Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி வீடு செல்கிறார்! முதல்வராகிறார் ஜெயலலிதா!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி வீடு செல்கிறார்! முதல்வராகிறார் ஜெயலலிதா!!

Posted by admin On May 13th, 2011 at 10:13 am / No Comments

தமிழக சட்டசபைத் தேர்தல்கள் முடிவுகளின் அடிப்படையில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க முன்னணியில் திகழ்கின்றது.

இதன் அடிப்படையில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 149 தொகுதிகளில் அ.தி.மு.கவும் 33 தொகுதிகளில் தி.மு.கவும் வெற்றி பெற்றிருக்கின்றன.

saritham.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களைக் கைவிட்ட காங்கிரஸுக்கு தமிழக மக்கள் சம்மட்டி அடி

வெள்ளிக்கிழமை, மே 13, 2011, 10:46 [iST]

சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய தோல்விக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. இதுவரை அதிமுக, திமுகவுடன் ஓசி சவாரி செய்தே சீட்களை அள்ளி சொகுசாக இருந்து வந்த காங்கிரஸுக்கு இந்த தேர்தலில் மக்கள் கடும் பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர்.

அறந்தாங்கி உள்ளிட்ட 4 தொகுதிகளில் மட்டுமே முன்னணியில் உள்ளது. திமுகவை கடுமையாக மிரட்டி, உருட்டி, ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து பாலிட்டிக்ஸ் செய்து அதிக அளவிலான தொகுதிகளைப் பெற்றுப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் ஜெயித்தாலும் கூட அது அங்கு போட்டியிடும் திருநாவுக்கரசரின் சொந்த செல்வாக்குதான் காரணமாக இருக்குமே தவிர காங்கிரஸுக்கு நிச்சயம் இதில் பங்கே இருக்காது.

மேலும் ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் செய்த கபட நாடகங்கள், போர்க்குற்றவாளி என ராஜபக்சேவை ஐ.நா. குழு அறிவித்த பிறகும் கூட அவரைக் காப்பாற்ற காங்கிரஸ் மேலிடம் துடிப்பது என காங்கிரஸ் கட்சிக்கு எதிரான விஷயங்கள் ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் கவிழ்த்து விட்டுள்ளது.

மேலும் உட்கட்சிப் பூசல், கோஷ்டி கலவரங்கள், ஆளாளுக்கு நாட்டாமை, தங்கபாலுவின் தான்தோன்றித்தனம் ஆகியவையும் கூட காஹ்கிரஸுக்கு வேட்டு வைத்து விட்டது.

தங்கபாலு மயிலாப்பூரில் வேட்பாளராக நிற்க செய்த தகிடுதத்தனங்களும் காங்கிரஸாரையே கடுப்பாக்கி விட்டது. இத்தனையும் சேர்ந்து இன்று காங்கிரஸை காலி செய்துள்ளது.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

தமிழநாட்டில் ஜெயலலிதா ஆட்சி ஈழத்தமிழர்கட்காக எதையும் சாதித்துவிடப்போவதில்லை. இனிமேல் செய்யப்போகும் ஊழல்களுக்காக இப்பவே தமிழின விரோத காங்கிரசது கால்களை நக்கிப்பிழைத்தே தனது ஆட்சியின் ஆரம்பநாட்களைத் தொடரும். எனினும் அதிகாலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நான்கு மணிநேர உண்ணாநோண்பு புகழ் திருக்குவளை முத்துவேலு கருனாநிதி அவர்கட்கு சென்னை கண்ணம்மாப்பேட்டைதான் என்பதில் மிக்கமகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

இதோட உவன் தூக்கிப் போட்டுச் சாகவேணு ம் !!!!![

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி தோல்வி - மக்கள் கொடுத்த சாபம்.!

மே 13, 2011

தமிழ்நாட்டு சட்டசபைத்தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ முழுவதும் வெளிவந்து விட்டது. அஇஅதிமுக அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கஉள்ளது.

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்காக வண்ணமயமான அரங்கை உருவாக்கி நேரடியாக முடிவுகளை அறிவித்துக்கொண்டிருந்த திமுக கட்சியின் தலைவரின் தொலைக்காட்சியான ’கலைஞர்தொலைக்காட்சி’ நிகழ்ச்சிகளை இடைநிறுத்தி மானாட மயிலாட நிகழ்ச்சிக்குத் திரும்பிவிட்டது.

கருணாநிதி சற்றும் இதை எதிர்பார்த்திருக்கவே மாட்டார். அவருக்கென்ன, 2009 மே மாதத்தில் வன்னியில் இனஅழிப்பு ஒன்றை இந்தியாவின் துணையுடன் சிங்களம் நடாத்தியபோதும் இப்படித்தான் மானாட மயிலாட நிகழ்ச்சியை ஒளிபரப்பி ரசித்துக்கொண்டிருந்தவர்.

2009ம் ஆண்டின் இதே நாட்களில் இரத்தமும் சதைகளும் சிதறியபடி தமிழ் மக்கள் வன்னியின் நந்திக்கடலோரம் செத்துக்கொண்டிருந்தபோது ’காப்பாற்றுங்கள்’ காப்பாற்றுங்கள்’ என்று கதறி அழுதபோது கருணாநிதி என்ன செய்துகொண்டு இருந்தாரோ தெரியாது. புதுமாத்தளனில் கொத்து கொத்தாக எமது மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தபோது அதனை தடுத்து நிறுத்தக்கூடிய சக்திமிகுந்தவராக அவர் இருந்தபோதும் அதனை வேடிக்கை பார்த்தபடி இருந்தார்.

சகோதரச்சண்டை போட்டதால்தான் இப்போது சாகிறீர்கள் என்றுவேறு சாபம்கூட கொடுத்தார். ஆனால் இன்று இதே மே நாளில் கோபாலபுரம் வீட்டுக்குள்ளோ, ராசிபுரம் வீட்டுக்குள்ளோ ஒடுங்கிப்போய் இருப்பார் என்று நினைக்கிறேன். எந்த ஆட்சியதிகாரம் தனக்கும் தனது குடும்பத்துக்கும் நிலைக்கவேண்டும் என்று லட்சம் மக்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டும் விசமத்தனமான வியாக்கியானங்கள் விடுத்துக்கொண்டும் இருந்தவருக்கு இப்போது அதே ஆட்சி அதிகாரம் கையை விட்டுபோன பொழுதில் மீண்டும் 2009ஆண்டில் ஈழத்தமிழ் மக்கள் எழுப்பிய கதறல் நினைவுக்கு வந்திருக்கும்.

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ முழுவதும் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் அஇஅதிமுக கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் தனித்தே ஆட்சிஅமைக்க கூடிய பலத்தை பெற்றுவிட்டார். திமுகவின் பெரிய தூண்கள் எல்லாம் காற்றில் மக்கள் எதிர்ப்பு என்ற பெரும்காற்றில் அடிபட்டுபோய்விட்டனர்.

திமுகவின் இத்தகைய படுதோல்விக்கான காரணங்களை இப்போதே அலச தொடங்கி இருக்கும் தமிழ்நாட்டு அரசியல் ஆய்வாளர்கள் திமுகவின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக ஈழத்தமிழினம் அங்கு அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது அதற்கு எதிராக குரல் கொடுக்காததும், அந்தப்படுகொலைக்கு துணைநின்ற காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுநின்றதும் ஒன்றாகும் என சுட்டிக்காட்டிய வண்ணமிருக்கின்றனர்.

அரபுப் பாலைவனங்களில் ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுந்த பெருங்கோபம் போன்ற ஒரு கோபமே தமிழ்நாட்டில் வாக்குச்சீட்டுகளின்மூலம் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஈழத்மிழினத்தை கருவறுக்க கருவிகளும், ஆளணியும் கொடுத்த காங்கிரஸ் இந்தத் தேர்தலில் மோசமாக மண்ணை கவ்வியுள்ளது.

2011ல் காமராஜரின் ஆட்சியை அமைப்போம் என்ற கோசத்துடனும் கற்பனைகளுடனும் திரிந்தவர்களுக்கு இந்த தேர்தல் நல்லஒரு பாடம். எங்கள் மக்கள் உயிரைக்காப்பாற்ற பதுங்கு குழிகளுக்குள்ளும், கூடாரங்களுக்குள்ளும், மருத்துமனைகளுக்குள்ளும் கூடியபோது கொத்துக்கொத்தாக குண்டு வீசி அவர்கள் கருகியபோது சகுனித்தனமான உண்ணாவிரதங்களையும், தமிழ்நாட்டு எழுச்சியை திசைதிருப்பும் அறிக்கைகளையும் விட்டுக்கொண்டு இருந்த திமுக தோற்றுவிட்டது. காலங்கடந்தாலும் சரியாக கிடைத்த பாடம்.

மறுபக்கத்தில் செல்வி.ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை பெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் நேரத்திலும் அதற்கு பின்னரும் ஜெயலலிதாவின் அறிக்கைகள் எங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகவும், கடும் இருளுக்குள்ளாக தெரியும் மெல்லிய ஒளிக்கீற்று போலவே தெரிந்தது.

மிகஅண்மையில்கூட ஐநா வின் நிபுணர்குழு அறிக்கைக்கு ஆதரவாக அவர் எழுப்பிய குரல் மிகவும் முக்கியமானதாகும். நாளைக்கு அவர் யாருடன் இணையப்போகிறார். யார் அவருடன் வந்து சேரப்போகின்றார்கள் என்பதெல்லாம் இப்போது எமக்கு முக்கியமே அல்ல. ஆனால் விடுதலைக்காக போராடும் எமது தாயகத்துக்கு, அதன் மக்களுக்கு ஆதரவுக்குரல் எழுப்பக்கூடிய ஒருவராக அவர் இப்போது தெரிகின்றார். அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதன் மூலம் தனது வெற்றியை உலகதமிழர்கள் மிகவும் விருப்பத்துடன் பார்க்கிறார்கள் என்ற செய்தியை அவருக்கு வழங்கமுடியும்.

போர்க்குற்றம் என்ற சிங்களத்துக்கு எதிரான அஸ்திரம் சர்வதேசஅரங்கில் இன்னும் சரியாக ஏவப்படாமல் இருக்கும் இந்த பொழுதில் ஆறுகோடிக்கும் அதிகமான மக்களைக்கொண்ட ஒரு முக்கிய இந்திய மாநிலம் ஒன்றின் தலைவியின் அறிக்கை நிச்சயம் மிகப்பெரிய மாற்றங்களுக்கு ஒரு சிறுபொறியாக இருக்கும்.

எனவே, புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகள் இந்த தருணத்தில் தமது வாழ்த்துக்களையும், தமது வேண்டுகோள்களையும் செல்வி.ஜெயலலிதாவுக்கு அனுப்புவதன் மூலம் எங்களுக்கான ஒரு நட்புசக்தியை இன்னும் நெருக்கமாக எமது மக்களுக்காக குரல்கொடுக்க ஊக்கப்படுத்தலாம்.

- சங்கதிக்காக ச.ச.முத்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலமை‌ச்ச‌ர் பத‌வியை ரா‌ஜினாமா செ‌ய்தா‌ர் கருணா‌நி‌தி

வெள்ளி, 13 மே 2011( 15:18 IST )

முதலமை‌ச்‌ச‌ர் கருணா‌நி‌தி தனது ‌விலக‌ல் கடித‌த்தை ஆளுந‌ர் ப‌ர்னாலா‌விட‌ம் இ‌‌ன்று கொடு‌த்தா‌ர்.

மேலு‌ம் அமை‌ச்ச‌ர்க‌ளி‌‌ன் ‌விலக‌‌ல் கடித‌த்தை அவ‌ர் கொடு‌‌த்து‌ள்ளா‌ர்.

கருணா‌நி‌தி ‌விலக‌லை‌த் தொட‌ர்‌ந்து வரு‌ம் 15ஆ‌ம் தே‌தி முதலமை‌ச்சராக ஜெயல‌லிதா பத‌வியே‌ற்க உ‌ள்ளா‌ர்.

webdunia.com

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி வீடு செல்கிறார்!

ஆடிய ஆட்டம் என்ன?

பேசிய பேச்சு என்ன?

எழுதிய கடிதங்கள் என்ன?

அடித்த தந்திகள் என்ன?

..........................?

............................? :(:(:(

Edited by விசுகு

இலவசம், இலவசம் என்று கத்தி, காசு கொடுத்து ஓட்டுக்கேட்டேன், அதையும் மக்கள் இலவசமா அதிமுகவிடம் கொடுத்துட்டாங்க.

எல்லம் ஒரேதால்ல வரப்போகுது... கனிமொழி corruption caseல உள்ள போறார்.. ஜெயலலிதா வந்தா, சும்மா விடவா போறாவா...

கொலை caseல அழகிரி,

Rape... caseல Stalin ..

எல்லாம் ஒண்ணாவே வருதே...

Badsha movie ஞாபகம்.. ஆண்டவன் அள்ளிக்கொடுப்பான், கடைசி நேரத்தில கையை விட்டுவிடுவான்..

என்ர கடைசி நேரத்தில, கடவுள் மட்டுமில்ல கட்சித்தொண்டர்களும் கையை விட்டுடாங்கள்.

-- கருணாநிதி.

.

"ஜெ" இன் முதல் அதிரடி நடவடிக்கையே கருநாவின் குடும்ப அரசியல் ஊழலை விசாரிப்பது தானாம்.

முழுக்குடும்பமும் உள்ள போகுதோ..

AIADMK has no intention of sharing power with allies and would go after the DMK’s first family on the issue of corruption, a senior party leader said on Friday.

Hindu

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது புண்ணியவான்கள் அந்த கருணாவின் "ஐயோ கொல்றாங்களே!" வீடியோவை தேடியெடுத்து இணைச்சு விடுங்கோ இங்க!. அது தான் நல்ல 'சிற்றுவேஷன் சோங்" ஆக இருக்கும் போல எனக்குப் படுகுது! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஓ இந்த மகிழ்ச்சியான தருணத்திலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ஜெயலலிதா அடிக்கபோகும் முதல் இன்ப அதிர்ச்சி.. கேபிள் முதல் அனைத்தினையும் அரசுடமை ஆக்குவதுதான்.. சில வேளைகளில் அங்கிட்டு கேடிபிரதர்ஸின் சன் டிவி.. மற்றும் கொலைஞ்சர் டி.வி தெரியாமல் போகலாம்... கோர்ட் கேஸ் வாய்தா என கொஞ்ச காலம் தெரியவாய்ப்பு உண்டு.. அதுவும் இலவசமாக (தமிழ்நாட்டில் ) போனால் ஆச்சிரியபட ஒன்றும் இல்லை.. ஏற்கனவே வீட்டுக்கு ஒரு பசுமாடு 2 ஆடு க்கொடுப்பதாக சொல்லி உள்ளார்.. போக இலவச அறிவிப்புகளில் ஒன்றான அரிசி இலவச திட்ட்டத்தில் 35 கிலோ தருவதாக சொல்லி உள்ளார் .. தாலிக்கு தங்கம் வேறு ..

போக தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கட்டாயம் ஆப்பு வைப்பார் .. இலவச மின்சாரம் நிச்சயம் கட்டு.. அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகள் கட்டு.. :( பேருந்து கட்டணம் கட்டாயம் உயரும்.. மீனவர்களுக்கு ஆதரவு பெருகும்..(இது எம்.ஜிஆ கற்று கொடுத்த பாடம்) .. அண்டை மாநிலங்களுக்கு கட்டாயம் சட்ட ரீதியான ஆப்பு(கர்னாடாகாவுக்கு காவிரி- கேரளாவுக்கு முல்லை பெரியாறு)உண்டு....

டிஸ்கி:

போக உண்ணாவிரதம் என்று எடுத்து கொண்டாலும் 3 மணி நேரம் கருணா போல இருப்பவர் அல்ல ஜெயலலிதா காலை 10 டூ மாலை 5 அல்லது 6 அதை கரெக்டாக பாலோ செய்பவர்..

ம்ம் நல்லதும் கெட்டதும் கலந்து வருவதுதானே வாழ்க்கை...போக போக தெரியும்....

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் நல்லதும் கெட்டதும் கலந்து வருவதுதானே வாழ்க்கை...போக போக தெரியும்....

போக போக தெரிவதற்கு என்ன புது நபர்களா தோழர்..............????

எல்லாரும் ஏற்கனவே வந்து போனவர்களதானே.....

அவன் சுவரை பிடுங்கினால்.............. இவன் கூரையை பிடுங்குவான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மக்கள் ஓய்வு கொடுத்துவிட்டார்கள்: கருணாநிதி

சென்னை, மே.13,2011

தனக்கு தமிழக மக்கள் ஓய்வு கொடுத்துவிட்டதாக, திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைந்ததை அடுத்து, முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதி இன்று ராஜினாமா செய்தார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் அளித்தார்.

அதை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்த ஆளுனர், அடுத்தக்கட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் வரை முதல்வர் பதவியில் தொடருமாறு கருணாநிதியிடம் கேட்டுக்கொண்டார்.

தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த கருணாநிதி, "தமிழ்நாட்டு மக்கள் எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள்," என்றார்.

http://therthal.vikatan.com/index.php?eid=936

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மக்கள் ஓய்வு கொடுத்துவிட்டார்கள்: கருணாநிதி

சென்னை, மே.13,2011

தனக்கு தமிழக மக்கள் ஓய்வு கொடுத்துவிட்டதாக, திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைந்ததை அடுத்து, முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதி இன்று ராஜினாமா செய்தார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் அளித்தார்.

அதை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்த ஆளுனர், அடுத்தக்கட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் வரை முதல்வர் பதவியில் தொடருமாறு கருணாநிதியிடம் கேட்டுக்கொண்டார்.

தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த கருணாநிதி, "தமிழ்நாட்டு மக்கள் எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள்," என்றார்.

http://therthal.vikatan.com/index.php?eid=936

எதில் இருந்து என்பதை அவர் சொல்ல மறுத்துவிட்ட போதிலும்.............

தமிழக மக்கள் ஊழல் செய்வதில் இருந்து அவருக்கு ஓய்வுகொடுத்ததாக சொல்கிறார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.