Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரும்புலிகள் பற்றி கனடிய எதிர்க்கட்சித் தலைவர் எழுதிய அதிர்ச்சித் தகவல்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகள் பற்றி கனடிய எதிர்க்கட்சித் தலைவர் எழுதிய அதிர்ச்சித் தகவல்..

[ பிரசுரித்த திகதி : 2011-04-14 05:48:04 PM GMT ]

லிபரல் கட்சித்தலைவர் மைக்கல் இக்னாட்டியெவ் குறித்து வெளியாகியுள்ள ஒரு செய்தி கனடியத் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

2004 ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட The Temptations of Nihilism என்ற நூலே பெரும் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

அந்நூலின் ஐந்தாவது அத்தியாயத்தில் பக்கம் 126இல் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்.

The Tamil Tigers Suicide bombers, mostly female, were indoctrinated to offer their sacrifice as an act of love for the Tamil Leader. Dying was reconceived as an orgasmic reunion with the leader in death. Channelling sexual desire away from life is an important process in the creation of the death cult. It harnesses erotic energies so that the martyr thinks of death as a form of erotic release.

“தமிழ் புலிகளின் தற்கொலை குண்டுதாரிகளில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள். இவர்கள் தமிழ் தலைவர் மேல் கொண்ட காதல் காரணமாக தங்கள் அர்ப்பணிப்பை வழங்குமாறு வழிப்படுத்தப்பட்டுள்ளார்கள். இறப்பினூடாக இறப்பின் பின்னர் தலைவருடன் புணர்ச்சிப் பரவசநிலையில் மீள்இணையலாம் என அவர்கள் கருதுகின்றனர்”, என எழுதப்பட்டுள்ளது.

மேலும் தமிழர் உச்சமாக மதிக்கும் கரும்புலிகளை பாலியல் உணர்வுகளுக்கு உந்தப்பட்டு, அதற்கு ஆட்பட்டே இவ் இறப்பு காலாச்சாரத்தில் ஈடுபட்டனர் என மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார் கனடிய எதிர்க்கட்சியான லிபரல் கட்சியின் தலைவர் திரு. இக்னாட்டியெவ்.

2008 ஆண்டு கரும்புலிநாளில் இறுதியாக உத்தியோகயூர்வமாக வெளியிடப்பட்ட தரவின்படி, 356 கரும்புலிகளில் 200 ஆண் கரும்புலிகளும், 156 பெண் கரும்புலிகளும் அடங்குவர். பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என்பது முதற்பொய். அடுத்து உச்சமான ஒரு மானிட அர்ப்ணிப்பை, உயரிய தமிழர் தற்கொடையை பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்தும் ஒருவர் எவ்வாறு நம்பகத்தன்மையுடைய ஒரு தேசியக் கட்சியின் மற்றும் நாட்டின் தலைவராவார்?

ஏற்கெனவே கனடிய ஆளும்கட்சியானது வெளியிட்ட ஒரு தேர்தல் விளம்பரம் தமிழர் மனதை காயப்படுத்துவதாக அமைந்திருந்தது. அதற்கு கண்டனம் தெரிவித்தும் அதனை நீக்கும்படியும் கனடியத் தமிழ் அமைப்புகள் அறிக்கைகள் வெளியிட்டதுடன் அழுத்தங்களையும் பிரயோகித்திருந்தன.

இந்நிலையில் தமிழ் மக்களின் காவல் தெய்வங்களை, பலவீனமான இனத்தின் பலமான ஆயுதங்களை, அவர்களின் ஆழ்மன ஆழத்தையோ தோற்றத்தின் நியாயத்தையோ சற்றும் அறிந்துகொளளாமல் மிக இழிவாக சித்தரித்திருப்பது தமிழர்களை கொதிப்படைய வைத்துள்ளது. தமிழ் அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்து குறிப்பிட்ட பகுதியை அப்புத்தகத்தில் இருந்து நீக்கச்செய்வதோடு தமிழர்களின் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்புக்கேட்கச் செய்யவேண்டும் என தமிழர்கள் வேதனையுடன் கூறிவருகின்றனர்.

அத்துடன் கனடாவில் இது தேர்தல் காலம் என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

tamilulakam.com

தமிழினம் மானிட தெய்வங்களாக மதிக்கும் கரும்புலிகளை இப்படி தங்களுடைய கலாச்சாரத்தில் இருப்பவர்களைபோல் பாலியல்விருப்பங்களுக்கு அடிமை பட்டவர்கள் எண்று சிறுமை படுத்திகூறியவரை வன்மையாக கண்டிக்க வேண்டும் .....

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவர் கரும்புலி போர் வடிவத்தை அறிமுகப்படுத்தி வைத்து சொல்லியது.. இந்த போர் வடிவம் எதிர்காலத்தில் உலகு வியக்கும் வகையில் எல்லா ஆயுதங்களையும் விஞ்சி நிற்கும் என்று.

அந்த உண்மையை மிகவும் அதிநவீன போர் தளபாடங்கள் கொண்ட நேட்டோ (கனடா அதன் உறுப்பு நாடு) கண்டுள்ளது. நேட்டோ ஆப்கானிஸ்தானிலும்.. ஈராக்கிலும் தோல்வியைத் தழுவ இந்த தாக்குதல் வடிவத்தை மற்றவர்களும் பிரதி எடுத்து பாவிக்க முற்பட்டதும் ஒரு காரணம்.

கரும்புலிகள் தடை நீக்கிகள். கனடா அமெரிக்காவுக்கு வால் பிடிச்சு பிழைப்பை ஓட்டுவது போன்றதல்ல.. கரும்புலிகள் என்ற இனத்தின் விடிவுக்காக உயிர் கொடை செய்த மாமனிதர்களின் தியாகம் என்பது. கனடா இதனை விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்களின் கொள்கை வகுப்பு வெற்றி பெறவில்லை என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்தக் குற்றச்சாட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கருத்து கனடாவில் வாழும் ஒரு பிரபலமான பெண்ணியவாதி கிட்டத்தட்ட பதின்மூன்று வருடங்களுக்குமுன் உமிழ்ந்தவை அன்று எனக்கும் இப்பெண்ணியவாதிக்கும் மிகப்பெரும் விவாதமே நடந்தது. இந்த நிகழ்வுக்குப்பின் பெண்ணியவாதிகளாக உலாவந்த சில எழுத்துலக நண்பர்கள் பகைவர்களாக ஆயினர். இப்போது இக்கருத்தைப்பார்க்கும்போது விசம்கக்கிகள் எல்லா இடத்திலும் கக்கி இருக்கின்றன என்பது புரிகிறது.

கனடாவின் பிரதமரும், எதிர்க்கட்சி தலைவரும் ... நம்ம தமிழ்நாட்டு கலைஞரும், ஜெயலலிதாவும் போல அல்லவா இருக்கிறார்கள் பார்க்க ... யார் வந்தாலும் நமக்கு நல்லது தான் நடக்கும்????????? <_<

இந்தக் கருத்து கனடாவில் வாழும் ஒரு பிரபலமான பெண்ணியவாதி கிட்டத்தட்ட பதின்மூன்று வருடங்களுக்குமுன் உமிழ்ந்தவை அன்று எனக்கும் இப்பெண்ணியவாதிக்கும் மிகப்பெரும் விவாதமே நடந்தது. இந்த நிகழ்வுக்குப்பின் பெண்ணியவாதிகளாக உலாவந்த சில எழுத்துலக நண்பர்கள் பகைவர்களாக ஆயினர். இப்போது இக்கருத்தைப்பார்க்கும்போது விசம்கக்கிகள் எல்லா இடத்திலும் கக்கி இருக்கின்றன என்பது புரிகிறது.

உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்.இது சம்பந்தமாக பலருடன் தொடர்புகொண்டுளேன். நல்ல முடிவு கிடைத்தால் தெரியபடுத்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் புலிகளின் தற்கொலை குண்டுதாரிகளில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள். இவர்கள் தமிழ் தலைவர் மேல் கொண்ட காதல் காரணமாக தங்கள் அர்ப்பணிப்பை வழங்குமாறு வழிப்படுத்தப்பட்டுள்ளார்கள். இறப்பினூடாக இறப்பின் பின்னர் தலைவருடன் புணர்ச்சிப் பரவசநிலையில் மீள்இணையலாம் என அவர்கள் கருதுகின்றனர்”, என எழுதப்பட்டுள்ளது.

மேலும் தமிழர் உச்சமாக மதிக்கும் கரும்புலிகளை பாலியல் உணர்வுகளுக்கு உந்தப்பட்டு, அதற்கு ஆட்பட்டே இவ் இறப்பு காலாச்சாரத்தில் ஈடுபட்டனர் என மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார் கனடிய எதிர்க்கட்சியான லிபரல் கட்சியின் தலைவர் திரு. இக்னாட்டியெவ்

இவர் பொது வாழ்க்கைக்குத் தகுதியற்ற ஒரு மனிதர்.தமிழ் மகளிர், இவரை விட ஆத்மபலத்திலும், மனோ பலத்திலும், ஆயிரம் மடங்கு உயர்ந்தவர்கள். நாங்கள் வெள்ளையின் வாயில் இருந்து வருவதெல்லாம் வேதம் என்று நினைப்பதால் தான் இந்தப் பிரச்சனையே வருகின்றது.'கிறிஸ்துவத்தின் பெயரால் இவர்கள் அழித்தொழித்த உயிர்கள் எண்ணிலடங்கா.இவர் பொது வாழ்விலிருந்து துடைத்தெறியப் பட வேண்டியவர்!!!

'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு'

தமிழர்களைப்பற்றி இந்த தரங்கெட்ட நாய்களுக்கு என்ன தெறியும்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் எந்த ஆயுதத்தினாலும் அழிக்க முடியாத ஆயுதம் கரும்புலிகள். அதனால்தான் அவர்கள் மேல் காறி உமிழ்கிறார்கள்.அவரின் எழுத்தே அவரின் தகiமையைக் காட்டுகின்றது.

இந்த எதிர்க்கட்சி தலைவர் ஒரு நீண்ட கால அமெரிக்கா பல்கலைக்கழக பேராசிரியர், நீலன் திருச்செல்வம் அவர்களின் நண்பர். இதன் மூலம் அவர் யார் என்பது தமிழ் மக்களுக்கு ஓரளவு புரியும்.

அதேவேளை இந்த தேர்தல் காலகட்டத்தில், அவர்கள் எம்மை தேடி வரும்பொழுது அவர்களுக்கு இன்றைய பிரச்சனையை, சிங்களத்தின் தொடரும் இன அழிப்புக்களை கூறல் வேண்டும். சிங்கள கொடூரத்தின் முன்னர் எமது போராட்ட முறைகள் நியாயமானவை என்பதை உணரவைக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.