Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் கடற்படுக்கையில் எரிவாயு வயல்கள் – கெய்ன் இந்தியா நிறுவனம் கண்டுபிடித்தது

Featured Replies

மன்னார் கடற்படுக்கையில் இயற்கை எரிவாயு வயல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

கண்டியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மன்னார் கடற்படுக்கையில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாவது எண்ணெய் கிணறைத் துளையிடத் தொடங்கிய கெய்ன் இந்தியா நிறுவனமே இயற்கை எரிவாயு வயல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை இன்று காலை தமக்குத் தெரியப்படுத்தியதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் கிணறு துளையிடும் பணியின் போது கடந்தவாரம் எரிவாயு வயல்கள் அப் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டதாக கெய்ன் இந்தியா நிறுவனமும் அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் எரிவாயு வயல்கள் கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20111002104796

  • கருத்துக்கள உறவுகள்

வளங்களுக்கான போட்டியை ஏற்படுத்தி அதன்மூலம் போர்க்குற்ற விசாரணைகள் குறித்த கோரிக்கைகளை நிறுத்தப் பார்க்கிறார்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியின் உண்மைத்தன்மை எவ்வளவு எனத்தெரியவில்லை உண்மையாயின் பல மேற்கு நாடுகள் தலையீட்டை எதிர்பார்க்கலாம். :icon_mrgreen:

Edited by தமிழ் அரசு

பிரித்தானியாவின் இந்த Cairn Energy எனும் நிறுவனம் சில வருடங்களிற்கு முன் இந்தியாவில் எண்ணை கண்டு பிடித்ததால் ஓரிரு பவுண்ட்சுக்குக்குள் இருந்த இவர்களின் பங்கு விலை பத்துப் பவுண்ட்களுக்கு மேல் கூடியது. அதன் பின் Cairn India தொடங்கப்பட்டது. இவர்களுடன் கனிம வளங்களுக்காக இந்தியக் பழங்குடி மக்களின் வாழ்விடங்களை அழிக்கும் Vedanta (வேதாந்தா :icon_mrgreen: ) நிறுவனத்திற்கும் தொடர்புண்டு.

இருவரும் சேர்ந்தால் சொல்லி வேலையில்லை. பிரித்தானியா தங்கள் நாட்டு நிறுவனங்களின் நலன் கருதியே நடக்கும். அதுவும் எண்ணை என்றால் தனி மதிப்பு. சிறிலங்கா நன்றாகவே காய் நகர்த்துகிறது.

ஏற்கனகே இந்த படுக்கையை நாலாக பிரித்து இந்தியா, சீனா, உருசியா என்ற நாடுகளுக்கு விற்று இறுதியை தாம் வைத்துள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன. அதிலும் உருசியாவே கூடுதல் தொழில்நுட்பங்களை வைத்திருப்பதால் கூடுதல் அக்கறை எடுத்திருந்தது, ஆனால் அது தொடர்பாக ஒரு செய்தியும் பின்னர் வரவில்லை.

இந்தியா கண்டு பிடித்தது உண்மை என்றால், ஏன் மற்றையவர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை?

அதேவேளை கண்டு பிடித்தாலும் அதை இலாபகரமாக மக்களுக்கு கொண்டு செல்லும் வழிமுறை வேண்டும். இல்லாவிடில் பிரயோசனமில்லை.

பிரித்தானியாவின் இந்த Cairn Energy எனும் நிறுவனம் சில வருடங்களிற்கு முன் இந்தியாவில் எண்ணை கண்டு பிடித்ததால் ஓரிரு பவுண்ட்சுக்குக்குள் இருந்த இவர்களின் பங்கு விலை பத்துப் பவுண்ட்களுக்கு மேல் கூடியது. அதன் பின் Cairn India தொடங்கப்பட்டது. இவர்களுடன் கனிம வளங்களுக்காக இந்தியக் பழங்குடி மக்களின் வாழ்விடங்களை அழிக்கும் Vedanta (வேதாந்தா :icon_mrgreen: ) நிறுவனத்திற்கும் தொடர்புண்டு.

இருவரும் சேர்ந்தால் சொல்லி வேலையில்லை. பிரித்தானியா தங்கள் நாட்டு நிறுவனங்களின் நலன் கருதியே நடக்கும். அதுவும் எண்ணை என்றால் தனி மதிப்பு. சிறிலங்கா நன்றாகவே காய் நகர்த்துகிறது.

முற்றிலும் உண்மை. ஆனால், இங்கே கண்டி பிடிக்கப்பட்டது எனக்கூறப்படுவது - எரிவாயு (natural gas)

மசகு எண்ணெய் இருக்குமானால் போர்குற்றங்கள் தூக்கி எறியப்படலாம். மிஞ்சி இருக்கும் தமிழர்களும் அழிக்கப்படலாம்.

கறுத்தம்மாவை காட்டி தந்தை கடன் வாங்கிவிட்டு பாரிக்குத்திக்கு வெறும்கையை காட்டி டட சொன்ன மாதிரி இலங்கை இலகுவில் சீனாவுக்கு டட சொல்ல முடியுமா?

மன்னார் வளைகுடாவில் கடலாய்வு நடத்தப்பட்ட இடம்

111002145544_mannar_gas_region_304x171_bbc_nocredit.jpg

http://www.bbc.co.uk...ieldlanka.shtml

இதுவரை 150 மில்லியன்கள் செலவழிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதை யாருக்கு விற்பார்கள்? , யாருக்கு வேண்டக்கூடிய பணவசதிகள் உண்டு என்ற கேள்விகளும் உண்டு.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் கடற்படுக்கையில் எரிவாயு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது: கெய்ன் நிறுவனம் தெரிவிப்பு.

[sunday, 2011-10-02 19:36:03]

மன்னார் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு படிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கண்டியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மன்னார் கடற்படுக்கையில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாவது எண்ணெய் கிணறைத் துளையிடத் தொடங்கிய இந்தியா நிறுவனமான கெய்ன் இயற்கை எரிவாயு வயல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை இன்று காலை தமக்குத் தெரியப்படுத்தியதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் கிணறு துளையிடும் பணியின் போது கடந்தவாரம் எரிவாயு படிமங்கள் அப்பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டதாக கெய்ன் இந்தியா நிறுவனமும் அறிவித்துள்ளது. சிறிலங்காவில் எரிவாயு வயல்கள் கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

http://seithy.com/breifNews.php?newsID=50534&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் கடற்பரப்பில் 1354 மீற்றர் ஆழத்தில் எரிவாயு வளம் காணப்படுவதாக இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது.

Mannar_District_CI.jpg

இலங்கையில் முதல் தடவையாக எரிவாயு கனிய வளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த எரிவாயு வளம் பற்றி அறிவித்துள்ளார்.

எண்ணெய் அகழ்வு தொடர்பாக ஆய்வு நடத்தி வரும் இந்திய நிறுவனமான கெய்ரன் நிறுவனம் இந்தத் தகவலை தமக்கு வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மன்னார் கடற்பரப்பில் 1354 மீற்றர் ஆழத்தில் எரிவாயு வளம் காணப்படுவதாக இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் ஆய்வு நடத்துவதன் மூலம் எரிவாயு மற்றும் எண்ணெய் வளத்தை வர்த்தக நோக்கங்களுக்காக பெற்றுக் கொள்ள முடியும் என இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

http://www.globaltam...IN/article.aspx

Edited by தமிழ் அரசு

இந்த பொய் கந்த புராணத்திலும் சொல்லப்பட்டிருக்கா?

Edited by மல்லையூரான்

இந்தியா தமிழீழத்தை பெற்றுத்தர முடிவு செய்துவிட்டதா?

மசகு எண்ணெய் வளம் இருப்பின் அது இலங்கை மீதான இந்திய உறவை மீளாய்வு செய்யவைக்கும்.

இந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் ஆய்வு நடத்துவதன் மூலம் எரிவாயு மற்றும் எண்ணெய் வளத்தை வர்த்தக நோக்கங்களுக்காக பெற்றுக் கொள்ள முடியும் என இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

1354 மீற்றர் ஆழத்தில் உள்ள எரிவாயுவை மேலே கொண்டுவரவும் அதை பாதுகாப்பாக விநியோகிக்கவும் ஒரு குறிப்பிட்ட செலவு இருக்கும். இந்த எரிவாயு இந்தியாவுக்கு தேவையானதாக இருக்கலாம், ஈரானில் இருந்து எடுக்கும் தேவையை குறைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வடமேற்கு கடற்பிராந்தியத்திலுள்ள மன்னார் படுக்கையில் எண்ணைவள ஆய்வுக்கான முதற்சுற்று விண்ணப்பங்கள் 2007 இல் கோரப்பட்டிருந்தன.

இப்பிரதேசம் 8 சிறு கூறுகளாக பிரிக்கப்பட்டு அதில் 3 மட்டும் அப்போது ஏலத்தில் விடப்பட்டு மீதி கூறுகளில் 3 ஐ எதிர்காலத்து ஏலச்சுற்றுக்களுக்காக ஒதுக்கிவைக்கப்பட்டு

மற்றைய 2 கூறுகளும் இந்தியா சீனா நாடுகளுடன் இலங்கை செய்துகொண்ட விசேடஒப்பந்தங்களின் பேரில் அந்நாடுகளின் கம்பனிகளுக்கு முன்னுரிமையுடன்

பிரித்தளிப்பதாக முடிவுசெய்யப்பட்டிருந்தது. விண்ணப்பித்த 6 போட்டியாளர்கள் மத்தியில் இந்திய கெயின் நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டு 2008 இல் எண்ணை அகழ்வுக்கான

உரிமங்கள் அதற்கு வழங்கப்பட்டது.

இலங்கையின் எண்ணை வள ஆய்வுகள் 1967 இலேயே தொடங்கப்பட்டு விட்டதாயினும் உடனடியாக முதலீடு செய்வதற்கு எண்ணைக் கம்பனிகள் எதுவும் தயாராயிருக்கவில்லை.

வளங்கள் பற்றிய முதற்கட்ட ஆய்வுகளை சுயமாக நடத்த இலங்கை அரசிடமும் போதிய நிதி இருக்கவில்லை. எனவே அக்கடற்பிரதேசத்தில் முதலீடுகளைச்செய்து அகழ்வுகளை

மேற்கொள்வது அக்காலக்கட்டத்தில் பெரும் நஷ்டமாகலாம் எனக் கருதப்பட்டது. எனினும் பல்வேறு கால கட்டங்களில் இலங்கைக்கு உதவமுன்வந்த நாடுகள் பல(நோர்வே உட்பட)

சிறு சிறு ஆய்வுகளைச் செய்ததுமல்லாமல் 1974-1981 காலபகுதியில் சில ஆயவுக்கிணறுகளையும் தோண்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன். பின் வந்த போர்சூழல் காரணமாக

அனைத்து நடவடிக்கைகளும் தடைப்பட்டுப்போயின.

அதில் குறிப்படத்தகுந்த விடயம் என்னவென்றால் மன்னார் படுக்கையின் இந்திய எல்லைக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள காவேரி மற்றும் கிருஸ்ணா கோதாவாரி ஆற்றுப்படுக்கைகளிலும்

முகத்துவாரங்களிலும் செய்யப்பட்ட ஆய்வுகளில் எண்ணைவளங்கள் உள்ளதாக இந்தியா அறிவித்திருந்ததுதான். இந்தியாவும் சீனாவும் இலங்கையுடன் நட்பை பேணிவந்ததன் உள்ளாந்தமும்

இந்த எண்ணை வியாபார நோக்கமானதே என்றுகூட நம்பலாம்.

வெளிநாடுகளில் எண்ணைகம்பனிகளில் தொழில்செய்துகொண்டிருந்த பல இலங்கையர்களை அண்மைக்காலமாக இலங்கையரசு நாட்டுக்கு அழைத்து அதிக சம்பளத்திற்கு அவர்களை

வேலைக்கமர்த்தியிருந்தது. எண்ணைவளத் தொழில்நுட்பவியலாளர்கள் பலர் நீண்ட விடுமுறையிலும் இன்னும்சிலர் வேலையை கைவிட்டு ஓய்வூதியம் பெற்றுக்கொண்டும் இலங்கைசென்று அரச சலுகைகள் பெற்றுக்கொண்டு அங்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் Ceylon Petroleum Corporation (CPC or Ceypetco) தொழில் செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தரப்புக்கு சொந்தமான பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டிருப்தனால் இதில் பெறப்படுகின்ற இலாபத்தின் பெறும் பகுதியினை வடக்கு கிழக்கு மக்களின் அபிவிருத்திக்கு செலவிடப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் எமது கட்சி..கோரிக்கை விடுகின்றது.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.