Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2 காதல்..

Featured Replies

sorry...:(

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன சொர்ணமுகி டைப்பு போல இருக்கு :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

இது இப்ப ரொம்ப சாதாரணம் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக அந்தப் பெண் ஒரே நேரத்தில் இருவரைக் காதலித்து இருந்தால் அவருக்கு இது தேவை தான்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் போராட்ட கால சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் எமக்கு வளரும் காலத்தில் விடுதலைப் புலிப் போராளிகளின் நல்ல வழிக்காட்டல் இருந்தது. இன்றும் கூட நல்லது எது கெட்டது என்பதை பகுத்தறியும் ஆற்றலை எமது தேசிய தலைவர் ஊட்டிவிட்டுள்ளார். ஆனால்.. தேசிய தலைவரின் காலத்துக்கு முன்னரும்.. இப்போதும்.. புலம்பெயர் நாடுகளிலும் எம்மவர்களின் சண்டித்தனங்களும் காவாலித்தனங்களும் காதல் ஏமாற்று நாடகங்களும் குடும்பப் பிரிவினைகளும் களியாட்டங்களும் அளவு கணக்கின்றி கேடு கெட்ட நிலைக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. இது ஒரு அடிமைப்பட்டுக் கிடக்கும் இனத்திற்கு ஆரோக்கியமான அம்சம் அல்ல..!

தமிழர்களை பார்த்து திருந்துகடா என்று கேட்டா திருந்தவே மாட்டார்கள். ஒரு பிஸ்டல்.. நெத்தியில பொட்டு வைச்சாலோ.. காதுக்கால கூவினாலோ.. தன்பாட்டில் அடங்கும்.. இவை எல்லாம்..! பிஸ்ரலுக்கு கொடுக்கும் மரியாதையை எம்மவர்கள் கொள்கைக்கும் வழிகாட்டல்களுக்கும் கொடுப்பதில்லை. அதுதான் வேதனை. இத்தனைக்கும் இவர்கள் தங்களை யூதர்களுக்கு நிகர் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். கேவலம் கெட்ட ஜென்மங்கள்..!

இதுக்கு மறுதலையா நடந்திருக்குது. தமிழ் சினிமாவின் தாக்கமும் இதில் இருக்கிறது. :)

Edited by nedukkalapoovan

இவர் 2 ஆண்களை ஒரே நேரத்தில் காதலித்ததாகவும் இவர் இப்பிடி 2 பேரை காதலிப்பதை தெரிஞ்சு கொண்ட அந்த ஆண்களில் ஒருவர் தான் இவரின் வீடுக்கு சென்று அசிட் வீசியதாகவும் அவரும் இப்போது போலீஸ் இன் பிடியில் இருப்பதாகவும் கூறினார் ..

இருவரை ஒரே நேரத்தில் காதலித்தார் என்று மேலே கூறப்படுவது யாதெனில்... இருவருடன் மனம்விட்டு உரையாடுதல்? இருவருடன் மனம்விட்டு உரையாடல் மற்றும் உடல் தொடுகைகள்? கட்டியணைத்தல்? முத்தம் இடுதல்?

கற்காலத்தை விட்டு எமது சமூகம் இன்னமும் வெளியில் வரவில்லை, தவிர தமிழ் சினிமா தவறான வகையில் சமூகத்தை கொண்டு செல்கின்றது. அசிட் ஊற்றிய ஆணுக்கும் இன்னோர் செய்தியில் சம்பந்தப்பட்ட நபருக்கும் [ அண்மையில் பார்த்தது (சிறுமி மீது அங்க சேட்டை செய்த தமிழருக்கு பிரிட்டனில் சிறை! )] அதிக அளவில் வித்தியாசம் தெரியவில்லை.

இவருக்கு பொருத்தமாக ஓர் வசனம் மருதங்கேணி எழுதியுள்ளார்:

கிணற்று தவளைகளாகவே இருக்கிறார்கள்.................

உலகம் எம்முட்டு பெருசு ஒரு முறை சுத்திவர மறுக்கிறார்கள்.

ஒரு பெண்ணை பிடிக்காவிட்டால் அவருடன் தொடர்பாடல் செய்வதை, உறவாடுவதை நிறுத்திக்கொள்ளலாம். அசிட் ஊற்றுவது, அடிதடியில் இறங்குவது எல்லாம் தமிழ் சினிமாவிற்கு மட்டுமே பொருத்தமானது.

ஓர் பெண் ஓர் ஆணுடன் சிரித்துக் கதைத்தால் அதன் அர்த்தம் அவர் குறிப்பிட்ட ஆணை காதலிக்கின்றார் அத்துடன் கலியாணமும் செய்யப்போகின்றார் என்பதா?

கட்டியணைத்தல் - Hug, முத்தமிடுதல் - Kiss இவற்றின் அர்த்தம் கூட காதல் - கலியாணத்திற்கான ஆதாரம் என்று கூறமுடியாது. நல்ல நண்பர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவலாம், முத்தமும் இடலாம்.

அளவிற்கு அதிகமாக விஜய், சூரியா, ஆரியா.. அந்நியன் படங்கள் பார்த்தால் வரக்கூடிய கோளாறு இது.

Edited by கலைஞன்

உண்மையாக அந்தப் பெண் ஒரே நேரத்தில் இருவரைக் காதலித்து இருந்தால் அவருக்கு இது தேவை தான்

இப்படி கூறுவது ஓர் பெண் போல் தெரியவில்லை. அது என்ன உண்மையாக..? அது உண்மையாகவா அல்லது பொய்யாகவா என்பதை எப்படி மற்றவர் அறிந்துகொள்ள முடியும்? நீங்கள் ஒரே நேரத்தில் இருவரை காதலித்தால் உங்களை அசிட் ஊற்றி கொல்வதை ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் பலருடன் நன்றாக பழகுகின்றீர்கள் என வைப்போம். நீங்கள் தன்னையும் இன்னொருவரையும் காதலிப்பதாக நினைத்து உங்கள் மீது ஒருவர் அசிட் தாக்குதல் செய்வதை ஏற்றுக்கொள்வீர்களா?

தமிழர்களை பார்த்து திருந்துகடா என்று கேட்டா திருந்தவே மாட்டார்கள். ஒரு பிஸ்டல்.. நெத்தியில பொட்டு வைச்சாலோ.. காதுக்கால கூவினாலோ.. தன்பாட்டில் அடங்கும்.. இவை எல்லாம்..! பிஸ்ரலுக்கு கொடுக்கும் மரியாதையை எம்மவர்கள் கொள்கைக்கும் வழிகாட்டல்களுக்கும் கொடுப்பதில்லை.

மேலே செய்தியில் யாருக்கு காதுக்கால் கூவவேண்டும் என நினைக்கின்றீர்கள்? செய்தியை கூறிய நண்பி? செய்தியை இணைத்த வீணா? செய்தியில் சம்பந்தப்பட்ட அசிட் ஊற்றிய ஆண்? அசிட் ஊற்றப்பட்ட பெண்? அசிட் ஊற்றப்பட்ட பெண்ணுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் மற்றைய ஆண்? உங்கள் கட்டைப்பஞ்சாயத்தில் ஒருவருக்கு மண்டையில் போடவேண்டும் என்பதை எதன் அடிப்படையில் தீர்மானிக்கின்றீர்கள்?

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களை மாதிரித்தானே பெண்பிரசையளுக்கும் ஆசாபாசங்கள் இருக்கும்.இதுக்குபோய்?????????????

பிஸ்டலை தூக்கினா.. உடன கத்துவியள்.. பயங்கரவாதம்.. வன்முறைவாதம்.. அடக்குமுறை என்று.. சனம் பயந்து வாழுது.. சுதந்திரம் இல்லை என்று. பிஸ்டலை கீழ போட்டா... அசிட் அடிப்பியள்.. பியர் போத்தலால குத்துவியள்.. கிரிக்கெட் பட்டால அடிப்பியள்.. கத்தியால குத்துவியள்.. வாளால வெட்டுவியள்... விட்டா.. ஒருத்தனோட காலையிலும்.. இன்னொருதனோட நண்பகலிலும்.. அடுத்தவனோ பிற்பகலிலும்.. வாழுவீங்க.. அது அவைட சுதந்திரம் என்றும் சொல்லுவியள்.. அப்புறம்.. றோட்டில குழந்தையை பெத்துப் போட்டு தாய் தலைமறைவு.. ஆண் அங்க சேட்டை.. பெண் முறைப்பாடு.. என்றும் அறிக்கை விடுவியள். இதுகள் எதுவுமே வேண்டாம்.. ஒழுங்கா இருக்க இப்படி ஒரு வழி இருக்கென்று சொல்வதும் அதைக்கேகவே மாட்டம் என்பதும்.. மண்டையில் போடுதலே ஒழிய.. அது ஒன்றும் கட்டைப்பஞ்சாயத்து கிடையாது. ஆளையாள் வெட்டுப்பட்டு குத்துப்பட்டு இறந்தா செய்தியாக்கி கதைப்பியள்.. அதையே வைச்சு நீங்க உத்தமர்கள் என்றும் காட்டிக் கொள்வீர்கள்.. மொத்த சமுதாயமே நல்லா இருக்கனும் என்று திருந்தாத சில ஜென்மங்களுக்கு எச்சரிக்கைகளுக்கு பின்னும் திருந்தாத போது வழங்கும் தண்டனைகள் மட்டும்...?????!

தீர்மானங்களை எல்லாம் சமூகத்தின் போக்கின் திசையே தீர்மானிக்கிறது. சமூகம் சரியான வழியில் போனால்.. பிஸ்டல் பொட்டு அவசியம் இல்லை. போகல்லைன்னா.. தேவைன்னா.. அதுவும் தீர்வாகலாம். தவறல்ல..!

Edited by nedukkalapoovan

எங்களை மாதிரித்தானே பெண்பிரசையளுக்கும் ஆசாபாசங்கள் இருக்கும்.இதுக்குபோய்?????????????

அதுதானே????? :lol::lol::lol:

நெடுக்ஸ், நீங்கள் வெளிநாட்டிற்கு வந்தும் இன்னமும் ஒன்றும் கற்றுக்கொள்ளவில்லை போல் உள்ளது. உங்களைச்சூழ வெளிநாட்டில் என்ன நடைபெறுகின்றது என பாருங்கள், உங்களைச் சூழவுள்ள நம்மவர்கள் வெளிநாடுகளில் எவ்வாறு வாழ்கின்றார்கள் என பாருங்கள், இங்கு பிரச்சனைகள் வராமல் இருப்பதற்காக ஆட்களுக்கு மண்டையிலா போடுகின்றார்கள்?

வெளிநாடுகள் உள்நாடுகள் என்ற பேதத்தை நான் பொதுவாக இனங்காண்பதில்லை. எல்லோரும் அடிப்படையில் மனிதர்கள்.

அண்மையில் கூட ஒரு இந்தியப் பெண் இரண்டு வெள்ளை இன ஆண்களை காதலிக்க வெளிக்கிட்டு.. அவளை அவளின் முன்னாள் காதலன் கத்தியால் குத்தோ குத்தென்று குத்திக் கொன்றுவிட்டான்.

இப்போ அவனுக்கு ஆயுள் தண்டனை..!

நீங்கள் சிலர் தான் ஏதோ வெள்ளக்காரன்.. வெள்ளையா இருக்கிறான்.. நீங்க கறுப்பா இருக்கிறீங்க என்று படங்காட்டிக்கிட்டு இருக்கிறீர்கள். மனித உணர்வுகள் தோல் நிறத்துக்கு அப்பாலானவை. ஏமாற்றத்தை சந்திக்கும் போது எந்த மனிதனும்.. அதனை இலகுவில் அடக்கிக் கொள்ளமாட்டான். பழிவாங்கத் தூண்டப்படுவான். அது இயற்கையானது. அதனை நீங்கள் வெளிநாட்டின் பெயரால் மறைக்க முற்படுகிறீர்கள்..!

அண்மைய நாட்களில் இரண்டு முக்கிய நபர்கள்.. பாலியல் குற்றச்சாட்டுக்களின் பெயரில் பதவிகளை பறிகொடுத்துவிட்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர் சர்வதேச நாணய நிதியத்தைச் சேர்ந்தவர். மற்றவர் பிரஞ்சு மந்திரி. இத்தாலிய பிரதமர் மீது இன்னும் விசாரணை போய்க்கிட்டு இருக்கிறது.

ஆக அடிப்படையில் குற்றவாளிகள் சரியான வேளையில் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறைக்கப்பட முடியும். காதல் விவகாரங்களுக்காக எல்லாம் மண்டையில் போடுவது கிடையாது. காதல் விவகாரங்கள் மனித அழிவுக்கு போகும் நிலையில் அதில் சம்பந்தப்படவர்கள் எச்சரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுவது வழமை. அது நாடுகளுக்கு நாடு உள்ள சட்ட முறைமைகளுக்கு ஏற்ப மாறுபடும்.

நான் நினைக்கிறேன்.. நீங்கள் இன்னும் வெளிநாட்டு மாயையில் இருந்து வெளிவரவில்லை. அல்லது அப்படி ஒரு மாயையை எம் சமூகம் மத்தியில் தக்க வைப்பதன் மூலம்.. சமூகத்திற்கு ஒரு போலி விம்பத்தை காண்பிக்க விரும்புகிறீர்கள். அதற்குள்.. புதினம்.. புரட்சி நடப்பதாக இனங்காட்டி உங்களை உயர்விக்கவும் விளைகிறீர்கள் என்பதாகவே இக்கருத்து எனக்கு தெரிகிறது.

ஆனால் எனக்கோ.. எல்லாரும் சராசரி மனிதர்களாகவே தெரிகின்றனர். அதுதான் வேறுபாடு. :)

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே????? :lol::lol::lol:

காமமோ.. காதலோ.. ஆபாசமோ.. அவற்றிற்கும் ஒரு அளவு இருக்க வேண்டும். இல்லைன்னா.. அவனோ/அவளோ நாகரிமுள்ள மனிதனாக இருக்க தகுதியற்றவனாகிறான்/ள். :)

வெளிநாடுகள் உள்நாடுகள் என்ற பேதத்தை நான் பொதுவாக இனங்காண்பதில்லை. எல்லோரும் அடிப்படையில் மனிதர்கள். நான் நினைக்கிறேன்.. நீங்கள் இன்னும் வெளிநாட்டு மாயையில் இருந்து வெளிவரவில்லை. அல்லது அப்படி ஒரு மாயையை எம் சமூகம் மத்தியில் தக்க வைப்பதன் மூலம்.. சமூகத்திற்கு ஒரு போலி விம்பத்தை காண்பிக்க விரும்புகிறீர்கள். அதற்குள்.. புதினம்.. புரட்சி நடப்பதாக இனங்காட்டி உங்களை உயர்விக்கவும் விளைகிறீர்கள் என்பதாகவே இக்கருத்து எனக்கு தெரிகிறது. ஆனால் எனக்கோ.. எல்லாரும் சராசரி மனிதர்களாகவே தெரிகின்றனர். அதுதான் வேறுபாடு. :)

கீழே இதை எழுதியதும் நீங்களே. அடிப்படையில் எல்லோரையும் மனிதராக பார்க்கும் ஒருவன் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தையாக இது தெரியவில்லை. நீங்கள் தாயகத்தில் உள்ள தமிழர்கள் உங்கள் ஆணைப்படி, விருப்பப்படி வாழவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள். தாயகத்து மக்களிற்கு ஒருவிதமான நீதி, நியாயம்.. வெளிநாட்டில் உள்ள மக்களிற்கு இன்னோர் விதமான நீதி, நியாயம். மேலே நீங்கள் ஆரம்பத்தில் எழுதிய கருத்துக்களுடன் நீங்கள் இறுதியாக எழுதிய கருத்து முரண்பாடுகளை கொண்டுள்ளது.

ஒரு பிஸ்டல்.. நெத்தியில பொட்டு வைச்சாலோ.. காதுக்கால கூவினாலோ.. தன்பாட்டில் அடங்கும்.. இவை எல்லாம்..!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

கீழே இதை எழுதியதும் நீங்களே. அடிப்படையில் எல்லோரையும் மனிதராக பார்க்கும் ஒருவன் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தையாக இது தெரியவில்லை. நீங்கள் தாயகத்தில் உள்ள தமிழர்கள் உங்கள் ஆணைப்படி, விருப்பப்படி வாழவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள். தாயகத்து மக்களிற்கு ஒருவிதமான நீதி, நியாயம்.. வெளிநாட்டில் உள்ள மக்களிற்கு இன்னோர் விதமான நீதி, நியாயம். மேலே நீங்கள் ஆரம்பத்தில் எழுதிய கருத்துக்களுடன் நீங்கள் இறுதியாக எழுதிய கருத்து முரண்பாடுகளை கொண்டுள்ளது.

ஆக அடிப்படையில் குற்றவாளிகள் சரியான வேளையில் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறைக்கப்பட முடியும். காதல் விவகாரங்களுக்காக எல்லாம் மண்டையில் போடுவது கிடையாது. காதல் விவகாரங்கள் மனித அழிவுக்கு போகும் நிலையில் அதில் சம்பந்தப்படவர்கள் எச்சரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுவது வழமை. அது நாடுகளுக்கு நாடு உள்ள சட்ட முறைமைகளுக்கு ஏற்ப மாறுபடும்.

நீங்கள் இப்படி ஒன்றை கொண்டு வந்து கருத்தின் போக்கை மாற்றுவீர்கள் என்று சொல்லித்தான் மேற்கண்ட கருத்தையும் எழுதியுள்ளேன்.

அமெரிக்காவில்.. காதலியை.. காதலனை கொலை செய்ததற்காக.. நச்சூசி போட்டு அல்லது மரண ஊசி போட்டு கொல்லப்பட்டவர்கள் பலர். அதையே எங்கள் தேசச் சட்டம் பிஸ்டலால செய்கிறது. நாட்டுக்கு நாடு சட்டமுறைமைகளும்.. தீர்ப்பு அமுலாவதும் மாறுபடுகிறதே தவிர.. குற்றங்கள் ஒன்றாகத்தான் இனங்காணப்படுகின்றன.

நாங்க செய்தா அதை பயங்கரவாதம் என்று சொல்லும் நீங்கள்.. அமெரிக்கா செய்தா.. அது ஜனநாயகம் என்றும் போற்றுவீர்கள். :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காமமோ.. காதலோ.. ஆபாசமோ.. அவற்றிற்கும் ஒரு அளவு இருக்க வேண்டும். இல்லைன்னா.. அவனோ/அவளோ நாகரிமுள்ள மனிதனாக இருக்க தகுதியற்றவனாகிறான்/ள். :)

ஒரு உயிருக்கு கொட்டாவியோ,தும்மலோ வந்தால் அதை சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும்!இதுதான் இயற்கையின் நியதி :D

நெடுக்ஸ் கீழே இவ்வாறு எழுதியது நீங்களே. இப்போது ஐயையோ... நான் உண்மையில் என்ன கூறவந்தேன் என்றால்... அமெரிக்காவில் உள்ளதுபோல்.. முறையான குற்றவிசாரணையின் பின்னர் கொலைக்குற்றத்திற்காக ஒருவருக்கு மரணதண்டனை கொடுப்பது தவறு இல்லை என்பதேயாகும் என கூறுகின்றீர்கள். நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்பதில் உங்களிற்கு தெளிவு இருந்தால் மகிழ்ச்சி.

தமிழர்களை பார்த்து திருந்துகடா என்று கேட்டா திருந்தவே மாட்டார்கள். ஒரு பிஸ்டல்.. நெத்தியில பொட்டு வைச்சாலோ.. காதுக்கால கூவினாலோ.. தன்பாட்டில் அடங்கும்.. இவை எல்லாம்..! பிஸ்ரலுக்கு கொடுக்கும் மரியாதையை எம்மவர்கள் கொள்கைக்கும் வழிகாட்டல்களுக்கும் கொடுப்பதில்லை. அதுதான் வேதனை. இத்தனைக்கும் இவர்கள் தங்களை யூதர்களுக்கு நிகர் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். கேவலம் கெட்ட ஜென்மங்கள்..!

ஒரு உயிருக்கு கொட்டாவியோ,தும்மலோ வந்தால் அதை சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும்! இதுதான் இயற்கையின் நியதி :D

இது மனிதருக்கு பொருந்தும். பெண்களை, காதலை, குடும்ப வாழ்வை வெறுக்கின்ற சாமியார்களிற்கு அல்லது ஆசாபாசங்களிற்கு கட்டுப்படாத இயந்திரங்களிற்கு எப்படி பொருந்தும்?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் கீழே இவ்வாறு எழுதியது நீங்களே. இப்போது ஐயையோ... நான் உண்மையில் என்ன கூறவந்தேன் என்றால்... அமெரிக்காவில் உள்ளதுபோல்.. முறையான குற்றவிசாரணையின் பின்னர் கொலைக்குற்றத்திற்காக ஒருவருக்கு மரணதண்டனை கொடுப்பது தவறு இல்லை என்பதேயாகும் என கூறுகின்றீர்கள். நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்பதில் உங்களிற்கு தெளிவு இருந்தால் மகிழ்ச்சி.

எங்கள் தேசச் சட்டங்கள் அமெரிக்கா அல்லது மேற்குலகம் போன்று இறுக்கமானவை அல்ல. றோட்டில குப்பையை கொட்டாத என்றால்.. கொட்டிப்போட்டு.. தீ மூட்டிட்டு போகுங்கள். அதை அமெரிக்காவில் செய்தால்.. ஜெயில்..! அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்திடம்.. வலுவான சட்ட அமுலாக்கம் அற்ற ஒரு சமூகத்திடம்.. பிஸ்டல் தொடர்பான பயம் இருப்பது அவசியமாகிறது.. இன்றேல் அந்தச் சமூகத்தை சரியான வழியில் கொண்டு செல்ல முடியாது. யானைப் பாகனுக்கு யானையை கட்டுப்படுத்த ஒரு ஊசி அவசியம்.. அதேபோல்.. காட்டு யானையை கட்டுப்படுத்த விவசாயிக்கு ஒரு தீப்பந்தம் அவசியம். அடிப்படையில் இருவரின் தேவையும் ஒன்று.. வழிமுறை வேறு. காரணம்.. சூழல்.. சந்தர்ப்பம். என்பதையே என் கருத்து தொனிக்கிறது. பிஸ்டல் வெடிப்பதும் பொட்டு வைப்பதும்.. தண்டனைக் குற்றத்துக்கு ஏற்ப நிகழ்பவை.. என்பதையும் சரியாகவே சொல்லி இருக்கிறேன். எனவே இதில் என்னை விட அதிகம் தெளிவு பெற வேண்டியவராக நீங்கள் இருக்கிறீர்கள். :)

இது மனிதருக்கு பொருந்தும். பெண்களை, காதலை, குடும்ப வாழ்வை வெறுக்கின்ற சாமியார்களிற்கு அல்லது ஆசாபாசங்களிற்கு கட்டுப்படாத இயந்திரங்களிற்கு எப்படி பொருந்தும்?

மனிதர்களை ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டு இயந்திரமாக வாழ வைப்பதும் மனிதர்களே. அதுவும் சுயநலம்.. மற்றும் ஏமாற்றுக்கார போலி மனிதர்களே. அவர்களைக் காட்டிலும்.. இயந்திரமாக வாழும் மனிதனால் பிற மனிதனுக்கு தீமை குறைவு. :)

ஒரு உயிருக்கு கொட்டாவியோ,தும்மலோ வந்தால் அதை சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும்!இதுதான் இயற்கையின் நியதி :D

தும்மலோ.. கொட்டாவியோ.. இதயம் துடிப்பது போல.. சதா வந்து கொண்டிருப்பதில்லை. அதற்கும் இயற்கையாக மூளையில் கட்டுப்பாடுண்டு. சதா கொட்டாவியும்.. சதா தும்மலும் செய்யும் மனிதர்கள் உளரோ. அதுபோலத்தான்.. காதலும்.. காமமும்.. தமிழர்களைப் போல தும்பை மூக்குக்க விட்டு தும்மல் வரவைக்கிறது போல.. வர வைக்கிறது எல்லாம் இயற்கை கிடையாது. :D:)

பிஸ்டல் வெடிப்பதும் பொட்டு வைப்பதும்.. தண்டனைக் குற்றத்துக்கு ஏற்ப நிகழ்பவை.. என்பதையும் சரியாகவே சொல்லி இருக்கிறேன். எனவே இதில் என்னை விட அதிகம் தெளிவு பெற வேண்டியவராக நீங்கள் இருக்கிறீர்கள். :)

இதுபற்றிய தெளிவு உள்ளதாலேயே ஆளாளுக்கு நான் நீதிபதி, நீ நீதிபதி என.. தெருவிற்கு தெரு சனங்களை நாய்கள் போல் சுட்டுக்கொன்றார்கள்? இது பற்றிய தெளிவு உள்ளதாலேயே தாயகத்தில் சிறீ லங்கா இராணுவம் தொடக்கம் ஈபீடீபி வரை சுதந்திரமாக கருத்துக்களை கூறமுடியாதவாறு மக்கள் பயந்து வாழ்கின்றார்கள்?

ஆளாளுக்கு குழு அமைச்சு கனடாவில மட்டும் சுடுபட்டியள்.. அதை ஏனாம் செய்தியள்...! கனடாவிலையே அப்படியான ஆக்கள்.. எப்படி சட்ட நெகிழ்வுள்ள ஒரு சூழலில்.. நீதிமன்றங்கள் செயற்படாத சூழலில்.. வாழ்ந்திருப்பீர்கள். முதலில் உங்கள் மக்கள் தொடர்பான சரியான மதிப்பீட்டை செய்யவும். அதன் பின்னர் பேசுவம்.. பிஸ்டல் எம்மவருக்கு அவசியமா இல்லையா என்று.

விடுதலைப் புலிகளின் ஆட்சிக்காலத்தில் மட்டும் தான் மரண தண்டனைகளும்.. குற்றங்களும் சிறீலங்காவின் பிற பாகங்களோடு ஒப்பிடும் போது மிகவும் குறைந்திருந்தது. இதனை சிறீலங்கா காவல்துறையே ஒத்துக் கொண்டிருக்கிறது.!

விடுதலைப்புலிகளை விட.. அதிகமாக மக்களை காரணமின்றிக் கொன்றது.. ஈபிடிபி ஆயுதக் கும்பல்.. மற்றும் இந்திய படைகளோடு இயங்கிய மாற்று தமிழ் ஆயுதக் கும்பல்களே. அந்த வன்முறைவாதக் கும்பல்கள் மீது நடத்தப்பட்டவை எதுவும் கண்டிக்கக் கூடிய குற்றங்கள் அல்ல. காரணம்.. அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட முடியாத அதிகாரவர்க்கங்களால் பாதுகாக்களிக்கப்பட்ட பெரும் குற்றவாளிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[quote name='nedukkalapoovan' timestamp='1307057013' post='663396

தும்மலோ.. கொட்டாவியோ.. இதயம் துடிப்பது போல.. சதா வந்து கொண்டிருப்பதில்லை. அதற்கும் இயற்கையாக மூளையில் கட்டுப்பாடுண்டு. சதா கொட்டாவியும்.. சதா தும்மலும் செய்யும் மனிதர்கள் உளரோ. அதுபோலத்தான்.. காதலும்.. காமமும்.. தமிழர்களைப் போல தும்பை மூக்குக்க விட்டு தும்மல் வரவைக்கிறது போல.. வர வைக்கிறது எல்லாம் இயற்கை கிடையாது. :D:)

  • கருத்துக்கள உறவுகள்

தும்மலும் கொட்டாவியும் இயற்கையாய்வரக்கூடியன!உங்களைப்போன்றவர்கள் தான் விண்ணான ரீதியாக சகல விற்பன்ன கருத்துகளையும் எழுதிநாறடிக்கின்றீர்கள்.உங்கள்பதிலின்பின் மிகுதி தொடரும்.

உங்கள் ஒருவருக்குத் தான் உலகத்திலேயே 24/7/365 தும்பலும் கொட்டாவியும் வந்துகிட்டு இருக்குது. கொட்டாவி.. தும்பல்.. பசி இவை எல்லாம் அடிக்கடி வாற உணர்வுகள் அல்ல. அதுபோலத் தான் காமமும் காதலும். அவையும் அடிக்கடி வரக் கூடாது. அதுவும் அடிக்கடி ஆளை மாத்தி மாத்தி வருகுதுன்னா.. ஏதோ பிரச்சனை என்று அர்த்தமாகும். :D:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இப்போதுஈழப்பிரச்சனையை உங்களுடன் கதைக்க விரும்புகிறேன்?

தும்மலும் கொட்டாவியும் இயற்கையாய்வரக்கூடியன! உங்களைப்போன்றவர்கள் தான் விண்ணான ரீதியாக சகல விற்பன்ன கருத்துகளையும் எழுதிநாறடிக்கின்றீர்கள். உங்கள்பதிலின்பின் மிகுதி தொடரும்.

மிகுதி தொடர்ந்து வாதம் செய்து நொந்துகொள்வதைவிட நீங்கள் ஓர் பிஸ்டலை வாங்கி உங்களிற்கு நீங்களே பொட்டு வைத்துக்கொள்வது மேல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலோ.......நெடுக்காலைபோவான்?

உங்களைப்போன்றவர்களால்கெட்டு நொந்துபோயிருக்கின்றது இந்த புலம் பெயர் சமுதாயம்.விளக்கமளியுங்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.