Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொக்கை திரி இணைத்தேனா , மொக்கை பதிவு எழுதினேனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

e0aeaae0aeb0e0aebee0ae9.jpg

Uploaded with ImageShack.us

இந்த பதிவுலகம் விசித்திரம் நிறைந்த பல சம்பவங்களைச் சந்தித்து இருக்கின்றது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இந்தச் சம்பவமும் விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.

என் பேரோ வரோதயன்;. வரோ என்ற பெயரில் பதிவுகளை ஆரம்பத்தில் எழுதினேன். வலையில் ஈ மொய்த்தது. வாக்குப் போட யாருமில்லை. “அடச்சீ! இதெல்லாம் ஒரு பதிவா?” என்று கொமன்ட் பண்ணக் கூட ஒருவருக்கும் தைரியம் வரவில்லை. பின்னர் மன்னார்க்குடி ஜோசியர் சொன்னது போல என் அப்பாவின் முதல் எழுத்தையும் சேர்த்து கானா வரோ என்று பெயர் வைத்தேன்.

பாலோவர்ஸ்கள் இணைந்தார்கள். வாக்குகள் விழுந்தன. பின்னூட்டங்கள் குவிந்தன. பதிவுகள் பிரபலமாகின. அந்த உற்சாகத்தில் எழுதினேன். எழுதினேன், எழுதினேன்… கை வலிக்கும் வரை எழுதினேன். கீ போர்ட் தேயும் வரை எழுதினேன். கண் பஞ்சடையும் வரை கம்பியூட்டர் முன் குந்தியிருந்து எழுதினேன்.

விஜய்க்கு எதிராக எழுதினேன். பேரரசுவைத் தாக்கி எழுதினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை. நிச்சயமாக இல்லை. சுறா பார்க்க வேண்டாம் எண்டு எழுதினேன். விஜய் பிடிக்காது என்பதற்காக அல்ல, விஜய் தொடர்ந்து அவ்வாறான படங்களில் நடிக்கக் கூடாது என்பதற்காக. பேரரசுவை கலாய்த்தேன். பேரரசுவின் படங்கள் பிடிக்காது என்பதற்காக அல்ல. இன்னும் பல பேரரசுக்கள் உருவாகி தமிழ் சினிமாவை நாறடிக்க கூடாது என்பதற்காக

உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சவோய், கொன்கோர்ட், சினிசிட்டி, மனோகரா என்று நான் முதல் ஸோ பார்க்க பட்ட கஸ்டம் தெரியுமா உங்களுக்கு.? கூட்டத்தில நெரிபட்டு, மிதிபட்டு, செருப்பைத் தொலைத்து, அடிச்சு பிடிச்சு படம் பார்க்க உட்கார்ந்தால்.. படம் படு மொக்கையாக இருந்தால் எப்படி “ஆஹா, ஓஹோ” என பதிவு எழுத மனம் வரும். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.

என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே,

பதிவு எழுதுகிறேன் எனும் சாட்டில் கில்மா படம் பார்க்கிறாரே சி.பி, அது நான் செய்த குற்றமா?

கிழிந்த டயரியில் இருந்து பதிவு எழுதுகிறாரே செங்கோவி, அது நான் செய்த குற்றமா?

தமிழ்மணத்தில் அதிகம் பரிந்துரைக்கப்பட்ட இடுகையில் நிரூபனின் பதிவு அடிக்கடி வருகின்றதே, அது நான் செய்த குற்றமா?

பஸ்ஸில் கசமுசாவைப் பார்த்து பொங்கி எழுகிறாரே மருதம்ஸ், அது நான் செய்த குற்றமா?

அடிக்கடி விளக்கப்பதிவு போடுகிறாரே துஸ்யந்தன், அது நான் செய்த குற்றமா?

எதையோ சாதிப்பதற்காய் பதிவெழுதாமல் நிற்கிறாரே ஜனா அண்ணர், அது நான் செய்த குற்றமா?

ஹன்சிகாவையே மணமுடிப்பேன் என பிதற்றுகிறாரே மைந்தன், அது நான் செய்த குற்றமா?

நீதிபதி அவர்களே தீர்ப்பு எழுது முன் தயவு செய்து என் கதையைக் கேளுங்கள்.

என் வலைத்தளத்தின் பேரோ அகசியம். மங்களகரமான பெயர். நான் நினைத்திருந்தால், கில்மா பட விமர்சனம் எழுதி அதிக வாசகர்களை வரவைத்திருக்கலாம்! நடிகைகள் குளிக்கும் படத்தைப் போட்டு வாக்குக் கேட்டிருக்கலாம். ஆளை ஆள் கொழுவி வைத்துவிட்டு கூத்துப் பார்த்திருக்கலாம். செய்தேனா? இல்லையே!

மொக்கைப் பதிவு எழுதினேன். யாருக்கும் பிரையோசனம் இல்லாமல் பதிவு எழுதினேன். இது குற்றமா?

அரசு வக்கீல் : குற்றவாளி யார் யார் ப்ளாக்கிற்கோ கமெண்ட் அடிக்கிறார்.

நான் : யார் ப்ளாக்கிற்கும் இல்லை. எல்லார் ப்ளாக்கும் என் ப்ளாக் மாதிரித்தான். அவற்றுக்கெல்லாம் கமெண்ட் அடிக்க நினைப்பதில் என்ன தவறு? அனானிகளை கமெண்ட் பண்ண விடுவது யார் குற்றம்? அவரவர்களின் குற்றம். மைனஸ் ஓட்டு போட நினைப்பது யார் குற்றம்? அவரவர்களின் குற்றம். பதிவு பிடித்திருந்தாலும் வாக்கோ, கமெண்டோ போடாதது யார் குற்றம்? அவரவர்களின் குற்றம். இக்குற்றங்கள் களையப்படும் வரை வரோவும், அகசியமும் ஓயப்போவதில்லை. இதுதான் பதிவுலக ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள புண்ணாக்குத் தத்துவம்!

நன்றி - shayan2613.blogspot.com

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அழகான கிராமம்.

அந்தக் கிராமத்தின் தலைவருக்கு

ஒரு பெண் இருந்தாள்.. அவளைப் போல்

ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை

கேட்டதும் இல்லை அந்தப் பெண் பக்கத்து

கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்

காதலிக்க ஆரம்பித்து விட்டாள்...

இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை

எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி

தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட

தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல்

காணாமலும் போய்விட்டனர்.

உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது.

இருந்தும் அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை....

அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை

ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில்

விளம்பரமும் கொடுத்தனர். அதைப் பார்த்த

காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது....

சந்தோசப்பட்ட ஊர் மக்கள் அந்தக்

காதல் ஜோடிக்கு பிரமாண்டமான

முறையில் திருமணம் செய்ய

முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான

பொருட்களை வாங்க நகரத்திற்கு சென்றிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஒரு லாரி மோதி

அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான்.

உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு

திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன்

வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள்

அப்பெண்னின் தாய் ஒரு கனவு

கண்டாள்.

அதில் ஒரு தேவதை தோன்றி, அவள்

மகள் அவளுடைய காதலன் நினைவாக

வைத்திருக்கும் உடையில் இருக்கும்

இரத்த்க் கறையை உடனே துவைக்க

வேண்டும் என்றது... இல்லா விட்டால்

மோசமான விளைவுகள் ஏற்படும்

என்றும் எச்சரிக்கை செய்தது.

அவள் தாய் கனவை மதிக்கவில்லை.

அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்ணின்

தந்தையிடமும் கனவில் எச்சரித்தது. ஆனால்

அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை.

அடுத்த நாள் அப்பெண்ணின் கனவிலேயே தோன்றி

எச்சரித்தது. அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக்

கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம்

உணரப்பட்டது. அவள் தாய் அதைத் துவைக்கக் கூறினாள்.

உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள்.

இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில்

வந்து 'கறை சரியாகப் போகவில்லை' என்று எச்சரித்தது.

மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.

இருந்தும் கறை போகவில்லை!

அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே

அந்தப் பெண் கதவைத் திறந்தாள். அப்போது கனவில்

வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள்!

அவள் முகம் கனவில் வருவதைப் போல்

கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.

உடனே இவள் பயத்தினால் அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது " லூசாடி நீ..? 'ஸர்ஃப் எக்ஸல்' போடு... SurfExcelpack125x110_tcm28-141102.jpg கறை போயிடும்" என்றது! :icon_idea:

இதைப் படித்ததும், உடனே என்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு?

இப்படி என்னை எழுதத் தூண்டிய 'மொக்கை ஆசாமி' உடையாரை தேடிக் கொண்டிருக்கிறேன்...! :lol:

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஐவண்ணியா என்ன இது இப்படியா அருமையாக கதை எழுதுவது, கோபத்தில் என் மீசை துடிக்கவில்லை இருந்தால்தானே, ஒரு பச்சை கூட இல்லை குத்த,

இதுக்குமேல யாரும் யாழில் இப்படி கடிக்க மாட்டார்கள், எங்க hotel இல் ஆ வேலை?

Quote:

"இப்படி என்னை எழுதத் தூண்டிய 'மொக்கை ஆசாமி' உடையாரை தேடிக் கொண்டிருக்கிறேன்"

உடையார் இல்லாத களத்தை தேடுங்கள்

பிகு; அங்கையும், வருவமல்ல

http://www.youtube.com/watch?v=s0sj1EEGvrA&feature=player_embedded

  • கருத்துக்கள உறவுகள்

... கோபத்தில் என் மீசை துடிக்கவில்லை இருந்தால்தானே..

எமக்கு இருந்தும், மை பூச வேண்டியுள்ளது! :(

இதுக்குமேல யாரும் யாழில் இப்படி கடிக்க மாட்டார்கள்...

கடிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்.... அவைகளை பதிக்கும் களம் இதுவல்ல

எங்க hotel இல் ஆ வேலை?

burj-al-arab.gif

இதுவே எம் அறுபடை வீடு.

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கட ஆறுபடை Dhs150/- உடன் 2005 இல் சுற்றி பார்த்தனான,

நான் கட்டிய அரன்மனையை பார்த்தனிங்களா

பிகு; பெரிய Dome இல் $3oo,ooo/- பெறுமதியான் தங்கம் இருக்கு, உள் அறை ceilings gold leaf ஆள் ஆனது. கட்டிய புதுசில் கனிமூன் ஜோடி hotel room இல் வந்து இருந்தவை, பக்கத்து அறை காறன் விடிய வந்து management இடம் புகார், தன்னால் ராத்திரி தூங்க முடியவில்லை என்று, பார்த்தால் சுவருக்கு போட்ட SOUND PROOF காணாது :lol::D

emiratespalaceabudhabi2.jpg

Uploaded with ImageShack.us

emiratespalaceexternalf.jpg

Uploaded with ImageShack.us

http://thebesttravel...otel-abu-dhabi/

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் அண்ணா உண்மையாய் உங்கள் கற்பனை சூப்பரோ சூப்பர் :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட ஆறுபடை Dhs150/- உடன் 2005 இல் சுற்றி பார்த்தனான,

நான் கட்டிய அரன்மனையை பார்த்தனிங்களா!

உடையார், நீங்கள் சொன்ன அபுதாபி 'பேலஸ்' ஹோட்டலுக்குள் ஒருமுறை மட்டும் கம்பெனி உதவியால் சென்றுள்ளேன்...வெறித்தனமான ஆடம்பரச் செலவு...நினைத்தும் பார்க்க முடியாத விலை..

நாம் வெளியில் இருந்து பார்க்கத்தான் லாயக்கு. :rolleyes:

ராஜவன்னியன் அண்ணா உண்மையாய் உங்கள் கற்பனை சூப்பரோ சூப்பர்

நன்றி ரதி..

  • கருத்துக்கள உறவுகள்

ராவவன்னியன், எங்களை சீரியஸாக வாசிக்க வைத்து.... கடைசியைலை, இவ்வளவு பெரிய மொக்கை போட்டிருக்கப் படாது.tongue.gif

இவ்வளவு திறமையை... இவ்வளவு நாளும் எங்கை , ஒளிச்சு வைச்சிருந்தனீங்கள். நன்றாக உள்ளது.smile.gif

  • கருத்துக்கள உறவுகள்

மொக்கை என்றால் என்ன? :blink: "அலம்பல்" என்று சொல்லுவதா? :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொக்கை என்றால் என்ன? :blink: "அலம்பல்" என்று சொல்லுவதா? :unsure:

எனக்கும் உந்த மொக்கையை பற்றி ஆரிட்டையும் விளக்கம் கேக்கோணும் மாதிரியிருந்தது...... :huh:

  • கருத்துக்கள உறவுகள்

மொக்கை என்டால் என்னத்தையோ எழுதுவார்கள் படிக்க நகைச்சுவையாக இருக்கும் ஆனால் எழுதினவர்களுக்கு அவர்கள் எது குறித்து எழுதுகிறார்கள்,என்ன சொல்ல வாறர்கள் என்பது தெரியாது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மொக்கை என்றால்.... அறுவை பதிவு போட்டு, மற்றவர்களை கடுப்படிக்க வைத்தல். biggrin.gif

  • கருத்துக்கள உறவுகள்

மொக்கைக்கு சுற்றி வளைத்து பின்நவீனத்துவ அர்த்தமாக இப்படி கொள்ளலாம்....

"தேவையில்லாமல், தேவையில்லாததை பேசி எரிச்சலை கிளப்புவது, கேட்பவர் காதில் ரத்தம் வரும் வரை காமெடி சொல்வதாக எதையோ சொல்லி தாங்களே சிரிப்பது""

உதாரணமாக...

பளிச்சு! பளிச்சு!! தம்மாத்தூண்டு இஸ்டாரே...!!!

ஆச்சர்யமாதான் கீது, நா உன்ன பாக்க சொல்லொ..!

யெம்மா ஒசரத்துல..வானத்து மேல கீற..!

சொம்மா வைரம் கனக்கா மின்னிக்கினு..!

பளிச்சு! பளிச்சு!! தம்மாத்தூண்டு இஸ்டாரே...!!!

ஆச்சர்யமாதான் கீது, நா உன்ன பாக்க சொல்லொ..!

இந்தப் பாட்டு எதிலிருந்து சென்னை தமிழுக்கு பிறவி எடுத்தது தெரியுமா? இதோ...

Twinkle, twinkle, little star,

How I wonder what you are.

Up above the world so high,

Like a diamond in the sky.

Twinkle, twinkle, little star,

How I wonder what you are!

மொட்டை பிளேடால், சவரம் செய்த வலியை உணரவில்லை? அதுதான் மொக்கை!

I think I made it clear guys! :icon_idea:

.

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடையார், நீங்கள் சொன்ன அபுதாபி 'பேலஸ்' ஹோட்டலுக்குள் ஒருமுறை மட்டும் கம்பெனி உதவியால் சென்றுள்ளேன்...வெறித்தனமான ஆடம்பரச் செலவு...நினைத்தும் பார்க்க முடியாத விலை..

நாம் வெளியில் இருந்து பார்க்கத்தான் லாயக்கு. :rolleyes:

SH Zayed ஆல் அபுதாபி land mark ற்காக கட்டியது (another one Mosque), 2003-2005 கட்டும் போது அடிக்கடி சுற்றி பார்ப்பது வழக்கம், ஞாபகத்திற்கு gold leaf யை எடுத்து பேஸிற்குள் வைச்சிருக்கிறன் இன்று வரை, அப்பவே தெரியும் உள்ளுக்க திரும்பி வர முடியாது என்று, எனவே எடுக்க வேண்டிய சூட்டிங் எல்லாம் எடுத்தாச்சு

மொக்கைக்கு சுற்றி வளைத்து பின்நவீனத்துவ அர்த்தமாக இப்படி கொள்ளலாம்....

"தேவையில்லாமல், தேவையில்லாததை பேசி எரிச்சலை கிளப்புவது, கேட்பவர் காதில் ரத்தம் வரும் வரை காமெடி சொல்வதாக எதையோ சொல்லி தாங்களே சிரிப்பது""

உதாரணமாக...

பளிச்சு! பளிச்சு!! தம்மாத்தூண்டு இஸ்டாரே...!!!

ஆச்சர்யமாதான் கீது, நா உன்ன பாக்க சொல்லொ..!

யெம்மா ஒசரத்துல..வானத்து மேல கீற..!

சொம்மா வைரம் கனக்கா மின்னிக்கினு..!

பளிச்சு! பளிச்சு!! தம்மாத்தூண்டு இஸ்டாரே...!!!

ஆச்சர்யமாதான் கீது, நா உன்ன பாக்க சொல்லொ..!

இந்தப் பாட்டு எதிலிருந்து சென்னை தமிழுக்கு பிறவி எடுத்தது தெரியுமா? இதோ...

Twinkle, twinkle, little star,

How I wonder what you are.

Up above the world so high,

Like a diamond in the sky.

Twinkle, twinkle, little star,

How I wonder what you are!

மொட்டை பிளேடால், சவரம் செய்த வலியை உணரவில்லை? அதுதான் மொக்கை!

I think I made it clear guys! :icon_idea:

.

சும்மா கேட்ட இப்படியா கொல்கிறது ஆட்களை............

  • கருத்துக்கள உறவுகள்

ரா :icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen: ன் :icon_mrgreen: னி :icon_mrgreen::icon_mrgreen: ன் அ :icon_mrgreen: ரு :icon_mrgreen: மை :icon_mrgreen: .

  • கருத்துக்கள உறவுகள்

ரா :icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen: ன் :icon_mrgreen: னி :icon_mrgreen::icon_mrgreen: ன் அ :icon_mrgreen: ரு :icon_mrgreen: மை :icon_mrgreen: .

நன்றி நுணா...

சரி, இந்த திரியை அடித்து மூடுமுன், சில மொக்கைகளை 'உடையாரி'ன்

வேண்டுகோளுக்கிணங்க, இங்கே மொக்குறேன்...பொறுத்தருள்க...!

கண்ணா நீ..,

கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்..

கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்..

பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்..

நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்..

ஒரு பொண்ணு போட்டோவுல

தேவதைமாதிரி இருந்தாலும்

நெகடிவ்ல பிசாசு மாதிரிதான் இருப்பா..!

காதல் ஒரு மழை மாதிரி,

நனையும் போது சந்தோஷம்...

நனைந்த பின்பு ஜலதோஷம்..

"என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?"

"டாக்டர், 'சுகர்' (sugar)இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார், அதான்!"

"நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்"

"அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்?"

"டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''

"எந்த அளவுக்கு பாக்குறாங்க?''

"கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!"

"உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு!"

"நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லையே, டாக்டர்...! அது எப்படி பெயில் ஆகும்..?"

"ஏங்க மருந்து பாட்டிலை கையில வைச்சிட்டு ஏன் தடவுறீங்க?"

"டாக்டர்தான் தலை வலிச்சா இதை எடுத்து தடவணும்னு சொன்னார்!"

"டாக்டர் கிட்டே எதையும் மறைக்கக் கூடாது.. காட்டுங்க உங்க பர்ஸை.."

"பேஷன்ட் கிட்டே எதையும் மறைக்கக் கூடாது.. காட்டுங்க உங்க நர்ஸை.."

"காலிலே பாம்பு கடிச்சு அஞ்சு நிமிசம் கூட ஆகலையே... எப்படி செத்தாரு?"

"விசம் தலைக்கு ஏறாம இருக்க, கழுத்தில் இறுக்கமா கட்டிட்டாங்கலாம்!"

"இன்னிக்கி 8 மணிக்கு, கடுமையான மழையும், காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க!"

" நீங்க கேட்டீங்களா..?"

" இல்லை.. அவங்களே சொன்னங்க...!" .

"சார்,

டீ மாஸ்டர், டீ போடறாரு..!

பரோட்டா மாஸ்டர், பரோட்டா போடறாரு.. !

மேக்ஸ் மாஸ்டர், மேக்ஸ் போடறாரு...!

நீங்க ஹெட்மாஸ்டர் தானே... ஏன் மண்டயை போட மாட்டேங்கிறீங்க..? "

''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''

''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''

"மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?"

"ஐந்து கேள்விப்பா!"

"நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?"

"முதல் மூணும், கடைசி இரண்டும்"

"வெரிகுட், கீப் இட் அப்!"

"டேய், என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்"

"இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு..?"

"பாப்பா இந்த டிரெஸ் தீபாவளிக்கு எடுத்ததா?"

"இல்லை, எனக்கு எடுத்தது!"

-மேலேயுள்ள அனைத்தும், நண்பர்கள் என்னிடம் கடித்தவைகள்.... ரசித்தீர்கள்தானே? :rolleyes:

.

  • கருத்துக்கள உறவுகள்

ராவவன்னியன், எங்களை சீரியஸாக வாசிக்க வைத்து.... கடைசியைலை, இவ்வளவு பெரிய மொக்கை போட்டிருக்கப் படாது.tongue.gif

இவ்வளவு திறமையை... இவ்வளவு நாளும் எங்கை , ஒளிச்சு வைச்சிருந்தனீங்கள். நன்றாக உள்ளது.smile.gif

நாலு அறுவை டாக்டரிடம் அறுபட்டால், நாமளும் டாக்டர் தானே, சிறீ? ஆதரவிற்கு நன்றி.

ஆனாலும் இக்களம், ஒரு உன்னத இலக்கிற்காகவே இருக்கையில், 'மொக்கை'யை தவிர்ப்பது நலமென்றே எண்ணுகின்றேன்.

அத்தால என்னோட மொக்கைய இத்தோட நிப்பாட்டிக்கினேன்..அல்லாருக்கும் தேங்க்ஸ்பா..!

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

நாலு அறுவை டாக்டரிடம் அறுபட்டால், நாமளும் டாக்டர் தானே, சிறீ? ஆதரவிற்கு நன்றி.

ஆனாலும் இக்களம், ஒரு உன்னத இலக்கிற்காகவே இருக்கையில், 'மொக்கை'யை தவிர்ப்பது நலமென்றே எண்ணுகின்றேன்.

உங்களது நல்லெண்ணம் வரவேற்கக் கூடியது ராஜவன்னியன்.

சிறிய ரிலாக்ஸீக்காக, கொஞ்ச மொக்கை இருந்தால்... தவறு இல்லை என்பது, எனது அபிப்பிராயம்.rolleyes.gif

  • கருத்துக்கள உறவுகள்

சரி, இந்த திரியை அடித்து மூடுமுன், சில மொக்கைகளை 'உடையாரி'ன்

வேண்டுகோளுக்கிணங்க, இங்கே மொக்குறேன்...பொறுத்தருள்க...!

ஒரு பொண்ணு போட்டோவுல

தேவதைமாதிரி இருந்தாலும்

நெகடிவ்ல பிசாசு மாதிரிதான் இருப்பா..!

"காலிலே பாம்பு கடிச்சு அஞ்சு நிமிசம் கூட ஆகலையே... எப்படி செத்தாரு?"

"விசம் தலைக்கு ஏறாம இருக்க, கழுத்தில் இறுக்கமா கட்டிட்டாங்கலாம்!"

"டேய், என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்"

"இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு..?"

"பாப்பா இந்த டிரெஸ் தீபாவளிக்கு எடுத்ததா?"

"இல்லை, எனக்கு எடுத்தது!"

ராஜவன்னியனா, கொக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

மொக்கைக்குத் தரப்பட்ட விளக்கங்களில் இருந்து நான் கற்றது:

மொக்கை எழுதுபவருக்கு நிறைய நேரம் கிடைக்கின்றது. அதைப் போக்க ஏதாவது எழுதுவார்.

மொக்கையைப் படிப்பவர்களுக்கும் நிறைய நேரம் கிடைக்கின்றது. அதை எப்படியாவது கழிக்கத்தான் மொக்கைகளைப் படிப்பதும் பின்னூட்டம் இடுவதும்.

ஆக மொத்தத்தில் நேரத்தை விரயம் செய்ய மொக்கைகள் உதவும். சும்மா மோட்டு வளையப் பார்ப்பதை விட மொக்கை எழுதுவது, படிப்பது பரவாயில்லைத்தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.