Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சடங்காகவும் சம்பிரதாயமாகவும் முடிந்துபோன இனப்படுகொலை நாள் நிகழ்வுகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சடங்காகவும் சம்பிரதாயமாகவும் முடிந்துபோன இனப்படுகொலை நாள் நிகழ்வுகள்!

ராஜபக்ச அரசும் அதன் துணைக்குழுக்களதும் மக்கள் விரோத ஆட்சியின் மத்தியில் மக்கள் ஒன்றிணைவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பேசும் சுதந்திரம் கூட சவக்குழிக்குள் புதைக்கப்பட்ட ஒரு தேசத்தில் ஒன்றிணைவிற்கான உரிமையை எப்படி எதிர்பார்க்க முடியும்? பலவீனமான மக்கள் இணைப்புக்களாகவிருந்த சிறிய சிவில் சமூக அமைப்புக்கள் கூட சுயாதீனமாக இயங்க முடியாமல் புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவக் காலத்தில் அழிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வன்னிப் படுகொலைகள் உணர்வலைகள் மக்கள் மத்தியில் நெருப்பாக எரிந்துகொண்டிருந்தாலும் அதனை எதிர்ப்புச் சக்தியாக உருமாற்றும் அரசியல் தலைமை தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் அற்றுப் போயியுள்ள நிலையில் வட கிழக்கில் மயான அமைதியே நிலவிற்று.

ஒடுக்கு முறையின் கோரம் மட்டுமல்ல அரசியல் தலைமையின் வெற்றிடமும் இங்கே அமைதியின் வெளிப்பாடாகத் தெரிந்தது.

மகிந்த ராஜபக்சவின் வசதிக்காக உருவக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பே தமது உயிரைத் துச்சமென எண்ணி மக்கள் சாட்சி கூறிய நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறோம். இவர்களை அரச எதிர்ப்புச் சக்திய ஒரு முகப்படுத்துகின்ற அரசியல் தலைமை உருவாகும் வரை வன்னிப் படுகொலைகளுக்கோ, இனச்சுத்திகரிப்பிற்கோ எதிரான குரல் மௌனமாகவே ஒலிக்கும்.

இனப்படுகொலைக் குற்றவாளிகளான ராஜபக்ச பாசிச அதிகாரத்திற்கு எதிரான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட அதே வேளை 17ம் 18ம் திகதிகள் வெசாக் கொண்டாட்டங்கள் தெற்கில் கோலாகமாக நடைபெற்றது. அதுவும் புத்தர் பிறந்த 2600 வது வருடம் என்பதால் சிங்கள மக்கல் மத்தியில் உற்சாகமான நிகழ்வுகள் நடைபெற்றன.

நந்திக்கடலைக் குருதிக்கடலாக்கிய அதே வாரத்தின் நினைவலைகள் ஒவ்வொரு மனிதனதும் இதயத்தை இரும்பாலறைந்த அதே வேளை டக்ளஸ் தேவாந்ததா யாழ்ப்பாண விகாரையில் வெசாக் கொண்டாட்டங்களை ஆரம்பித்துவைத்து நிகழ்வுகளுக்குத் தலைமைதாங்கினார்.

வன்னியில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படவில்லை என்று அயோக்கியத் தனமாக கூறும் டக்ளஸ் தேவானத்தவின் இச்செயற்பாடுகளால் யாரும் அதிர்ச்சிய்டையவில்லை.

இலங்கையில் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்ற மக்கள் அரசிற்கு எதிரான ,இணைவதற்கான , குறைந்தபட்ச ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான உந்துசக்தியாக புலம்பெயர் நாடுகளில் மக்கள் போராட்டங்கள் அமையவில்லை.

கடந்த வாரம் பலஸ்தீன மக்கள் மீது, நக்பா நாளில் இஸ்ரேலிய அரசு நடத்திய தாக்குதலுக்கு எதிராக பிரித்தானியாவில் இஸ்ரேலியத் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பலஸ்தீனியர்கள் மட்டுமல்ல ஒடுக்குமுறைக்கு எதிரான பல்வேறுபட்ட மக்களின் ஒன்றிணைவாக அமைந்திருந்தது.

மேற்கில் நாடுகடந்த தமிழீழம் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிவடந்தது.

பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) ரபல்கர் சதுக்கத்தில் ஏற்பாடு செய்திருந்த 18ம் திகதி நிகழ்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டனர். சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாமல் மக்களின் பங்களிப்பு அவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

சொல்லப்பட்ட அதே செய்திகளையே மறுபடி மறுபடி ஒலிபெருக்கியில் பேசிக்கொண்டிருந்தனர். இஸ்ரேலியத் தூதரகத்தின் முன்னால் நடைபெற்ற நிகழ்வைப் போன்று அது காணப்படவில்லை. தமிழ் மக்களைத் தவிர அங்கு யாரும் காணப்படவில்லை.

ராஜபக்ச அரசிற்கு எதிரான முழக்கங்களை மந்திரம் போல உச்சாடனம் செய்து தமிழ் மக்களை ஒருமுகப்படுத்தி வைத்திருப்பதே அவர்களின் நோக்கமாகக் காணப்பட்டது. உணர்ச்சி பொங்கும் சுலோகங்கள், அழுகுரல்கள் போன்ற வழமையானவை மட்டுமே காணப்பட்டன.

ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ் மக்களின் நினைவலைகளை விரக்தியையும் சரண்டைவையும் நோக்கிச் செல்லாமல் தடுப்பதற்கு இவ்வாறான நிகழ்வுகள் பயன்படலாம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஆனல் இவையெல்லம் வெறும் சம்பிரதாயங்களாக நிகழ்த்தி முடிப்பதற்கு நாம் சமாதானம் நிலவும் சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கவில்லை. நாளாந்தம் சூறையாடப்படும் மக்கள் கூட்டத்தின் வெளியேறப்பட்ட அங்கங்கள். சடங்குகள் போல நிகழ்த்தப்பட்ட இந்த நிகழ்வுகள் எவ்வாறு கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்குப் பலமாக அமையுமுடியும்.

ஆக, இனப்படுகொலை நாள் நிகழ்வுகள் அனைத்துமே வெற்றுச் சுலோகங்களாக, மக்களைப் பயன்படுத்திக்கொள்ளும் தந்திரோபாயமாக, எந்த முன்னோக்குமின்றி முடிந்துபோனது.

தமிழர்களைத் தவிர இந்தப் போராட்டங்களில் யாரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பது மட்டுமல்ல அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதன் உள்ளர்த்தம் என்ன?

பிரித்தானியத் தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழம் போன்றவற்றில் உள்வாங்கப்பட்டிருக்கும் சமூக உணர்வுள்ள மக்க்கள் பிரிவினர், வியாபார அரசியலைப் புரிந்துகொண்டு பேரினவாத அரசிற்கு எதிரான பொதுக்கருத்தை உருவாக்கும் போராட்டத்தை இனியாவது முன்னெடுப்பார்களா?

இனப்படுகொலைக்கும், பேரினவாதத்திற்கும் எதிரான உலகப் பொதுக் கருத்தை உருவாக்கவல்ல பல அமைப்புக்கள் ஏன் இணைத்துக்கொள்ளப்படவில்லை?

தமிழ் மக்களின் உணர்வுகள் உலக மக்களுடன் ஏன் பகிரப்படவில்லை?

உலகம் தழுவிய பொதுப்புத்தியாக மாற்றமடையாமல் தடுப்பதனூடாகவும், , ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணையவிடாமல் தடுப்பதனூடாக இவர்கள் தமது சொந்த நலன்களுக்காக மட்டும் இவ்வாறான போராட்டங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்களா?

இவர்களுக்கு வெளியில் எவ்வாறு புதிய போராட்ட வழிமுறையை முன்வைப்பது?

முப்பது வருடங்களாக நடைமுறையிலிருக்கும் தவறான வழிமுறைகளைக் கடந்து மக்களை அணுகுவது எவ்வாறு?

இவ்வாறான பல வினாக்களை இனப்ப்படுகொலை நினைவுநாள் நிகழ்வுகள் விட்டுச்சென்றுள்ளன.

http://inioru.com/?p=21377

ஒரு வேலை நாள் அன்றும் என்று பாரமால் இவ்வளவு எமது மக்கள் கலந்து கொண்டது முக்கியமானது. ஏனெனில், முதலில் எமக்குள் உணர்வுகளை அழியாமல் தக்கவைக்கவேண்டும்.

"பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) ரபல்கர் சதுக்கத்தில் ஏற்பாடு செய்திருந்த 18ம் திகதி நிகழ்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டனர். சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாமல் மக்களின் பங்களிப்பு அவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்தது".

இல்லாவிடில் தலைப்பு " சடங்காகவும் சம்பிரதாயமாகவும் சங்கடமாயும் முடிந்துபோன இனப்படுகொலை நாள் நிகழ்வுகள்!" என எழுதப்பட்டும் இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லாவிடில் தலைப்பு " சடங்காகவும் சம்பிரதாயமாகவும் சங்கடமாயும் முடிந்துபோன இனப்படுகொலை நாள் நிகழ்வுகள்!" என எழுதப்பட்டும் இருக்கலாம்.

விடைகள் இல்லாத கேள்விகள் தொடருமானால் எதிர்காலத்தில் சங்கடமான நிகழ்வாக மாறும்நிலை வந்துவிடும் என்பதைப் புரிந்தால் சரி.

இந்த கட்டுரை முன்வைத்த கேள்விகள் ஒரு முழுமையானவையாக தெரியவில்லை.

முதலில் இவர் ஒப்பிட்ட இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்:

- இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனை பல நீண்ட காலமாக புரையோடிப்போனது

- இந்த பிரச்சனை நேரடியாக பல மேற்குலக நாடுகளை யுத்தத்தில் ( அப்கானிஸ்தான்) ஈடுபட வைத்துள்ளது

- பல அரபு, இஸ்லாமிய நாடுகள் உலகில் உள்ளன

- இந்த ஆர்ப்பாட்டம் ஒரு வர இறுதி நாளில் நடாத்தப்பட்டுள்ளது ( http://www.presstv.ir/detail/179711.html )

விடைகள் இல்லாத கேள்விகள் தொடருமானால் எதிர்காலத்தில் சங்கடமான நிகழ்வாக மாறும்நிலை வந்துவிடும் என்பதைப் புரிந்தால் சரி.

மேற்பட்ட உறவுகள் கொலை, தொடரும் இன அழிப்புக்கள், , சர்வதேசத்தின் பாரா முகம், மிகவும் மனமுடைந்த நிலையில் எமது மக்கள் - இவற்றுக்குள் மத்தியில் ஒரு பகுதியினர் கடந்த இரண்டு வருட காலத்தில் கண்ட வெற்றிகளையும் நாம் பட்டியல் போட்டே குறைகளை முன்வைப்பது, கேள்விகளை கேட்பது தர்மம்.

ஆக, இனப்படுகொலை நாள் நிகழ்வுகள் அனைத்துமே வெற்றுச் சுலோகங்களாக, மக்களைப் பயன்படுத்திக்கொள்ளும் தந்திரோபாயமாக, எந்த முன்னோக்குமின்றி முடிந்துபோனது.

தமிழர்களைத் தவிர இந்தப் போராட்டங்களில் யாரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பது மட்டுமல்ல அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதன் உள்ளர்த்தம் என்ன?

பிரித்தானியத் தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழம் போன்றவற்றில் உள்வாங்கப்பட்டிருக்கும் சமூக உணர்வுள்ள மக்க்கள் பிரிவினர், வியாபார அரசியலைப் புரிந்துகொண்டு பேரினவாத அரசிற்கு எதிரான பொதுக்கருத்தை உருவாக்கும் போராட்டத்தை இனியாவது முன்னெடுப்பார்களா?

இனப்படுகொலைக்கும், பேரினவாதத்திற்கும் எதிரான உலகப் பொதுக் கருத்தை உருவாக்கவல்ல பல அமைப்புக்கள் ஏன் இணைத்துக்கொள்ளப்படவில்லை?

தமிழ் மக்களின் உணர்வுகள் உலக மக்களுடன் ஏன் பகிரப்படவில்லை?

உலகம் தழுவிய பொதுப்புத்தியாக மாற்றமடையாமல் தடுப்பதனூடாகவும், , ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணையவிடாமல் தடுப்பதனூடாக இவர்கள் தமது சொந்த நலன்களுக்காக மட்டும் இவ்வாறான போராட்டங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்களா?

இவர்களுக்கு வெளியில் எவ்வாறு புதிய போராட்ட வழிமுறையை முன்வைப்பது?

முப்பது வருடங்களாக நடைமுறையிலிருக்கும் தவறான வழிமுறைகளைக் கடந்து மக்களை அணுகுவது எவ்வாறு?

இவ்வாறான பல வினாக்களை இனப்ப்படுகொலை நினைவுநாள் நிகழ்வுகள் விட்டுச்சென்றுள்ளன.

http://inioru.com/?p=21377

இந்த இரண்டு வருட காலத்தில் தமிழகர் தரப்பு செய்த வெற்றிகரமான காரியங்கள் சில:

- தொடர்ந்தும் எமது பிரச்னையை இளையோரை உள்வாங்கி உயிர்ப்புடன் வைத்திருப்பது

- மறைக்கப்பட்ட போர்குற்றங்கள் வெளியில் கொண்டுவரப்பட்டமை.

- ஐ.நா. அமைத்த குழுவுக்கு ஆதாரங்கள் சமர்ப்பித்து, வரலாற்று ரீதியாக இன்று ஒரு ஐ.நா. போர்குற்ற அறிக்கை வெளிவந்துள்ளது.

- அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், தென் ஆபிரிக்க நாடுகளில் ஐ.நா. அறிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுக்கப்பட்டுள்ளமை

- அமெரிக்காவின் தெற்காசிய இராஜாங்க செயலாளரை அவரது இலங்கைக்கான பயணத்திற்கு முன்னராக சந்த்திதமை

- தமிழக தேர்தலில் ஒரு மாற்றத்தை கொண்டுவதுள்ளமை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல முயற்சிகள் சிறிய அளவில் நடந்துகொண்டிருக்கின்றன. திருப்புமுனையாக அமையக்கூடிய நிபுணர்குழு அறிக்கையை செல்லாத தாளாக்க இலங்கையரசு மிகவும் முனைப்பாக வேலை செய்துகொண்டிருக்கின்றது. தமிழர்கள் தரப்புக்கு உறுதியான ஆதரவு மேற்குலகில் இன்னமும் இல்லை. ஜெயலலிதா சில வாக்குறுதிகளைக் கொடுத்தாலும், புலம்பெயர் தமிழர்களின் அபிமானத்தைப் பெற்ற தமிழக அரசியல்வாதிகள் அவரைப் பாவித்து இந்திய மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பார்களா அல்லது இந்திய மத்திய அரசு ஜெயலலிதாவுடன் "அரசியல்" சமரசம் செய்யுமா என்பதெல்லாம் இனித்தான் தெரியவரும்.

எங்கள் தொடர் துன்பங்களுக்கு நமது குழுவாத அரசியலும், நமது பிரச்சினைகளைத் தீர்க்க இதயசுத்தியுடன் செயற்படக்கூடிய மேற்கு நாடுகளின் ஆதரவும் இல்லை என்பதை முதலில் புரிந்து அவற்றைச் சரிபண்ண முயற்சிகளைச் செய்யவேண்டும். ஒரு காலத்தில் நட்பு நாடாக இருந்த நோர்வே கூட தற்போது நம்மைக் கழுத்தறுத்துவிட்டதாகப் புலம்புகின்றோம். ஆனால் இப்படி நண்பர்கள் இல்லாத நிலைக்கு நமது "விடாக்கொண்டன்" அரசியலும், தமிழர்களின் ஆதரவு இருந்தால் மட்டும் போதும் என்ற நிலையும்தான் காரணங்கள்.

அதி தீவிர இடது சாரிகளின் ஆதரவு தமிழர்களுக்கு இருப்பதாகச் சொல்லலாம். ஆனால் அவர்களின் ஆதரவு கோட்பாடு ரீதியானது. முடிவுகளை எடுக்கக்கூடிய/ மாற்றக்கூடிய அரசியல் பலமற்றவர்களின் ஆதரவை வைத்து என்ன செய்யமுடியும்?

தமிழ் மக்கள் திரட்சி ஏன் இந்நிகழ்வுகளில் குறைந்து கொண்டுபோகின்றது????

உலகத்தில் முதலாவது ஆவணப்படுத்தப்பட்ட மனித படுகொலையை சந்தித்த இனமாக ஆர்மேனியா மக்கள் உள்ளனர். இன்று இவர்கள் பிரான்ஸ், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பலமான மக்களாக, தமக்கென ஒரு நாடும் உள்ளவர்களாக உள்ளனர். ஆனால், இன்னும் இவர்கள் படுகொலை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

உலகின் ஒரு பலம் வாய்ந்த இனமாக அரபு / இஸ்ல்லாமிய உலகம் இருந்து, இன்றுவரை பாலஸ்தீன மக்களை விடுவிக்க முடியவில்லை.

இன்னரும் எத்தனையோ படுகொலைகள், போராட்டங்கள் உலகில் நடந்தவண்ணம் உள்ளன.

ஒரு கொடூரமான எதிரி, அவனுக்கு ஆதரவாக பலம் பொருந்திய உலக வல்லரசுகள், பல நூறு பிரிவினைகளை கொண்ட எமது இனம் - இவற்றுக்கும் மத்தியில் கடந்த இரண்டு வருடங்களுக்குள் நாம் பல சவால்களை முறியடித்துள்ளோம். ஆனால், எம்மால் போக வேண்டிய தூரம் அதிகம். ஆனால், முடியும்.

யாழில் ஒரு வாழ் நாள் சாதனையாளர் என்றால் அது நிங்கள் தான் அகூதா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முடியும் என்று நம்பிக்கை கொண்டுதானே எந்தக்காரியத்திலும் இறங்கவேண்டும். எனினும் மேலே நீங்கள் கடந்த இரு ஆண்டுகளில் சாத்தியமானவை என்று அட்டவணைப்படுத்திய ஒவ்வொரு விடயத்திலும், தமிழர்களின் முயற்சிகளுக்கு ஈடாக சர்வதேச மனிதவுரிமை நிறுவனங்களும் சனல் 4 போன்ற ஊடகங்களும், ஏன் சிங்கள ஊடகவியலாளர்களும் அதிகம் உதவியிருக்கின்றார்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசு, வட்டுக்கோட்டை மீள்வாக்கெடுப்பு, மக்களவைகள், உலகத் தமிழ் பேரவை என்று கடந்த இரு ஆண்டுகளில் தமிழ் மக்களால் மட்டுமே சாத்தியமானவைகளை நீங்கள் அட்டவணையில் அடக்காதது ஆச்சரியமாக இருந்தது.

நாங்கள் அடக்கவேண்டிய தேவை இல்லை. காரணம், இது ஒரு ஆரோக்கியமானது என்பதே.

முடியும் என்று நம்பிக்கை கொண்டுதானே எந்தக்காரியத்திலும் இறங்கவேண்டும். எனினும் மேலே நீங்கள் கடந்த இரு ஆண்டுகளில் சாத்தியமானவை என்று அட்டவணைப்படுத்திய ஒவ்வொரு விடயத்திலும், தமிழர்களின் முயற்சிகளுக்கு ஈடாக சர்வதேச மனிதவுரிமை நிறுவனங்களும் சனல் 4 போன்ற ஊடகங்களும், ஏன் சிங்கள ஊடகவியலாளர்களும் அதிகம் உதவியிருக்கின்றார்கள்.

ஏற்றுக்கொள்ளுகிறேன்.

எப்பொழுதும் முடிந்த விடயத்தை ஆராய்வது நல்லம், ஆரோக்கியமானது. ஆனால், அதுவே எமது கவனகாமாக இருந்துவிடக்கூடாது.

உதாரணத்திற்கு "முள்ளிவாய்க்கால் பேரவல ஈராண்டு நிறைவு! - இனி தமிழர் என்ன செய்ய வேண்டும்?" , http://www.yarl.com/forum3/index.php?showtopic=85576 , என்றொரு கட்டுரை இதில் இணைக்கப்பட்டது. இந்த கட்டுரையில் கூறப்பட்ட கருத்துக்களை அலசி, பதில்களை சமர்ப்பித்தால், அடுத்த தலைமுறை எம்மை பார்த்து குறை சொல்லாது.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் நடைபெற முன்பு எப்படி அது இருக்க வேண்டும் என எழுதாமல் எல்லாம் முடியும் மட்டும் காத்திருந்த "இன்னொரு" தளம் இப்போ வெளுத்து வாங்குவது எந்த விதத்தில் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும்?? :huh::huh:

அவர்கள் முன்னரும் எழுதிக்கொண்டுதான் இருந்தார்கள்.. ஆனால் இனியொரு என்ற பெயரில் இல்லை.

"ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது", "தத்துவங்கள் நடைமுறைக்குச் சரிவராது", "செயல்தால் முக்கியம், விளைவுகளைப் பின்னர் சமாளிக்கலாம்" என்றெல்லாம் நினைத்ததால் அவர்கள் எழுதியவைகள் கண்டுகொள்ளப்படவில்லை.

தமிழில் மொழிபெயர்த்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

International diplomacy is not about the truth - உலக இராசதந்திரம் என்பது உண்மைகளை பற்றியது அல்ல

International diplomacy is not about the truth. The truth can be ignored most of the time.

It is sometimes about who speaks the truth. If someone of sufficient importance states that the emperor is naked, the rest of us are forced to acknowledge what we already knew, namely, that the old fool had been parading in the nude for some time.

So it is with Sri Lanka and war crimes during the closing months of the civil war which formally concluded in May 2009. The evidence that the both the Sri Lankan government and its civil war opponents, the Liberation Tigers of Tiger Eelam (LTTE), engaged in war crimes has been known for some time. Britain’s Channel Four released on 25 August 2009 mobile phone footage (apparently taken by Sri Lanka soldiers) of extra-judicial killings of bound and naked captives by government soldiers and broadcast more footage of the same incident on 30 November 2010.

http://www.abc.net.au/unleashed/2693084.html

அவர்கள் முன்னரும் எழுதிக்கொண்டுதான் இருந்தார்கள்.. ஆனால் இனியொரு என்ற பெயரில் இல்லை.

"ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது", "தத்துவங்கள் நடைமுறைக்குச் சரிவராது", "செயல்தால் முக்கியம், விளைவுகளைப் பின்னர் சமாளிக்கலாம்" என்றெல்லாம் நினைத்ததால் அவர்கள் எழுதியவைகள் கண்டுகொள்ளப்படவில்லை.

சில இடங்களில், இந்த கட்டுரை உட்பட, தமது குறைகளுக்கு நியாயம் கற்பிக்க சில பிழையான ஒப்பீடுகளையும் ( பாலஸ்தீனம் எதிர்ப்பு போராட்டம் ) மேற்கொண்டுள்ளது.

'இன்னொரு' தளத்தை மேற்கோள் காட்டி யாழில் இணைக்கப்பட்ட சகல இணைப்புக்களும் குறைகளை மட்டுமே கூறுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களாக யாழ் களத்தில் பதிவுகள், ஒருவரை ஒருவர் குற்றம் கூறுவது போலவே போய்க் கொண்டிருக்கின்றது>

உண்மை என்னவெனில் மாற்றுக் கருத்துக்களை வரவேற்பது என்ற போர்வையில் நாங்கள் எங்களுக்குள்ளேய ஒருவருக்கொருவர் போராடிக் கொண்டிருக்கின்றோம்!

எம்மை அடக்கியாளும் இனம் எதுவுமே செய்யத் தேவையில்லாத படி, நாங்களே அவர்களுக்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்!

சில கருத்தாளர்கள் , புலம் பெயர் தமிழர்களுக்கு ' பிரச்சனை' பற்றிக் கதைக்க ஒரு உரிமையும் இல்லை என்கிறார்கள்>

அப்படியானால் நாங்கள் தமிழர் இல்லையா?

குரலடைக்கப் பட்டுள்ள புலம் பெயராத தமிழருக்காக நாங்கள் குரல் கொடுப்பது தவறா?

இனியாவது ஒன்று படுவோம்!

எங்கள் கருத்துக்கள் பயனளிப்பவையாக இருக்கட்டும்!

எல்லாவற்றையும் கேள்விகளாக முன்வைப்பது இலகுதான். அவற்றிற்கான விடையையும் இந்த இன்னொரு முன்வைத்திருக்கலாம்.

எல்லாவற்றையும் கேள்விகளாக முன்வைப்பது இலகுதான். அவற்றிற்கான விடையையும் இந்த இன்னொரு முன்வைத்திருக்கலாம்.

கேள்விகள் கேட்பதே துரோகம் என்ற சமூகத்தில் இப்பதானே கேள்வியை கேள்வியாக பார்க்க தொடங்கி உள்ளோம்.. கொஞ்ச காலம் போக இதன் பதில்களை தேடுவோம்

போராட்டம் நடைபெற முன்பு எப்படி அது இருக்க வேண்டும் என எழுதாமல் எல்லாம் முடியும் மட்டும் காத்திருந்த "இன்னொரு" தளம் இப்போ வெளுத்து வாங்குவது எந்த விதத்தில் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும்?? :huh::huh:

அப்படி எழுதியவர்கள் பலரை பச்சை துரோகி என்று பட்டம் சாட்டி பின்னுக்கு தள்ளியதால் அவர்கள் எழுதிய கருத்துகளை விட அந்தப் பட்டமே எமக்கு முன் எழுந்து நின்று அந்தக் கருத்துகளை வாசிக்க மனம் தராமல் இருந்தது.

ஆக, இனப்படுகொலை நாள் நிகழ்வுகள் அனைத்துமே வெற்றுச் சுலோகங்களாக, மக்களைப் பயன்படுத்திக்கொள்ளும் தந்திரோபாயமாக, எந்த முன்னோக்குமின்றி முடிந்துபோனது.

தமிழர்களைத் தவிர இந்தப் போராட்டங்களில் யாரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பது மட்டுமல்ல அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதன் உள்ளர்த்தம் என்ன?

பிரித்தானியத் தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழம் போன்றவற்றில் உள்வாங்கப்பட்டிருக்கும் சமூக உணர்வுள்ள மக்க்கள் பிரிவினர், வியாபார அரசியலைப் புரிந்துகொண்டு பேரினவாத அரசிற்கு எதிரான பொதுக்கருத்தை உருவாக்கும் போராட்டத்தை இனியாவது முன்னெடுப்பார்களா?

இவர்களின் சமூக உணர்வுக்குள் இஸ்லாமியத் தமிழர்கள் இல்லை. மலயகத் தமிழர்கள் இல்லை. போரில் வாழ்வை சிதைத்த மக்களிடம் நட்புறவு இல்லை. மனிதாபிமான உறவுக்கு முன்னுரிமை இல்லை. முக்காற்பங்கு மையவாதத் தேசியத்துள் காற்பங்கு தமிழீழத்தை கலந்து அடயாளம் தேடுதலும் வியாபராம் செய்தலுமே நடக்கின்றது.

இனப்படுகொலைக்கும், பேரினவாதத்திற்கும் எதிரான உலகப் பொதுக் கருத்தை உருவாக்கவல்ல பல அமைப்புக்கள் ஏன் இணைத்துக்கொள்ளப்படவில்லை?

பொதுக் கருத்து என்ற பேச்சுக்கே இடமில்லை.

தமிழ் மக்களின் உணர்வுகள் உலக மக்களுடன் ஏன் பகிரப்படவில்லை?

யாவாரம் தமிழர்களுக்குள் தான் ஆயுதப்போராட்டகாலத்திலும் இப்போதும் தொடர்ந்து நடக்கின்றது. அதுதான் வழமை.

உலகம் தழுவிய பொதுப்புத்தியாக மாற்றமடையாமல் தடுப்பதனூடாகவும், , ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணையவிடாமல் தடுப்பதனூடாக இவர்கள் தமது சொந்த நலன்களுக்காக மட்டும் இவ்வாறான போராட்டங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்களா?

இதில் சந்தேகம் என்ன இருக்கின்றது?

இவர்களுக்கு வெளியில் எவ்வாறு புதிய போராட்ட வழிமுறையை முன்வைப்பது?

முப்பது வருடங்களாக நடைமுறையிலிருக்கும் தவறான வழிமுறைகளைக் கடந்து மக்களை அணுகுவது எவ்வாறு?

இவ்வாறான பல வினாக்களை இனப்ப்படுகொலை நினைவுநாள் நிகழ்வுகள் விட்டுச்சென்றுள்ளன.

இனப்படுகொலைக்கு சிங்களம் மட்டுமா காரணம்? நினைவுநாள் நிகழ்வுகளை நடத்திய புலம்பெயர் தேசியவாதிகளும் தான் காரணம். வன்னியில் உள்ள அவ்வளவு சனமும் அழிந்துபோக இந்த சர்வதேசம் பார்த்துக்கொண்டிராது என்று மக்களை கொலைக்களம் நோக்கி நகர்த்திய நிகழ்வுகளை யாரால் மறுக்க முடியும்? புலிகள் மீதான பயங்கரவாதச் சாயத்தை கழுவ மக்களின் குருதியும் உயிரும் தான் இறுதி தெரிவென்று முடிவெடுத்ததுதான் தமிழ்த்தேசியவாதம். பத்து லட்சம் புலம்பெயர் தமிழனின் தேசிய உணர்வுக்கு மூன்று லட்சம் வன்னி வறிய மக்கள் வடிகாலாகி வாழ்வைத் தொலைத்தனர். பலம் மிக்க இராணுவ எந்திரத்தின் முன்னால் தேசியம் என்ற முத்திரையை குத்தி வன்னி குழந்தைகளும் நலிந்த மக்களும் நிறுத்தப்பட்டனர். மக்களை காக்க மக்கள் விடுதலைக்காக ஆரம்பித்த போராட்டத்தை மக்களை காவு கொடுத்து காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியது எது என்ற கேள்விக்கு விடையாய்தான் புலம்பெயர் தேசியவாதிகள் நிற்கின்றனர். இது இனப்படுகொலை என்று சிங்களவன் தலையில் கட்டிவிடுவது சுலபமான ஒன்று ஆனால் உண்மை என்ன? இது சிங்கள பேரினவாதமும் தமிழ்த்தேசியவாதமும் சேர்ந்து நடத்திய மனிதப்படுகொலை. இரண்டு பிரதான சக்தியும் மாற்றம் இன்றி அப்படியே இருக்கின்றது.

சிங்களபேரினவாதம் - தமிழ்த்தேசியவாதம், இந்த இரண்டையும் ஒரே தராசில் போட்டு எடைபோட முடியாது. தமிழ்த்தேசியவாதம் சிங்களபேரினவாதத்தின் பெறுபேறே!

சிங்களபேரினவாதம் தமிழினத்தை அழிக்கவேண்டும் என 1948 ஆம் தொடக்கம் செயல்பட்டு வருகின்றது.

தமிழ்த்தேசியவாதம் ஆரம்பமானது சாத்வீக போராட்டங்கள் மூலமே. அதற்கு சிங்களம் தந்த பதில், அரச பயங்கரவாதம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.