Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிருடன் தீயிட்டு சித்திரவதை: கொல்லப்பட்ட நடேசனின் உடலம்: புது ஆதாரம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tuesday, 12 April 2011 03:37

உயிருடன் தீயிட்டு சித்திரவதை: கொல்லப்பட்ட நடேசனின் உடலம்: புது ஆதாரம் !

2009 மே மாதம் இறுதி யுத்தத்தின்போது புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர், ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் இராணுவத்திடம் சரணடைந்திருந்தனர். இவர்கள் சரணடையலாம் எனவும், சரணடைவதற்கு ஏதுவான சூழ் நிலையை தாம் தோற்றுவித்ததாகவும், ஏற்பாட்டாளராக இருந்த இந்திய, நோர்வே மற்றும் ஐ.நா அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் தெரிவித்ததை அடுத்தே அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள் சரணடைந்தார். ஆனால் அவரையும் புலித்தேவனையும், கட்டிவைத்து இராணுவத்தினர் மனிதர்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவு சித்திரவதைகளை மேற்கொண்ட பின்னரே கொலைசெய்துள்ளனர் என அறியப்படுகிறது.

முதலில் ப.நடேசன் அவர்களின் மனைவி கொலைசெய்யப்பட்டதாகவும், பின்னர் கடும் சித்திரவதைகளின் பின்னர் அவர்களின் அடிவயிற்றில் நெருப்பால் சுட்டுள்ளதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் அவர்களை இராணுவம் கட்டிவைத்து கொடுமைசெய்த காயங்கள் அவர் உடலில் காணப்படுகிறன. இறந்த பின்னர் உடலத்தை எடுத்துச் சென்று புதைக்க இருந்த இடத்தில் நின்ற இராணுவத்தினரால் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரிடமிருந்து தமிழக முதலமைச்சருக்கு அவசரக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், ராஜ்ய சபா உறுப்பினருமான கனிமொழி ஊடாகவே குறித்த கடிதப் பரிமாற்றங்கள் நடைபெற்றதாகவும் ஆதாரபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளது.

சமாதானச் சூழல் ஒன்றை உருவாக்குமாறும், போரை நிறுத்த இந்தியா வலியுறுத்தவேண்டும் எனவும், ப.நடேசனால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரக்கமற்ற கலைஞர் அரசும், மத்தியில் ஆட்சிபுரியும் காங்கிரசுமே, இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க மறுத்துள்ளது. அதனால் நடந்த பேரவலத்தில் பெருந்தொகையான புலிகள் மட்டுமல்ல, பொதுமக்களும் இறந்துள்ளனர். மானமுள்ள எந்தத் தமிழனும் இதனை ஒருபோதும் மன்னிக்கமாட்டான் !

sankathi.com

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை!!!!!!!!!!!!மனித உரிமை! மனித உரிமை!என்று கூக்குரல் இடுபவர்கள் எல்லாம் எங்கே???????????????????இப்படியா லிபியாவிலும் ஜவரிக்கோசிலும் நடந்தது?ஐநா என்ன புடுங்கிக் கொண்டு இருக்கிறது.இந்தக் கொலைகளில் சிறிலங்கா அரசு மட்டுமல்ல பான்கிமூனின் உதவியாளர் நம்பியாரும் இந்திய அரசும் உடந்தை இந்த நம்பியாரை இன்னமும் தன்னுடன் வைத்திருக்கும் பான்கி மூனும் உடந்தை.

ஜ நா அறிக்கை வெளிவரும்போது மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் செய்து அந்நாட்டு அரசாங்கங்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் பதவிச்சண்டைகளை விட்டு இதற்கான ஏற்பாடுகளை செய்வார்களா?

Edited by Subiththiran

  • கருத்துக்கள உறவுகள்

சரணடைந்த ஒரு மனிதனை 'இவ்வளவு கொடுமைப் படுத்தி' கொல்வதென்பது மிகவும் கொடூரமான காட்டுமிராண்டிச் செயல்.புத்த மதத்தைத் தன் தேசீய மதம் என்று கூறும் 'இலங்கை' மீது இது ஒரு கழுவ முடியாத கறையாக என்றும் நிலைக்கட்டும்.இந்தப் படத்தைப் பார்த்த பின்னும் இரண்டு இனங்களும் எவ்வாறு ஒற்றுமையாக வாழ முடியும் என்று, எனது சிற்றறிவுக்கு விளங்கவில்லை.இதில் வெட்கப் பட வேண்டியது இந்தப் போரை முன்னின்று நடத்திய இலங்கையும்,இந்தியாவுமே!!! இதன் தார்மீகப் பழியையும் இந்த இரு நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையுமே ஏற்றுக் கொள்ள வேண்டும்!!!

Edited by Punkayooran

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கமுடியவில்லை

என் அண்ணனை

அவரோடு பழகியநாட்களை

அந்த கம்பீரமாக நடையை

என் பிள்ளைக்கும் பேரனுக்கும் பூட்டனுக்கும் கொண்டு சென்றே நான் சாவேன் இதை.................................................

  • கருத்துக்கள உறவுகள்

:mellow: இப்படி எத்தனையோ பெறுமதியான உயிர்களைப் பலியாக்கி விட்டோம். என்ன செய்யப்போகிறோம்?

வழக்கம் போல ஐய்யோ, அம்மா என்று ஒப்பாரி வைத்துவிட்டு எங்கள் வேலைகளைப் பார்க்கப்போகிறோமா?? அல்லது நடந்த அநியாயத்தை உலகெங்கும் எடுத்துச் செல்லப்போகிறோமா??

எமக்குத் தெரிந்த அனைத்து நண்பர்களுக்கும் இவை அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

ஐ.நா, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை ஆர்வளர்கள், சர்வதேச செய்தி அமைப்புக்கள், இந்தியப் பத்திரிக்கைகள் என்று எல்லா இடங்களிலும் இவை சென்று சேர வேண்டும்.

முடிந்தவர்கள் தொடங்குங்கள்.

தாங்கமுடியவில்லை

என் அண்ணனை

அவரோடு பழகியநாட்களை

அந்த கம்பீரமாக நடையை

என் பிள்ளைக்கும் பேரனுக்கும் பூட்டனுக்கும் கொண்டு சென்றே நான் சாவேன் இதை.................................................

ஒரு பிரச்சனை ஆலோசனைக்காக சந்திப்பின் போது சொன்னார். தொடங்கிவிட்டீர்கள் தானே இடையில் விடாமல் முடிக்க வேண்டும் என்றார். வெற்றி தோல்வி பற்றி பிறகு பிரச்சனை இல்லை என்றார்

சொன்ன பொன்னான வார்த்தைகள் போல் தானும் வாழ்ந்து காட்டிய அற்புத மறத்தமிழன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இணையத் தளங்களில் மட்டுமே வரும் இந்தப் படங்கள் ஆங்கில மொழியில் செய்தியுடன் இணைக்கப்படல் அவசியம். பின்னர் அதை இலகுவாக எந்த அமைப்பிற்கும் அனுப்பி வைக்கலாம். தமிழில் உள்ள செய்தியை அவர்கள் சட்டை செய்யாமல் விடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐ நா நிபுணர்கள் குழுவின் போர் குற்ற விதப்புரை அறிக்கை இன்று பாங் கி மூனிடம் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் அதை அவர் வெளியிடுவாரோ இல்லையோ தெரியாது. ஆனால் சிங்கள புத்திஜீவிகள் சிங்கள அரசையும் அதன் அதிபரையும் காக்கும் உடனடிப் பரிந்துரைகளை செய்துள்ளதோடு இந்த அறிக்கையை முறியடிக்க அரசில் அங்கம் பெறாதவர்களைக் கொண்ட புத்திஜீவிகள் அணி ஒன்றை நியுயோர்க்கிற்கு அனுப்பி உள்ளதோடு சிங்களப் புத்திஜீவிகள் மேற்குலக ராஜதந்திரிகைகளையும் சந்திந்து கலந்துரையாடி உள்ளனர்.

ஆனால் பாதிக்கப்பட்ட நம்மவர்களோ.. தமிழ் தேசியக் கூட்டமைப்போ.. புலம்பெயர் அமைப்புக்களோ ஒரு அறிவிஜீவிகள் அமைப்பை உருவாக்கி இதனை கையாள என்று ஒரு கட்டமைப்பை நிறுவி வைத்திருப்பதாகத் தெரியவில்லை.

எனி உலகத் தமிழ் பேரவையும்.. பிரித்தானிய தமிழர் பேரவையும்.. நாடு கடந்த தமிழீழ அரசும்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. தமிழ் தேசிய விடுதலை முன்னணி போன்றவை என்ன செய்யப் போகின்றன...??! சிங்களவனுக்கு அபாய அறிவிப்பு கொடுத்துவிட்டார்கள்... இந்தியா சீனா பாங்கிமூன் போன்றவர்கள். அவன் செயற்படுகிறான். நாங்களோ எமது மறவர்களை சுட்டுப் போட்ட படத்தை மட்டும் வைச்சுக் கொண்டு ஒப்பாரியோடு இருக்கிறோம். அவர்களின் இலட்சியத்தை வெல்ல ஒரு முழுமையான திருப்திகரமான செயற்பாடு எம்மவர்களிடம் இல்லாமை வருத்தமளிக்கிறது.

புலம்பெயர் இளையோர் அமைப்பினராவது ஒரு குழுவை இது தொடர்பில் அமைத்து செயற்படுவதோடு வெளிநாட்டு ஐநா ராஜதந்திரிகளை சந்தித்து தமிழ் மக்களின் உணர்வுகளை எதிர்பார்ப்பை ஆதாரங்களோடு சமர்ப்பித்து எமக்கு நீதி கிடைக்க செய்வார்களா..???! நாம் துரிதமாக செயற்படாத ஒவ்வொரு வினாடியும் எதிரிக்கு வழங்கப்படும் அவகாசங்களாவதோடு எமது தோல்வியை எழுதுவதற்கான அத்தியாயங்களை எதிரி எழுத அனுமதிக்கிறது என்பதை மறக்கக் கூடாது.

ஆயிரம் புத்திஜீவிகள் இருந்தும் எமக்கு என்ன நன்மை..???! தயவு செய்து இப்படியான விடயங்களைக் கையாள ஒரு பொதுவான புத்திஜீவிகள் அமைப்பை நாடு கடந்த தமிழீழ அரசு மற்றும் தமிழ் அமைப்புக்கள் ஒருங்கிணைந்து உருவாக்கிச் செயற்படுவதோடு.. தாயகத்தில் இருந்து நீதி கேட்டு குரல்கள் எழுப்பப்படுவதும் அது சர்வதேசத்தின் செவிகளை எட்டுவதும் அவசியமாகிறது. செய்வார்களா.. அல்லது உள்ளூராட்சி சபைகளுக்கு பொலிஸ் காணி அதிகாரம் கேட்டு அடிபடுவதோடு எல்லாம் தோல்வியில் முடிந்தால்.. நாம் சும்மா இருக்கமாட்டோம் என்று வெறும் காகித அறிக்கைகளை அள்ளி வீசுவார்களா..????! :(:unsure::o

இலங்கை ராணுவம் கைது செய்த அல்லது கொலை செய்த ஆணாலும் சரி பெண் ஆனாலும் சரி உடைகளை களைந்து வெற்றுடல் ஆக்குவதேன் இதன் நோக்கம் என்ன?

ஒரு பிரச்சனை ஆலோசனைக்காக சந்திப்பின் போது சொன்னார். தொடங்கிவிட்டீர்கள் தானே இடையில் விடாமல் முடிக்க வேண்டும் என்றார். வெற்றி தோல்வி பற்றி பிறகு பிரச்சனை இல்லை என்றார்

சொன்ன பொன்னான வார்த்தைகள் போல் தானும் வாழ்ந்து காட்டிய அற்புத மறத்தமிழன்.

உண்மை தான். சமாதான கொடியோடு போனவர்களை சித்திரவதை செய்தது தாங்கமுடியவில்லை.

என்ன எங்களிடம் எண்ணை இல்லை. இருந்திருந்தால் அமெரிக்கனும், பிரித்தாநியாக்காரனும் வாலை ஆட்டிக்கொண்டு வந்திருப்பாங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை ராணுவம் கைது செய்த அல்லது கொலை செய்த ஆணாலும் சரி பெண் ஆனாலும் சரி உடைகளை களைந்து வெற்றுடல் ஆக்குவதேன் இதன் நோக்கம் என்ன?

நீல பறவை, செம்மணி போல் இந்த புதை குழிகளை தோண்டும் போது உடலை கண்டுபிடிக்க முடியாது.

தம் மக்களுக்காக சித்திரைவதைப்பட்டு இறப்பவர்கள் பயங்கரவாதிகள், அதே மக்களை கற்பழித்து கொலை செய்வோர் அமைச்சர்கள்!

இந்த ஸ்ரீ லங்கா தமிழரின் நியாயத்தை புரிய முடியவில்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே எத்தனை சித்திரவதைகள்

நிச்சயமாக ஒரு இனமாக, அமைப்புக்களாக, புத்திஜீவிகளாக நாம் மேலும் செய்வதற்கு மேலும் அதிகம் தேவையும் இடமும் உள்ளது. ஆனால், நாம் தனிப்பட்டரீதியில் கூட இதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

நாம் தான் அமைப்புக்களின் பிரதிநிதிகளாக உள்ளோம். எனவே, நாம்தான் அமைப்புக்களுக்கு பலமாக இருக்கவேண்டும். நாம் தான் புத்திஜீவிகளை அவ்வாறு அழைக்கிறோம். எனவே நாம் தான் அவர்களை எமது இனத்தின் விடுதலைக்கு குரல்கொடுக்க வற்புறுத்தவேண்டும்.

"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு".

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ராணுவம் கைது செய்த அல்லது கொலை செய்த ஆணாலும் சரி பெண் ஆனாலும் சரி உடைகளை களைந்து வெற்றுடல் ஆக்குவதேன் இதன் நோக்கம் என்ன?

இவ்வளவு வியத்தகு சாதனைகள் படைத்திருக்கின்றார்களே! இவர்களுக்கு எங்களை விட வித்தியாசமாக ஏதும் இருக்கின்றதா என்று பார்ப்பதற்காக இருக்கும்!

ஆனால் அவர்கள் பிழையான இடத்தில் தேடுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் விடுதலைபெற வேண்டும் என்று ஈழத்தில் தமிழனாக பிறந்தவர்கள் தங்களது உடலையும் உயிரையும் தங்கொண்ணா துயரங்களிடமே கொடுத்தார்கள்...............

கொடியவனை நொந்து என்ன?

இப்போதும் இழிதமிழன் கலியாணவீடும் சாமத்தியவீடும் யாழில் சுதந்திரம் கிடைத்துவிட்டதாகவும் புரண்டு கிடக்கிறானே?????

அதேமண்ணில் பிறந்து தமக்காகத்தானே இத்தனையும் அவர்கள் தாங்கினார்கள் என்ற எண்ணமோ அவர்களது வலியையோ புரியகூடிய நிலையில் தமிழன் இல்லை.................... எங்கோ பிற்ந்த ஐநா காரனுக்கு எப்படி புரியும்? ஏன் புரியவேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் விடுதலைபெற வேண்டும் என்று ஈழத்தில் தமிழனாக பிறந்தவர்கள் தங்களது உடலையும் உயிரையும் தங்கொண்ணா துயரங்களிடமே கொடுத்தார்கள்...............

கொடியவனை நொந்து என்ன?

இப்போதும் இழிதமிழன் கலியாணவீடும் சாமத்தியவீடும் யாழில் சுதந்திரம் கிடைத்துவிட்டதாகவும் புரண்டு கிடக்கிறானே?????

அதேமண்ணில் பிறந்து தமக்காகத்தானே இத்தனையும் அவர்கள் தாங்கினார்கள் என்ற எண்ணமோ அவர்களது வலியையோ புரியகூடிய நிலையில் தமிழன் இல்லை.................... எங்கோ பிற்ந்த ஐநா காரனுக்கு எப்படி புரியும்? ஏன் புரியவேண்டும்?

பான் கியின் மருமகனோ அல்லது மருமகளோ ஒரு வட இந்தியன். இதனால் இந்தியாவும் பான் கியும் சேர்ந்து, போர்க்குற்றவாளிகளான அந்தப் புழுக்களுக்குக் கூடு கட்டி அவற்றைப் பட்டாம் பூச்சிகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.அதற்கிடையில் நாம் விரைவாகச் செயற்படவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.