Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது சரியா?

Featured Replies

அண்மையில் எனக்கு தெரிந்த ஒரு பெண்ணிற்கு திருமண ஏற்பாடு நடந்தது வீட்ல எல்லோருக்கும் அந்த பையனை பிடித்து

இருந்தது. பெண்ணுக்கு பிடிக்கவில்லை காரணம் வயசு பெண்ணுக்கு 21 வயசு தான் பையனுக்கு 30 வயசு பையன் engineer வெளிநாடொன்றில வேலை பார்க்கிறான் வீட்ல எல்லோருக்கும் பிடிச்சதால எப்பிடியும் அவளுக்கு கட்டி வைச்சிடுவார்கள் என்று நினைக்கிறன் காரணம் பெண்ணுக்கு ஜாதகத்தில ஏதோ குற்றம் (செவ்வாய்) இருக்குது இதை தவிர்க்க விட்டால் பிறகு மாப்ளை தேடுவது

(பொருத்தமான) கஷ்டம் என்பதால எப்பிடியும் செய்து வைத்துடுவார்கள் .இதே மாதிரி கடந்தவருடம்

இன்னொரு தெரிஞ்ச பெண்ணுக்கும் அவள் a /l படிச்சு கொண்டிருக்கும் போதே கனடா மாப்பிளை எண்டவுடனே கட்டி

வைச்சிடார்கள் மாப்ளைக்கு 31 வயசு பெண்ணுக்கு 18 -19 வயசு கலியாணம் வேண்டாம் நான் இப்ப கட்டேல படிக்கணும் எண்டு கடைசிநாள் வரையும் அழுது கொண்டிருந்தாள்..

இப்ப சந்தோசமாக இருக்காள் ,பெற்றோர் கட்டி வைச்சதுக்கு காரணம் ஜாதகத்தில் குற்றம் (செவ்வாய்) நல்ல பொருத்தம் விட்டால் தேடி பிடிப்பது கஸ்டம்.இத்தகைய காரணம்களை காட்டி சிறு வயசில நடைபெறும் திருமணம்களால் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஏதும் பாதிப்புகள் ஏற்படுமா?

அவர்கள் வாழ்க்கை திருப்தி கரமானதாக இருக்குமா இதனால சமூகத்தில ஏதும் பாதிப்புகள் ஏற்படுமா? 21 வயசு என்பது ஒரு பெண் திருமண வாழ்க்கைக்கு தன்னை தயார் படுத்தி கொள்ள போதுமானதா? உங்கள் கருத்துகள் .....என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

பத்துப் பொருத்தம்

இது ஒரு கேள்வி பதில் தொகுப்பு .. இந்தக் கேள்வி பதில் வழக்கம் போல கொஞ்சம் (?!) பெரிசா ஒரு பதிவு போல இருந்ததால் இதை பதிவாவே போட்டுட்டேன் …

அன்புள்ள ஜனனிக்கு ,

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி (கருத்தைப் பகிரவைத்ததற்கும்!)

.

//

oru pen thannai vida kuraintha vayathu aanai thirumanam seiyalama? idhu sariya thavara? padhil udane thevai

//

ஒரு சில கேள்விகளை கேட்டு விட்டு பதில் உடனே தேவைன்னு சொல்லி இருக்கீங்க. எனக்கு இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல என்ன தகுதி இருக்குன்னு புரியலியே ! அதோட நீங்க ஏதாவது அவசரத்தில் இருக்கீங்களான்னும் புரியலை.

இந்த மார்ச் மாதம் பத்தொன்ம்பதாம் தேதி நான் பகவான் கண்ணனுக்கும் , ஆண்டாள் எனும் பூங்கோதைத் தாயாருக்கும் திருக்கல்யாணம் பண்ணி வைத்ததால், கல்யாணம் என்றால் எத்தனை பொறுப்பு வாய்ந்தது என்று சற்று புரிகிறது.

எது சரி எது தப்பு என்று சொல்வதற்கு எனக்கு ஞானமும் அனுபவமும் ரொம்பவும் கம்மி. ஆனால் நமது பெரியவர்கள் செய்து வைத்திருக்கும் கட்டுப்பாடுகள் என்கிற விதி முறைகள் பெரும்பாலும் நமது நன்மை ஒட்டியே இருக்கின்றது என்று நான் அபிப்ராயப் படுகிறேன். நம்முடைய சாஸ்திரங்களும் நமது நன்மையை ஒட்டியே இருக்கின்றன என்று நம்புகிறேன் .

அதன் படி பார்த்தால், ஒரு பெண் ஆணை விட வயதில் சிறியவளாய் இருந்தால் தான் , இல்லற வாழ்க்கைக்கு உகந்தது என்று பெரியவர்கள் கருதுகிறார்கள்.

பலவிதத்தில் இது சரி என்று எனக்குப் படுகிறது. ஆண்களை விட பெண்கள் மன ரீதியாக மிகவும் சீக்கிரத்திலேயே முதிர்வு அடைந்து விடுகிறார்கள். எனவே ஆண்களின் கல்யாண வயது பெண்களை விட அதிகமாய் இருந்தாலும், அவர்களைக் காட்டிலுமே பெண்கள் பெரும்பாலும் மன ரீதியாக முதிர்ச்சி பெற்றே இருக்கிறார்கள். இதனால் ஆணின் வயதை விட பெண்ணின் திருமண வயது குறைவாய் இருந்தாலும், அவள் திருமணத்திற்கு மனதளவில் தயாராகவே இருக்கிறாள் என்று கருதுகிறேன்.

அதோடு பெண்கள் இருபத்தி ஒன்று முதல் இருபத்தி ஆறு வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொண்டால் தாயும் சேயும் நலமாக இருப்பார்கள் என்கிறார்கள் . பெரும்பாலும் ஒரு பெண், குழந்தையை கருவுற்று சுமக்கும் போது மசக்கை, தலை சுற்றல், அயர்ச்சி என்று பெருமளவிற்கு உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறாள் . அப்போது அவளை நன்கு கவனித்துக் கொள்ள அன்பான பொறுப்புள ஆட்கள் தேவை. இந்த சமயத்தில் அவள் வெளியில் சென்று வேலை செய்வதை விட, வீட்டில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு , தன்னையும் குழந்தையும் பார்த்துக் கொள்வதே இருவருக்கும் சிறந்தது.

இதனால் மனைவியையும், குழந்தையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டியது கணவனின் பொறுப்பும் ஆகிறது. ஆண்கள் வயதில் குறைந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு இந்த சமயத்தை எதிர் கொள்ளும் பக்குவம் இல்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது. மனைவி தன்னை கவனித்துக் கொள்வாளா ? தன் குழந்தையை கவனித்துக் கொள்வாளா ? இல்லை தன் கணவனை கவனித்துக் கொள்வாளா?

ஓரிரு வயது வித்தியாசமே என்றால் கூட, ஒரு நாற்பது வயது வரும்போது கணவன் மிகவும் ஆரோக்கியமாகவும், மனைவி அதிக வேலை பளுவாலும், பொறுப்புகளாலும் ரொம்பவும் தளர்வடைந்து தன்னுடைய வயதிற்கும் அதிகமான உடல் ரீதியான முதிர்வும் அது தொடர்பான உபாதைகளுக்கும் உள்ளாகும் வாய்ப்பும் அதிகம் என்று தோன்றுகிறது . சில நேரங்களில் வயதில் சிறியவர்களாய் இருந்தாலும் பல பெண்கள் குழந்தை பெற்றதும் கணவரை விட முதிர்ந்த தோற்றத்தை பெறுவதோடு மட்டும் இல்லாமல், ஆரோக்கியக் குறை பாடுகளுக்கு உள்ளாவதை நானே பல சமயங்களில் கண்டிருக்கிறேன்.

இப்படி பல விஷயங்களை அடுக்கிக் கிட்டே போகலாம். பொதுவாக ஒரு பெண்ணிற்கு தன்னை விட வயதில் குறைந்த ஆண்மகனை சந்திக்கும் போது சகோதரப் பாசமே ஏழும் என்று நான் நினைக்கிறேன்.

என்னமோ நீங்கள் என்ன அவசரத்தில் இருக்கிறீர்கள் என்று புரியவில்லை. திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்கிறார்களே அது எத்தனை உண்மை. நாம் திருமணம் செய்து கொள்வது ஏதோ உணர்ச்சி வசப்பட்டு அவசர ரீதியாய் எடுத்த ஒரு முடிவாக இல்லாமல், அது ஒரு உயர்ந்த பண்புகளை உடைய இன்னுமொரு குடும்பத்தை இந்தச் சமூகத்திற்கு அளிக்கும் உன்னத விஷயம் என்ற தெளிவுடன் நிதானமாய் நடக்கும் ஒரு விஷயமாய் இருக்க வேண்டும் என்று அபிப்ராயப்படுகிறேன்.

இந்த அந்நிய நாடுகளில் ஆண்களை விட பெண்கள் வயதில் பெரியவர்களாய் இருக்கும் தம்பதியினரைக் கூட நான் அதிகம் சந்தித்திருக்கிறேன் . இது போன்ற தம்பதிகள் சில காலம் இணைந்து வாழ்கிறார்கள். பிறகு ஆண்டுகள் செல்ல செல்ல , ஆண்கள் தங்களை விட வயது குறைந்த பெண்கள் பால் ஈர்க்கப் பட்டு, அதன் விளைவாக முதல் திருமணத்தை ரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்வதையும் நான் பார்த்திருக்கிறேன் .

எல்லாவற்றையும் மீறி மனதார இறைவனை நினைத்துக் கொண்டு அவசரப் படாமல் நாம் மனதிற்கு பெரியவர் என்று ஏற்று மதிக்கும் ஒருவரை கலந்து ஆலோசித்து முடிவெடுத்தால் நிச்சயம் நல்லதே நடக்கும்.

இது ஒரு பொதுவான கருத்து. இதையும் மீறி ஒரு ஆண் தன்னை விட வயதில் பெரிய பெண்ணை (அதுவும் கணவரை விபத்தில் பறி கொடுத்த பெண்ணை அவளது குழந்தையுடன் ஏற்றுக் கொண்டவர்) திருமணம் செய்து கொண்டு, நன்கு மெச்சும்படி வாழ்ந்து கொண்டிருப்பதையும் நான் கேள்வி யுற்றிருக்கிறேன் ஜனனி. எனவே எதுவும் சந்தர்ப்பம் சூழ்நிலை எல்லாம் பார்த்துக் கணிக்கப் படவேண்டியவை.

அதோட முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் ஜனனி. கல்யாணம் என்கிறது நம்முடைய சம்பிரதாயம் மற்றும் கலாசாரப் படி ரொம்ப உயர்ந்த ஒரு விஷயம். அது ஏதோ சடங்கோ இல்லாட்டி போனா ஆடம்பரத்தை காட்டும் டம்பமோ இல்லை. கணவன் மனைவி என்னும் இரண்டு உறவுகளை தீர்மானிக்கரதோட மட்டும் இல்லாமல், அழகா அவர்களது குழந்தைகள், பின்பு அவர்களின் குழந்தைகள் என்று வளரும் ஒரு ஆலமரம், அதனாலேயே அதை ஆயிரம் காலத்துப் பயிர் என்கிறார்கள்.

அந்தக் காலத்தில் பத்துப் பொருத்தம் பார்த்து திருமணம் நிச்சயிப்பார்களாம். ஏதோ போன வருஷம் ஒரு புடவை வாங்கினேன் . அது விலை அதிகமா இருந்தாலும் சாயம் போய் பல்லை காட்டுது. இனி அந்தக் கடை பக்கமே போக மாட்டேன். அடுத்த வருஷம் அதை விட சூப்பராய் இன்னொரு புடவை வேற கடைல வாங்கணும் என்கிறது போன்ற சமாச்சாரமும் இல்லை . பிடிக்கலேன்னா அப்பறம் மாத்திகறதோ, இல்லாட்டி யாருக்கேனும் கொடுத்துட்டு புதுசா இன்னொன்னை எடுத்துக்கறதோ என்கிறது போன்ற விஷயம் இல்லை கல்யாணம் . ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நமது பாரம்பரியம்.

கணவன் மனைவி உறவு பழசாக ஆக, அவர்களது புரிதல், அன்னியோன்யம், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், அன்பு , ஆதரவு எல்லாம் கூடிட்டு போகும், போகணும் … சொல்லும்போதே எனக்கு கண்ணில் நீர் வருதே ஜனனி …! ஹரே கிருஷ்ணா .. ! இதெல்லாம் தான் கல்யாணத்தில் ரொம்ப முக்கியம். இதற்கு நான் சொல்லும் பத்துப் பொருத்தங்களும் உதவி புரிவதாக படுகிறது. ஏன்னா பல நேரங்களில் முன் பின் அதிகம் பழகாத ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கும் சூழ்நிலைகளே நமக்கு வாய்க்கிறது . மேலும் இந்தக் காதல் திருமணங்களிலும் , ஒவ்வொருவருடைய நிஜமான சாயமும்(குணமும்) கல்யாணம் முடிந்தால் தான் தெரிகிறது. நீலச் சாயம் கலஞ்சு போய் ராஜ வேஷம் வெளுத்துப் போயி அப்பறம் ஒருத்தரை மாத்தி இன்னொருத்தர் சதா குத்திக் காட்டிக் கொண்டே இருப்பதை நான் என்னுடைய அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

இதற்கெல்லாம் இந்தப் பத்துப் பொருத்தம் (நான் கீழே சொல்லி இருக்கும் ) ரொம்ப ஒத்தாசையாய் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. உதாரணமா சில கல்யாணம் மாப்பிள்ளை அழகாய் இருந்துட்டு பெண் சுமாராய் இருக்கிறதால் சரி வராமல் போய் நான் பார்த்திருக்கிறேன். பெண்ணின் சொத்திற்கு ஆசை பட்டு முதலில் கல்யாணம் செய்து கொள்ளும் ஆண், பிறகு அவளது சொத்தை எடுத்துக் கொண்டு, அவளை ஒதுக்கி வேறொருத்தியின் பின்னால் செல்வது நிகழ்கிறது.

பெண் ரொம்பப் படித்து ஆண் ரொம்பப் படிக்காமல் போனாலும் , “பொண்டாட்டி ரொம்ப படிச்சதால் கர்வி, ராங்கிக் காரி ” என்று சொந்தமும் பந்தமும் ஏற்றி விடுவதால் பல கணவர்மார்கள் பின்பு தாழ்வுணர்ச்சி கொண்டு இல்லற வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்வதையும் நான் கண்டிருக்கிறேன்..

அந்தஸ்து பேதமும் இப்படித்தான் ஆகிறது. என் பையனுக்கு கோடீஸ்வர சம்பந்தம் எல்லாம் வந்தது .. இந்த பொண்ணு அப்படி என்ன பெரிய ரதி ..இவளை தான் கட்டிப்பேன்னு ஒத்தைக் காலில் நின்று கட்டிக் கொண்டான் .. இப்ப கஷ்டப் படறான் .. என்று ஏற்றி விடுவதும் .. பிறகு இதுவே நாளடைவில் அவர்கள் உறவில் ஒரு விரிசல் ஏற்ப்பட காரணமாகவும் ஆகிறது ..

இதை எல்லாம் மீறி தெய்வ அனுக்கிரகம் இருந்தால் , எல்லாரும் சிறப்பாய் வாழலாம் ஜனனி .. அதுதான் கிருஷ்ணரை நினைத்துக் கொண்டு எல்லாம் அவர் பிரசாதம் என்று ஏற்றுக் கொண்டு அவருக்கே பக்தி செய்து வாழணும்னு பெரியவர்கள் சொல்லுகிறார்கள் .. ஜகத் பிதா இல்லியா.. நமக்கெல்லாம் எது நல்லது எது சரி இல்லைன்னு அவருக்குத் தெரியும் .. பாகவதத்தில் வரும் ருக்மிணி கல்யாணம் படித்தால் , திருமணம் தொடர்பான தடைகள் அகலும் , மனம் போன்ற வாழ்வும், கண்ணனைப் போன்ற உயர்ந்த ஆத்மாவே நமக்கு கணவராக அமையும் பாக்கியமும் கிட்டும்னு சொல்லுகிறார்கள் !

அப்பறம் முக்கியமாய் ஒன்னை தெரிவித்துக் கொள்கிறேன் .. எனக்கு ஜாதகம், ஜாதக ரீதியான பத்துப் பொருத்தத்தில் எல்லாம் ரொம்ப நம்பிக்கை இல்லை . (ஆனால் பலருக்கு இருப்பதால் இதையும் நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும் )நான் சொல்ற பத்துப் பொருத்தம் (அழகு, அறிவு, குணம்,ஆரோகியம்,கருத்தொருமித்தல், அந்தஸ்த்து, குடும்ப சம்பிரதாய முறைகள், பழக்க வழக்கங்கள், விருப்பு வெறுப்புகள், எல்லாவற்றிகும் மேலாக இறை பக்தி போன்கின்ற இவற்றை தான் .. இதெல்லாம் ஏதோ ஒரு தேதியில் பிறந்து விட்டு, ஒரு நட்சத்திரம் நமக்கென்று அமைந்து விட்டால் தானாய் வந்து விடும் என்பதிலும் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. நமக்கெல்லாம் ஓரளவு காமன் சென்ஸ் (பொதுவான நல்லது கெட்டதுகளை அலசிப் பார்க்கும் அறிவு) இருக்கிறபடியால், ஜோசியக் காரர்களை நம்பி ஓடாமல், பகவான் கண்ணனை நம்பி புத்தியோடு யோசித்து தீர்மானித்தல் நலம் என்பது என்னுடைய அபிப்ராயம் .

அழகு என்று நான் சொல்லுவதும் அக அழகை தான் . ஒவ்வொரு கணவருக்கும் தன மனைவி ரதி தேவியாய் தான் தெரிவாள். எதுவா இருந்தாலும் பதட்டப் படாமா, நிதானமா யோசிச்சு முடிவெடுங்க. கிருஷ்ணர் என்னைக்கும் உங்க கூடவே இருப்பார்.

மனிதர்களின் அபிப்ராயம் நாளுக்கு நாள் அனுபவங்கள் கூடக் கூட மாறும் தன்மை உடையது ஜனனி. அதனால் தான் வயதில் மட்டும் இல்லாமல் அனுபவத்திலும் முதிர்ந்தவர்களை இதற்கெல்லாம் கலந்தாலோசிக்க வேண்டும். என்னை அடுத்த வரடம் கேட்டால் வேறு சொல்வேனோ என்னமோ.. பெரிய விஷயங்களுக்கெல்லாம் இது போன்று இணைய தளங்களில் கிடைக்கும் பதில்கள் வைத்தெல்லாம் எதையும் தீர்மானிக்காமல் பகவானை பிரார்த்தித்துக் கொண்டு விடை தேடுங்கள் ஜனனி.

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

*******************

நன்றி -thiraikadal.wordpress.com

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து சொல்வது ஒருபக்கம் இருக்க எமிடையே நடக்கும் ஜதார்த்தத்தை மாற்றுவது என்பது முடிந்த காரியமா ?என்னைபொறுத்தவரையில் திருமணம் செய்யும் இருவரின் மனதைப்பற்றி பெரும்பாலும் யாரும் பார்ப்பதில்லை இதனால் பல விவாகரத்துக்கள் நிகழ்ந்துள்ளது புலத்திலும் தாயகத்திலும் இதை சரிசெய்வது மிகவும் கடினம்.

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது அவரவர் மனதைப் பொறுத்தது என்டாலும் ஒரு பெண் மிக இள வயதில் திருமணம் செய்து அவரை அவரது கணவர் நன்றாக வைத்திருந்தும் கூட ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அப் பெண்ணிற்கு திருமண வாழ்வில் சலிப்பு ஏற்பட்டு விடும் என்பது என் கருத்து...பொதுவாக பெண்கள் 25 யில் இருந்து 30 வயதிற்குள் திருமணம் செய்யலாம் அத்தோடு குறைந்தது 4 யில் இருந்து 7 வயது இடைவெளிக்குள் கட்டலாம்.

உடையாரின் பதிவில் ஆண்கள் தங்களிலும் பார்க்க கூடிய வயது பெண்ணைக் கட்டினால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அப் பெண்கள் ஆண்களை விட வயது அதிகமாய் தோற்றமளிப்பார்கள் என்பது இந்தியாவைப் பொறுத்து உண்மையாய் இருக்கும்[இந்தியாவிலும் அப்படி இருக்காது] ஆனால் புலம் பெயர்ந்த நாட்டில் அப்படி இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை இதற்காக இத் திருமணங்களை நான் ஆதரிக்கிறேன் என்று இல்லை.

முன்,பின் தெரியாதவர்கள் காதலித்து திருமணம் செய்யும் போது சில நேர‌ங்களில் ஆண்கள் தங்களை விட வயது கூடிய பெண்களை திருமணம் செய்து உள்ளார்கள்...பேச்சுத் திருமணத்தின் போது தான் வயது பார்ப்பார்கள் அதுவும் இப்போது பெண்களுக்கு 1,2 வயது அதிகம் என்டாலும் கட்டிக் கொடுக்கிறார்கள்...ஆண்கள் முதிர்ச்சியாகவும் பெண்கள் இளமையாகவும் தெரிவார்கள் அவர்களுக்குள் மனம் ஒத்துப் போனால் திருமணத்தின் பின் பிர‌ச்ச‌னையே வராது.

பி;கு அது சரி வீணா உங்களுக்கு பெண் நண்பிகள் அதிகம் போல் உள்ளது :lol::D:icon_idea:

  • தொடங்கியவர்

பி;கு அது சரி வீணா உங்களுக்கு பெண் நண்பிகள் அதிகம் போல் உள்ளது :lol::D:icon_idea:

ஓம் அக்கா எனக்கு நண்பர்களை விட நண்பிகள் தான் அதிகம்..:)

சாத்திரம் பற்றி எல்லாம் தெரியாது, ஆனால் இரண்டு மனங்களிடையே நல்ல புரிந்துணர்வு இருக்குமாயின் அவர்கள் இல்லறத்தில் இணைவது ஒன்றும் குற்றமில்லை. உண்மையான அன்புக்கு வயதைத் தடை போடக் கூடாது. திருமண வயதை எட்டிய வேற்று இனத்தவர்கள் பத்து, பன்னிரண்டு வயது வித்தியாசத்தில் கூட (இருபக்கமும்) புரிந்துனர்தலின் அடிப்படையில் சந்தோசமாக வாழ்கிறார்கள். (அதற்காக வயோதிபர் ஒருவர் இளவயதினருடன் இல்லறத்தில் ஈடுபடுவதை சரி என்று சொல்ல வரவில்லை) இவர்களை எல்லாம் கிரக தோஷங்கள் இல்லையா? எல்லாம் ஒவ்வொருத்தரின் மனதின் அடிப்படையில் தான் உள்ளது என நினைக்கிறன். ஒவ்வொரு மனிதனும் இந்தப் பூமியில் ஒரு முறை தானே வாழப் போகிறார்கள்? (இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே!)

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரத்தைப்பற்றி எனக்கும் தெரியாது.ஆனால் கருத்து ஒற்றுமையாக இருந்தால் வயது ஒரு பிரச்சனை இல்லை என்று மட்டும் தெரியும். :)

வயது, செவ்வாய், ஜாதக குற்றம் எல்லாவற்றையும் திருப்திப் படுத்தி விட்டு இல்வாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதிலே எல்லாம் தங்கியுள்ளது.

சமூகம் தன் தேவைக்கேற்ப நாக்கைச் சுழற்ரிக்கொள்ளும்.

ஆண் தன்னை விட 1 2 வயது கூடிய பொண்ணை கட்டியவர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள். ஆனால் 15 20 வயதி வித்தியசத்தில் கட்டினவர்கள் பின்னுகு கஷ்டப்படுகிறார்கள்,.

சாத்திரத்தைப்பற்றி எனக்கும் தெரியாது.ஆனால் கருத்து ஒற்றுமையாக இருந்தால் வயது ஒரு பிரச்சனை இல்லை என்று மட்டும் தெரியும். :)

என் ஊர் சேர்ந்த பெண்ணுக்கு அவரை விட 14 வயது கூடியவரை கட்டிக் கொடுத்த வாழ்க்கை கண் முன்னால் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சனை.......... ஆனால் கனவர் ரொம்ப்ப நல்லவர் அது மட்டும் போதாது.

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் குற்றம் என்று பாரத்துக்கட்டப்படும் திருமணங்கள் அநேகமாக அதிகளவிலான வயது இடைவெளிகளைக் கொண்டதாக காணமுடிகிறது. அதற்குள்ளும் சர்ச்சைகள் வந்து பிரிந்தாலோ அலலது விபத்துகள் ஏற்பட்டு துணைகளை இழந்தாலோ சமூகம் என்னவோ அவளுக்கு, அவனுக்கு செவ்வாய் குற்றம் அதுதான் இப்படி என்று முடிவே கட்டிவிடும். அத்தகைய தன்மையைக் கொண்ட ஒரு களத்திரதோசத்தைக் கொண்டதாகத்தான் அது பார்க்கப்படுகிறது...

முக்கியமாக ஒரு பெண்ணின் திருமணவயது 23 வயதைத் தாண்டியதாகவே கட்டாயம் இருப்பது நல்லது. அதேநேரம் ஆணின் வயது பெண்ணின் வயதிலிருந்து மேற்பட்டதாக 5 வயது வித்தியாசத்திற்குள் இருப்பது பொதுவாகவே நல்லது.

அடுத்து இனவிருத்திக்குத் தயாரான நிலையில் பெண்ணின் உடல்நிலை இருந்தாலும் இளம்வயதுத் திருமணங்கள் அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை வழங்கும் என்பது என்னுடைய திடமான கருத்து. அத்தோடு மேலே உடையாரின் தொகுப்பில் உள்ள பெண்கள் அநேகமாக இளவயதுத் திருமணத்தைச் செய்தவர்களாகவே இருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். மனம் பக்குவப்படாத வயதில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெண்ணை மனச்சோர்வு ஆட்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகம். சிறுவயதிலிருந்தே மற்றவர்களுக்குச் சேவகம் செய்யப்பழக்கப்பட்டவளாக பழக்கப்படும் பெண்ணானவள் துணைவனுடன் வாழும் பொழுதும் நட்புடனான வாழ்விற்குப்பதில் சேவை செய்யும் முறைமைக்கே துணைகளால் தள்ளப்படுவது எங்கள் சமூகத்தில் அதிகமானது. ஆக திருமணம் ஆனவுடன் அவளுக்கான வெளியுலகம் அதிகமான பெண்களுக்கு மூடப்பட்டுவிடுகிறது. அதன் பால் சின்னவயதிலேயே அம்மாமிகள் போல் ஆகிவிடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என் ஊர் சேர்ந்த பெண்ணுக்கு அவரை விட 14 வயது கூடியவரை கட்டிக் கொடுத்த வாழ்க்கை கண் முன்னால் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சனை.......... ஆனால் கனவர் ரொம்ப்ப நல்லவர் அது மட்டும் போதாது.

காதல் என்று சொல்லி, 14வயதுப் பெடியனை 30வயது ஆசிரியை கட்டினால்????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.