Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அலைகள் கொன்ஸ்பிரேசன் கோட்பாடுகள் புதிய தொடர்..

Featured Replies

சர்வாதிகாரி ஹிட்லரின் உடலம் எங்கே.. சதாம் ஊசேன் எப்போது கைது செய்யப்பட்டார்..பிரபாகரன் எங்கே…

ஒரு தலைவர் மரணத்தை உண்மையாக நேர்கோட்டு வடிவில் நாம் கேள்விப்பட்டால் அது செய்தி. அதற்கு முற்றிலும் புறம்பான உண்மைகளைத் தேடி விளக்கப்படுவதே கொன்ஸ்பிரேசன் கோட்பாடுகளாகும்..

நேற்று முன்தினம் சர்வதேச பயங்கரவாதி ஒஸாமா பின்லாடனை அமெரிக்கப்படைகள் கொன்றுவிட்டதாக செய்திகள் வெளியாகின. பின்லேடனின் உடலம் காட்டப்படாமலே கடலின் அடியில் புதைக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்லேடன் சுடப்பட்டதாக வெளியிடப்பட்ட புகைப்படத்தைக் கூர்ந்து பாருங்கள், அது பழைய புகைப்படம் ஒன்றில் செய்யப்பட்ட கணினி வேலைபோல இருக்கும்..

உண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு தாக்குதலில்தான் பின்லேடன் கொல்லப்பட்டாரா.. இல்லை அவர் கைதாகி வெகு காலத்திற்கு பின்னர் இந்த நாடகம் அரங்கேறியதா.. என்ற கேள்விகள் உலகில் ஆரம்பித்துவிட்டன.

kons-2.jpg

பின்லேடன் சுடப்பட்டதாக வெளியிடப்பட்ட புகைப்படத்தைக் கூர்ந்து பாருங்கள், அது பழைய புகைப்படம் ஒன்றில் செய்யப்பட்ட கணினி வேலைபோல இருக்கும்..

உண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு தாக்குதலில்தான் பின்லேடன் கொல்லப்பட்டாரா.. இல்லை அவர் கைதாகி வெகு காலத்திற்கு பின்னர் இந்த நாடகம் அரங்கேறியதா.. என்ற கேள்விகள் உலகில் ஆரம்பித்துவிட்டன.

bin-zz.jpg

அதுதவிர பின்லேடன்தான் அமெரிக்க இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தாரா.. அந்த இரட்டைக் கோபுரங்கள் இடியும்போது அதன் பின்புறம் இருந்த மூன்றாவது கட்டிடமும் விழுந்ததே. அது எப்படி உடைந்தது..?

இப்படி கேள்விகளை கேட்டால் பின்லேடன் விவகாரம் பாரிய சர்ச்சையாக மாறும்..

பின்லேடன் என்பவர் உருவாக்கப்பட்டதற்கும் பின் அவர் கொல்லப்பட்டதற்கும் வலுவான கொன்ஸ்பிரேசன் கோட்பாடு ஒன்று இருக்கிறது.. அது விரைவில் வெளியாகும்..

இனி விடயத்திற்கு வருவோம்..

இன்று வெளியான ஐரோப்பிய பத்திரிகைச் செய்திகள் பின்லேடனின் மரணமும், சர்வாதிகாரி ஹிட்லரின் மரணமும் ஒரே மாதிரியானவை என்று தம்பட்டமடித்துள்ளன.

ஆனால்..

ஹிட்லரின் மரணத்திற்கும் பின்லேடன் மரணத்திற்கும் கொன்ஸ்பிரேசன் கோட்பாட்டில் ஓர் ஒற்றுமை இருப்பதை அவைகள் பார்க்க மறந்துவிட்டன..

ஹிட்லரின் உடலம் இதுவரை யாருடைய கைகளுக்கும் கிடைக்கவில்லை. அது எங்கே.. அதற்கான கொன்ஸ்பிரேசன் கோட்பாடுகளை முதலில் பார்க்கலாம்..

1945 ம் ஆண்டு ஏப்ரல் 30 ம் திகதி ஹிட்லர் பேர்ளினில் தற்கொலை செய்ததாக ரஸ்யப்படைகள் தெரிவித்தன. பேர்ளினில் ஹிட்லர் ஒழிந்திருந்த பங்கரில் எரிந்த நிலையில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவைகளில் ஒன்று ஹிட்லர், மற்றயது அவர் மனைவி கார்லா புறூண்.. என்று ரஸ்ய உளவுப்பிரிவு ஸ்மாரெஸ் முடிவு செய்து பேர்ளினில் இருந்து தகவலை ஸ்டாலினுக்கு அனுப்புகிறது.. பின் சடலங்கள் புதைக்கப்படுகின்றன.

hit-kar.jpg

அவ்வளவுதான்…பின்லேடன் படுகொலை செய்தி பரவியதுபோல ஹிட்லர் தற்கொலைச் செய்தி அடுத்த கணமே உலக ஊடகங்கள் முழுவதும் காட்டுத்தீபோல பரவிவிட்டது.

ஆனால் அதன் பின்புதான் பிரச்சனையே உருவானது.. எரிந்தும், எரியாமலும் கிடந்த ஆண் சடலத்தின் கால்மேசில் ஓர் ஓட்டை இருக்கிறது.. இவ்வளவு பெரிய கோடீஸ்வரனான ஹிட்லர் ஓட்டை சொக்ஸ்சுடன் இறந்துகிடப்பானா..?

, டாண்..! , தலையில் விழுந்தது முதல் அடி !

ஸ்டாலினுக்கு தலை சுற்றுகிறது.. அவர் ஹிட்லரின் உடலம்தான் அது என்பதை ஏற்க மறுப்பதாக செய்தி அனுப்புகிறார். இறந்து கிடந்தது ஹிட்லர் போன்ற போலி உருவம் என்று முடிவு செய்கிறார்கள்.

அதன் பின்னர் அதே பங்கரில் ஒரு ஆணும், பெண்ணும் இறந்த நிலையில் சடலங்கள் இரண்டு கைப்பற்றப்படுகின்றன. எப்போதும் இறந்தவர்களை அடையாளம் காண உதவுவது பற்கள்தான். அந்தச் சடலத்தின் பல் செட்டுக்கள் ஆராயப்படுகின்றன.

அந்தப் பல் செட்டுக்கள் எரிந்து கிடந்த சடலத்தினுடையது என்று முடிவு செய்து மறுபடியும் ஸ்டாலினுக்கு தகவல் அனுப்புகிறார்கள்.

அவர் மறுக்கவே சடலம் தோண்டி எடுக்கப்படுகிறது. இறந்தது ஹிட்லர்தன் என்று முடிவு செய்யப்படுகிறது. பின் ஹிட்லரின் சடலம் எரிக்கப்படுகிறது. பல்செட்டும், தலையில் சூடு விழுந்த மண்டையோடும் ரஸ்யாவில் பாதுகாப்பாக அனுப்ப்படுகிறது. ஹிட்லர் தற்கொலை செய்தார் என்று அறிவிக்கப்படுகிறது. அத்துடன் ஹிட்லர் பற்றிய சர்ச்சைகள் அடங்கிவிட்டன.

hit-tand.jpg

சோவியத் யூனியன் உடைந்த பின்னர் மேலைத்தேய மருத்துவ ஆய்வாளர் மார்க் பெனிக் தலைமையிலான குழுவினர் ஹிட்லரின் மண்டையோட்டையும், பல் செட்டையும் ஆய்வு செய்தார்கள்..

புதிய சர்ச்சை..

தலையில் சூடு விழுந்த மண்டையோடும், பல் செட்டும் வேறுவேறானவை. அந்த மண்டையோடு ஹிட்லருடையதல்ல ஆனால் பல் செட் ஹிட்லருடையதுதான் என்று தெரிவிக்கிறார்கள் மேலைத்தேய வைத்திய நிபுணர்கள்..

அது எப்படி பல் செட் ஹிட்லருடையது..? இவர்கள் எப்படி அதை உறுதி செய்தார்கள் என்பது அடுத்த கேள்வி..

பேர்ளினில் ஹிட்லரின் பல்வைத்தியர்கள் வைத்திருந்த ஹிட்லரின் பல் எக்ஸ்ரே படங்களுடன் ரஸ்யாவில் இருந்த பற்களையும் ஒப்பீடு செய்து அதை உறுதிப்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தார்கள்.

இப்போதுதான் ஹிட்லரின் மரணம் தொடர்பான கொன்ஸ்பிரேசன் கோட்பாடு தனது சிறகுகளை மேலும் ஒரு படி அதிகமாக விரிக்க ஆரம்பிக்கிறது..

ஹிட்லர் தன்னைப்போன்ற ஒருவரை கொலை செய்து எரித்து, அவருடைய பல் செட்டுக்கான எக்ஸ்ரே படங்களை எடுத்து, தனது படங்கள் இருந்த இடத்தில் மாற்றி வைத்துள்ளார் என்றது கொன்ஸ்பிரேசன் கோட்பாடு..

மேலும் ரஸ்யப்படைகள் பேர்ளினுக்குள் நுழைவதற்கு முன்னரே ஹிட்லர் தப்புவதற்கான ஏற்பாடுகளை நாஜிப்படைகள் கச்சிதமாக முடித்துவிட்டன. பிரிட்டன் யுத்த விமானம் போல முற்றாக வர்ணம் மாற்றப்பட்ட புதிய விமானம் ஒன்றைப் பயன்படுத்தி அவர் டென்மார்க் வழியாக தப்பிப் போய்விட்டார்..

அவர் போன பின்னர் எரிந்துபோன இரண்டு உடலங்களை எடுத்து இறந்தது ஹிட்லரே என்று ரஸ்யா சொன்னது..

தப்பிச் சென்ற ஹிட்லர் பார்க்கிங்சன் என்ற நோயினால் பீடிக்கப்பட்டிருந்தார்… அதன் பின்னர் அவர் தற்கொலை செய்திருக்கலாம்.. என்று கொன்ஸ்பிரேசன் கோட்பாடு முடிவடைகிறது.

அதேவேளை 1960 ம் ஆண்டு ஹிட்லரின் சகோதரி பவுலா ஹிட்லர் இறந்தார். இவருடைய சடலத்தில் இருந்து எடுத்த உயிரணுக்களையும், ஹிட்லரின் பல் செட்டையும் ஒப்பீடு செய்தால் இரண்டுமே ஹிட்லரின் உறுப்புக்கள் அல்ல என்ற அதிர்ச்சித்தகவல் வரலாம் என்றும் எச்சரித்தது. ஆனால் அந்தப் பரிசோதனையை இன்றுவரை யாரும் செய்யவில்லை..

ஹிட்லரின் உடலம் எங்கே.. அல்லது ஹிட்லர்தான் எங்கே.. இதுதான் நீடிக்கும் மர்மம்..

pirabaa-.jpg

இதுபோலத்தான் இலங்கை வன்னியில் பிரபாகரனின் உடலத்தை காட்டினார்கள். அதை அவசரமாக எரித்துவிட்டதாகவும் கூறினார்கள். ஆனால் அவருடைய தந்தையும் தாயும் அத்தருணம் சிறீலங்கா இராணுவத்தின் பிடியில்தான் இருந்தனர். அவர்களின் மரபணுவில் இருந்து, இறந்தது பிரபாகரனா இல்லையா என்பதை டி.என்.ஏ மூலம் உறுதி செய்திருக்கலாம்… ஆனால் அது செய்யப்படவில்லை… ஏன்..?

அதுபோல கிளிநொச்சி வீழ்வதற்கு முன்னரே பிரபாகரனின் குரல் மறைந்துவிட்டது.. இப்படியொரு பேரழிவு நடைபெறும்போது பொறுப்புள்ள தலைவர் உலகத்திற்கு ஏன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை..? தன் மகன் இறந்தபோது மகள் இறந்தபோது ஏன் அவர் ஒரு குரல் கொடுக்கவில்லை..? ஆயுதம் மௌனமாக்கப்படுகிறது என்பதைக்கூட ஏன் அவர் கூறவில்லை..

அதற்கு முதல் அவர் பேசிய மாவீரர் நாள் உரையில் ஒரு மெல்லிய சிரிப்பு சிரிப்பார்… அப்போதே யாவும் முடிந்துவிட்டதை உணர முடிந்தது..

மேலும் இத்தனை அவலங்களுக்குள்ளும் தனது அடையாள அட்டையை அவர் பாக்கட்டில் வைத்தபடியா இறந்து கிடக்க வேண்டும்…?

பிரபாகரன் எங்கே.. அவருக்கான கொன்ஸ்பிரேசன் கோட்பாடு இன்னமும் எழுதப்படவில்லை… அதைக் காலம் எழுதும்… ஆனால் அவருடைய உடலத்தையும் காண முடியவில்லை.. அவர் இருக்கிறாரா இல்லையா மர்மம் நீடிக்கிறது..

இனி அடுத்த முக்கியமான கோட்பாட்டுக்கு வருவோம்…

அதை நடாத்தியது முன்னாள் அமெரிக்க அதிபர் யோர்ஜ்புஸ் அன் கொம்பனியாகும்…

1983ம் ஆண்டு டிசம்பர் 13ம் திகதி ஈராக்கிய அதிபர் சதாம் உசேன் திக்ரித் நகரில் உள்ள ஒரு குகைபோன்ற சுரங்கத்தில் இருந்து தாடி மீசையுடன் கைது செய்யப்படுகிறார். அவரை கைது செய்தபோது அமெரிக்கர்கள் ஒரு தவறை இழைத்துவிடுகிறார்கள்.

அவருக்கு பின்னால் ஒரு பேரீச்சம்பழ மரம் பழுத்தபடி காணப்படும்..

sadam-fl.jpg

ஈராக்கில் டிசம்பர் மாதம் பேரீச்சம்பழ மரம் பழுப்பதில்லை அது குளிரில் உதிர்ந்துவிடும். ஈராக் மண்ணில் டிசம்பர் மாதம் ஒரு ஈச்ச மரத்தைக்கூட பழுத்தபடி காண முடியாது. அப்படியிருக்க சதாம் உசேனுக்கு பின்புறம் எப்படி வந்தது அந்த பேரீச்சம்பழ மரம்..?

கொன்ஸ்பிரேசன் தியரி சொல்கிறது..

அமெரிக்கப் படைகள் ஈராக்கில் கால் வைக்க முன்னரே சதாம் உசேன் கைது செய்யப்பட்டுவிட்டார்.

அவருடைய மனோநிலை பாதிக்கப்பட்ட மகன் உதே ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்கிறார். அந்த யுவதி சதாமின் உயர் மட்டத்தில் பணி புரிபவர் மகள் . தன் மகள் பாதிக்கப்பட்டதால் கோபம் கொண்ட அதிகாரி குர்டிஸ்தானியருக்கு தகவல் கொடுத்து, சதாம் உசேனை கடத்தச் செய்துவிட்டார்.

அதன் பின்னர் ஈராக்கில் இறங்கிய அமெரிக்கப்படைகள் பெரும் பணம் கொடுத்து சதாம் உசேனை விலைக்கு வாங்கி 2006 டிசம்பர் 30 தூக்கிலிட்டன என்று கொன்ஸ்பிரேசன் கோட்பாடு விவரிக்கிறது.

இந்த மூன்று கதைகளிலும் தலைவர்கள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னரே படைகள் நுழைகின்றன..

ஹிட்லரின் உடலமும் பின்லேடனின் உடலமும் எங்கேயென்று தெரியவில்லை..

ஆனால் இப்படி மறையும் தலைவர்கள் திரும்பியதாக சரித்திரம் இல்லை..

இவர்கள் எங்கே..

பாதாளச் சிறையிலா…

வேறு கிரகத்திற்கு மாற்றப்பட்டுவிட்டார்களா…

முன்னரே கொல்லப்பட்டுவிட்டார்களா..

இல்லை இவற்றை எங்கோ ஒரு மூலையில் இருந்து பார்த்தபடியே சிரிக்கிறார்களா..

மர்மங்கள் தொடர்கின்றன..

நேற்று ஐ.நாவின் பாதுகாப்பு சபை பின்லேடன் மரணத்தை ஊர்ஜிதம் செய்துள்ளது. ஆனால் அதற்குள் இருக்கும் மர்மத்தை அது உலக மக்களின் முன்னால் விடுவிக்கவில்லை..

கொன்ஸ்பிரேசன் கோட்பாடுகள் தொடர்கின்றன..

ஆனால் உலக மனிதர்களுக்கு பெரியதோர் அதிர்ச்சி காத்திருக்கிறது..

அலைகளுக்காக மொழி பெயர்ப்பும், உருவாக்கமும் :

கி.செ.துரை 04.05.2011

http://www.alaikal.com/news/?p=68032

  • தொடங்கியவர்

1983ம் ஆண்டு டிசம்பர் 13ம் திகதி ஈராக்கிய அதிபர் சதாம் உசேன் திக்ரித் நகரில் உள்ள ஒரு குகைபோன்ற சுரங்கத்தில் இருந்து தாடி மீசையுடன் கைது செய்யப்படுகிறார். அவரை கைது செய்தபோது அமெரிக்கர்கள் ஒரு தவறை இழைத்துவிடுகிறார்கள்.

திருத்தம் : 2003 என்று தான் வர வேண்டும், மாறி 1983 என்று போடப்பட்டு இருக்கிறது.

இணைப்பிற்கு நன்றி குட்டி.

இந்த conspiracy theory ஐ நம்பி வாழ்ந்தது / வாழ்வது பலமான இனங்களுக்குப் பொருந்தும். பலகீனமான் இனங்களுக்கல்ல.

போராட்டத்தை, முள்ளிவைக்காலின் முடிவிற்குப் பின் பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? என்பதைதை வைத்தே இரண்டு வருடங்களை கழித்து விட்டோம். அவர் இருந்திருந்தால், புலத்தில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஒற்றுமையாக செயற்பட்டிருப்பார்கள் என்பது சகலரும் அறிந்த உண்மை. அப்படியா நடக்கிறது?

'இருக்கிறார்' என்பது வியாபாரிகளுக்கு தேவையானதொன்று. அடிமைப்பட்ட ஈழத் தமிழனுக்கல்ல. உண்மை நிலை உணர்ந்தால்தான் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும்.

அல்லது எலும்பைக் கடிக்கும் நாய், தனது இரத்தத்தையே எலும்பிலிருந்து வரும் இரத்தமாக எண்ணி சுவைக்கும் நிலையில்தான் கொண்டு முடியும்.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் குட்டி!

தலை சுற்றுகின்றது!!!

.

bin-zz.jpg

பின்லாடன் தூங்கும் போது ஒரு படம் முன்னமே எடுத்து வைத்திருந்திருக்கலாம் என்ற அவர்களின் கவலை உங்கள் யாருக்காவது விளங்குமா ?

  • கருத்துக்கள உறவுகள்

osama-tot-03.jpg

அமெரிக்கா, பின்லாடனை சுட்டுக்கொன்ற வேறு படங்களை காட்டாத வரையில் இந்த சர்ச்சைகள் நீளும்......

இணைப்பிற்கு நன்றி குட்டி.

  • கருத்துக்கள உறவுகள்

pb-110502-osama-bin-laden-fake-picture.photoblog900.jpg

  • கருத்துக்கள உறவுகள்

HBpa0roc_Pxgen_r_500x200.jpg

இணைப்புக்கு நன்றி குட்டி!

ஆனால் உலக மனிதர்களுக்கு பெரியதோர் அதிர்ச்சி காத்திருக்கிறது..

அது என்ன அதிர்ச்சி குட்டி தெறிந்தால் சொல்லுங்கப்பா?

  • கருத்துக்கள உறவுகள்

video_cassette.jpgblank_cds_300.jpgcd.gif

அடுத்த ஆறு மாதத்திற்குள், ஒசாமா பின்லாடனிடமிருந்து வீடியோ கசெற், சீடி ஏதாவது வராவிட்டால்.......,

அவர் இறந்துவிட்டார் என்று நாங்களே.... ஒரு முடிவுக்கு வர வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குட்டி.

இன்றைய அதி நவீன செய்மதி கண்காணிப்பு உலகில் தனித் தலைமைத்துவம் என்பது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

Virtual leadership என்பதை எனி உருவாக்கலாம். எதிரியின் கண்காணிப்பு வலைக்குள்ளேயே இருந்து கொண்டு தலைமைத்துவத்தை செய்யக் கூடிய அதிநவீன செயற்பாடுகள் அவசியமாகிறது.

குறிப்பாக புரட்சியாளர்கள் எனி ஒரு தனித் தலைமை என்ற நிலையை தவிர்ப்பதோடு.. நவீன இலத்திரனியல் உலகில் இருக்கும் சவால்களை சந்திக்கக் கூடிய புதிய வழிமுறைகளுடன் கூடிய.. கூட்டுத் தலைமைத்துவம்.. அல்லது சூழ்நிலை virtual தலைமைத்துவம் கொண்டு செயற்படுவது அவசியமாகிறது. இவை வெளியில் தெரியாத.. சாதாரண மனிதர்களாக இனங்காணக் கூடிய நிலைக்குள் இருக்க வேண்டும்.

தனித் தலைமைத்துவம் என்ற நிலையை எனி ஒவ்வொரு உறுப்பினரும் தனது செயற்பாட்டிற்கு என்று எடுத்துக் கொள்ளும் நிலையும் தனக்கேற்ப சூழலில் தான் சிறந்த strategic decision maker ராக தேவைக்கு ஏற்ப single man ஆமியாக இருப்பதோடு இலத்திரனியல் உலகில் உள்ள கண்காணிப்பு வலை அமைப்புக்குள்ளேயே இருந்து தவிர்க்கக் கூடிய கண்காணிப்புக்களைத் தவிர்க்கக் கூடிய அவதானமான செயற்பாடுகள் கொண்டு இயங்க வேண்டும்.

போர் களங்களின் வடிவங்கள் மாறி அமைய வேண்டும்.

ஆயுதங்களை வைச்சுக் கொண்டு சண்டை பிடிக்கும் நிலைமாறி.. strategic electro-brain-war செய்ய வேண்டும். மக்களின் மனங்களில் மாற்றங்களுக்கான தேவைகளை உணர்த்த வேண்டும். மக்களைக் கருவியாக்க வேண்டும். மக்களைப் போராட தூண்ட வேண்டும். ஜனநாயகம் எனி பீரங்கிகளாக வேண்டும். புரட்சி என்பது எனி வாக்குச் சீட்டுகளுக்குள்ளாலும்.. கருத்தியலுக்குள்ளாலும்.. வர்த்தகத்திற்குள்ளாலும்.. விளையாட்டுக்குள்ளாலும்... பள்ளிகளூடாகவும்.. குடும்பங்களினூடாகவும் வர வேண்டும். போராட்ட ஆயுதமாக இலத்திரனியல் அலைகளும் உபகரணங்களுமே அமைய வேண்டும். தேவைக்கு ஏற்ப ஆயுத வடிவங்களை அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக எகிப்து ஆட்சி மாற்றத்தின் போது அதன் தலைவர் தூக்கி எறியப்படும் வரை அந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார் என்பது தெரியாது. இன்றும் கூட தெரியாது. இப்படியான புரட்சித் தன்மைகளே எதிர்காலத்தில் மக்கள் புரட்சிகள் வெற்றி அடைய வழி வகுக்கும்.

அண்மைய சில பத்தாண்டுகளில் பல புரட்சித் தலைவர்கள் அதிநவீன செய்மதிக் கண்காணிப்பு மூலம் கண்காணிக்கப்பட்டு அல்லது தொலைத்தொடர்பாடல்கள் மூலம் இலத்திரனியல் வழிமுறையில் கண்காணிக்கப்பட்டு பின்னர்.. அழிக்கப்பட்டுள்ளனர். இது தனித் தலைமைத்துவம் என்ற பழைமை முறையை இல்லாது செய்யவே வலியுறுத்தி நிற்கிறது.

அமெரிக்கா ஆட்களில்லாத ரோன்களை செய்து ஆயுதங்களோடு வானில் பறக்க விட்டுள்ளது. அவை தன்னிச்சியாக இயங்கி இலக்குகளை இனங்கண்டு அழிக்க வகை செய்யப்பட்டுள்ளன. எனிப் போராளிகளும் இப்படியான நவீன ஆயுத வடிவங்களை கையில் எடுப்பதோடு.. மக்களைக் கொல்லாத ஆனால் பொருளியல் ரீதியில்.. ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடிய வழிமுறைகளில் நவீன அறிவியல் கொண்டு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

எனி virtual leaders தான் சீடிக்கள் வழியாக.. இலத்திரனியல் அலைவடிவங்களில் வந்து யுத்தம் செய்ய வேண்டும். எனி உலகப் புரட்சியாளர்கள்.. இலத்திரனியல் யுத்தம் செய்ய வேண்டுமே தவிர.. ஆயுதங்களை கொண்டு பலமிக்க.. நாடுகளை.. எதிரிகளை எதிர்கொள்வது என்பது கடினமானது. வீணான அழிவுகளையே தரும்..!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

கருத்துப் பர்கிந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

  • 4 weeks later...

இணைப்புக்கு நன்றி குட்டி...

இந்த மூன்று கதைகளிலும் தலைவர்கள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னரே படைகள் நுழைகின்றன..

ஆனால் இப்படி மறையும் தலைவர்கள் திரும்பியதாக சரித்திரம் இல்லை..

இவர்கள் எங்கே..

பாதாளச் சிறையிலா…

வேறு கிரகத்திற்கு மாற்றப்பட்டுவிட்டார்களா…

முன்னரே கொல்லப்பட்டுவிட்டார்களா..

இல்லை இவற்றை எங்கோ ஒரு மூலையில் இருந்து பார்த்தபடியே சிரிக்கிறார்களா..

மர்மங்கள் தொடர்கின்றன..

இவர்களை உருவாக்கிய தேவை முடிந்ததும் காணாமல் போக செய்யப்படிருக்கலாம்.. உருவாக்கியவர்களால்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.