Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீபச் செல்வன் சின்னப் பையனாம்: ஜெயமோகன் சொல்கின்றார்

Featured Replies

ஈழ விடுதலை என்றாலே இந்திய ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது என்ற கருத்துத் தளத்தில் இருந்து இயங்கும் ஜெயமோகன் ஈழ விடுதலை அவா கொண்டு அனைத்து தளத்திலும் இலக்கியம் ஆக்கம் படைப்பு என்று இயங்கும் தீபச் செல்வனை 'சின்னப் பையன்' என்ற ஒரு அடைமொழியில் ஒழித்து வைக்கின்றார்

இதனை வாசிக்கவும்

சுரா 80- இருநாட்கள்

கன்யாகுமரிக்கு வருவதற்கு மிகச்சிறந்த காலகட்டம் ஆனியாடி சாரல் இருக்கும் ஜூன், ஜூலை மாதம். இந்தவருடம் சாரல் இப்போதே ஆரம்பித்துவிட்டது. குளிரும் இளமழையுமாக இருக்கிறது ஊர். சுந்தர ராமசாமியின் 80 ஆவது நினைவுநாளை ஒட்டி காலச்சுவடு ஒருங்கிணைத்திருந்த கருத்தரங்குக்கு கன்யாகுமரிக்கு வந்த பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இந்தச் சூழல் உதவியாக‌ இருந்தது என்றார்கள்.

கிட்டத்தட்டத் தமிழ் எழுத்தாளர்களில் அனைவருமே வந்திருந்தார்கள் என்று நினைக்கிறேன். தியோடர் பாஸ்கரன் நிகழ்ச்சிக்கு வருவதாகவும் நான் கலந்துகொள்ளமுடியுமா என்றும் கேட்டிருந்தார். பொ.வேல்சாமி கூப்பிட்டிருந்தார்.நான் அவரைச் சந்தித்து நெடுநாட்களாகிறது. என் மனதில் எப்போதும் ஓர் ஆசிரியரின் இடத்தில் இருப்பவர். அவரையும் நண்பர்களையும் சந்திப்பதற்காகவே கருத்தரங்குக்குச் சென்றேன். சென்னையில் இருந்து திரும்பி கனடா பயண ஏற்பாடுகளில் இருக்கிறேன். அருண்மொழியின் அப்பா அம்மா வந்து வீட்டில் இருக்கிறார்கள். நிகழ்ச்சிகளில் முழுக்கப் பங்கேற்க நேரமில்லை.

நீண்டநாட்களுக்குப் பின் பிரேமையும் மாலதி மைத்ரியையும் பார்த்தேன். பிரேம் மெலிந்திருக்கிறார். சர்க்கரைநோய். மாலதி அதே உற்சாகத்துடன். பி.ஏ.கிருஷ்ணன் இன்னும் கொஞ்சம் நரைத்து இன்னும் கொஞ்சம் பேராசிரியர் களையுடன். தொடர்ச்சியாகத் தூரமாகஆன நண்பர்களையும் மூத்தவர்களையும் சந்தித்ததனால் ஒரு நெகிழ்ச்சியான மனநிலையிலேயே இருந்தேன். தியோடர் பாஸ்கரனுடன் சென்று மதியம் சாப்பிட்டேன். மீண்டும் அரங்குக்குள் சென்றாலும் பலரையும் சந்தித்த பரபரப்பில் என்னால் எதையுமே கவனிக்கமுடியவில்லை.

ஜி எஸ் ஆர் கிருஷ்ணனைப் பத்து வருடம் கழித்து சந்தித்தேன். என்னுடைய ‘சு ரா நினைவின் நதியில்’ நூலை ஒரு கிளாசிக் என்று மிகுந்த உணர்ச்சிகரத்துடன் மீண்டும் மீண்டும் சொன்னார். ’தமிழில் எவருக்கும் இப்படி ஒரு அற்புதமான நினைவஞ்சலி செலுத்தப்படவில்லை’ என்றார். அருகே நின்ற யுவன் ‘நான் அதை எத்தனையோ வாட்டி சொல்லியிருக்கேன் சார்’ என்றான். அபாரமான ஒரு நிறைவு ஏற்பட்டது.

தமிழ் இலக்கியத்தின் அக்கப்போர் சூழலில் முன்முடிவுகளுடன் வாசிக்கப்பட்டுத் தவறாகவே முத்திரைகுத்தப்பட்டு ஒருவகை புறக்கணிப்புக்கு உள்ளான நூல் அது. அதன் பல பக்கங்கள் சரியான முறையில் வாசிக்கப்படவேயில்லை. அதிலுள்ள சுராவின் சித்திரம் அளவுக்கு தமிழில் எந்த ஆளுமையைப்பற்றியும் எவரும் எழுதவில்லை என்றே என்னால் சொல்லமுடியும். அத்தனை உத்வேகத்துடனும் துல்லியத்துடனும் நானே இன்னொருமுறை எவரைப்பற்றியேனும் எழுதுவேன் என்றும் தோன்றவில்லை. அதில் உச்சகட்ட கவித்துவமும் உயர்ந்த அங்கதமும் கலந்த பல பகுதிகள் கண்டிப்பாக அதை ஒரு கிளாசிக் ஆக ஆக்குகின்றன என்றே நினைக்கிறேன். ஜி எஸ் ஆர் கிருஷ்ணன் போன்ற ஒருவரின் வாயால் அதை கேட்டது அந்நூலைப்பற்றி எனக்கிருந்த ஆதங்கத்தை முழுமையாகவே தீர்த்தது. அவரளவுக்கு சுந்தர ராமசாமியை அறிந்தவர்கள் சிலரே. அவரளவுக்கு இலக்கிய ரசனை கொண்டவர்களும் சிலரே.

பொ.வேல்சாமியைப்பார்த்தேன். சமீபத்தில் புத்தகம் பேசுது இதழில் தமிழ்நாட்டு நிலத்துக்கும் சாதிகளுக்குமான உறவைப்பற்றி பொ.வேல்சாமி எழுதிய கட்டுரை மிகமிக முக்கியமான ஒன்று என்று தோன்றியிருந்தது. அதை அவரிடம் சொன்னேன். அவரது இடம் அதுதான். நெடுங்காலம் தமிழ்ச்சூழலின் அர்த்தமில்லாத அக்கபோர்களில் அவரைப்போன்ற ஆய்வாளர்கள் நேரத்தை வீணடித்தது ஓர் இழப்பு என்றே நினைக்கிறேன். ’பாரதி’ மணி வந்திருந்தார். ஐம்பதாண்டுகளுக்குப் பின் அவர் பிறந்த பார்வதிபுரம் அக்ரஹாரத்தை கிருஷ்ணன்நம்பியின் தம்பி வெங்கடாசலத்துடன் சென்று பார்த்ததாகச் சொன்னார்.சொ.தர்மன் அவரது சிறுகதை தொகுதியை தந்தார்.

பத்தாண்டுக்காலத்தில் சந்திக்க விட்டுப்போன பெரும்பாலானவர்களை மீண்டும் சந்தித்தேன். நினைவுகூர்ந்து தேடி காணாத விடுபடல் என்றால் சுரேஷ்குமார இந்திரஜித்தைச் சொல்லலாம். பெருந்தேவியை நீண்ட இடைவேளைக்குப்பின் கொஞ்ச நேரம் அடையாளம் காணமுடியாத தடுமாற்றத்துக்குப் பின் சந்தித்தேன். பெண் தெய்வங்களைப் பற்றிப் பேசிக்கொண்டோம். ஞாநி அவரது நாடகத்தைப் போட்டுக்கொண்டு சென்றுகொண்டிருந்தார். ஒரு ஹலோ சொன்னேன். ஞானியுடன் கே.ஆர்.அதியமான் வந்திருந்தார்.

பொன்னீலனின் தோள்பற்றிச் சென்ற கி.ராஜநாராயணனிடம் ஒரு வணக்கத்தைச் சொன்னேன். பெருமாள் முருகன் ஏனோ இளந்தாடியுடன் சற்றே களைத்த தோற்றத்தில் இருந்தார். க.பூரண‌சந்திரனைப் பார்த்தேன் என்றாலும் அவரிடம் அதிகமாகப் பேசமுடியவில்லை.

இலங்கையில் இருந்து ஏசுராஜா வந்திருந்தார். அவரை 1995ல் பார்த்தபின் இப்போதுதான் பார்க்கிறேன். அதே சோகமான தனியனின் முகபாவனைகள். பருத்தித்துறை ஆர்.டி.குலசிங்கத்தைப் பார்த்தேன். லண்டனில் இருந்து திரும்பி யாழ்ப்பாணத்தில் இருப்பதாகச் சொன்னார். மட்டக்களப்பில் இருந்து உமாவரதராசன் வந்திருந்தார். இப்போதுதான் நேரில் சந்திக்கிறேன். சேரனின் சகலையும் சரிநிகர் ஆசிரியருமான விக்கினேஸ்வரனை அறிமுகம் செய்துகொண்டேன். மலேசியாவில் இருந்து சை.பீர்முகமது வந்திருந்தார். ஈழத்தில் இருந்து தீபச்செல்வன் வந்திருந்தார். சின்னப்பையன்.

மிகப்பெரிய அளவில் கருத்தரங்கை ஏற்பாடுசெய்திருந்தார்கள். இளைய படைப்பாளிகளில் கணிசமானவர்களை சந்தித்தேன். அவர்களுக்கு மூத்த படைப்பாளிகளை அறிமுகம் செய்துகொள்ளவும் பேசவும் உகந்த ஒரு சூழலாக கன்யாகுமரி இருந்திருக்கும் என நினைக்கிறேன். விவேகானந்தர்நிலையத்தின் சூழலும் அழகானது.

இரண்டாம்நாள் பி ஏ கிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பான ‘திரும்பிச்சென்ற தருணம்’ என்ற கட்டுரை நூலை நான் வெளியிட்டேன். இரண்டாம்நாளிலும் முன்னரே செல்ல முடியவில்லை. மதுரையில் இருந்து தலித் வரலாற்று நூல்வரிசை வெளியீட்டாளர்களான நண்பர்கள் அலெக்ஸ், பாரிசெழியன் இருவரும் வந்திருந்தார்கள். சில எதிர்கால திட்டங்களைப்பற்றிப் பேசிக்கொண்டோம். அவர்களையும் கூட்டிக்கொண்டு காரில் கிளம்பி சென்று கூட்டத்தில் கலந்துகொண்டு அதே காரில் திரும்பி வந்துவிட்டேன்.

முதல்நாள் செல்லும் வழியில் என்னுடைய செல்பேசியைத் தொலைத்துவிட்டேன். பேருந்தில் வளைந்து தூங்கிக்கொண்டு போய் இறங்கிய இடத்தில் அது காணாமலாகிவிட்டிருந்தது. அதை எடுத்த புத்திசாலி உடனே அதன் ஆன்மாவை பிடுங்கி வீசிவிட்டான். இழப்பெல்லாம் இல்லை. மிகப்பழைய நோக்கியா அடிப்படை மாதிரி செல்பேசி. விற்கப்போனால் ஐம்பது ரூபாய்க்கு மேலே கிடைக்காது. ஆனால் அதைத் தேடி ஆட்டோவில் பேருந்தைத் துரத்திப்போய்த் திரும்பிய வகையில் நூறு ரூபாய்செலவானது. எல்லா எண்களும் போயிற்று. கருத்தரங்கில் நண்பர்களை சந்திக்க வேண்டியிருந்த நேரமும் வீணாயிற்று

சரி, நண்பர்கள் தங்கள் எண்களை பெயர்களுடன் எனக்கு குறுஞ்செய்தியாக அனுப்பினால் நட்பு நீடிக்கும். இல்லாவிட்டால் எனக்கிருக்கும் மறதியில் பலரை அடுத்து இம்மாதிரி ஏதாவது கருத்தரங்கில்தான் சந்தித்து மறு அறிமுகம் செய்துகொள்ளவேண்டியிருக்கும்

http://www.jeyamohan.in/

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

தீபச்செல்வன் உருவத்தால் சின்னப்பொடியன் தோற்றம்தானே அதுதான் அப்படி விளித்திருப்பார் ஜெயமோகன்.

அப்படிப் பிழையான விதத்தில் "சின்னப்பையன்" என்று கூறியமாதிரித் தெரியவில்லை. வயதில் சின்னப்பையன் என்று படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இருந்து தீபச்செல்வன் வந்திருந்தார். சின்னப்பையன்.

தீபச்செல்வனின் கருத்துக்களை வாசித்ததில் இருந்து, அவரை ஒரு வயது கூடிய ஒருவராக ஜெயமோகன் எதிர் பார்த்திருக்கலாம்!

வயதிற்கு அதிகமான முதிர்ச்சியை, தீபச்செல்வனிடம் கண்டார் என்பதையே மேல் கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார் என நினைக்கின்றேன்!

மித்திரன்,ஜூனியர் விகடன் பாணியில் தலையங்கம் போட ஆரம்பிச்டாங்கையா?

கன்னியாகுமாரியில் போய் நின்றாலே கதை,கவிதை தானா வரும்.விவேகானந்தர் நிலையத்தில்தான் நானும் போய் தங்கியிருந்தேன்.காசும் குறைவு கடற்கரையுடன் கூடிய மிக அழகான சூழல்.நடைதூரத்தில் திருவள்ளுவர் சிலைக்கு படகேறும் இடம்.பெட்டிக்கடைகள் நிறைந்திருக்கும்.

அங்கிருந்து நாகர்கோயில் வழியாக கேராள சென்றேன்.நாகர் கோயிலில்தான் சு.ரா வின் இல்லம்.கேரளாவிலும் ஆலப்புழை அந்தமாதிரி.போனால் போட் கவுஸ் எடுத்து ஓர் இரவு தங்கவேண்டும்.மீன் பிடித்து அதற்குள் வைத்தே சமைத்துதருவார்கள்.தண்ணீர் பிரதேசமாகையால் கள்ளு ருசியாக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா, வந்திருந்த எழுத்தாளர்கள் எல்லாரும் கண்டிப்பா வயசில் மூத்தவர்களாக இருந்திருப்பார்கள். அவர்களுடன் ஒப்பிடும் போது தீபச்செல்வன் வயசில் சின்னப் பையன் தானே. அதனால் தான் அவ்வாறு எழுதியிருப்பார் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

நிழலி,

தீபச்செல்வன் உருவத்தால் சின்னப்பொடியன் தோற்றம்தானே அதுதான் அப்படி விளித்திருப்பார் ஜெயமோகன்.

தீபச்செல்வனின் கருத்துக்களை வாசித்ததில் இருந்து, அவரை ஒரு வயது கூடிய ஒருவராக ஜெயமோகன் எதிர் பார்த்திருக்கலாம்!

வயதிற்கு அதிகமான முதிர்ச்சியை, தீபச்செல்வனிடம் கண்டார் என்பதையே மேல் கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார் என நினைக்கின்றேன்!

நிழலி அண்ணா, வந்திருந்த எழுத்தாளர்கள் எல்லாரும் கண்டிப்பா வயசில் மூத்தவர்களாக இருந்திருப்பார்கள். அவர்களுடன் ஒப்பிடும் போது தீபச்செல்வன் வயசில் சின்னப் பையன் தானே. அதனால் தான் அவ்வாறு எழுதியிருப்பார் என நினைக்கிறேன்.

தீவிர ஈழ எதிர்ப்பாளரான ஜெயமோகன் நிச்சயம் தீபச் செல்வன் வயது பற்றி அறிந்தே வைத்து இருப்பார். ஜெயமோகனின் வாசிப்பு என்பது மிக விசாலமானதுடன் அவரின் இலக்கிய மோதல்கள அதை விட விசாலமானது.

எனக்கு இது ஒரு வஞ்சக புகழ்ச்சி என்றே எண்ணத் தோன்றுகின்றது. எதிர்காலத்தில் தீபச்செல்வன் மீதான அவரின் விமர்சனங்கள் எப்படி அமையைப் போகின்றது என்பதை வைத்து என் இந்த எடுமானம் சரியா பிழையா என்பது தெரியவரும்

மித்திரன்,ஜூனியர் விகடன் பாணியில் தலையங்கம் போட ஆரம்பிச்டாங்கையா?

.

நான் தலைப்பை இடும் போது எனக்கு அப்படி தோன்றவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ப.சிதம்பரம் அரசியலில் நுழைந்த காலத்தில் கருணாநிதி அவரை சிவத்தப் பையன் என்று வர்ணித்தாராம். பையன் என்பது உலக அனுபவம் அற்றவர் என்கிற அர்த்தத்தில் தமிழகத்தில் உபயோகிக்கப்படும் வார்த்தை..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனையும் தம்பி என்று தட்டி வைத்தார்கள்

ஆனால்..................?

அதேபோல் தீபச்செல்வனும் மக்கள் மனதில் நிலைப்பார்

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனையும் தம்பி என்று தட்டி வைத்தார்கள்

ஆனால்..................?

தம்பியென்ற அடைமொழி தலைவர் பிரபாகரனை உயர்த்தியதேயன்றித் தட்டிவைக்கவில்லை. சிறுபிள்ளைகளின் மனதிற்குள் இன்னும் தம்பிமாமாவாகவே நிலைத்திருக்கிறார். ஜெயமோகனின் சின்னப்பையன் அடைமொழிக்கும் தம்பியென்று தலைவர் பிரபாகரனை விழிப்பதற்கும் சம்பந்தமேயில்லை விசுகு.

தீபச்செல்வன் ஒரு சிறந்த எமக்குக் கிடைத்த கொடையென்றே சொல்ல வேண்டும். இலக்கியத் திறமை தீபச்செல்வனுக்குக் கிடைத்த வரம். ஜெயமோகனோ அல்லது எந்தப்பெரிய மகான்களோ எப்படி அழைத்தாலும் தீபச்செல்வனின் அழுமையை திறமையை எவராலும் அமிழ்த்திவிட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பியென்ற அடைமொழி தலைவர் பிரபாகரனை உயர்த்தியதேயன்றித் தட்டிவைக்கவில்லை. சிறுபிள்ளைகளின் மனதிற்குள் இன்னும் தம்பிமாமாவாகவே நிலைத்திருக்கிறார். ஜெயமோகனின் சின்னப்பையன் அடைமொழிக்கும் தம்பியென்று தலைவர் பிரபாகரனை விழிப்பதற்கும் சம்பந்தமேயில்லை விசுகு.

தீபச்செல்வன் ஒரு சிறந்த எமக்குக் கிடைத்த கொடையென்றே சொல்ல வேண்டும். இலக்கியத் திறமை தீபச்செல்வனுக்குக் கிடைத்த வரம். ஜெயமோகனோ அல்லது எந்தப்பெரிய மகான்களோ எப்படி அழைத்தாலும் தீபச்செல்வனின் அழுமையை திறமையை எவராலும் அமிழ்த்திவிட முடியாது.

யாழ்.நகரம்

----------------

ஒரு கொத்துரொட்டிக்கடை

இனந்தெரியாத பிணம்

நீளும் அமைதி:யாழ் நகரம்.

01

எனது சைக்கிள்

சந்தியில்

குருதி வழிய வழிய

உடைந்து கிடக்கிறது

நாட்குறிப்புக்களை

காற்று வலிமையாக

கிழித்து போகின்றன

எனது பேனா

சிவப்பாகி கரைகிறது.

மதிய உணவிற்கு

வாங்கப்பட்ட

அரை ராத்தல் பாணை

நாய்கள் அடிபட்டு

பிய்த்து தின்னுகின்றன

வாழைப்பழங்களை

காகங்கள்

கொத்தி தின்னுகின்றன.

எனது பிணம்

உரிமை கோரப்படாமல்

குருதியால் போர்க்கப்பட்டிருக்கிறது.

வீட்டின் கூரை

உக்கியிருக்கிறது

சுவர்கள் கரைந்து

சரிந்திருக்கின்றன

அம்மா.அக்கா.தம்பி.தங்கைகள்

அழுகையில்

கூடியிருக்கிறார்கள்.

வீதி மயானமாகிறது

சீருடைகள் சவப்பெட்டியாகின்றன

மின் தூன்கள்

உயிரை குடிக்கின்றன.

யாரோ சாப்பிட வருகிறார்கள்

கொத்துரொட்டிக்கடை திறந்திருக்கிறது.

02

நான் யாரென்பதை

நீங்கள் அறியாதிருப்பீர்கள்

ஆவலற்றிருப்பீர்கள்

நீங்கள் சாப்பிடும்

கொத்துரொட்டி

மேசையில் பரவியிருக்க

எனது பிணம்

பின்னணியாய் தெரியும்.

இவன் ஏன் சுடப்பட்டான்

என்பது பற்றிக்கூட

நீங்கள் சிந்திக்கமாட்டீர்கள்

உங்களால்

தொடர்ந்து அமைதியாய்

சாப்பிட முடியும்

நாளைக்கு வெடிக்கப்போகிற

வன்முறைகளுக்கு

ஊரடங்கு அமுலுக்கு

நீங்கள் தயாராகுவீர்கள்.

03

கடையில் இருக்கும்

பொருட்களில்

சிலவற்றை முண்டியடித்து

வாங்கிவிட்டு

குறைந்த பொருட்களோடு

கூடிய பாரத்தோடு

வீட்டிற்கு வருவீர்கள்

பூட்டிய வீட்டுக்கதவை தட்டி

கூப்பிட்டு

அவதானமாக கதவை திறந்து

உள் நுழைவீர்கள்

கதவுகளை ஜன்னல்களை

இறுக சாத்திக்கொள்வீர்கள்.

அவன் என்ன செய்திருப்பான்

என்ற கேள்வி

நீர் தீர்ந்து காற்று வரும்

குழாயை உலுப்புகையிலும்

எழாமலிருக்கும்.

ஒரு பக்கத்துடன் வெளிவரும்

நாளைய தினஇதழ்

அதில் அவன் சாவு

இனங்காணப்பட்டிருக்கும்

என்றுகூட எதிர்பார்க்கமாட்டீர்கள்

மின்சாரம் துண்டிக்கப்பட்டு

ஏழு மணியுடன்

கண்னை மூடிக்கொள்கையில்

இரவு பெரிதாக விரிகையில்

எதுவும் நினைவு வராது.

நாளை அந்த கொத்துரொட்டிக்கடை

பூட்டியிருக்கலாம்

வேறு எங்கேனும்

ஒரு கொத்துரொட்டிக்கடை

கொஞ்சரொட்டிகளுடன் திறந்நிருக்கும்.

கொஞ்ச பொருட்களுடன்

ஓரு பலசரக்குகடையும் திறந்திருக்கும்.

04

நான் என்ன செய்தேன்

எதை விரும்பினேன்

யாரை நேசித்தேன்

யாரை எதிர்த்தேன்?

எனது வீடு எந்த

கிராமத்திலிருக்கிறது

எனது பேஸில்

யாருடைய படம் இருந்தது

எந்த பிரதேச வாடையுடைய

உடைகளை

நான் அணிந்திருந்தேன்

எனது தலைமுடி

எப்படி சீவப்பட்டிருந்தது?

யார் என்ன கவனித்தார்கள்

எந்த முகாங்கள்

அமைந்திருக்கும் வீதியால்

நான் பயணிக்காதிருந்தேன்?

எந்த சீருடைகளுக்கு

நான் அச்சமாயிருந்தேன்

ஏன் பொது உடைகளுடன்

வந்தவர்களால்

நான் சுடப்பட்டேன்?

எனது பிணத்தில்

எத்தனை கேள்வியிருக்கிறது

எப்பொழுது நான்

இனங்காணப்படுவேன்?

05

நான் எந்தவகை அமைதியாயிருக்கிறேன்?

நீங்கள் எந்தவகை அமைதியாயிருக்கிறீர்கள்?

குறிப்பிட்ட நேரங்களுக்குள்

என்ன இருக்கிறது?

இயல்பு குழைந்த யாழ்.நகரத்தில்

என்ன நடக்கிறது?

வலிகளைப் படையலாக்கி வாழ்வோடு கலவையாக்கும் சின்னப்பையனின் பெரிய கவிதை.

நன்றி - வார்ப்பு

>@ நிழலி -தீவிர ஈழ எதிர்ப்பாளரான ஜெயமோகன் நிச்சயம் தீபச் செல்வன் வயது பற்றி அறிந்தே வைத்து இருப்பார். ஜெயமோகனின் வாசிப்பு என்பது மிக விசாலமானதுடன் அவரின் இலக்கிய மோதல்கள அதை விட விசாலமானது.

:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தம்பியென்ற அடைமொழி தலைவர் பிரபாகரனை உயர்த்தியதேயன்றித் தட்டிவைக்கவில்லை.

சிறுபிள்ளைகளின் மனதிற்குள் இன்னும் தம்பிமாமாவாகவே நிலைத்திருக்கிறார்.

ஜெயமோகனின் சின்னப்பையன் அடைமொழிக்கும் தம்பியென்று தலைவர் பிரபாகரனை விழிப்பதற்கும் சம்பந்தமேயில்லை விசுகு.

தீபச்செல்வன் ஒரு சிறந்த எமக்குக் கிடைத்த கொடையென்றே சொல்ல வேண்டும். இலக்கியத் திறமை தீபச்செல்வனுக்குக் கிடைத்த வரம். ஜெயமோகனோ அல்லது எந்தப்பெரிய மகான்களோ எப்படி அழைத்தாலும் தீபச்செல்வனின் அழுமையை திறமையை எவராலும் அமிழ்த்திவிட முடியாது.

அன்பாகவே இப்பெயர் வைக்கப்பட்டாலும்

பின்னர் தம்பி என்று பலர் இவரை பின்னுக்கு தள்ளியதை வரலாறு பதிந்தே உள்ளது சாந்தியக்கா.

அத்துடன் தீபச்செல்வனது தற்போதைய உழைப்பும் எழுத்தும் நிச்சயம் அவரையும் எம்மினத்துக்கு எடுத்துக்காட்டாக வரலாற்றில் பதியும். நன்றி

கலைஞர்களில் பெரும்பான்மையானோர் முரண்பாடுகளின் மொத்த வடிவமாக இருப்பார்கள்.உதாரணம் ஆயிரம் எழுதலாம் எம்மவர் உட்பட.

கனிமொழி தனது கவிதைகளை மலையாளத்தில் மொழிபெயர்க்க ஜெயமோகனிடம் கேட்க முதல் கவிதை எழுதுங்கள் பின் மொழி பெயர்ப்பம் என்றாராம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.