Jump to content

அப்பம் தயாரிக்கும் முறை தேவைபடுகிறது


Recommended Posts

பதியப்பட்டது

அப்பம் தயாரிக்கும் முறை தேவைபடுகிறது. நீங்கள் செய்யும் முறையை தந்து உதவ முடியுமா? ? :lol:

Posted

சட்டியை அடுப்பில் வைத்து நெருப்பை மூட்டி, மாவை ஊத்தினால் அவிந்து வர சரியாக வரும்....!

பாத்துங்கோ மாவைச்சட்டீக்க ஊத்துங்கோ..! :P :P :P

Posted

இப்பதான் உடனடி அப்பமா இருக்கே தூயா அந்த பைக்கட்டிலேயே போட்டிருக்காங்க செய்முறை. அத பார்த்து அப்படியே செய்யவேண்டியதுதான்.:wink::lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆப்பம்

……ரெண்டு கப் பச்சாpசி, ஒரு கைப்பிடி உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம் _ன்றையும் ஒன்றhக ஒரு மணி நேரம் ஊற வைக் கவும். பிறகு கழுவி விட்டு, ஒரு _டி தேங்காய் துருவலையும் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றhக அரைக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து, எட்டு மணி நேரம் புளிக்க விடவும். பிறகு கால் டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து ஆப்ப சட்டியில் ஆப்பங்களாக ஊற்றவும். விருப்பப் பட்டால், தேங்காயைத் துருவிப் பால் எடுத்து, தண்ணீர் சேர்க்காமல் வைத்துக் கொண்டு, ஆப்பம் வெந்து கொண்டிருக்கும் போது சிறிய கரண்டி தேங்காய் பாலை நடுவில் விட்டு வேக வைத்து எடுக்கவு :P :P :P

ம்ம்ம்ம் என்க்கு 2 முட்டை அப்பம் அணுப்பணும் சரியா?

Posted

சிங்களவங்கள் தான் இங்கை அப்பம் சுடுரதில கெட்டிக்காரங்கள். ஒரே நேரத்தில 15 அப்பம் சுடுவாங்கள். அவங்களை கேட்டா சொல்லித்தருவாங்கள். முடிஞ்சா நான் கேட்டு எழுதுறன்.

Posted

அப்ப சோடாவை கடைசியாகவா கலப்பார்கள்???

ஆதீபன் உங்களுடைய செய்முறைக்காக காத்து கொண்டிருக்கிறேன்.

Posted

அப்ப சோடாவை கடைசியாகவா கலப்பார்கள்???.

பரவாயில்லை முதலில் கலக்க மறந்திட்டீயள் எண்டால் அப்பத்தை சாப்பிட்ட பிறகு ஒரு கிளாசிலை அப்ப சோடாவை கலக்கி குடிச்சுவிடுங்கோ பிரச்சனையில்லை...............

Posted

அப்ப சோடாவை கடைசியாகவா கலப்பார்கள்???

ஆதீபன் உங்களுடைய செய்முறைக்காக காத்து கொண்டிருக்கிறேன்.

அப்ப சோடாவை கடைசில கலந்தால்- அப்பம் வருதோ இல்லையோ- அல்சர் வராதா? :roll:

Posted

களத்தில நிறைய பேர் என்னக்கு அல்சர் வர வைக்க பார்க்கினம்..நான் அண்ணாச்சிட்ட போய் சொல்ல போறன்..

Posted

தூயா இது நம்மக்கு தெரிந்த முறை

பச்சை அரிசி- 2 கப் (உங்க அளவுக்கு எடுங்க)

தேங்காய்,

உப்பு

(தேவைப்பட்டால் ரவை)

பச்சை அரிசியை ஊற வைத்து அரைத்து/இடித்து மா வை எடுங்கள். கொஞ்சம் பெரிய கண்ணுடைய அரிதட்டு பாவிப்பது நல்லது.

அதன் போது வரும் சிறிய குறுணலை புக்கை கஞ்சி காய்ச்ச பாவிக்கலாம். அது முடியா விட்டால்

ரவை ஒரு 100 கிராம் எடுத்து சிறிதளவு கொதிக்கும் நீரில் கலந்து தடிப்பான கூழ் மாதிர் காய்ச்சி கொள்ளுங்கள்.

அரித்து எடுத்த மாவையும், புக்கை கஞ்சிடையும் சேர்த்து தடிப்பாக குழைத்து 8 மணி நேரம் புளிக்க வையுங்கள்

மாவுக்கு போதுமான நீர், உப்பு , அப்ப சோடா சேர்த்து கரைத்துகொள்ளுங்கள். ( முதல் பழகும் போது -நீர் சேர்க்கும் அளவை கண்டு பிடிக்க, சிறிது நீர் சேர்த்து கலந்த பின் சூடான சட்டியில் மாவை வார்த்து பார்க்கலாம். அது சீராக இலகுவாக பரவும் நிலை வரும் வரை நீர் சேர்த்து கலக்குங்கள்.)

பால் அப்பம் தேவை என்றால்

தேங்காய் துருவி அதிகம் நீர்விடாது நல்ல தடிப்பான பாலாக பிழிந்து எடுத்து கொள்ளுங்கள்.

பதமாக கரைத்த மாவை சூடானசட்டியில் வார்த்து , நடுவில் சிறிதளவு பாலை சேர்த்து மூடி வேக வைத்து இறக்கினால் அப்பம் தயார்.

குறிப்பு

பால் விட்டு அப்பம் சாப்பிட ஒத்து வராதவர்கள் நீருக்கு பதிலாக பாலை விட்டு மாவை கரைத்து பாலற்ற அப்பம் சுடலாம்.

பாலுக்கு பதிலாக முட்டை விட்டால் முட்டை அப்பம்

போதுமா தூயா.................. :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

முக்கியமானதொன்று அப்பச்சோடவுக்குப்பதில் கள்ளு விட்டால் நல்லாயிருக்கும். :!:

Posted

முக்கியமானதொன்று அப்பச்சோடவுக்குப்பதில் கள்ளு விட்டால் நல்லாயிருக்கும். :!:

ஊரிலை சரிவரும், இங்க என்ன செய்ய, அதான் தூயா சொல்லி இருக்கிறா பட்டர்மில்க் விடலாமாம், விட்டு செய்து பாத்திட்டு ஆரும் சொல்லுங்க.

Posted

கள்ளு இங்கு போத்தலில் வருகின்றதே அதை வாங்கி விட வேண்டியது தானே இளைய தளபதி :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கள்ளு இங்கு போத்தலில் வருகின்றதே அதை வாங்கி விட வேண்டியது தானே இளைய தளபதி :D

லண்டனில் இப்போது விடிந்து கூட இருக்காது. அப்படியிருந்தும் கள்ளு நினைப்போடு தான் இருக்கின்றியளோ? :oops:

Posted

ஏதோ நாளை ஞாயிறு லீவு லேட்டா எழும்பலாம் தானே அதற்குள் யாழில் பார்க்காத தலைப்புக்களை பார்க்கலாம் என்றால் நம்ம இளைய தளபதி அப்பத்துக்கு விட கள்ளு இல்லையென்று கவலைப்பட்டார் அது தான் சொன்னன்.

Posted

கள்ளு இங்கு போத்தலில் வருகின்றதே அதை வாங்கி விட வேண்டியது தானே இளைய தளபதி :D

மதன் கள்ளு விடுறது புளிக்க/நொதித்தல் தாக்கம் நிகழ. அதுக்கு கொஞ்சம் நுண்ணங்கியள் தேவை.போத்தலில வாற கள்ளிலை நுண்ணங்கிகளை எல்லம் கிருமிநீக்கம்/பாஸ்ராக்கம் செய்து அவற்றின் தொழிற்பாடு இல்லாது இருக்கும். அதை விட்டா அப்ப மா புளிக்காது :P .

ஆமா அதுகேன் இளைய தளபதிய கூப்பிடுறீங்க, அந்தாளுக்கு அப்பம் எண்டா என்னெண்டு தெரியுமோ தெரியா :? சங்கீதா செய்து கொடுத்தா தான் உண்டு

Posted

500 கிராம் வெள்ளைப்பச்சை அரிசிமாவுடன் இளநீர்சேர்க்கவும் அத்துடன் அரை ரிஸ்புூன் ஈஸ்ட்(சிலர் ஈஸ்ட்டுக்கு பதிலாக பாதிகப் பியர் சேர்ப்பதும் உண்டு. ஆனால் எல்லோரும் விரும்பமாட்டார்கள்) சேர்த்து நன்றாக கையால் பிசைந்து சேர்க்கவும். ஓரளவு களிப்பதத்திலே மண் சட்டி அல்லது சில்வர் சட்டியில் வைத்து ஈரதுணியால் மூடிக்கட்டவும். 12 மணிநேரம் கழித்து தேங்காய்ப்பால்(முதல்ப்பால்) சேர்த்து கலக்கவும். அதன்பன் கல்லுச்சட்டியை(சில்வர்சட்டி

Posted

ஆகா..அப்பம் செய்யும் முறை தாராளமா தந்திருக்காங்க.. தூயா..சோ, செய்து பாருங்கள்..சாப்பிடும் போது கொஞ்சமாக சாப்பிடுங்கள்..எரிச்சலில் சொல்லவில்லை.. தேங்காய் பாலில் செய்வதால்..நிறைய சாப்பிட அப்பச்சட்டி முதலில சுழலுலாப்போல இருக்கும்..அப்புறம் அப்பம் சுழலும்..அப்பிடியே தலையை சுத்தும். உண்மையாகவே எனக்கு சுத்தி இருக்கு..சோ, அடுத்த நாளைக்கும் வைத்து சாப்பிடுங்கள்..அதுவும் ருசியாக இருக்கும்.. :P

Posted

தோசை சுடும் போது அல்லது அப்பம் சுடும் போது அவை சட்டியில் ஒட்டாமலிருக்க உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி அதன் பாதித்துண்டின் வெளிப்பக்கத்தில் முள்ளுக்கரண்டியை குத்தி கைபிடியாக வைத்துக் கொண்டு உள் பகுதியால் எண்ணெய்யை தொட்டு சட்டியில் தடவி விட்டு இப்போது சுட்டுப் பாருங்கள் சட்டியில் ஒட்டவே ஒட்டாது.

Posted

ஆகா ரொம்ப நன்றி வசம்பண்ணா..எங்க வீட்டில அடிக்கடி ஒட்டி பிரச்சனை குடுக்குறது. இப்படியே செய்து பார்ப்போம்.. :lol:

Posted

மதன் கள்ளு விடுறது புளிக்க/நொதித்தல் தாக்கம் நிகழ. அதுக்கு கொஞ்சம் நுண்ணங்கியள் தேவை.போத்தலில வாற கள்ளிலை நுண்ணங்கிகளை எல்லம் கிருமிநீக்கம்/பாஸ்ராக்கம் செய்து அவற்றின் தொழிற்பாடு இல்லாது இருக்கும். அதை விட்டா அப்ப மா புளிக்காது :P .

ஆமா அதுகேன் இளைய தளபதிய கூப்பிடுறீங்க, அந்தாளுக்கு அப்பம் எண்டா என்னெண்டு தெரியுமோ தெரியா :? சங்கீதா செய்து கொடுத்தா தான் உண்டு

ஏன் மதுவம் ( மா நொதித்தலில் -புளிக்க வைக்கிறதில் பங்கேற்கும் ஒரு வகை பங்கசு நுண்ணங்கி..!) காற்றில் இருக்காதோ... கள்ளுக்க எப்படி மதுவம் வந்தது..அது காற்றில் உள்ள பங்கசும் தான்...காற்றில இருந்துதான் வந்தது. எனவே அப்பம் மாவை தோசை மாவை காற்றிற்கு எக்ஸ்போஸ் பண்ணினாலும் புளிக்குங்கோ..! பட் ரைம் எடுக்குங்கோ...அதிலும் மதுவம் செறிவாகப்பட்ட மாக்கட்டில விக்கிற "ஈஸ்ட்" போடுங்கோ...கெதிசா புளிச்சிடும்..கள்ளுத் தேவையில்லைங்கோ..! :wink: :lol: :idea:

Posted

அப்பம் தயாரிக்கும் முறை தேவைபடுகிறது. நீங்கள் செய்யும் முறையை தந்து உதவ முடியுமா? ? :lol:

பிள்ளை தமிழ் கடையில பக்கற் வருது வாங்கும் ஒரு கத்தரிக்கோலை எடும் பக்கற் இன் நுனியில லைட்டா ஒரு வெட்டு அப்பிடியே ஒரு சட்டியில போடும் ம் அப்புறம் பக்கற் ஐ பின் பக்கமா திருப்பும் எல்லாம் விலாவாரியா இருக்கும்

வாசியும் செய்யும் பரிமாறும்

உத விட்டுட்டு .....

:P :P :P :P :P :P :P :P

8) 8) 8) 8)

Posted

ஆகா ரொம்ப நன்றி வசம்பண்ணா..எங்க வீட்டில அடிக்கடி ஒட்டி பிரச்சனை குடுக்குறது. இப்படியே செய்து பார்ப்போம்.. :lol:

ஏன் பிள்ளை வீட்டில ஆதி காலத்து சட்டியா இருக்கு :oops: :oops:

இப்பத்தானே ஓட்டாமல் இருக்க சட்டி வருது

:wink: :wink: :wink:

Posted

ஏன் பிள்ளை வீட்டில ஆதி காலத்து சட்டியா இருக்கு :oops: :oops:

இப்பத்தானே ஓட்டாமல் இருக்க சட்டி வருது

:wink: :wink: :wink:

இருக்கும் சிறி லங்கா ல இருந்து வரும் போது சட்டியையும் கொண்டு வந்தினமோ? :P :P :P

Posted

அப்பம் தயாரிக்கும் முறை

*********************** - தலைப்பை திசைமாற்றும் கருத்து நீக்கப்படுகிறது - யாழினி

அப்பம் எல்லாம் செய்து சாப்பிட்டும் இருப்பினம் இனி சும்மா நகைசுவையாய் பேசினா தப்பா? :cry:

வாங்கோ யாழ்ப்பாணம் பக்கம் வருவிங்கள் தானே? அப்போ ஈ.பி.டி.பி ட சொல்லி கொடுத்து விடுறன் :twisted:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊழல் அற்ற பட்டம் வேணும் ...லஞ்சம் கொடுப்பது வாங்குவது எல்லாம் நம்ம தோழருக்கு பிடிக்காது..😅 மிச்ச மூன்று பேரையும் யாழில் இலகுவாக எடுத்து போடுவேன் என்ட கிறுக்கல்கள் யாழில் ஒரு மாதத்தில் 500 பேருக்கு மேல பார்க்கினம் வெள்ளி விழா,வைர விழா எல்லாம் தாண்டி ஒடுது ...ஆகவே கலாநிதி பட்டத்திற்கு கையொப்பம் எடுப்பது   இலகுவான விடயம் என நினைக்கிறேன்....😅
    • புலிகள் குடும்பங்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதனை  நானும் கேள்விப்பட்டதில்லை, ஆனால் 1995 இறுதிக்காலப்பகுதியில் புலிகளின் 3 போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்தார்கள், அவர்களுக்கு 3 மாத தண்டனைக்காலத்தில் தண்டனையாக சமையலறை வேலை இருந்தது, அந்த காலப்பகுதி முடிவடைவதற்கு வெகு சில நாள்கள் மட்டும் இருந்த நிலையில் அவர்கள் இருந்த சமையலறை மேல் புக்கார வீசிய குண்டில் 3 போராளிகளும் உடல் சிதறி பலியாகியிருந்தனர். அதில் ஒரு போராளி சாகவச்சேரியினை சேர்ந்தவர், அந்த குண்டு வீச்சு யாழ் மாவட்டத்திற்குள் நிகழ்ந்தது, இருந்தும் அந்த போராளிகளின் உடல்களை புலிகள் தாமே தகனம் செய்துவிட்டனர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை, இறந்தவர்களுக்கு போராளிகள் எனும் அந்தஸ்தும் வழங்கப்படவில்லை, 5 பேருக்கும் குறைவானவர்களே அவர்களது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
    • இவருக்கும் எனக்கும் கல்வியில் ஒரு கள்ளத் தொடர்புண்டு . ......!  😂
    • முதலில் செய்து விட்டு சொல்லுங்கடா வாயளையும்  வெடித்தது காணும் .
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.