Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் களம் கணவன் கடைசிக்கனவு

Featured Replies

சகோதரி ரதி அவர்களே இது சாந்தி அக்கா எழுதியதால் அவவிடம் கேக்க சொல்லுறியள்

இதை வேறு யாராவது எழுனால்

அந்த எழுத்தாளரை போய் கேக்க சொல்லுவியளா!!!!!!!

யார் எழுதினார் என்பது முக்கியமில்லை............

அதன் கரு பொருள் தான் முக்கியம் அவா கதையை எழுதி விட்டா என்றவுடன்

ஓடிப் போய் எல்லோரும் செயலில் இயங்க வேண்டும் என்று யார் சொன்னது

கதை எழுதுபவர்கள் எல்லோரும் அப்படியான எதிர் பார்ப்போடு கதைகளை எழுதினால்

இன்றய உலகம் இப்படி இருக்காது குறிப்பாக தமிழர்களின் வாழ்க்கை இப்படி

அழிந்து போகாது.....................

அதனால் கதையை படியுங்கள் இப்படியும் நடக்கிறது என எண்ணத்தில் பதியுங்கள்

அதற்கான திருத்த வழிகளை முடிந்தால் எல்லோரும் இணைந்து முயற்சித்து

அவற்றை இனியும் பெரிய அளவில் நடக்க விடாமல் தடுக்கலாம் அல்லவா!!!!!!

அன்பினி கதையில் வரும் ஒரு கதா பாத்திரம் அவ்வளவு தான்

கேட்கப்படும் சீதனக் காசில் 1 சதம் குறைந்தாலே திருமணத்தை

தடை போடும் மனிதர்களும் கட்ட போகிறவன் குடிகாரன் வயதில் அதிகமானவன் பல பெண்கள் தொடர்பு உள்ளவன் ஏன் அதற்கும் மேலாக அவன் ஆண்மையே இல்லாதவனாக இருந்தாலும் அவன் வெளிநாட்டில் இருந்தால் போதும் என்ற எண்ணம் மட்டும் திருமணத்தை நிர்ணயிக்கும் எங்களின் நாறிப்போன கலாச்சாரத்தில்

வலது குறைந்த பெண்ணுக்கு மாப்பிழையா!!!!!!!

அவர் புலிகளை இழுக்கவில்லை தற்போது தங்களை தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் எங்கள் எல்லோரையும் இழுத்திருக்கிறார்!!!!!

இப்படியான நிகழ்வுகளை படித்தபின் என்றாலும் கொஞ்சம் விழிப்படையலாம் அல்லவா!!!!!

இறுதியாக கதை எழுதுபவர்கள் எல்லோரும் அவர்களின் கதைக்கு கருத்தோ பதில்களோ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை

என நான் எண்ணுகிறேன்....................

அப்படி நீங்கள் நினைத்தால் தினம் தினம் நாங்கள் மணிக் கணக்காக பார்க்கும் சின்னதிரை நாடகங்களுக்கும் திரைப் படங்களுக்கும் அதற்குரியவர்களை

போய் கேட்கிறீர்களா!!!!

சிந்திப்போம் செயல் படுவோம் குறை காணும் மனநிலையை இனியாவது தள்ளி போடுவோம்!!!!!

மற்றவர்களில் குறைகாணுவதை தவிர்த்து விட்டு அவர்களை அன்பு செய்வோம்!!!!!!

முடிந்தால் செய்வோம் இல்லையேல் ஒதுங்கியே இருப்போம்!!!!!!!!!

  • Replies 142
  • Views 22.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மாறன் அவர்களே இது கருத்துக் களம்...கருத்து களத்திற்கு என பல விதிமுறைகள் உள்ளன...யாழில் இனைக்கப்படும் ஆக்கத்திற்கு மூலம் குறிப்பிடப் பட வேண்டும்... அவர்களது சொந்தக் கதையாயின் கற்பனையாக இருக்க வேண்டும்...இது கற்பனைக் கதை இல்லை உண்மையில் நடந்த சம்பவம் என்றும் கதை சொல்லியாக தான் உள்ளேன் என்றும் சாந்தி அக்கா சொல்லி உள்ளார்...கதை சொல்லியாக உள்ள ஒருவர் அந்த கதையின் பின் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்...அது சாந்தி அக்காவாக இருக்கலாம்,இன்னுமொருவனாக இருக்கலாம்,நிழலியாக இருக்கலாம் ஏன் மோகன் அண்ணாவாக இருந்தால் கூட பதில் சொல்லத் தான் வேண்டும்...அப்படி அவர்களால் பதில் சொல்ல முடியா விட்டால் 1)எழுதினவருக்கு பதில் தெரியாது 2)10% உண்மையோடு 90% கற்பனை கலந்து எழுதியுள்ளார் என்டே நினைப்போம்...உண்மையில் நட‌க்கிற சம்பவத்தை துணிந்து சாந்தி அக்கா கதையாக எழுதினார் என்டால்[இதற்காக இப்படி சம்பவங்களே நடக்கவில்லை என நான் வக்காலத்து வாங்கவில்லை.] அதன் பிறகு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்வதில் என்ன தயக்கம்?

நான் மேலே கேட்ட கேள்விகளுக்கு உங்களிட‌ம் பதில் இல்லை...சாந்தி அக்காவும் பதில் சொல்லப் போறது இல்லை... உண்மையில் நட‌ந்த சம்பவத்தை எழுதியுள்ளார் அதன் பிறகு ஏதாவது மாற்றம் நட‌ந்தா எனக் கேட்டதிற்கு கதையை வாசித்து யாராவது செயலில் இறங்குவார்களா? எனக் கேட்டு உள்ளீர்கள்...தெரியாமல் தான் கேட்கிறேன் பின் எதற்காக எழுதியுள்ளார்? புலிகள் போன பாதை பிழை எனக் காட்டுவதற்காகவா?...புலிகளை இழுக்கவில்லை என சொல்லியுள்ளீர்கள் கதையை வடிவாய் வாசித்து உள்ளீர்களா?...கதையின் முக்கால் பாகம் வரைக்கும் அன்பினி புலியில் இருந்த கதை தான் சொல்லப்படுகிறது மிகுதி கால் பாகம் தான் அன்பினியின் தேவையை உணர்த்தி நிற்கிறது.

இந்த சமூகம்,ஊனமுற்ற பெண்ணின் திருமணம் போன்றவற்றில் உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்...சாந்தி அக்கா மீது எனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை...யார் இக் கதையை எழுதியிருந்தாலும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கட‌ப்பாடு அவர்களுக்கு உண்டு என்பதே என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி ரதி அவர்களே இது சாந்தி அக்கா எழுதியதால் அவவிடம் கேக்க சொல்லுறியள்

இதை வேறு யாராவது எழுனால்

அந்த எழுத்தாளரை போய் கேக்க சொல்லுவியளா!!!!!!!

யார் எழுதினார் என்பது முக்கியமில்லை............

அதன் கரு பொருள் தான் முக்கியம் அவா கதையை எழுதி விட்டா என்றவுடன்

ஓடிப் போய் எல்லோரும் செயலில் இயங்க வேண்டும் என்று யார் சொன்னது

கதை எழுதுபவர்கள் எல்லோரும் அப்படியான எதிர் பார்ப்போடு கதைகளை எழுதினால்

இன்றய உலகம் இப்படி இருக்காது குறிப்பாக தமிழர்களின் வாழ்க்கை இப்படி

அழிந்து போகாது.....................

அதனால் கதையை படியுங்கள் இப்படியும் நடக்கிறது என எண்ணத்தில் பதியுங்கள்

அதற்கான திருத்த வழிகளை முடிந்தால் எல்லோரும் இணைந்து முயற்சித்து

அவற்றை இனியும் பெரிய அளவில் நடக்க விடாமல் தடுக்கலாம் அல்லவா!!!!!!

அன்பினி கதையில் வரும் ஒரு கதா பாத்திரம் அவ்வளவு தான்

கேட்கப்படும் சீதனக் காசில் 1 சதம் குறைந்தாலே திருமணத்தை

தடை போடும் மனிதர்களும் கட்ட போகிறவன் குடிகாரன் வயதில் அதிகமானவன் பல பெண்கள் தொடர்பு உள்ளவன் ஏன் அதற்கும் மேலாக அவன் ஆண்மையே இல்லாதவனாக இருந்தாலும் அவன் வெளிநாட்டில் இருந்தால் போதும் என்ற எண்ணம் மட்டும் திருமணத்தை நிர்ணயிக்கும் எங்களின் நாறிப்போன கலாச்சாரத்தில்

வலது குறைந்த பெண்ணுக்கு மாப்பிழையா!!!!!!!

அவர் புலிகளை இழுக்கவில்லை தற்போது தங்களை தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் எங்கள் எல்லோரையும் இழுத்திருக்கிறார்!!!!!

இப்படியான நிகழ்வுகளை படித்தபின் என்றாலும் கொஞ்சம் விழிப்படையலாம் அல்லவா!!!!!

இறுதியாக கதை எழுதுபவர்கள் எல்லோரும் அவர்களின் கதைக்கு கருத்தோ பதில்களோ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை

என நான் எண்ணுகிறேன்....................

அப்படி நீங்கள் நினைத்தால் தினம் தினம் நாங்கள் மணிக் கணக்காக பார்க்கும் சின்னதிரை நாடகங்களுக்கும் திரைப் படங்களுக்கும் அதற்குரியவர்களை

போய் கேட்கிறீர்களா!!!!

சிந்திப்போம் செயல் படுவோம் குறை காணும் மனநிலையை இனியாவது தள்ளி போடுவோம்!!!!!

மற்றவர்களில் குறைகாணுவதை தவிர்த்து விட்டு அவர்களை அன்பு செய்வோம்!!!!!!

முடிந்தால் செய்வோம் இல்லையேல் ஒதுங்கியே இருப்போம்!!!!!!!!!

தமிழ் மாறன் அண்ணா, உங்களுக்கு ஒரு பச்சை. கருத்துக் களத்தில கதை ஒண்டு இணைச்சா, கண்ட கண்ட கேணைத் தனமான கேள்விகளுக்கும் பதில் குடுக்கோணும் எண்டது எனக்கு இவளவு காலமும் தெரியாமல் போச்சப்பா. யாராவது சீனியர்ஸ் வந்து தெளிவு படுத்துங்கோ பிளீஸ். :lol:

ஒருவரது கேள்வி கேனைத் தனமா இல்லையா என்பதை எப்படி தீர்மானிகின்றீர்கள்? பதில் சொல்வதா இல்லையா என்பதை தீர்மானிப்பது அவரவர் உரிமை, ஆனால் கேட்கும் கேள்வி பற்றி இத்தகைய மட்டமான பதிலை சொல்வதற்கு; உங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது?

மற்றப்படி தமிழ்மாறனுக்கு மீண்டும் ஒரு பச்சைப் புள்ளி

நீங்கள் சொல்லுறதும் சரிதான் நிழலி அண்ணா, ஆனால் கதைக்குப் பிறகு கேக்கிற கேள்வி எல்லாத்துக்கும் கதை எழுதியவர் அல்லது கதையை இணைத்தவர் பதில் சொல்லியே ஆகணும் எண்டு புதுக்கதை சொல்லுறத வாசிக்க வந்த விசரில அப்பிடியே எழுதிப்போட்டன். சில வம்புக்கான விலங்கமான கேள்விகளையே கேணைத்தனமான கேள்விகள் எண்டு குறிப்பிட்டேன். நான் என்ன சொல்ல வாறன் எண்டு உங்களுக்கு விளங்கியிருக்கும் எண்டு நினைக்கிறன். கேள்விக்கு விடயளிப்பதும் அளிக்காமல் விடுவது கதையை எழுதியவரிண்ட உரிமை எண்டு நீங்கள் சொன்னது எல்லாருக்கும் விளங்கினாச் சரி அண்ணா.

ரதி அவர்களே முழந்தைப்பிள்ளை தனமாக கருத்துக்களை எழுதுகிறீர்கள்!!!!

நீங்கள் சொல்லுவது போல் யாழ் களத்தில் எழுதப்படும் எல்லாவற்றிற்கும் விளக்கம் வரிவு தர வேண்டும் என்ற நிபந்தனை இருந்தால்...................

ஒரு ஆக்கத்தையே தினம் தினம் படித்து ஆயிரம் கேள்விகளை தொடுத்துக் கொண்டிருக்கலாம்......................

நானும் நீண்ட கால யாழ் உறவு அப்படி ஒரு சந்தர்ப்பத்தை நான் பார்த்ததே இல்லை என்னைப் போல் தான் மற்ரவர்களும் என

நினைக்கிறேன்!!!! ரதி ஒன்றை மட்டும் மனதில் ஆ....ளமாக பதியுங்கள் புலிகள் தான் தமிழர்கள் தமிழர்கள் தான் புலிகள் அதனால்

தமிழர்களுக்கு ஏற்புடைய விசேட குணத்தில் அவர்களும் இயங்கி உள்ளார்கள் என்பது தான் ஆணித்தன மான உண்மை!!!!!!!

அது மட்டுமல்லாமல் போராளிகளே சொல்லுகிறார்கள் தமிழர்களுடன் இணைந்து வாழ்ந்தால் தினம் தினம் முள்ளிவாய்க்கால் தான் என்று!!!!!!

அதனால் கோழி முட்டையில் மயிர் புடுங்கிற வேலையை விட்டுவிட்டு விடுங்கள்..................

தங்கள் உயிர்களையும் தங்கள் உடல் அவயவங்களையும் சொந்தங்களையும் உடமைகளையும் மொத்தத்தில் வாழ்க்கையையே

தொலைத்து எங்களிற்கு புலத்திலே உல்லாசமாக வாழ வழி சமைத்து தந்த அந்த அப்பாவி உறவுகளிற்கு அன்பு கரம் நீட்டுங்கள்

இல்லையேல் எங்கள் மனச்சாட்சி இன்று இயங்க மறுத்தாலும் என்றோ ஒரு நாள் அது எங்களை கொல்லாமல் கொல்லும்!!!!!!!

கதைக்கு விளக்கமும் வியாக்கியானமும் கேட்டு பொன்னான நேரத்தை மண்ணாக்காதீர்கள்..............................

புலிகள் தமிழ் மக்களின் பிரதி நிதிகள் அதை எவராலும் மறுத்து உரைக்க முடியாது (மாவீரர்களையும் இன்று வாழ்க்கையை தொலைத்து விட்டு

சிறைகளிலும் வெளியிலும் அல்லல் படும் போராளிகளையும் தினம் தினம் எண்ணத்தில் கொள்ளுங்கள்)

அதற்காக அவர்கள் தப்பே செய்யவில்லை என்பது தான் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று!!!!!!!!!

அன்புடன்

தமிழ்மாறன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது தமிழ்மாறன் கதை,கட்டுரை எழுதுகின்ற ஒருவரும் இனி மேல் பதில் சொல்லத் தேவையில்லை[அவர்கள் விரும்பா விட்டால்]...மட்டுறுத்தினராய் இருக்கும் நிழலியே சொல்லி விட்டார்...நானும் 3 மாதத்திற்கு முன்பு யாழ் போய் வந்தேன்.வன்னிக்கும் போனேன்...என்னிடமும் அப் போராளிகள் சொன்ன பல கதைகள் உண்டு...குறிப்பாக புலம் பெயர் நாட்டில் இருக்கும் முக்கிய பிரபல்யங்கள்,சமூக சேவகர்கள்,தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சமாதான காலத்தில் வன்னிக்கு போய் என்ன மாதிரி நடந்து கொண்டார்கள் என்பது பற்றி பல கதைகள் பல பேர் எனக்கும் சொல்லி உள்ளார்கள்...நான் இவ்வளவு நாளும் அதைப் பகிரங்கப் படுத்த விரும்பவில்லை...இப்ப நானும் சமூக நலனுக்காக எழுதலாம்...

கதையாக எழுத எனக்கு வரா விட்டாலும் சமூக சாளரம் பகுதியில் ஒரு கட்டுரையாக எழுதலாம்...ஒருதரும் கேள்வி கேட்க கூடாது எனக்கு பதில் சொல்ல விருப்பம் இருந்தால் சொல்லுவேன் இல்லா விட்டால் சொல்ல மாட்டேன்[நிழலியின் கருத்தும் இது தானே.]

புலி பிழையே விடவில்லை என்று சொல்லவில்லை...நானும் பல விடயங்களில் அதை விமர்சித்து உள்ளேன் ஆனால் இந்தக் கதைக்கு புலியின் கடந்த காலம் தேவையில்லை என்பது தான் என் கருத்து...இவர்கள் செய்வது ஒரு உளவியல் ரீதியான நடவடிக்கை அது உங்களைப் போன்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் வேதனையானது...இவர்கள் தொண்டு நிறுவனம் வைத்து உள்ளார்கள் அங்குள்ள மக்களுக்கு உதவி செய்கிறார்கள் இல்லை என்று மறுக்கவில்லை அதே நேரத்தில் அதே செல்வாக்கை பயன்படுத்தி புலம் பெயர் மக்களை குழப்புகிறார்கள்...இந்த கதையை எழுதியவர் அதில் புலியை இழுக்காமல் எழுதி இருந்தால் 100% ஆதரவு அவருக்கு கிடைத்திருக்கும் ஆனால் அவர் கதையோடு சம்மந்தம் இல்லாமல் புலிகளை இழுத்து ஒரு குழப்ப நிலையை படிக்கும் வாசகர்களிடையே ஏற்படுத்தி உள்ளார்.[அவரும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்கிறார் நீங்களும் பதில் சொல்லத் தேவையில்லை என்கிறீர்கள். அவர் பதில் சொன்னாலாவது அவரது உண்மை நிலை சில நேரம் விளங்கப்பட்டு இருக்கும்]

கதையை எழுதிப் போட்டு அவர் அமைதியாக இருக்கிறார்...இங்கு நாங்கள் எல்லோரும் கருத்தாடி முடிந்து விட்டு அமைதியான பிறகு திரும்பவும் இன்னொரு கதையை இன்னுமொரு போராளி சொன்னது எனச் சொல்லி திரும்பவும் கொண்டு வந்து இணைப்பார் அதை வாசித்து விட்டு திரும்பவும் எங்களுக்குள் புடுங்குப் படுவோம்...இதுவும் ஒரு உளவியல் யுத்தம் தான் அதை அவர் திறமையாக தன் பெயர் கெடாத படி கொண்டு நடத்துகிறார்.

இந்த முள்ளி வாய்க்கால் யுத்தத்தின் ஆர‌ம்பத்தில் நான் நினைக்கிறேன் மார்ச் மாதத்தில் லண்ட‌னின் இருக்கும் ஒரு அண்ணா வன்னியில் இருக்கும் தன் பெற்றோரை இழந்தார்...அவர் கொஞ்ச‌ நாள் வரைக்கும் புலியை திட்டிக் கொண்டே இருந்தார் ஆனால் எப்ப தீபன் அண்ணா போன்ற தளபதிகள் செத்தார்களோ அப்பவே பாராளுமன்றத்திற்கு வந்து மக்களோடு மக்களாய் சேர்ந்து ஆர்ப்பாட்ட‌த்தில் கலந்து கொண்டார்...இது தான் உண்மையான பற்று...அன்பினியும் எல்லாவற்றையும் இழந்த கோபத்தில் கட‌ந்த காலத்தில் நட‌ந்ததை நினைத்து அழுதிருக்கலாம்,ஆறுதல் தேடி இருக்கலாம் ஆனால் இவர்கள் அன்பினி போன்றவர்களது கோபத்தை குறைக்க முற்படுவதை விடுத்து அதை மேலும் அதிகமாக்கி உள்ளார்கள்,அதை வியாபார‌மாக்கி உள்ளார்கள் என்பது என் கருத்து.

இனி மேலும் தேவையில்லாமல் இத் திரியில் எழுதி என் நேர‌த்தை வீணாக்க நான் விரும்பவில்லை...அங்குள்ள மக்களுக்கும்,போராளிகளுக்கும் எப்படி உதவுகிறது என்பது எனக்கு நன்றாகவே தெரியும் ஆனால் தும்பளையான் போன்ற மெத்த படித்தவர்கள் என்று தம்மை சொல்லிக் கொண்டு இருக்கிற கொஞ்ச‌ பேருக்குத் தான் வன்னியில் என்ன நட‌க்கிறது என்பது தெரியாது என்று நினைக்கிறேன் முடிந்தால் அவர்களுக்கு புரிய வையுங்கள்[புலி எதிர்ப்பு எழுதிறது என்டால் விழுந்தடித்து கொண்டு ஓடி வருவார்.]... உங்களோடு கருத்தாடியதில் மகிழ்ச்சி...நன்றி...வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரண்ட்ஸ் படத்தில் நடித்த விஜயலட்சுமி பொலிஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான முறைப்பாட்டு மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பாக, சீமான் சார்பாக, அவரது வக்கீல் சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தினார்.

நடிகை விஜயலட்சுமி முறைப்பாடு கொடுத்தது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. விஜயலட்சுமி, அவரது அக்காள் விவாகரத்து வழக்கு தொடர்பாக உதவி கேட்டு, சீமானை ஒருமுறை சந்தித்து பேசினார். அது தொடர்பாக உதவி செய்யும்படி, சீமான் என்னிடம் கூறினார்.

அந்த ஒருமுறை மட்டுமே விஜயலட்சுமி சீமானை சந்தித்து பேசினார். அதன் பிறகு, அவர் சீமானை பார்க்கவே இல்லை.

சீமான் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். அவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதை கெடுக்கவும், அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என்றார்.

source:seithy.

பூலான்தேவியின் தொல்லையிலிருந்து தப்பி மூச்சு விட்ட நேரம் இன்னொருவர் அவர்களுக்கு வகுப்பெடுக்கப் புதிதாக வந்திருப்பதாகப் பிள்ளைகள் சொன்னார்கள். அதுவொரு புதிய அனுபவம். அவரைப்பற்றிப் பல விடயங்களை ஏற்கனவே அறிந்திருந்தார்கள். அவர் ஒரு தமிழகத்துக்காரர். அதையும்விட ஒரு சினிமாக்காரர். இயக்குனர் என அவரது அறிமுகத்தை அவளது நாட்டியத் தாரகையும் பாடகியுமான யாழிசை சொல்லிக் கொண்டிருந்தாள். பூலான்தேவியின் வகுப்பைவிட அது வித்தியாசமானதாக இருந்தது. அவர் தனது சினிமா அனுபவங்கள் முதல் சிறை அனுபவங்கள் வரை பகிர்ந்து கொண்டார்.

அந்தச்சினிமாக்காரரிடம் கேள்விகள் கேட்டார்கள் அவரோடு பலவிடயங்களைப் பேசினார்கள். அந்த நேரத்தில் அவரைப் புலிகளின் குரல் வானொலியின் பொறுப்பாளர் கேட்டார். ஏன் நீங்கள் திருமணம் செய்யவில்லை.உங்களுக்குப் பிடித்த ஒருவரை திருமணம் செய்யலாமே ?

அவர் சிரித்தார். பின்னர் சொல்லத் தொடங்கினார்….இ சிறை எனக்கு வீடுமாதிரி…. நான் அடிக்கடி சிறைக்குப் போய் வருவேன்… இதையெல்லாம் புரிந்து நான் சிறைக்குப் போய் வரும்வரை குடும்பப் பொறுப்புகளைக் கவனித்து என்னுடன் வாழக்கூடிய ஒருத்தி கிடைத்தால் நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். அவரது வயதுக்கு ஒத்த வயதில் இருந்த ஒரு அக்காவை மனதில் நினைத்துத்தான் அவரிடம் திருமணம் பற்றி புலிகளின் குரல் பொறுப்பாளர் கேட்டதாகப் பிள்ளைகள் கதைத்தார்கள்.

பின்னர் அந்த அக்காவுக்கு அந்தச் சினிமாக்காரரைச் சொல்லி நக்கலடிப்பார்கள். அக்கா சிரிப்பாள்…அதற்கு மேல் கதைக்கமாட்டாள். அக்காவுக்குள் அந்தச் சினிமாக்காரர் மேல் ஒருதலைக்காதல் இருந்தது. அக்கா அந்த இயக்குனரை நேசித்தாள். அவருடன் வாழும் கனவோடு இருந்தாள். ஆனால் அக்காவின் காதல் நிறைவேறவில்லை. அவளது ஒருதலைக்காதல் அவளுக்குள்ளேயே கரைந்து போனது.

என்ன சாத்திலி இடம் மாறி வந்தி;டியளோ!!!!!!!

அல்லது அடிபடாதையுங்கோ சினிமாவைப்பற்றி கதையுங்கோ

எண்டிறியளேர்; பார்த்தீர்களா என் பார்வை வித்தியாசமாக இருக்கிறது

அதைப் போல்தான் எனல்லோர் பார்வையும் வித்தியாசமாக இருக்கும் இணைப்புக்கு நன்றி

சகோதரி ரதி அவர்களே பாரபட்சம் இன்றி கண்டவற்றையும் கேட்டவற்றையும் அப்படியே எழுதுங்கள்

அதைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்..............இவற்றை நாம் முன்னர் செய்திருக்க வேண்டும்

தமிழர்களின் விடயம் எல்லாம் தலைக்கு மேல் வெள்ளம் போன பின்னும் கண ;கெட்ட பின் சுhரிய நமஸ்காரம் செய்வதற்கும்

ஒப்பான முறையில் இருப்பவையே அதனால் இனி எண்டாலும் அந்த நிலை வராமல் இருக்க

உள்ளதை உள்ள படி சரி பிழைகளை சுட்டிக் காட்டி எழுதுங்கள் நிறையவே எழுங்கள்!!!!!!!!

உங்களின் ஆக்கங்களை நானும் படிக்க ஆவலாக காத்திருக்கிறேன்!!!!!!

நன்றி சகோதரி

அன்புடன்

தமிழ்மாறன்

இயக்குநர் சீமான் இதுமாதிரிப் பாதிக்கப்பட்ட பெண்ணை மணக்கவுள்ளார் என்று இப்பதான் கேள்விப்பட்டேன். இவருக்கும் அதுமாதிரி ஒரு நல்வாழ்வு அமையட்டும்.

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லது தமிழ்மாறன் கதை,கட்டுரை எழுதுகின்ற ஒருவரும் இனி மேல் பதில் சொல்லத் தேவையில்லை[அவர்கள் விரும்பா விட்டால்]...மட்டுறுத்தினராய் இருக்கும் நிழலியே சொல்லி விட்டார்...நானும் 3 மாதத்திற்கு முன்பு யாழ் போய் வந்தேன்.வன்னிக்கும் போனேன்...என்னிடமும் அப் போராளிகள் சொன்ன பல கதைகள் உண்டு...குறிப்பாக புலம் பெயர் நாட்டில் இருக்கும் முக்கிய பிரபல்யங்கள்,சமூக சேவகர்கள்,தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சமாதான காலத்தில் வன்னிக்கு போய் என்ன மாதிரி நடந்து கொண்டார்கள் என்பது பற்றி பல கதைகள் பல பேர் எனக்கும் சொல்லி உள்ளார்கள்...நான் இவ்வளவு நாளும் அதைப் பகிரங்கப் படுத்த விரும்பவில்லை...இப்ப நானும் சமூக நலனுக்காக எழுதலாம்...

கதையாக எழுத எனக்கு வரா விட்டாலும் சமூக சாளரம் பகுதியில் ஒரு கட்டுரையாக எழுதலாம்...ஒருதரும் கேள்வி கேட்க கூடாது எனக்கு பதில் சொல்ல விருப்பம் இருந்தால் சொல்லுவேன் இல்லா விட்டால் சொல்ல மாட்டேன்[நிழலியின் கருத்தும் இது தானே.]

சாந்தி அக்கா நீங்கள் இதை இணைத்தில் இருந்து வாசிச்சனான், நல்ல பல கருத்துக்களை அறிய கூடியதாக இருந்தது. நன்றி. ஆனால் சில பேர் எனக்கும் ந்ல்ல எழுதத் தெரியும் என்றார்கள் எல்லாம் வாய்ச் சொல்லில் வீரர்ரடி

ம்...... இந்த நாவலூடாக நிறைய விடயங்களை அறியக்கூடியதாக இருந்தது, நன்றி சாந்தி!

Edited by அலைமகள்

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாந்தி .............. நாளை முழுவதும் வாசித்துவிட்டு தொடர்கிறேன்

நன்றி சாந்தி .............. நாளை முழுவதும் வாசித்துவிட்டு தொடர்கிறேன்

என்னா...கதையை நீங்க தொடரப்போறியளா நந்து..? :o :o

  • கருத்துக்கள உறவுகள்

எங்களிடம் தொடர ஏராளம் உண்டு எண்டாலும் அடக்கி வாசிப்போம் :)

எங்களிடம் தொடர ஏராளம் உண்டு எண்டாலும் அடக்கி வாசிப்போம் :)

நந்தன் தொடருங்கோ..உங்களுக்கு நல்ல நகைச்சுவையாய் எழுத வரும்..ஏனோ எழுதுவதிலை.. :(

  • கருத்துக்கள உறவுகள்

கண்டபாட்டுக்கு வெட்டுறாங்க பாஸ் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.