Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் காந்தி கொலை என்ற நாகாஸ்திரம் மீண்டும் தமிழர்கள் மீது ஏவப்படுகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

perarivaalan-murugan-santhan.jpg

ராஜீவ் காந்தி என்றால் என்ன பெரிய பருப்பா. ஈழத்தில் யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் என்பது.. மோசமான போர்க்குற்றங்களில் ஒன்று. புதுக்குடியிருப்பில் முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகள் வைத்தியசாலைகள் மீது செல் தாக்குதல் நடத்தியதை ஐநா மூவர் குழு மோசமான போர்க்குற்றமாக இனங்காட்டி இருக்கிறது (2011 ஐநா அறிக்கையின் பிரகாரம்). 1987 ஒக்டோபரில் இந்தியப் படைகள் யாழ் வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்தியர்கள் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை எந்த முகாந்தரமும் இன்றி படுகொலை செய்ததானது மிக மோசமான போர்க்குற்றம். அது மட்டுமல்ல.. இது போன்ற நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களின் மீதான படுகொலைகளுக்கு ராஜீவ் காந்தி என்ற போர்க்குற்றவாளி பொறுப்பு.

அவை தொடர்பில் எந்த சர்வதேசமும் எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. ராஜீவ் போன்ற போர்க்குற்றவாளிகளை.. நீதியின் முன் நிறுத்தி தண்டித்ததும் இல்லை. ஏன் இது என்று எனக்குப் புரியவில்லை.. இந்த உலகில் அப்பாவிகள் மீதும்.. அதிகாரமற்றவர்கள் மீதும் தானா நீதி காட்டப்படுகிறது.

சரி அவற்றை வழமை போல "மறப்போம் மன்னிப்போம்"..( ராஜீவ் காந்தியை கொன்றால் அது குற்றம்.. அதை ஏற்றுக் கொள்வோம்.. ஆனால் ராஜீவ் காந்தி எங்களைக் கொன்றால் மறப்போம் மன்னிப்போம்... நல்ல கொள்கை....) அதன்படி நின்றால் கூட..

இந்தியாவால் ராஜீவ் கொலை தொடர்பில் பிரதான குற்றவாளிகளாகச் சொல்லப்பட்டு பிரபாகரனும்.. பொட்டு அம்மானும் இன்னும் 60,000 அப்பாவி தமிழ் மக்களும் கொல்லப்பட்டு விட்டனர். (ஐநாவும்..இந்தியாவும் சிங்களமும் அறிவித்ததற்கு அமைய)

இந்தக் கொலையில் இந்திய அதிகார வர்க்கத்தின் விருப்பப்படி எல்லோரும் பழிவாங்கப்பட்டு விட்டனர். இந்தக் கொலையில் நேரடியாக பங்கேற்றதாகச் சொல்லப்பட்ட பலரும் (பிரபாகரன்.. பொட்டு அம்மான்.. ஒற்றைக்கண் சிவராசன்..) என்று எல்லோருமே நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படாமலே கொல்லப்பட்டுள்ளனர்.. அல்லது தற்கொலை செய்ய தூண்டப்பட்டுள்ளனர்.

நளினி உட்பட்ட இந்த 4 பேரும்.. உண்மையில் இந்திய குற்றச்சாட்டின் பிரகாரம்... இந்தக் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் கிடையாது. கொலைக்கு ஏதோ ஒரு வழியில் தெரிந்தோ தெரியாமலோ உதவினர் என்று தான் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் இவர்களின் பொலிஸ் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தியப் பொலிஸார் ஆளும் வர்க்கத்தின் உத்தரவுக்கு அமைய வாக்குமூலங்களைப் பெறுவதில் கில்லாடிகள். இதனை உலகமே அறியும். அந்த வகையில் இந்த மரண தண்டனைகள் எப்படிப்பட்டவை என்பதைச் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஆக.. 1991 இல் இருந்து ராஜீவ் காந்தி கொலை என்பதனூடாக.. இந்திய பிராந்திய நலன் திட்டமிட்டு காக்கப்படும் நடவடிக்கைகளும்.. காங்கிரஸ் கட்சியினூடான.. நேரு குடும்ப ஆட்சி தொடர்வதும் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது. ஆகவே இந்தக் கொலையை வைத்து இந்தியம் தனது அதி உச்ச பலனை அடைய முடிவு செய்திருக்கிறது. ஆனால்.. ராஜீவ் என்ற அந்தக் கொடூரனால் வஞ்சிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு நீதியும் இன்று வரை கிடைக்கவில்லை. அதேபோல் தான் இந்த 4 அப்பாவிகள் மீதும்.. நீதி செயற்படவில்லை. நளினிக்கு.. மன்னிப்பு அளிக்கப்பட்டும்.. தொடர்ந்து சிறை வைக்கப்பட்டுள்ளார். மாறாக மீண்டும் மீண்டும் இந்திய ஆளும் வர்க்கத்தின் தேவைக்கு ஏற்ப இந்திய நீதித்துறை பயன்படுத்தப்படும் மிகக் கேவலமான தன்மையே காணப்படுகிறது. இது தெற்காசியாவில் ஒரு தீராத நோயும் கூட. இது முற்றுமுழுதான ஜனநாயக விரோதச் செயலும் கூட.

இந்த 3 பேருக்குமான மரண தண்டனை என்பதை தமிழக காங்கிரஸ் வாழ்த்தி இருப்பதோடு புலிகளே தங்கள் எதிரிகள் என்றும் கூறி இருக்கின்றனர். இது தான் காங்கிரஸின் நிலைப்பாடு என்றால்.. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களை வீடு தேடி வந்து கொன்ற.. ராஜீவ்.. சோனியா உட்பட முழுக் காங்கிரசும் அவர்களின் எதிரிகள். அதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது.

ஆனால் இப்போது உள்ள பிரச்சனை.. இந்த 3 அப்பாவிகளின் உயிர்களையும் காங்கிரஸ் தனது பழிவாங்கல் கொள்கைக்காக பலியிடுவதில் இருந்து பாதுகாப்பது தான்.

சோனியா காங்கிரஸ் மீண்டும்.. இந்த ராஜீவ் கொலையை வைத்து இன்னொரு நாடகத்தை ஆட தொடங்கி இருக்கிறது. அண்மைய தேர்தலில் காங்கிரஸ் தமிழகத்தில் வரலாறு காணாத தோல்வியைக் கண்டது. அதற்கு நாம் தமிழர் கட்சியின் எழுச்சியும் சீமானின் துணிச்சலுமே காரணமாக இருந்தது.சீமானுக்கு இந்த 3 பேருடனும் சிறையில் தொடர்பிருந்தது. இதனை சீமானே வெளியில் சொன்ன போது காங்கிரஸ் அதனை பெரிதுபடுத்தவில்லை... ஆனால் உள்ளூர ரசித்தது.

மேலும் தமிழகத்தில் மத்திய ஆளும் காங்கிரஸ் கட்சியின் விருப்புக்கு மாறாக அல்லது அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஈழத்தமிழர் சார்ப்பு தீர்மானங்களை இயற்றி உள்ளமையும் சோனியா நட்புப் பாராட்டும் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை போர்க்குற்ற விசாரணைகளை கோரியுள்ளமையும் சோனியாவுக்கு தான் இலங்கைத் தமிழர்களுக்காகவே செயற்படுகிறேன் என்ற போலிப் பிரச்சாரத்தை முன்னெடுப்பதில் சிக்கல்களை தோற்றிவித்துள்ளன.

அதுமட்டுமன்றி.. இப்போ காங்கிரஸின் ஆயுள் தமிழகத்தில் மோசமாக உள்ள நிலையில்.. சீமானை விழுத்த வேண்டிய ஒரு தேவையும் சோனியாவுக்கு எழுந்துள்ளது. அதற்கு உள்ள ஒரே மாற்றீடு.. ராஜீவ் கொலை. மீண்டும் அந்தக் கொலையை கிளறி.. அதன் உச்ச இலாபத்தின் இன்னொரு பக்கத்தை உருசிக்க காத்திருக்கிறார்.. புற்றுநோயாளி சோனியா.

நிச்சயம் பேரறிவாளனை முன்னிறுத்தினால் சீமான் சீறுவார் என்று அறிந்து கொண்ட காங்கிரஸ்.. இந்திய ஜனாதிபதியாக இருக்கும் சோனியாவின் பொம்மையைக் கொண்டு.. இவ்வளவு காலமும் கிடப்பில் கிடந்த கருணை மனுவை நிராகரிக்கச் செய்ததாக ஒரு செய்தியை பரப்பி விட்டுள்ளனர். உண்மையில் கருணை மனு நிராகரிக்கப்பட்டமை உத்தியோகபூர்வமாக வெளிவரவில்லை. அது தேவைக்கு ஏற்ப வெளி வரும்.

ஆனால் அதற்கிடையில் சீமானை தூக்கி உள்ள போடு என்று பொலிஸ் கமிசனுருக்கு மனுப் போயுள்ளது. ஆக.. இந்த 3 பேரையும்.. ராஜீவ் கொலையையும் வைத்து இன்னும் என்னென்னவெல்லாத்தையும் சம்பாதிக்க முடியுமோ அவற்றை சம்பாதிக்க சோனியா திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவே தெரிகிறது. இது அவருக்கே ஓவரா தெரிந்தாலும்.. தமிழ் மக்களின் பலவீனத்தை நன்கு பயன்படுத்தி அவர் உச்ச பலன்களை அனுபவிக்கிக்கத் துடிக்கிறார். இதற்கு தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்யும் திராவிடக் கட்சிகளும் மறைமுகமாக.. தமது அரசியல் இலாபத்திற்காக ஆதரவளித்தே வந்துள்ளன... வருகின்றன.

ஆனாலும் எனியும் இதனை தொடர விடாது.. தடுத்து நிறுத்தியாக வேண்டிய கட்டாயம்.. உலகத் தமிழினத்துக்கு (தமிழகம் உட்பட) உண்டு. ராஜீவ் இந்தியர்களுக்கு அப்பாவியாக தலைவராக இருக்கலாம். ஆனால் ஈழத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு பிரகடனப்படுத்தப்படாத போர்க்குற்றவாளி. அதற்கான ஆயிரம் சான்றுகள் அவர்களிடம் உண்டு. ராஜீவ் மேற்கொண்ட படுகொலைகளுக்காக சோனியாவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி நீதி கேட்டிருக்க வேண்டிய தமிழர்கள் இன்று தங்கள் 3 பேரின் உயிரைக் காக்க.. சோனியாவின் காலில் விழுந்து கெஞ்சும் துர்ப்பாக்கியத்தைப் பார்க்கிறோம்.

தமிழர்களின் சாணக்கியமற்ற விவேகமற்ற "மறப்போம் மன்னிப்புக்களின்" பின்னால் உள்ள ஆபத்துக்களில் இதுவும் ஒன்று. நாளை இந்த 3 அப்பாவிகளும் தூக்கில் தொங்குவார்களாக இருந்தால்.. அவர்களுக்காக குரல் கொடுத்து சீமான் சிறைக்குள் வாடுவாராக இருந்தால்.. அதற்கு தமிழர்களின் செயல் திறனற்ற.. தூர நோக்கற்ற.. செயற்பாடுகளே காரணம். ராஜீவ் கொலை அல்ல..!

இதனை தமிழர்கள் இன்றே உணர்ந்து தகுந்த வழியில் செயற்படவில்லை என்றால் இந்த ராஜீவ் கொலை என்றும் தமிழர்களைப் பழிவாங்கும் இந்திய நாகாஸ்திரமாக நேரு குடும்ப காங்கிரஸ் கட்சிக்கு அமையப் போவது உறுதி..!

http://kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

தமிழர்கள் றோ வின் நாடகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது இந்த தூக்குத் தண்டனை விவகாரமே ஜெயலலிதாவுக்குப் பிரச்சனை கொடுப்பது தான் நோக்கமாக இருக்கும்.

பின்வருவன நடக்கலாம்.

1. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு குழம்புவதாக காட்டுவது.

இது தமிழ் உணர்வாளர்கள் தூக்கிற்கெதிராக போர்க்கொடி தூக்குவதை வைத்து

2. சட்ட ஒழுங்கின்மையைக் காட்டி மத்தியில் இருந்து ஜெ இற்கு அழுத்தம்.

இதனால் ஜெ

1. தன்னை ஈழப்பிரச்சனையில் இருந்து விலத்த வேண்டும்.

2. தமிழ் உணர்வாளர்களை அடக்கவைத்தல்.

ஒரு சிறிய நாடகத்தின் மூலம் ஒரு கல்லில் 2 , 3 மாங்காய்.

.

Edited by esan

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா எப்போதுமே மத்தியை நம்புவதில்லை

அவர் மக்களை நம்புகின்றவர் .சட்ட ஒழுங்கை குலைக்க

ஒரு மத்திய அரசே முடிவெடுத்தால்

அது மக்களுக்கு விளங்காதா என்ன? மக்கள்

மீண்டும் ஜெயையே தெரிவு செய்வார்கள் .

ஆனால் துக்கிலிடப்பட்டவர்களின் உயிர்

திரும்பிக் கிடைக்குமா?

சோனியா அவர்களைப் போட்டால்

சோனியாவைப் போட ஒருவன்

நிச்சயம் வருவான்

நேற்று இந்திய பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான விவாதம் நடந்தது காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்பினை தொடர்ந்து

ஒத்தி வைக்க பட்டது அன்னா ஹசாரே கைதினால் இந்த விபரம்கள் ஊடகம்களில் வரவும் இல்லை மக்கள்

இதை கண்டு கொள்ளவும்இல்லை அதே மாதிரி தான் தமிழக அரசின் ஈழ தமிழர் சார்பான ஆதரவு போக்கினை சீர் குலைப்பதற்கும்

இலங்கை மீது பொருளாதார தடை என்ற கோரிக்கையினையும் போர் குற்றம் தொடர்பாக தமிழகத்திலிருந்து வந்துள்ள அழுத்தம்களையும்

மழுங்கடிப்பதற்காக காங்கிரஸ் அரசு கையில் எடுத்துள்ள ஆயுதமே இதுவாகும்

புஸ் என்றால் என்ன, பிளேயர்என்றால்என்ன,புட்டின்என்றால் என்ன பெரிய பருப்புகளா? போட்டு தள்ள வேண்டியது தானே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புஸ் என்றால் என்ன, பிளேயர்என்றால்என்ன,புட்டின்என்றால் என்ன பெரிய பருப்புகளா? போட்டு தள்ள வேண்டியது தானே.

புஷ் மீது சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு உட்பட பல அமைப்புக்கள் ஈராக்கில் அமெரிக்கப் படைகள் புரிந்த போர்க்குற்ற விசாரணையை அமெரிக்கா முன்னெடுக்க இதய சுத்தியோடு முனைய வேண்டும் என்று அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தன. அமெரிக்கா அப்படி முன்னெடுக்கா விட்டால் அது உலகிற்கு தவறான உதாரணம் ஆகும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தன.

புட்டின் மீது செச்சினிய போரின் போது மிக மோசமாக மனித உரிமை மீறல்களைச் செய்த குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. அது தொடர்பான விசாரணைகளுக்கு அமெரிக்கா.. பிரிட்டன் உட்பட்ட மேற்கு நாடுகள் அழுத்தங்களைப் பிரயோகித்தும் இருந்தன.

ஆனால் 1987 இல் இருந்து 1990 வரை மிகக் கொடிய போர்க்குற்றங்களை மனித உரிமை மீறல்களை இழைத்த ராஜீவ் காந்தி மீது இது வரை எந்தக் குற்றச்சாட்டுக்களும் பதிவாகாமல்.. இந்திய ஆளும் வர்க்கங்கள் காலத்துக்கு காலம் காய் நகர்த்தி வந்திருக்கின்றன. இதே காலப் பகுதியில் புளொட்... ஈபிஆர் எல் எவ்.. ஈஎன் டி எல் எவ்.. மண்டையன் குழு.. போன்ற கூலிக் கொலைக் கும்பல்கள்.. இந்தியப் படைகளின் ஏவு கருவிகளாக இருந்து இந்தியப் படைகளின் பயங்கரவாதச் செயல்களை பகுதியாக நிறைவேற்றியும் வந்துள்ளன.

போர்க்குற்ற விசாரணைகளை.. போர்க்குற்றம் புரிந்த அதிகாரத்தில் உள்ள தலைவர்கள் சந்திக்க மறுத்தால்.. விளைவு மக்கள் சட்டத்தை கையில் எடுப்பதாகத்தான் முடியும். ராஜீவிற்கும் அதுவே நிகழ்ந்திருக்கவும் கூடும்..! ஆனால் ராஜீவோடு சேர்ந்து போர்க்குற்றம் புரிந்த.. இந்திய அதிகாரிகள் பலரும்.. ஈழத் தமிழ் கொலைக்கும்பல்களைச் சேர்ந்தோரும் இன்னும் இந்தியாவிலும் கொழும்பிலும் வவுனியாவிலும் வெளிநாடுகளிலும் பதுங்கி உள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அவர்களையும் நீதியின் முன் நிறுத்துவதோடு கனடா மற்றும் மேற்கு நாடுகள் போர்க்குற்றம் புரிந்த தமிழ் கொலைக்கும்பல்களைச் சேர்ந்தவர்களை அவர்கள் அந்தந்த நாடுகளில் பிரஜா உரிமை பெற்றிருந்தாலும் கூட.. நாடு கடத்த வேண்டும். அண்மையில் பிரிட்டன் தனது பிரஜா உரிமை பெற்ற ஆனால் தீவிரவாத செயற்பாடுகளைக் கொண்டிருந்த ஒரு இஸ்லாமிய மதத் தலைவரை நாடு கடத்தியது. அதுபோன்று செயற்பட்டால் நீங்கள் உட்பட பலர் நாடு பெயர வேண்டியும் வரலாம். அப்போது தெரியும்.. மக்களை கொன்றது புலிகளா.. இல்லை இந்திய ஏவல்..கூலிக் கும்பல்களா என்று.

உலகம் பரந்த அளவில் சிரத்தை எடுத்து கடந்த 35 ஆண்டுகளில் இலங்கைத் தீவில் நடந்த தீவிர மனித உரிமை மீறல்கள்.. போர்க்குற்றங்கள் தொடர்பில் முறையான முழுமையான விசாரணைகளுக்கு உத்தரவிட்டால்.. புலம்பெயர் நாடுகளில் பதுங்கி இருக்கும் கூலிக் கும்பல்களைச் சேர்ந்த பலரும் கூட சிங்கள.. இந்தியத் தலைமைகளோடு.. குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய சூழல் நிச்சயம் தோன்றும். அப்போதுதான் உண்மையில் அப்பாவிகளைக் கொன்றவர்கள் தண்டிக்கப்படும் சூழல் பிறக்கும். அதன் போதே தமிழர்களின் மனித உரிமைகள் காக்கப்பட உத்தரவாதம் எழவும் கூடும்.

Edited by nedukkalapoovan

புஸ் என்றால் என்ன, பிளேயர்என்றால்என்ன,புட்டின்என்றால் என்ன பெரிய பருப்புகளா? போட்டு தள்ள வேண்டியது தானே.

ஜோன் எப் கெனடி பதிவியில் இருந்தபோதே கொல்லப்பட்டார். இந்திராகாந்தி கொல்லப்பட்டார். காஸ்ரோ பல நூறு தடவைகள் கொல்லப்பட இருந்தார். இப்படி பல நூறு கொலைகள், முயற்சிகள்.

வலியோர் மெலியோரை அழிப்பது தொன்றுதொட்டு நடப்பது.

அதற்காக வலியோர் சொல்வதும் செய்வதும் சரி என்றாகிவிடாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா எப்போதுமே மத்தியை நம்புவதில்லை

அவர் மக்களை நம்புகின்றவர் .சட்ட ஒழுங்கை குலைக்க

ஒரு மத்திய அரசே முடிவெடுத்தால்

அது மக்களுக்கு விளங்காதா என்ன? மக்கள்

மீண்டும் ஜெயையே தெரிவு செய்வார்கள் .

ஆனால் துக்கிலிடப்பட்டவர்களின் உயிர்

திரும்பிக் கிடைக்குமா?

சோனியா அவர்களைப் போட்டால்

சோனியாவைப் போட ஒருவன்

நிச்சயம் வருவான்

நிச்சயம் வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

rajiv-gandhi.jpg

கருணையினால் அல்ல !

பேரறிவாளன் , சாந்தன் , முருகன் – தூக்குமேடையில் நிற்பது மூன்று பேரின் உயிர்கள் மட்டுமல்ல, ஈழப் போராட்டத்தின் நியாயமும்தான். நாம் இரண்டையும் காப்பாற்ற வேண்டும். ஒன்றுக்கெதிராக ஒன்றை நிறுத்துவதன் மூலம் நாம் ஈழத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஏற்றுக் கொள்வதாக மாறிவிடும். அதனால்தான் நமது கோரிக்கை கருணையினால் அல்ல, அரசியல் நீதியால்.

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வரின் கருணை மனுவை, தமிழக அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்காமலேயே ஆளுநர் நிராகரித்தது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இராஜீவ் கொலையையொட்டிக் ‘குற்றம்’ இழைக்காமலேயே தண்டனை பெற்ற – தமிழகம் முழுவதும் தாக்கப்பட்ட – தி.மு.க. தொண்டர்களின் தலைவர் கருணாநிதி இக்கருணை மனுவின் மீது கருத்துச் சொல்லியாக வேண்டும்.

இந்நால்வரின் தண்டனையும் ரத்து செய்யப்பட வேண்டுமென்று நாம் கோருகிறோம். இராஜீவ் கொலை என்பது அடிப்படையில் ஒர் அரசியல் நடவடிக்கை. இந்திய ஆளும் வர்க்கத்தின் தெற்காசிய விரிவாக்க நோக்கத்திற்கு ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமைப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு அதை சீர்குலைத்தது இந்திய அரசு. ‘இந்திய இலங்கை ஒப்பந்தம்’ என்றொரு அரசியல் சதித்திட்டத்தை உருவாக்கி ஈழத்தமிழ் மக்கள் மீது திணித்தது. தன்னுரிமையை மறுக்கும் இந்த ஒப்பந்தத்தைப் புலிகளும் ஈழத்தமிழ் மக்களும் ஏற்க மறுத்தனர். இதையே ஒரு முகாந்திரமாகக் கொண்டு இந்திய இராணுவம் ஈழத்தின் மீது ஒர் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்ளும், புலிகளும் கொல்லப்பட்டனர்; பாலியல் வன்முறை உள்ளிட்ட அனைத்து வெறியாட்டங்களையும் இந்திய இராணுவம் நடத்தியது; இறுதியில் தோல்வியுற்று திரும்பியது.

இந்த ஆக்கிரமிப்புப் போரின் எதிர் விளைவுதான் இராஜீவ் கொலை. எனவே அது போர்க்குற்றவாளிக்கெதிரானதொரு நடவடிக்கை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் புனித்ப்படுத்தப்பட்ட தமது ஆக்கிரமிப்பை ஓர் அரசியல் நடவடிக்கையாகச் சித்தரித்துக் கொள்ளும் இந்திய ஆளும் வர்க்கம், இந்த பதில் நடவடிக்கையை மட்டும் அரசியல் வகைப்படாத கிரிமனல் நடவடிக்கையாகச் சித்தரிப்பதும் அதன் அடிப்படையில் தண்டிப்பதும் மோசடியாகும். இராஜீவ் கொலையுண்ட போதும் நாம் இந்தக் கருத்தைத்தான் முன் வைத்தோம். இன்று இந்நால்வரின் தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்பதையும் அதே அடிப்படையில்தான் கோருகிறோம்.

அடுத்து இந்தத் தீர்ப்பும் தண்டனையும் சட்டவிரோதமானது என்கிறோம். ஏற்கனவே 26 பேருக்கு மரண தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பும் தற்போது நான்கு பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் அரசியல் நோக்கத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்றும், எனவே அச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது; தடா சட்டமும் காலாவதியாகி விட்டது. தற்போது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், தீர்ப்புக்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட சாட்சியங்களும் வாக்கு மூலங்கும் தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்டவைதான்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டோருக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களுக்கு விடை கூறாமலேயே கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை அளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். தீர்ப்பை மீளாய்வு செய்யக் கோரும் மனுவை பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளாமல் மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்திருக்கிறது. தாங்களே புனிதம் என்று கூறும் சட்ட நடைமுறைகளை உச்சநீதிமன்றம் அலட்சியப்படுத்தியுள்ளது. எனவே சட்டரீதியாகச் செல்லத் தக்கதல்ல என்ற அடிப்படையிலும் இத்தண்டனை ரத்து செய்யப்பட வேண்டுமெனக் கோருகிறோம்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் இந்நடவடிக்கையில் நேரடியாகப் பங்கேற்றவர்களல்ல என்ற போதிலும், சட்ட ரீதியாகவே கூட இது செல்லத்தக்கதல்ல என்ற போதிலும் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்குவதற்கும், ஆளுநர் பாத்திமா பீவி உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது ஆளுநரின் அதிகாரம் குறித்துத் தானே வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, இப்போது கருணை மனுவை தன்னிச்சையாக நிராகரிப்பதற்கும் காரணம் இருக்கிறது.

“ஈழ விடுதலைக்கு இந்திய அரசு எவ்வளவோ உதவிய போதிலும், அவர்களது நன்மைக்காவே ஒரு ஒப்பந்தத்தை அரும்பாடுபட்டு இராஜீவ் உருவாக்கித் தந்த போதிலும் நன்றி கெட்டத்தனமாகப் புலிகள் அமைதிப்படைச் சிப்பாய்களைக் கொன்றனர்; தேர்தலில் வெற்றி பெற்றிருக்கக் கூடிய ஒப்பற்ற இளம் தலைவர் இராஜீவையும் கொன்றுவிட்டனர்” – என்ற பொய்ப் பிரச்சாரம் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து இங்கே நடத்தப்படுகிறது. ஈழத்தில் இந்திய அரசு நடத்திய சதிகள், ஒப்பந்தத்தின் மோசடித்தன்மை, ‘அமைதி’ப் படையின் அட்டூழியங்கள் என்பன முதல் அத்தேர்தலில் தோல்வியடையும் நிலையில்தான் இராஜீவ் இருந்தார் என்பது வரையிலான பல உண்மைகள் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. மரணதண்டனையை ஆதரிக்கும் சோ முதல் வாழப்பாடி ராமமூர்த்தி ஈறான அனைவரும் இப்பொய்களையே தம் தரப்பு வாதங்களாக முன்வைக்கின்றனர். எனவே, இப்பொய்ப்பிரச்சாரம் தோற்றுவித்த உணர்ச்சியின் அடிப்படையில்தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பும், ஆளுநரின் நடவடிக்கையும் அமைந்திருக்கின்றன.

ந்நிலையில் இந்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோருவோரின் அணுகுமுறை எவ்வாறிருக்க வேண்டும் என்பதைப் பரிசீலிப்பதும் அவசியமாகிறது.

இன்று நால்வரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்குப் பெரிதும் முனைந்து வருபவர்கள் (அநேகமாக) அனைவருமே, அன்று இராஜீவ் கொலை செய்யப்பட்டபோது ‘கொலையாளி’களை வன்மையாகக் கண்டித்தார்கள்; இராஜீவுக்கு இரங்கல் தெரிவித்தார்கள்; இந்தக் கொலை சி.ஐ.ஏவின் சதி என்றார்கள்; இதற்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்றும் நீதிமன்றம் விசாரித்து யாரைக் குற்றவாளி என முடிவு செய்தாலும், அவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கட்டுமென்றும் முன்மொழிந்தார்கள்.

இத்தகைய போக்குகளை விமரிசித்து இராஜீவ் கொலைக்கான நியாயங்களை நாம் எழுதினோம். அதன் விளைவாக நாம் ‘மல்லிகையின்’ (சிறப்புப் புலனாய்வுப் படையின் அலுவலகம்) மணத்தை நுகர நேர்ந்ததுடன், ஏராளமான தோழர்கள் தடா, தே.பா.சட்டம், ராஜத் துரோகம் உள்ளிட்ட வழக்குகளில் சிறை செல்லவும் நேர்ந்தது. எனினும் ‘ஈழத்தமிழன்’ என்று சொன்னாலே வேட்டையாடப்பட்ட ஒரு காலத்தில், ஈழ ஆதரவு எனப் பேசினாலே கைது செய்யப்பட்ட காலத்தில் ‘புத்திசாலித்தனமாக’ மவுனம் சாதிப்பதை விட வெளிப்படையாக பேசுவது நம் அரசியல் கடமை என்ற அடிப்படையில் நாம் அவ்வாறு செய்தோம்.

அன்று அரசியல் பேசாமல் “நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்” என்று சட்டவாதத்தில் நுழைந்து தப்ப முயன்றவர்களது அணுகுமுறை தவறு என்று மீண்டும் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியல் முன்முயற்சியை இழக்காமல் சட்டவாய்ப்புகளைப் பயன்படுத்துவது என்பது வேறு, சட்டவாதத்தையே அரசியலாக்கி கொள்வதென்பது வேறு.

சட்டவாதத்தையே அரசியலாக்கிக் கொள்பவர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல், அதன் சட்டம், நிறுவனங்கள் இவற்றின் எல்லைக்குள் நின்று பேச முடியுமேயொழிய இவற்றைக் கேள்விக்குள்ளாக்க முடியாது. எனவேதான் “ஒரு ஆக்கிரமிப்பு போர் குற்றவாளியைக் கொன்றதற்குத் தூக்கு தண்டனையா’ என்ற கேள்வியை இன்றைக்கும் அவர்களால் முதன்மைப்படுத்த இயலவில்லை. நீதிமன்றத்தின் மீது தங்களது விசுவாசத்தைப் பிரகடனம் செய்தவர்கள் தீர்ப்பின் மோசடியை முதன்மைப்படுத்தியும் இயக்கம் எடுக்க முடியவில்லை. அதன்மீது அதிருப்தி தெரிவிக்க மட்டுமே முடிகிறது.

நான்கு பேரைத் தூக்கிலிடுவது அரசியல் ரீதியான அநீதி, சட்டரீதியாகவும் அநீதி என்று போராடுவதற்குப் பதிலாக, “இந்த நால்வருக்காகக் கேட்கவில்லை; மரண தண்டனையே ஒழிக்கப்பட வேண்டும் எனக் கோருகிறோம்” – என்று முதலாளித்துவ மனிதாபிமானத்தின் அடிப்படையில் கோரிக்கை எழுப்பப்படுகிறது. அப்படியானால் “ஆட்டோ சங்கருக்கு ஏன் கேட்கவில்லை?” என்று பார்ப்பனத் திமிருடன் சோ கேட்டால் “அப்போதே கேட்காதது தவறுதான்” என்று பதிலிளிக்கிறார் இரமாதாஸ். இதுமட்டுமல்ல, குறிப்பாக இந்த நால்வருக்காகப் பேசாமல் பொதுவாக மரணதண்டனை ஒழிப்பு பற்றிப் பேசும் கருணாநிதி, வைகோ, போன்றோரை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி நிர்ப்பந்தம் கொடுப்பதற்குப் பதில் அவர்களது புகழ் பாடப்படுகிறது. மரணதண்டனை விதிக்கப்பட வேண்டிய மதவெறிக் கொலைகாரன் தாக்கரே போன்றோரிடமும் ஆதரவு திரட்டப்படுகிறது.

இறுதியாக சோனியாவே ‘குற்றத்தை’ மன்னித்துவிட்டார். யாரையும் தூக்கிலிட வேண்டுமெனத் தானோ, தன் பிள்ளைகளோ விரும்பவில்லை எனக்கூறிவிட்டார். ‘மிகக் கொடிய கொலையை செய்த குற்றவாளிகளுக்கும்’ இரக்கம் காட்டிய தாயுள்ளத்துக்கு நன்றி தெரிவிக்க வார்த்தையில்லாமல் தடுமாறுவதாகக் கூறியுள்ளார் ராமதாஸ். மரண தண்டனை ரத்தாவதற்கு முன்னால் இராஜீவ் கொலையின் அரசியல் ரீதியான நியாயத்தையும், நால்வரும் நிரபராதிகள் என்ற சட்டபூர்வமான உண்மையையும் ஒரே வாக்கியத்தில் ரத்து செய்து விட்டார் ராமதாஸ்.

ஜெயின் கமிசன் அறிக்கையில் பொய்க்குற்றம் சாட்டப்பட்ட தி.மு.கவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி அதற்காக ஐக்கிய முன்னணி ஆட்சியைக் கவிழ்த காங்கிரசு – சோனியாவின் திடீர்க் கருணைக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

புலிகளின் விரோதம் தேவையில்லை என்பதில் தொடங்கி, இந்த அறிவிப்பு அளிக்கக்கூடிய ‘அனுதாப அரசியல்’ ஆதாயம் வரை, காரணம் எதுவாயுமிருக்கலாம். எனினும் சோனியாவின் மனிதாபிமானம் நால்வரையும் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கு முன்னால், அவரது கணவரை ஈழ ஆக்கிரமிப்புப் போர்க் குற்றத்திலிருந்து – வெகுசனக் கருத்திலும் – விடுதலை செய்துவிடும். “மரண தண்டனை ஒழிப்பு – மனிதாபிமான” முழக்கத்தின் சாதனை இது.

என்னதானிருந்தாலும் நான்குபேரைத் தூக்கு மேடையில் நிறுத்தி வைத்துக் கொண்டு அரசியல் பேசிக்கொண்டிருக்க முடியுமா என்று சிலர் கேட்கலாம். நான்கு பேரின் உருவத்தில் தூக்குமேடையில் நின்று கொண்டிருப்பது ஒரு அரசியல் நியாயம். மரண தண்டனை ஒழிப்பு எனும் பொதுவான முழக்கம் அவர்களைக் காப்பாற்றக் கூடும். ஆனால் அந்த அரசியல் நியாயத்தை அது தூக்கிலிட்டுவிடும்.

மரணதண்டனை என்பது குற்றவியல் சட்டம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; வர்க்க, சாதி, இன ஒடுக்குமுறை நிலவும் சமுதாயத்தில், அந்த ஒடுக்குமுறைகளின் விளைவாக எந்த நீதிமன்ற விசாரணையுமின்றி அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் பலவடிவங்களில் பறிக்கப்படுகின்ற சமுதாயத்தில், அவற்றுகெதிராகப் போராடும் மக்கள் ‘ எதிர் வன்முறையைப் பயன்படுத்தும் உரிமை’யுடனும் நேரடியாகச் சம்பந்தப்பட்டது இந்தப் பிரச்சினை. இந்த உரிமையின் அடிப்படையில் நால்வரின் மரண தண்டனையும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோருகிறோம் – கருணையினால் அல்ல.

_______________________________________________________________

- புதிய கலாச்சாரம் தலையங்கம், டிசம்பர் – 1999

_______________________________________________________________

பின்குறிப்பு:

11 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் அரசியல் நியாயம் காலம் கடந்தும் சரியான பாதையை காட்டுவதோடு இன்றும் அதன் தேவை இருக்கிறது என்பதை படிப்பவர்கள் உணர முடியும். எனினும் அன்றைய சூழலிலிருந்து இன்றைய சூழல் கொஞ்சம் மாறியிருக்கிறது.

கருணாநிதி அமைச்சரவை கூடி கருணை மனுவை நிராகரித்ததன் பேரில் கவர்னர் அதற்கு ஒப்புதல் அளிக்க, பின்னர் கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு இத்தனை ஆண்டுகள் கழித்து காங்கிரசு அரசால் நிராகரிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நளினையை மட்டும் மரணதண்டனையிலிருந்து ரத்து செய்திருக்கிறார்கள். ‘தாயுள்ளம்’ கொண்ட சோனியாவின் உண்மை சொரூபத்தை இப்போது வேறு வழியின்றி உணரும் தமிழின ஆர்வலர்கள் அன்றைக்கு ஏன் அறியவில்லை என்பதை இந்தக் கட்டுரை மூலம் அறியலாம்.

முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலையில் தற்போது ராஜபக்ஷேவின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படவேண்டுமென்று ஓரளவுக்கு குரல் எழும்பிய நிலையில் காங்கிரசு அரசு இதைச் செய்யக் காரணம்?

முதலில் பா.ஜ.கவின் வாயை அடைக்க வேண்டுமென்பதற்காக அப்பாவி அப்சல் குருவை தூக்கில் போடவேண்டுமென்று நினைத்த காங்கிரசு கும்பல் அதற்கு நிபந்தனையாக முன்வரிசையில் உள்ள நபர்களையும் தூக்கிலேற்ற வேண்டும் என்பதற்காக ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் தூக்கிலேற்ற துணிந்திருக்கிறது. அப்சல் குரு ஏன் அப்பாவி என்பதை அருந்தததி ராய் தொடங்கி பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் ஆதாரத்துடன் நிரூபித்திருக்கின்றனர். கூடிய விரைவில் அந்தக்கட்டுரைகளில் ஒன்றை வெளியிடுவோம்.

ராஜபக்ஷேவின் மீதான போர்க்குற்றங்களை விசாரிக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கும் இந்திய அரசு அதற்கு உதவும் விதத்தில் கூட இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

வரிசையாக ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் திணறும் காங்கிரசு அரசு தேசத்தின் நிகழ்ச்சி நிரலை மாற்றுவதற்காகவும் இதைச் செய்திருக்க முடியும் என்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அண்ணா ஹசாரேவை வைத்து ஆங்கில ஊடகங்கள் எழுப்பும் ஜனநாயகக் கூச்சலின் பின்னேதான் இத்தகைய நிரபராதிகள் மூன்று பேர் தூக்கிலேற காத்திருக்கின்றனர். இதுதான் இந்தியாவின் உண்மையான ‘ஜனநாயகம்’. அரசியல் நோக்கம் கருதியே அப்சல் குருவும், முருகன், சாந்தன், பேரறிவாளன் நால்வரும் தூக்கிலேற்றப்பட இருக்கின்றனர்.

ராஜீவ் கொலையை அரசியல் ரீதியாக எதிர்கொள்வதை புலிகள் தொடங்கி, தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் வரை விரும்பியதில்லை. ராஜீவ் காந்தி ஒரு போர்க்குற்றவாளி என்பதும், அவரது போர்க்குற்றத்தின் எதிர் நடவடிக்கைதான் அவரது கொலை என்பதும் நாம் இன்றும், இனியும் பேச வேண்டிய அரசியல் என்பதை இந்தக் கட்டுரை அரசியல் அறத்துடன் நிறுவுகிறது.

ஆகவே இவர்கள் மீதான தூக்குத் தண்டனை ரத்துச் செய்யப்படவேண்டும் என்று நாம் கோருவது ஈழத்தின் மீதான இந்திய ஆக்கிரமிப்பு போரின் குற்றத்தை ரத்து செய்யாமல் இருக்க வேண்டும் என்பதோடு இணைந்தது. ஆனால் இதை பேசுவதற்கு தமிழன ஆர்வலர்கள் யாரும் தயாரில்லை. மேலும் இன்று அம்மாவின் பின்னே அணிதிரண்டு ஈழத்திற்காக குரல் கொடுக்கும் சீமான், அரசியல் அநாதை வைகோ முதல் பலரும் பாசிச ஜெயா 2007-ஆம் ஆண்டு கூட இம்மூவரையும் தூக்கிலேற்ற வேண்டும் என்று பேசியதை எப்படி முழுங்குவார்கள் என்பது தெரியவில்லை. அதனால்தான் அவர்கள் இதை காங்கிரசு அரசின் குற்றமாக மட்டும் பேசி சுயதிருப்தி அடைகிறார்கள். காங்கிரசு கும்பல் முதன்மைக் குற்றவாளி என்பதைக் கூட அவர்கள் ராஜீவ் காந்தி ஒரு போர்க் குற்றவாளி என்பதோடு சேர்த்துப் பேசுவதில்லை.

தூக்குமேடையில் நிற்பது மூன்று பேரின் உயிர்கள் மட்டுமல்ல, ஈழப் போராட்டத்தின் நியாயமும்தான். நாம் இரண்டையும் காப்பாற்ற வேண்டும். ஒன்றுக்கெதிராக ஒன்றை நிறுத்துவதன் மூலம் நாம் ஈழத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஏற்றுக் கொள்வதாக மாறிவிடும். அதனால்தான் நமது கோரிக்கை கருணையினால் அல்ல, அரசியல் நீதியால்.

- வினவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கந்தப்பு. தாய் தமிழகத்தில் இருந்தும் எமக்கு சமாந்தரமான ஒரு கருத்தோட்டம் எழுந்திருப்பது நல்ல ஒரு சகுனமாகவே தென்படுகிறது. கட்டுரைப் பகிர்விற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீஸ்கொலை இனிமேலும் நாகாஸ்திரம் அல்ல.. புஸ்வாணம்..! :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.