Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/5/2023 at 16:25, Nathamuni said:

பிரிட்டனில் தேசிய பத்திரிகைகள், பிபிசி போன்றவை கறுப்பு என்ற சொல்லை black என பாவிக்கும் நிலையில், நிர்வாகத்தில் உள்ள யாரோ ஒருவருக்கு சரியான புரிதல் இல்லை என்று கருதுவதால் இது குறித்த விளக்கம் தர வேண்டும். தகுந்த விளக்கம் தந்தால் இந்த சொல்லை தவிர்ப்போம்.

நான் கறுப்பன் என்பதில் பெருமைபடுகிறேன் என்று நம்முடன் வேலை செய்யும் ஆப்ரிக்கன் அடிக்கடி  சொல்வான் Proud To Be Black என்று கறுப்பர்கள் பாடும் பாடலே இருக்குது.

முன்பே செய்திகள் எப்படி இருக்கணும் மக்கள் எதை ரசிக்கணும் எதை சிந்திக்கணும் எதை கதைக்கணும் எதை உண்ணனும்  என்பதை நவீன மீடியாக்கள் என்று சொல்லபடுபவைகளால் கட்டுபடுத்தப்பட்டு மறைமுகமாக அடிமையாக்கபடுகின்றனர் அதில் இருந்து விலகி  வித்தியாசமான கோணம்களில் செய்திகளை ஒவ்வொருவரின் கருத்துக்கள் மூலம் ஆராய்வது  மேம்படுத்துவது சில உண்மைகளை புரிந்து கொள்வதுக்கு  யாழ் கருத்துக்களத்தினை  உருவாக்கி தந்த மோகன் அண்ணாவுக்கு நன்றி .

புதியவைகளை பற்றி ஆராய்வதும்  அறிந்து கொள்வதும் மனிதர்களின் இயல்பு .

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, பெருமாள் said:

நான் கறுப்பன் என்பதில் பெருமைபடுகிறேன் என்று நம்முடன் வேலை செய்யும் ஆப்ரிக்கன் அடிக்கடி  சொல்வான் Proud To Be Black என்று கறுப்பர்கள் பாடும் பாடலே இருக்குது.

முன்பே செய்திகள் எப்படி இருக்கணும் மக்கள் எதை ரசிக்கணும் எதை சிந்திக்கணும் எதை கதைக்கணும் எதை உண்ணனும்  என்பதை நவீன மீடியாக்கள் என்று சொல்லபடுபவைகளால் கட்டுபடுத்தப்பட்டு மறைமுகமாக அடிமையாக்கபடுகின்றனர் அதில் இருந்து விலகி  வித்தியாசமான கோணம்களில் செய்திகளை ஒவ்வொருவரின் கருத்துக்கள் மூலம் ஆராய்வது  மேம்படுத்துவது சில உண்மைகளை புரிந்து கொள்வதுக்கு  யாழ் கருத்துக்களத்தினை  உருவாக்கி தந்த மோகன் அண்ணாவுக்கு நன்றி .

புதியவைகளை பற்றி ஆராய்வதும்  அறிந்து கொள்வதும் மனிதர்களின் இயல்பு .

நிர்வாகத்தில் உள்ள ஒருவருக்கு அல்லது ஓரிருவருக்கு Political Correctness விடயத்தில் ஆர்வம் போல.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, நிழலி said:

மோகனுக்கு தெரிந்தவர்கள்....

தகவலுக்கு நன்றி.

1 hour ago, பெருமாள் said:

தெரியலை அண்ணா மட்டுக்களுக்கு தெரிந்து இருக்கும் .

நன்றி பெருமாள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பெருமாள் said:

நான் கறுப்பன் என்பதில் பெருமைபடுகிறேன்

கறுப்பர் என்பது பெருமிதம் ஆனால் கறுவல் என்று சொல்லுவது இழிவழக்கு. இந்த வித்தியாசம் தெரியவேண்டும்😎

இன்று UK Post Office 30 வருடத்திற்கு முன்னர் கறுப்பரைக் குறிக்க பாவித்த சொல் இனவாதம் என்று செய்தி வந்துள்ளது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, கிருபன் said:

கறுப்பர் என்பது பெருமிதம் ஆனால் கறுவல் என்று சொல்லுவது இழிவழக்கு. இந்த வித்தியாசம் தெரியவேண்டும்😎

இன்று UK Post Office 30 வருடத்திற்கு முன்னர் கறுப்பரைக் குறிக்க பாவித்த சொல் இனவாதம் என்று செய்தி வந்துள்ளது.

30 வருடத்துக்கு முன்னம்!

இப்பவும் நீக்ரோ என்பதே இனஅவமதிப்புச் சொல்.

தமிழ் சொல்லாடல்களான கறுப்பர், கறுவல் குறித்த தங்கள் ஆபூர்வ விளக்கத்துக்கு மிக்க நன்றி. அப்படி அழைக்கக் கூடாது என்று கறுப்பர்கள் ஆதங்கம் பட்டது போல சொல்வது போலல்லவா இருக்கிறது.

இனஅவமதிப்பு என்பது சொல்லப்படுபவருக்கு புரிந்து காயமேற்படுத்தினால் மட்டுமே தவறானது. பிரிட்டனில் கூட வீட்டில் இவ்வாறு காயப்படுத்தக் கூடிய சொற்களை பிள்ளைகள் முன் பேசாதீர்கள். புரியாமல் பாடசாலைகளில் பிள்ளகள் பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

அப்படியானால், மோட்டுச் சிங்களவன், கெட்ட சிங்களவன், சோனகன், சொல்லாடல்கள் சரியானதா? அது இனஅவமதிப்புச் சொல் இல்லையா?

ஆகவேதான் அதீத political correctness என்றேன்.

எனது கரிசனை, இதே நிலைப்பாடு, கறுவலின் எதிர்ப்பதமான வெள்ளை, வெள்ளையம்மா என்று எழுதிய போது இருக்கவில்லை என்பதே!

கெட்ட நாய் என்று ஒருவரை திட்டினால், நாயுடன் ஒப்பீடா என்று கோபமடைவார். அதையே நாய்கே சொன்னால் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கும் அல்லவா!

அதனைத்தான் சுட்டிக் காட்டினேன். பிழை பிடிக்கவல்ல. பாவித்த சொல் தவறாயின், திருத்தலாமே அல்லது திருத்த அறிவுறுத்தலாம். திரியையே பூட்டினால், எழுதவே ஆர்வம் வராது.

அந்த திரி, பாடசாலை bullying ஆல் பாதிக்கப்பட்ட இரு அகதி மாணவர்கள் கொலை செய்தார்கள்.ஒருவர் சோமாலி, ஒருவர் இலங்கையர். கோவத்தில் தவறாக இன்னும் ஒரு தொடர்பில்லாத ஆப்கன் அகதி கொலையானார். தந்தையை தலிபான் கொல்ல, தாயுடன் இங்கே வந்தவர் கொலையாகினார்.

எனது வழக்கப்படி, திரியை திறந்து விட்டு, bullying என்றால் என்ன? பிள்ளைகளை எவ்வாறு கவனிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று நீண்ட கட்டுரை எழுதிக் கொண்டு வர, திரியில்லை!!

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஈழப்பிரியன் said:

துயர்பகிர்வில் குணபூரணி சதானந்தனின் மரண அறிவித்தல் போட்டிருக்கே.

யார் இவர் என்று யாருக்கேனும் தெரியுமா?

நானும் இதே கேள்வியை கேட்க நினைத்தேன். 

ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பத்தினர், உறவினர்கட்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Nathamuni said:

அந்த திரி, பாடசாலை bullying ஆல் பாதிக்கப்பட்ட இரு அகதி மாணவர்கள் கொலை செய்தார்கள்.ஒருவர் சோமாலி, ஒருவர் இலங்கையர். கோவத்தில் தவறாக இன்னும் ஒரு தொடர்பில்லாத ஆப்கன் அகதி கொலையானார். தந்தையை தலிபான் கொல்ல, தாயுடன் இங்கே வந்தவர் கொலையாகினார்.

bullying இன்றைய புலம்பெயர் ஒவ்வொரு பெற்றோரும் அறிதிருக்க  வேண்டிய ஒன்று அதனால் வரும் பாதிப்புக்கள் பாரதூரமானவை அதை நைசியமாய் எழுதி யாழில் இணைக்கவேணும் @Nathamuni கவனிக்கவும்  வழக்கம்போல் வீரகேசரி எழுதியதை இங்கு இணைக்க அதுக்கு நாலு கல்லெறி விட்டு எழுதுவதுதான் கருத்துக்களம்  என்று நினைக்கிறார்கள் போல் உள்ளது .

@கிருபன் கறுவல் என்பது இழிவழக்காக  எங்கு சொல்லியுள்ளார்கள் ?  இது குருவின் முன் மாணவன் கேட்க்கும் கேள்வி போன்றது தப்பாக எடுத்துக்கொள்ள வேணாம் .

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 hours ago, நிழலி said:

மோகனுக்கு தெரிந்தவர்கள்....

யாழ் உருவாக்கிய காலத்தில் இருந்து இது வரை  நடக்காத விடயம் .சக ஒரு மனிதன் எப்படி சிந்திப்பார் கவலை கொள்கிறார்  என்று தெரியாமலா வாழ்கிறோம் .

மோகன் அண்ணா துயரில் நாங்களும் பங்கு கொள்கிறோம் ஆழ்ந்த அனுதாபங்கள் .

Edited by பெருமாள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, பெருமாள் said:

கறுவல் என்பது இழிவழக்காக  எங்கு சொல்லியுள்ளார்கள் ?  இது குருவின் முன் மாணவன் கேட்க்கும் கேள்வி போன்றது தப்பாக எடுத்துக்கொள்ள வேணாம் .

நாதம்ஸ் இணைத்த செய்தியை நான் பார்க்கவில்லை. வழமையான சொந்தச் சரக்காக இருந்திருக்கவேண்டும்!  ஆனால் எந்த ஒரு ஊடகமும் செய்திகளில் கறுவல் என்று பாவிப்பதில்லை. கூகிளில் தேடிப் பார்த்துத்தான் சொல்கின்றேன்.

இலங்கைத் தமிழர்கள்தான் பட்டப்பெயராக அல்லது அடைமொழியாக கறுவல் என்று பாவிப்பவர்கள். கறுவல் செல்லத்துரை, கறுவல் மாடு, கறுவல் நாய் என்று சொல் வழக்கு உண்டு. ஆனால் கறுப்பினத்தவரைக் குறிக்க கறுவல் என்று பேச்சுமொழியில் சொல்வது கூட அவர்களை இழிவாகப் பார்க்கும் தன்மையில் இருந்தே வருவது. அதை எழுத்தில் கறுப்பினத்தவரைக் குறிக்கப் பாவிப்பது இழிவழக்குத்தான். 

அப்படி இல்லை என்றால் கறுவல் என்று பாவித்த ஒரு செய்தியையோ, கட்டுரையையோ காட்டுங்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்ப கறுப்பர்கள் யாழ் பார்க்கிறார்கள் என்று சொல்ல வாறீர்களா?

நான் தெளிவாக சொல்லிவிட்டேன் மேலே.

நிலைப்பாடு பக்கச்சார்பு இல்லாமல் பொதுவாக இருக்க வேண்டும். கறுவல் தாழ்வு, வெள்ளைஉயர்வு என்று சொல்கிறீர்களா?

செய்தியை பாராக்காமல் எப்படி கருத்து சொல்ல முடியும்.

கமோன் கிருபன் அய்யா!

சும்மா அந்த சொல் பாவிக்கவில்லை. தவறாக அப்பாவி ஆப்கன் அகதியை ஒரு தமிழன் உடன் சேர்ந்து கொலை செய்து, நீதிமன்றின் கடும் கண்டனத்தையும், 21 வருட பரோல் இல்லா தண்டணையும் பெற்ற குற்றவாளியை கறுவல் என்று சொல்லக்கூடாது, கறுப்பர் என்று சொல்லவேண்டும், சரியா?

உங்களிடம் திருடுபவர், திருடனா? திருடரா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Nathamuni said:

அப்ப கறுப்பர்கள் யாழ் பாராக்கிறார்கள் என்று சொல்ல வாறீர்களா?

நான் தெளிவாக சொல்லிவிட்டேன் மேலே.

நீலைப்பாடு பக்கச்சார்பு இல்லாமல் பொதுவாக இருக்க வேண்டும். கறுவல் தாழ்வு, வெள்ளைஉயர்வு என்று சொல்கிறீர்களா?

கமோன் கிருபன் அய்யா!

கறுப்பர்கள் பார்க்காவிட்டால் இழிவாக எழுதுவதில் பிழை இல்லை என்பது போல இருக்கின்றது உங்கள் கருத்து.

நான் கறுவல் என்பதற்கும் கறுப்பர் என்பதற்கும் உள்ள வேறுபாட்டைத்தான் சொன்னேன். 

White என்றால் வெள்ளையினத்தவர் அல்லது வெள்ளையர் என்றுதான் எழுத்தில் வரும். செவலை, சிவலை, வெள்ளை என்பதெல்லாம் பேச்சுவழக்கில்தான். இந்தப் புரிதல் இருந்தால் சரி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 minutes ago, கிருபன் said:

மேலேதிக இணைப்பு மேலே.

உங்கள் தமிழ் வியாக்கியானம் விதண்டாவாதம்.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Nathamuni said:

உங்கள் தமிழ் வியாக்கியானம் விதண்டாவாதம்.

கறுவல் என்று செய்திகளில் கறுப்பினத்தவரைச் சுட்டிய ஒரு இணைப்பைக் கொடுக்கமுடியாத நீங்கள்தான் விதண்டாவாதம் செய்கின்றீர்கள். 

குற்றம் புரிந்த தமிழனை பொதுவாக “தமிழன்” என்றுதானே சொல்கின்றீர்கள். கடும் கண்டனத்திற்காக ஒரு இழிவழக்கைப் பாவித்திருக்கலாமே.

இதற்கு மேல் குத்திமுறிய எனக்கு நேரம் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, கிருபன் said:

கறுவல் என்று செய்திகளில் கறுப்பினத்தவரைச் சுட்டிய ஒரு இணைப்பைக் கொடுக்கமுடியாத நீங்கள்தான் விதண்டாவாதம் செய்கின்றீர்கள். 

குற்றம் புரிந்த தமிழனை பொதுவாக “தமிழன்” என்றுதானே சொல்கின்றீர்கள். கடும் கண்டனத்திற்காக ஒரு இழிவழக்கைப் பாவித்திருக்கலாமே.

இதற்கு மேல் குத்திமுறிய எனக்கு நேரம் இல்லை!

நான் எழுதியதை வாசிக்காமல் தமிழ் பிரசஙகம் செய்கிறீர்கள்.

நான் சொல்லவந்தது என்ன, நீங்கள் அலம்பல் பண்ணுவது என்ன? புரிந்தா குத்தி முறிகிறீர்கள்?

கறுவல் பிழை, வெள்ளை, வெள்ளையம்மா சரியா என்று கேட்டால்...

கறுப்பர், வெள்ளையினத்தவர் அல்லது வெள்ளையர் என்றுதான் எழுத்தில் வரும் என்கிறீர்கள்!

இங்கே, இலக்கணத் தமிழா பாவிக்கிறோம்?

ஞாயிறு காலை.... ?

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Nathamuni said:

இங்கே, இலக்கணத் தமிழா பாவிக்கிறோம்?

ஆம். செய்திகள், கட்டுரைகள் இலக்கணத் தமிழில்தான் வருகின்றன.

4 minutes ago, Nathamuni said:

கறுவல பிழை, வெள்ளை, வெள்ளையம்மா சரியா என்று கேட்டால்...

கறுப்பர், வெள்ளையினத்தவர் அல்லது வெள்ளையர் என்றுதான் எழுத்தில் வரும் என்கிறீர்கள்!

எழுத்தில் எப்படி வரும் என்பதற்கு கொடுத்த விளக்கத்தை மறுக்க முடிந்தால் சொல்லுங்கள். இல்லாவிட்ட்டால் இதில் குத்திமுறிவதில் பிரயோசனம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, கிருபன் said:

ஆம். செய்திகள், கட்டுரைகள் இலக்கணத் தமிழில்தான் வருகின்றன.

எழுத்தில் எப்படி வரும் என்பதற்கு கொடுத்த விளக்கத்தை மறுக்க முடிந்தால் சொல்லுங்கள். இல்லாவிட்ட்டால் இதில் குத்திமுறிவதில் பிரயோசனம் இல்லை.

இரவு பார்ட்டீயோ?

நான் கேட்டது, வெள்ளையம்மா, வெள்ளை என்று பலமுறை எழுதிய போது கண்டு கொள்ளாத நிர்வாகம், ஒரு கொலை குற்றவாளியை கறுவல் என்று எழுதிய போது திரியை தூக்கிய காரணம் என்ன என்று?

இப்ப சொல்லுங்க, உங்களிடம் யாரும் தமிழில் டவுட் கேட்டதோ என்று? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Nathamuni said:

நான் கேட்டது, வெள்ளையம்மா, வெள்ளை என்று பலமுறை எழுதிய போது கண்டு கொள்ளாத நிர்வாகம், ஒரு கொலை குற்றவாளியை கறுவல் என்று எழுதிய போது திரியை தூக்கிய காரணம் என்ன என்று?

திரியை தூக்கியது பற்றி நிர்வாகம்தான் பதில் சொல்லவேண்டும்.🤓

நான் பெருமாள் கறுப்பரின் பெருமிதம் பற்றிக் கூறியபோது கறுப்பர் என்பதற்கும் கறுவல் என்பதற்குமான வித்தியாசம் என்னவென்றுதான் விளங்கப்படுத்தினேன். இது வெறும் தமிழ் இலக்கண விளக்கம் மட்டுமில்லை இல்லை. வேற்றினத்தவரை அடையாளப்படுத்தும் சொற்கள் கவனமாகப் பாவிக்கப்படவேண்டும். ஒரு இனத்தை இழிவுபடுத்தும் வகையில் பாவிப்பது கூடாது என்பதற்கான விளக்கம் மட்டுமே. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, கிருபன் said:

மீண்டும் சொல்கிறேன் உங்கள் விளக்க அலம்பறை யாருமே கேட்கவில்லை.

புரிநது பதிலலியுங்கள். இல்லாவிடில் நகருங்கள். இது உங்கள் விளக்கத்துக்கான திரியல்ல! நன்றி!

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் இருந்து அரசியல் அலசல் பகுதிக்கு நகர்த்த முடியுமா? திண்ணை இருந்தால் இந்த முக்கிய அங்கே சொல்லி இருப்பேன். நிகழ்வும் அகழ்வும் வரும் எதுவுமே, பார்வைக்கு வருவதாக தெரியவில்லை. 

நன்றி

Posted
1 hour ago, Nathamuni said:

நகர்த்தப்பட்டுள்ளது.

  • Like 1
  • Thanks 1
  • 2 weeks later...
Posted

சுவி அண்ணா, உங்களது தனிமடல் பெட்டி நிரம்பி விட்டதால்தான் உங்களால் தனிமடல் அனுப்ப அல்லது பெற முடியாமல் உள்ளது. தேவையில்லாதவைகளை நீக்கி இடம் ஒதுக்கினால் மறுபடி வேலை செய்யும். நன்றி.

@suvy

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, இணையவன் said:

சுவி அண்ணா, உங்களது தனிமடல் பெட்டி நிரம்பி விட்டதால்தான் உங்களால் தனிமடல் அனுப்ப அல்லது பெற முடியாமல் உள்ளது. தேவையில்லாதவைகளை நீக்கி இடம் ஒதுக்கினால் மறுபடி வேலை செய்யும். நன்றி.

@suvy

நன்றி இணையவன்........!

தனிப்பெட்டியில் இருக்கும் தேவையில்லாதவைகளை எப்படி அழிப்பது........ கொஞ்சம் சொல்லுங்கள் ......நான் முயற்சி செய்தேன் முடியவில்லை......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

நன்றி இணையவன்........!

தனிப்பெட்டியில் இருக்கும் தேவையில்லாதவைகளை எப்படி அழிப்பது........ கொஞ்சம் சொல்லுங்கள் ......நான் முயற்சி செய்தேன் முடியவில்லை......!

அதை அப்படியே விட்டுட்டு, இன்னொன்றை ஆரம்பியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

அதை அப்படியே விட்டுட்டு, இன்னொன்றை ஆரம்பியுங்கள்.

சுத்தம்.........இன்னொன்று ஆரம்பிக்கத் தெரிந்திருந்தால் இதை அழித்திருப்பேனே .......பரவாயில்லை இன்னும் இருநாட்களில் பிள்ளைகள் வந்து விடுவார்கள் செய்திடலாம்......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, suvy said:

சுத்தம்.........இன்னொன்று ஆரம்பிக்கத் தெரிந்திருந்தால் இதை அழித்திருப்பேனே .......பரவாயில்லை இன்னும் இருநாட்களில் பிள்ளைகள் வந்து விடுவார்கள் செய்திடலாம்......!

அதனை அழிக்க முடியாது, என்றால்.... ஆனால் புதிதாக இன்னொறு தொடங்க வேண்டியது தானே....

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிரியாவில்(syria) பசார்-அல்-அசாத்தின்(Bashar al-Assad) ஆட்சியை கவிழ்த்த கிளா்ச்சியாளா்களுடன் பிரித்தானிய அரசு இராஜதந்திர தொடர்பை கொண்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார். சிரிய நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக 50 மில்லியன் பவுண்டுகளை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்(HTS) தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்தாலும் அதனுடன் இராஜதந்திர தொடர்புகளை வைத்திருக்க முடியும் எனவும் டேவிட் லாம்மி சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச உதவிகள் மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவ அரசாங்கம் சிரியாவை ஆட்சி செய்வதை பிரித்தானியா விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், சிரிய மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள அதேவேளை, அந்நாட்டில் மூடியிருந்த பாடசாலைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை, உலகத்தலைவர்கள் பலர் சிரியாவிற்கு உதவ முன்வரும் நிலையில், உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சிரியாவிற்கு உணவு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உக்ரைன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.   மேலும், புதிய நிர்வாகம் உடன்படுமாயின் சிரியாவிற்கு தேவையான இராணுவ பயிற்சிகளை வழங்க தயாராக இருப்பதாக துருக்கி அரசாங்கமும் தெரிவித்துள்ளது. https://tamilwin.com/article/britian-s-contact-with-a-syrin-rebel-group-1734294048
    • புலிகளை அழித்ததுற்காக இலங்கை ஈராணுவத்தை பாராட்டி பாரளுமன்றத்தில் பேசிய சம்பந்தனை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள். இன அழிப்பின் இரத்தம்காயும்முன் இன அழிப்பின முக்கிய சூத்திரதாரியான சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த தமிழர்கள் சீமான் இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்தியதை விமர்சிப்பது வேடிக்கையானது. எனக்கும் ஆது உடன்பாடில்லாத போதிலும் சீமானைத்தவிர காங்கிரசை மூர்க்கமாக வேறு யாரும் எதிர்க்கப் போவதில்லை என்பது தான் உண்மை.இன அழிப்பின் பிரதான பொறுப்பாளர் மகிந்த இராஜபக்சவின் கட்சியில் இன அழிப்பின் இரத்தம் காயமுன்னமே  இணைந்து தேர்தலில் நின்ற சாணக்கியரன தமிழரசுக்கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் உள்ளவர்களுக்கெல்லாம். சீமானின் இந்தச் செயல் கோபத்தை ஏற்படுத்தியிருப்பது. உண்மையில் கோபப்பட வேண்டியது மானை ஆதரப்பவர்களே அதற்கான உரிமையும் எங்களுக்கு இருக்கிறது. சீமாhனின் இறத்ச் செயலை நான் விமர்சிக்கிறேன். ஆனால் சீமான்  காங்கிரஸ் எதிர்ப்பில் எல்லோரையும் விட உறுதியாக இருப்பார் என்பதையும் இந்த இடத்தில் கூறிவைக்கிறேன்.
    • இன்னும் ஐந்து வருடங்களில் இரண்டாவது மொழியை கற்க தேவயற்று போகும் அந்தளவுக்கு a1 தொழில் நுட்பம் தலைவிரித்து ஆடுகிறது .
    • என்ன கேப்பில கொண்டெயினர் லொரி ஓட்டுறியள்? நான் விமர்சித்தது - உங்களை போல அனுரவுக்கு காவடி தூக்கும் ஆட்களை. அருச்சுனாவுக்கு நானே மானசீக தேர்தலில் வாக்கு போட்டேன். அனுரவுக்கு வாக்கு போட்டவர்களையும் விமர்சிக்கவில்லை. அருச்சுனா அணியில் மயூரன் போல நம்பிக்கையானவருக்கு போட்டிருக்கலாம் என்றே எழுதினேன்.  
    • Brexit என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, பிரித்தானியா (UK) உலகின் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தமான டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) 12ஆவது உறுப்பினராக பிரித்தனையா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.  இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாடுகளுக்கிடையே உறவுகளை ஆழப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர் தனது உலகளாவிய வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தவும் பிரித்தானியா முயற்சிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.  உள்நாட்டு உற்பத்தி இந்த கூட்டுறவில் ஜப்பான், அவுஸ்திரேலியா, கனடா போன்ற 11 நாடுகள் உறுப்பினராக உள்ளன. தற்போது, பிரித்தானியா இணைவதன் மூலம், ப்ரூனே, சிலி, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் பிரித்தானியாவுக்கான வர்த்தக வரிகள் குறைக்கப்படும். இப்புதிய திட்டத்தின் மூலம் பிரித்தானியா, 2 பில்லியன் பவுண்டுகள் வருமானத்தை எதிர்பார்க்கின்ற போதிலும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.1வீதத்திற்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆட்சி சார்ந்த முக்கியத்துவம் பெறுகிறது, இதன் மூலம் சீனா மற்றும் தாய்வான் போன்ற புதிய நாடுகளின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் பிரித்தானியா பங்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/uk-to-join-massive-trade-deal-1734286828
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.