Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

52 நிமிடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இப்படித் தான் வாழ வேண்டும் என ஒரு நியதி இருக்குது அல்லவா! அதன்படியே தான் வாழ வேண்டும் :) மாறாக யாராவது எதிர் மறையாக சிந்தித்தால் அவர்கள் தங்களை நடத்தை கெட்டவர்கள் என்டு சொல்லி விடுவார்களோ என்ட பயத்தில் உண்மையை மறைத்து விடுவார்கள்...அது சரி இந்த கதைக்கு நிழலின் கருத்தைக் காணோம் :D:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் உங்களை கட்டுரையாளனாகத்தான் இதுவரை அறிந்திருக்கிறோம். இந்தக் கதையின் மூலம் ஒரு புதிய கோணத்தில் உங்களை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். 52 நிமிடங்கள்தான் எவ்வளவு நூதனமாக உங்களின் கதை சொல்லும் பாணி அமைந்திருக்கிறது. பார்வைகள் கவ்வுதல் என்பது இலகுவாக ஏற்படக்கூடியதல்ல. கவ்வுதலை ஏற்படுத்தக்கூடிய பார்வை 52 நிமிடங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டுவிடுமா? அப்பட்டமாக ஆண், பெண் பிம்பங்கள் மீதான பாலியல் சார்ந்த மோகமாகவே இந்தப் பார்வையை எடுத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. என்னமோ இப்போதெல்லாம் இப்படியான காட்சிகளை பல இடங்களில் பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட காட்சிகளை நீங்கள் எடுத்துவந்து எழுதிய விதம் பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

  • தொடங்கியவர்

ரதி,

தமிழர்கள் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்துச் சமூகங்களுமே சமூகமாக வாழ்வது வரையறைகள் மூலம் தான் சாத்தியப்படுகின்றது. வரையறைகள் என்பது அடிப்படையில் விட்டுக்கொடுப்புக்களே. சட்டங்கள் முதற்கொண்டு எழுதியதோ எழுதாததோ அனைத்து விதிகளும் ஒரு சமூகம் சமூகமாக வாழ்வதற்காகத் (இது குடும்பங்களிற்கும் பொருந்தும்); தனிநபர்கள் கட்டுப்படுத்தப்படவேண்டிய இச்சைககள் அல்லது உந்துதல்களின் பட்டியல்தான். கட்டுப்பாட்டுக்குள் வாழ்வதால் அடையப்படக்கூடிய பொது நன்மைகள் மறுக்கமூடியாதன. ஆனால், அதற்காக மேற்படி தனிநபர் இச்சைகள் மற்றும் உள்ளார ஏற்படும் உந்துதல்கள் இல்லாது போய்விட்டன என்று நிறுவிவிடமுடியாது. கட்டுப்பாடு என்ற சொல்லே கட்டுப்படுத்தப்படவேண்டியது என்று ஒன்று இருக்கும்வரை தான் அர்தம்பெறும். கட்டுப்படுத்துவதற்கு எதுவுமின்றி உலககில் அனைத்து மனிதர்களும் இயற்கையின் பிரகாரம் தான் வாழ்கிறார்கள் என்று ஒரு நிலை வரின் அங்கு கட்டுப்பாடு பற்றிய சிந்தனை எவரிற்கும் எழாது ஏனெனில் அங்கு கட்டுப்படுத்த ஏதும் இருக்காது. ஆனால் உண்மை அதுவல்ல. எவ்வாறு குற்றம் செய்யும் அனைவரும் சிறைசெல்வதில்லையோ அது போன்று கட்டுப்பாடுகளிற்குள் கட்டற்று வாழ்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். மேலும் கட்டுப்பாடு என்பது அனைவரிற்கும் ஒரேவகையில் கைவந்து விடுவதில்லை—பலம் பலவீனங்கள் மற்றும் பெறுமதிகள் மனிதரிற்கு மனிதர் வேறுபடும். இக்கதையில் கட்டுப்பாடுகள் மீது விமர்சனமோ அல்லது கட்டற்ற வாழ்விற்கான வக்காலத்தோ முன்மொழியப்படவில்லை. வெறுமனே ஒரு சாத்தியம் பற்றிப் பேசப்பட்டுள்ளது. அதுவும் நிறையக் கற்பனை கலந்து பேசப்பட்டுள்ளது.

இக்கதையில் ஒரு இடத்தில் இதரகலாச்சார நடனங்களின் பட்டியலை முறி;த்து, “முப்பதுகளின் இருபதுகள் முன்னான கூத்து..” என்று, ஒரு தமிழ் வரைமுறை மீறப்படும் இடத்தில் தமிழர் பாரம்பரிய நடனமான கூத்து எழுதப்பட்டது அப்பாத்திரத்தின் ஆழ்மனதின் குற்றவுணர்வை இயன்றவரை வெளிப்படுத்தவே. அதாவது கட்டுப்பாடுகள் உடைக்கப்படுகையிலும் அல்ல உடைக்கவிழைகையிலும் கட்டுப்பாடு பற்றிய சிந்தனை எழுந்தே தீரும். இதை ஒத்ததே கண்கள் சந்தித்ததும் பெட்டிக்குள் மற்றையவர்கள் செத்துப் போனார்கள் (சமூகம் கட்டுப்பாடு முதலிய அனைத்தும் அவர்களுடன் சாகடிக்கப்பட்டது) என்ற வார்த்தைக்கான தேவையும்.

வல்வைசகாரா,

உங்கள் கருத்திற்கும் ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி. இதுவரை கதை என்று எதையும் முனைந்ததில்லை என்பது உண்மைதான். கட்டுரைகள் மீது ஒரு தற்காலிக ஊடல் ஏற்பட்டுள்ளது, அதனால் ஏற்பட்ட ஒரு ஆரம்ப முயற்சி மட்டுமே இது.

கவ்வுதலை ஏற்படுத்தக்கூடிய பார்வை 52நிமிடங்களோடு மட்டுப்படுத்தப்பட்டுவிடுமா என்ற உங்களின் கேள்;வி நியாயமானது தான். ஆனால் அனைத்து மனிதரும் நாளாந்த வாழ்வில் எம்மையே பிரமிக்கவைக்கும் மட்டுப்படுத்தல்களை மேற்கொண்டவண்ணம் தானே உள்ளோம். தழைகள் ஏராளம் இம்மட்டுப்படுத்தல்களைச் சாத்தியமாக்கிக்கொண்டிருக்கின்றன. ஒருவேளை இக்கதையின் பாத்திரங்கள் அடுத்தநாள் தொட்டு தமது ரெயின் நேரத்தையோ, வழக்கமான பெட்டியையோ மாற்றிக்கொள்ள முடிவெடு;க்கலாம். அல்லது, நீங்கள் கூறியதுபோன்று பார்வை நிலையிருந்து அடுத்தகட்டம் நோக்கி நடக்க முடிவெடுக்கலாம். இந்த இரண்டு தெரி;வுகளுமே ஏறத்தாள சரிசமனாய் நாளாந்தம் தெரிவுசெய்யப்பட்டுக்கொண்டு தானிருக்கின்றன. ஒருவேளை வீரியமான கற்பனை, தொடாமலே தொடுகையினைச் சிருஸ்டிக்கவல்ல நிலை மூன்றாம் தெரிவாக முடியுமா?

கதையில் பதிவுசெய்யப்பட்ட திருமண மோதிரம் என்ற விடயமும் மேற்படி மட்டுப்படுத்தலில் பங்கு வகிக்கும். அன்பிற்கும் கவர்ச்சிக்கும் இடையே பலர் வித்தியாசத்தை உணர்ந்துகொண்டிருப்பதை அவாதானிக்க முடிகிறது. அதே நேரம் கவர்ச்சியினால் அன்பிற்குரியவர்கள் நொந்துவிடக்கூடாத கரிசனையும் பொருளாதாரம் முதலிய இன்னபிற காரணிகளும் பல முடிவுளைச் செப்பனிடுகின்றன. எனினும் முடிவு எவ்வாறு அமையும் என்பது பாத்திரத்திற்குப் பாத்திரம் சந்தர்ப்பத்திற்குச் சந்தர்பம் மாறுபடும். மற்றும் நீங்கள் கூறுவது போன்று இது அப்பட்டமான ஆண்பெண் விம்பங்கள் மீதான பாலியல் மோகம் என்று பார்ப்பதில் தவறிருப்பதாய்த் தெரியவில்லை. ஏனெனில் மனமோ குணமோ இவர்களிற்குத் தெரியாது, வெறுமனே கண்கண்டது மட்டுமே என்பதால் உங்கள் வாதம் சரியாகவே படுகிறது. ஆனால் பாலியல் மோகம் என்பது மனங்களின் இணைதலிற்குக் குறைந்தது என்றோ காதல் காமத்தைக் காட்டிலும் புனிதமானது என்றோ கூறிவிடமுடியாது என்றே எனக்குப்படுகின்றது. அதுபோன்றே கட்டுபாட்டுக் கட்டமைப்பில் ஒரு தேவை அல்லது உணர்வு நியாமானது மற்றயைது அநியாயமானது என்றும் கூறிவிடமுடியாது என்றே படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன்! ஒரு சிக்கலான விடயத்தை கையில் எடுத்து சிகிரியா ஓவியம் போல் நளினமாகவும் ரசனைக்கு உரியதாகவும் வரைந்து விட்டீர்கள் வாழ்த்துகள்! :)

மிக அருமையான கதை இன்னுமொருவன். நிச்சயமாக இது கற்பனைக் கதையல்ல. ஈர்ப்பு (Chemistry) என்பது வயது பார்த்தோ, திருமணமானவரா, திருமணமாகாதவரா, அழகானவரா, அழகற்றவரா என்று பார்த்தோ வருவதில்லை. அது தானாக நடைபெறும் ஒரு விடயம். அது காந்த சக்தியைவிட வலிமையானது. காற்றைவிட வேகமானது. அது செகண்டுகளுக்கும் குறைவான (within fraction of seconds) நேரங்களிலேயே ஏற்பட்டுவிடும். ஈர்ப்பைப் பற்றி ஏற்கனவே எமக்கு அறிமுகம் இருந்தால் மட்டுமே அதனை நாம் உணர முடியும். உதாரணமாக, உணர்வுகளைப் பற்றியோ காதலைப் பற்றியோ அறிந்தோ கேட்டோ அறிந்திராத ஒருவரால் எப்படிக் காதலை உணர்ந்து கொள்ளமுடியாதோ அப்படியே ஈர்ப்பைப் பற்றியும் அறிந்திராதவர்களாலும் அதனைப் பற்றி உணர்ந்து கொள்ள முடியாது. அந்தவகையில், இந்த ஈர்ப்பும் பலருக்குப் புதிதானதொரு விடயம்தான். இந்த ஈர்ப்பு Unconscious மூளையிலிருந்தாலும் அதனை Conscious மூளை ஏற்றுக் கொள்வதில்லை. அதற்குக் காரணம் இதனை இப்படித்தான் ஏற்றுக் கொள்ளவேண்டுமென நாம் மூளையைப் பழக்கப்படுத்திவிட்டதே. எண்ணங்களுக்கு எவ்வாறு கட்டுப்பாடு கிடையாதோ அதேபோலவே இந்த ஈர்ப்பிற்கும் கட்டுப்பாடுகள் கிடையாது. ஆனால், எமது (conscious) மூளை தானாகவே தனக்கு (எமக்கு) அறிமுகமான கட்டுப்பாடுகளை உணர்த்தும். அதனால்தான், இவ்வாறான எண்ணங்கள் மனதில் தோன்றினாலும் தவறுகள் நடப்பது மிகவும் குறைவு.

அதுமட்டுமின்றி, எம்மை நாம் உணராமலே, நாம் வேறு காரணிகளால் இயக்கப்பட்டு அதற்கிசைய இயந்திரங்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் எம்மைப் பற்றியோ, எமது உணர்வுகள் பற்றியோ சிந்திப்பதோ அலசி ஆராய்வதோ கிடையாது. நாம் எம்மை உணர்ந்து வாழும்போது மட்டுமே வாழ்க்கை மிகவும் அழகாகவும் முழுமையாகவும் இருக்கும்.

யதார்த்தமாக இந்தக் கதையை எழுதியிருக்கிறீர்கள். பலர் இதனை வெளிப்படையாக ஏற்க மறுத்தாலும், யதார்த்தம் இதுதான் என்பதை நிச்சயம் உணர்வார்கள்.

குவளையின் விளிம்பினை முகர்ந்து, குடுவைக்குள் ரசத்தினை வட்டமாய் ஆட்டி, அனுபவத்தையும் பக்குவத்தையும் அவைகூறும் கதைகளையும் முகர்ந்தபடி இரசத்தினை அவள் பருகத் தொடங்கியிருந்தமை என் கற்கனைக்குள் கைப்பட்டது.

உங்களின் ரசனை அருமையாக உள்ளது.

  • தொடங்கியவர்

சுவி, தமிழிச்சி உங்கள் கருத்திற்கும் இரசனைக்கும் மிக்க நன்றி.

தமிழிச்சி,

கற்பனைக்கு ஏதோ ஒரு இன்ஸ்ப்பறேஷன் தேவைதான். வெற்றிடத்தில் இருந்து கற்பனை வந்துவிடமுடியாது என்பதை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். அதற்குமேல் எல்லாம் கற்பனையே.

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை.. இதில் தறிகெட்டு ஓடிய மிருகத்தைப் பற்றி பேசத் துணிந்த உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள் ஒருவனுக்குள் இருக்கும் இன்னுமொருவன்.

  • தொடங்கியவர்

மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை.. இதில் தறிகெட்டு ஓடிய மிருகத்தைப் பற்றி பேசத் துணிந்த உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள் ஒருவனுக்குள் இருக்கும் இன்னுமொருவன்.

உங்களது பின்னூட்டத்தைப் படிக்கையில் ஒருவேள உங்களிற்கு இப்பதிவு அசௌகரியத்தை ஏற்படுத்தியதோ என்றே எண்ணத்தோன்றுகின்றது. இ;ப்படி ஒரு பதிவை இடும் போது இவ்வாறான எதிர்வினை கட்டாயம் எதிர்பார்க்கப்படவேண்டியது தான். உங்கள் கருத்திற்கு நன்றி.

மனிதன் அடிப்படையில் ஒரு மிருகம் என்பதில் எனக்கு எவ்வித முரண்பாடும் இல்லை. மனிதம் என்ற கட்டுப்பாட்டுக் கட்டமைப்பிற்குள் உள்ள பேசாப்பொருட்களில் எவை எவ்வாறு பேசப்படலாம் என்பது முடிவற்ற விவாதப் பொருள்தான்

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம், :unsure:

அவர் அவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம்....

யோசித்து பார்த்தேன், இதை சொல்லகூடிய மனைவி இருத்தால் எப்படி இருக்கும் என்று. இடக்கிற சொல்லுகிரனான்..இப்படி ஒராள் வந்தது கொஞ்சநேரம் லொள்ளு விட்டது என்று ..அனால் இப்படி சொல்லியதில்லை..ஆனால் அப்படி உணர்வுகள் வந்து போனதில்லை என்றும் சொல்ல மனம் வரவில்லை .

  • தொடங்கியவர்

ம்ம்ம், :unsure:

அவர் அவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம்....

யோசித்து பார்த்தேன், இதை சொல்லகூடிய மனைவி இருத்தால் எப்படி இருக்கும் என்று. இடக்கிற சொல்லுகிரனான்..இப்படி ஒராள் வந்தது கொஞ்சநேரம் லொள்ளு விட்டது என்று ..அனால் இப்படி சொல்லியதில்லை..ஆனால் அப்படி உணர்வுகள் வந்து போனதில்லை என்றும் சொல்ல மனம் வரவில்லை .

கருத்திற்கு நன்றி வொல்கேனோ. இவ்வாறான விடயங்கள் பற்றிப்பேசுவது சிக்கலானதும் ஆபத்தானதும் தான். ஆனால் பேசாது விடுவதால் அத்தகைய உணர்வுகளும் மனநிலைகளும் நமது சமூகத்திற்கு அந்நியமானவை என்று அர்த்தமாகிவிடாது--இதைப்பற்றி எல்லாம் பேசத்தான் வேணுமா என்பது ஒருவேளை விவாதத்திற்குரிய கேள்வியாக இருக்கக்கூடும், ஆனால் இவ்விடயம் எமது சமூகத்தவர்களிற்கு அந்நியமானது என்று நாம் கூறிவிடமுடியாது. இத்தகைய விடயங்கள் பொதுவெளியில் பேசப்படுகையில், சில தருணங்களில் வாசகர் அல்லது கேட்போரில் எதிர்வினையாகக் கோபம் வெளிப்படுவது எதிர்பார்க்கக்கூடியது தான். இக்கோபத்திற்குக் கூட பல காரணங்கள் இருக்கலாம். எனினும், இத்தலைப்பைப் பொறுத்தவரை மிகப்பெரும்பான்மையான பின்னூட்டங்கள் இத்தகைய உணர்வு யதார்த்தமானது என்று ஏற்றுக்கொண்டுதான் வைக்கப்பட்டுள்ளன--என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு பக்குவப்பட்ட கருத்தாளர் மனநிலையினையே காட்டுகிறது.மகிழ்ச்சி அளிக்கின்றது. எமது சமூகத்தவரின் கல்வித் துறைகளிற்கான தெரிவுகள் விரிவடைகையிலும், வாசனை மற்றும் இதர சமூகங்கள் கலாச்சாரங்களுடனான உறவு வளர்கையிலும் பல பேசாப்பொருள்கள் பேசப்படுவதற்கான களம் உருவாகும் என்பது மறுக்கமுடியாதது. இத்தகைய படிமுறை மாற்றம் அனைத்துச் சமூகங்களிற்கும் பொதுவானது தான். எமது சடூகமமும் பல விடயங்களைப் பேசக்கூடிய சமூகமாககப் படிப்படியாக வளர்ந்துவருவதைத் தாரளமாக அவதானிக்கமுவது மகிழ்ச்சிக்குரியதே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.