Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்று இரவு 10 மணிக்கு ஹெட்லைன்ஸ் டுடே டிவியில் இலங்கையின் கொலைக்களம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று இரவு 10 மணிக்கு ஹெட்லைன்ஸ் டுடே டிவியில் இலங்கையின் கொலைக்களம் டாக்குமென்டரிப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.

ஈழத்தில் நடந்த உலகம் இதுவரை கண்டிராத மிகப் பெரிய, கொடூரமான இனவெறிப் படுகொலை கோர வெறியாட்டத்தின் காட்சிகளை லண்டனைச் சேர்ந்த சேனல் 4 டிவி டாக்குமென்டரிப் படமாக தயாரித்து வெளியிட்டு உலகையே அதிரச் செய்தது.

இதுகுறித்து உலகம் முழுவதும் உள்ள முக்கிய செய்தி நிறுவனங்கள், டிவி நிலையங்கள், நாளிதழ்கள் செய்திவெளியிட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ் ஊடகங்கள் மட்டுமே இதைப் பற்றி செய்தியை வெளியிட்டன. ஆனால் டெல்லியிலிருந்து செயல்படும் ஆங்கில டிவி நிறுவனங்கள் இதை கண்டு கொள்ளவே இல்லை.

இந்த நிலையில், ஹெட்லைன்ஸ் டுடே இந்த பதை பதைக்க வைக்கும் டாக்குமென்டரிப் படத்தை ஒளிபரப்பவுள்ளது. மூன்று நாட்கள் இதை ஒளிபரப்புகிறது ஹெட்லைன்ஸ் டுடே டிவி.

இன்று இரவு 10 மணிக்கு முதல் பகுதி ஒளிபரப்பாகிறது. நாளை இரவு 11 மணிக்கும், சனிக்கிழமை 10 மணிக்கும் மற்ற பகுதிகள் ஒளிபரப்பாகவுள்ளன.

இன்று காலை முதலே இலங்கையின் கொலைக்களம் குறித்த துணுக்குச் செய்திகளை ஹெட்லைன்ஸ் டுடே ஒளிபரப்பி வருகிறது.ஈழ இணையம்

Edited by puthiyavan28

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியால் ஒளிபரப்பப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் ஒரு தடவைக்கு மூன்று தடவை ஒளிபரப்பப்பட்டது.

இப்போது இந்தியாவில் ஒளிபரப்படவிருக்கிறது.

இதற்காக ஜிரிஎப் உட்பட்ட அமைப்புக்கள் உழைத்திருக்கின்றன.

தாயகத்திற்கு வெளியே அதிக எண்ணிக்கையான தாயகத் தமிழர்களைக் கொண்ட நாடு கனடா.

மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இருக்கிறம்.

நாடாளுமன்றிற்கும் ஒரு தமிழ் உறுப்பினரை அனுப்பியிருக்கிறம்

கனேடிய தமிழ் காங்கிரஸ்

கனேடிய தமிழர் தேசிய அவை

நாடு கடந்த தமிழீழ அரசு

மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இதர தமிழ் அமைப்புக்களை வைச்சிருக்கிறம்.

வானொலிகளிலிலும் மேடைகளிலும் தமிழீழ விடுதலைப் போராட்டம்

பற்றி தமிழிலேயே பேசுவதற்கு சிறந்த பேச்சாளர்களையும் வைச்சிருக்கிறம்.

ஆனா நாங்கள் கனடாவின் தமிழ் தொலைக்காட்சிகள் தவிர்ந்த வேறு எந்தத் தொலைக்காட்சியிலும் இந்த ஆவணப்படம் ஒளிபரப்ப முயற்சிக்க மாட்டம் என்பதை இதனை ஒளிபரப்பச் செய்வதற்கு பாடுபடும் உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து இயங்கும் அமைப்புக்கள் மற்றும் தனி மனிதர்களிடம் இத்தால் அறியத் தருகிறோம்.

போர் குற்ற ஆவணப்படம் கனேடியர்கள் பார்க்க வேண்டுமானால் நீங்களே அதற்கான முயற்சியை எடுக்கவும். நாங்கள் இப்படி அறிவுபூர்வமான வேலைகளைச் செய்வோம் என எண்ண வேண்டாம்.

ஏனென்றால் கனேடிய அரசிற்கான கோரிக்கையை பல ஆயிரக்கணக்கான மக்களை நாடாளுமன்றின் முன்னால் திரட்டி தமிழிலேயே தெரிவிக்கற ஆக்கள் நாங்கள்(முடியல நிறுத்திவிடுறன்).

Edited by மின்னல்

உங்கள் ஆதங்கம் நியாயமானது.

தனிப்பட்ட ரீதியில் நாம் எவ்வாறு முயற்சிக்கலாம்?

கனடாவில் மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் பெரிய தொலைக்காட்சி / வானொலி சி.பி.சி (CBC). இதிலும் பாசநேட் ஐ (Passionate Eye) என்ற பகிது ஆவணப்படங்களை வெளியிடுவது வழமை. அதில் ஒளிபரப்பு செய்ய கேட்கலாம்

- http://www.cbc.ca/passionateeye/contact.html

- மாதிரி பதிவு

a) I would CBC to consider telecasting "Sri Lanka - Killing Fields" from UK's Channel 4.

b) The truth about Sri Lanka must be heard in Canada as well. Please consider obtaining a copy from Channel 4 and broadcasting.

c) As taxpayer and someone who cares about Human Rights, I urge CBC to telecast Sri Lanka - Killing Fields", a documnetary from UK's Channel 4.

கனடா, முக்கியமாக அதன் அரசியல் ஆளும் வர்க்கம், உளவு, ஊடகங்கள் எல்லாமே எம்மை, தமிழரை, ஒரு காட்டுமிராண்டிகளாகவும் / பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கவே முயலுகின்றன. காரணம் எமது ஒற்றுமை, வளர்ச்சி என்பனவற்றை வெறுக்கின்றன. அடுத்த தலைமுறையை அவர்களின் எதிர்க்காலத்தை தமிழன் என்றால் பயங்கரவாதி என்று எண்ணவைக்கும் தேவையுடன் செயல்படுகின்றார்கள். இந்த சனல் நாலால் அது கெட்டுவிட கூடாது என எண்ணுகிறார்கள்.

இருந்தும்:

1. இந்த ஒளிப்பதிவு பற்றி பல அரசியல்வாதிகளும், ஊடகவியாலலர்களும் அறிந்தே உள்ளனர்

2. இந்த ஒளிப்பதிவு பற்றி ஒரு கட்டுரை தலைநகர் ஒட்டாவா பத்திகையில் ஒருவர் எழுதினார்

3. அதிகூடிய விற்பனையில் உள்ள டொராண்டோ ஸ்டாரில் ஒரு தனிப்பட்டவர் கடிதமும் ஒரு கட்டுரையும் வந்திருந்தது

4. 20000 மேற்பட்ட இறுவட்டுக்கள் மக்கள் மத்தில் கனேடிய பேரவையால் விநியோகிக்கப்பட்டுள்ளது

மின்னலில் கருத்துக்கு நன்றி.

புலம்பெயர்ந்து வாழும் நாட்டில், அந்த நாட்டினது பெரும்பான்மையானோரின் மொழியிலேயே பிரச்சாரம் செய்யப்படவேண்டும். அவர்களின் கூட்டங்களுக்கும் சென்று தமிழில் முழங்கி தமிழை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். மீண்டும் மீண்டும் தமிழில் கதைத்து தமிழர்களுக்கு உள்ளேயே குதிரை ஒட்டிக்கொண்டிருக்காமல், எங்கள் துயரம் மற்றைய இனத்தவரையும் சென்றடையச் செய்யவேண்டும். தற்போது பிரித்தானியாவில் நல்ல மாற்றம் தெரிகிறது.

முன்பு பன்றி குட்டி போட்டமாதிரி நிறைய தமிழ் ஊடகங்கள் இருந்து, தமிழர்கள் மத்தியிலேயே பிரச்சாரம் செய்தன. மற்றைய இனத்தவர்களை சென்றடையும் வகையில் பிரச்சாரம் செயற்படக்கூடிய நல்ல நாலு ஊடகங்கள் இருந்திருந்தால் போராட்டத்தின் நிலை வேறுவிதமாக இருந்திருக்கும்.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ நம்மால் முடிந்த அளவுக்கு கொல்டி மற்றும் அரை கொல்டி மற்றும் அரை தமிழர் அனைவருக்கும் நேரிலும் SMS மூலமும் காணுமாறு அறிவுறுத்தினேன்... :)

  • கருத்துக்கள உறவுகள்

இரவு 10 மணிக்கு சப்பாத்தி சால்னா ஒரு பிடிபித்துவிட்டு நன்றாக தூங்கிவிடுவார்கள் இதுவரைக்கும் செய்ததுபோல்

இலங்கையின் கொலைக்களம்: தொலைக்காட்சி விவாதத்தில் முதல்வர் ஜெயலலிதாவும் பங்கேற்பு

இன்று இந்திய தொலைக்காட்சி ஊடகமான Headlines today இல் ஒளிபரப்பாகவுள்ள சனல் 4 இன் 'இலங்கையின் கொலைக்களம்' காணொளியைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள விவாதத்தில் கலந்துகொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுனல் 4 இன் இந்தக் காணொளி ஏற்கனவே பிரித்தானியாவிலும் அவுஸ்திரேலியாவிலும் ஒளிபரப்பாகி பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ள நிலையில் இன்று இந்தியாவில் முதன்முறையாக ஒளிபரப்பாகவுள்ளது.

இந்திய மக்கள் மத்தியிலும் ஊடகங்கள் மற்றம் அரசியல் கட்சிகளின் மத்தியிலும் இக் காணொளி ஈழமக்கள் மீதான அனுதாபத்தையும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான அழுத்தங்களையும் ஏற்படுத்திவிடும் என்ற அச்ச உணர்வின் காரணமாக இவ் ஒளிபரப்பைத் தடுப்பதற்கு சிறிலங்கா உயர் ஸ்தானியராலயம் கடும் முயற்சியை மேற்கொண்டபோதும் அது வெற்றியளிக்கவில்லை.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா இக்காணொளியின் அடிப்படையில் இடம்பெறம் விவாதத்தில் கலந்து கொள்வது குறித்தும் சிறிலங்கா வட்டாரங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

தமிழ்நாடு சட்டசபையில் ஏற்கனவே போர்க்குற்றவாளிகள் மீதான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் பொருளாதார தடை விதிக்கக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இவற்றை வலியுறுத்தும் முகமாகவே ஜெயலலிதாவின் பேச்சு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இரவு 10 ஒளிபரப்பாகவுள்ள இக்காணொளி நாளையும் நாளை மறுதினமும் மறுஒளிபரப்பாகவுள்ளது. இது தொடர்பாக நாளை சென்னையில் ஒரு கலந்துரையாடலை நடத்தவும் இத் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னை மயிலையில் அமைந்தள்ள வித்யா பவனில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={6B9908B9-8864-4633-9FAD-1947D5A0480E}

ஏதோ நம்மால் முடிந்த அளவுக்கு கொல்டி மற்றும் அரை கொல்டி மற்றும் அரை தமிழர் அனைவருக்கும் நேரிலும் SMS மூலமும் காணுமாறு அறிவுறுத்தினேன்... :)

நன்றி புரட்சி!

தமிழக உறவுகள் இப்படி எமக்காக இன்று குரல் கொடுப்பது முக்கியம். இதுவே இந்தியா முழுவதும் ஒளித்து டெல்லியின் போக்கில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும்.

இதன் பின்னணியில் GTF பல வேலைகளை செய்திருப்பதாக தெரிகிறது ... வெகுவிரைவில் இந்தியா சென்று அனைத்து தரப்பினரையில் சந்திக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள் ...

Global Tamil Forum mobilizes international opinion against Sri Lanka over alleged war crimes

http://dbsjeyaraj.com/dbsj/archives/2476

http://globaltamilforum.org/gtf/

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியால் ஒளிபரப்பப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் ஒரு தடவைக்கு மூன்று தடவை ஒளிபரப்பப்பட்டது.

இப்போது இந்தியாவில் ஒளிபரப்படவிருக்கிறது.

இதற்காக ஜிரிஎப் உட்பட்ட அமைப்புக்கள் உழைத்திருக்கின்றன.

தாயகத்திற்கு வெளியே அதிக எண்ணிக்கையான தாயகத் தமிழர்களைக் கொண்ட நாடு கனடா.

மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இருக்கிறம்.

நாடாளுமன்றிற்கும் ஒரு தமிழ் உறுப்பினரை அனுப்பியிருக்கிறம்

கனேடிய தமிழ் காங்கிரஸ்

கனேடிய தமிழர் தேசிய அவை

நாடு கடந்த தமிழீழ அரசு

மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இதர தமிழ் அமைப்புக்களை வைச்சிருக்கிறம்.

வானொலிகளிலிலும் மேடைகளிலும் தமிழீழ விடுதலைப் போராட்டம்

பற்றி தமிழிலேயே பேசுவதற்கு சிறந்த பேச்சாளர்களையும் வைச்சிருக்கிறம்.

ஆனா நாங்கள் கனடாவின் தமிழ் தொலைக்காட்சிகள் தவிர்ந்த வேறு எந்தத் தொலைக்காட்சியிலும் இந்த ஆவணப்படம் ஒளிபரப்ப முயற்சிக்க மாட்டம் என்பதை இதனை ஒளிபரப்பச் செய்வதற்கு பாடுபடும் உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து இயங்கும் அமைப்புக்கள் மற்றும் தனி மனிதர்களிடம் இத்தால் அறியத் தருகிறோம்.

போர் குற்ற ஆவணப்படம் கனேடியர்கள் பார்க்க வேண்டுமானால் நீங்களே அதற்கான முயற்சியை எடுக்கவும். நாங்கள் இப்படி அறிவுபூர்வமான வேலைகளைச் செய்வோம் என எண்ண வேண்டாம்.

ஏனென்றால் கனேடிய அரசிற்கான கோரிக்கையை பல ஆயிரக்கணக்கான மக்களை நாடாளுமன்றின் முன்னால் திரட்டி தமிழிலேயே தெரிவிக்கற ஆக்கள் நாங்கள்(முடியல நிறுத்திவிடுறன்).

உலகத்தமிழ்ப் பேரவையில்(GTF) இருக்கிற அமைப்புக்களில் கனேடிய தமிழ்க்காங்கிரசும் ஒன்று.

முகநூல்களில் இருந்து

1. ஹெட் லைன்ஸ் டுடேயில் நேற்று போட்டு காட்டினார்கள்.

பொய் சொன்ன காந்திய அறிவாளிகளுக்குத் தானே தெரியும், தீவிரவாதம் என்னவென்று? இனப்படுகொலையா? தீவிரவாத ஒழிப்பா? என்று நீங்கள் கிளப்பிய பொய்கள் எல்லாம் இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

இங்கே காமிராவைக் கொண்டு என்ன செய்கிறீர்கள்? அவர்கள் எல்லோரையும் கொள்கிறார்கள் என்று அலறினாலே அந்தத் தாய். என்னடா உங்க நித்யானந்தா காணொளி என்று நிநேச்சீன்களா? உள்ளூர் மயக்க மருந்து கூட இல்லாமல் ஏழு வயது சிறுவனை அறுவை சிகிச்சை செய்யும் நிலையைச் சொன்னார்களே அது என்ன இதயம் இனித்தது கண்கள் பனித்தது வசனமாடா? பெண்களை வான் புணர்ச்சி செய்து காண்பித்தார்களே அது என்ன உங்கள் மானாட மயிலாட குத்தாட்டமாடா? அறுபத்தைந்து முறை மருத்துவமனை மட்டுமே தாக்கப் பட்டதே , அது என்ன உங்க TRP ஹிட்டாடா? அப்புறம் என்னாங்கடா உங்க காந்தியச் சமாதானம்? பொய்கள் சொன்ன இத்தாலிக் காரிக்கும் குருட்டுத் தாயோளிக்கும் அறிவாளிப் புடுங்கிகளுக்கும், மாமாகார ஊடகங்களும் செட்டித் தா...... சிதம்பரமும் என்னடா தண்டனை?

2. நேற்றைய Headlines Today பிரச்சாரத்திற்கு நல்ல ஆதரவு இருந்தது....முதலில் நான் வசிக்கும்(பெங்களூர்- மடிவாளா) பகுதியில் உள்ள உணவகங்களில் உரிமையாளர்களை சந்தித்து அவர்கள் அனுமதியுடன் Headlines Today- Chennal 4 documentary பற்றிய சுவரொட்டியை ஒட்டினேன். ஒரே ஒரு உணவகத்தை தவிர மற்ற எல்லோரும் சுவரொட்டியை உள்ளேயே ஒட்டுவதற்கு அனுமதி அளித்தார்கள். இதன் பின்னர் தானி(Auto) ஓட்டுநர்களை சந்தித்து அவர்களிடம் பிரச்சனையை விளக்கி கூறி தானிகளின் பின்புறம் சுவரொட்டியை ஒட்டினேன். எல்லா ஓட்டுநர்களும் தங்களது முழு ஆதரவையும் நல்கினர். அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

இது போல நண்பர் பத்மநாபன் இந்த செய்தியை கன்னடம், ஆங்கிலத்தில் துண்டறிக்கையாக அடித்து அவர் வசிக்கும் பகுதியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வினியோகம் செய்து வருகின்றார்.

இன்று இங்குள்ள முக்கிய வணிக வளாகம் ஒன்றின் முன்னால் ஆங்கில துண்டறிக்கையை அங்கு வரும் மக்களுக்கு கொடுக்க உள்ளேன்.

.

3. ‎5 lakh SMS sent to watch Headlines Today's telecast of Killing Fields to Mumbai people, along with the message of " A crime that Indian Govt partnered and conspired "

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.