Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புனித வாரத்திற்கு தயாராவோம்....

Featured Replies

புனித வாரத்திற்கு நாம் தயாராவோம்

tnpl.jpgtnpm.jpg

புனித புதனுடன் ஆரம்பமான தவக் காலத்தின் இறுதிக்கட்டத்தை நாம் நெருங்கியுள்ளோம். திருப்பாடுகளின் புனித வாரம் இவ்வார குருத்தோலை ஞாயிறுடன் 17.04.2011 ஆரம்பமாகிறது.

பெரிய வியாழன், புனித வெள்ளி, புனித சனி என அவ்வாரத்தின் திருநாட்களையடுத்து கிறீஸ்துவின் உயிர்ப்புப் பெரு விழாவைக் கொண்டாடுவதற்கும் நாம் வரும் குருத்தோலை ஞாயிறு தினத்திலிருந்தே ஆயத்தமாகி வருகிறோம்.

இறை சித்தத்தை ஏற்று இயேசு நம் பாவங்களுக்காக பாடுகள் பல பல பட்டு சிலுவைச் சாவை ஏற்று உயிர்விடப் போவதையடுத்து, ஜெருசலேம் நகருக்கு அரச பவனியாக வந்த நாள் இன்று.

நமது மீட்பர் இயேசு மனுக்குலத்தின் மீட்பினை நிறைவாக்க, குருத்தோலை தாங்கியவராய் ஜெருசலேமுக்கு வருகின்றார். நமக்காகப் பாடுகள் பட்டு, கல்வாரி மலையிலே களப் பலியாகி, உயிர்த்த மீட்பின் நிறைவின் தொடக்க நாளாக குருத்தோலை ஞாயிறு (17.04.2011) நினைவு கூரப்படுகின்றது.

இறைமகன் யேசுவின் திருப்பாடுகளை நம் மனக்கண் முன் நிறுத்தி, நமது பாவங்களுக்காக வருந்தவும், மனந்திருந்தி வாழவும் மீட்பைப் பெறவும் அழைப்பதுதான் இன்று ஆரம்பமாகும் புனித வாரம் எமக்குப் போதிக்கின்றது புனித வாரத்தில் பெரிய வியாழக்கிழமையில் வரும் இறுதி இராப்போசன வழிபாடுகளில் பாதம் கழுவும் சடங்கு அன்புக்கும் சமத்துவத்துக்கும் தாழ்ச்சிக்குமான புதிய பாடத்தை எமக்குக் கற்பிக்கின்றது.

இவ்வுலகில் அனைவரும் சமம். உயர்வு, தாழ்வு என்று ஒன்றில்லை. இறைமகன் முன்னிலையில் அனைவரும் சகோதரர்கள். எவரும் எஜமானரோ எவரும் அடிமைகளோ அல்ல. அத்தகைய ஆணவம் எமது இதயங்களில் இருக்குமானால் அந்த எண்ணங்களை நாம் இந்நாளில் நீக்கிவிட இறைவன் நம்மை அழைக்கின்றார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாம் பாடுபட முன்னர் தம் சீடர்களுக்கு இராப்போசனமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் தம்மைக்காட்டிக் கொடுக்கப் போகும் யூதாசும் இருந்ததை அவர் அறிவார். எனினும் யூதாஸை அவர் எதிரியாகப் பார்க்கவில்லை. அந்த இராப்போசன பந்தியில் ஏனையவர்களுக்குச் சமமாக யூதாஸையும் அவர் கௌரவிக்கின்றார். யூதாஸை அவர் ஒதுக்கவில்லை.

இந்நிகழ்ச்சி ஊடாக இறைவன் நம் எதிரிகளையும் நமக்கு வேண்டாதவர்களையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் அவர்களையும் மதிக்க வேண்டும் என்பதை உணர்த்தி நிற்கின்றார்.

இறைமகன் தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகும் யூதாஸை ஏற்றுக் கொண்டு அவரையும் மன்னித்து அவருடனான உறவையும் தக்க வைத்துக்கொள்ள முற்படுவது மன்னிக்கும் மனப்பாங்கை நம்மில் வளர்க்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றது நமது வாழ்வில் செபம் மிக முக்கியமானதாகிறது. குறிப்பாக இத்தவக்காலத்தில் ஒரு போதுமில்லாதவாறு நாம் செப தபங்களிலும் பல்வேறு ஒறுத்தல் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றோம். எனினும் அதன் பிரதிபலன் என்ன? எமது செயலும் செபமும் ஒன்றோடொன்று முரண்டுகின்றபோது அதற்கான பெறுமதி என்ன?

நமது செபங்களில் எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் பாவங்களையும் மன்னித்தருளும் என மன்றாடுகிறோம். இத்தகைய செபங்களை நாம் வெறும் வார்த்தைகளில் மட்டும் தானா கடைப்பிடிக்கின்றோமோ? அன்றேல் நம் நாளாந்த வாழ்வில் இவற்றைக் கடைப்பிடித்து வாழ்கின்றோமா?

இத்தவக்காலத்தில் நாம் எம்மையே திருப்பிப் பார்த்து திருத்திக் கொண்டு அதன்பின் இயேசுவோடு ஒன்றிப்பதுவே நல்ல கத்தோலிக்கனுக்குரிய அடையாளமாகும்..

இந்தத் தவக்காலம் நம் வாழ்வை மாற்றியமைக்கட்டும். நம்மில் உள்ள துர்க்குணங்களை களைந்து இறைமகன் காட்டிய வழியில் நம் வாழ்க்கைப் பயணத்தை தொடர நம்மை இறைவன் வழி நடத்துவார் என்ற நம்பிக்கையில் செபிப்போம். இறைவன் தனது அருட்கொடைகளை நமக்கு வழங்கி நம் வாழ்வில் புதிய அத்தியாயங்களை தோற்றுவிப்பார்.

நன்றி: http://salasalappu.com/?p=27746

நமது செபங்களில் எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் பாவங்களையும் மன்னித்தருளும் என மன்றாடுகிறோம். இத்தகைய செபங்களை நாம் வெறும் வார்த்தைகளில் மட்டும் தானா கடைப்பிடிக்கின்றோமோ? அன்றேல் நம் நாளாந்த வாழ்வில் இவற்றைக் கடைப்பிடித்து வாழ்கின்றோமா?

நன்றி: http://salasalappu.com/?p=27746

:(:huh:

  • 11 months later...
  • தொடங்கியவர்

புனித வாரத்திற்கு நாம் தயாராவோம்

tnpl.jpgtnpm.jpg

புனித புதனுடன் ஆரம்பமான தவக் காலத்தின் இறுதிக்கட்டத்தை நாம் நெருங்கியுள்ளோம்.

...

நன்றி: http://salasalappu.com/?p=27746

விபூதிப் புதன்/ சாம்பல் புதன் என்று அல்லவா கூறுவார்கள்?

  • தொடங்கியவர்

புனித புதன் என்று அழைப்பது குறைவுதான். விபூதிப் புதன் அல்லது திருநீற்றுப்புதன் என்று தான் நானும் அறிந்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் என்டால் சாம்பல் அடிப்பாங்கள்,முட்டை அடிப்பாங்கள் இங்கு ஒருதரும் அடிப்பதில்லையோ :unsure:

ஊரில் என்டால் சாம்பல் அடிப்பாங்கள்,முட்டை அடிப்பாங்கள் இங்கு ஒருதரும் அடிப்பதில்லையோ :unsure:

யாருக்கு? :mellow: எதுக்கு ரதி? :blink: விபூதிப் புதனுக்கு அப்படி யாரும் செய்ததாக ஊரில் நான் கேள்விப்படவில்லை. :rolleyes:

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு? :mellow: எதுக்கு ரதி? :blink: விபூதிப் புதனுக்கு அப்படி யாரும் செய்ததாக ஊரில் நான் கேள்விப்படவில்லை. :rolleyes:

நாங்கள் கிழக்கு மாகணத்தில் இருக்கும் போது விபூதிப் புதனன்று பெடியங்கள்,பெட்டையளை கலைச்சு,கலைச்சு சாம்பலடிப்பாங்கள் பிறகு வெள்ளியன்று முட்டை அடிக்கிறவங்கள்[சாம்பலடியையும் பார்க்க முட்டையடி தான் கூட விழுகிறது பெட்டையளுக்கு]...லண்டனில் கூட முட்டையடிக்கிறதை சில இடங்களில் கண்ட ஞாபகம் ஆனால் ஏன் அடிக்கிறவர்கள் என்பதை மறந்து போய் விட்டேன் ஆனால் கத்தோலிக்க மதத்தில் அப்படி ஒரு வழக்கம் இருக்கிறதாம்...யாராவது இது பற்றி தெரிந்த கிரிஸ்தவர்கள் தெளிவு படுத்தினால் நல்லது

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி அதிகம் தெரியாதபடியால் பார்வையாளனாக மட்டும் நின்று கொள்கின்றேன்.

நாங்கள் கிழக்கு மாகணத்தில் இருக்கும் போது விபூதிப் புதனன்று பெடியங்கள்,பெட்டையளை கலைச்சு,கலைச்சு சாம்பலடிப்பாங்கள் பிறகு வெள்ளியன்று முட்டை அடிக்கிறவங்கள்[சாம்பலடியையும் பார்க்க முட்டையடி தான் கூட விழுகிறது பெட்டையளுக்கு]...லண்டனில் கூட முட்டையடிக்கிறதை சில இடங்களில் கண்ட ஞாபகம் ஆனால் ஏன் அடிக்கிறவர்கள் என்பதை மறந்து போய் விட்டேன் ஆனால் கத்தோலிக்க மதத்தில் அப்படி ஒரு வழக்கம் இருக்கிறதாம்...யாராவது இது பற்றி தெரிந்த கிரிஸ்தவர்கள் தெளிவு படுத்தினால் நல்லது

ஊரில் விபூதிப் புதனுக்கு இப்படி செய்பவர்கள் என்று நான் கேள்விப்பட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை!

ஆனால் ஊரில் (ஏப்பிரல் பூல்) முட்டாள்கள் தினத்தன்று இப்படி நடக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன். லண்டனில் ஹாலோவின் நாள் என்று வீட்டு ஜன்னல்கள், வாகனங்களுக்கும் அவிக்காத முட்டை/ அவித்த முட்டை என்று எறிவார்கள். ஆனால் அது சட்டப்படி குற்றமாகும்!

நாங்கள் கிழக்கு மாகணத்தில் இருக்கும் போது விபூதிப் புதனன்று பெடியங்கள்,பெட்டையளை கலைச்சு,கலைச்சு சாம்பலடிப்பாங்கள் பிறகு வெள்ளியன்று முட்டை அடிக்கிறவங்கள்[சாம்பலடியையும் பார்க்க முட்டையடி தான் கூட விழுகிறது பெட்டையளுக்கு]...லண்டனில் கூட முட்டையடிக்கிறதை சில இடங்களில் கண்ட ஞாபகம் ஆனால் ஏன் அடிக்கிறவர்கள் என்பதை மறந்து போய் விட்டேன் ஆனால் கத்தோலிக்க மதத்தில் அப்படி ஒரு வழக்கம் இருக்கிறதாம்...யாராவது இது பற்றி தெரிந்த கிரிஸ்தவர்கள் தெளிவு படுத்தினால் நல்லது

ரதி நீங்கள் கிழக்கு மாகாணத்தில் எங்கே இருந்தீர்கள். அங்கு இப்படியெல்லாம் செய்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி நீங்கள் கிழக்கு மாகாணத்தில் எங்கே இருந்தீர்கள். அங்கு இப்படியெல்லாம் செய்வதில்லை.

மட்டக்களப்பில்

கத்தோலிக்கர்கள் 'சாம்பல்' என்று அழைப்பதாக ஞாபகம்.

விபூதி, திருநீறு என்பது சைவசமயம் சார்ந்தது. விபூதிப் புதன் / திருநீற்றுப் புதன் என்று அழைப்பது பிழை.

ஆறுமுகநாவலர் ஐயாவை மேடைக்கு அழைக்கிறேன்.

மட்டக்களப்பில்

மட்டக்களப்பு (நகரம்) என்றால் என்றால் புளியந்தீவா / கோட்டைமுனையா? அல்லது வடக்கே ஏறாவூர், செங்கலடி....... தெற்கே குருக்கள்மடம், களுவாஞ்சிக்குடி.... தப்பினால் எழுவாங்கரை படுவாங்கரை ஆகிய பிரதேசங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு (நகரம்) என்றால் என்றால் புளியந்தீவா / கோட்டைமுனையா? அல்லது வடக்கே ஏறாவூர், செங்கலடி....... தெற்கே குருக்கள்மடம், களுவாஞ்சிக்குடி.... தப்பினால் எழுவாங்கரை படுவாங்கரை ஆகிய பிரதேசங்களா?

டவுணில் தான் முக்கியமாக சென் மைக்கல் மாணவர்கள் தான் கூடுதலாக சிசிலியா பெண்கள் பாட‌சாலை மாணவிகள் மீது அடிப்பார்கள்

டவுணில் தான் முக்கியமாக சென் மைக்கல் மாணவர்கள் தான் கூடுதலாக சிசிலியா பெண்கள் பாட‌சாலை மாணவிகள் மீது அடிப்பார்கள்

அந்தப் பகுதியில் நான் படித்ததில்லை. சென் மைக்கல் பொடியனுகளுக்கு, சிசிலியா கொன்வென்ட் பொட்டைகளுடன் ஒரே 'காண்டு' என்று தெரியும்.

வேறு இடங்களில் அப்படி நடந்ததாகத் தெரியவில்லை.

'ஏப்ரல் பூல்' தினத்தில் மாத்திரம், திரத்தித் திரத்தி அடிப்போம்.

  • தொடங்கியவர்

நாளை பெரிய வியாழன் இறுதி இராப்போசன நாள்

உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்கள் கிறீஸ்தவர்களினால் நாளை பெரிய வியாழன் எனப்படும் புனித வாரத்தின் யேசுக்கிறிஸ்துவின் இறுதி இராப்போசன நிகழ்வு அனுஸ்டிக்கப்படுகின்றது.

நற்கருணை அன்பின் வெளிப்பாடு; அருள் வாழ்வின் ஒற்றுமையின் சின்னம்; வாழ்வின் மையம், ஆன்மீக உறவு என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.

உலகின் மீது அன்பு கொண்ட இறைவன் தன் ஒரே மகனை உலகின் மீட்புக்காக உலகிற்கு அனுப்பினார். அன்பே உருவான இயேசு தம் வாழ்வாலும் வார்த்தையாலும் அன்பை வெளிப்படுத்தினார். இவ்வுலக மனிதர்கள் நாம் செய்யும் பாவங்களுக்காக யேசு இறைவனின் சித்தத்தை ஏற்று தன்னையே பலிக்கடாவாக்கினார்.

இயேசு ஒருவரே சொன்னதை செய்தவரும் செய்ததை சொன்னவராகவும் திகழ்கின்றார்.

உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு கூட இருப்பேன் என்று சொன்னவர், இறுதியில் அன்பின் சின்னமாக தமது இருப்பின் அடையாளமாக நற்கருணையை ஏற்படுத்தினார். இது பெரிய வியாழன் அன்று நடைபெற்ற புனிதமான நிகழ்ச்சியாகும்.

மனிதம் மலர வேண்டும் மானுடம் வாழ வேண்டும் என்பதே இறை மகன் இயேசுவின் இலட்சியக் கனவு. கூடி வாழவும் பகிர்ந்து கொள்ளவும் பணித்தார். யேசுகிறிஸ்துவின் பிரசன்னமே நற்கருணை பிரசன்னம். உலக இறுதி வரை வாழ்வோம்.

அனைவரும் மீட்புபெற நற்கருணையை உண்டாக்கினார். அநீதியும் அடக்குமுறையும் அதிகார அத்துமீறல்களும் ஒடுக்குவதும் ஓதுக்குவதும் அறவே இல்லாத ஒரு புதிய சமுதாயத்தைப் படைக்கவே இயேசு தன்னை அர்ப்பணித்தார்.

இயேசு தன்னுடைய மூன்றாண்டு காலப் பணிவாழ்வில் தன்னோடு இணைத்துக் கொண்ட பன்னிரு நண்பர்களோடு கடைசி இராப்போசனத்தை உட்கொண்டார். வாக்களித்தபடியே தாம் இவ்வுலகினின்று தந்தையிடம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்று இயேசு அறிந்திருந்தார். இராப்போசனம் நடைபெறலாயிற்று.

இயேசுவைக் காட்டிக் கொடுக்குமாறு சீமோனின் மகனான யூதாஸ் இஸ்காரியோத்தை ஏற்கவே பசாசு தூண்டியிருந்தது.

நண்பர் என்ற சொல்லுக்கு அர்த்தங்கள் ஆயிரம். நாம் இயேசுவை மறுதலித்தாலும் அவரை விட்டுப் பிரிந்தாலும் அவர் நம்மை வெறுப்பதில்லை. மாறாக அவர் நம்மை என்றும் தம் குழந்தைகளாகவே வாழ்விக்கின்றார். வழிநடத்துகின்றார். இறைமகனுக்கு ஏற்ற வாழ்வு நம்மிடம் இருக்கிறதா…? நாம் வாழும் சமூகத்தில் மற்றவர்களை நம்மிடம் பழகுபவர்களை எத்தனை இடர்ப்படுத்தியிருக்கின்றோம்..? நிந்தனை செய்திருக்கின்றோம்…….? மறுதலித்திருக்கின்றோம்…..? இவற்றை எல்லாம் நாம் விட்டுவிட வல்ல தேவன் நமக்கு மன்னிப்பு அளித்து நமக்கு புதுவாழ்வு தந்திடுவார்.

இன்றைய இராப்போசன நிகழ்விலே யேசு தம் சீடரின் பாதங்களை கழுவிக் கொள்கின்றார். தன்னையே தாழ்த்தி தன் சீடர்களுக்கு பணிவிடை செய்கின்றார் மனுமகன்.

நம்மவர்களில் எத்தனை பேர் இந்தத் தாழ்மையை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் வாழ்கின்றோம். நவநாகரீகமான உலகிலே நம்மை நமது ஆளுமையை பணத்தை செல்வாக்கை காட்டி உலகில் பகட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவற்றை எல்லாம் நாம் விட்டு விடக்கூடிய மனவலிமையையும் தேவையுள்ளோருக்கு பணி;விடை செய்யக்கூடிய மனத்தாழ்ச்சியையும் இறைமகன் யேசுவிடம் வேண்டி நிற்போம்.

இன்றைய காலகட்டத்தில் குருத்துவத்திற்கான அழைப்பு நிலைகள் அருகி வரும் நிலையையே நாம் காணக்கூடியதாக உள்ளது. லௌகீக வாழ்வை மறுத்து இறைவனுக்கு சேவை செய்யக்கூடிய குருக்கள் கன்னியாஸ்திரிகளுக்கான அழைப்பின் தேவை உலகிலே பெருகி வருகின்ற நிலையில் இந்தத் தேர்வுகளுக்கு ஏற்ற பணியாளர்கள் உலகில் அழைக்கப்பட வேண்டி நிற்போம்.

அத்துடன் இந்த இறைபணியில் இதுவரை சேவையாற்றிக் கொண்டிருக்கும் ஆயர்கள்;, அருட்தந்தையர், அருட்சகோதரிகள் தத்தம் பணியினை செவ்வனே ஈடுபடக்கூடிய உடல் உள வலிமையை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று வேண்டிக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

இன்றைய பெரியவியாழன் நாளில் இறைமகன் எமக்கு உணர்த்தி கடப்பாடுகளை நாம் செவ்வனே உணர்ந்தவர்களாக நமது கடமைகளை முன்னிறுத்தி நம் முன்னுள்ள தேவைகளுக்காக அவரிடம் இரந்து மன்றாடுவோம்.

நன்றி: tamiluk.net

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்

பெரிய வெள்ளி – சிலுவைத் தியாகம் – உன்னதத்தின் ஆறுதல்!

jesus4-300x300.jpg

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம். (எசாயா 53:5)

உலகம் முழுவதும் யேசுவின் மரணத்தை பல கோணங்களில் நினைவு கூர்வதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இன்று தேவன் உன்னைப்பார்த்து கேட்கும் கேள்வி நீ எப்படி எனது மரணத்தை நினைவு கூருகிறாய்? இதற்கான பதிலை நீயறிய இந்த எசாயாவின் புத்தகம் 53ம் அதிகாரம் முழுவதையும் மிக அமைதியாகவும், தியானத்தோடும் வாசித்து தியானிப்பாய் ஆகில் இந்த சிலுவையின் தியாகத்தை உன்னால் அறிய முடியும். அதின் மறைவில் மறைந்திருக்கும் தியாகத்தின் அன்பை உன்னால் மறக்கவோ, மறைக்கவோ முடியாது. 2010 ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் இப்படியான ஒரு நாளைக் கண்டிராவிட்டால் மனுக்குலத்தின் கதி இன்று எப்படியிருக்கும் என்று நீயே சிந்தித்துப்பார்.

யேசு சிலுவையில் மரித்தார் என்பதல்ல பெரிய வெள்ளி. தேவன் தாம் படைத்த மக்கள் தன்னைமறந்து, தன்னுடைய வழிகளை விட்டு அவனவன் தன்தன் வழியிலே போய், தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து, தேவமகிமையைக்காண முடியாமல் இருந்த பாவம் என்ற அந்த தடைச்சுவரை சிலுவை மரணத்தின் முPலம் தகர்த்து மனுக்குலத்திற்கு விடுதலையைத் தந்தநாள். பிரிவும் உறவும் மீண்டும் சந்தித்த நாள். இத்தனையும் நடந்து முடிய ஓர் தியாகம் நடக்க வேண்டியிருந்தது. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்.

வசனம் 10. ஒரு விசேசித்த பலி ஒன்றை செலுத்த வேண்டியிருந்தது. காரணம் இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்று வேதம் மிகத்தெழிவாக கூறுகிறது. பிரிவும் உறவும் சந்தித்த இடத்திலே, பிரிந்திருந்த உறவை மீண்டும் சீர்படுத்த இரத்தம் சிந்தப்படவேண்டியதாக இருந்தது. அந்த இரத்தத்தினால் நமக்கு நித்திய ஜீவன் அருளப்பட்டது. யேசு தமது ஆத்துமா, சரீரத்தை உலக மக்களின் விடுதலைக்காக வருத்தப்படுத்த வேண்டியிருந்தது. காரணம் வசனம் 11 இவ்வாறு கூறுகிறது. அவர் தமது ஆத்தும வருத்தத்தின்பலனைக் கண்டு திருப்தியாவார்.

அவர் எவ்வாறன தனது ஆத்தும வருத்தத்தின் பலனை உன்னிடத்தில் காணவிரும்புகிறார்? அவர் கொடியசவுக்கினால் அடிக்கப்பட்டு, முள்முடி தரிக்கப்பட்டு, ஆணிகளால் கடாவப்பட்டு இரத்தம் தோய்ந்த கண்களுடன் சிலுவையில் தொங்கியவராக ஏதோவொன்றைக் காணவிரும்புகிறார். வெளிப்படுத்தல் 7:9,14 இவ்வாறு கூறுகிறது. இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.

அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்@ இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். இந்த கூட்டத்தில் நீயும் ஒருவனாக இருக்கிறியா? அல்லது இந்தத்தியாகத்தை உணராதவனாக, அறியாதவனாக நீ இருக்கிறியா? சற்று சிந்தித்துப்பார். மேலே வாசித்த 9,14 ம் வசனங்களில் சொல்லப்பட்டவனாக, அதாவது யேசுக்கிறீஸ்த்துவின் இரத்தத்தால் பாவங்கள், சாபங்களிலிருந்து கழுவிப் பரிசுத்தமாக்கப்பட்டு தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக நீ நிற்பதைக் யேசு காணும்போது தனது ஆத்துமவருத்தத்தின் பலனைக் உன்னில் கண்டு; அவர் திருப்தியாவார். மாறாக அங்கு உன்னைக் காணவிட்டால் துக்கத்தோடு உன்னைப்பார்ப்பார். காரணம் நித்தியம் நித்தியமாக தேவனுடன் வாழும் வாழ்கையை உதாசீனம் செய்துவிட்டு, நித்திய நரக வாழ்க்கையை நீ அனுபவிக்கப் போகிறாய் என்று.

பிரியமான சகோதர சகோதரிகளே, கடவுள் மனிதர்களைப் படைத்தது, தம்மை நாம் அறிந்து நேசித்து சேவிக்கவும், அதனால் மோட்சத்தை அடையவுமே என்று நாம் சிறுபிள்ளைகளாக இருந்த போது பாடசாலைகளில் சொல்லித்தந்ததை உங்களுக்கு இன்று நினைவுபடுத்த விரும்புகிறேன். இன்று தேவன் தம்மையும், தமது தன்மையையும் அறிந்து கொள்ளும் படியான ஓர் வேளையை உங்கள் முன் வைக்கிறார். அந்த வேளையை நீ உனதாக்கிக்கொள்ள விரும்பினால், உனக்கு அறிமுகமான கிறீஸ்த்தவர்களுடன் தொடர்புகொண்டு ஆலயத்திற்குப் போய் உன்னை ஒப்புக்கொடுத்து, தேவனை ஆராதிக்கிறபிள்ளையாகமாறு. அப்போது கர்த்தர் உன்னை பரிசுத்தப்படுத்தி புதுவாழ்வு தருவார்.

அன்பின் பரலோக பிதாவே, இன்று இந்த நல்ல தீர்மானத்தை எடுத்த அத்தனை பேருக்காகவும் உமக்கு நன்றி அப்பா. அவர்கள் எடுத்த தீர்மானத்தில் நிலைத்திருந்து, எசாயா 53:5இல் உள்ளபடி உம்முடைய தழும்புகளால் குணமாகிறோம் என்பதற்கிணங்க பாவம் என்கிற மரணத்தில் இருந்து நித்தியஜீவன் என்கிற புதுவாழ்வைப் பெற்று உம்மிலே நிலைத்திருந்து வாழ உதவி செய்யும் பிதாவே,

ஆமென்.

நன்றி: alaikal.com

  • கருத்துக்கள உறவுகள்

oster-eier%2Bgross.png

இங்கு பெரிய வெள்ளிக்கு, முட்டைகளை.... தோட்டத்தில் ஒளித்து வைப்பார்கள். பிள்ளைகள் தேடி எடுப்பார்கள்.

இதற்கென்று கடைகளில்... கலர்,கலரா முட்டை விற்பார்கள்.

  • தொடங்கியவர்

முயலுக்கும், வண்ண முட்டைகளுக்கும் ஈஸ்டருக்கும் என்ன சம்மந்தம்?

இது கிறீஸ்தவர்களுக்கு, மிகப் புனிதமானதும், முக்கியமானதுமான ஒரு பெருநாள். கிறீஸ்துவின் உயிர்ப்பைக் குறிக்கும் ஒரு பெருநாள்.

அப்படியானால் , இந்த முயலும், வண்ண முட்டைகளும், கோழிக்குஞ்சுகளும், லில்லி மலர்களும் எங்கிருந்து வந்தன? இதற்கும் ஈஸ்டர் பெருநாளுக்கும் என்ன சம்பந்தம்?

இவையெல்லாம் மறுபிறப்பின் சின்னங்கள்!

வெள்ளைப்பனி படர்ந்த பூமியாக, இலைகளையெல்லாம் பறிகொடுத்து விட்டு மொட்டை மரங்களாக, பச்சை என்பதே அடியோடு பறந்துவிட்ட நிலையில் , மெல்ல மெல்லத் துளிர்த்து, பச்சைகளை இழுத்து வருவதுதான் வசந்தம்.

இந்த ஈஸ்டர் பெருநாள் வருவதும் பூமி தன்னைப் புதுப்பிக்க ஆரம்பிக்கும் வசந்த காலத்தில்தான்! இங்கே அஞ்ஞானியிசம் அல்லது அஞ்ஞஞானித் தத்துவம் என்பதுஆபிரகாமிய சமயங்களாக, ஈஸ்டர் என்றதும், அஞ்ஞானியிசம் (Paganism) பற்றி சில வரிகள் சொல்லியாக வேண்டும்.

இது கிறீஸ்தவம், இஸ்லாம், யூதம் ஆகிய சமயங்களைச் சாராமல் , தொன்ம ஐரோப்பிய நம்பிக்;கைகளைக் குறிக்கின்றது. அஞ்ஞானியர் எனப்படுபவர் அத்தகைய நம்பிக்கை உடையோர். கிறீஸ்தவம் ஐரோப்பாவில் பரவ முன்னர் அஞ்ஞானிகள் செல்வாக்குப் பெற்றிருந்தார்கள்.

இந்த அஞ்ஞானிகளின் பெண் தெய்வத்தின் (Pagan Goddess) பெயர்தான் Eostre. இந்தத் தெய்வத்தைச் சுற்றித்தான் புதிய பிறப்பும், சூரிய வெப்பம் அதிகரிக்கும் காலமும் சுழன்று வந்தது. எனவே இந்த ஈஸ்டர் என்ற பெயரின் அடி இதுவாக இருக்கலாம்.

ஏராளமான குட்டிகளைப் போட்டு வேகமாகப் பல்கிப் பெருகுவது முயலின் சுபாவம். சினைப்படுதலும், பல்கிப் பெருகுதலையும்-அதாவது நிறைந்த வளச்சியைக் குறிப்பதுதான் முயல்.

இனி முட்டைக்கு வருவோம். எகிப்தியர்கள், பாரசீகத்தவர்கள் (இன்றைய ஈரானியர்கள்), இந்துக்கள், தமது வாழ்வு ஒரு பெரிய முட்டையிலிருந்துதான் திடமாக நம்பினார்கள். எனவே ஒரு புதிய வாழ்வு மலர்வதைக் குறிப்பதுதான் முட்டை.

12ம் நூற்றாண்டின் ஆங்கிலேய மன்னரான முதலாவது எட்வேர்ட், தனது குறிப்பேடு ஒன்றில் 450 முட்டைகளை ஈஸ்டர் பரிசுகளுக்காக நிறமூட்ட, 18பென்ஸ் செலவழித்ததாக ஒரு குறிப்பை எழுதி வைத்த சான்றுகள் இருக்கின்றன. கிறீஸ்தவர்களாக பல நூறு வருடங்களுக்கு முன்பு வாழந்திருந்த வட ஆபிரிக்க இனமொன்று, வண்ண முட்டைகளை ஈஸ்டர் பெருநாளில் கைமாறிக் கொண்ட குறிப்புகள் இருக்கவே செய்கின்றன.

முன்னைய காலத்தில், நீண்ட மாரி காலம் என்றால், உணவுத் தட்டுப்பாடான காலமாகவே இருந்தது. இந்த நிலையில் ஈஸ்டர் முட்டை ஒன்று கிடைப்பது என்பது அப்பொழுதெல்லாம் பெரிய விடயமாகவே இருந்து வந்திருக்கின்றது. ஈஸ்டர் பெருநாளுக்கு முன்பு வரும் தபசு காலத்தில் கிறீஸ்தவர்கள் மாமிசம் உண்ணுவதிலிருந்து விலக்கப்பட்டிருந்தார்கள். நீண்ட இடைவெளியின் பின்னர் முட்டையோ அல்லது மாமிசமோ உண்பதற்கு கிடைக்கும் முதல் வாய்ப்பு ஈஸ்டர் பெருநாள்தான்.

நன்றி:tamil6.ch

ஜேர்மனியில் ஒருவர் 10,000 முட்டைகளை கொண்டு ஒரு அப்பிள் மரத்தை அலங்கரித்திருக்கின்றார்.

http://www.telegraph...G39oR3XnvfMpJFu

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சைபாருங்கோ...இந்த அநியாயத்தை...தமிழினி அக்கா ஒருமாதிரி மெளத்தைத் திறந்திட்டாங்கள்... அழகான திரி...நன்றி அக்கா இணைப்பிற்கு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.