Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. மனித உரிமை தொடருக்கு செயலாளரின் அறிக்கை அனுப்பப்பட்டது

Featured Replies

ஐ.நா. மனித உரிமை தொடருக்கு செயலாளரின் அறிக்கை அனுப்பப்பட்டது

பலதடைகளையும் மீறி, ஐ.நா. செயலாளர் நாயகம் தன்னால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட குழுவின் அறிக்கையை நடக்கும் ஐ.நா. மனித உரிமை தொடருக்கு அனுப்பியுள்ளார்.

----------------------------------------------

ban-ki-moon.jpg

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பான் கீ மூன் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் சற்று முன்னர் வெளியிடுள்ளார்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு நிபுணர்குழுவின் அறிக்கையை அனுப்பவுள்ளது குறித்து நேற்று (திங்கட்கிழமை) சிறிலங்கா அரசுக்கு முறைப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20110913104667

UN rights council gets report on Sri Lanka deaths

UNITED NATIONS (AP) — Secretary-General Ban Ki-moon says he is sending a report by U.N. experts who concluded that tens of thousands of people were killed in the last months of the civil war in Sri Lanka to the U.N. Human Rights Council.

Ban said in April he would welcome a mandate from the Human Rights Council, Security Council or General Assembly to launch an international probe into allegations of possible war crimes.

Ban's spokesman Martin Nesirky said Sri Lanka's government was informed that the report had been sent to the rights council on Monday.

The panel found Sri Lankan troops had allegedly shelled civilians in a no-fire zone in their push to finish off the Tamil Tigers. The rebels were accused of holding civilians as human shields.

http://www.google.co...f8eea63343b7320

Edited by akootha

நம்ப முடியாத மகிழ்சிகரமான செய்தி. அடுத்தது சுயாதீன விசாரணை. கனடா பிரதமரின் பதிலில் அறிக்கை வடிவில் மட்டும் இருந்த சில விசையங்கள் ஐ நா வில் அதிகார பூர்வமானவையாக கணக்கிலெடுக்கப்பட்டிருந்தமை வெளிக்காட்டப்பட்டிருந்தது.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

எமது நீண்ட கொடிய துன்பியல் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாக அமையட்டும்.

இந்த தொடர் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைக்கு வழிசமைக்கட்டும். அது எமது மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஐ.நா. கண்காணிப்பில் ஒரு தேர்தலை நடாத்தட்டும்.

தமிழீழம் மலரட்டும்!

மாண்ட மக்கள், உயிர்கொடுத்த மாவீரர்கள் கனவு பலிக்கட்டும் !!

கடைசி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்களிப்பு தெட்டதெளிவாக தமக்கு ஒரு நீதியை எதிர்பார்த்து வாக்களித்திருக்கிறார்கள் என்பது எல்லா நாடுகளுக்கும் புரிந்திருக்கிறது. அசைவுகள் புலம் பெயர் மக்களின் பாதை சரி என்ற திசையில் திரும்ப தொடங்கியிருக்கிறது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி!

அவுஸ்திரேலியாவில் வேலைத்தளங்களில் அடிக்கடி உபயோகிக்கும் சொற்றொடர் (CYB )! இதன் விரிவான ஆங்கில வடிவு (COVER YOUR BACK )!

ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கும் போது, மேலதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லக்கூடியதாக ஒரு காரணத்தை வைத்திருத்தல் என்பதே இதன் அர்த்தமாகும்!

இப்போது இவ்வளவு நாளும் குண்டுச் சட்டியில் குதிரை ஒட்டிய பாங்கியும், தனது பின் புறத்தை வரப் போகும் நெருக்கடிகளில் இருந்து பாதுகாக்கத் தொடங்கி விட்டார்!

இதன் அர்த்தம், எமது விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது என்பதே!

விரைவில் எதிர் பாருங்கள்! இந்தியாவும் இப்படியான நடவடிக்கைகளை தொடங்கும்!!! :wub:

  • தொடங்கியவர்

UN SL report sent to human rights council

UN-60-60(8).jpgUNITED NATIONS (AFP) - UN leader Ban Ki Moon on Monday sent a report accusing Sri Lankan troops of killing tens of thousands of people in an offensive against Tamil separatists to the UN Human Rights Council, bringing an international inquiry one step closer.

Mr Ban has said that he alone cannot order an inquiry into the killings - which the Sri Lankan government has strongly denied - but that a forum such as the Human Rights Council could do so.

UN spokesman Martin Nesirky said the report had been sent to the Human Rights Council and the UN High Commissioner for Human Rights.

A panel of experts named by Mr Ban said in April that the Sri Lankan army killed most of the tens of thousands of civilian victims of a final offensive against Tamil separatists in 2009 but both sides may be guilty of war crimes.

http://www.dailymirr...ts-council.html

Edited by akootha

நல்ல செய்தி இதற்கு நல்லதொரு தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை வைப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. ஐ.நாவில் மகிந்த வந்திறங்கும் போது ஆப்புகள் காத்திருக்கின்றன என கொள்ளலாமா?

  • தொடங்கியவர்

அடுத்த சவால்கள் என்ன?

The Human Rights Council must agree to debate the report before it can give Mr. Ban a mandate to launch such an investigation

சுயாதீன விசாரணை குழுவை மூன் அமைப்பதற்கு ஐ.நா. மனித உரிமைக்குழு ஆணை தர வேண்டும்

இதுவரை 'ஆதரவு தந்த' நாடுகள் மெல்ல மெல்ல விலகலாம். உருசியா - இந்தியா - சீனா : இவற்றுள் உருசியா முதலில் விலத்தலாம். அந்த நாட்டுக்கு பெரிய முதலீடு இல்லை, பூகோளரீதியிலும் அதற்கு இலங்கை முக்கியம் அல்ல.

இந்தியா என்ன செய்யும் என்பதே முக்கிய புதிராக இருக்கும்.

  • தொடங்கியவர்

'தருஸ்மன் அறிக்கையை மனித உரிமைகள் பேரவையில் விவாதிப்பதை இலங்கை கடுமையாக எதிர்க்கும்'

தருஸ்மன் அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு எதிராக ஜெனீவாவிலும் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. பொதுச்சபையிலும் இலங்கை அரசாங்கம் கடுமையாக எதிர்க்கும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று தெரிவித்தார்.

இந்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுத்துக்கொள்வதற்கு எதிராக ஜெனீவாவிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் நானும் (ஐ.நா.) பொதுச்சபைக் கூட்டத்திற்காக அடுத்த வாரம் நியூயோர்க் செல்லும்போதும் எமது எதிர்ப்பை தெரிவிப்போம் என அவர் டெய்லி மிரருக்கு கூறினார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் நடுநிலைமை விவகாரம் குறித்தும் நியூயோர்க்கில் இலங்கைத் தூதுக்குழுவினர் பேசுவர் என அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு சமர்ப்பித்த் அறிக்கையை அவர் நேற்று திங்கட்கிழமை மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/27815-2011-09-13-10-54-21.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி..! :rolleyes:

இந்தியாவை மேவி எமது பிரச்சினையைத் தற்போது சர்வதேச மட்டத்தில் நிறுத்தியிருக்கிறார்கள் மாண்ட எமது வீரர்களும், மக்களும்..!

  • கருத்துக்கள உறவுகள்

சுயாதீன விசாரணைக் குழுவை விரைவில் ஆரம்பிக்க வேண்டுமே

மகிந்தர் வந்து ஏதாவது தில்லு முல்லுச் செய்து... இழுத்தடிக்கப் பார்ப்பார்

போருக்கு அமெரிக்கா, ரூசியா, இந்தியா, சீனா, இஸ்ரேல், ஈரான், பாகிஸ்த்தான், வங்காளம் என்று எல்லா நாடுகளும் தான் உதவியிருந்தன. தார்மீக ஆதரவு கனடா, நோர்வே, ஆஸ்திரேலியா, மலேசியா, லிபியா, மற்றய கூட்டு சேரா நாடுகள் என்றெல்லாம் கொடுத்திருந்தன. அந்த நிலையிலிருந்து இன்றைய முன்னேறத்திற்கு காரியங்கள் இரண்டு வருடங்களில் வந்து சேர்ந்தது உள்ளே சில சக்திகள் இருப்பதையே காட்டுகிறது. அமெரிக்க ராசாங்க அமைச்சு இந்த விவகாரத்தை ஈராக், ஆப்கானிஸ்த்தான், வட கொறியா, யெமன், லிபியா போன்று வெளிப்படையான எதிர்ப்பு மூலம் சாதிக்கவில்லை. கனடா பிரதமர் பதிலில் காணப்பட்ட ஒவ்வாத சொற்பிரயோகங்களை மூடிய கதவுகளின் அபிப்பிராயத்தையே காட்டின என்று எடுத்துகொள்ள வேணும். ரோபேட் பிளேக் அமெரிக்க பொறுளாதாரத்தடையை மறுத்து இலங்கைகு ஆதரவாக ஒரிரு மாதங்களுக்கு முன்தான் அறிக்கை விட்டிருந்தார். ஆனால் கனடா பிரதமர் பொதுநலவாயத்தை பகிஸ்கரிப்பதை பற்றி கூறுகிறார்.

இன்னோரு சுவையான விடையம் - ரணிலின் "ராசபக்சா- பான்கி மூன்" தூது சேவையின் போது, ரணிலிடம் நிபுணர் அறிக்கை ஐ.நாவில் எங்கேயாவது தானாக தொலைந்து போய்விடும் என்று இலங்கை எதிபார்க்க முடியாது என்று பான் கி மூன் அறிவுறுத்தியிருந்தார்.

இவற்றை வைத்து பார்த்தால் இந்த வண்டி இன்னும் சிலகாத தூரமாவது போவதற்கு தேவையான "காஸ்' ஏற்கனவே கொண்டிருக்கிறது என்று கிரகித்துகொள்ளலாம்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

ஐ.நா.வின் உத்தியோகபூர்வ அறிக்கை ( முடிந்தால் முகநூலில் ஏற்றிவிடுங்கள் )

Ban forwards report on Sri Lanka war crimes to top UN human rights body

http://www.un.org/apps/news/story.asp?NewsID=39520&Cr=Sri+Lanka&Cr1=

  • தொடங்கியவர்

இந்திய மத்திய அரசின் போக்கு தமிழ் நாட்டைத் தனிநாடாக்கும்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-09-13 09:54:29| யாழ்ப்பாணம்]

இலங்கையில் நடந்த மிக மோசமான - கொடூரமான போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச நாடுகள் பலவும் ஆழ்ந்த கவலையுற்றிருக்கும் வேளையில் - போர்க்குற்றம் தொடர்பில் நீதியான விசாரணை தேவையயன வலியுறுத்தி நிற்கும் வேளையில், இந்தியா மட்டும் இலங்கையைக் காப்பாற்றுவதில் அதிதீவிரமாக ஈடுபட்டுவருவது வெளிப்படையாகிவிட்டது.போர்க்குற்றச்சாட்டிலிருந்து இலங்கையைக் காப்பாற்றுவதற்கு சீனாவும், பாகிஸ்தானும் உதவுவது என்பதும் இந்தியா உதவுவதென்பதும் ஒத்ததன்மை உடையதல்ல.

பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடம் உண்மை - நேர்மை என்பவற்றை எவருமே எதிர்பார்ப்பதில்லை. இவை அநீதிக்கு துணைபோகும் நாடுகள் என்ற பட்டியலில் முதலிடம் பெறக் கூடியவை. ஆனால், இந்தியா அப்படியல்ல. நீதிக்கு குரல் கொடுக்கக் கூடிய கொள்கைகள் இந்தியாவிடம் இருப்பதாக மக்கள் நம்பிக் கொள்கின்றனர். இருந்தும் இலங்கை தமிழர் விடயத்தில் இந்தியாவின் போக்கு விசித்திரமானதாகவும் வெறுப்புக்குரியதாகவும் இருப்பதைக் காணமுடிகின்றது. இலங்கையில் நடந்த போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்தியா மெளனம் சாதிப்பது அல்லது அது விடயத்தில் எதையுமே அலட்டிக் கொள்ளாதது போல நடந்து கொள்வது தமிழகத்து மக்களையோ அன்றி ஈழத்தமிழினத்தையோ திருப்திப்படுத்தப் போவதில்லை.

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்தியா கொண்டுள்ள நிலைப்பாடானது, இந்தியாவை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைக்கின்றது. அதாவது, இலங்கையில் நடந்த போர்க்குற்றச் சாட்டில், இந்தியாவுக்கு பெரும் பங்கு உண்டு என்பது தற்போதைய முடிபு. இதன் காரணமாகவே இலங்கை மீது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகள் நடவடிக்கை எடுப்பதை இந்தியா தடுத்து வருகின்றது. உண்மையில் வன்னியில் நடந்த மிக மோசமான போர்க் கொடூரத்தை மையமாக வைத்து, இலங்கையின் செவியில் பிடித்து அதன் தலையில் குட்டுப்போடுவது அமெரிக்காவுக்கு மிகச் சாதாரண விடயம். அதைச் செய்வதற்கு அமெரிக்கா பின் நிற்கப் போவதுமில்லை. ஆனால் இந்தியா, இலங்கையைக் காப்பாற்றுவதில் விசேட கவனம் செலுத்தி வருகின்றது.

இதன் காரணமாகவே இலங்கையில் நடந்த போர்க்குற்ற விசாரணை செயற்பாடு எதுவுமின்றி வெறுமனே பேசு படுபொருளாக இருக்கின்றது. எனினும் இத்தகைய நிலைமை நீண்டகாலத்திற்கு இல்லை என்பது தெளிவு. இந்திய மத்திய அரசு தற்போது ஈழத்தமிழ் மக்களுக்கு இழைத்துவரும் அநீதியின் தாக்கம் தமிழகத்தில் தாழமுக்கமாக நிச்சயம் உருவெடுக்கும். இதன் விளைவு தமிழக மக்கள் தங்களுக்குத் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பர். எட்டுக் கோடி தமிழ் மக்களின் இக் கோரிக்கையை இந்திய மத்திய அரசு சமாளிப்பது என்பது முடியாத காரியமே. அதன் பின்னர் ஈழத்தமிழினத்தின் பிரச்சினைகள் மிகச் சுலபமாகத் தீரும்.

http://www.valampuri...ws.php?ID=22785

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

மாண்ட எம் வீரரின் தாகம் தீரணும்

ஐ.நா.வின் உத்தியோகபூர்வ அறிக்கை ( முடிந்தால் முகநூலில் ஏற்றிவிடுங்கள் )

Ban forwards report on Sri Lanka war crimes to top UN human rights body

http://www.un.org/ap...r=Sri+Lanka=

The panel – chaired by Marzuki Darusman of Indonesia and comprising Yasmin Sooka of South Africa and Steven Ratner of the United States – recommended that the Government respond to the allegations by initiating an effective accountability process beginning with genuine investigations.

It had also recommended a review of the UN’s actions regarding the implementation of its humanitarian and protection mandates during the war in Sri Lanka – particularly in the last stages – and its aftermath.

In response to that recommendation, the Secretary-General has asked Thoraya Obaid, former Executive Director of the UN Population Fund (UNFPA), to conduct the review, which should begin soon, according to the statement.

நல்லது. இந்தவிசாரணைக்கு பின் ஐ.நா குற்றங்கள் நடக்குமிடத்திலிருந்து தப்பியோடாமலிருக்க வேண்டும்.

இது என்ன கனவா? நனவா?

  • தொடங்கியவர்

இது என்ன கனவா? நனவா?

ஆதங்கமான நியாமான கேள்வி. நான்கூட அடுத்த தொடரில்தான் (மாசி 2012) இந்தளவுக்கு செல்லும் என எதிர்பார்த்தேன். புலம்பெயர் மக்கள் தொடர்ந்தும் உழைக்கவேண்டும்.

அடுத்தகட்டமாக நாடுகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பாடல் வேண்டும். சிங்களம் இதையும்

எதிர்க்கும் எனக்கூறி வருகின்றது.

ஆனால் செயலாளர் நாயகம் பலத்த ஆதாரத்துடன் போதிய அவகாசம் கொடுத்து முன்வைத்ததை எதிர்க்க மனச்சாட்சி உள்ள நாடுகள் முன்வரமாட்டா. ஆனால் அது பாகிஸ்தான் / சீனா ஆகிய நாடுகளுக்கு பொருந்தாது. மாறிவரும் உலக ஒழுங்கில் சீனா இல்லை உருசியா உட்பட நாடுகள் பகிரங்கமாக இதை எதிர்த்து வரலாற்றில் ஒரு கறைபடிந்த இடத்தை எடுக்கமாட்டா என நம்புவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.