Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கொலைக்களமாக இந்தியாவே காரணம்

Featured Replies

இலங்கை கொலைக்களமாக இந்தியாவே காரணம் – வீரமணி

சிங்கள ராஜபக்சே ஆட்சிக்கு இந்தியா இதுவரை கொடுத்த உதவிகள் ராணுவ உதவிகளில் தொடங்கி பல்வேறு உதவிகள்தான் இவ்வளவு பெரிய கொலைக்களக் காட்சி சிங்கள அரசால் தங்கு தடையின்றி நடப்பதற்கு மறைமுகமாக உதவியதாகவே அமைந்துவிட்டது என்பது மறுக்கப்பட முடியாத உண்மைகளாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுள்ள, 30 கல் தொலைவில் உள்ள அண்டைய நாடான இலங்கையில் தற்போது உள்ள சிங்கள ராஜபக்சே அரசு, பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போரை நடத்துகிறோம் என்றுகூறி, அந்த மண்ணின் பூர்வீக மைந்தர்களான தமிழர்களின் வாழ்வுரிமையையே பறித்து, அவர்களில் பல லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர் சிவிலியன்களைக் கொன்றும், அவர்களை முள் வேலிக்குள் அடைத்தும், அவர்களது நிரந்தரக் குடியிருப்புகளைப் பறித்து, சிங்களக் குடியேற்றத்தை தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு நடத்தியும் வரும் கொடுமைக்கு இன்னமும் ஒரு முற்றுப்புள்ளி அங்கே இல்லை!.

இந்திய அரசின் பொருளாதார உதவிகள், வீடு கட்டும் திட்டம், அரசியல் தீர்வு விரைவில் காண்போம் என்று கொடுத்த வாக்குறுதிக்கு எதிராக, அங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு அடிப்படை வாழ்வாதாரத்திற்குக்கூட வழிவகை செய்யாதது இவையெல்லாம் இன்று உலகத்தார் கண்களை அகலத் திறந்து பார்த்து, இந்த அவலத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நிலையில், ஐ.நா. மாமன்றம் ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக்கிட நடவடிக்கை வேண்டும் என்று அறிக்கை கொடுத்து, அதன்மீது அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கைக்கு செய்யவிருந்த உதவிகளைக்கூட நிறுத்தி வைத்துள்ளனர்!.

இங்கிலாந்து நாட்டின் சேனல்-4 என்ற தொலைக்காட்சியில் இலங்கையில் நடந்த பல லட்சக்கணக்கான அப்பாவி தாய்மார்கள், குழந்தைகள் முதலியவர்கள் உள்பட பலரைக் கொன்று குவித்த காட்சிகள் பல நாட்டுப் நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்வையாளர்களான பன்னாட்டு மக்களை குமுறிக் குமுறிக் ‘கோ’வென்று கண்ணீர் விட்டு அழச் செய்துள்ளது என்ற செய்தி மனிதாபிமானம் இன்னும் உலகத்தில் செத்துப் போய் விடவில்லை என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் அதிபரான திருமதி சந்திரிகா குமாரதுங்கே, ஒரு நிகழ்ச்சியில் நேற்று முன்னாள் பேசுகையில், அந்த தொலைக்காட்சி காட்டிய கொலைக் களக்காட்சி ஈழத் தமிழர்கள் ஈவு இரக்கமின்றிக் கொல்லப்பட்ட கொடூரக்காட்சி குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் தழுதழுத்த குரலில், சிறிது நேரம் பேசாமலே அமைதியாக இருந்த பின்னர் தொடர்ந்த உரையில் அவர், இந்த வீடியோ காட்சியை தனது 28 வயது மகன் பார்த்ததாகவும், தான் சிங்களவன் என்று கூற வெட்கப்படுவதாகவும் விம்மி விம்மி அழுதபடி கூறியதாகத் தெரிவித்துள்ளார்!.

இதே கருத்தை தனது மகளும் வெளியிட்டதாகக் கூறி, இலங்கையில் தமிழர்களின் உரிமையை அவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் அங்கீகரித்து, அவர்களையும் கூட்டாட்சியாக நடத்திட ஒரு புதிய தீர்வு காணப்பட வேண்டும்; விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்று கூறி அத்தோடு பிரச்சனை தீர்ந்தது, சிறுபான்மைத் தமிழர்களை மதிக்காமல், மிதித்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சிங்கள ஹிட்லர் ராஜபக்சே காதுகளில் இது செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடியும்.

இலங்கை அரசின்மீது பொருளாதாரத் தடையை விதிக்க இதுவரை அமெரிக்கா போன்ற நாடுகள் முன்வராவிட்டாலும், அது தரவிருந்த பொருளாதார உதவிகளை நிறுத்தி வைக்க, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தியதை ஏற்றுச் செயல்பட்டிருக்கிறது!.

7 கோடி தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்ல; உலக முழுவதும் உள்ள தமிழர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் உட்பட இந்திய அரசின் தெளிவான, திட்டவட்டமான செயல்பாடுகளில் இனியாவது மனிதாபிமானம் மேலோங்கும் உறுதிப்பாடு வருமா என்று எதிர்பார்க்கின்றனர்!.

சிங்கள ராஜபக்சே ஆட்சிக்கு இந்தியா இதுவரை கொடுத்த உதவிகள் ராணுவ உதவிகளில் தொடங்கி பல்வேறு உதவிகள்தான் இவ்வளவு பெரிய கொலைக்களக்காட்சி சிங்கள அரசால் தங்கு தடையின்றி நடப்பதற்கு மறைமுகமாக உதவியதாகவே அமைந்துவிட்டது என்பது மறுக்கப்பட முடியாத உண்மைகளாகும்.

நடந்தவை எப்படியோ போனாலும் இனி நடப்பவைகளாவது நல்லவைகளாக இந்திய அரசின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை அமைய வேண்டாமா?. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஓடும் மனிதநேயப் பிரவாக வெள்ளம் சிங்கள சந்திரிகாக்களிடம் ஏற்பட்டுள்ள நெஞ்சின் ஈரம், மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களுக்கு அதுவும் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளால் பெற்ற ஆதரவு காரணமாக அரியணையில் அமர்ந்து ஆட்சி நடத்தும் ஓர் ஆட்சிக்கு வர வேண்டாமா? இன்னும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் ஆட்சியாக இருக்கலாமா? நியாயந்தானா?.

ஒவ்வொரு தமிழனின் உணர்வு மட்டும் அல்ல இது. மனிதாபிமானம் பொங்கும் உலக மக்களின் அவர்கள் எந்த இனத்தவராக இருந்தபோதிலும், எந்நாட்டவராக இருந்தபோதிலும் எழுப்பும் கேள்விகள் இவைகள்!.

இதனை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தலைவர் திருமதி சோனியா காந்தியும், பிரதமரும், அவரது காங்கிரஸ் கட்சியும் யோசிக்க தயங்கக்கூடாது!.

நேற்று சோனியா காந்தி அவர்கள் பக்கத்து பங்களாதேஷ் நாட்டிற்குச் சென்று, முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கென அந்நாடு தந்த முதல் விருதினை, வங்கதேசம் உருவாவதற்கு அவர்கள் உதவியதற்கான விருது பெற்று நன்றி கூறி திரும்பியிருக்கிறார்! வங்கதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிவதற்கு இந்தியாவும், அந்நாள் பிரதமரும், மக்களும் உதவியதற்கான காரணங்களைவிட, பல மடங்கு நியாயமான, அவசியமான, அவசரமான காரணங்கள், அரசியல் ரீதியாகவும், இன ரீதியாகவும், மனிதநேய அடிப்படையிலும் தமிழர்களுக்குத் தனி ஈழம் நிரந்தர வாழ்வுரிமையை அவர்கள் நிம்மதியாக அனுபவிக்க ஒரே தீர்வாக அமைவதற்கு ஆயிரமாயிரம் உண்டு.

எனவே இந்திய அரசு, இனியும் இலங்கை அரசுடன் கொஞ்சுதலோ, கெஞ்சுதலோ செய்யாமல், உத்தரவு போட வேண்டும். அவர்கள் சீனாவுடன், பாகிஸ்தானுடன் போய்ச் சேர்ந்து கொள்வார்கள் என்ற பூச்சாண்டிக்கு இணங்கி ‘‘பாம்புக்குத் தலை; மீனுக்கு வால்’’ என்பதுபோல நடந்து கொள்ளக்கூடாது.

அந்நாள் பிரதமர் திருமதி இந்திராகாந்தி விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகளுக்கு இடம் தந்து ஆயுதப் பயிற்சி தந்தார் என்ற தொலைநோக்கிற்கான அரசியல் காரணங்களை ஆராய்ந்தால், இந்திய பாதுகாப்பும் அதன் முக்கிய அம்சம் என்பது புரியும்.

அரசியல் தீர்வு என்ற பெயரில் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களை மீண்டும் முள்வேலிக்குள் வசித்திடும்படிச் செய்யக் கூடாது.

தமிழ்நாட்டில், ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகள் என்ற பேதங்கள் இப்பிரச்சினையில் இல்லை என்ற நிலைப்பாடு உருவாக, இங்குள்ள நமது அரசியல் கட்சிகள் பொது எதிரி யார் என்று மட்டுமே சிந்தித்து, தமிழர்கள் வாழ்வுரிமையை மையப்படுத்திப் பாடுபட முன்வர வேண்டுமே தவிர குற்றப் பத்திரிகைகளைத் தயாரிக்கும் வீண் வேலையில் ஈடுபட்டு, காரியத்திலிருந்து நழுவி விடக் கூடாது என்பதே நமது அன்பான வேண்டுகோள் அனைவருக்கும்!.

தனி ஈழத்தின் அடிநாதம் போகாது என்பதைத்தான் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழர்கள் வெளிப்படுத்திய விவேக முடிவுகளும், வெற்றிகளும் என்ற சுவர் எழுத்துகளையும் பார்த்துப் பாடம் அனைவரும் படிக்க வேண்டும். இந்திய அரசு ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பது நமது வேண்டுகோள் என்று கூறியுள்ளார் வீரமணி.

http://www.alaikal.com/news/?p=77176

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கொலைக்களமாக இந்தியாவே காரணம் – வீரமணி

சிங்கள ராஜபக்சே ஆட்சிக்கு இந்தியா இதுவரை கொடுத்த உதவிகள் ராணுவ உதவிகளில் தொடங்கி பல்வேறு உதவிகள்தான் இவ்வளவு பெரிய கொலைக்களக் காட்சி சிங்கள அரசால் தங்கு தடையின்றி நடப்பதற்கு மறைமுகமாக உதவியதாகவே அமைந்துவிட்டது என்பது மறுக்கப்பட முடியாத உண்மைகளாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

......

சிங்கள ராஜபக்சே ஆட்சிக்கு இந்தியா இதுவரை கொடுத்த உதவிகள் ராணுவ உதவிகளில் தொடங்கி பல்வேறு உதவிகள்தான் இவ்வளவு பெரிய கொலைக்களக்காட்சி சிங்கள அரசால் தங்கு தடையின்றி நடப்பதற்கு மறைமுகமாக உதவியதாகவே அமைந்துவிட்டது என்பது மறுக்கப்பட முடியாத உண்மைகளாகும்.

நடந்தவை எப்படியோ போனாலும் இனி நடப்பவைகளாவது நல்லவைகளாக இந்திய அரசின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை அமைய வேண்டாமா?. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஓடும் மனிதநேயப் பிரவாக வெள்ளம் சிங்கள சந்திரிகாக்களிடம் ஏற்பட்டுள்ள நெஞ்சின் ஈரம், மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களுக்கு அதுவும் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளால் பெற்ற ஆதரவு காரணமாக அரியணையில் அமர்ந்து ஆட்சி நடத்தும் ஓர் ஆட்சிக்கு வர வேண்டாமா? இன்னும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் ஆட்சியாக இருக்கலாமா? நியாயந்தானா?.

ஒவ்வொரு தமிழனின் உணர்வு மட்டும் அல்ல இது. மனிதாபிமானம் பொங்கும் உலக மக்களின் அவர்கள் எந்த இனத்தவராக இருந்தபோதிலும், எந்நாட்டவராக இருந்தபோதிலும் எழுப்பும் கேள்விகள் இவைகள்!. :(

......

தவறான இடத்தை நோக்கிய கேள்விகள் இவை.

இந்த உணர்வும், ஆதங்கமும் கடந்த ஐந்து வருடங்களாக அரியணையில் ஒட்டி தொங்கிகொண்டிருந்த இதயக் குருடரிடம் அப்போது தைரியமாக மஞ்சள் துண்டை உலுக்கி கேட்டிருக்க வேண்டும் இந்த கோழைமணி...

காலம் கடந்த ஞானோதயத்தால் நடிப்பது, 'பிழைப்புக்காக' என்பது தமிழர் அனைவருக்கும் தெரிந்ததுதான்..

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
<_< சரியாகச் சொன்னீர்கள் ராஜவன்னியன். பணத்துக்காக கருநாநிதி என்கிற பதவி வெறி பிடித்த மனிதனை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த (இனப்படுகொலைக்குத் துணைபோகிறார் என்று தெரிந்துகொண்டும் கூட) வீரமணி போன்றவர்கள் இப்போது சுருதி மாறிப் பாடுவதன் நோக்கம் ஒன்றுதான். இவருக்கும், திருமா, சுபவீரபாண்டியன், ராம்தாஸ் போன்றோருக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

<_< சரியாகச் சொன்னீர்கள் ராஜவன்னியன். பணத்துக்காக கருநாநிதி என்கிற பதவி வெறி பிடித்த மனிதனை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த (இனப்படுகொலைக்குத் துணைபோகிறார் என்று தெரிந்துகொண்டும் கூட) வீரமணி போன்றவர்கள் இப்போது சுருதி மாறிப் பாடுவதன் நோக்கம் ஒன்றுதான். இவருக்கும், திருமா, சுபவீரபாண்டியன், ராம்தாஸ் போன்றோருக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

பெரியார் கொள்கை என்பது இப்படியானவர்களின் வயிற்றைக் வளர்க்க தான் உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்வதெல்லாம் உண்மை, கட்சிகளை உடைப்பேன்

ஆட்சியிலுள்ளவர்களுக்கு சாதகமாக அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடும் சுயமரியாதைக்காரர் சின்னச் சின்ன விஷயங்களை பெரிதாகவும், பெரிய விஷயங்க¬ ளக்கூட மிகவும் சிறிதாகவும் வெளிக்காட்டும் அவரது பேச்சு. தேர்தலில் நேரடியாக அவருக்குத் தொடர்பில்லை என்றாலும் தேர்தலைப் பற்றிய வியாக்கியானங்களுக்கு அவரிடம் எப்போதுமே பஞ்சமில்லை. கறுப்பு வெள்ளை காலத்திலிருந்து சினிமாக்கள் விடுபட்டு பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அவர் இன்றும் கறுப்பு வெள்ளைதான். தேர்தலுக்கு முன்பு வரை ஆளுங்கட்சிக்கு சாதகமாகப் பேசி வந்த அவர், ஆட்சி மாற்றத்திற்குப் பின் கொஞ்ச நாட்கள் மவுனமாக இருக்கிறார். இதோ அவரின் மனசாட் சியின் வாக்குமூலம்:

இன்றைய முதல்வருக்கு நான் கடந்த ஆட்சியில்தான் எதிரியே தவிர இப்போது இல்லை. அவருக்கும் எனக்கும் ஒத்துப் போகின்ற ஏதாவது ஒரு நிகழ்வுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன். அப்படி ஏதாவது ஒன்று புலப்பட்டுவிட்டால், அவருக்கு ஏதாவது ஒரு புதுப்பட்டத்தைக் கொடுத்து ஆளுங்கட்சியில் ஐக்கியமாகிவிடுவேன். எனது காத்திருப்பில் ஏற்கெனவே இரண்டு மாதங்கள் கழிந்துவிட்டது கொஞ்சம் வருத்தம் கொடுத்தாலும் இன்னும் ஓரிரு மாதத்தில் அந்த சூழல் அமைந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இந்த காத்திருக்கும் நேரத்தில் என் வாழ்க்கையின் கடந்த காலங்களை அசைபோடுவது எனது வழக்கம்தான். இப்போதும் அந்தக் காட்சிகள் எல்லாம் என் கண் முன்னே வந்து போகிறது.

கடற்கரையோரம் உள்ள மாவட்டத்தில் பிறந்தேன். அப்பா டெய்லராக வேலை செய்து வந்தார். படிக்க வைக்கவே சிரமமான காலம் அது. சுயமரியாதை கருத்துக்களால், பேச்சால் இந்தியாவையே தன் பக்கம் திருப்பி வைத்திருந்தார் தாடிக்கார கிழவர். சூத்திரர்களின் பிள்ளைகள் படிக்க சென்னையில் அவர் ஒரு பாடசாலை நடத்தி வர அதில் கொண்டு வந்து விடப்பட்டேன் நான். பள்ளிப் படிப்பிலிருந்தே அவரின் கருத்துக்களோடு இணைந்து வளர்ந்த நான் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். படிப்புச் செலவுகள் அனைத்தையுமே அவரின் சீடர்கள் யாராவது கவனித்துக் கொள்வார்கள். எனவே படிப்புக்கு பிரச்னையில்லாமல் நான் தொடர்ந்து கொண்டிருக்க, அவர் போடும் எல்லா பொதுக் கூட்டத்திற்கும் ஆஜராகி அவர் பேசுவதை குறிப்பெடுத்துக் கொள்வதுதான் என் வேலை.

நான் முதுகலைப் படிப்பிற்கு கட்டணம் செலுத்த பணம் இல்லை. யாரிடம் கேட்டும் கிடைக்காத சூழநிலை. அப்போது முதியவரின் கொள்கையில் தீவிரமாக இருந்து பின் னாளில் அமைச்சரான ராகமானவரிடம் விவரங்களைச் சொன்னேன். அவரிடமும் அப்போதைக்கு பணம் இல்லாததால் தனது மனைவியின் தங்கத்தாலியை எடுத்து என் னிடம் கொடுத்து அதைப் பணமாக்கி பீஸ் கட்டச் சொன்னார். அதை வாங்கிக் கொண்டு வெளியில் வரும்போதே அந்த நன்றியை அவர் வீட்டு வாசலிலேயே விட்டுவி ட்டேன்.

இப்போது கூட கட்சிக்காரர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ‘பீஸ்’ கட்ட வேண்டும் என்று கேட்டால் ஒரு பைசாவும் கொடுக்கமாட்டேன். ‘தாலியை வித்து படிக்க வை’ன்னு நாக்கு கூசாமல் கூறி அனுப்புவேன்.

முதியவரின் திருமணத்தின்போது ஏற்பட்ட குழப்பத்தில் அவரின் சீடர்களில் ஒரு பகுதி பிரிந்து போக நானும் சிலரும் அவரின் பக்கமாக நின்று கொண்டோம். அவருக்கு அடுத்தபடியாக அப்போது கொள்கை முழக்க நாடகங்கள் நடத்தி வந்தார் ஒரு நடிகர்.

முதியவர் தனது வீட்டிலிருந்து பணம் வாங்கி சொந்தப் பணத்தில் அந்தக் காலத்திலேயே 116 ரூபாய்க்கு பெரிய இடத்தை வாங்கிப் போட்டிருந்தார். இன்று அந்த இடத்தின் மதிப்பு பல கோடிகள் ஆகும்.

பெரியவராலேயே மதித்துப் பாராட்டப்பட்ட அந்த நடிகர் தனது சொந்தப் பணத்தில் அந்த இடத்தில் ஒரு திடலைக் கட்டிக் கொடுத்தார். பின்னர் நான் திடலிலிருந்த அந்த நடிகரின் பெயரை நீக்கிவிட்டேன். அதேபோல் அந்த நடிகருக்கு சிலை வைக்கப் போவதாகவும் பல்லாண்டுகளாய் வசூல் செய்து ஏமாற்றி வருகிறேன்.

அதே போல் பெரியவருக்கு உண்மையான வாரிசுகளாக இருந்து பணியாற்றிய பலரும் என்னிடம் கணக்குக் கேட்டதால் அவர்களை இயக்கத்தைவிட்டே வெளியே அனுப்பி இருக்கிறேன். இப்படி பல பேரின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டு நான் அங்கு ஒட்டிக் கொண்டேன். வெளியே போனவர்கள் எல்லாம் எனக்கு எதிராக கடைவிரித்துவிட்டார்கள். என்ன கொடுமை இது.

சொத்தை அபகரிக்க நான் வேந்தராக வலம் வர நான் செய்த தகிடுதத்தங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அம்மையை கையில் போட்டுக் கொண்டு ஒரு வழியாக எல்லா எதிரிகளையும் வெளியேற்றிவிட்டேன்.

நான் எழுதிய புத்தகங்கள் சிலவகை இருந்தாலும், என்னை விமர்சனம் செய்து எழுதப்பட்டதுதான் அதிகம். தேசிய எழுச்சிக்கான சிந்தனைவாதியான முதியவரின் கருத் துக்களை என்னுடையதாக்க நினைத்தேன். எதிரே கடை விரித்தவர்கள், கோர்ட்டுக்கு போய், தடுத்துவிட்டனர்.

எனது துணையின் சகோதரி மரணத்தில் அப்போது பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. அதில் எனது பொது வாழ்க்கைக்கே பெரும் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை. அந்த விவகாரத்தில் என் அந்தரங்கங்களும் மேடைகளில் ஆரவாரமாகப் பேசப்பட்டது. ஆனால் அந்த சிக்கலிலிருந்து கருணையுடன் என்னைக் காப்பாற்றினார் அந்தத் தலைவர்.

நான் முதியவரின் வளர்ப்பு என்பதால் தனி மனித ஒழுக்கத்தில் அவ்வளவாக நான் தவறியது இல்லை. இருந்தாலும் இயற்கையின் குணங்கள் அவ்வப்போது என்னிலி ருந்து வெளிப்படுவதும் உண்டுதான்.

கருணையான தலைவரின் பெண் வாரிசை என்னிடம் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனார். அந்த வாரிசை உலக அறிவுக்குள் வழி நடத்திய பங்கு எனக்கும் கொஞ் சம் உண்டு. என்னோட மிகுந்த பாசத்தோடு நடந்து கொண்ட அந்த வாரிசு இப்போது ஜெயிலில் அடைக்கப்பட்டிருப்பதால் அதை நேரில் சென்று பார்த்து கண் கலங்கித் திரும்பினேன்.

அதே நேரத்தில் தொலைக்காட்சி விவகாரம் ஒன்றில் இன்றைய வி.வி.ஐ.பி. அடைக்கப்பட்டிருந்த போதும் அவரை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறேன். நான் அவர்களுக்கு சமூக நீதியை காத்ததாக கொடுத்த பட்டம் அவர்களால் அப்போது எல்லா இடங்களிலும் எடுத்துரைக்கப்பட்டது. அதேபோல் ராஜ பதவியிலிருந்து விலகியவர் சென்னை வந்தபோது அவரின் சமுதாயத்தின் பெயரைக் கூறி அவருக்கு வரவேற்பு கொடுத்தேன். தேவைப்படும் போதெல்லாம் ஜாதி அஸ்திரத்தை எடுக்க நான் தயங்கியது இல்லை.

அதே நேரத்தில் பால விவகாரத்தில் கருணைத் தலைவர் அடைக்கப்பட்டபோது ‘போலீஸ் அழைத்தால் போக வேண்டியதுதானே?’ என்று நான் தொலைக்காட்சியில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. மண்டல் குழு பரிந்துரைக்காக பெரும் போராட்டம் நடத்தியது, 69 சதவித இட ஒதுக்கீட்டில் தன்னையும் இணைத்துக்கொண்டது என சில பொது விஷயங்களிலும் எனக்குப் பங்கிருக்கிறது.

ஆரம்ப காலத்தில் பிய்ந்து போன சட்டையுடன் நான் நடமாடிக் கொண்டிருப்பேன். ஆனால் இப்போதோ 30 லட்ச ரூபாய் காரில் பவனி வருகிறேன். மகன், மகள் என அமெரிக்காவில் செட்டில்ட். ஒரு மகனுக்கு கட்சியில் பவர் எழுதிக் கொடுத்துவிட்டேன். கூடிய விரைவில் கிரயம் செய்துகொடுக்கவும் முடிவு செய்திருக்கிறேன்.

பெரியவரால் உருவாக்கப்பட்டது என்பதைத் தவிர நான் நடத்தும் அரசியல் கட்சிக்கு குறிப்பிடும்படியாக எதுவுமில்லை. ஆனால் இன்று பெரியவரின் பெயர் சொல்லி போராடி வரும் மக்களை எல்லாம் கிண்டலடிப்பதும், கேலி செய்வதும்தான் என் பொழுது போக்கு. அதுமட்டுமின்றி அரசியல் கட்சிகளை உடைப்பதில் ஒன்றுக்கொன்று சிண்டு முடிந்து விடுவதிலும் எனக்கு நிகரானவர்கள் இல்லை என்பதே என் கருத்து.

முன்னேற்ற கட்சியிலிருந்து மறுமலர்ச்சிக்காரர் வெளியேறியபோது அவருடன் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் பிரிந்து சென்றனர். அப்போது முன்னேற்ற கட்சிக்காரர் மிகவும் நொந்து போய்விட்டார். அப்போது அவர் பொது வாழ்விலிருந்து விலகி விடுவார் என்று பேசப்பட்டது. இதனால் வருத்தப்பட்ட சிலர் இருவரையும் நேரில் சந்தித் துப் பேச வைத்தால் பிரச்னை முடிந்து சுமுக நிலை திரும்பும் என்று முடிவெடுத்து அதற்கான வேலைகளில் இறங்கினார். அப்போது நான் என்னால் முடிந்த அளவுக்கு உள்ளடி வேலைகளைச் செய்து இருவரையும் சந்திக்க விடாமல் பார்த்துக் கொண்டேன். அதுபோலவே மக்கள் கட்சி விவகாரத்திலும் பல்வேறு குளறுபடிகளைச் செய்து அதிலிருந்து சில தலைவர்களை பிரிந்து செல்ல வைத்து மகிழ்ந்து போனேன்.

எந்த நேரமும் ஒரே நிறத்தில் சட்டை அணிந்து கொண்டிருப்பது எனக்கு அலுத்துப்போய்விட்டது. இதனால் எனது மனநிலையும் ஒரு மாதிரி அழுத்தமாகிவிட்டது. எனவே, என்னை ஒரு மனநிலை மருத்துவரிடம் என் துணை அழைத்துக்கொண்டு போக, வீட்டில் தனியாக இருக்கும்போது வெள்ளைச் சட்டையை அணிந்து கொள்ளும்படி அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர். நானும் மருத்துவரீதியாக அதையே நடைமுறைப்படுத்தி வருகிறேன்.

முதன் முதலில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் சகாயமாக ஒரு காரை வாங்கி எனக்கு அன்பளிப்பாக அளித்தார். அதன்பிறகு வழக்கம் போல் அவரையும் கருத்து வேற்றுமை பாராட்டி வெளியேற்றிவிட்டேன்.

அதேபோல் அண்ணனின் மரணத்திற்குப் பிறகு அவரின் உடன்பிறப்பையும் அங்கிருந்து அடித்து விரட்டி விட்டேன். அதேபோல் பெரியவரின் கணக்கு வழக்குகளை கவனித்து வந்த நீதியரசர் ஒருவரின் மரணத்திற்கு கட்சிக்காரர்கள் யாரும் போகக்கூடாது என்று கண்டிப்புடன் கூறிவிட்டதால் வெறும் ஆறு பேர் மட்டுமே அந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். நான் ஒருவரை பழி வாங்க வேண்டுமென நினைத்துவிட்டால் இறந்தாலும் அவர்களை நான் விடமாட்டேன் என்பதற்கு இதுவே நல்ல சான்று.

ஆனாலும் எனது அரசியல் பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த அம்மாவை சந்திக்கத்தான் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன்.’’

- குமுதம் ரிப்போட்டர்

திராவிடன் என்று சொல்லியே தமிழை ,தமிழரை உருப்படவிடாமல் பண்ணினது இந்த வீரமணி கூட்டம்.

ஈழத்தமிழர் விடயத்திலும் சொந்த அரசியல் நடாத்துபவர்.

போர்க்குற்றத்தில் முதல் பொறுப்பு கருநாநிதிக்கே. தனது இன மக்களின் அழிவை கண்டு அஞ்சாமல் ஆட்சியை ஆட்டம் காணாமல் நடாத்திய கொடுங்கோலன்.

சாமரம் வீசிய கோழைமணி இப்ப இப்படி கதைப்பது சிங்களவன் சொன்ன மாதிரி கோமாளீகள் தான்

திராவிடன் என்று சொல்லியே தமிழை ,தமிழரை உருப்படவிடாமல் பண்ணினது இந்த வீரமணி கூட்டம்.

ஈழத்தமிழர் விடயத்திலும் சொந்த அரசியல் நடாத்துபவர்.

போர்க்குற்றத்தில் முதல் பொறுப்பு கருநாநிதிக்கே. தனது இன மக்களின் அழிவை கண்டு அஞ்சாமல் ஆட்சியை ஆட்டம் காணாமல் நடாத்திய கொடுங்கோலன்.

"திராவிடன் என்று சொல்லியே தமிழை ,தமிழரை உருப்படவிடாமல் பண்ணினது இந்த வீரமணி கூட்டம்."

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் முதுகெலும்பு நிமிரும்போது, அருச்சுனனின் காண்டீபம் கூட உடையும்!

இதை ஆளும் இந்திய வர்க்கம் புரிந்து கொண்டதால் தான், தமிழனுக்கு இவ்வளவு தொல்லைகள்!

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் இமைய மலையில் கருவாடு சுட்ட புகழ் பற்றி நான் இங்கு கதைக்கவில்லை.

தமிழ் மொழி போல், வளர்ந்த,எதற்கும் வளையக் கூடிய ஒரு மொழியை யாராவது,எனக்குக் காட்டுங்கள்!

நான் எனது கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கின்றேன்!

ஒரு ஜெயலலிதா( அவர் தமிழர் கூட அல்ல) நிமிர்ந்ததற்கே, மத்தி ஆடிப்போய் விட்டது எனில்,உலகத்தமிழர் நிமிரும் போது, இந்தியா தாங்காது என்பது மட்டும், உண்மை!

எங்கள் உண்மையான எதிரிகள் நாங்களே!!!

ஈழத்தமிழர் படுகொலைகளில் முக்கிய பாத்திரம் வகித்த சந்திரகா குமாரதுங்க என்ற சிங்களப் பயங்கரவாதியின் கூற்றுக்களை சமயோசிதமாக பயன்படுத்தும் அதேவேளை, சந்திரகா குமாரதுங்க என்ற சிங்களப் பயங்கரவாதிக்கு வெள்ளைப் பூச்சு அடிக்க இம்மியேனும் இடம் கொடுத்துவிடாது தமிழரும், நீதிக்காக குரல் கொடுப்பவர்களும் நடந்துகொள்ளவேண்டும்.

தமிழினப் படுகொலையில் தன்னையும் பல மடங்குகளால் மீறிய மகிந்த ராஜபக்ச கும்பலின் வெறியாட்டத்தின் பின், இலங்கையில் சிங்கள வெறியர்கள் மத்தியில் தனக்கு எந்த இடமும் இனியில்லை என்றுணர்ந்த சந்திரகா குமாரதுங்க என்ற சிங்களப் பயங்கரவாதி தனது போர்க்குற்றங்களை மூடி மறைத்து சர்வதேசம் மத்தியில் வெறும் வார்த்தை ஜாலங்களால் நற்பெயரை பெற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சியே இது.

சந்திரகா குமாரதுங்க என்ற சிங்களப் பயங்கரவாதி ஏனைய பயங்கரவாதிகளை விடக் கொஞ்சம் பரவாயில்லை என்ற தோற்றத்தால் உணர்ச்சி வசப்பட்டு தமிழர் இந்தக் கொலைகாரக் கும்பலுக்கு வெள்ளைப் பூச்சு அடிக்க இம்மியேனும் இடம் கொடுத்து விடக்கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.