Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கீரைப் புட்டு

Featured Replies

image0286j.jpg

கீரைப் புட்டு ஆட்டாமாவில் (சப்பாத்தி மா) நேற்று செய்து பார்த்தேன், நினைத்த அளவிற்கு ஈரத்தன்மை இல்லாமல் வித்தியாசமான ஒரு சுவையுடன் நண்டாக வந்தது. தேங்காய்ப்பூப் போடாததால் ஆட்டிறைச்சிப் பொரியலும் செய்தேன். கீரைப் புட்டு செய்முறை இணைப்பிற்கு நன்றி ரதி! :)

  • கருத்துக்கள உறவுகள்

கண்ட கண்ட படங்களை பார்த்து கெட்டுப் போனீங்கள்...சிவ..சிவ,

கண்ணா இந்த இரண்டு பெண்ணுகளையும் கண் கலங்காம நீ தான் காப்பாத்தனும் ஆத்தா உருவில வந்து

வாறேன் வாறேன் உடையாரை காப்பாத்த :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

image0286j.jpg

கீரைப் புட்டு ஆட்டாமாவில் (சப்பாத்தி மா) நேற்று செய்து பார்த்தேன், நினைத்த அளவிற்கு ஈரத்தன்மை இல்லாமல் வித்தியாசமான ஒரு சுவையுடன் நண்டாக வந்தது. தேங்காய்ப்பூப் போடாததால் ஆட்டிறைச்சிப் பொரியலும் செய்தேன். கீரைப் புட்டு செய்முறை இணைப்பிற்கு நன்றி ரதி! :)

குட்டி உண்மையாகவே நீங்கள் தான் இந்த பிட்டை அவித்ததா?[பிட்டு பதமாய் வந்திருக்கிற மாதிரி படத்தில் தெரியுது] உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர் ஆனால் இறைஞ்சிப் பொரியலைப் பார்த்தால் தான் கறி போல இருக்குது...நான் வாற செவ்வாயில் இருந்து 1 1/2 மாதத்திற்கு விரதமும்,மரக்கறியும் :(

நானே தான்! :rolleyes:

கறிதான் வைத்தேன் ஆனால் அது பொரியல் மாதிரி வந்து விட்டதோ என்று நினைத்துத் தான் பொரியல் என்று எழுதினேன்... :unsure:

அது சரி, அடிக்கடி உப்பிடி விரதம் என்று சொல்லிச் சொல்லித் தான் கனபேர் diet ல இருக்கிறதா கேள்வி... :lol: :lol:

நான் வாற செவ்வாயில் இருந்து 1 1/2 மாதத்திற்கு விரதமும்,மரக்கறியும் :(

இந்த விரதத்துக்குப் பிறகு உங்களுக்கு கல்யாண வைபோகம் தான் போல. நல்லா அம்மனைக்கும்பிடுங்கோ.

கீரைப் புட்டு ஆட்டாமாவில் (சப்பாத்தி மா) நேற்று செய்து பார்த்தேன், நினைத்த அளவிற்கு ஈரத்தன்மை இல்லாமல் வித்தியாசமான ஒரு சுவையுடன் நண்டாக வந்தது. தேங்காய்ப்பூப் போடாததால் ஆட்டிறைச்சிப் பொரியலும் செய்தேன். கீரைப் புட்டு செய்முறை இணைப்பிற்கு நன்றி ரதி! :)

இப்பதான் யாரோ நெஞ்சுவலி என்று வைத்தியசாலை போய்வந்ததாக ஞாபகம் :rolleyes: அதற்குள் ஆட்டிறைச்சி பொரியலா? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி...... இப்படி அவிச்சா அது கழி தன்மை இராது, கீரைப்புட்டு ஓன்றாக கலந்து அவிச்சாதான் அதன் சவை தெரியும். இப்பதான் விதைச்சிருக்கு கீரை வீட்டில, 45days ற்கு பிறகு அவித்துப்போட்டு படம் காட்டிறன்

மதியுடைய கீரை வாங்கலையோ பதிவை பாத்த போது இத போட வேணும் எண்டு நினைச்சது. பிறகு அத மறந்து போய் விட்டிட்டன். இப்ப சயந்தன் சோமி யோட கூட்டு பதிவு மீளவும் அத ஞாபகப்படுத்தினதாலை இப்ப உங்களை சாப்பிட கூப்பிடுறன்.

Canada+318.jpg

தேவையான பொருட்கள்

1. நீராவியில் அவித்து அரித்த கோதுமை மா/ ஆட்டா மா 250 கிராம்

2. கீரை 250- 350 கிராம் - கீரை (spinach) கிடைக்காட்டி, மீகுளிரூட்டின கீரை (frozen spinach)

3. வெங்காயம் - பெரிய வெங்காயம் பாதி/ சிறிய சிவப்பு வெங்காயம் 4

4. பச்சை மிளகாய் - 1, காரம் சாப்பிட கூடிய ஆக்கள் 2 போடலாம்

5. உடன் திருவிய தேங்காய் பூ/ காய்ஞ்ச தேங்காய் பூ

6. அளவுக்கு உப்பு

7. நீர்

செய்முறை

1. கீரையை பொடி பொடியா வெட்டி கொள்ளவும். மீகுளிரூட்டின கீரை எண்டால் அதை எடுத்து குளிர் நீங்க சிறிது நெரம் வைக்கவும். பொதுவா மீகுளிரூட்டின கீரை வெட்டியபடி இருக்கும்.

2. வெங்காயம், மிளாகாய் என்பவற்றை சிறிது சிறிதாக அரிந்து கொள்ளவும்.

3. வாய் அகன்ற பாத்திரத்தில் வெட்டிய கீரை, வெங்காயம் என்பவற்றை போட்டு அளவுக்கு உப்பையும் தூவி கோள்ளவும்

4. கோதுமை மாவை சிறிது சிறிதாக தூவி கலக்கவும், பொதுவாக கீரை, வெங்காயம் என்பவற்றில் இருக்கும் நீர் தன்மை மா புட்டு பததுக்கு வர போதும், மா நங்கு கீரையுடன் சேரவில்லை எனில் சிறிது நீர் தூவி கலக்கலாம். ஆனால் மிகையாக நீர் தூவ கூடாது. இதை மற்ற புட்டுகள் கொத்தி பெரிய மா கட்டிகளை சிறிதாக்குவது போல செய்ய முடியாது. அதானால் கவனமாக சிறிய சிறிய கட்டிகளாக வருமாறு குழைத்து எடுக்க வேண்டும்.

5. நீத்து பெட்டி/ புட்டு குழாயில் போட்டு அவித்து எடுக்கவும்.

6. இறக்கிடயதும் சுடச்சுட உடன் துருவிய தேங்காய் பூவை கலந்து சாப்பிடவும்.

காய்ந்த தேங்காய் பூ தான் கிடைக்கும் என்றால் புட்டு அவிக்க முதல் குழைத்த மாவுடன் கலந்து அவிக்கலாம். அல்லது காய்ந்த தேங்காய் பூவுக்கு சிறிது நீர் கலந்து 10/15 செக்கன் மைக்கிரோ வெவில் சூடக்கி எடுத்து அவித்த புட்டில் கலந்து சாப்பிடலாம்.

நான் அவித்த புட்டுக்கு கீரை போதுமான் அளவில் கலக்கவில்லை. குளுருட்டிலை போதுமான அளவு இருக்கும் எண்டு நினைச்சு போனா கொஞம் தான் இருந்திச்சு :(

http://viriyumsirakukal.blogspot.com/2007/05/blog-post_18.html

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் நானும் குட்டியண்ணாவை தமிழினி கேட்கும் கேள்வியைத் தான் கேக்க இருந்தேன்..அப்புறம் குட்டியண்ணா என்ன நினைக்கிறாரோ தெரியாது என்று விட்டு இருந்தேன்..பட் இனிமேலாவது இவற்றை சற்று தள்ளி வைக்கலாம் என்று நினைக்கிறன் குட்டி அண்ணா..ஆட்டு பொரியல் முக்கியமா.... இல்லை உடல் நலம் முக்கியமா... என்பதை யோசிச்சு நடவுங்கோ..நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி, அடிக்கடி உப்பிடி விரதம் என்று சொல்லிச் சொல்லித் தான் கனபேர் diet ல இருக்கிறதா கேள்வி... :lol: :lol:

எப்படித் தான் விரதம் இருந்தாலும் உடம்பு எனக்கு கொஞ்சம் கூட குறைய மாட்டேன்குது இது முதலாவது விசயம் :lol:

இந்த விரதத்துக்குப் பிறகு உங்களுக்கு கல்யாண வைபோகம் தான் போல. நல்லா அம்மனைக்கும்பிடுங்கோ.

எப்படி தான் விரதம் இருந்தாலும் கடவுள் கொஞ்சம் கூட கருணை காட்ட மாட்டேன்கிறார் இது இரண்டாவது விசயம் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வாற செவ்வாயில் இருந்து 1 1/2 மாதத்திற்கு விரதமும்,மரக்கறியும் :(

ஐயோ...ஐயோ....குளிர்நேரம் பாத்து தொடங்கீட்டாளவை....இனி உருளைக்கிழங்குகறியும் பருப்புக்கறியும் தயிரும்தான் என்ரைவீட்டிலை கதாநாயகன்கள் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீரைப் புட்டு ஆட்டாமாவில் (சப்பாத்தி மா) நேற்று செய்து பார்த்தேன், நினைத்த அளவிற்கு ஈரத்தன்மை இல்லாமல் வித்தியாசமான ஒரு சுவையுடன் நண்டாக வந்தது. தேங்காய்ப்பூப் போடாததால் ஆட்டிறைச்சிப் பொரியலும் செய்தேன்.

என்னெண்டு குட்டியர்???? இப்பவெல்லாம் ஆட்டாமாவிலை எதுஎப்பிடி என்ன செய்து சாப்பிட்டாலும் சமிக்குதில்லை :( வேறை ஏதும் ரெக்னிக் :wub: ஏனெண்டால் எனக்கும்...வருவன்...வரப்போறன்...வந்துட்டன்... :D என்னயிருந்தாலும் ஆட்டுறைச்சியை போலிடோலுக்கு சமனாய் உந்த டாக்குத்தர்மார் நல்லாய்த்தான் வெருட்டி வைச்சிருக்கிறாங்கள். :icon_idea:

இப்பதான் யாரோ நெஞ்சுவலி என்று வைத்தியசாலை போய்வந்ததாக ஞாபகம் :rolleyes: அதற்குள் ஆட்டிறைச்சி பொரியலா? :icon_idea:

ம்ம்ம் நானும் குட்டியண்ணாவை தமிழினி கேட்கும் கேள்வியைத் தான் கேக்க இருந்தேன்..அப்புறம் குட்டியண்ணா என்ன நினைக்கிறாரோ தெரியாது என்று விட்டு இருந்தேன்..பட் இனிமேலாவது இவற்றை சற்று தள்ளி வைக்கலாம் என்று நினைக்கிறன் குட்டி அண்ணா..ஆட்டு பொரியல் முக்கியமா.... இல்லை உடல் நலம் முக்கியமா... என்பதை யோசிச்சு நடவுங்கோ..நன்றி.

இந்த வருஷம் தொடங்கினதுக்கு ஆட்டிறைச்சியே சாப்பிட இல்லை. அப்பிடி இருந்தே நெஞ்சு வலி வந்தது, திரும்ப நெஞ்சுவலி வாரத்துக்கு முன்பு ஆசைக்கு ஒருக்கா என்றாலும் சாப்பிடலாம் என்றுதான் முடிவுக்கு வந்தேன். :wub:

யாழில நீங்கள் பதிஞ்சதை இன்று தான் பார்க்கிறேன், எனக்கு சனிக்கிழமையே நல்லா போனில பேச்சு விழுந்திட்டுது...

குட்டி...... இப்படி அவிச்சா அது கழி தன்மை இராது, கீரைப்புட்டு ஓன்றாக கலந்து அவிச்சாதான் அதன் சவை தெரியும்.

...

பார்க்க நல்லாத்தான் இருக்கு உடையார். ஆனால் உதுக்குள்ள நிறைய தேங்காய்ப் பூ இருக்குப் போல தெரியுது... தேங்காய்ப் பூ போடாமல் விட்டதால தான் ஆட்டிறைச்சி சேர்த்தேன். இரண்டையும் சேர்த்து இருந்தால் சங்கு தான்... :o

எப்படித் தான் விரதம் இருந்தாலும் உடம்பு எனக்கு கொஞ்சம் கூட குறைய மாட்டேன்குது இது முதலாவது விசயம் :lol:

விரதம் என்று இருக்கிறவர்கள் தானே ஒரு செம்பு பால், ஒரு சீப்பு வாழைப்பழம், அது இது என்று போட்டுத்தாக்குபவர்கள்... இப்பிடி விரதம் இருந்தால் எங்க உடம்பு குறையும்? நீங்களும் அப்படியா ரதி?? :lol:

என்னெண்டு குட்டியர்???? இப்பவெல்லாம் ஆட்டாமாவிலை எதுஎப்பிடி என்ன செய்து சாப்பிட்டாலும் சமிக்குதில்லை :( வேறை ஏதும் ரெக்னிக் :wub: ஏனெண்டால் எனக்கும்...வருவன்...வரப்போறன்...வந்துட்டன்... :D என்னயிருந்தாலும் ஆட்டுறைச்சியை போலிடோலுக்கு சமனாய் உந்த டாக்குத்தர்மார் நல்லாய்த்தான் வெருட்டி வைச்சிருக்கிறாங்கள். :icon_idea:

கு.சா. அண்ண, வெள்ளை மாவை விட ஆட்டா மா கெதியில செமிக்குமே? ஆட்டா மாவயை 5 நிமிஷம் மைக்ரோவேவில் (ஒரே அடியா வைக்க வேண்டாம், 1 நிமிடத்துக்கு ஒருக்கா வெளிய எடுத்து கிளறி விட்டுத் திரும்ப வைத்து எடுங்கள், இல்லாட்டி மா எரிஞ்சு போகும், பிறகு fire brigade-ஐத் தான் கூபிடவேனும்) வைத்து எடுத்து புட்டு அவித்துப் பாருங்கள்.

வருத்தம் என்று வைத்தியரிடம் போகும் போது, ஒரு நல்ல வைத்தியரா லட்சணமா மருந்து மாத்திரைகளைத் தந்தால் சரி எண்டு நாங்களும் நல்ல பிள்ளையா இருப்பம் எல்லே? அதை விட்டுப் போட்டு, வருத்தம் உடம்பில இல்லை, மனதில எண்டால் என்ன அர்த்தம்? ஆட்டிறைச்சி சாப்பிடவேணும் போல இருக்கு, அதை சாப்பிடாமல் விட்டால் மன வருத்தம் கூடுமோ கூடாதோ? நீங்களே சொல்லுங்க பார்ப்பம்??

சரி குட்டி, ஆட்டிறைச்சியை கொஞ்சமாக சாப்பிடுங்கோ. அடிக்கடி சாப்பிடதேயுங்கோ.

தேங்காயை முற்றிலுமாக தவிர்த்தல் நல்லது!

ஐயோ...ஐயோ....குளிர்நேரம் பாத்து தொடங்கீட்டாளவை....இனி உருளைக்கிழங்குகறியும் பருப்புக்கறியும் தயிரும்தான் என்ரைவீட்டிலை கதாநாயகன்கள் :(

ஏன் அண்ணே கோவிலுக்கு போனால் இதைவிட நல்ல சாப்பாடு கொடுப்பார்களே விரதகாலத்தில்....

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

முளைக்கீரை என்டால் என்ன உடையார்?...ப்ரஸ்சாக பிடுங்கும் கீரையா?

தண்ணி கூடினால் களியாகத் தான் போகும் அது தான் அளவாக தண்ணீர் விட்டு அவிக்க வேண்டும்

ரதி இந்த கீரைதான் புட்டுக்கு ஊரில் பாவிக்கிறனாங்கள், இது என் வீட்டு தோட்ட கீரை

dsc02796yi.jpg

Uploaded with ImageShack.us

முளைக்கீரை

dsc02797w.jpg

Uploaded with ImageShack.us

வெட்டிய கீரை புட்டுக்கு

dsc02798l.jpg

Uploaded with ImageShack.us

வெட்டிய கீரை குழைத்த மாவுடன்

dsc02800zv.jpg

Uploaded with ImageShack.us

அவிச்ச புட்டு - பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

dsc02803d.jpg

Uploaded with ImageShack.us

வீட்டில் வளர்க்கிறேன் முருங்கை, வல்லாரை, பொன்னாங்கானி,........

dsc02794dk.jpg

Uploaded with ImageShack.us

dsc02795dk.jpg

Uploaded with ImageShack.us

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் தோட்டம் அந்த மாதிரி........ :lol: . நானும் சமையலுக்கு பிடுங்கக் வரலாமோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடையார் நீங்கள் கொடுத்து வைச்சனீங்கள் அவுஸ்சில் இருந்தாலும் ஊரில் இருக்கிற மாதிரி இருக்கிறீர்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா எப்பவும் வரலாம்

ரதி இங்கு பலர் இப்படிதான். ஊரில் போய் தோட்டம் செய்யதான் ஆசை, ஈழம் கிடைத்தால் ஊருக்கு போய் முழு நேர வேலை தோட்டம்தான். இப்பதான் பாவல், பயித்தை, மரவள்ளி & வெண்டி போட்டிருக்கு, வீட்டில் வளர்த்ததை சமைத்து சாப்பிட்ட மனதுக்கு சந்தோஷமாக இருக்கும்

ஆகா உடையார் அண்ணா உங்கள் தோட்டம் பார்க்கும்போது பேசாமல் அவுஸ்ரேலியாவில் குடியேறலாம் போல் உள்ளது...

ம்ம்ம் நானும் குட்டியண்ணாவை தமிழினி கேட்கும் கேள்வியைத் தான் கேக்க இருந்தேன்..அப்புறம் குட்டியண்ணா என்ன நினைக்கிறாரோ தெரியாது என்று விட்டு இருந்தேன்..பட் இனிமேலாவது இவற்றை சற்று தள்ளி வைக்கலாம் என்று நினைக்கிறன் குட்டி அண்ணா..ஆட்டு பொரியல் முக்கியமா.... இல்லை உடல் நலம் முக்கியமா... என்பதை யோசிச்சு நடவுங்கோ..நன்றி.

நானும் குட்டி கருத்து , படிச்சேனா.........

பக்குன்னு போயிரிச்சு!

பாத்துடலாமா பத்து ,,, சாவு நெருங்கி வர்ற Food! ?

இங்கே...........

Top 10 Foods Highest in Cholesterol (To Limit or Avoid)

http://www.healthaliciousness.com/articles/foods-highest-in-cholesterol.php :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.