Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன்:ரொட்னாம் (Tottenham) பகுதியில் கலவரம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள பல பெரிய எலெக்ரோனிக் கடைகள் சூறையாடப்பட்டன. இன்னமும் தொடர்கின்றது என்றுதான் நினைக்கின்றேன். சற்று முன்னர் வெளியே சென்று பார்த்தபோது தலையையும் முகத்தையும் நன்றாக மூடிய ஒருவன் பெரிய LCD ரீவி ஒன்றைத் தூக்கிக்கொண்டு வீதியின் முகப்பில் வந்துகொண்டிருந்தான். அப்போது இரண்டு கார்கள் வேகமாக வந்து கிறீச்சிட்டு அவனருகில் நின்றன. பின்னால் வந்த காரிலிருந்து இருவர் சடுதியாக வெளியே வர ரீவியைக் காவிவந்தவன் அதைத் தூக்கிக்கொண்டு ஓட முயற்சித்தான். எனினும் மற்றவர்கள் அருகில்வர ரீவியை அருகில் இருந்த வீட்டுக்குள் "தொப்"பெனப் போட்டுவிட்டு ஓடிவிட்டான். மற்றையவர்கள் வந்து அந்தக் களவெடுத்த ரீவியை (விழுந்ததில் உடைந்திருக்குமோ தெரியாது) எடுத்து தமது காரில் கஷ்டப்பட்டுத் தள்ளி எடுத்துச் சென்றுவிட்டனர். இன்னும் என்னென்ன இரவுக்குள் நடக்குமோ தெரியாது!

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் சொல்லுறது முதலாவது சுவிஸ் அடுத்தது ஜெர்மனி பிறகு பிரான்சிலை இருக்கவேண்டும் எண்டு .24 மணித்தியாலத்திலை கட்டுப்பாட்டிலை கொண்டந்துடுவாங்கள். லண்டன் குப்பம் மாதிரி வந்திட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது.. லண்டனா உகாண்டாவா? :o:unsure:

என்ன இது.. லண்டனா உகாண்டாவா? :o:unsure:

நான் நினைத்தேன் நீங்கள்தான் லண்டனில நிற்கிறீர்களோ என்று? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன்.. ஐரோப்பிய ஸ்தரமற்ற பொருண்மிய நிலை மற்றும் அமெரிக்க பலவீன பொருண்மிய நிலை இவை தொடர்பான சமீபத்திய பிரிட்டனின் கையறு நிலை.. என்று பிரிட்டன் பல நெருக்கடிகளை சந்தித்திருக்கின்ற இவ்வேளையில் அவற்றிலிருந்தான கவனத்தை திருப்ப அரசியல்சக்திகளே இதனை விடுப்புப் பார்த்துக் கொண்டும் இருக்கலாம்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலானவை அதிகம் குடியேற்றக்காரர்கள் வசிக்கும் பகுதிகள். நிற அடிப்படையில் தடுத்து நிறுத்தி சோதிப்பது தொடர்பில் முன்னரும் சர்ச்சைகள் நிலவி வந்த போதும்.. இப்போது மட்டும் இதனை வன்முறையாக்கி பெருக விட என்ன தேவை வந்தது..??! இதன் பின்னால் வேறு காரணங்கள் இருக்க வேண்டும். :(:o:unsure:

இரண்டு மணித்தியாலங்களாக கொழுந்து விட்டு எரிந்த குரோய்டனை கட்டுப் பாட்டுக்குக் கொண்டு வந்தாலும், இன்னும் பதட்ட நிலையிலேயே உள்ளதாக பிபிசி அறிவித்தது.

இதனிடையே Clapham Common பகுதியில் நூறுக்கும் மேற்பட்டவார்கள் சேர்ந்து அங்குள்ள கடைகளை உடைத்து பொருட்களை களவெடுத்த போது வெறும் ஐந்து போலீசார் மட்டுமே அங்கே கடமையில் நின்றதாக பிபிசி அறிவிப்பாளர் தெரிவித்திருந்தார். இதனால் Clapham Common Station மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Ilford Barking பகுதிகளிலும் சேதம் என்று நண்பர்கள் குறிப்பிட்டார்கள்.

போலிஸ் ஏன் கமுக்கமாக இருக்கு? :unsure::mellow:

பல போலிஸ் சேர்ந்து போலிஸ் ஸ்டேஷனில் பதினாறு வயது பெண்ணை அடித்ததால் வந்த வினையா? பத்துவயது சிறுவனை நிறுத்தி சோதனை செய்ததால் வந்த வினையா? அல்லது களவுக்கு என்று கூடி செய்கிறார்களா?

ஆமியை வரவழைத்தால் பதட்டம் அடங்கும் என்று தான் வேலையிடத்திலும் பேசிக் கொண்டார்கள். ஆனால் ஆமி ஆப்பானிஸ்தானில இருந்து வர வேணுமே? :rolleyes:

Romford பக்கம் அமைதியாக உள்ளது? :rolleyes::unsure:

தீயணைப்பு, காவல் துறை வாகனங்களின் சைரன் ஓசைகள் அடிக்கடி கேட்கின்றன.

மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்டுள்ள அவசர உதவிப் பிரிவினர் வன்முறைகள் பரந்துபட்ட அளவில் நிகழும் பொழுது, அவற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது கடினமானது.

தீயணைப்பு, காவல் துறை வாகனங்களின் சைரன் ஓசைகள் அடிக்கடி கேட்கின்றன.

மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்டுள்ள அவசர உதவிப் பிரிவினர் வன்முறைகள் பரந்துபட்ட அளவில் நிகழும் பொழுது, அவற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது கடினமானது.

Essex பகுதி Sussex பகுதிப் பொலிஸ் லண்டன் பொலிசுக்கு உதவுவதாக கூறப்படுகிறது.

Essex பகுதி Sussex பகுதிப் பொலிஸ் லண்டன் பொலிசுக்கு உதவுவதாக கூறப்படுகிறது.

Befordshire உம் Essex உம் தலா 50 போலீசாரை அனுப்புகிறார்களாம். :huh:

போகிறபோக்கில் ஒரு நேர்த்திக்கடன் வைக்கிறது பிரயோசனமாயிருக்கும் போலுள்ளது.

Befordshire உம் Essex உம் தலா 50 போலீசாரை அனுப்புகிறார்களாம். :huh:

போகிறபோக்கில் ஒரு நேர்த்திக்கடன் வைக்கிறது பிரயோசனமாயிருக்கும் போலுள்ளது.

:D

ஈலிங் வர்த்தக பகுதியும் இலக்காகியுள்ளது!

கடைகளுக்கு மேலே குடி இருப்பவர்களின் நிலைமை தான் மிகவும் கவலைக்குரியது....

இங்கும் பொலிஸ் சைரன் ஆரம்பித்து விட்டது :blink:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் Tottenham குறைவாகவே வாழ்கிறார்கள்.

இதனை அண்டியுள்ள Woodgreen , Edmondon , Walthamsow போன்ற பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள்.

ஆனால் தமிழர்கள் இங்குள்ள பெற்றோல் நிலையத்தில் வேலை செய்திருக்கலாம். எட்மண்டன் தான் ரொட்னத்துக்கு மிக அருகில் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இலன்டன் ஈலிங் புறோட்வே மூடப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.