் அப்படி சொன்னா என்ன மனிசர் நாங்கள்???

எமக்கு கிடைத்ததோட சந்தோச படணும். புதிதாக ஒன்றை பார்துவிட்டு அதுக்கு பினால போனா, அதற்கு பெயர் என்னை பொருத்தவரையில் வேற, நீங்கள் என்ன சொல்லுறியள்??

இப்ப என்ன தான் பிரச்சனை ? எதற்கு இந்த அலம்பல் என்கிறீர்களா?

பாருங்கோ சுனாமி வந்து எங்கட சனம் அல்லல்படுது. இஞ்சருங்கோ கொஞ்ச காசு அனுப்புவம் என்று காலையில கேட்டேன்.

மனிசம் சொல்லுது "இதோ பாரும்ம உனக்கு ஏதும் வேணும் என்றால் கேளு. உடனே வாங்கி தாறேன். இவங்களுக்கு எல்லம் அனுப்ப எனக்கு விருப்பம் இல்லை. உங்களுக்கு வேண்டும் என்றால் அனுப்புங்கோ"

நியாயத்தை கேளுங்க?! இவருக்கு விருப்பம் இல்லாம நான் எப்படி? கல்யாணம் ஆன நாளில இருந்து இவர் விருப்பத்தையும் அறிந்து தானே அனைத்தையும் செய்கிறேன்?

அதுக்காக என்ட மனிசனை கெட்டவன் ஆக்கி போடாதீங்கோ. "அப்பவே உன்ட அப்பர் சொன்னவர் தானே" அப்படியும் மனசுக்குள்ள நினைக்கிறியள் போல? முதல்ல கதையை கேளுங்கோவன்.

இவர் சமாதானம் இருக்க வேண்டும் என நினைக்கிற ஆள். சிங்கள அரசாங்கம் என்றாலும் தூரம். எங்கட அண்ணாக்கள் என்றாலும் தூரம். சண்டை எதற்கு, சண்டை போடுபவர்களில் எவரையும் நான் சார்ந்திருக்க போவதில்லை என சொல்லுவார்.

நான் எப்படி அப்படி இருக்க முடியும். மறுபடி கேட்டு காலையில வாக்குவாதம் முற்றியது தான் மிச்சம்.

"பாருங்கோ நல்ல விசயத்துக்கு தானே பணம் அனுப்பலாம் என்கிறேன்" இது நான்.

"அந்த பணம் சுனாமி மக்களுக்கு போய் சேரும் என்பதில் என்ன உறுதி" என்ட மனிசன் வர வர இந்த பணம் கொடுக்காமல் இருக்க கேள்வி கேட்பினமே அவையள போல எல்லோ பேசுது.

எனக்கு விசர் பிடிக்காத குறை தான். சரி சரி என்ன சொல்லவாறியள் என்று எனக்கு புரியிறது.

கதைக்கு வாங்கோ இப்ப..

"என்னங்க சொல்லுறியள், அங்க கஸ்டபடுறது என்ட சகோதரங்கள். அவையள சிங்கள இராணுவம் சீரழித்தது போதாது என்று இது வேறை. இந்த நேரத்தில இப்படி பேசுறியளே?"

"எப்ப பார்த்தாலும் இதே கதை தான். என்னுடைய விருப்பத்தை சொல்லிட்டேன். பணம் வேண்டிய அளவு உங்கட கையில இருக்கு. இதன் பின்னர் உங்கட இஸ்டம்" என கூறி வேலைக்கு போக கிளம்பினார்.

என்னால துக்கத்தை மனதுக்குள்ள அடைக்கவே முடியல.. "உங்கட கண்ணுக்கு முன்னால உங்கட உறவுகளை வெட்டி இருக்கிறார்களா ? உங்கட சகோதரிகளை இந்தியா ஆமிக்காரன் சூறையாடி இருக்கிறானா? அல்லது உங்கட தேவாலயத்தையே குண்டு வைத்து அளித்து இருக்கிறார்களா? இதெல்லாம் நடந்து இருந்தால் தான் உங்களுக்கு புரியும் என்னுடைய தவிப்பு. பாவம் அவர்கள்..." அதற்கு மேல் பேசாமல் அறைக்குள் ஓடி சென்று கட்டிலில் விழுந்தேன். இவரும் வேளைக்கு போய்ட்டார்.

நான் சாப்பிடாமல் கொள்ளாமல் தொலைக்காட்சி பெட்டி முன்னாலேயே தவம் கிடக்கிறேன். என்னாலே ஒரு சிறு உதவி கூட செய்ய முடியவில்லையே என குற்ற உணர்ச்சி மனசை போட்டு கொல்லுது.

இவரில எனக்கு சரியான கோவம் பாருங்கோ.ம்ம்ம்ம் கார் சத்தம் கேட்குது. நான் இவரிட்ட பேச போறதில்லை, வரட்டும்.

"அம்மா"

பாருங்கோ மனிசன் ஒன்றுமே நடக்காத போல கூப்பிடுது. பதில் சொல்லாம இருந்து பார்ப்பமா?? சரி இல்லை, போய் என்ன என்று தான் கேட்பமே.

"இந்த ரசீதை கொஞ்சம் மேசையில வைடம்மா".

ஆமா இப்ப இது தான் முக்கியமா? என நினைக்கும் போது தொலை பேசி மணி. இது வேற அடிக்கடி அலறிட்டு இருக்கும். வெளிநாட்டில சுறு சுறுப்பா இருக்கிறது தொலை பேசிதானே!

"வணக்கம், ஓ குமார் அண்ணாவோ? இவரோ? இப்ப தான் வந்தவர், குளிக்க போய்ட்டார்.கூப்பிடவோ? ஓ......ஓ....ஆ?? இல்லை இல்லை நான் நல்லாதான் இருக்கிறன்.சரி அண்ணா இவர் வந்த உடனே உங்களை தொடர்புகொள்ள சொல்கிறேன்.

அது என்ன தொலை பேசியில "ஓ...ஓ...ஆ??" என்று கேக்கிறிங்களா? மன்னியுங்கோ எனக்கு இப்ப நேரம் இல்லை பதில் சொல்ல. இவருக்கு டவல் எடுத்துகுடுக்கணும்.

என்ன என்ன படக்கென்று ஆள் சந்தோசமா இருக்கு என்று கேக்கிறியளா?

பின்ன என்னவாம். மனிசம் பணம் ஊருக்கு அனுப்பி போட்டெல்லோ வந்து இருக்கு.

"என்னங்க பணம் அனுப்பி இருக்கிங்க போல?"

"ஓம் அம்மா, நீங்கள் சொன்னதில நிறைய அர்த்தம் இருக்கு. தலையிடியும் காய்ச்சலும் அவன் அவனுக்கு வந்தா தானே வலி தெரியும். உங்கட மனசு எப்படி தவிக்கும் என நான் முதலே நினைச்சு பார்த்திருக்க வேணும். மன்னிச்சிரும்மா. அதோட எனக்கு விருப்பம் இல்லை என்ற ஒரு காரணத்திற்காக பணம் அனுப்பாமல் நீங்கள் இருக்கும் போது. உங்கட உணர்வுகளை மதிக்கிறது தானே கணவனா என்னுடைய கடமை கூட. இதை விட சும்மாவே சமையல் ஒரு மாதிரி, இந்த கோவத்தில எனக்கு சாப்பாடே இல்லமல் பண்ணினால்.."

"என்னங்க..." என்னவன் மார்பில் தலை சாய்க்க....... இங்க நீங்கள் இன்னும் போகவில்லையா? போய்ட்டு வாங்கோ. புருசன் பெஞ்சாதியை தனிய நிம்மதியா இருக்க விட மாட்டிங்களே...

முற்றும்.

அனைத்தும் கற்பனையே.

தூயா

ம்ம்ம் உங்கள் கதை நல்லா இருக்கு தூயா வாழ்த்துக்கள்

þùÅÇ× «Æ¸¡ö ¸¨¾ ±ØÐÈ¢í¸ ! ±ý ¸Å¢¨¾ Òâ¨ÄÛ ¦º¡øÄ¢ðÊí¸§Ç .

¿ýÈ¡ö ±Ø¾ÅÕ¸¢ÈÐ ¯í¸ÙìÌ.Å¡úòÐì¸û.

நல்ல சரளமாக எழுதுகிறீர்கள் தூயா. கதை நன்றாக இருக்கிறது.

தூயா கதை அருமை...

ஆமாம் சிங்களம் படிப்பதன் காரணம் இப்ப தான் விளங்கியிருக்கு :lol: ... வாழ்த்துக்கள்

"அந்த பணம் சுனாமி மக்களுக்கு போய் சேரும் என்பதில் என்ன உறுதி" என்ட மனிசன் வர வர இந்த பணம் கொடுக்காமல் இருக்க கேள்வி கேட்பினமே அவையள போல எல்லோ பேசுது.

உண்மையை சொல்லீட்டிங்கள் தூயா!

நடப்பு நிகழ்வுகளை நல்லா சொல்லுறீங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூய் என்னங்க கதை எல்லாம் ஒரு மாதிரிப்போகுது (அது தான் சோடியா மாறீட்டு) நல்லகதை அழகா சொல்லியிருக்கிறியள். எனக்கெண்டா ஒன்று புரியல.. நீங்க அவர்களுக்கு உதவி செய்யணும் என்று நினைக்கிறது சரி..?? அதுக்கேன் மற்றவையின்ர சம்மதம் வேணும். அவைக்குப்பிடிக்கலை என்றா அவையை ஏன்க கஸ்டப்படுத்திறியள்..?? என்னமோ போங்க முடிவு சரியா வந்திச்சில்லா அது வரை கப்பி. :wink: :P

  • தொடங்கியவர்

ம்ம்ம் உங்கள் கதை நல்லா இருக்கு தூயா வாழ்த்துக்கள

பதிலுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி ரசிகை.

þùÅÇ× «Æ¸¡ö ¸¨¾ ±ØÐÈ¢í¸ ! ±ý ¸Å¢¨¾ Òâ¨ÄÛ ¦º¡øÄ¢ðÊí¸§Ç .

¿ýÈ¡ö ±Ø¾ÅÕ¸¢ÈÐ ¯í¸ÙìÌ.Å¡úòÐì¸û.

அப்படி இல்லை. என்னுடைய எழுத்து அரிவரி தான். உங்களுடையதை அவ்வளவாக என்னால் விளங்கிகொள்ள முடியவில்லை, அதாவது அர்த்தத்தை. :lol: நன்றி செந்தில்.

நல்ல சரளமாக எழுதுகிறீர்கள் தூயா. கதை நன்றாக இருக்கிறது

மதண்ணா, இப்ப கொஞ்சம் எழுத்துபிழைகள் குறைவு தானே? கவனம் எடுத்து தான் தட்டச்சு செய்கிறேன், இருந்தாலும்... நன்றி மதண்ணா..

  • தொடங்கியவர்

தூயா கதை அருமை...  

ஆமாம் சிங்களம் படிப்பதன் காரணம் இப்ப தான் விளங்கியிருக்கு  ... வாழ்த்துக்கள

என்னை கிண்டல் பண்ணாம இருக்கவே மாட்டிங்களா? ;)

"அந்த பணம் சுனாமி மக்களுக்கு போய் சேரும் என்பதில் என்ன உறுதி" என்ட மனிசன் வர வர இந்த பணம் கொடுக்காமல் இருக்க கேள்வி கேட்பினமே அவையள போல எல்லோ பேசுது.  

உண்மையை சொல்லீட்டிங்கள் தூயா!  

நடப்பு நிகழ்வுகளை நல்லா சொல்லுறீங்கள்!

மிக்க நன்றி வர்ணன். மனதில் பாதித்தவிடயங்கள் தானே எழுத்திலும் வரும்.

தூய் என்னங்க கதை எல்லாம் ஒரு மாதிரிப்போகுது (அது தான் சோடியா மாறீட்டு) நல்லகதை அழகா சொல்லியிருக்கிறியள். எனக்கெண்டா ஒன்று புரியல.. நீங்க அவர்களுக்கு உதவி செய்யணும் என்று நினைக்கிறது சரி..?? அதுக்கேன் மற்றவையின்ர சம்மதம் வேணும். அவைக்குப்பிடிக்கலை என்றா அவையை ஏன்க கஸ்டப்படுத்திறியள்..?? என்னமோ போங்க முடிவு சரியா வந்திச்சில்லா அது வரை கப்பி.

அக்கி ;) என்ன என்ன தன்ட மனச போலவே மத்தவங்களையும் நினைக்கிற போல இருக்கு ;)

இதில என்ன குளப்பம். கணவனை கேட்டு தான் செய்ய வேண்டும் என்று எழுத்து இல்லை. ஆனால் கணவரின் சொல்லுக்கு மதிப்பு குடுத்தால், மனைவி விரும்புவது நடக்கிறதே , சண்டை சச்சரவு இல்லாமல்.

என் கதையில் வரும் கணவர், எனக்கு விருப்பம் இல்லை, ஆனால் நீ வேண்டும் எனில் செய்யலாம், எப்படி தானே சொல்கிறார்.

கதையில் வரும் மனைவி, பணம் குடுத்திருக்கலாம். ஆனால் தேவையில்லாத சண்டை தானே வரும்.

காதலிக்கும் போது இருக்கும் பொறுமை, கல்யாணத்திற்கு அப்புறம் இல்லாமல் போகலாமா?

மனைவியின் மனம் அறிந்த கணவன் ஆரம்பத்தில் வேண்டாம் எனினும், பின்னர் மனைவி தன்னுடைய விருப்பத்திற்கு மதிப்பு குடுப்பதை பார்த்து, தானே மனம் மாறுகிறார்.

யாராவது ஒருவர் முதலில் கேழே இறங்கி வந்தால் தானே பிரச்சனை தீர்வுக்கு வரும்.

அதனால் தான் அப்படி ஒரு அமைப்பு என் கதையில்.

கடைசில கதையை படிச்சனிங்க தானெ ;) சுபம் சுபம்

கதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்க்ள தொடர்ந்து எழுதுங்கள் :P

தூயா, கதை நல்லா எழுதுறீங்க இப்பத்தான் படித்து முடித்தேன்... அருமையாக இருக்கு..தொடருங்கள்..வாழ்த்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கிண்டல் தானேவேணாங்கிறது.

இல்லைத்தூயா கதையின் நாயகி தன்னால் ஒரு சிறு உதவியையும் செய்ய முடியவில்லை என்று குற்ற உணர்ச்சி என்றீங்க.?? சரி கதையில தான்க.. அவாட்ட காசிருக்கு கொடுக்க மனசிருக்கு கொடுத்திட்டுப்போறது. இல்லை அவைல நீங்க தீர்மானங்களிற்காக தங்கி இருக்கிற மாதிரி எல்லா இருக்கு. உங்களால சுயமா தீர்மானம் பண்ண முடியுது அவர்களுக்கு கொடுக்கணும் என்று பிறகென்ன தயக்கம்..?? இப்படித்தான் ஆண்களுக்கு பெண்கள் இடம் கொடுக்கிறது. சே அவர் வேண்டாம் என்றிட்டாரே என்றிட்டு விட்டிட்டிருந்தா அவை வழமையாக்கீடுவினம். ஆனா உங்கட கதை நாயகன் திருந்தி வந்திருக்கார் அது பாராட்ட வேண்டிய விசயம் தான். இதுவே நம்ம தமிழ் ஆண்கள் என்றா ஐயோட மனிசி அமைதியாகீட்டு என்றிட்டு இதையே சாட்டாக வைச்சிவிடுவாங்க (இது நிஜவாழ்க்கையில) அவசியம் அவசரமாய் வரேக்க. சச்சரவுகள் பின்னாடி வருமே என்று பாத்திட்டிருக்க முடியுமா..?? அப்புறம் நீங்க அக்கியோட சண்டைக்குவாறதில்லை.. :wink: :P

ம்ம தமிழ் ஆண்கள் என்றா ஐயோட மனிசி அமைதியாகீட்டு என்றிட்டு இதையே சாட்டாக வைச்சிவிடுவாங்க (இது நிஜவாழ்க்கையில) அவசியம் அவசரமாய் வரேக்க. சச்சரவுகள் பின்னாடி வருமே என்று பாத்திட்டிருக்க முடியுமா..?? அப்புறம் நீங்க அக்கியோட சண்டைக்குவாறதில்லை..  :wink: :P

தமிழினி எப்படி தமிழ் ஆண்கள் எல்லாரும் இப்படித்தான் என்றும், மற்றவர்கள் அப்படி இல்லை என்றும் சொல்லுவீர்கள்?இருவகையான ஆண்கள் எல்லாச் சமூகத்திலும் உண்டு,அது தான் எனது அனுபவம்.

தூயா நல்ல கதை.புரிந்துணர்வுள்ள குடும்பம்.நிம்மதியா இருங்க :lol:

ஆகா...என்னமா கதை எழுதுறீங்கள்...தொடருங்கள்... :lol:

  • தொடங்கியவர்

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரங்களே :lol:

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை. கற்பனைக்கதை என்று சொல்கிறீர்கள். ஏன் கணவரை சிங்களவராக படைத்திருக்கிறீர்கள்?.

  • தொடங்கியவர்

புரிந்துணர்வை காட்டுவதற்கு தான்..:lol: ஏன் நல்லாயில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.