Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதியான கேணல் பானு கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதியான கேணல் பானு கொலை :

April 27, 2011, 4:58 pm[views: 997]

வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய கட்டளை தளபதிகளில் ஒருவரான கேணல் பானு கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட புகைப்படங்களில் இருந்து இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஈழ மண் மீட்புக்காக பல வெற்றி சமர்களங்கள் களமாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது .

நேற்றைய தினம் வீர சாவை தழுவிக் கொண்ட பல போராளிகளின் புகைப்படங்கள் வெளியாகி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.paristamil.com/tamilnews/news_detail.php?id=10190&v=990

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய - சிறீலங்கா - பன்னாட்டுக் கூட்டுச் சதியில் களப்பலியான மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

கேணல் பானு அண்ணன்.. பல வெற்றிச் சமர்களின் கதாநாயகன். இறுதிப் போரில் இறுதிச் சமரில் தன்னை மண்ணுக்காக அர்ப்பணித்திருக்கிறார்.

அன்னாரின் இழப்பும் இதர போராளிகளின் இழப்பும் எண்ணிப் பார்க்க முடியாத பேரிழப்புகளாகும். இவர்களின் இலட்சியத்தை வெல்வதும் அவர்கள் வாழ்ந்த மண்ணில் அவர்கள் எண்ணியவற்றை நிறை வேற்றுவதுமே இவர்களுக்கு தமிழ் மக்கள் செய்யும் நன்றிக்கடனும் வீரவணக்கமுமாக அமையும்.

வீரர்கள் சாவதில்லை. வீழ்ந்தும் வாழ்பவர்கள்..! அந்த வரிசையில் எம் மாவீரர்கள் என்றும் எம்மோடு வாழ்வார்கள்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

2009 ம் ஆண்டு பானு செத்து விட்டார் என சொல்லி அப்போது ஒரு படத்தை வெளீயிட்டு இருந்தார்கள்...தற்போது ஒரு புதுப் படத்தை வெளீயிட்டு உள்ளார்கள் எதற்காக?...எது உண்மை?...என்ன நடந்தது :unsure:

2009 ம் ஆண்டு பானு செத்து விட்டார் என சொல்லி அப்போது ஒரு படத்தை வெளீயிட்டு இருந்தார்கள்...தற்போது ஒரு புதுப் படத்தை வெளீயிட்டு உள்ளார்கள் எதற்காக?...எது உண்மை?...என்ன நடந்தது :unsure:

பார்த்தவன் சொல்லவில்லை சொன்னவன் பார்த்ததில்லை இதுதான் இன்றுள்ள நிலமை

  • கருத்துக்கள உறவுகள்

படங்களை கலந்தடித்து விட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் தேசிய தலைவரின் மகன் என்று சொல்லி பிரசுரிக்கப்பட்டவரின் படமும் இங்கு உள்ளது. அவர் இறுதிச் சமருக்கு முன்னராகவே இறந்து விட்டதாக சிறீலங்காவே படம் போட்டு சொன்னது.

எதுஎப்படியோ.. அவர்கள் இறந்து விட்டார்கள் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. நாங்கள் எங்கள் முத்தான வீரர்களை இழந்து பெரும் துயரில் ஆழ்ந்திருக்கிறோம். அவர்களின் கனவையாவது நனவாக்க உழைக்க வேண்டும். அதுவே அவர்களுக்கு செலுத்தும் உண்மையான வீரவணக்கமாக இருக்கும்..!

Edited by nedukkalapoovan

வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய கட்டளை தளபதிகளில் ஒருவரான கேணல் பானு கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Nellaiyan

எதுஎப்படியோ.. அவர்கள் இறந்து விட்டார்கள் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. நாங்கள் எங்கள் முத்தான வீரர்களை இழந்து பெரும் துயரில் ஆழ்ந்திருக்கிறோம். அவர்களின் கனவையாவது நனவாக்க உழைக்க வேண்டும். அதுவே அவர்களுக்கு செலுத்தும் உண்மையான வீரவணக்கமாக இருக்கும்..!

இப்படி தெரிந்தோ தெரியாமலோ எத்தனை போராளிகளின் இழப்பை அறிவிக்கவில்லை அல்லது முடியாதுள்ளது, ஆனாலும் வீரகாவியமாகியவர்களுக்காக நாங்கள் ஒருகணம் சிரம் தாழ்த்தி வீரவணக்கம் செலுத்துவோமாக.

ஏன்? இப்போது? ... இது ஒரு பப்ளிசிட்டிக்காக ....??? .

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சாவடைந்த படங்களைக் காட்டினால் மட்டும் நம்புகின்றீர்கள். ஆனால், அதன் தலைவர் பிரபாகரன் சாவடைந்த படத்தினைக் காட்டினால் மட்டும் இது அவர் இல்லை. அவர் பத்திரமாக இருக்கின்றார் என்கிறீர்கள்.

அவர் பத்திரமாக இருக்கின்றார் எனில், ஏன் இரண்டாம் கட்டத் தலைவர்களும் பத்திரமாக இருக்க முடியாதோ? பிரபாகரனைக் காப்பாற்ற இந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள்தானே முயற்சித்திருப்பார்கள். அப்படி முயற்சித்து இவர்கள் சாவடைந்தால் பிரபாகரனும் சாவடைந்திருப்பாரே.

உங்களுக்கு எந்த இடத்திலும் இடிக்கவே இல்லையா?

எதனையும் யதார்த்தமாக சிந்தித்து உரையாடுங்கள். அப்போதுதான் தமிழ்ச் சமூகம் சிந்திக்கும் நிலையில் இருக்கின்றது என மற்றவர்கள் நம்புவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சாவடைந்த படங்களைக் காட்டினால் மட்டும் நம்புகின்றீர்கள். ஆனால், அதன் தலைவர் பிரபாகரன் சாவடைந்த படத்தினைக் காட்டினால் மட்டும் இது அவர் இல்லை. அவர் பத்திரமாக இருக்கின்றார் என்கிறீர்கள்.

அவர் பத்திரமாக இருக்கின்றார் எனில், ஏன் இரண்டாம் கட்டத் தலைவர்களும் பத்திரமாக இருக்க முடியாதோ? பிரபாகரனைக் காப்பாற்ற இந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள்தானே முயற்சித்திருப்பார்கள். அப்படி முயற்சித்து இவர்கள் சாவடைந்தால் பிரபாகரனும் சாவடைந்திருப்பாரே.

உங்களுக்கு எந்த இடத்திலும் இடிக்கவே இல்லையா?

எதனையும் யதார்த்தமாக சிந்தித்து உரையாடுங்கள். அப்போதுதான் தமிழ்ச் சமூகம் சிந்திக்கும் நிலையில் இருக்கின்றது என மற்றவர்கள் நம்புவார்கள்.

தலைவர் பிரகாரன் சாவடைச்சிட்டார் என்று மக்கள் ஏற்றுக் கொள்வதால் மட்டும் உங்களுக்கு என்ன நன்மை...??! டக்கிளஸ் தேவானந்தாவையும்.. கருணாவையும்.. சங்கரியையும் தலைவராக வரைந்து சிங்களத்துக்கு அடிமை விசுவாசம் செய்து வாழ்தலே சிந்தனையின் உயர் சிறப்பாக அமையுமோ..???!

இந்தியப் படைகளுடனான சண்டையிலும் பல இரண்டாம் நிலை தளபதிகள் கொல்லப்பட்டனர் அல்லது இயக்கத்தை விட்டு வெளியேறினர். இருந்தும் தலைவர் கொல்லப்படவும் இல்லை... இயக்கத்தை விட்டு வெளியேறவும் இல்லை.

தலைவர் இருக்கிறாரோ இல்லையோ.. அவர் எனி எப்போதும் வழிகாட்டியாக இருப்பாரே அன்றி போராட்டத்தை தான் முன்னின்று வழிநடத்தமாட்டார். எனி மற்றத் தலைமுறைதான் அதைச் செய்தாக வேண்டும். அதை மக்கள் உணரச் செய்வதே இன்றைய தேவை..! குழப்பங்கள் விளைவிப்பதும்.. துரோகிகளுக்கு தலைவர் பதவிகள் வழங்குவதும் எமக்கு விடிவையோ வாழ்வையோ பெற்றுத் தராது. மாறாக பேரழிவுகளையே விட்டு வைக்கும்.

போர் ஓய்ந்த பின் யாழ் குடாவில் மட்டும் 1000 பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போயுள்ளனர். இவர்கள் எல்லோரும் ஒருவேளை கூடிப் போராடி இருந்தால் அதில் ஒரு 250 பேரையாவது காப்பாற்றி சிங்களப் படைகளையும் துரோகிகளையும் மண்ணை விட்டு ஓட்டியும் இருக்கலாம். அநியாய உயிரிழப்புக்கள்.. அதற்கு காரணம்.. எமக்குள் வளர்ந்த துரோகக் களைகளும்.. ஒற்றுமை இன்மைகளும்....!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றி வளைத்து எழுதாமல் புலிகளின் தலைவர் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு பதில் தாருங்கள்.

மேஜர், கேணல், பிரிகேடியர், மாமனிதர், நாட்டுப்பற்றாளர் எனப் பலருக்கு புலிகளின் தலைவர் தரநிலை வழங்கியிருந்தாரே. ஆனால், அவரை மட்டும் அநாதையாக விட்டிருக்கிறீர்களே அதற்குப் பதில் கூறுங்கள்.

தலைவர் இருக்கிறாரோ இல்லையோ என்பதனை விட்டு அவரை வழிகாட்டியாக நாம் ஏற்றுக்கொள்வோம் என்கிறீர்கள். அப்படியானால், அவர் வீரச்சாவடைந்து விட்டார் என அறிவித்துவிட்டு அவரை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வதில் உங்களுக்கு இருக்கும் தயக்கம்தான் என்ன?

நெடுக்காலபோவான், ஒரு விடயத்தினை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். புலிகளின் தலைவரின் வீரச்சாவு அறிவித்தல் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் புலி வியாபாரிகளினாலேயே தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது.

என்னைப் பொறுத்த வரையில் 30 வருடங்களுக்கு மேலாக தனது இளமைக்காலத்தினை அர்ப்பணித்து தாயக மண்ணின் விடுதலைக்காக இறுதிவரை போராடி (அப்படித்தான் கூறுகிறார்கள்) சாவடைந்த அவருக்கு யாவரும் மரியாதை செலுத்த வேண்டும். இதுதான் உலகு எங்கும் நடைபெறுகிறது.

96 வயது வரை இருப்பேன் என்று கூறிய சாய்பாபா பொத்தென்று போய்விட்டார். வேண்டும் எனில் அவர் உயிருடன் இருப்பதாக 96 வயது வரை காட்டிவிட்டு பின்னர் மரணடைந்துவிட்டார் என அறிவித்திருக்கலாம். (அந்தளவுக்கு அறிவியல் உள்ளது)

புலிகளின் தலைவரின் மறைவுக்குப்பிறகு எவ்வாறு புலிகளின் கட்டுக்கோப்பு சிதைவடைந்ததோ அதே போன்று சாய்பாபாவின் கட்டமைப்பும் சிதைவடையலாம். (அப்படி சிதைவடையாமல் தப்பித்தால் பாபா நியமித்தயவர்கள் நேர்மையானவர்கள் என்று அர்த்தம்)

ஏனெனில் புலிகளின் தலைவரும் தனக்குப் பின்னைய தலைமைத்துவத்தினை விட்டுச் செல்லவில்லை. பாபாவும் தனக்குப் பின்னர் தனது அறக்கட்டளையை நிர்வகிக்க உரித்துடையவர் என யாரையும் அறிவிக்காமல் சென்றுவிட்டார். (மனிசன் அந்தளவுக்கு, தான் 96 வயது வரை இருப்பேன் நம்பியிருக்கிறது)

யதார்த்தம் ஒன்று உள்ளது என்பதனை கடவுள் அவதாரம் என்று தன்னைத்தானே பிதற்றியவராலேயே தன்னைக் காப்பாற்ற முடியவில்லை என்பதுதான் துரதிர்ஸ்டம்.

அண்மைக்கால வரலாற்றினை கூர்ந்து கவனியுங்கள். உலகு எங்கும் தமக்கு என தனி இராஜ்ஜியம் நடத்தியவர்கள் இருந்த இடம் தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன்,

சுற்றி வளைக்காமல் பதில் சொல்லுங்கள்.

உங்களுக்குத் தலைவர் உயிருடன் இருக்கவேண்டுமா அல்லது சாக வேண்டுமா??

நிச்சயம் அவர் சாவதுதான் உங்களுக்கு அதிக மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தரும் என்றே நான் நம்புகிறேன்.

<_< அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று முதலைக் கண்ணிர் வடிப்பதன் நோக்கமென்னவோ??!! எங்களுக்குத் தெரியாதா?? தலைவருக்குச் சங்கூத வேண்டும், அதை அவரை நேசிப்பவர்களின் வாயிலிருந்தே கேட்க வேண்டும், அப்படித்தானே??

இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் இப்படி முயற்சிக்கப்போகிறீர்களோ??

உங்களுக்கொன்று தெரியுமா?? தலைவரை இல்லாதொழித்துவிட்டு நீங்கள் கர்ஜித்தாலும் கூட எங்கள் மனங்களிலிருந்து அவரை உங்கள் போன்றவர்களால் அகற்ற முடியாது.

காட்டிக்குடுத்து இனவழிப்பை நியாயப்படுத்தும் மனிதர்களுக்கு அந்தத் தார்ப்பரியம் புரியப்போவதுமில்லை.

தமக்கென தனி ராஜ்ஜியம் நடத்தியவர்கள் இருந்த இடம் தெரியாமல் போகிறார்கள் எனில் அவர்கள் தவிர்ந்த மற்றவர்கள் எங்கே போகிறார்கள்.

மனிதனாக பிறந்தவன் என்றோ ஒருநாள் மரணமடைந்தேயாக வேண்டும் என்பது இயற்கையின் நியதி.

அகிம்சா மூர்த்தி காருண்ய வள்ளல் என்று போற்றப்பட்ட மகாத்மாக காந்தி இறுதியாக இருந்த இடம் தெரியாமல் எங்கே போனார்?

ஆயுதம் எடுக்காமல் சுதந்திரம் வாங்கி கொடுத்ததற்காக அவருக்கும் இறுதியாக கிடைத்த பரிசு துப்பாக்கி ரவை தான்!

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதா!

இல்லாதவரை இல்லை என்று கூறுவதற்கு ஏன் உங்களுக்கு இவ்வளவு தயக்கம்? புலிகளின் தலைவர் இருக்கின்றார் எனில் அதற்கான ஆதாரத்தினை வெளியிடலாமே!

மற்றைய போராளித் தலைவர்களின் படங்களை போட்டு அவர்களுக்கு வணக்கம் செலுத்துகின்றீர்கள். நல்ல விடயம். ஏன் தன்னை ஆகுதியாக்கிய பிரபாகரனுக்கு வணக்கம் செலுத்தத் தயங்குகின்றீர்கள் என்பதனை மட்டும் அறியத்தாருங்கள்.

உலகில் உள்ள விடுதலைப் போராட்ட அமைப்புக்களின் தலைவர்கள் வீரச்சாவடைந்தால் அதனை அதிகாரபூர்வமாக அறிவித்து- அவரை மனதில் வைத்து- உறுதியுடன் அடுத்த கட்டமாக போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டிருக்கின்றனர்.

மாறாக எம் மத்தியில் நடைபெறுவது என்ன?

புலிகளின் தலைவர் வீரச்சாவடைந்த படத்தினை எத்தனையோ விதமான கோணங்களில் எடுத்து வெளியிட்டும்- இல்லை, இது அவர் இல்லை என்று நீங்கள் எல்லாம் வாதிடுகின்றீர்களே அதுதான் எனக்குப் புரியவில்லை.

இந்திய சுதந்திரத்துக்காக ஆயுதமேந்திய நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இன்றும் இருக்கின்றார் என்று நம்புகின்றவர்கள் பலர் உள்ளனர். அதில் ஒரு நியாயம் இருக்கின்றது.

ஏனெனில், அவரிடன் சடலம் யாருக்குமே கிடைக்கவில்லை. ஆனால், புலிகளின் தலைவரின் உடலைத்தானே பலவித கோணங்களில் சிறிலங்கா அரசு காட்டியிருக்கின்றதே.

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும். புலிகளின் தலைவரின் படங்கள் இதற்கு முன்னர் வெளியிட்ட போது கிராபிக்ஸ் என்றீர்கள். இப்போது ரமேஸ் கொல்லப்பட்ட படம் வெளிவந்தபோது அதனை உண்மை என்கிறீர்கள். இதனை எந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வேறுபடுத்துகின்றீர்கள் என அறியலாமா?

உங்கள் கணிப்பின்படி புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பது போன்று ரமேசும் எங்கேவாது உயிருடன் இருக்கலாம்தானே? இப்போது நடக்கும் கூத்துக்களை எல்லாம் பார்த்துக்கொண்டு தலைவரே பார்த்துக்கொண்டு வாயை மூடிக்கொண்டு இருக்கும்போது ரமேசும் உயிருடன் இருந்தால் எங்கோ ஓர் இடத்தில் வாயைத் திறக்காமல் இருப்பார்தானே?

முருகா! (இது எனது கருத்துக்கு பதில் எழுதிய முருகனுக்கு; கடவுள் முருகனுக்கு அல்ல)

மாகாத்மா காந்தியின் வரலாற்றைச் சரியாகப் படியுங்கள். அவர் சாய்பாபா மற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்று தனிக்காட்டு இராஜாங்கம் நடத்தியவர் அல்ல. அவர் கிட்டத்தட்ட சந்நியாச வாழ்க்கை வாழ்ந்து பிரதமர் ஆகக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் அதனை உதறித்தள்ளியவர்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது இந்த படங்களை வெளியிடுவதன் நோக்கம் மக்களை குழப்புவதற்காக மட்டுமே அன்றி வேறோன்றுமில்லை...பானு இறந்து விட்டார் எனச் சொல்லி அப்போதே ஒரு படம் வெளியிட்டு இருந்தார்கள் அதில் இப்போது பார்க்கும் படத்திலும் பார்க்க முற்றிலும் வேறான சூழ்நிலை காணப்படுகிறது...பானு கடைசி வரைக்கும் இராணுவத்தில் சரணடையவில்லை என அங்கு இருந்தவர்கள் சொன்னார்கள்...யுத்தத்தில் இறந்த பின் ஆமி அவரது உடுப்புகளை மாற்றியதா?...இறுதி யுத்தமே ஒரு புதிர் தான்

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன் உங்களுக்கு தலைவருக்கு அஞ்சலி செலுத்த விருப்பம் என்டால் உங்களோடு சேர்ந்து அஞ்சலி செலுத்த விருப்பமானவர்களை சேர்த்து அஞ்சலி செலுத்துங்கள் இங்கு யாரும் அதைத் தடுக்கவில்லை...மற்றும் படி போராட்டம் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் அது தலைவர் உயிரோடு இருந்தாலும் சரி,இல்லா விட்டாலும் சரி...தலைவருக்கு நாம் செலுத்தும் உண்மையான வணக்கம் தமிழழம் பெறப் போராடுவதே...தமிழழம் பெற்றுக் கொடுப்பதே நாம் தலைவருக்கு செய்யும் மிகப் பெரிய வணக்கமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

<_< நிர்மலன்,

நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லையே?? உங்களைப் பொறுத்தவரை தலைவர் சாகவேண்டுமா வாழவேண்டுமா?? அவர் எப்படியிருந்தால் உங்களுக்குச் சந்தோஷம்??

அவருக்கு இன்னும் ஏன் இறுதி மரியாதை செய்யவில்லை என்று ஓலமிடும் நீங்கள் அவருக்கு என்ன மரியாதை குடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்கள் கருத்துக்களில் நன்றாகத் தெரிகிறது.

இப்ப என்ன, அவர் செத்துப்போனார் எண்டு சொல்ல வேணும் அவ்வளவுதானே, செய்தாப் போச்சு. உங்களைப் பொறுத்தவரை அவர் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை. இப்போது சந்தோஷமா?? இனியென்ன் செய்வதாக உத்தேசம், தலைவரையும் கொன்றாச்சுது, புலிகளையும் அழித்தாச்சுது....இனி என்ன செய்யப்போகிறீர்கள் ??

வெற்றிவிழா கொண்டாடப்போகிறீர்களா??

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிவரை சமராடி மண்ணுக்கு வித்தான எமது மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள்!!!!!!!!!

மாவீரர்கள் மரணிப்பதில்லை.என்றும் நெஞ்சத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

பல படங்களில் வெள்ளை நிறத்தில் தோல் நிமாறிக் காணப்படுகின்றது.தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப் பட்டதை உறுதிப்படுத்துகின்றது.

மாவீரர்களின் கனவை நனவாக்குவதே நாம் அவர்களுக்குச் செலுத்தும் பெரிய காணிக்கையாகும்.

நிர்மலனுக்கு இவ்வளவு பேரின் உடலங்களைப் பார்த்து இதயம் இளகவில்லை.தவைர் இறந்து விட்டார் என்று தலைவரை நேசிப்பவர்கள் வாயால் கேட்பதில் ஒரு குரூர திருப்தி!சுய இன்பம்! அவ்வளவுதான்.

இது ஒரு சைக்கோத்தனம்

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

நான் எப்போதோ அவருக்கு வணக்கம் செலுத்திவிட்டேன். நான் எனக்குள் செய்வது இருக்கட்டும். இன்னும் அவர் இருக்கிறார் என்று புலி வியாபாரிகளால் தவறாக வழி நடத்தப்படுகின்ற புலம்பெயர் மக்களுக்கும் உண்மையை இல்லை என்று வாதிடுகின்றவர்கள் கூறலாமே.

சுவிசில் தலைவர் வீரச்சாவடைந்த தகவல் அறிந்து நிகழ்வாகக் கொண்டா நினைத்தவர்களுக்கு புலி வியாபாரிகள் என்ன செய்தார்கள் என்பது தெரியுமா? தெரியாவிட்டால் சுவிசில் உள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

ரகுநாதா,

புலிகளின் தலைவரும் போராளிகள் செய்த தியாகம்தான் ஐ.நா. வரை கொண்டு வந்திருக்கின்றது. இங்கே நான் கூற வருவது இதுதான். ஒரு பகுதியினரிடம் அவர் இருக்கிறார் என்றும் இன்னொரு பகுதியினரிடம் அவர் இல்லை என்றும் குழப்பங்களை உண்டு பண்ணியிருப்பதால் புலம்பெயர் மக்களில் பெருமளவிலானோர் நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை.

அவர்கள் பிரபாகரன் பாதுகாப்பாக இருந்துகொண்டு போராளிகளைத் திரட்டிக்கொண்டு ஐந்தாம் கட்ட ஈழப் போரை வீச்சாகக் முன்னெடுப்பார் என்று கூடும் இடங்களில் எல்லாம் உரையாடிக் கொண்டு இருக்கின்றனர். இவ்வாறான கதைகளைக் கட்டி விடுகின்றவர்கள் யார் என்பது உங்களுக்கும் தெரியும்.

தெரியாவிட்டால் அதனையும் அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் தமிழ்நெட், ஈழமுரசு, சங்கதி, பதிவு மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள புலி வியாபாரிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

:( இன்னொரு ஆயுதப்போராட்டத்திற்கு மக்கள் எவருமே தயாராக இல்லை என்பது எங்களுக்கு நன்கு தெரியும். அப்படி எதிர்பார்ப்பதற்கு நாங்கள் முட்டாள்களுமில்லை. தமிழ்நெட்டும், பதிவும், சங்கதியும் இன்னொரு ஆயுதப்போராட்டத்திற்கு அறைகூவல் விடுவதாக நாங்கள் நினைக்கவுமில்லை. தொடர்ச்சியாக அவற்றை வாசித்து வந்தால் அவர்கள் சொல்வது புரியும். புலம்பெயர் மக்களின் இடைவிடாத அரசியல் நடவடிக்கைகள் மூலம்தான் எமக்கான விடுதலை சாத்தியம் என்றுதான் எழுதி வருகிறார்கள். எவருமே வெளிநாட்டிலிருந்து படையெடுத்து 5 ஆம் ஈழப்போர் தலைவர் நடத்துவார் என்று காத்திருக்கவில்லை. அப்படி நடக்கப்போகுதோ என்று கவலையுடன் காத்திருப்பது தலைவருக்குச் சங்கூத காத்திருக்கும் உங்கள் போன்றவர்கள்தான்.

எனக்குத் தலைவர் இருக்கிறார் என்றோ இல்லை என்றோ தெரியாது. அது எனக்கு முக்கியமானதுமல்ல. எனது தேவையெல்லாம், எமக்கு நடந்த அநியாயத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். அதன் மூலம் தாயகத்தில் இன்னும் அடிமைப்பட்டுக் கிடக்கும் எனது உறவுகளுக்கு சுதந்திரமான வாழ்க்கை கிடைக்க வேண்டும். அதற்கா அஎன்னால் முடிந்தவரை இங்கிருந்து போராடுவேன். தலைவர் இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன அது நடக்கும்.

என்ன செய்யவேண்டுமென்பதை இனித் தலைவர் எமக்குச் சொல்லத் தேவையில்லை. என்ன செய்யவேண்டும் என்பதில் எனக்குச் சரியான தெளிவிருக்கிறது. எவ்வளவோ செய்ய வேண்டிக்கிடக்கு, உங்களுடன் இங்கு வந்து விதண்டாவாதம் செய்ததையிட்டு மனம் வருந்துகிறேன்.

நன்றி, உங்கள் நோக்கம் நிறைவேறியதா?? போய்வாருங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஏற்பட்டுள்ள தெளிவு குறித்து சந்தோசம்.

இதேபோன்று தெளிவு புலம்பெயர் பெரும்பான்மைத் தமிழர்களுக்கும் வரவேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட.

"என்ன செய்ய வேண்டும் என்பதனை இனித் தலைவர் எமக்கு சொல்லத் தேவை இல்லை" என்று நீங்கள் எழுதிய ஒரு வாசகம்தான் திருவாசகம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவரின் மறைவுக்குப்பிறகு எவ்வாறு புலிகளின் கட்டுக்கோப்பு சிதைவடைந்ததோ அதே போன்று சாய்பாபாவின் கட்டமைப்பும் சிதைவடையலாம். (அப்படி சிதைவடையாமல் தப்பித்தால் பாபா நியமித்தயவர்கள் நேர்மையானவர்கள் என்று அர்த்தம்)

ஏனெனில் புலிகளின் தலைவரும் தனக்குப் பின்னைய தலைமைத்துவத்தினை விட்டுச் செல்லவில்லை. பாபாவும் தனக்குப் பின்னர் தனது அறக்கட்டளையை நிர்வகிக்க உரித்துடையவர் என யாரையும் அறிவிக்காமல் சென்றுவிட்டார். (மனிசன் அந்தளவுக்கு, தான் 96 வயது வரை இருப்பேன் நம்பியிருக்கிறது)

யதார்த்தம் ஒன்று உள்ளது என்பதனை கடவுள் அவதாரம் என்று தன்னைத்தானே பிதற்றியவராலேயே தன்னைக் காப்பாற்ற முடியவில்லை என்பதுதான் துரதிர்ஸ்டம்.

அண்மைக்கால வரலாற்றினை கூர்ந்து கவனியுங்கள். உலகு எங்கும் தமக்கு என தனி இராஜ்ஜியம் நடத்தியவர்கள் இருந்த இடம் தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

இங்கு கருத்து எழுதுபவர்களின் எழுத்துக்களை பார்க்கும்போது.......

வேதனைதான் மிஞ்சுகிறது. ஒருவருடைய எழுத்துக்களில் பாவிக்கப்படும் சொற்களிலேயே அவரது நோக்கத்தையும் இருப்பிடத்தையும் அறிந்து கொள்ளலாம்.

இங்கே ஒருத்தர் சொல்கிறார். தலைவரில் தான் மரியாதை வைத்துள்ளாராம். அதனால் அவருக்கு அஞ்சலி செய்ய துடிக்கின்றாராம். ஆனாலும் தலைவர் அவர்கள் புலிகளின் தலைவராம்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அவர்களே!

ஏன் இப்போது அவர் புலிகளின் தலைவர் இல்லையா? அல்லது ஒருவேளை முன்னாள் புலிகளின் தலைவர் என்றோ அல்லது புலிகளின் முன்னாள் தலைவர் என்றோ நான் எழுதி இருக்க வேண்டும் என்று சொல்ல வருகின்றீர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.