Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடாபியின் கடைசி நாட்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொன்று மட்டும் விளங்குகின்றது மத்திய கிழக்கில் உள்ள எரிபொருள் எல்லாம் மேற்க்கத்தைய நாட்டுக்காரனுகள் பங்கு போடப்போகின்றானுகள் ......... :(

  • Replies 57
  • Views 5.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கடாபியிடம் உள்ள கொடிய தடை செய்யப்பட்ட ஆயுதங்களை அவர் மகிந்த போல பாவிக்கவில்லை. ஆனால் அவற்றை 'இஸ்லாமிய தீவிரவாதிகளிடம்' செல்லாமல் இருக்க வேண்டும் என மேற்குலகம் விரும்புகிறது.

கடைசிச் சண்டை : ரயூரா வைத்தியசாலையில் கடாபி

திங்கள் இரவு திரிப்போலியில் அனல் பறக்கும் சண்டை சில இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. கடாபியின் தலைமை குவாட்டர்சில் 95 வீதம் தமது பூரண கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக சற்று முன்னார் போராளிகள் தெரிவித்தனர். இது மிகவும் பிரமாண்டமான கட்டிடத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கடாபி இருக்கும் இடம் தமது கவனத்திற்கு வந்துள்ளதாகவும் கூறுகிறார்கள். ரயூரா நகரத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் கடாபி இருப்பதாக போராளிகள் தெரிவிக்கிறார்கள்.

திங்கள் அதிகாலை அமெரிக்காவின் பென்ரகன் தகவல் தரும்போது கடாபி இன்னமும் திரிப்போலியிலேயே இருப்பதாக தெரிவித்தது. அவர் ரூனீசியாவிற்குள் நுழைய முற்படலாம் என்றும் கூறியிருந்தது. ஆனால் ஏ.எப்.பீ செய்தித்தாபன தகவல்களின்படி கடாபி இன்னமும் தனது பிரதான கட்டிடத் தொகுதியான பப் அல் அஸியாவிலேயே இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

கடாபி தற்கொலை செய்யமாட்டார் என்று மேலை நாடுகளில் இருந்து வரும் ஆய்வுகளும், அங்கு இருக்கிறார் இல்லை இங்கு இருக்கிறார் என்று வரும் தகவர்களும் அவர் அகப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.

http://www.alaikal.com/news/?p=80017

Edited by akootha

நா.க.த.அ, நமது எதிரியின் நண்பனை வீழ்த்தி, தமது விடுதலையை தேடிக்கொண்டிருக்கும் லிபிய விடுதலை கூட்டுக்கு எமது வாழ்த்துகளை அதிகார பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அவர்களுடன் ராஜதந்திர உறவுகளை முன்னேடுக்கவேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் எண்ணை செய்யிற வேலை. <_<

அடுத்தது சிரியா. அவர்கள் தான் கணக்காக முதுகை காட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.ஈரான்,வடகொரியாவுடன் இராஜதந்திரப்போர் செய்யத்தான் மேற்குலகம் விரும்பும்.

நல்ல அனுமானம். நடந்தால் இன்னுமொரு கொடுங்கோலன் போய்விடுவான். வட கொறியாவை வழிக்கு கொண்டுவருவது இனிமேல் இலகுவாக இருக்கும். ரூசியா பலம் குறைந்துவிட்டதால், தனக்கு கிட்ட மட்டும் தான் கவனத்தை செலுத்துகிறது போலிருக்கிறது. சீனாவின் பொருளாதாரத்திற்கு மேற்கு நாடுகள் இப்போது மிகவும் அவசியம். மேற்கு நாடுகளுக்கு வளைந்து கொடுக்கும்.

  • தொடங்கியவர்

எல்லாம் எண்ணை செய்யிற வேலை. <_<

எண்ணெயால் தான் இவர்களுக்கு விடுதலையும் கிடைத்தது.

எண்ணெயால் தான் இவர்களின் நாட்டில் மேற்குலகம் நிரந்தரமாக குந்தவும் போகின்றது.

  • தொடங்கியவர்

கைது செய்யப்பட்டார் என கூறப்பட்ட சாய்ப் இஸ்லாம் சுதந்திரமாக தோன்றி 'திரிப்பொலியில் எல்லாம் நன்றாக உள்ளது' என கூறியுள்ளார். அப்பா, கடாபியும் நலமாக உள்ளதாக கூறினார்.

Gadhafi son reappears in Tripoli

http://news.blogs.cnn.com/2011/08/22/live-blog-battle-for-libya-gadhafi-stronghold-under-assault/?iref=BN1&hpt=hp_t1

சர்வாதிகாரம் அகற்றப்பட்டு மக்கள் அதிகாரத்திற்கு வரும் போது தான் அரபுலகத்தின் உண்மையான முகத்தை மேற்குலகம் பார்க்கும்.

எதிரும்புதிருமாக நிற்கும் ,முஸ்லிம்களும் அமெரிக்கனுக்கும் ,

ஒரே ஒரு கொள்கை விடயத்தில்மட்டும் ,இனியில்லையென்ற ஒற்றுமை!!

அதுதான் சந்தர்ப்பவாதம்!!

அரபுலக சர்வாதிகாரிகளின் ஆட்சி அமெரிக்காமூலமாக ,முடிவுக்கு வருவது உலகசர்வாதிகாரியான யூ.எஸ்ஸ......தட்டிக்கேட்க ஆளில்லை என்கிற நிலமைக்கே கொண்டுபோகும்!

இன்று உள்நாட்டு பொருளாதார மந்த நிலையினால் அடக்கி வாசிக்கும் அமெரிக்கா..உண்மைல

ஒடுக்கப்படும் இனங்களின் தலைமாட்டில் சுருண்டு படுத்திருக்கும் ராஜநாகம்!!

என்னையகேட்டால்.. முட்டாளகள்போல மத நம்பிக்கைலயும் ,செயலிலும் ஈடுபடும் முஸ்லிம்களை கட்டுப்படுத்த அமெரிக்கா தேவை..!

அதேநேரம் போறவன் வாறவன் எல்லார் பிடரியிலும் தட்டி , ரவுடிதனம் பண்ணும் அமெரிககாவை கட்டுப்படுத்த முஸ்லிம்களும் தேவை!

  • தொடங்கியவர்

கடாபியின் தலைமைக் காரியாலயத்திற்குள் போராளிகள்

கடாபியின் தற்காப்புப் படைகளுடன் நடைபெற்ற கடும் மோதலின் பின்னர் போராளிகள் கடாபியின் மாளிகைக்குள் நுழைந்துள்ளதாக சற்று முன்னர் றோய்டர் செய்தித் தாபனம் தகவல் வெளியிட்டது.

பப் அல் அஸியா கட்டிடத்திற்குள் இருந்து மகிழ்ச்சி வெடிகளை அவர்கள் சுட்டவண்ணமுள்ளனர். கடாபி எங்கேயென்று கூறப்படவில்லை ஆனால் பல வதந்திகள் பரவியவண்ணமுள்ளன. ஆனால் கடாபி திரிப்போலியிலேயே இருப்பதாக இன்று அதிகாலை செய்திகள் கூறியிருந்தன. கடாபியை கைது செய்வது தமது நோக்கமல்ல என்று சற்று முன் போராளிகள் கூறினார்கள்.

http://www.alaikal.com/news/?p=80113

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் தமிழரை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் போது... மகிந்த லிபியாவில், தனது நண்பன் கடாபியுடன் இருந்தவர். தமிழனின் கடைசி நிலம் பறிபோன நிலையில்.... லிபியாவிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் மகிந்த வந்து இறங்கிய போது.... எடுத்த ஒளிப்பதிவு. கடாபி இப்போது.... உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் மகிந்தவிடமிருந்து ஆறுதல் வார்த்தைகள் இன்னும் வரவில்லை. ஏன் அடக்கி வாசிக்கிறார் என்பதும் புரியவில்லை.

  • தொடங்கியவர்

கடாபியின் தலைக்கு 16 கோடி ரூபா விலை

லிபிய தலைவர் கேணல் கடாபியினை உயிருடனோ அல்லது பிணமாகவே கொண்டு வருபவர்களுக்கு ரூபா 16 கோடி சன்மானம் வழங்கப்படுமென எதிர்ப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

கேணல் கடாபிக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள எதிர்ப்பாளர்கள் தற்சமயம் திரிபோலியிலுள்ள கடாபியின் மாளிகை வளாகத்துக்குள் பிரவேசித்துள்ளனர். தொடர்ந்தும் இரு தரப்பினருக்குமிடையில் பாரிய தாக்குதல்கள் இடம்பெற்றவண்ணமிருக்கின்றன. கேணல் கடாபியின் மாளிகையின் சிலபகுதிகளுக்கு பிரவேசித்துள்ள எதிர்ப்பாளர்கள் கடாபியின் நினைவுச் சின்னங்கள் பலவற்றையும் அழித்துள்ளனர்.

இந்நிலையிலேயே கடாபியினை உயிரோடோ அல்லது பிணமாகவோ கொண்டு வருபவர்களுக்கு 2 மில்லியன் லிபிய டினார்கள் (சுமார் 16 கோடி ரூபாய்) பரிசாக வழங்கப்படுமென எதிர்ப்பாளர்கள் அறிவித்துள்ளதோடு கடாபியை கொன்றவர்களுக்கு தண்டனைகளின்றி மன்னிப்பும் வழங்கப்படுமென அறிவித்துள்ளனர்.

இதுவரை வான்வழியாக மட்டும் தாக்குதலை மேற்கொண்டுவந்த நேட்டோ படையினர் தற்சமயம் தரை மார்க்கமாகவும் முன்னேறி வருவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேட்டோ படையினருக்கு எதிராக லிபிய மக்கள் கிளர்ந்தெழ வேண்டுமெனவும் தன் தந்தையின் பின்னால் மக்கள் அணிதிரள வேண்டுமெனவும் கேணல் கடாபியின் மகள் நாட்டுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

லிபியாவின் திரிபோலியில் எங்கோ ஒரு மூலையில் கேணல் கடாபி ஒழிந்திருக்கிறார் என்று அமெரிக்காவின் பென்டகன் பேச்சாளர் அறிவித்துள்ளபோதிலும் கடாபி எங்கோ தப்பியோடி தலைமறைவாக இருக்கின்றார் என்று சில எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர். தொடர்ந்தும் திரிபோலியில் கடாபி படையினருக்கும் எதிர்ப்பாளர்களுக்குமிடையில் பாரிய மோதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/26863--16-.html

  • கருத்துக்கள உறவுகள்

சர்வாதிகாரிகள் அனைவருமே ஒரே அச்சாக இருக்கின்றார்கள்.கடைசி நிமிடம் உலகமே அதிரும் என்ற அறிக்கைகள் வேறு.

  • கருத்துக்கள உறவுகள்

லிபிய மக்கள் கடாபிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்களா? . ஒரு பிரிவினருக்கு ஆயுதப்பயிற்சியை கொடுத்து அவர்கள் போராளிகளாம்!!. ஒரு நாட்டின் இறையாண்மைக்கு என்ன நடக்கிறது? .லிபியாவின் எண்ணை வளத்தை சுறண்ட மட்டுமே மேற்கு நாடுகள் லிபிய மக்களை மீட்கப்போவதாக ஒரு பம்மாத்து நாடகத்தை ஆடுகிறது.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

லிபிய மக்கள் கடாபிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்களா? . ஒரு பிரிவினருக்கு ஆயுதப்பயிற்சியை கொடுத்து அவர்கள் போராளிகளாம்!!. ஒரு நாட்டின் இறையாண்மைக்கு என்ன  நடக்கிறது? .லிபியாவின் எண்ணை வளத்தை சுறண்ட மட்டுமே மேற்கு நாடுகள் லிபிய மக்களை மீட்கப்போவதாக ஒரு பம்மாத்து நாடகத்தை ஆடுகிறது.

என்ன இருந்தாலும்...

மகிந்தவுக்கு ஒரு நண்பன் அவுட். என்ற வகையில் எனக்கு சந்தோசம்.dance-smiley07.gif

எண்ணையை ஆர் கொண்டு போனாலும் காரியமில்லை.dance-smiley04.gif

  • தொடங்கியவர்

லிபியாவில் 30 கி.மீ சுரங்க வழி

லிபிய மண்ணில் பல வாரங்களுக்கு முன்னரே பிரிட்டனின் அதிரடிப்படையினர் இறங்கிவிட்டதாக இன்று வெளியான த ரெலிகிராப் பத்திரிகை எழுதியுள்ளது. சுமார் 22 வரையான பிரிட்டன் விசேட அதிரடிப்படையினர் போராளிகள் போல வேடமிட்டு அரபிய தோற்றத்துடன் களமிறங்கி சண்டையிட்டுள்ளனர். இவர்கள் போராளிகளுடன் போராளிகளாக கலந்து நின்று நேட்டோவின் வான் தாக்குதல் உட்பட தரைவழி தாக்குதல்களை நெறிப்படுத்தியுள்ளார்கள். போராளிகளின் திரிப்போலி நுழைவு அங்குள்ள சாதாரண பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக ஐ.நாவின் அனுமதியுடன் இறங்கியதாக பிரிட்டன் படைத்துறை அமைச்சர் லியாம் பொக்ஸ் கூறியுள்ளார்.

அதேவேளை கடாபியும் முன்னாள் ஈராக் சர்வாதிகாரி சதாம் உசேன்போல மறைவிடத்தில் இருந்து பிடிக்கப்படுவார் என்று அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்னன. சதாம் அவருடைய சொந்த நகரத்தில் இருந்து சில கி.மீ தொலைவிலேதான் பிடிக்கப்பட்டார். அதுபோலவே கடாபியும் மிக அண்மையில்தான் பதுங்கியிருப்பார் என்றும், அதற்கான விசேட தேடுதல்கள் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை இன்று திரிப்போலியில் அதிகமான இடத்தில் அமைதி காணப்பட்டது. கடந்த சில நாட்களாக நடந்த சண்டையில் 400 பேர் வரை இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல இடங்களில் கடாபி ஆதரவாளர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபடி உள்ளார்கள். திரிப்போலியின் 85 வீதமே போராளிகள் வசம் இருப்பதாகக் கூறப்படுகிறது. தான் திரிப்போலியை விட்டு வெளியேறியுள்ளதாக கடாபியின் ஓர் அறிவித்தலும் வெளியாகியுள்ளது. திரிப்போலியில் உள்ள கடாபியின் மாளிகையில் சுமார் 30 கி.மீ தொலைவுக்கு சுரங்க வழி காணப்படுகிறது. அதற்குள்ளாலேயே அவர் தப்பியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடாபியின் தங்க முலாம் பூசிய சிலையை உடைத்து அதன் தலையை மிதித்தபடி போராளிகள் நிற்கிறார்கள். பல இடங்களில் கடாபியின் உருவப்படங்கள் எரிக்கப்படுகின்றன. 42 வருடகார கொடுங்கோல் ஆட்சி மீதான வெறுப்பு மெல்ல மெல்ல வெளிப்பட ஆரம்பித்துள்ளது. மறுபுறம் கடாபி ஆட்களால் நான்கு இத்தாலிய பத்திரிகையாளர் கடத்தப்பட்டுள்ளார்கள். இவர்களை ஏற்றிச் சென்ற சாரதி கொல்லப்பட்டுள்ளார்.

http://www.alaikal.com/news/?p=80256

  • தொடங்கியவர்

கடாபி தனது மகன்மாருடன் ஒரு அடுக்குமாடிகளை கொண்ட கட்டட தொகுதியில் ஒளிந்திருப்பதாக கிளர்ச்சியாளர்கள்

தெரிவித்துள்ளர்கள். ஆனால் இதை வேறுயாரும் உறுதிப்படுத்தவில்லை.

இதையடுத்து இந்த இடத்திற்கு மேலும் பல கிளர்ச்சியாளர்கள் படையணிகள் அனுப்பப்பட்டுள்ளன.

அதேவேளை திரிப்போலியில் இருந்து பதினேழு கிலோ மீட்டர் உள்ள விமானநிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கிளர்ச்சியாளர்கள் சில நாட்களாக போராடியவண்ணம் உள்ளனர். விமான நிலையம் மூலமாக கடாபி வேறு நாடொன்றுக்கு தப்பி செல்ல முனையலாம் இல்லை அதனூடாக தனது பூர்வீக கிராமத்திற்கு தப்பி செல்ல முனையலாம் என எண்ணப்படுகின்றது.

Edited by akootha

எத்தனுக்கு எத்தன் தான் வாழ்க்கை. கடாபி போர்க்கொடி உயர்த்துங்கோ என்று ஒரு போர்க்கோடியும் வாங்கி கையிலை கொடுத்து அனுப்ப கூடிய ஆள் இல்லை.

காட்டர் நசிகிறதை பார்த்துவிட்டு சொறிய போய்தான் றீகனிடை அடிவாங்கியவர் கடாபி.

லொக்கபீ குற்றதை மறந்து ஆளையும் வெளியிலை விடுகிறமாதிரி நடிச்சு போட்டு தான் பிருத்தானியாகாறன் ஆளோடை ஆளாய் சேர்ந்துநிண்டு அடிக்கிறான். அவ்வளவதிற்கும், பிரித்தானியா காறன் கடாபியிடம் ஓயில் வாங்குகிறதிற்கு தான் ஆளை வெளியில் விட்டவர்கள் என்று அமெரிக்காவில் கமரூனின் வருகையை எதிர்த்து ஆர்பாட்டங்கள் நிகழ்த்தியவர்கள்.

பாம்பின் காலை பாம்பறியும்.

  • தொடங்கியவர்

மேற்குலகம் எப்படியாவாது விரைவில் கடாபியை பிடிக்கவேண்டும் என விரும்புகின்றது. நேரடியாக களத்தில் இறங்கி அவர்களின் 'பாம்புக்காதுகள்' மூலம் இருக்கும் இடத்தை அறிய ஒட்டிக்கேட்டவண்ணம் உள்ளனர்.

கடாபியிடம் தாங்களே அவருக்கு விற்ற பல ஆயிரம் உயிர்களை கொள்ளக்கூடிய நச்சு வாயுக்கள் உள்ளன. அவற்றை கண்டுபிடிக்க கடாபியின் ஆட்களை பிடிக்கவேண்டும். அது அல்கைடாவின் கைகளில் போய்விடக்கூடாது என்ற பெரிய பயம். அதை விட பெரு ஆயுதங்கள் கூட வேறு எவரின் கைகளில் போய்விடுமோ என்ற பயம்.

  • தொடங்கியவர்

கடாபி எங்கே கடவுளுக்கே வெளிச்சம்

லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியையும், அவருடைய மகன்களையும் கையும் மெய்யுமாகப் பிடித்து மேலை நாட்டு ஊடகங்களுடைய வயிற்றில் பாலை வார்க்க முடியாது என்று போராளிகள் தெரிவித்துள்ளனர். கடாபி எங்கே உள்ளார் என்ற தேடல் முடிவே இல்லாத கயிறாக நீண்டு போவதாக போராளிகளுக்காக குரல்தரவல்ல முஸ்தாபா அப்டீல் ஜலீல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் எங்கே இருக்கக் கூடும் என்பதை தோராயமாகக்கூட தம்மால் கூற முடியாது என்றும் தெரிவித்தார். கடாபியை பிடித்தால் கிடைக்கக்கூடிய பத்து இலட்சம் டாலர் இப்போது பிசுபிசுத்துப் போயுள்ளது. மேலும் கடாபியை பிடிப்பது நமது நோக்கமல்ல என்று நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசன் கூறியதையும் முஸ்தாபா அப்டீல் ஜலீல் கருத்தையும் சேர்த்து முடிந்தால் எங்கோ ஓரிடத்தில் இடிப்பதையும் மறுக்க முடியவில்லை. கடாபியின் இறப்பர் பொம்மையை போட்டாவது கதையை முடிப்பார்கள் என்றால் அதுவும் நடந்தபாடில்லை.

இந்தக் கூத்தாட்டம் ஒருபுறம் போக ஏற்கெனவே கடாபியின் பேரில் இருந்த சொத்துக்களை எல்லாம் உலக நாடுகள் தத்தமது நாட்டு கஜானாக்களில் கொட்டி மூடிவிட்டன. இப்போது லிபியாவில் பாரிய ஸ்திரமற்ற நிலை காணப்படுகிறது. ஆகவே பறிமுதல் செய்த பணத்தை திரும்பவும் தரவேண்டும் என்று அரபு லீக் கேட்டுள்ளது. கடாபி மீது வீசிய குண்டுகளின் விலையை கழித்துப் பார்த்தால் கையும் கணக்கும் சரியாகும் என்பது தெரியாமல் அல்லாடுகிறது அரபு லீக். சோழியன் குடுமி சும்மாவா ஆடும்.

http://www.alaikal.com/news/?p=80550

  • தொடங்கியவர்

கடாபியின் ஒரு மனைவி, ஒரு மகள், 2 மகன்மார்கள் அண்டிய நாடான அல்ஜீரியாவுக்குள் புகுந்தனர்.

Gaddafi family members flee to Algeria

Algerian foreign ministry says toppled Libyan leader's wife, his daughter and two of his sons have reached Algiers.

http://english.aljazeera.net/news/africa/2011/08/2011829171617807937.html

  • கருத்துக்கள உறவுகள்

காடபி வீழ்ச்சி சீனாவிற்கு நல்ல அடியாக இருக்கும், அவன் வெளியேற்றியது பலருக்கு நல்லது, இனி அங்கும் வேலைக்கு போகலாம்

  • தொடங்கியவர்

மரணத்தின் விளிம்பில் லொக்கபி குண்டு வைப்பாளர்

கடந்த 1988 ம் ஆண்டு லொக்கொபி விமான குண்டு வெடிப்பில் சம்மந்தப்பட்டு 170 பேரின் மரணத்துக்குக் காரணமான கடாபியின் உறவினர் அப்டீல் பாசிற் அல்மகாரி இறக்கும் கட்டத்தை நெருங்கிவிட்டார்.

தற்போது முழுமையாக கோமா நிலையை அடைந்துவிட்ட இவர் மரணத்தின் வாசலை தொட்டபடி நிற்பதாக சி.என்.என் கூறுகிறது. கடாபியின் வீழ்ச்சியை தொடர்ந்து உணவு உண்பதை நிராகரித்த இவர் தற்போது மரணத்தை நெருங்கியுள்ளார். ஏற்கெனவே புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு மேலை நாடுகளை சமாதானப்படுத்தும் விதமாக ஒருவித ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் தற்போது வசதியான ஒரு வீட்டில் வைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

அதேவேளை சிறீலங்கா இராணுவத்தால் பிடிக்கப்பட்ட பல தமிழர் காணாமல் போயுள்ளது போல கடாபி இராணுவத்தால் கைது செய்யப்பட்ட 75.000 மக்களில் 11.000 பேரே எஞ்சியுள்ளனர் மற்றவர்களை காணவில்லை என்று போராளிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

http://www.alaikal.com/news/?p=80634

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.