Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியக் கடற்படை துரத்திச் சென்ற சீன உளவுக் கப்பலுக்கு அடைக்கலம் கொடுத்த சிறிலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ வியாழக்கிழமை, 01 செப்ரெம்பர் 2011, 05:53 GMT ] [ கார்வண்ணன் ]

china%20ship.jpgமீன்பிடி இழுவைப் படகு போன்று வடிவமைக்கப்பட்ட சீன உளவுக் கப்பல் ஒன்று இந்தியாவைக் கண்காணித்து விட்டு சிறிலங்காவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிய அந்தமான் கரைக்கு அப்பால் இந்த சீன உளவுக்கப்பல் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய ரேடர்களில் சிக்குவதற்கு முன்னர்- முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பிரதேசத்தில் குறிப்பிட்ட சீன உளவுக்கப்பல் சுமார் 20 நாட்கள் வரை தரித்து நின்று வேவு பார்த்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சந்தேகத்துக்கிடமான அந்தக் கப்பலை சீன உளவுக்கப்பல் என்று உறுதி செய்து கொண்ட இந்தியக் கடற்படை உடனடியாக அந்த இடத்துக்கு போர்க்கப்பல்களை அனுப்பியது.

அதற்குள் அந்த சீன உளவுக்கப்பல் அனைத்துலக கடற்பரப்புக்குள் சென்று விட்டதால், இந்தியக் கடற்படையால் எதுவும் செய்ய முடியாது போனது.

எனினும் சீன உளவுக்கப்பல் சிறிலங்கா கடற்பரப்புக்குள் சென்று மறையும் வரை இந்தியக் கடற்படை பின் தொடர்ந்து சென்றுள்ளது.

தப்பிச் சென்ற சீன உளவுக்கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்திருக்க வேண்டும் என்று கருதப்படுவதாகவும் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சீன உளவுக்கப்பலில் 22 ஆய்வு கூடங்கள் இருக்கலாம் என்று இந்தியக் கடற்படை நம்புகிறது.

இந்தக் கப்பல் இந்து சமுத்திரத்தில் நீர்மூழ்கி மற்றும் விமானம் தாங்கி கப்பல்களுக்குத் தேவையான தரவுகளைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று இந்திய அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்தக் கப்பலில் உள்ள ஆய்வு கூடங்களில் இருந்து இந்து சமுத்திரத்தில் வெவ்வேறு இடங்களின் நீரின் ஆழம், வெப்பநிலை, கடலடித்தன்மை போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கலாம் என்றும், இவை ரோபிடோக்களை பயன்படுத்துவதற்கு முக்கியமானவை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா பாரிய விமானம் தாங்கி கப்பல் ஒன்றை கட்டி வருகிறது. இதன் கட்டுமானப்பணிகள் 2017இல் முடிவடையவுள்ள நிலையில், அதற்கு இந்தத் தரவுகள் தேவைப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

சீனக் கடற்படை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது பலத்தைப் பெருக்கி வருவது இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளதாகவும், இந்திய ஊடகம் கருத்து வெளியிட்டுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20110901104590

  • கருத்துக்கள உறவுகள்

அந்தமான் கரைக்கு அப்பால் இந்த சீன உளவுக்கப்பல் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தமான் தீவில் இருந்து கொழும்பு துறை முகம் வரை துரத்தி சென்றும் பிடிக்க முடியவில்லை இந்தியாவால்...பிறகு எப்படி கச்சதீவு ,மன்னார் போன்ற பகுதியில் இருந்து சீனாக்காரன் இந்தியாவுக்குள் புகும் பொழுது துரத்தி பிடிகப்போறாங்கள்

அந்தாமன் இலங்கைக்குச் சொந்தமானது தானே? அங்கிருந்து ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு எதுவுமின்றி மெதுவாக செல்லும் சரக்கு கப்பலாயிருந்தால் புலிகளின் கப்பலுக் போட்டது போல் குண்டு ஏதாவது போடலாம். நீங்க சொல்ற சீனக் கப்பல் வேகம் கூடிய கப்பலோ என்னவோ. சீனாக்காரனிட்டை இந்தியா தொழில்நுட்ப ரீதியாக வாலாட்ட முடியாது. அணுக்குண்டு ஒண்டுதான் இந்தியாவின் கடைசி ஆயுதம். எந்த ஆயுதத்தையும் விட சிறந்தது ஆதிக்கம். அது சீனாக்காரனிட்ட ரொம்பவே இருக்கு. இந்தியா ஒரு வல்லரசு வாலரசு எண்ணு சொல்லி காமடி கீமடி பண்ணாதீங்க சார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் சீனாக்காரன் எனும்போது புலிகள்தான் முதல் எதிரி (டில்லி ஆதிக்கவர்க்கத்துக்கு)இந்தியக்காரனுக்கு

உள்நாட்டு இலஞ்ச பரிமாற்றுக்களுக்காக இலங்கையிடம் வாங்கிய படகுகளில் சீனாக்கரனை எப்படி துரத்தி பிடிக்கமுடியும்?. படகுகளை இலங்கை கட்டும்பொழுதே சீனாகாரன் கொடுத்த Transmitters வைபட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாமன் இலங்கைக்குச் சொந்தமானது தானே? அங்கிருந்து ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற வேண்டும்!

அந்தமானில்லை, கச்சதீவுதான் இலங்கைக்கு தற்பொழுது சொந்தமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாமன் இலங்கைக்குச் சொந்தமானது தானே? அங்கிருந்து ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற வேண்டும்!

அந்தமானில் அகழ்வாராய்ச்சி செய்தால்...சிங்கள அரசர்களின் எச்சங்கள் கிடைக்கும்.

சீன உதவியுடன், ஸ்ரீலங்கா அங்குள்ள மண்ணை தோண்டிப் பார்த்து... அவற்றை வெளிக்கொணர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிருந்து இந்தியாவை உளவு பார்த்த சீனக் கப்பல் (VIdeo in)

  • Friday, September 2, 2011, 10:25

இந்தியக் கடற்படையினரின் நடவடிக்கைகளை சீன உளவுக் கப்பல் ஒன்று இலங்கைக் கடற்பரப்பில் நங்கூரமிட்ட நிலையில் கண்காணித்துள்ளதாகக் தகவல்கள் வெளிவந்துள்ளன.குறித்த சீன உளவுக் கப்பலில் 22 ஆய்வு கூடங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.ராடார்களுக்கு சிறிய ரக மீன்பிடிப் படகினைப் போன்று தோற்றமளிக்கக் கூடிய வகையில் இந்த கப்பல் அமைந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.அந்தமான் தீவுப் பகுதியிலிருந்து இந்து சமுத்திரத்தின் வரைபடங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

மிகவும் முக்கியமான பல தரவுகளை இந்தச் சீன உளவுக் கப்பல் சேகரித்துக் கொண்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.திரட்டப்பட்ட தகவல்கள் தாக்குதல்களுக்கு பயன்படுத்தக் கூடியவை எனவும் குறிப்பிட்டுள்ளது.இந்திய கடற்படையினரை பின்தொடர்ந்து சென்ற சீன உளவுக் கப்பல் திடீரென கொழும்புக்கு சென்று விட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கடற்படையினரின் நடவடிக்கைகளை சீன உளவுக் கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்ட நிலையில் கண்காணித்துள்ளதாகக் தகவல்கள் வெளிவந்துள்ளன.குறித்த சீன உளவுக் கப்பலில் 22 ஆய்வு கூடங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ராடார்களுக்கு சிறிய ரக மீன்பிடிப் படகினைப் போன்று தோற்றமளிக்கக் கூடிய வகையில் இந்த கப்பல் அமைந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.

அந்தமான் தீவுப் பகுதியிலிருந்து இந்து சமுத்திரத்தின் வரைபடங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

மிகவும் முக்கியமான பல தரவுகளை இந்தச் சீன உளவுக் கப்பல் சேகரித்துக் கொண்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.திரட்டப்பட்ட தகவல்கள் தாக்குதல்களுக்கு பயன்படுத்தக் கூடியவை எனவும் குறிப்பிட்டுள்ளது.இந்திய கடற்படையினரை பின்தொடர்ந்து சென்ற சீன உளவுக் கப்பல் திடீரென கொழும்புக்கு சென்று விட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க சீனக்கப்பலொன்று அந்தமானுக்கு அருகில் இந்திய கடற்படையின் நடவடிக்கைகளை வேவு பார்த்ததாகவும் வேவு பார்த்த கப்பலை இந்திய கடற்படை அவதானிக்கத் தொடங்கியதும் அக்கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்ததாகவும் இந்திய இணையத்தளம் தெரிவித்திருந்த இந்தச் செய்தியை இலங்கைக் கடற்படை முற்றாக மறுத்துள்ளது.

இந்தக் கப்பலில் உள்ள ஆய்வு கூடங்களில் இருந்து இந்து சமுத்திரத்தில் வெவ்வேறு இடங்களின் நீரின் ஆழம், வெப்பநிலை, கடலடித்தன்மை போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கலாம் என்றும், இவை ரோபிடோக்களை பயன்படுத்துவதற்கு முக்கியமானவை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத செய்ய உளவு கப்பலா தனியா போவும்?

இந்துசமுத்திரமூடாக பயணிக்கும் சீன சரக்கு கப்பல்கள் & அதற்கு மேலே நிறுத்தப்பட்டிருக்கும் துணைக்கோள்கள் போதாதா?

இந்திய ரேடர்களில் சிக்குவதற்கு முன்னர்- முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பிரதேசத்தில் குறிப்பிட்ட சீன உளவுக்கப்பல் சுமார் 20 நாட்கள் வரை தரித்து நின்று வேவு பார்த்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது

இருபதுநாள் அங்கின நின்னுகிட்டு வேவுபார்க்க சீனாவும் ...

அத 20பது நாளா கண்டுபிடிக்க முடியாமபோக ...இ(ஹி)ந்திய........ பன்னிகளும்..

ஒண்ணும் வாயில விரலை வைச்சி சூப்பிக்கிட்டு இருக்குற

தொழில்நுட்பத்தை கொண்டில்லைன்னு ..

நானு சொன்னா யாரு நம்புவா? படா பேஜாரா போச்சு!

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா... நான் வந்து உளவு பார்த்தேன், அதுக்கு.... இப்ப, என்னா... பண்ணப் போறே... என்று சீனா கேட்டால்...

இந்தியா தலையைத் தான் சொறிஞ்சு கொண்டு நிக்கும்.smiley-think005.gif

இதை இந்தியா... கண்டும் காணாமல் இருப்பதே... இந்தியாவுக்கு நன்மையளிக்கும்.tongue.gifsmiley-sleep019.gif

இந்திய உளவுக்கும் (ரோ) பாதுகாப்பு செயலகத்திற்கும் இது அவமானகரமான செயல். இந்திய பாதுகாப்பு செயலாளர் மேனன் அவர்கள் இது பற்றி ஒன்றும் கூறவில்லை. டெல்லி தொடர்ந்தும் விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்றே சொல்லிவருகின்றது, ஆனால் இந்த கொள்கையில் மாற்றம் இல்லாவிடில் நாடு ஒருநாள் உடைந்தே தீரும்.

20 நாட்கள் தங்கியிருந்த உளவுக் கப்பலைப் பிடிப்பதற்கு முடியவில்லையென்றால், அவதானிப்பில் ஏதோ பலவீனம்தான். அதுவும் இலங்கைக்குத் தப்பிச் சென்றுவிட்டதென்றால் இலங்கை ஒரு பலமான பிரதேசமா? எல்லாமே வேடிக்கையாக இருக்கிறது.

உருப்படியாக, நீதியாக எதையும் செய்யத்தெரியாத, நாச வேலைகளில் மட்டும் கைதேர்ந்த இந்தப் பலவீனமான காட்டுமிராண்டிகளை கண்மூடித்தனமாக நம்பும் ஒரு குழுவினரும் இங்கு உண்டு.

நமக்குக் கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காமல் போனதற்கும் இந் நிகழ்விற்றும் என்ன சம்பந்தமுண்டு? சம்பந்தப்படுத்த விரும்பினால் கண்ணைமூடிக் அகாண்டு எதையாவது எழுதிச் சம்பந்தப் படுத்தலாம். அததான் கண்மூடித்தனம் என்பது.

இந்திய உளவுக்கும் (ரோ) பாதுகாப்பு செயலகத்திற்கும் இது அவமானகரமான செயல். இந்திய பாதுகாப்பு செயலாளர் மேனன் அவர்கள் இது பற்றி ஒன்றும் கூறவில்லை. டெல்லி தொடர்ந்தும் விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்றே சொல்லிவருகின்றது, ஆனால் இந்த கொள்கையில் மாற்றம் இல்லாவிடில் நாடு ஒருநாள் உடைந்தே தீரும்.

இந்திரா அம்மையாருக்கு பின்னர் இந்தியாவில் பாதுகாப்பிற்கு என்று ஒரு கொள்கை இருக்கவில்லை. BJP காலம் பாதுக்காப்பு கொள்கைகளில் ஒரு தேக்கம் நிலவிய காலம். அவர்கள் எதுவும் செய்ய இல்லை. இப்போது ஊழலும் பழிவாங்களும் தான் கொள்கைகள். சீனா தெய்வம் மாதிரி நின்றுதான் அறுக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அரசன் மாதிரி, பயங்கரவாதத்தை பாவித்து அன்றன்றே அறுத்துகொண்டுவருகிறது.

இந்தியா தற்போது உள்நாட்டு, அயல்நாட்டு, பாதுகாப்பு துறைகளில் அதிவேகமான சரிவை சந்தித்துக்கொண்டிருக்கிறது. ரோ இந்த திருகு தாளங்களுக்கு வேளியே அல்ல. அவர்களும் இதற்குள் உள்ளடங்குவர்.

ஒரு சிறிய கதை. முன்னொரு காலத்தில் ஒரு தலையாரியும் ஒரு கில்லாடியும் இணைபிரியாத தோழர்களாக இருந்தார்கள், அமெரிக்கன் என்ற அந்த தலையாரி தனது வீட்டில் திருடிய ஒசம்மா என்ற திருடியை தேடிக்கொண்டு திரிந்தான். அவனது நண்பனான பாகிஸ்தான் என்ற கில்லாடி தன்னை எப்படி அமெரிக்கன் கண்டுகொள்வான் என்று நினத்து கொண்டு, தனது நண்பனுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, அந்த திருடியுடன் தனது கட்டிலில் கட்டி புரண்டுகொண்டிருந்தான். அமெரிக்கன் தனது நண்பனுக்கு சற்றும் அசுகை காட்டாமல், நண்பனின் அறைக்குள் நுளைந்து, அவனோடு ஒரே கட்டிலில் படுத்திருந்த திருடி, ஒசம்மாவை கள்ளமாக தூக்கி கொண்டுவந்துவிட்டான்.

இந்தகதை எப்படி நடந்தது என்று இப்போதுள்ள காங்கிரசுக்கு பிறகு வரப்போகும் அரசாங்கம் நிதானமாக ஆராய வேணும். நன்மைக்கோ, தீமைக்கோ, கிளின்ரன் காலத்தில் அமெரிக்கா மிகச்சாதகமான அய்ல்நாட்டுறவுகளில் அள்ளுப்பட்டுப்போயிருந்தது. கடைசி ரவுடி வடகொறியா கூட கிளின்ரனுடன் சிநேகிதம் காட்டிவந்த காலம். கிளின்ரன் அயல்நாடுகளின் நட்பை மேலும் இறுக்கி, ஆயுதத்தின் மூலமில்லாமல், பொருளாதரத்தின் மூலம் அமெரிக்கவை கட்டி எழுப்ப விரும்பினார். அயல்நாடுகளையும், ரஸ்சியாவையும் திருப்தி படுத்துவதற்காக, பனிப்போர்முடிவடைந்துவிட்டது என்று காரணம் கூறி, பாரிய ஆயுதக்குறைப்பு செய்து அமெரிக்கவின் போராயத்தநிலையை தகரவிடார். CIA போன்ற அமைப்புக்கள் வலுவிழந்தன. இதனால் அல்கைடா அமெரிக்காவிற்குள் உள்ளட்டு தாக்குதலை நிகழ்த்தியது. புஸ் கொள்கைகளை தோசைபிரட்டல் செய்தார். பொருளாதாரத்தை சீரழியவிட்டுவிட்டு, போராயுதத்தை மீளக்கட்டினார். CIA சரித்திரம் காணத புனர்நிர்மானத்தை கண்டது. புதிய அதிபர் ஒபாமா பதவிக்கு வரும்போது, அமெரிக்கா 21 நூற்றாண்டு போர் முறைகளுக்குள் சென்று கொண்டிருந்தது. ஆமிகளை தரையிறக்காமல் ஆகாயத்திலிருந்தே றோன்கள் சண்டைகளை நிகழ்த்திகொண்டிருந்தன. விவேகியான ஒபாமா புதிய அடுக்கணிககளைப்ப்பயன்படுத்தி ஒசாமா பின் லேடனை இலகுவில் மாட்டிவிட்டார்.

ரோவை மீளக்கட்டியெழுப்பி, சீனாவின் முத்துமாலை வடத்தையுடைத்து தெங்கிழக்காசியாவை சீனாவிடமிருந்து மீட்பதென்பது நடக்கமுடியாத விசையமல்ல. ஆனால் அதற்கு இந்திரா காந்தி மாதிரி ஒருதலைவர், இந்த காங்கிரசு ஆட்சிக்கு பின்னர் வரவேண்டும். அவ எப்படி பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைத்து முன்னர் சீனாவுக்கு பாடம் புகட்டினாரோ, அதேபோல், இந்தமுறை சிங்கள ஸ்ரீலங்காவின் முதுகெலும்பை உடைத்து மற்ற பாடத்தை சீனாவுக்கு புகட்ட வேண்டும். அதன் பின் சீனா பூனை அடுப்பங்கரையை நாடாது. உளவு பார்த்துவிட்டு இலங்கைக்குள் ஒளியாது.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.