Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வேயில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக செயற்பட்டு வந்த நெடியவன் கைது செய்யபட்டு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் நீதிமன்றில் நிறுத்தபட்டுள்ளார்.

Featured Replies

நெடியவன் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வே தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.tv2nyhetene.no/innenriks/terroravhoert-tamil-jobber-i-barnehage-3498052.html

  • கருத்துக்கள உறவுகள்

யாரால் கைது செய்யப்பட்டார்கள்?. ஏன் கைது செய்யப்பட்டார்?. நோர்வே மொழி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

கொலன் நாட்டில் இருந்து வந்த சர்வதேச பொலிசாரால் நெடியவனின் வீடு சுற்றி வளைக்கபட்டு தேடுதலுக்கு உள்ளாக்கபட்டு நெடியவன் கைது செய்பட்டதுடன் அவர் உடனடியாக நோர்வே தலைநகரம் ஒஸ்லோவுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டுவரபட்டு நீதிமன்றில் நிறுத்தபட்டார்.

நெடியவன் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு தினங்களாக ஜரோப்பிய பயங்கரவாத சட்டபடியான வழக்கை எதிர் நோக்கி வருகின்றார். இது தொடர்பாக இன்று நோர்வே தொலைக்காட்சியான ரிவி2 செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது...

நோர்வே நாட்டில் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் வேலை செய்து வருகிறார் நெடியவன். புலி பயங்கரவாதத்திற்கு பல மில்லியன் பணத்தை இவர் ஜரோப்பாவில் இருந்து கையாள்வதாக கொலன் நாட்டு பொலிசார் நோர்வே நாட்டு நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

கொலன் நாட்டு அரசாங்கம் கேட்டுக் கொண்டபடி இரகசிய நீதிமன்ற வழக்கு ஒண்றை நோர்வே நாட்டின் நீதிமன்றில் கொலன் அரசாங்கம் நடத்தி வருகிறது.

கொலன் நாட்டின் பயங்கரவாத நிபுணரின் குற்றச்சாட்டுபடி நெடியவன் மிகவும் பலம் பொருந்திய முக்கியமான முதுகெலும்பாக புலிகள் இயக்த்திற்கு செயல்பட்டுள்ளதுடன் முக்கிய பாத்திரமும் வகித்துள்ளார்.

நெடியவனின் வீடு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நோர்வேயில் முற்றுகை

நோர்வேயின் தலைநகரத்திற்கு வெளியே பேகன் என்ற மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு பிராந்தியத்தில் வாழ்ந்துவரும் நெடியவனின் வீடு கொலன் நாட்டு பொலிசாரால் முற்றுகையிடப்பட்டதுடன் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தினர்.

கொலன் நாட்டில் இருந்து வந்த பொலிசார் நெடியவனின் வீட்டை நீதிமன்ற அனுமதியுடன் சோதனை செய்தனர். புலிகள் ஜரோப்பிய சட்டபடி பயங்கரவாதிகளாக அறிவிக்கபட்டுள்ளதால் புலிகளின் பணத்தை கையாண்ட நெடியவன் பயங்கரவாத சட்டபடி இந்த தேடுதல் வேட்டைக்கும் விசாரணைக்கும் உட்டபட்டதாக ரிவி2 தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

நோர்வே பாராளுமன்றத்திற்கும் வந்திருந்தார்

2003ஆம் ஆண்டு நடுபகுதியில் இருந்து நெடியவன் புலிகளின் தூதுக்குழுவில் ஒரு அங்கத்தவராக பல தடவை நோர்வே வந்திருந்தார். இவர்கள் நோர்வே பாராளுமன்றத்தில் எரிக் சொல்கைம்மை சந்தித்தித்திருந்தனர்.

நோர்வேயில் புலிகள் பகிரங்கமாக செயற்பட்டு வருகின்றனர். அமெரிக்காவிலும் அவுஸ்ரேலியாவிலும் ஜரோப்பிய நாடுகளிலும் புலிகள் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யபட்டுள்ளது.

நோர்வேயின் அமெரிக்காவுக்கு ஆதரவான கொள்கை உடைய கென்சவேரிவ் (நோர்வேயின் எதிர்கட்சி) கட்சியினர் புலிகளை ஜரோப்பிய நாடுகள் 27இல் பயங்கரவாதிகளாக அறிவித்ததை போன்று அறிவிக்க வேண்டும் என பகிரங்கமாக நோர்வேயில் அறிவித்துள்ளனர்.

கென்சவேட்டிக் கட்சியினரின் காலத்திலேயே புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் நோர்வே அரசின் ஆதரவுடன் பேச்சகள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது தொழில் கட்சி ஆட்சி நடத்தியும் வருகின்றது.

ஜரோப்பிய யூனியனின் சட்டபடி நோர்வேயில் புலிகளுக்கு தடை

ஜரோப்பிய யூனியன் நாடுகளை போன்று நாமும் பயங்கரவாதிகளின் பட்டியலில் புலிகளை இணைக்க வேண்டும். இது ஒர பாராதூரமான விடயம். நோர்வேயில் புலிகள் பல பெயர்களில் பல வடிவங்களில் இயங்க முற்படுகிறார்கள்.

Peter S. Gitmark (foreign and defense committee, H).

இது ஒரு பிரச்சனைக்குரிய விடயம். அயல் நாடுகள் பலவற்றில் பல பேர்களில் பல சட்ட நுணுக்கங்களை தாண்டி இவர்கள் இயங்க முற்படுவது ஆபத்தானது என நோர்வேயின் பாராளுமன்ற உறுப்பினரும் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு குழுவின் முக்கியஸ்தர் பிட்டர் கிட்மாக் தெரிவித்துள்ளார்.

புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இடவேண்டும். இது ஒரு அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது. மாபெரும் பணப் பரிமாற்ற இயந்திரமாக நோர்வேயை புலிகள் பயன்படுத்த முற்பட்டுள்ளனர்.

நோர்வேயில் புலிகள் நிதி வசூலிக்கிறார்கள் என்பது எமக்கு நன்கு தெரியும். இதனை இவர்கள் பல காலமாக செய்து வருகிறார்கள். ஜரோப்பிய சட்டகோவையின்படி பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. ஆனால் நோர்வே ஜரோப்பிய பயங்கரவாத நடைமுறைகளை பின்பற்றவேண்டும்.

இன்னுமொரு படையை புலிகள் உருவாக்க முற்படுகிறார்கள். இது ஆபத்தானதும் மிகவும் பாரதூரமானதுமான விளைவுகளை நோர்வேக்கு ஏற்படுத்தும். இப்படை இலங்கையை நோக்கி நகர்ந்தால் சொல்ல முடியாத எதிர் விளைவுகளை நோர்வேயிற்கு தரும்.

நாம் சமாதானத்தை வெல்ல வேண்டும் - நோர்வே பாராளுமன்ற உறுப்பினர்

நாம் பல தகவல்களை இன்று அறிகிறோம். புலிகளின் வரி வசூலிப்பில் பாதிக்கபட்டுள்ளதாக நோர்வேயில் பிரபல தமிழர்கள் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இது மிகவும் ஒரு பாரதூரமான விடயம். இன்று யுத்தம் முடிவடைந்துவிட்டது என்பதை உணர வேண்டும். நாம் சமாதானத்தை வெல்ல வேண்டும்.

நாம் எமது வளங்களையும் நோர்வேயின் உதவிகளையும் ஒருங்கிணைத்து இலங்கையில் உள்ள இரண்டு சக்திகளையும் ஒன்றிணைத்து பொதுமக்களுக்கு பயனுள்ள விதத்தில் நாம் அபிவிருத்தி புனர்வாழ்வுக்கு உதவ வேண்டும்.

உடனடியாக நோர்வே ஜரோப்பிய சட்டத்தை அமுல்படுத்தி புலிகளை பயங்கரவாதிகளாக அறிவிக்க வேண்டும். ஆகவே ஜரோப்பிய யூனியன் போன்று நோர்வேயும் புலிகளை பயங்கரவாதிகளாக உடனடியாக பிரகடனபடுத்த வேண்டும்.

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=22181:2011-05-19-20-41-07&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

நிதிப்பங்களிப்பு செய்வதை உடனடியாக தடை செய்யவேண்டும். நாம் நிரந்தரமாக அதற்கு முற்றுப்புள்ளி போட வேண்டும். பயங்கரவாதத்திற்கு பணம் சேகரிப்பதற்கு தடை போட வேண்டும். இலங்கையின் எந்த ஆயுதக் குழுவும் நோர்வேயில் நிதி சேகரிப்பதை அனுமதிக்க முடியாது.

புலிகளை நோர்வே உளவுத்துறை பின்தொடருகின்றது.

Janne Kristiansen is the Chief of Police Security Service (PST).

நோர்வே உளவுத் துறையின் பணிப்பாளர் யன்னி கிறீஸ்ரியன்சன் புலிகள் தொடர்பாக நோர்வே தொலைக்காட்சியில் தோன்றி கருத்து தெரிவிக்கும்போது, புலிகள் என்ற ஒரு குழுவை நோர்வே நாட்டை விட ஜரோப்பிய நாடு ஒன்றில் விசாரிப்பது என்பது சற்று கடினமான ஒரு செயலாக கருதலாம்.

நோர்வேயில் உள்ள அனைத்து பயங்கரவாத செயல்பாடுகளையும் நாம் கண்கானித்து வருகிறோம். ஜரோப்பிய சட்டபடி பயங்கரவாதிகளாகவும் அதேவேளை ஜ.நாவின் சட்டபடி ஒரு பயங்கரவாதிகளாக இல்லாத அமைப்பினை நாம் எமது சட்டபடி விசாரிக்கும்போது சில முக்கிய ஆதரங்களில் சிக்கல்கள் உருவாகின்றன.

ஆகவே நாம் ஜரோப்பிய நாடுகளுக்கு சில கோரிக்கையை முன் வைத்துள்ளோம். அவர் ஒரு சட்ட அனுமதியுடன் எங்களை அணுகினால்.... அதையே நெடியவனின் வழக்கிலும் நோர்வே உளவுத்துறை கையாண்டுள்ளது.

கொலன் நாட்டு உளவுத்துறை நோர்வே நீதிமன்றில் ஜரோப்பிய சட்டபடி பயங்கரவாத வழக்கை நெடியவனுக்கு எதிராக நடத்தி வருகின்றது என்று பொருள்பட நோர்வே உளவுத்துறை தனது கருத்தை பதிவு செய்துள்ளது.

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் புலிகள் பகிரங்கமாக செயற்பட்டு வருகின்றனர். அமெரிக்காவிலும் அவுஸ்ரேலியாவிலும் ஜரோப்பிய நாடுகளிலும் புலிகள் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யபட்டுள்ளது.

பொய்யான தகவல். அவுஸ்திரெலியாவில் புலிகள் தடைசெய்யப்படவில்லை.

அண்மையில் ஒல்லாந்து நாட்டில் கைது செய்யப்பட்ட பின்னரான விசாரணையின் விளைவாகவே இந்த கைது ஒல்லாந்து காவல்துறையால் நடந்துள்ளது போன்று தெரிகின்றது. அவர்கள் ஐரோப்பிய யூனியன் சட்டத்திற்கு அமைய விடுதலைப்புலிகளுக்காக பணம் சட்டத்திற்கு எதிரான முறையில் பணம் சேர்த்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டனர். இந்த விசாரணை பல வருடங்களாக நடந்தும் வந்திருக்கின்றது.

இவரை எம்மமவ்ர்கள் பலருக்கும் இன்றுள்ள சூழ்நிலையில் பிடிக்காமல் இருந்தாலும், இது சிங்கள எதிரிகளுக்கு, அவர்களின் பரப்புரைக்கு கிடைத்த ஒரு தற்காலிக வெற்றியாக அமையலாம்.

ஆனால், நீதியின் முன்னர் இவர் இந்த வழக்கு மூலம், ஐ,நா, அறிக்கையின் அடிப்படையுடன், விடுதலைப்புலிகள் ஒரு இன விடுதலைக்காக, அரச பயங்கரவாத்திலிருந்து மக்களை காப்பாற்றவே போராடினார்கள் என்பதை நிரூபிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரை நம்பினாலும் வடகத்தையனை நம்பக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் யாரை நம்பினாலும் நோர்வே நாட்டை நம்பக்கூடாது. சமாதானம் என்ற போர்வையில் நரி வேலை செய்து எங்களை அழித்ததில் நோர்வே அரசின் பங்கும் மிகவும் முக்கியம். நோர்வே தொடர்ந்து சிங்களவனுக்கு உதவி செய்து வருகிறது.

நோர்வே ஒரு ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடு அல்ல. அதேவேளை நோர்வேயில் விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பு இல்லை என எண்ணுகிறேன்.

எனவே ஒல்லாந்து நாட்டில் குற்றம் சாட்டப்பட்டவரை நாடுகடத்தும் இருநாட்டு உடன்படிக்கை உள்ளதா? என்பதும் தெரியவில்லை.

யாரால் கைது செய்யப்பட்டார்கள்?. ஏன் கைது செய்யப்பட்டார்?. நோர்வே மொழி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அப்பு கூகிழ் மொழிபெயர்ப்பு பட்டை மூலம் ஆங்கிலத்தில் வாசித்தேன். சாரம்சமாக நெடியவன் ஓர் கொடியவன் என்று கூறப்படுகின்றது. நீலப்பறவை 21ம் தேதி உலகம் அழியப்போவதாய் ஓர் பதிவு இட்டார். நெடியவனின் உலகம் 17ம் தேதியே அழிந்து போயிற்றோ..?

அதுசரி, உவையள் இவ்வளவு நாளும் அமைதியாய் இருந்துபோட்டு ஏனாம் மே 18 சொச்சத்தில் நெடியவனை கைது செய்தார்கள்? இதன் சூசகமாக ஏதோ மர்மம், அரசியல், ராசதந்திரம் உள்ளதோ?

யாழ் களத்திலும் நீண்டகாலமாக நெடியவன் எனும் ஓர் பெயர் அடிபட்டது. நெடியவனின் பெயரால் ஆளையாள் புரட்டி எடுத்தார்கள். பிறகு நெடியவன் பெயர் அடிக்கடி அடிபடுவது ஓய்ந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு கூகிழ் மொழிபெயர்ப்பு பட்டை மூலம் ஆங்கிலத்தில் வாசித்தேன். சாரம்சமாக நெடியவன் ஓர் கொடியவன் என்று கூறப்படுகின்றது.

உலக நாடுகள் தமக்கு சார்பானவர்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என்று சொல்லுவார்கள். ஒருகாலத்தில் நெல்சன் மண்டேலா பிரித்தானியர்களுக்கு கெட்டவராக சித்தரிக்கப்பட்டார். ஆனால் பிற்காலத்தில் அதே பிரித்தானியாப் பாராளுமன்றத்துக்கு முன்பாக அவருக்கு சிலை இருப்பதினைக் காணலாம். எங்களுக்கு கெட்டவராகத் தெரியும் மகிந்தா, சிங்களவருக்கு நல்லவர். நவீன துட்டகைமுனு. எங்களின் தேசியத்தலைவர் சிங்களவருக்கு கெட்டவராகத் தெரிகிறார்.

உலகம் புரியாத வடி கட்டிய முட்டாள்!!!! .... கவலைப்பட ஒன்றுமில்லை!!!

நெடியவன் கைது தவறான செய்தி. விசாராணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். நெடியவன் பெயரை பாவித்து பலர் மோசடிகளை செய்து வருவது தற்போது புலனாகியுள்ளது. நெடியவன் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறார். அவரை வைத்து இன்று லட்சக்கணக்கில் பலர் பணம் சேர்த்துள்ளதும் வெளிச்சத்திற்கு வர உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா அவர்களே!

சிறிலங்காவுக்கு 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் நாள் அன்றே பாரிய வெற்றி கிடைத்துவிட்டது. நெடியவன் போன்றவர்களை கைது செய்வதால் அவர்களுக்கு தற்காலிக வெற்றி-தோல்வி என்று வாதிட்டுக் கொண்டிருப்பதனை விட்டு வேலையைப் பாருங்கள்.

ஒரு திருடனை அல்லது ஒரு சர்வதேச குற்றவாளியை ஒரு நாட்டு அரசு கைது செய்துவிட்டது என்று நினைத்துக்கொண்டு உங்கள், உங்கள் குடும்பங்களை கவனியுங்கள்.

இன்னும் கொஞ்சக் காலம்தான் புலி என்ற சாமான் எப்படி தாயகத்தில் இல்லாமற் போனதோ அவ்வாறே புலத்திலும் மிக விரைவில் இல்லாமற் போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசப் பொலிசாரால் தேடப்பட்டு வந்த பலர் சிறிலங்காவின் விருந்தாளிகளாக இப்போது இருக்கிறார்கள்.நெடியவன் இந்தக் கைது விவகாரத்தில் சிறலங்காவின் இன அழிப்பைச் சுட்டிக் காட்டலாம். அவ்வளவுதான்.

ஐரோப்பிய பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் நோர்வேயில் நெடியவன் கைது

நோர்வேயில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக செயற்பட்டு வந்த நெடியவன் கைது செய்யபட்டு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் நீதிமன்றில் நிறுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹொலன்ட் நாட்டு சர்வதேச பொலிசாரால் நெடியவனின் வீடு சுற்றி வளைக்கப் பட்ட போதே நெடியவன் கைது செய்பட்டதுடன் அவர் உடனடியாக நோர்வே தலைநகரம் ஒஸ்லோவுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப் பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.

இவர் ஐரோப்பிய பயங்கரவாத சட்டப்படியான வழக்கை எதிர் நோக்கி உள்ளார்

-வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

நிதி வசூல்: எல்டிடிஈ மூத்த தலைவர் நெடியவன் நார்வேயில் கைது-நெதர்லாந்து புகாரால் நடவடிக்கை

ஓஸ்லோ: விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் நெடியவன் என்ற பேரின்பநாயகம் சிவபரன் நார்வேயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பல மில்லியன் யூரோ நிதி வசூலிக்கப்பட்டது தொடர்பாக நெதர்லாந்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கும் நெதர்லாந்து நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந் நிலையில் அவர்களிடம் கிடைத்த சில முக்கிய தகவல்களை நார்வே நாட்டிடம் வழங்கியுள்ளனர் நெதர்லாந்து போலீசார். இதன் அடிப்படையில் தான் நெடியவனை நார்வே போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாகத் தெரிகிறது.

இத் தகவலை நார்வேயின் டிவி-2 தொலைக் காட்சி ( TV2 news Nyhetene) இன்று தெரிவித்தது. நெதர்லாந்து நாட்டு உளவுப் பிரிவினரின் கோரிக்கைப்படியே அவரிடம் விசாரணை நடப்பதாகவும் அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பு ஐரோப்பிய யூனியனால் 2006ம் ஆண்டு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. இந்த யூனியனில் உள்ள நாடுகளில் புலிகளுக்கு பணம் சேகரிப்பது சட்ட விரோதமாகும்.

இந் நிலையில் நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஆண்டில் ரோட்டர்டாம் நகர போலீசாரிடம் தந்த புகாரில், தன்னை ஒரு நபர் மிரட்டி பணம் பறிப்பதாகக் கூறியிருந்தார். இதே போன்ற புகார்கள் அதிகமாக குவிய ஆரம்பிக்கவே ரகசிய விசாரணை துவக்கப்பட்டது.

அதில் இந்தப் பணம் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் செல்வது உறுதியானது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் நெதர்லாந்து உளவுத் துறையினர் 16 இடங்களில் சோதனை நடத்தி 7 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், தாங்கள் சேகரித்த பணத்தை நார்வேயில் உள்ள நெடியவனுக்கு அனுப்பியதாகக் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து நார்வேயிடம் அவரை விசாரிக்கக் கோரியுள்ளது நெதர்லாந்து.

அவரை கைது செய்த ஓஸ்லோ போலீசார் நகர மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரிடம் மூடிய அறைக்குள் ரகசிய விசாரணை நடந்துள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2011/05/20/ltte-leader-nediyavan-arrested-oslo-terror-financing-aid0090.html

பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்தால் யாரென்றில்லை கைதுசெய்யபடவேண்டும்.அது கனிமொழியாகட்டும் நெடியவனாகட்டும் விதிவிலக்கு இருக்ககூடாது.

பலருக்கு வயிற்றில் புளிகரைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்தால் யாரென்றில்லை கைதுசெய்யபடவேண்டும்.அது கனிமொழியாகட்டும் நெடியவனாகட்டும் விதிவிலக்கு இருக்ககூடாது.

பலருக்கு வயிற்றில் புளிகரைக்கும்.

வந்திட்டார்ய்யா நீதிபதி தீர்ப்புச் சொல்ல.

நீங்கள் எல்லாம் எந்த மக்களின் பணத்தில் எந்த மனிதக் கடத்தல் ஏஜென்சி வழியாக கனடாவுக்கு ஓடி வந்தீர்கள் என்பதையும் உங்களை கைது செய்து முறைப்படி விசாரித்தால் தெரியும்..!

அகதி என்ற போர்வையில் வெளிநாடுகளுக்குள் புகுந்துள்ள அநேக தமிழர்கள் சட்ட விரோத குடியேற்றக் காரர்கள் என்பதை மறந்து இங்கு சிலர் அடுத்தவரை பார்த்து போடும் கூப்பாடு.. செவிப்பறை தாங்க முடியவில்லை.

முதலில் உங்கள் உங்கள் சுய குற்றங்களை கணக்குப் போட்டு வையுங்கோ.. பிறகு அடுத்தவனை குறை பிடிக்கலாம்..!

அன்பினியின் கதை நன்கு சுட்டுவிட்டதுபோலுள்ளது.

சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு உண்மைகள் சுடும்.அதுதான் முடியாமல் தனிநபர் தாக்கிதலில் இறங்கியுள்ளீர்கள்.

Edited by arjun

அன்பினியின் கதை நன்கு சுட்டுவிட்டதுபோலுள்ளது.

சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு உண்மைகள் சுடும்.அதுதான் முடியாமல் தனிநபர் தாக்கிதலில் இறங்கியுள்ளீர்கள்.

என்னைபற்றி நான் எழுதகூடாது எனது லண்டனில் உள்ள நண்பர்களின் விலாசம் பட்டியலாக தருகின்றேன் முடிந்தால்போய் விசாரிக்கவும்.

லண்டனில் இந்த முகவரியில் தானே உங்கள் நண்பர்கள் இருக்கிறார்கள்... :lol: :lol: :lol:

Buckingham Palace

London SW1A 1AA.

Clarence House

St James's Palace

London SW1A 1BA.

10 Downing St

London SW1A 2AA

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களில் சிலர் புரிந்துகொள்ள / ஏற்றுக்கொள்ள மறுப்பதில், "கைது செய்யப்பட்டவர் என்றால் அவர் உடனடியாக குற்றவாளி என ஏற்றுக்கொள்வது" என்பதும் ஒன்று.

One is innocent until proven guilty!

  • கருத்துக்கள உறவுகள்

அன்பினியின் கதை நன்கு சுட்டுவிட்டதுபோலுள்ளது.

சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு உண்மைகள் சுடும்.அதுதான் முடியாமல் தனிநபர் தாக்கிதலில் இறங்கியுள்ளீர்கள்.

நெடியன் மட்டும் தனிநபர் இல்லாமல்.. இரட்டை பிறவியா..??! நீங்கள் மற்றவர்களை எந்த முகாந்தரமும் இன்றி குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியும் என்றால் அதையே உங்களை நோக்கி மற்றவர்களாலும் செய்ய முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்..!

அதுமட்டுமன்றி.. வெளிநாடுகளில் உள்ள புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று கோத்தாவும்.. கெகலியவும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சொன்னதன் பின்னணியில் கூட இவை நடந்து கொண்டிருக்கலாம்.

எம்மிடையே குழுப் பிரிவினைகளை தூண்டி.. பலவீனர்களாக்கி.. எதிரி எம்மை சிறுகச் சிறுக கருவறுப்பது தெரியாமல்.. அதில் சந்தோசப்படும் உங்களைப் போன்ற ஜென்மங்களை.. பல்லக்குகள் வைத்து பாராட்டியா அழைத்துச் செல்வார்கள்..! எப்ப தான் இந்த ஜென்மங்கள் திருந்தப் போகுதுகளோ. கட்டையில் போகும் வரை திருந்தாதுகள் போல..! :(:unsure::o

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இந்த முகவரியில் தானே உங்கள் நண்பர்கள் இருக்கிறார்கள்... :lol: :lol: :lol:

Buckingham Palace

London SW1A 1AA.

Clarence House

St James's Palace

London SW1A 1BA.

10 Downing St

London SW1A 2AA

:lol: :lol: :wub:

நாங்கள் ஒருபிரிவினையையும் தூண்டவில்லை.கண்ணிருந்தும் குருடர்களாக இருப்பவர் கண்களை திறக்கமுயலுகின்றோம்.

வேறொரு திரியில் தப்பிலி எழுதியிருந்தார்.புலம் பெயர்ந்த தமிழன் தான் இவ்வளவு அழிவிற்கு காரணமென்று.உண்மையும் அதுதான்.

பிரச்சனை என்றவுடன் ஓடிவந்த நீங்கள் உங்களை நியாயப்படுத்த எதுவும் செய்வீர்கள்.தலைவரையே பலி கொடுத்தவர்களாயிற்றே நீங்கள்வாய் மூடி ஆமாம் போட்டு. புலம் பெயர்ந்தவன் உலகின் உண்மை நிலையை புலிகளுக்கு எடுத்து சொல்லியிருந்தால் புலிகளும் அழிந்திராது தமிழனுக்கும் இந்தகேடு கெட்ட நிலைவந்திராது.

பப்பா மரத்தில் ஏற்றி வேடீக்கை பார்த்தீர்கள்.இன்று கூட எள்ளளவும் குற்ற உணர்சி இல்லை.அடுத்த கட்டத்திற்கு போரட்டம் நகர்ந்ததாக வாய்கூசாமல் பொய் சொல்லுகின்றீர்கள்.

'அடிமைத்தனம்' என்பது பல வழிகளில் தம்மை அறியாமலே எம்மில் சிலரில் ஊறிவிட்ட ஒன்று.

உதாரணத்திற்கு, "தமிழன் பொதுப்பணம் ஒன்றில் ஒருசதம் எடுத்தான்" என்றாலும் அதை ஆராயமலே அதை பெரிதுபடுத்துவது, ஆரவாரப்படுவது. ஆனால், தாம் வாழும் நாடுகளில் தமது வரிப்பணத்தை ஆயிரக்கணக்கில் சூறையாடுவது தெரிந்ததாலும், தெரியாதமாதிரி இருப்பார்கள்.

காசுக்கதை கதைத்தால் ஒருவர் ஓடிவந்துவிடுவார்.நல்லாத்தான் கறந்திருக்கின்றார் போலிருக்கு.

இசை மேலே குறிப்பிட்ட நாலுபேர்களை போய் சந்திக்காமல் வீட்டுக்க இருந்து புட்டு திண்டுவிட்டு வந்து யாழில் வீரம் கொட்டியதன் பலந்தான் முள்ளிவாய்க்கால்.

தாங்களும்சந்திகாமல் சந்திக்கபோனவர்களியும்,நக்கலடித்து என்னத்தை கடைசியில் கண்டீர்கள்.

இனியாவது வேலைக்கு காசை சேருங்கோ.

கருணாநிதியை குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.