Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்னை சோனியாவுக்கு வன்னி உறவுகளின் ஆறுதல் கடிதம்

Featured Replies

அன்னை சோனியாவுக்கு வன்னி உறவுகளின் ஆறுதல் கடிதம்

அன்பின் அன்னை சோனியாவுக்கு வணக்கம். இந்திரா காந்தியை அன்னை என்றுதான் அழைப்போம். அதன்பால் இந்திராவின் மருமகள் என்ற வகையில் உங்களையும் அன்னை என்று உரிமையோடு அழைத்து இக்கடிதத்தை வரைகின்றோம்.

நீங்கள் நோய்வாய்ப்பட்டு சத்திரசிகிச்சை செய்துள்ளதாக அறிந்து அதிர்ந்துபோனோம்.

எதிர்பார்க்க முடியாத செய்தி. அன்னை இந்திரா காந்திக்கு நல்ல மருமகள் என்ற பெருமை உங்களுக்கு உண்டு. அதேநேரம் அன்னை இந்திராவின் மரணம், தொடர்ந்து உங்கள் கணவர் ராஜீவ் காந்தியின் இழப்பு என எல்லாமும் உங்கள் வாழ்க்கையில் கடும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தன.

இருந்தும் பாரதத்தின் பண்பாட்டு எல்லைகளுக்குள் நின்றுகொண்டு உங்கள் பிள்ளைகளை நேருவின், இந்திரா காந்தியின், ராஜீவ் காந்தியின் வாரிசுகளாக உருவாக்கி அவர்களை அரசியல் களத்திலும் இறக்கிவிட்ட பெருமை உங்களையே சாரும்.

சுருங்கக்கூறின் நேரு குடும்பத்தின் அரசியல் பாரம்பரியம் உடையாமல், காங்கிரஸ் கட்சியையும் கட்டுக்குலையாமல் பாதுகாத்து பாரதத்தின் அரசியல் தலைமையை வழிநடத்தும் பெரும்பொறுப்பும் உங்களுடையதாக இருப்பது உங்கள் ஆளுமைக்கான சான்றுகள்.

உங்களிலும் பார்க்க உங்கள் பிள்ளைகள் ராகுல், பிரியங்கா மீது அளவுகடந்த பாசம் எங்களுக்கு உண்டு. சகோதரி பிரியங்கா, நளினியை சிறையில் சென்று பார்த்தபோது கண்கலங்கினோம். ராகுல் காந்தி தமிழகத்தில் வைத்து ஈழத்தமிழர்களின் விடயத்தில் நான் தனிக்கவனம் எடுப்பேன் என்று கூறியபோது அழுதோம்.

ஏன் தெரியுமா? இந்தியாவை நம்பி எல்லாவற்றையும் இழந்த பின்பும் இந்தியாவை நம்புகின்றோமே. அதற்கான அர்த்தம் புரியாமல் இருப்பதன் பொருளாகத்தான் எங்கள் அழுகை இருந்தது. எங்கள் வாழ்வும் உங்கள் வருத்தமும் ஏதோவொரு வகையில் வேதனைக்குரியவைதான்.

கல்வீட்டில் வாழ்ந்தோம். அவித்த நெல் பரப்பி, பழுத்த மிளகாய் பரப்பி, பசு மாட்டுப் பண்ணை வைத்து, உழவு இயந்திரங்களில் ஏற்றிய கெளப்பி மூடையில் களைப்பாறி, பாலும் தேனும் பருகி வாழ்ந்த எங்கள் வாழ்வு எல்லாம் அழிந்து இப்போது தறப்பாள் குடிசையில், ஒருவேளை உணவுக்கு கையேந்தி நிற்கும் பரிதாபத்தில் வாழ்கின்றோம்.

பரவாயில்லை. எங்கள் இழப்புகளுக்கு இந்தியாவும் மூலகாரணம் என்று சொல்கிறார்கள். அதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களைப் பொறுத்தவரை நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.

நீங்கள் குணமடைந்து வீடு திரும்பிய பின், முடிந்தால் எங்கள் பிரச்சினை பற்றியும் ஒரு கணம் சிந்தியுங்கள். இறைவன் துணை புரிவான்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=21265

  • கருத்துக்கள உறவுகள்

:(

இன்று அவர்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு வேண்டியது ஒரு தீர்வு.

எமக்கு வேண்டியது ஏவறை விட ஒரு தமிழீழம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அவர்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு வேண்டியது ஒரு தீர்வு.

எமக்கு வேண்டியது ஏவறை விட ஒரு தமிழீழம்.

ஓமண்ண.. அவைக்கு ஒரு தீர்வு தான் வேணும். என்ன தீர்வைக் கொடுக்கச் சொல்லலாம்.. நாலு அரிசி மூட்டை...?! சோனியா நியோர்க்கால வந்த உடன அதைச் செய்துக்குவா.. நீங்க அவாக்காண்டி... உள்ள கோயில்களில காவடி தூக்குங்கோ.. வன்னி மக்கள் என்ற பெயரில அறிக்கை விடுங்கோ..!

அதுசரி.. நீங்கள் கனடாவில வந்து மனிசி பிள்ளை குட்டி என்று செற்றிலாக.. தமிழீழம் வேணும்.. ஆயுதப் போராட்டம் வேணும்.. அதெல்லாம் கன கச்சிதமா முடிஞ்சிட்டு என்றால்.. தமிழீழம் ஏவறை.. ஆயுதப் போராட்டம் புலிகளின் குழந்தைப் பிள்ளை விளையாட்டு..!

என்னே ஒரு அரசியல் இராஜதந்திரம் பாருங்க இது..! இது தான் தமிழ் மக்களுக்கு ரெம்ப அவசியமானது. இதைத் தான் அவையில பலர் செய்து கொண்டும் இருக்கினம் என்றதில நீங்கள் சொல்லுறது நியாயம் தாங்கோ. :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

samosa.jpg

அவ சமோசா சாப்பிட்டு துடைக்க நீங்க கடிதம் எழுதாதிங்கோ.. மண்டை கருணா.. இப்ப எல்லாம் ஒய்விலதான இருக்கார் அவர் பாத்துப்பார்.. :)

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை சோனியாவுக்கு வன்னி உறவுகளின் ஆறுதல் கடிதம்

அன்பின் அன்னை சோனியாவுக்கு வணக்கம். இந்திரா காந்தியை அன்னை என்றுதான் அழைப்போம். அதன்பால் இந்திராவின் மருமகள் என்ற வகையில் உங்களையும் அன்னை என்று உரிமையோடு அழைத்து இக்கடிதத்தை வரைகின்றோம்.

நீங்கள் நோய்வாய்ப்பட்டு சத்திரசிகிச்சை செய்துள்ளதாக அறிந்து அதிர்ந்துபோனோம்.

எதிர்பார்க்க முடியாத செய்தி. அன்னை இந்திரா காந்திக்கு நல்ல மருமகள் என்ற பெருமை உங்களுக்கு உண்டு. அதேநேரம் அன்னை இந்திராவின் மரணம், தொடர்ந்து உங்கள் கணவர் ராஜீவ் காந்தியின் இழப்பு என எல்லாமும் உங்கள் வாழ்க்கையில் கடும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தன.

இருந்தும் பாரதத்தின் பண்பாட்டு எல்லைகளுக்குள் நின்றுகொண்டு உங்கள் பிள்ளைகளை நேருவின், இந்திரா காந்தியின், ராஜீவ் காந்தியின் வாரிசுகளாக உருவாக்கி அவர்களை அரசியல் களத்திலும் இறக்கிவிட்ட பெருமை உங்களையே சாரும்.

சுருங்கக்கூறின் நேரு குடும்பத்தின் அரசியல் பாரம்பரியம் உடையாமல், காங்கிரஸ் கட்சியையும் கட்டுக்குலையாமல் பாதுகாத்து பாரதத்தின் அரசியல் தலைமையை வழிநடத்தும் பெரும்பொறுப்பும் உங்களுடையதாக இருப்பது உங்கள் ஆளுமைக்கான சான்றுகள்.

உங்களிலும் பார்க்க உங்கள் பிள்ளைகள் ராகுல், பிரியங்கா மீது அளவுகடந்த பாசம் எங்களுக்கு உண்டு. சகோதரி பிரியங்கா, நளினியை சிறையில் சென்று பார்த்தபோது கண்கலங்கினோம். ராகுல் காந்தி தமிழகத்தில் வைத்து ஈழத்தமிழர்களின் விடயத்தில் நான் தனிக்கவனம் எடுப்பேன் என்று கூறியபோது அழுதோம்.

ஏன் தெரியுமா? இந்தியாவை நம்பி எல்லாவற்றையும் இழந்த பின்பும் இந்தியாவை நம்புகின்றோமே. அதற்கான அர்த்தம் புரியாமல் இருப்பதன் பொருளாகத்தான் எங்கள் அழுகை இருந்தது. எங்கள் வாழ்வும் உங்கள் வருத்தமும் ஏதோவொரு வகையில் வேதனைக்குரியவைதான்.

கல்வீட்டில் வாழ்ந்தோம். அவித்த நெல் பரப்பி, பழுத்த மிளகாய் பரப்பி, பசு மாட்டுப் பண்ணை வைத்து, உழவு இயந்திரங்களில் ஏற்றிய கெளப்பி மூடையில் களைப்பாறி, பாலும் தேனும் பருகி வாழ்ந்த எங்கள் வாழ்வு எல்லாம் அழிந்து இப்போது தறப்பாள் குடிசையில், ஒருவேளை உணவுக்கு கையேந்தி நிற்கும் பரிதாபத்தில் வாழ்கின்றோம்.

பரவாயில்லை. எங்கள் இழப்புகளுக்கு இந்தியாவும் மூலகாரணம் என்று சொல்கிறார்கள். அதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களைப் பொறுத்தவரை நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.

நீங்கள் குணமடைந்து வீடு திரும்பிய பின், முடிந்தால் எங்கள் பிரச்சினை பற்றியும் ஒரு கணம் சிந்தியுங்கள். இறைவன் துணை புரிவான்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=21265

நீங்கள் என்னும் எவ்வளவு காலம்தான் இப்படி ஏமாற போகின்றீர்கள் உங்களுக்கு இவர்கள் எவ்வளவு செய்தாலும் நீங்கள் ஏன் அவர்களுக்காக கவலைகொள்கின்றீர்கள் உண்மையில் இது வன்னிமக்களின் கடிதமா .........? என்று ௬ட சந்தேகமாகவுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அவர்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு வேண்டியது ஒரு தீர்வு.

எமக்கு வேண்டியது ஏவறை விட ஒரு தமிழீழம்.

இந்தியா ஒரு தீர்வை தந்து விட்டாலும் .... உங்களை மாலை தீவை பிடிக்க சொல்லி ஒரு தீர்வு சொல்லிச்சினம் அது போல தான் இருக்கும்.

இன்று அவர்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு வேண்டியது ஒரு தீர்வு.

எமக்கு வேண்டியது ஏவறை விட ஒரு தமிழீழம்.

அர்ஜுன் ... அவர்களுக்கு தேவை தீர்வு! எமக்கு தேவை ஏவறை விட்ட தமிழீழம்!! ... ஆமா உங்கள் தரவளிகளுக்கு ... என்ன தேவை???? ... அதை சொல்லுகோவன் வெளிப்படையாக!!!!

.... காலம் பூராக ஒட்டி இருந்து நிலத்திலும்/புலத்திலும் இனத்தை புலிக்காச்சலில் சிங்களத்தோடு சேர்ந்து அழித்தீர்கள்!!! ... இன்று உங்கள் அரசியல்கள் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது! ... கதைக்கவும் இயலாது, அவனை கேட்கவும் இயலாது ... அவனுக்காக(சிங்களவனுக்காக) நீங்கள் செய்த கொலை/கொள்ளை/கடத்தல் எல்லா ஆதாரங்களும் அவனிடம் இருக்கிறது!!

என்ன கேட்கிறீர்கள்? என்ன இப்போ செய்கிறீர்கள்? இலக்கெது? எப்படி அதை அடையப் போகுறீர்கள்? .... நக்கல், நையாண்டிகளுக்கு முன் ஒரு விளங்கப்படுத்தும் கொஞ்சம், உதுகளை!!!!

... இல்லை, ஜனநாயக முறைப்படி பதிலளிக்காம் இருக்கலாம், கண்டவனுக்கும் என்ன பதிலளிப்பது என்றும் இருக்கலாம்!!! ...

... என்ன உங்கள் போன்றோர்களும் தாமும் ஈழத்தமிழர்களாம்!!!!!!!!!!!!

அர்ஜுன் ... அவர்களுக்கு தேவை தீர்வு! எமக்கு தேவை ஏவறை விட்ட தமிழீழம்!! ... ஆமா உங்கள் தரவளிகளுக்கு ... என்ன தேவை???? ... அதை சொல்லுகோவன் வெளிப்படையாக!!!!

.. என்ன உங்கள் போன்றோர்களும் தாமும் ஈழத்தமிழர்களாம்!!!!!!!!!!!!

அர்ஜுன் போல உள்ளவங்கதான் தான் நேசிச்ச தலைமைக்கு உண்மையான போராளிகள்!!

உமாமகேஸ்வரன் தா(த்)தா செத்து எவ்ளோ காலம்!

சரி பிழைக்கு அப்பால் அவரு நேசிச்ச தலமைக்கு சார்பா ஐம்பதுபேருக்கு முன்னாடிவந்தும் நான் இப்ப்டிதான் என்னு துணிஞ்சு சொல்றார்!

அதுக்காக தனியாய் தலைப்பு ஒண்ணும் அவர் ஆரம்பிச்சு நியாயம் கேக்கல! ...

தனக்குன்னு உள்ள கொள்கைல மாறாமலே இருக்காரு!

முள்ளிவாய்க்கால் அவலம் முடிஞ்சு..முழுசா இரண்டரைவருசம் கூட ஆகல.. அதுக்குள்ள நாம படுகுற குழப்பம் என்ன...பிளவுகள் என்ன....தாங்கல சாமி!!

அர்ஜுன் திருந்துறது இருக்கட்டும் ...

நீங்க எப்போ திருந்துற ஐடியா மிஸ்டர்.நெல்லையன்?

ஒவ்வொரு நாட்டிலும் அழிவுகள் வரும் போதும் தனிமனிதர்கள் அழியும் போதும் கைகொட்டி சிரிப்பதைவிட எமக்கு வேறு தெரிவு இல்லை போலுள்ளது.எங்களை எல்லோரும் சேர்ந்து தான் அழித்தார்கள் சிலர் நேரிடயாக சிலர் மறைமுகமாக.அதற்கு அவர்களுக்கு ஒன்று நடக்கும் போது நாம் சந்தோசப்படுவதால் ஏதாவது நாம் அடைய நினைத்ததில் ஒரு சிறிதேனும் அடைந்துவிடுவோமா? இனியாவது வேண்டாதவனை கூட நண்பனாக்கி சிங்களவனுக்கு ஒரு பாடத்தை கற்பித்து எமக்கும் ஒரு தீர்வை எடுத்துவிட்டு பின்னர் மனத்தில் உள்ளதை கொட்டாலாம் அல்லவா? அதை விட்டு கனடாவில் இருந்து வரும் நாடு கடந்த அரசின் பத்திரிகையின் தலையங்கம் பார்த்தவுடன் எனக்கு முதலில் தோன்றியது"இவர்கள் எல்லோருமே உண்மையில் சிங்கள்த்திற்குத்தான் வேலை செய்கின்றார்களோ?"என்று.

ஏன் தமிழ்நாடே எங்களை கை விட்டுத்தான் இருந்தது.இதற்கான விளக்கத்தை மறுபடியும் எழுதுவதில் ஒரு பிரயோசனமுமில்லை.சரி முள்ளிவாய்காலுடன் உலகம் தான் நினைத்ததை சாதித்துவிட்டது.கடைசி அன்றுடனாவது நாங்கள் உணர்ந்திருக்கவேண்டும் நாம் சிங்களத்தை வெல்ல அல்லது தண்டிக்க,நமக்கு ஒரு தீர்வு கிடைக்க , உலகத்தின் அனுசரணையில்லாமல் ஆகப்போவது ஒன்றுமில்லை.

எமது அரசியலில் உலகம் என்றால் என்ன? தமிழ்நாடு,இந்தியா,சவுத் ஏசியா,ஜ்ரோப்பா.அமெரிக்கா யூ.என் இந்த வரிசைதான்.

2009 மே யுடன் நாம் என்ன செய்திருக்க வேண்டும்? அதையா செய்தோம்.செய்கின்றோம்.

கடைசி இப்போதாவது நாட்டில் கூட்டைமைப்பு வென்றிருக்கின்றார்கள்,தமிழ்நாட்டில் ஜெயலலிதா வென்றிருக்கின்றார் எமக்கு ஆதரவாக வேறு கதைக்கின்றார்.கூட்டமைப்பை பலப்படுத்தியும் முடிந்தளவு மற்ற உலக நாடுகளையும் எங்கள் வசம் திருப்பவைக்கவல்லவா முயற்சிக்க வேண்டும்.

புலம் பெயர்ந்த அமைப்புகள் இலங்கை அரசின் போர்குற்றத்தை வெளிக்கொண்டுவரவும்,ராஜபக்சா குடும்பத்தை கூண்டிலடைக்க வைக்கவுமல்லா முயற்சிக்க வேண்டும்.

அதுவா இப்போ நடக்கின்றது? நாட்டில் இருப்பவர்களுக்கு தீர்வு சொல்லவும்,நான் தான் தலைவன் என் அடிபடவும்,தொடர்ந்தும் உலக நாடுகளை பழிதீர்க்கவுமல்லா முயலுகின்றோம்.வன்னியில் உள்ளவர்கள் சோனியாவிற்கு ஆறுதல் கடிதம் எழுதுவது ஏன் என விளங்கமுடியாதவர்களா நாம்?

இவையெல்லாம் இருக்க இன்னமும் தலைவர் இருக்கின்றார் என்றும்,புலிகளை அழித்தவர்களை பழி வாங்குவோம் என்றும் அலைந்துகொண்டிருந்தால் தமிழனுக்கு எந்த ஒருகாலமும் விடிவில்லை.உலகை பொறுத்தவரையில் புலிகள் பயங்கரவாதிகளே.அவர்களை நியாயப்படுத்தியோ அல்லது அவர்கள் பின்நிற்பவர்களலேயோ இனி எதுவும் செய்ய முடியாது.

தமிழன் இன்று கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை ஒன்றுபட்டு நின்று சிங்களத்தை வெல்லாமல் விட்டால் இலங்கை என்பது ஒரு சிங்களநாடாக மாறி தமிழன் அங்கும் இங்கும் அதில் பரவி இருக்கும் ஒரு இனமாகி விடுவான்.

  • தொடங்கியவர்

தமிழக தேர்தலில் மக்கள் தம்மை ஏமாற்றிய அரசியல் தலைவர்களை தண்டித்தும்

தமிழீழ தேர்தலில் எத்தனையோ சொல்லணா இடர்கள் மத்தியிலும் சர்வதேசத்திற்கு ஒரு செய்தியையும் மக்கள் கூறியுள்ளனர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கனேடிய தமிழ் வானொலியின் வணக்கம் கனடா

அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள் இணைந்து கொள்ளும் முதன்மைச் செய்திகளின் ஆய்வரங்கம்

08/09/2011

http://www.ctr24.com/newctr/clients/Default.aspx

Please click this link and select 08/09/2011 -வணக்கம் கனடா

1- 20 minutes GTF Spokesperson

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அப்செட்டில் பிரணாப்!

சோனியா காந்தி வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். திடீரென அவர் உடல் நிலை சரியில்லாமல் போனது பற்றி பலரும் பலவிதமாகப் பேசுகிறார்கள். தமிழ் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் இப்படியொரு பேச்சு பரவிக்கிடக்கிறது. அதாவது, ‘ஈழப் போரில் இலங்கை அரசுக்கு உதவிய கருணாநிதி ஆட்சியை இழந்தார். இப்போது சோனியா உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்’ என்று சொல்லி வருகிறார்கள்.

சோனியா மருத்துவமனையில் இருந்து திரும்பும் வரையில் கட்சியை வழிநடத்த ராகுல் காந்தி உள்பட ஒரு குழுவை அறிவித்திருக்கிறார். அந்தக் குழுவில் நிதி அமைச்சர் பிரணாப் பெயர் இல்லை. இதனால் அவர் மிகவும் அப்செட்டாகி இருக்கிறாராம்.

- குமுதம் ரிப்போட்டர் (வம்பானந்தா) 14.08.01

பிந்திய செய்தி! அன்னை சோனியாவுக்கான வன்னி உறவுகளின் ஆறுதல்கடிதம்பார்த்து ...

பேரதிர்ச்சி அடைந்தார்.!!............

வேற யாருமே அல்ல .. அன்னை சோனியாவேதான்.!!!

தன்னை வைத்து இப்டி காமெடி பண்ணுவது யாரென்று அறிய விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளார்!

....அதுபோகட்டும், அர்ஜுனுங்க...உங்க கருத்து நல்லாவே இருக்கு...

ஆனாலும்..அப்பாடா ஒருமாதிரி "அவனுங்க" தொலைஞ்சாங்கடா !!

என்ற ஒரு வக்கிர புன்னகையோடதான் இதெல்லாம் ...எழுதுவீங்கன்னதும்..

புரியகொள்ளக்கூடியதாகவே இருக்குதுங்க அர்ஜுனுங்க!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.