Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைவ வினா விடை

Featured Replies

எனக்கு கண்ணைக் கட்டுது..... சாதிக்கு ஒரு முகம் ; தேசியத்துக்கு ஒரு முகம் , சமூகத்துக்கு ஒருமுகம் , சமயத்துக்கு ஒருமுகம் , ஆனால் உடம்பு ஒண்டு . இவையளை போல ஆக்களை நம்பி இவையளப் பெரிய வித்துவான்கள் எண்டு நம்பிற அப்பாவியளும் இருக்கத்தான் செய்யினம் . முந்தி ஒருகாலத்தில இதே கோதாரிவிழுந்த கதையளாலதான் சனம் கிறீஸ்தவத்துக்கு மாறிச்சுது . அப்ப தங்கடை ஊத்தையளை சவுக்காரம் போட்டு கழுவ வக்கில்லாத யாழ்ப்பாணியம் தான் மதம் மாறின ஆக்களைப் பாத்து ஒரு இறாத்தல் பாணுக்கும் மாவுக்கும் மாறின ஆக்கள் எண்டு கேவலப்படுத்தீச்சுது . இப்ப அதே ஜீனுகள் 2012லையும் மதத்தின்ரை பேரால சாதியையையும் , வர்க்க முரண்பாடுகளையும் சத்தி எடுக்க ஆராவது கேட்டால் உடனை துரோகி பட்டம் . எங்கை போய் நான் முட்ட .

  • Replies 95
  • Views 19.3k
  • Created
  • Last Reply

கொஞ்ச நாளாக பார்க்கின்றேன்

சைவ மதத்தின் பெரால் பல திரிகள் தொடர்ந்து திறக்கப்பட்டு அதற்குள் சிலர் துப்பவதில் ஈடுபடுகின்றனர். :( :(

சிறி சொன்னது போல்

வேண்டாம் இந்தத்துப்புதல்கள்.

முடிந்தால் உதவி செய்யயாவிட்டாலும்

ஒதுங்கியிருங்கள்.

நன்றி.

தமிழ் சிறி சொன்ன துப்பல் என்ன ? ஆறுமுகநாவலர் சொன்ன துப்பல் என்ன ? நீங்கள் சொன்ன துப்பல் என்ன ? சத்தியமாய் எனக்கு ஒண்டுமாய் விளங்கேலை விசுகர் .

நான் நினைக்கிறேன் சாதியம் சார்ந்த சமூகத்தை தலை குனிய வைக்கும் சில கேள்வி விடைகளை நீக்கலாம் அல்லது மாத்தி அமைக்கலாம் என்று. மற்றும்படி ஆறுமுகநாவலர் தமிழையும் சைவைத்தையும் காப்பாற்றி வளர்த்த ஒரு ஜானி.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கண்ணைக் கட்டுது..... சாதிக்கு ஒரு முகம் ; தேசியத்துக்கு ஒரு முகம் , சமூகத்துக்கு ஒருமுகம் , சமயத்துக்கு ஒருமுகம் , ஆனால் உடம்பு ஒண்டு . இவையளை போல ஆக்களை நம்பி இவையளப் பெரிய வித்துவான்கள் எண்டு நம்பிற அப்பாவியளும் இருக்கத்தான் செய்யினம் . முந்தி ஒருகாலத்தில இதே கோதாரிவிழுந்த கதையளாலதான் சனம் கிறீஸ்தவத்துக்கு மாறிச்சுது . அப்ப தங்கடை ஊத்தையளை சவுக்காரம் போட்டு கழுவ வக்கில்லாத யாழ்ப்பாணியம் தான் மதம் மாறின ஆக்களைப் பாத்து ஒரு இறாத்தல் பாணுக்கும் மாவுக்கும் மாறின ஆக்கள் எண்டு கேவலப்படுத்தீச்சுது . இப்ப அதே ஜீனுகள் 2012லையும் மதத்தின்ரை பேரால சாதியையையும் , வர்க்க முரண்பாடுகளையும் சத்தி எடுக்க ஆராவது கேட்டால் உடனை துரோகி பட்டம் . எங்கை போய் நான் முட்ட .

பிரச்சினை என்னவென்றால்

உடம்பு ஒன்று தான்

அப்பாவுக்கு மகனாக

அம்மாவுக்கு பிள்ளையாக

அணணனுக்கு தம்பியாக

தம்பிக்கு அண்ணனாக

மனைவிக்கு புருசனாக

மகனுக்கு அப்பாவாக.................???

ஆனால் ரோசம் கொஞ்சம் அதிகம்

இதில் எவரையும் எவரும் தூற்ற அனுமதிப்பதில்லை.

எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க முடியாது.

அப்படியானவர்களுக்கு வேறு பெயர்.......???

முதலில்

தமிழின் முதலாவது எண்ணான ஒன்று என்பதை சரியாக எழுதினால் எல்லாம் புரியும் கோ.

நான் நினைக்கிறேன் சாதியம் சார்ந்த சமூகத்தை தலை குனிய வைக்கும் சில கேள்வி விடைகளை நீக்கலாம் அல்லது மாத்தி அமைக்கலாம் என்று. மற்றும்படி ஆறுமுகநாவலர் தமிழையும் சைவைத்தையும் காப்பாற்றி வளர்த்த ஒரு ஜானி.

கடுகுக் களவும் களவுதான் , கற்புரக் களவும் களவு தான்.

எப்படி ஆறுமுக நவாலர் சைவத்தையும் வளர்த்தார் ? இப்படி சாதியத்தையும் வர்கவேறுபாடுகளையும் அப்பாவிகளுக்கு ஊட்டியா ? அப்பிடி ஒரு வளர்ச்சி இன்றைய இளையவர்களுக்கு வேண்டாம் . ஒருவிடையத்தில் சரியாக இருந்திருக்கிறார் , பல கல்விச்சாலைகளை உருவாக்கினார் . ஏன் இந்த ஆறுமுக நாவலரால் தாழத்தப்பட்டவர்களுக்கும் சமயதீட்ச்சை கொடுத்து எல்லோரையும் சமனாக " சைவன் " ஆக்க முடியாமல் போனது ?

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுக நாவலர்

சாதி வெறியர் என்பது பலராலும் அறியப்பட்ட ஒன்று.

இன்றையநிலையில் இது எதற்கு?

என்பதே எமது கேள்வி?

6. பாவங்கள் ஆவன யாவை?

கொலை, களவு, கள்ளுக் குடித்தல், மாமிசம் புசித்தல், பொய் பேசுதல், வியபிசாரம், சூதாடுதல் முதலானவைகள்.

வியபிசாரம் ?

அப்பிடீன்னா??

சுத்தமா புரியல்லியே .. A.நாவலர்! :unsure:

விசமப்பிரசாரம் :-கதைகட்டுதல் தூற்றுதல் போன்றவை என நினைக்கிறேன்

ஆறுமுக நாவலர்

சாதி வெறியர் என்பது பலராலும் அறியப்பட்ட ஒன்று.

இன்றையநிலையில் இது எதற்கு?

என்பதே எமது கேள்வி?

என்னை பொறுத்த வரையில் சாதி என்பது குலத்தொழிலை குறிப்பது என்றுதான் யாழ்பாண கலாச்சாரம் என்ற நூல் மூலம் தெரிகிறது.அது பின்னர் அருகி அல்லது மருவி வேறு விதமாகத்தலை எடுத்தது.தற்போதைய நிலையில் நேக்கு தேவையில்லாத ஒன்றாகத்தான் தெரிகிறது.

:o:D :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுக நாவலருக்கு வகுப்பெடுப்பதில் வந்து நிற்குது.

இனி .............???

ஆறுமுகநாவலரையும், சாதியத்தையும் ஆதரித்துக் கொண்டு எக்காலத்திலும் தமிழ் தேசியத்துக்கு ஆதரவு கொடுக்க முடியாது. அப்படி கொடுப்பது ஒன்றில் அறியாமை அல்லது தெரிந்து கொண்டும் சாதியத்தை கைவிட மறுக்கும் நேர்மையற்றதன்மை.

சில விடயங்கள்

இன்றோ நாளையே என புதைத்துவிடக்கூடியன அல்ல.

அவற்றை படிப்படியாகத்தான் புதைக்கணும். கையாளணும். தலைவரும் இது விடயங்களில் அப்படித்தான் நடக்கவேண்டியிருந்தது. இருக்கிறது.

இல்லாது விட்டால் இருப்பதும் உடைந்து போகும்.

தேசியம் என்பதும் தேசியத்துக்கான ஆதரவு என்பதும் மதம் சாதி வட்டாரம் தாண்டிய ஒற்றுமையில் வருவது. அந்த ஒற்றுமையை அடைந்த பின்புதான் பயணத்தை தொடர முடியுமென்றால் எதிரி அதற்குள் எல்லோரையும் அழித்துவிடுவான்.

அதே நேரம் அதற்குள் போய் நின்று மல்லுக்கட்டத்தொடங்கினால் இலட்சியம் அடிபட்டுவிடும். அல்லது காலதாமதம் ஆகிவிடும். எதிரியும் அதைப்பாவித்து எம்மை பிரித்து மேலும் எம்மை அழித்துவிடுவான்.

சிங்களவன் எல்லோரையும் தமிழராகவே பார்க்கின்றான். எல்லோரையும் அழிப்பதே அவனது நோக்கம். அந்தவகையில் தமிழர் ஒற்றுமைப்படவேண்டிய தேவையுள்ளது. புலிகள் பலமாக இருந்தநிலையில் எல்லாமே கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. தற்போது அவை மெல்ல மெல்ல முகம் காட்டத்தொடங்குகின்றன. அவற்றை நாம் மேலும் வளர்த்துவிடக்கூடாது என்பதே எனது கருத்து. அதையே இங்கு சுட்டிக்காட்டினேன்.

இந்து மதம் பற்றி எழுதத்தொடங்கினால் சாதி பற்றியும் எழுதுகின்றார். அத்துடன் தேசியத்தையும் அதற்காக உழைப்போரையும் தொடர்பு படுத்துகிறார்கள். இது தான் எனக்கு புரியாதது. இந்து மதமும் தேசியமும் ஒருவரின் இரண்டு கண்கள் போன்றன. இவற்றை ஏதற்காக விவாதப்பொருள் ஆக்குவான் என்பதே எனது கருத்து.

அத்துடன் ஆறுமுகநாவலரை விமர்சிக்க முன்னர்

அவர் தமிழுக்கு செய்தவைகளில் ஒரு வீதத்தையாவது எவராவது செய்துள்ளனரா???

ஒரு அடிமையும் எசமானும் சேர்ந்து போராடி விடுதலையை அடைய முடியாது. விடுதலை என்பது அடிமைத் தளைகளில் இருந்து வெளிவருவது. விடுதலையை ஒன்றுபட்ட ஒற்றுமையின்றி பெறமுடியாது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமாக சாதி விடுதலையையும் சேர்க்காத காரணத்தினால் தான் பல்லாயிரக்கணக்கான தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள் இன்னும் விடுதலையை அடையாமல் ஆளும் வர்க்கத்தாலும் உயர் சாதிகளாலும் மோசமாக ஒடுக்கப்படுகின்றனர்.

புலிகள் இராணுவ அமைப்பின் மீது பிரதான கவனம் செலுத்தும் போதும் தம் கட்டமைப்பில் சாதியத்தாக்கம் இல்லாது பார்த்துக் கொண்டமையும் இதனால்தான். சிகை அலங்காரம் செய்பவர்களை வீடுகள் சென்று வேலை செய்வதை தடை செய்தது போன்று பல விடயங்களைச் செய்து இருந்தார்கள். அத்துடன் அவர்களின் தமிழீழ சட்டவாக்கத்திலும் பல நல்ல விடயங்களை உட்புகுத்தி இருந்தார்கள்.

இந்து மதம் பற்றி எழுதத்தொடங்கினால் சாதி பற்றியும் எழுதுகின்றார். அத்துடன் தேசியத்தையும் அதற்காக உழைப்போரையும் தொடர்பு படுத்துகிறார்கள். இது தான் எனக்கு புரியாதது. இந்து மதமும் தேசியமும் ஒருவரின் இரண்டு கண்கள் போன்றன. இவற்றை ஏதற்காக விவாதப்பொருள் ஆக்குவான் என்பதே எனது கருத்து.

ஏனெனில் இந்து மதத்தின் சடங்குகள், வழக்கங்கள் என்ற போர்வையில் மீண்டும் மீண்டும் சாதி சம்பந்தமான விடயங்களை உட்புகுத்த முனைவதால்தான் சாதிய முறையை எதிர்ப்பவர்கள் அதைப் பற்றி எழுதவேண்டி வருகின்றது. கடவுள், கருணை, அன்பு, பகிர்தல் போன்ற அருமையான விடயங்களை மதத்தின் மூலம் பரப்புவதற்கு பதிலாக சாதியத்தை பரப்பும் போது அதை எதிர்ப்பது முக்கியமானதாகின்றது.

ஒருவர் இந்து மதத்தின் பெயரால் சாதியத்தை புகுத்த முனையும் போது, அதை தேசியத்தை ஆதரிக்கும் ஒருவர் ஆதரித்தால் நிச்சயம் அந்த இடத்தில் அவரது நேர்மை மீது சந்தேகம் வருகின்றது. நீங்கள் சொன்ன மாதிரி இந்து மதமும் தேசியமும் இரண்டு கண்களாகக் கொண்டவர் சிவனையோ அல்லது எந்த இந்து மதக் கடவுளையோ கும்பிடுவது பற்றி யாரும் கேள்விகேட்கப் போவதில்லை. அதே அதே நேரத்தில் அவர் இந்து மதத்தின் பெயரால் கோயிலில் மேல்குடி மட்டும்தான் நுழையலாம் என வாதிட்டால் நிச்சயம் கேள்வி கேட்கப்படும்

அத்துடன் ஆறுமுகநாவலரை விமர்சிக்க முன்னர்

அவர் தமிழுக்கு செய்தவைகளில் ஒரு வீதத்தையாவது எவராவது செய்துள்ளனரா???

இவரை விட தமிழுக்கு பெரும் நன்மைகள் பல செய்த அறிஞர்கள் எவ்வளவோ பேர் இருக்கினம். சாதியத்தை வெறுத்து பாடிய பாரதியாரும், எல்லாரையும் சமமாக நடத்து என்று போதித்த திருவள்ளுவரும் கூட எம் மொழியில் பிறந்தவர்கள் தான்

---------------------

கனக்க வேண்டாம் எங்கடை சுவாமி விபுலானந்தர் எங்கை போனவர் ? அவரும் இப்பிடியா துப்பிக் கொண்டு தமிழையும் சைவத்தையும் வளர்த்தார் ?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தோடு எந்த முரண்பாடுமில்லை.

ஆனால் அடிபட்டு வெட்டுப்பட்டு தோற்ற வயது சொல்லுது

இதுகளை தொடாதீர்கள் என்று?

  • கருத்துக்கள உறவுகள்

யாழை மெல்லமெல்ல ஒரு சாதிவெறி பிடித்த தளமாகக் காட்டவே ஆறுமுக நாவலரின் சில மூடக் கருத்துக்களும் இங்கே பதிவேற்றப் படுகின்றன.... சாதியத்தை அழுத்தமாக வளர்த்துவிட்டவர்களில் ஆறுமுக நாவலரும் ஒருவர்...அவர் சைவத்துக்கும் தமிழிற்க்கும் செய்த நன்மைக்கு சற்றும் குறைவில்லாதது அவர் எம் சமூகத்திற்க்கு பரப்பிய சாதிய விசக் கிருமியி என்னும் தீமையும்...நாங்கள் எவ்வளவு வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருந்து கொண்டு எவ்வளவு பிற்போக்குத்தனமான விடயங்களை பேசிக்கொண்டிருக்கிறோம்....ஆறுமுக நாவலரின் போதனைகள் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் சமூகத்தை மெதுமெதுவாகக் கெடுக்கும் விசக்கிருமிகளையும் மெல்ல மெல்ல நல்ல போதனைகளினூடு பரப்புகிறது...இப்ப சில தமிழினத் துரோகிகள் எமது உணர்வுகளை சிதைக்க செயற்படுவதுபோல்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போதனைகள் யாழில் இருந்து நீக்கப்படவேண்டும் அல்லது மட்டுறுத்துனர்களால் குறிப்பிட்ட விடயங்கள் வெட்டி அகற்றப் படவேண்டும்..இவை மிகக்கேவலமான விடயங்கள் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளான...இவை யாழின் களவிதிகளுக்கு முரணானவை...எம்போன்ற இளையவர்களை தவறாக வழிநடத்தும் சில விடயங்களும் ஆறுமுக நாவலரின் போதனைகளினூடு இங்கு பரப்பப்படுகின்றன...ஆறுமுக நாவலரின் பல பிற்போக்குத்தனங்களுடன் தயவு செய்து யாரும் இங்கு எம் தலைவனின் முற்போக்கான தமிழீழப் போராட்டத்தை முடிச்சுப் போடாதீர்கள்..அது எம்போராட்டத்தை நாங்களே கேவலப் படுத்துவது போலாகும்...இதுக்குள் ஏன் தமிழ்தேசியம் வந்தது..?

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நானும் குறிப்பிட்டேன்

ஆறுமுகநாவலர் சாதி வெறியர் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

தற்போதைய சூழலில் ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு உள்ள

அதை தூக்கி இங்கே கொண்டு வருவதையே குறிப்பிட்டேன்.

அத்துடன் மதங்கள் சம்பந்தமான விடயங்களைத்தவிர்ப்பது நல்லது என்பது எனது கருத்து.

அந்த வகையில் தமிழ்சிறியின் கருத்தோடு ஒத்துப்போகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்ற ஒரு அடையாளமே,ஒற்ரை மந்திரமே உலகமெங்கும் பரந்திருக்கும் எங்களை ஒன்றினைக்கிறது...திராவிடமோ,சாதியமோ,வட்டாரமோ,பிரதேசவாதமோ,இந்து சமயமோ,கிறீஸ்தவமோ அல்ல...எங்கள் ஒற்றுமைக்கு ஆப்பு வைக்கும்,எங்களுக்குள் பிரிவினைகளை வளர்க்கும் கருத்துக்களைப் பரப்புகின்றன ஆறுமுக நாவலரின் சில போதனைகள்...ஏற்கனவே ஆயிரத்தெட்ட்டுப் பிரிவினைகள் எங்களுக்குள்..அதனால் நாங்கள் இழந்தவைகள் போதும்..இன்னும் இன்னும் தமிழினத்தைப் பிரிக்கும் கருத்துக்களை தயவு செய்து பரப்பாதீர்கள்...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுபேஸ்

பச்சை முடிவடைந்து விட்டது

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கீழ்த்தர‌ சாதி வெறி பிடித்த செய்திகளை இணைப்பதற்காக ஆறுமுகநாவலர் போன்றோரை யாழில் தடை செய்ய வேண்டும்...இனி மேலாவது நாங்கள் சாதி,மத,இன வேற்றுமைகளைந்து ஒன்றாக இணைய வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சந்தோசமாக வந்து போகும் தளம் இது ஒன்று தான் இதற்குள்ளும் சைவம் வளர்க்கிறம்,அசைவம் வளர்க்கிறம் என்று கொண்டு தேவை அற்ற தலைப்புக்களை எழுதி மக்களை குளப்பாதீர்கள்..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சைவ வினாவிடை என்ற பெயரில் குறித்த ஒரு சாதியினருக்காக எழுதப்பட்டுள்ள வினா விடை இது. இதில் பெரும்பாலான விடைகள் இன்றைய காலத்திற்குத் தகுந்ததாக இல்லாதிருப்பதுடன் சுகாதாரத்திற்குப் புறம்பானவையாகவும் உள்ளன. சைவ சமயத்தின் பெயரில் இவ்வாறான பிற்போக்குத் தனமான கருத்துக்களைச் சுமப்பதை விட குப்பையில் போடலாம்.

மனித முன்னேற்றத்திற்கேற்றவாறு மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்ளாத எந்தவொரு மதமோ மொழியோ கலாச்சாரமோ நிலைத்திருக்க முடியாது.

இலங்கையில் இருக்கும் ஏனைய மதத்தினரிடம் சாதி வேற்றுமைகள் இல்லை என்கிறீர்களா? இங்கே ஆறுமுகநாவலரின் எழுத்துக்களை பார்த்து கொந்தழிக்கின்றீர்கள்.அங்கே சகல மதத்தினரிடமும் ..ஏதோ ஒருவகையில் ஏற்றத்தாழ்வுகள் நட்டமரமாக மேலோங்கி எழுந்து நிற்கின்றது.

சாதி வேற்றுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் இதுதான் எனது வேண்டுதல்.

  • தொடங்கியவர்

13. மாணிக்கவாசக சுவாமிகளிடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?

(1) சிவபெருமானே நரியைக் குதிரை ஆக்கிக்கொண்டு வரும்படிக்கும், மண் சுமந்து அடி படும்படிக்கும் பெற்றுக் கொண்டது.

(2) புத்தர்களைத் தருக்கத்தில் வென்று ஊமைகள் ஆக்கிப் பின் ஊமை தீர்த்துச் சைவர்கள் ஆக்கியது.

(3) பிறவி தொடுத்து ஊமையாய் இருந்த ஒரு பெண்ணை ஊமை தீர்த்துப் புத்தர்கள் வினாவிய வினாக்களுக்கு விடை சொல்லும்படி செய்தது.

(4) தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும்படி பெற்றுக்கொண்டது.

(5) எல்லாருங் காணக் கனகசபையின் உள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.

vacakar.jpg

  • தொடங்கியவர்

14. இந்த அற்புதங்களினாலே யாது விளங்குகின்றது?

சைவசமயமே மெய்ச்சமயம் என்பது நன்றாக விளங்குகின்றது.

15. தமிழ் வேதம் ஓதுதற்கு யோக்கியர் யாவர்?

மதுபானமும் மாமிச போசனமும் இல்லாதவராய் ஆசாரம் உடையவராய், சிவதீ?க்ஷ பெற்றவராய் உள்ளவர்.

16. தமிழ் வேதத்தை எப்படி ஓதல் வேண்டும்?

சுத்தி செய்யப்பட்ட இடத்தில் பீடத்தின் மேலே தமிழ் வேத புத்தகத்தை வைத்து, அருச்சித்து, நமஸ்காரஞ் செய்து, இருந்துகொண்டு, அன்புடனே ஓதுதல் வேண்டும், புத்தகத்தை நிலத்திலேனும், ஆசனத்திலேனும், படுக்கையிலேனும், மடியிலேனும், வைக்கல் ஆகாது.

17. தமிழ் வேதத்தை அன்புடனே நியமமாக ஓதினவர் யாது பெறுவர்?

சிவபெருமானுடைய திருவடிக் கீழ்ப் பேரின்பத்தைத் அநுபவிப்பர்.

சைவவினாவிடை முதற்புத்தகம் முற்றுப்பெற்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.