Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உற்சாகமான உடற்பயிற்சி உயிருக்கு பாதுகாப்பு

Featured Replies

தாம்பத்ய உறவின் மூலம் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும், புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட அது குறைக்கிறது என்றும் சிலிர்ப்பூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தம்பதியரை உற்சாகமூட்டியிருக்கின்றனர் பாலியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள்.

இதயநோய் தடுக்கப்படுகிறது:

உறவின் போது உச்சத்தில் வெளியாகும் எண்டோர்பின் உணவின் செரிமானத்துக்கும், உடலிலுள்ள சுருக்கங்களை விலக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது என்றும் அவர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். தாம்பத்ய உறவின் மூலம் உடல் வலிமையடையவதோடு இதய நோய்கள் வரும் வாய்ப்பும் குறைவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்தியா மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளில் வாழும் மக்கள் இதயத்துக்கும் உடலுறவுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி தவறான கருத்துகளைக் கொண்டுள்ளனர். ஆனால் இது பற்றி ஆய்வு நிகழ்த்திய வல்லுநர்கள் உடலுறவால் எந்த ஆரோக்கியமான இதயமும் பாதிக்கப்படுவதில்லை என்று உறுதியாகக் கூறுகின்றனர். உண்மையில் ஒத்த மனத்துடன் உடலுறவில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவதால் மாரடைப்பு ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும். அந்த வகையில் உடலுறவு என்பது நமக்கான பாதுகாப்புக் கவசமாகவே செயல்படுகிறது. எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

உறவின் நிலைகள்

உறவின் நிகழ்வுகளை எழுச்சி நிலை, கிளர்ச்சி நிலை, உச்ச நிலை, மீள் நிலை என ஆய்வாளர்கள் பிரித்துள்ளனர். இந்த நான்கு நிலைகனிலும், இதயமானது பலவகையான ஆரோக்கியமான மாற்றங்களை அடைவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்புக்கான காரணங்களை ஆராய்ந்த இதய மருத்துவர்கள் அவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர். அதாவது இதயத்துக்குப் போதுமான உடற்பயிற்சி இல்லாதது, உடலின் எடை அதிகமாதல், மன இறுக்கம் ஆகியவைதான் அடிப்படையான காரணங்கள். இந்த மூன்று காரணங்களையும் வெல்லக்கூடிய ஆற்றல், உடலுறவுக்கு உண்டு என ஆணித்தரமாகக் கூறுகிறார்கள்.

தம்பதிகளின் வயதுக்கும், அவர்களின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்களுக்கு மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தாம்பத்யத்தின் போது ஏற்படும் உடலியல் மாற்றங்கள் யாவும் ஒரே மாதிரியாக இருந்தாலும் இதற்காக எடுத்துக் கொண்ட நேரம் உறவின் தன்மை போன்றவை ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடும்.

உடலியல் மாற்றங்கள்

தம்பதியர்களின் வயது இருபதாக இருந்தால் அவர்களின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் மற்ற தம்பதியர்களைவிட அதிகமாக இருக்கும். இளமையின் விளிம்பில் இருப்பதால் உடலில் உள்ள பரிவு நரம்பு அமைப்பு அளவுக்கு அதிகமாகச் செயல்பட்டு ரத்த அழுத்தத்தின் அளவு உயர்வதோடு அல்லாமல் இதயத்துடிப்பின் அளவும் பன்மடங்கு அதிகமாகிறது.

உச்சக்கட்ட உறவின் போது ரத்த அழுத்தத்தின் அளவானது 220/110 என்ற அளவுக்கு உயரும். இவ்வாறு உச்ச நிலைக்குச் சென்ற ஓரிரு நிமிடங்களில் மறுபடியும் சாதாரண ரத்த அழுத்த நிலைக்கு மீள்கிறது. இதுபோல் உடலுறவின் உச்சநிலையில் ஒரு நிமிடத்துககு இதயம் சுமார் 180 என்ற அளவுக்கு மிகவும் வேகமாகத்துடிக்கும். ஆனால் உச்ச நிலையில் இருந்து மீண்ட ஒரு நிமிடத்துக்குள் இதயத்துடிப்பானது பழைய நிலைக்கு திரும்பிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

வயதானவர்கள் தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் இளம் வயது தம்பதிகள் ஈடுபடும்போது ஏற்படும் உடலியல் மாற்றங்களைவிடக் குறைவானவே இருக்கும்.

உற்சாகமான உடற்பயிற்சி

பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள், தாம்பத்ய உறவு என்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய மிகச்சிறந்த உடற்பயிற்சி என்றே கூறுகின்றன. உறவின் போது ஏற்படும் அசைவுகளினால் அந்தப் பகுதியில் உள்ள தசைகள் மட்டுமல்லாமல் முதுகுத்தண்டுவடப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறுகின்றன. அதோடு முதுகுத் தண்டுவடப் பகுதியில் உள்ள சிறிய முட்கள்போன்ற எலும்பு அமைப்புகளும் சிதைவு மாற்றங்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்படுகின்றன.

இவை நிரூபிக்கப்பட்ட உண்மைகளே என நிபுணர்கள் தெரிவித்துள்ளதோடு உடலுறவினால் ஜலதோஷம், உடல்வலி போன்ற சிறு சிறு பலவீனங்கள் வரும் வாய்ப்பும் குறைகிறதாம். எலும்புகளுக்கும், தசைகளுக்கும் கூட வலிமை கூடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிக கலோரிகள் கரைக்கப்படுவதால் தேவையற்ற கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் குண்டாவதும் தடுக்கப்படுகிறது. எது எப்படியோ, இந்த உற்சாகமான இந்த உடற்பயிற்சியினை காதலர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.

http://www.tamilkathir.com/news/5356/58//d,full_article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன் இணைப்பிற்கு, இனி ஏன் யாழில்........

கண்டுகேட்டு உண்டுயிர்த்து

உற்றறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள

கண்டு, கேட்டு, உண்டு, முகர்ந்து, தீண்டி அனுபவிக்கும் ஐம்புல இன்பங்களும் வளையல் அணிந்த இப்பெண்ணின் இடத்தே கொள்ளக் கிடக்கின்றன!

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்

அதற்கன்னள் நீங்கு மிடத்து.

ஆராய்ந்தறிந்த நல்ல ஆபரணங்களை யணிந்த இப்பெண்ணோடு சேர்ந்து வாழ்தல் என்பது, உயிர் உடலோடு சேர்ந்து இன்பத்தை நுகர்வதைப் போன்றது. இவளை பிரிந்து வாழ்தல் என்பது, உயிர் விட்டுப்போகச் சாதலைப் போலத் துன்பம் அனுபவிப்பது.

இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட இரு வேறு உடல்களை சங்கமிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவதும் உடல் உறவே ஆகும்.

சிக்மண்ட் ஃப்ராய்ட், 20 ம் நூற்றாண்டின் சிந்தனையாளர்களில் ஒருவர். மனோ வியாதிக்கான சைக்கோ அனலைசிஸ் எனும் ஆராய்ச்சியின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். பாலுணர்வு தான் முக்கியமான “தூண்டுதல் சக்தி” எல்லாவித பாசிடிவ் செயல்கள், கிரியேடிவ் செயல்கள் இவையெல்லாமே செக்ஸ் உந்துதல் தான் என்கிறார் ஃப்ராய்டு.

உடலுறவின் நன்மைகள்

ரத்த அழற்சி சீராகி மூளைக்கு அதிக ரத்தம் பாய்கிறது.

கலவியின் போது பல ரசாயன மாற்றங்கள் உடலில் நிகழும். மூளையில் டோஃபாமைன் அளவுகள் ஏறும்.

உடலுறவு ஆஸ்த்மாவை கட்டுப்படுத்தும்.

மகிழ்ச்சியான உடலுறவில் பெண்களின் அழகு கூடுகிறது. ஏழு நாட்களில் 4 முறை உடலுறவு கொள்ளும் பெண்கள் 10 வருட வயது குறைந்தவர்களாக தெரிகின்றனர். இவை சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பவை.

உடல் உறவு என்பது அற்பநேர சந்தோஷத்திற்காகவோ அல்லது இனவிருத்திக்காகவோ மட்டுமல்ல அதையும் விட மகத்தான பல பங்குகளைக் கொண்டது. சமீப கால ஆராய்ச்சிகள் இதனை தெளிவுபடுத்தியுள்ளன. நீண்ட நேரம் உடலுறவு கொண்டு கருத்தரிக்கும் பெண்களுக்கும் அதிக நேரம் உடலுறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறைகின்றன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பெண்கள் அதிக நேரம் உடலுறவு கொள்வதால் பெண் உறுப்பில் உள்ள தசை நார்கள் வலுவடைய உதவுவதாகவும் இது பிற்காலத்தில் ஏற்படும் சிறுநீர்க் கசிவு உபாதைகளைப் போக்கிடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

உடல் உறவு என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழியாகவே கருதப்படுகின்றது. இதனையே மேலை நாட்டு ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன. உடலுறவு கொள்வதால் மன இறுக்கம் குறைகின்றது. மனச்சோர்வு நீங்குகின்றது. மனது மகிழ்ச்சியடைகின்றது. சீரான சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு அவசியமாகின்றது.

கணவன் – மனைவி இருவரும் சராசரியாக வாரம் இருமுறை உறவு வைத்துக் கொள்வது உடல் நலத்தை பெருக்கி உடல் ஆரோக்கியத்தை பேணிட உதவுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வாரம் இரு முறை குறைந்த பட்சம் உறவு வைத்துக் கொள்வது ஜலதோஷத்தை அண்டவிடாது தடுத்திடும் வயிற்றுப் பிரச்சனைகளான நெஞ்செரிச்சல், அல்சர் வலி போன்றவற்றையும் போக்கிடும்.

உடலுறவு என்பது பல விதமான உடல் மற்றும் மனரீதியான உபாதைகளுக்கு ஒரு வடிகால் போன்று விளங்கினாலும் அளவோடு வைத்துக் கொள்வது மட்டுமே சிறந்த பயனை தந்திடும். அளவுக்கு அதிகமான உடலுறவு சோர்வை கொடுத்து உடலை பலவீனமடையச் செய்து விடும். குறைந்த இடைவெளியில் வாரத்திற்கு இரண்டு முறைக்கு மிகாமல் உறவு கொள்வதே ஆரோக்கியத்தை பெருக்கிடும் என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு உறவு கொள்வது உடலில் இம்மியூளோகுளோபுலின் – ஏ என்ற நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிடும் இராசயன் பொருளை உடல் தேவையான அளவு சுரந்திட வழி வகுக்கும். இதனால் உடல் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றிடும்.

நியுயார்க் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சியில் உடலுறவால் தலைவலி, கீல்வாதம் போன்ற பல வலிகள் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது. உடலுறவு கொள்ளும் பொழுது மூளையில் ஏற்படும் இயற்கையான சில இரசாயன சுரப்புகளால் சந்தோஷம் பெருகுவதால் இந்த இரசாயனப் பொருட்கள் வலி நிவாரணத்திற்கும் பயன்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இவ்வகைச் சுரப்புகள் மன அழுத்தத்தை போக்கி உடல் முழுவதும் ஒரு வித புத்துணர்ச்சியை பரவிடவும் செய்கின்றதாம்.

உடலுறவின் போது மூக்கும் அதிக சுறுசுறுப்பாகி தனது பணியை செவ்வனே செய்து அதிக சுரப்புகளை சுரந்தும் அதிக உமிழ்நீரைச் சுரக்கவும் செய்கின்றது. இதனால் தனது பணியை முறையாக மூக்குகள் செய்து மூக்கில் உள்ள நரம்புகள் வலுவடைவதும் கண்டறியப்பட்டுள்ளது.

திருப்தியான உடலுறவிற்குப் பின், உடல் களைத்துப் போய் சோர்வடைவது இயல்பே. இதற்கு அடிப்படைக் காரணமாக விளங்குவது உடலுறவின் போது, உச்சநிலையை அடைந்த பின்னர் உடல் ‘ஆக்கிடோஸிஸ்’ என்ற இரசாயனப் பொருளை சுரக்கின்றது.

இப்பொருள் ஓய்வையும் உடல் வெப்பத்தையும் மாற்றமடையச் செய்கின்றது. இப்பொருளே வாழ்க்கை துணைவருடன் அன்பை பெருக்கி இனிய மனநிலையை உண்டாக்குகின்றது.

பெண்களுக்கு உடலுறவு மாதவிலக்கு ஏற்படுத்தும் பலதரப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கின்றது. குறிப்பாக, மாதவிலக்கின் சமயம் “எஸ்ட்ரோஜனின்” அளவு சீர் செய்யப்படும் பொழுது, மாதவிலக்கிற்கு முன்பாக உடலுறவு கொண்டால் எஸ்ட்ரோஜனின் அளவு எளிமையாக சீரமைக்கப்படுகின்றது. அதனால் மாதவிலக்கின் போது ஏற்படும் பலவிதமான வலிகள் சோர்வு போன்ற உபாதைகள் பெரிதும் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு உடல் உறவு களைப்பை, இறுக்கத்தை, மனச்சோர்வை போக்கிடும் ஒர் மாமருந்தாகும். மனம் அமைதி பெறவும் உடல் புத்துணர்ச்சி பெற பெரிதும் பயன்படும் அற்புத செயலாகும்.

உளவியல் மற்றும் மனஇயல் நிபுணர்களும் கூட பிரமச்சரியத்தை விட, உடலுறவால் தான் அதிக உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் தர இயலும் என ஒப்புக்கொள்ள ஆரம்பித்து, பரிந்துரையும் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

நமது கலாச்சாரத்தில் உடலுறவிற்கு கடைசியிடம் ஒதுக்கப்படலாம். ஆனால், ஆரோக்கியமாக வாழ்ந்திட உடல் உறவு ஒர் ஒப்பற்ற உன்னத வடிகாலாகும். எனவே, அவரவர்கள் வயதிற்கு ஏற்ப உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப வாரம் இருமுறையாவது உறவு கொள்வது, உடல் ஆரோக்கியத்தைக் காத்திட பெரிதும் உதவிடும். உடலுறவு அவசியமே!

ஆயுர்வேதம்.காம் ஜனவரி 2011

'' தாம்பத்ய உறவின் மூலம் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும், புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட அது குறைக்கிறது என்றும் சிலிர்ப்பூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தம்பதியரை உற்சாகமூட்டியிருக்கின்றனர் பாலியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள்.''

அதுதான் சொல்லிட்டீங்க இல்ல சிலிர்ப்பூட்டும் அறிக்கைன்னு கோமகன் அண்ணா!

உறுப்புக்களின் பாலியல் சேர்க்கை , எப்டி உடலின் உள் கெளம்பும் புற்றை குணப்படுத்தும்?

அப்டீன்னா கல்யாணம் பண்ணிகிட்டவங்களுக்கு புற்று நோய் வர சந்தர்ப்பம் குறைவா?

அட கருமாந்திரமே .........தாம்பத்ய வாழ்க்கையில் ஆஹா ஓஹோன்னு வாழ்ந்துகிட்டு இருக்கும்போதே, கான்சரில போயி சேர்ந்தவங்க பத்திதான் நிறைய எல்லாருமே கேள்வி பட்டிருக்கோம்!

சிலிர்ப்பூட்ட எவ்ளோ கஸ்டபடுது நம்ம இணைய தளங்க!! :)

  • தொடங்கியவர்

'' தாம்பத்ய உறவின் மூலம் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும், புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட அது குறைக்கிறது என்றும் சிலிர்ப்பூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தம்பதியரை உற்சாகமூட்டியிருக்கின்றனர் பாலியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள்.''

அதுதான் சொல்லிட்டீங்க இல்ல சிலிர்ப்பூட்டும் அறிக்கைன்னு கோமகன் அண்ணா!

உறுப்புக்களின் பாலியல் சேர்க்கை , எப்டி உடலின் உள் கெளம்பும் புற்றை குணப்படுத்தும்?

அப்டீன்னா கல்யாணம் பண்ணிகிட்டவங்களுக்கு புற்று நோய் வர சந்தர்ப்பம் குறைவா?

அட கருமாந்திரமே .........தாம்பத்ய வாழ்க்கையில் ஆஹா ஓஹோன்னு வாழ்ந்துகிட்டு இருக்கும்போதே, கான்சரில போயி சேர்ந்தவங்க பத்திதான் நிறைய எல்லாருமே கேள்வி பட்டிருக்கோம்!

சிலிர்ப்பூட்ட எவ்ளோ கஸ்டபடுது நம்ம இணைய தளங்க!! :)

நன்றிகள் அறிவிலி :) . அவங்கள் ஒரு தமாசுக்கு சிலிர்பூட்டும் எண்டு சொன்னால் , அந்த சிலிர்பால நீங்கள் ஏனப்பு சிலுத்துக்கிறியள் ?உள்ளுடனைப் பாருங்கோவன் . மற்ரது அவை சொன்னது , புற்ரு நோய் வரும் வாய்பு குறைய இடமுண்டு தான் சொன்னவையே ஒழிய , இதால புற்ரு நோயே வராது எண்டு சொல்லேலையே . நல்ல ஆரோக்கியமான மது சிகரட் இல்லத தம்பதிகளுக்கு புற்ருநோய் வந்ததா ? எண்டும் பாக்கத்தானே வேணும் அறிவிலி :D :D :D ?

கோமகன் இந்த உடற்பயிற்சி இயந்திறத்தை எங்கே வாங்களாம்? :D :D

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லிப்போட்டீங்கள் எல்லோ இனி ஒரே சிவராத்திரிதான் :lol: :lol:

  • தொடங்கியவர்

சொல்லிப்போட்டீங்கள் எல்லோ இனி ஒரே சிவராத்திரிதான் :lol: :lol:

பாத்து :D :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லிப்போட்டீங்கள் எல்லோ இனி ஒரே சிவராத்திரிதான் :lol: :lol:

சிங்கம் இவ்வளவுகாலமும் சுருண்டுமூலையிக்கை படுத்துக்கிடந்தமாதிரி கதை விடுது. :rolleyes:

  • தொடங்கியவர்

சிங்கம் இவ்வளவுகாலமும் சுருண்டுமூலையிக்கை படுத்துக்கிடந்தமாதிரி கதை விடுது. :rolleyes:

அதுதானே..................... உம்.................. :D :D :D .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.