Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன எச்சரிக்கையை மீறி இந்தியாவுக்கு வியட்நாம் அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பைத்தியம் உங்கள் பண்பான ஆக்கமான கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், யாருமே தன் தாய்நாடு தாயைவிட மதிக்கிறவன், அதில் நீங்க உயர்ந்து நிக்கிறீங்க, ஆனாலும் எங்கள் வலியை நீங்கள் புரித்து கொள்வீர்கள், இந்தியா எங்களுக்கு செய்த கொடுமை, சொல்ல வார்த்தையில்லை, இந்தியன் ஆமி வந்து போனபின்தான் சிங்கள ஆமி இன்னும் கூட அட்டூழியம் செய்தவன், அவனுக்கு பல உதவிகள் செய்து மக்கள் என்றும் பாரமல் அழித்தொழிக்க சொன்னது இந்தியா, கடைசி நேரத்தில் சோனியா தன் பசிக்கு கேட்டது எத்தனை ஆயிரம் உயிர்களை...?

தமிழ் நாடு என்றுமே எங்கள் தாய் நாடு, இந்திய கொள்கை வகுப்பாளர்கள் & காங்கிரஸ் இவர்கள்தான் எங்களை இந்த நிலைக்கு தள்ளினவர்கள், என்றுமே மனதில் ஆறாத வடுவாக இருக்கு சிங்கள கடையர்கள் செய்த கொடுமை மாதிரி,

  • Replies 81
  • Views 5.8k
  • Created
  • Last Reply

மல்லையூரான்,

பல சமகால நிகழ்வுகளை இணைத்து மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். நன்றிகள், தொடர்ந்தும் நேரம் கிடைக்கும்பொழுது எழுதுங்கள்.

முன்பு ஒருமுறை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மூன்றாவது யுத்தம் வருவதை அமெரிக்கா தடுத்து, காரணம் 40-60B மேற்பட்ட அமெரிக்க முதலீடு, அதன் அன்றாட வாழ்க்கையில் கூட இந்திய நிறுவனங்கள் பின்னிப்பிணைந்துள்ளன. அதுபோன்று சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் யுத்தம் வந்தால் அது ஒரு விதத்தில் மூன்றாம் உலக யுத்தமாக அமையலாம். அப்படி ஒரு யுத்தம் வருமா என்பது மேற்குலகத்தின் கைகளில் அதிகம் தங்கியுள்ளது.

நன்றி அகுதா. முயற்சிக்கிறேன்.

நல்ல கருத்துக்கள் தமிழ் பைத்தியம் நீங்கள் ஒரு இந்திய உறவாக இருந்தால்.......இந்த களத்தில் நீடித்து நிலத்திருக்க வாழத்துக்கள்...ஏன்னா பல இந்திய உறவுகள இனைந்து இங்குள்ள கள உறவுகளின் கருத்துக்கள் காரணமான மனம் புண்பட்டு வருவதே இல்லை............

நன்றி நண்பரே உங்களின் கருத்துக்கு . நான் ஒரு நீண்டகால யாழ் கள உறுப்பினர் . நமது இனம் தவறான வழியில் சிந்தித்தால் திட்டி அழுத்தி கொட்டி எப்படியாவது அவர்களை நம் வழிக்கு கொண்டு வருவது ஒவ்வொரு தமிழனின் கடமை . அல்லது பிறரின் கருத்துக்களை ஆழமாக செவிமடுத்து அதில் தனக்கு உகந்தவற்றை ஏற்றுக்கொண்டு ஒரே பாதையில் பயணிப்பதை நான் விரும்புகிறேன் .அதை விடுத்து ஓடிப்போயி தூரத்தே நின்று கொண்டு நம் இனம் மீதே சேறு வாரி தெளிக்கும் அளவுக்கு நான் சுயமரியாதை ( இந்த வார்த்தையே இப்போது கேளிப்போருளாகி விட்டது . தவறு செய்யும் மற்றும் திசை மாறும் பலர் உபயோக படுத்தும் வார்த்தையாகி விட்டது ) உள்ளவன் அல்ல . என் இனத்திற்கு நல்லது நடந்தால் அந்த சுயமரியாதையை கூட இழக்க தயார் .

எனக்கு உள்ள ஒரே வருத்தம் . சரியான தலைமை இன்றி தமிழ் ஈழம் தற்போது தள்ளாடுகிறது . நீண்ட நாள் உறுப்பினர்கள் பலரும் என் எழுத்துக்களை அறிவர் . மான ரோசம் அற்ற மிதவாத எண்ணம் கொண்ட நானே என் தலைவன் பிரபாகரன் என மனதார பல முறை கூறியிருக்கிறேன் .

ஏனெனில் என்னைபோல, உங்களைபோல, ஈழ மகளை போல, ரதியை போல, மல்லையுரானை போல, புங்கையூரன் போல, சாவகசமா தூங்கிட்டு அப்பப்ப முழிச்சிட்டு களத்தை செப்பனிட வரும் நிழலி போல, இடைவிடாது இந்தியாவிற்கு எதிராக கிளிப்பிள்ளை போல கத்தியே சாகும் புரட்சிகர தமிழ் தேசியன் போல, எந்த பக்கம் பெசுகிரார்னே தெரியாமல் பேசும் இசைகளைஞனை போல, அவரை போல, இவரை போல, அதை போல, இதை போல, இன்னும் பல போல ஆட்டு, மாட்டு, கழுதை, புறா, கோழி, பன்றி, காடை, கௌதாரி, பேய், பிசாசு, எல்லா மந்தைகளையும் ஒரே நேர்கோட்டில் அழைத்து வந்து ஈழத்தை பற்றி மற்றும் ஈழ விடுதலையை பற்றி மட்டும் சிந்திக்க வைத்த மாபெரும் தலைவன் அவன் . அவனை எனக்கு பிடிக்கும் . ஏனெனில் அவன் தனக்கு தன் இனத்திற்கு ஒரு வீடு / தேசம் பெற நினைத்தான் . அடுத்தவன் வீட்டையோ / நாட்டையோ கெடுக்க நினைக்க வில்லை

ஒரு நாள் கூட புலிகளுக்கு எதிராக கருத்து எழுதியது இல்லை . இன்னும் சொல்ல போனால் புலிகள் செயல்பாடுகளில் பல, பல இல்லை எதுவுமே அதிகமாக எனக்கு உடன்பாடு கிடையாது . எனினும் ஒன்று மட்டும் அதிக உடன்பாடு . அர்ஜுனனுக்கு புறா மட்டும் தெரிந்தது போல அவர்களுக்கு தமிழ் ஈழம் மட்டுமே தெரிந்தது . அவர்கள் தனது மக்களுக்காக தனது குடும்பத்தை விட்டு சுகங்களை விட்டு அல்லும் பகலும் எதிரிகளிடம் போராடி கடைசியாக சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்தபட்டார்கள் . வீரத்தால் அவர்கள் இன்றும் வீரகளே. அவர்கள் போராடியது ஈழத்திற்காக . அவர்கள் நாட்டிற்காக. இந்தியாவிற்கு எதிராக அல்ல .

இங்கு பலர் எதுவுமே ஈழத்திற்கு செய்யாமல் கணினி தட்டி இந்தியாவையே வம்புக்கு இழுத்துக்கொண்டு இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. இந்தியாவை வம்பு இழுப்பதால் உங்கள் நேரம் தான் வீண் . இந்தியாவிற்கு ஒன்றும் ஆகாது.

இங்கு பலர் இந்தியா சீனாவுக்கு பயப்படுது, இலங்கை கடற்படைக்கு பயப்படுதுன்னு வடிவேலையும் மிஞ்சி உலக மகா பிதற்றல்கள் செய்கிறார்கள். அய்யா சாமிகளா நிறை குடம் தளும்பாது . இந்தியா ஒரு நிறைகுடம் . அது அமைதியாக தான் இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின எதிரிகள் எந்த வகைபட்டவர்கள்?

2lbevkj.jpg

அறிஞர் கொர்ப் கோகனின் உங்களால் முடியும் என்ற நூலின் சில பகுதிகள்..

எதிராளிகளை இரண்டு வகைகளாக பிரிக்கிறார் கோகன் அதில்

1.கருத்து எதிராளிகள்

2.அடிக்குடல் எதிராளிகள்

அதை சற்று விரிவாக பார்ப்போம்..

கருத்து எதிராளிகள்

ஒரு குறிப்பிட்ட விடயம் பற்றி உங்கள் கருத்திற்கு மாற்று கருத்து வைப்பவர் கருத்து எதிராளி.. நீங்கள் நான் இப்படி செய்ய நினைக்கிறேன் என்கிறீர்கள் ..அவரோ ஏன் இதை இப்படி செய்யகூடாது என்கிறார். கருத்து எதிராளிகளை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்..முதலில் கருத்துகள்.. தகவல்கள்..அனுபவம் ..விட்டு கொடுத்தல் தீர்வு காண பட வேண்டும் என்பதில் ஒற்றுமை ஆகிய காரணிகள் சரியான இறுதி தீர்வை நோக்கி நகர்த்தும்.. இறுதி தீர்வு சரியாக அமையும் பட்சத்தில் நீங்கள் எதிரியாக நினைத்த மாற்று கருத்தாளர் உங்கள் உற்ற நண்பனாக கூட மாற முடியும்.

பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் ஏன் தீர்க்கபடமாலே போகின்றன?

நம்பிக்கையை வளர்ப்பது..தீர்க்கவேண்டிய பிரச்சனையை கவனம் செலுத்துவது ஆகியவற்றை பெரும்பான்மையோர் மதிப்பதில்லை..பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே இழுத்தடிப்புக்ள் கடினமான தங்களின் முடிவையே பிறர் மீது திணித்தல் ..ஏற்று கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்தல் என இரு அணிகளும் தங்களுக்குள் எதிரியாக மாறி விடுகிறார்கள் ..அங்கு தீர்க்க பட வேண்டிய பிரச்சனையின் கருத்து குவியம் மாற்ற படுகிறது.. நீயா? நானா? என்ற போட்டி மனப்பான்மையே உண்டாகிறது.. இவ்வறான நிலைமையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்று கூடி கூடி பேசி ஏதோ நாங்களும் பேசுகிறோம் என்று பாசாங்கு மட்டுமே உலகத்திற்காக செய்ய முடியும்..ஆனால் தீர்வு என்பது கடைசிவரை எட்டபட முடியாது!!( காசுமீரு.திபெத், காசா)

2.அடிக்குடல் எதிராளிகள்

கருத்து எதிராளிகளை நீங்கள் ஒரளவுக்கு உங்களுக்கு எதிராக செயல்படாமல் சில காலமாவது உங்கள் அறிவு ரீதியாக தடுக்கலாம்..ஆனால் அடிக்குடல் எதிராளிகள் உணர்ச்சி பூர்வமாக எதிர்ப்பவர்கள் உங்கள் தரப்பு கருத்து கள் நியாங்கள் சாதகங்கள் ஆகியவற்றை இவர்கள் மதிப்பதில்லை அடிப்படையில் சக மனிதன் என்ற வகையில் கூட ஏற்பதில்லை..நீங்கள் எடுக்கும் நிலைகளுக்கு தீமையானா கற்பிதங்களை ஏற்படுத்த முற்படுவார்.. நீங்கள் கூக்குரலிடும் எந்த பிரச்ச்னையும் இவர்கள் காதில் விழாது.. இப்படி அடிக்குடல் எதிராளிகள் உருவாகிவிட்டால் அவரை நீங்கள் எப்போதும் மாற்ற முடியாது!

அடிக்குடல் எதிராளிகள் எப்படி உருவாகிறார்கள்?

என்னுடைய முகம் இரண்டு உண்டு ஒன்று உலகிற்கான பொதுமுகம்.. இரண்டு சுய முகம்.. என்னுடைய பொது முகம் இப்படித்தான் உலகிற்கு தெரிய வேண்டும் என விருப்பம் வைத்திருப்போம்.. அதை உலகிற்காக ஓரளவிற்கேணும் அதை நம்பும் படி கட்டி எழுப்பி இருப்போம்..

இரண்டாவது எனக்கான சுய முகம்..

என்னை பற்றி நானே அறிந்து வைத்திருப்பது..என்னுடைய திறமைகள்… அறிவு .. மற்றும் ஆளுமை ஆகியன.. இந்த இரண்டு பிம்பங்களும் ஒன்றுகொன்று சம்பந்தபட்டவை.. மிக நுண்ணியமாக இணைக்கபட்டவை..

இவ்வாறான் இரு பிம்பம்களும் முக்கிய பிரச்சனைகளில் சரிந்து விழ இருக்கும் போது எந்த ஒரு தனி மனிதனும் அவ்வாறு இலகுவில் விடுவதில்லை.. தனக்கு சம்பந்தம் இல்லாத விடயங்களில் கூட தனக்கு அதிகாரம் இருப்பதாக அந்த பிம்பத்தை நிலை நிறுத்த முற்படுவான் .. உலகதிற்கே தனக்கு எதிரானவன் கோமாளி என்றும் தனக்கு கீழே தான் அவன் என்றும் காட்ட முற்படுவான்.. எது எவ்வாறாகினும் ஆதிக்க சக்தியின் மனபாங்கின் ஒரு பகுதியே இது..

அடிக்குடல் எதிரிகளை எப்படி சமாளிப்பது?

அடிக்குடல் எதிராளிகள் நீங்கள் அடிப்படையில் மனிதன் என்கிற ரீதியில் எதிர்பவர் ஆதலால் கீழ் கண்ட இரண்டு வழிமுறைகளே உள்ளன

1.சமமான வலிமையை கொண்டிருத்தல்

2. எதிரியின் முக்கியத்துவத்தை குறைத்தல்

அடிக்குடல் எதிரியாக அறியப்பட்ட நபரோடு குறைந்த பட்சம் நாம் சமமான வலிமையோடு இருக்க வேண்டும்..சம வலிமையோடு கூடிய நீண்ட மவுனமும் அடிக்குடல் எதிராளிக்கு பயத்தினை உருவாக்கும். அடிக்குடல் எதிராளியின் சிறிய விடயங்களிலும் மூக்கை நிழைத்து ஆராய முற்படுவீர்களானால் அது அடிக்குடல் எதிராளியின் உங்களை பற்றிய மதிப்பீடு தவறாக போகும் வாய்ப்பும் உள்ளது.. உங்கள் இலக்கு எது என்று அவர் சுலபமாக ஊகித்து உணர்வார்..

இரண்டாவதான எதிரியின் முக்கியத்துவதை குறைத்தல்.

ஒருவரின் முக்கியத்துவத்தை நாமே தான் தீர்மானம் செய்கிறோம்.. ஒரு வேலைக்காக நாம் ஒருவரை ஒன்றுக்கு மூன்று முறை சந்திப்போமானால் அவரின் முக்கியத்துவம் அதிக மாகிறது.. அமெரிக்க அறிஞர் தாமஸ் ஜெபர்சன் அவரின் கருத்துபடி ஒருவர் உங்கள் இதயத்தில் உங்கள் அனுமதி இன்றி நுழைய முடியாது. அந்த வகையில் அடிக்குடல் எதிராளிகள் இவரால் முடியும் என்று உங்கள் இதயத்தில் நுழைந்துவிட்டல் அதைவிட ஆபத்து வேறு இல்லை.. கூடுமானவரை பிரச்சனைகளை நீங்களே எதிர் கொள்ள பழக வேண்டும்..

மேற்கூறியவை அறிஞர் கொர்ப் கோகனின் உங்களால் முடியும் என்ற நூலின் சில பகுதிகளாகும் இதில நாம் கூறவருவது என்னவென்றால் இந்தி அரசு தமிழர்களுக்கான அடிக்குடல் எதிரி என்பதாகும் .. அவ்வப்போது பேச்சு வார்த்தை கலந்து பேசுங்கள் என்று கூறினாலும் தமிழர்களான நாம் ஆரிய சக்திகளுக்கு அடிக்குடல் எதிரிகளே!

இந்தி அரசின் சுய முகம் பொது முகம் என்பது தெற்காசியவில் தன்னை ஒரு பேட்டை ரவுடியாக நிலை நிறுத்துவதாகும்.. இங்கு நடக்கும் முக்கிய பிரச்சனைகளில் தேவை இல்லாமல் மூக்கை நுழைத்து கொண்டு தன்னுடைய அதிகாரத்தினை நிலை நிறுத்துவதாகும் .. உலகின் அருகருகில் பல வல்லரசு நாடுகள் முளைத்து கொண்டு நிற்க இந்த நாட்டை சுற்றி ஏன் எவரும் வல்லரசு ஆக முடியவில்லை? ஏன் சிங்கபூர் ஆசியாவில் தனக்கான இடத்த்தினை பெறும்போது அருகாமையில் இருக்கும் மாலத்தீவால் முடியாதா? இங்கு இந்த ரவுடியிடம் மீறி பிரச்சனை வேறு ஒருவரிடம் செல்லும் போது இவர்களுடைய முக்கியத்துவம் குறைகிறது.. அகி இம்சை அன்னகாவடி என்று ஊரை ஏமாற்ற போட்ட வேடம் கலைகிறது..அதாவது சுய பிம்பம் பொது பிம்பமும் கழண்டு விழுகிறது.. அதற்கு காரணமான ஈழ தமிழர்களை இப்போது காவு வாங்கியாகிவிட்டது.. இந்த ரவுடி வேடத்தினை நிலை நிறுத்த தினமும் நமது மீனவ சகோதரர்களை இழக்கவேண்டி உள்ளது..

இதை மாற்ற என்ன வழி? அதே அறிஞர் கூறியது போல சம வலிமையை தக்க வைக்க வேண்டும்.. தமிழனுக்கென்று வலிமை மிக்க ராணுவம் இருந்திருந்தால் இந்த இழி நிலை நமக்கு வந்திருக்குமா? என்பதை தமிழக தமிழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.. நாம் ஏன் தமிழ் தேசிய ராணுவத்தை இங்கு கட்டியமைக்க கூடாது?இன்று நம் மீனவர்களை ஓரினச்சேர்கை செய்து அனுப்பி இருக்கிறான் சிங்களவன் இதை விட கேவலமான நிலை உண்டா? இங்கு இந்த இந்தி யாவில் பொது முகம் சுய பிம்பம் என்பது ஆரியமே உயர்ந்தது என்று கட்டமைக்க பட்டுள்ளது..அவர்கள் அடிக்குடல் எதிராளிகளாக கருதுவது அவர்களுக்கு போட்டியாக இருக்கும் தமிழினமே என்பது உறுதியாகிறது.. இதை மாற்ற நாம் சம வலிமையை தக்க வைக்க வேண்டாமா?

அறிஞர் அவர்களின் கூற்றுபடி இரண்டாவதான அடிக்குடல் எதிராளிகளை சமாளிக்க அவர்களின் முக்கியத்துவதை குறைக்கவேண்டும்.. இங்கு என்ன நடந்தாலும் பஞ்சாயத்து டெல்லிக்கு செல்வதை தடுக்கவேண்டும். அது தந்தியடிப்பது.. உண்ணாவிரதம் இருப்பது. நாமே சுயமாக எதுவும் செய்ய முடியாதா? தமிழ் நாட்டை டில்லிக்காரனிடம் கையேந்த வைக்காமல் சுய தேவைகளுக்காக நம் சொந்த காலில் நிற்க முடியாதா? அவர்கள் அவர்களே நாம் நாமே! நமக்கான தேசியம் சாதி சமய மற்ற சமத்துவ தமிழ்தேசியமே அன்றி ஆரிய தேசியம் அல்ல.. மேற்கண்ட புரிதல் தமிழக தோழர்களுக்கு மிக மிக அவசியம்.. தமிழக விடுதலை குறித்து உலகமெங்கும் பரவி வாழும் ஈழ உறவுகளின் ஆதரவும் இங்கு அவசியமாகிறது.. நாமும் இங்கு அடிமைகளே! சுதந்திரம் நமக்கும் வேண்டும் என புரியவைத்தவர்கள் அவர்களே!

(இங்கு மாற்று கருத்து மாணிக்கங்கள் சாதியை உள் நுழைப்பார்கள் என்று தெரியும்..அவ்வாறனவர்கள் தமிழ் தேசியத்தில் சாதியை ஒழிக்க பலமான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.. அதை விடுத்து அந்த சாதிக்காரன் அப்போது இதை எங்களுக்கு செய்தான்.. இவர்கள் இப்போது செய்கிறார்கள்.. என ஓலமிடுவதை விடவேண்டும்.. ஏன் ஆரிய சக்திகளுக்குள் உள் முரண்பாடு இல்லையா? ஆனால் பொது எதிரி தமிழன் தான் என்று ஒன்றாக கூடி கொக்கரிக்கிறார்களே! நம்மால் ஏன் பொது எதிரி ஆரிய சக்திகள் தான் என்று கொக்கரிக்க முடியாதா? தாழ்த்தபட்ட மக்களுக்காக போராடுகிற தலைவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் போது இங்கு போராடும் ஒருவரை அவர்கள் தலைவனாக ஏற்று கொண்டுள்ளர்களா? இந்த இந்திய தேசத்தில் இருந்து கொண்டு சாதியை ஒழிக்கிறேன் என்று சொல்லி யாரும் முழுமையாக ஒழித்துவிட முடியாது.. இவர்கள் பிழைப்பு ஓடுவதே.. இத்து போன வருணாசிரம கொள்கைகளை கொண்டுதான்.. தமிழகத்தின் தன்னுரிமைக்கான போராட்டங்கள் எழும் போதெல்லாம் அங்கு ரோக்காரனின் சாதிய விளையாட்டுகள் ஆரம்பிக்கும் .. இதை சற்று கூர்ந்து கவனித்தால் புரிந்து கொள்ளலாம்)

அதை தோழர்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்..

அதற்கான செயல்திட்டதினை வகுத்து செயல்பட தயாராவோம்!

(இங்கு ஆய்வு செய்யபட்டது தமிழின எதிரிகள் தொடர்பாக .. துரோகிகள் குறித்து தனிபதிவு வெளிவரும்)

http://siruthai.wordpress.com/2009/11/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/

வெளியுறவு கொள்கை என்பது உள்ளூர் கொள்கையின் விரிவாக்கமே

வெளியுறவு கொள்கை என்பது உள்ளூர் கொள்கையின் விரிவாக்கமே

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ‘இந்தி’ய படைகளை இறக்கி தமிழர்களை சுட்டு கொன்ற இந்தியா அதே போல் காவிரி பிரச்சனையின் போது(1991) களத்தில் இறங்கி தமிழர்களை காத்ததா?எமது பக்கத்து மாநிலமான கருநா(க)டகா காரன் பிழைக்க போன ஒடுக்க பட்ட சிறுபான்மை தமிழ் மக்களை தமிழில் பேசுகிறான்.. தாய்மொழி தமிழ் என்பதற்க்காக வெட்டி காவிரி கரையில் ரத்தமாக விட்டான் தடுப்பதற்கோர் இந்திய தேசம் முன்வரவில்லை மயிரை புடுங்கி கொண்டிருந்தது! அதற்கு காரணமான மான வாட்டாள் நாகராசு இன்னும் அரசியல் வாதியாக மிகபெரிய அவதாரம் எடுத்து சுற்றி கொண்டுதான் உள்ளான்..ஏன் கன்னடக்காரனுக்கு-மராத்திகாரனுக்கும் இன்னும் எல்லை தகாராறு உள்ளது..எங்கே பெங்களூரில் உள்ள அவர்கள் மேல் கைவைக்க சொல்லுங்கள் பார்போம் வாலை ஒட்ட நறுக்குவார்கள்..

இந்த பால்தக்கரேவும் தான் மும்பையில் தமிழரை தாக்கினான் அப்போது என்ன செய்து கொண்டு இருந்தது ‘இந்தி’ய அரசு? இன்றும் பத்திரமாகத்தான் உள்ளான் இவ்வாறானவர்களை சிறையில் தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி இருந்தால் இந்த இந்திய தேசத்தை பாராட்டலாம்.. இதுவரை தமிழன் எத்தனை மாநிலங்களில் கலவரத்தை தூண்டினான்? காரணமின்றி யாரையாவது அடித்திருக்கிறானா?மலையாளி கண்ணகி கோட்டம் என்னுடையது என்கிறான்.. கொல்டி பாலாற்றின் குறுக்கே அணைகட்டிகிறான்.. என்ன செய்ய முடிகிறது நம்மால்?

இந்த மீனவர்களை எடுத்து கொள்ளுங்கள்..இதுவரை சற்றொப்ப 350 தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தமிழ் இனப்படுகொலை தொடர்கிறது. இந்தியக் கப்பற்படையோ இந்திய அரசோ சிங்களக் கப்பற்படைக்கு எதிராக மறுநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே ஏன்?

பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் ‘இந்தி’யத் தோட்டாக்கள், தமிழகத் தமிழனை சுட்டுக் கொல்லும் சிங்களவனை நோக்கி ஒரு முறையாவது பாய்ந்திருக்கிறதா? ஏன் தமிழாகளிடம் இந்த பாகுபாடு? சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது. ஈழத் தமிழர்கள்பால் இந்திய ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் அணுகுமுறையும் பகைமை நஞ்சு சார்ந்ததுதான். சில மாதங்களுக்கு முன்பு லெபனானில் அவதிப்பட்ட இலங்கைச் சிங்களவர்களுக்கு இலவச விமானம் அனுப்பி ஏற்றி இறக்கிய இந்தியா குவைத்தில் அவதிப்படும் தமிழர்களை மட்டும் உணவுக்குக் கூடப் பிச்சை எடுக்க விட்டிருப்பதன் காரணமென்ன, அவர்கள் தமிழர்கள் என்பதாலா?

இந்திராகாந்தி ஆட்சிக் காலமானாலும், அவர் தந்தையார் நேருவின் ஆட்சிக் காலமானாலும், இந்திராவின் மகன், மருமகள், பேரன் ஆட்சிக் காலமானாலும், வாஜ்பாயி ஆட்சிக் காலமானாலும் இந்திய ஆளும் வர்க்கத்தினர் தமிழகத் தமிழர்களை சந்தேகப் பட்டியலில் வைத்துக் கண்காணிப்பதிலும், தமிழர்களைப் பகைவர்களாகக் கருதுவதிலும் மாற்றமில்லை. ஈழத் தமிழர்களையும் அதே அளவுகோல் கொண்டுதான் பார்க்கிறார்கள்

இந்த பாகுபாட்டைத் தான் ‘இந்தி’ய தேசியம் என்கிறோம். தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.

அதாவது ஏனைய பொருளாதார வளங்களுக்கே தமிழரும் தமிழ்நாடும் தேவை படுகிறாரகள்..

அசாமில் பெட்ரோல் எடுக்க அந்த அரசிற்கு உரிமைத் தொகை கொடுத்து வரும் “இந்தி”ய அரசு, தமிழகத்தின் காவிரிப்படுகையிலிருந்தும், நரிமணித்திலிருந்தும் திருடிச் செல்லும் பெட்ரோலுக்கு நம்மிடையே “இறக்குமதி” வரியை விதித்துக் கொள்ளையடிப்பதை என்னசொல்ல?

மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் பெரு வணிகங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். பீகாரிகள் ரயில்வே வேலை, ரோடு வேலை என தமிழகத்திற்குள் நுழைந்து விட்டனர். தமிழத்திலேயே தமிழன் அகதியாக தெருத்தெருவாய் அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது. அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி உலகமய முதலாளிகள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் “இந்தி”யத் தேசியத்தை ஆதரிக்கும் அனைவரும்தான் என உணர வேண்டும்

இதுவரை எனைய தமிழர் நலம் சார்ந்த வெளிவிஷயங்களில் இதுவரை இந்தியா தலையிட்டதிலை அது மலேசிய பிரச்சனையாக இருந்தாலும் சரி ..குவைத் தமிழர்கள் பிரச்சனையாக இருந்தாலும் சரி!

எங்கோ சரந்தீபு சிங்கு தூக்குதண்டனைக்கு தாம் தூம் என்று குதிக்கும் இந்திய அர்சு இதுவரை தமிழக தமிழர்களுக்காக குதிதது உண்டா?சிந்தித்து பாருங்கள்..மராட்டியர்களின் இன உணர்வில் கால் பங்கு கூட இல்லையா தமிழனுக்கு? கொஞ்சம் வராலாற்றை எடுத்து புரட்டி பாருங்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடிய இனங்களே வாழ்திருக்கின்றன..

ஈழதமிழர்கள் செய்வது ஒன்றும் தவறான விஷயம் அல்ல.. தமிழர்கள் இந்தியாவில் இருந்தாலும் ஈழத்தில் இருந்தாலும் இந்திய ஆளும் வர்க்கம் அவர்களைப் பகைவர்களாகவே கருதுகிறது. விடுதலைப் புலிகள் இந்திய அரசுக்குத் திரும்பத் திரும்ப நேசக்கரம் நீட்டுகிறார்கள். இந்திய அரசு ஒரு பிராந்திய வல்லரசாகச் செயல்படத் துணைபுரிவோம், இந்திய தேசிய இறையாண்மைக்குப் பாதுகாப்பாக இருப்போம் என்று கூட உறுதி தருகிறார்ச்கள். ஆனால் இந்திய ஆட்சியாளர்கள் விடுதலைப் புலிகளை வீழ்த்தவே முனைகிறார்கள். இது தீராத ஆரிய-தமிழ் இனப்பகையின் வெளிப்பாடு.

நமக்காக குரல் கொடுக்க ஒரு நாடு கட்டாயம் வேண்டும்.. நம் குரல் ஐ.நா. சபையில் எழுப்ப படும்..

அப்போதுதான் தமிழர்களுக்கு கொடுமை செய்யும் எனைய நாடுகள் இந்தியா உட்பட தனது கொட்டத்தை அடக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பக்கம் பெசுகிரார்னே தெரியாமல் பேசும் இசைகளைஞனை போல

:lol: :lol: :lol:

இன்று காலை நல்ல சிரிப்போடை ஆரம்பிச்சிது..! :lol:

அர்ஜுனனுக்கு புறா மட்டும் தெரிந்தது போல அவர்களுக்கு தமிழ் ஈழம் மட்டுமே தெரிந்தது . அவர்கள் தனது மக்களுக்காக தனது குடும்பத்தை விட்டு சுகங்களை விட்டு அல்லும் பகலும் எதிரிகளிடம் போராடி கடைசியாக சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்தபட்டார்கள் . வீரத்தால் அவர்கள் இன்றும் வீரகளே. அவர்கள் போராடியது ஈழத்திற்காக . அவர்கள் நாட்டிற்காக. இந்தியாவிற்கு எதிராக அல்ல .

இதுதான் என் கருத்தும்..

அவர்களால ஏதோ முயன்றார்கள்..! சரி தவறுகள் இருக்கலாம்.. ஆனால்...

இப்ப செத்துப் போய்ட்டான்யா.. கொஞ்சம் மரியாதை குடுங்க.. :(

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இந்த இந்தி நாட்டை அணுகுவது?

சிந்தனை செய்து பாருங்கள்! இந்தியா என்னும் நாடு இந்து என்னும் ஆறிபோன ஆரிய சித்தாந்ததினை அடிப்படையாகவும், இந்தி என்னும் வடமொழியை செயல்திட்டமாக கொண்டு கண்ணுக்குப் புலனாகாத ஒரு பூணூலால் கட்டப் பட்டுள்ளது. பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ்,மார்க்சிய கம்யூனிஸ்டு, அ தி மு க, போன்ற மிதவாத அரசியல் அமைப்புகள்; ஆர் எஸ் எஸ் , இந்து முன்னணி, பஜ்ரங் தளம், பாரதிய சனதா, மா லெ குழுக்கள், மக இ க போன்ற தீவிர அரசியல் பேசும் இயக்கங்கள், இந்திய இராணுவத் தலைமை, மையப் புலனாய்வுத் துறை, இந்திய தலைமை செயலகம், நீதித் துறை, வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கை ஆகிய அனைத்தும் இந்தப் பூணூல் கட்டமைப்பின் ஒவ்வொரு இழைகளாகும்.

இந்தக் கட்டமைப்பு மிக நுணுக்கமாக, வஞ்சகமாக பின்னப் பட்டுள்ளதால் தமிழக தமிழர்கள் மிக மிக கவனமாக அணுகப்பட வேண்டும். இல்லையென்றால் நாம் ஒருவருக்கு ஒருவர் அவர்களுடைய வருணா சிரம் தர்மபடி அடித்துகொள்ள நேரிடும் .ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து ஒடுக்கப் படும் தேசிய இனங்களும் ஒன்று பட்டு விடுதலைகான போராட்டத்தை மேற்கொள்ள முடியும் என்பது, இந்தியா என்கிற பார்ப்பனிய உருவாக்கம் உள்ள வரை சாத்தியமாகக் கூடிய வாய்ப்புகள் மிக மிக குறைவே. ஏன் சாத்தியம் இல்லை என்று கூடக் கூறலாம். இங்குள்ள தேசிய இனங்கள் அடிப்படையிலேயே ஒன்றை ஒன்று முரண்பட்டு நிற்கின்றன. கன்னடன் தமிழனின் தனித்துவ முயற்சி கண்டு மனம் பொறாதவனாய் அவன் தன்னை விட தாழ்ந்தவன் எனக் காட்ட முற்படுகிறான். மலையாளி, இந்தியா என்ற கட்டமைப்புக்குள் அங்கங்கின்னாதபடி நிறைந்து ஒட்டுண்ணியாக வாழ்ந்துகொண்டு, தமிழனின் தனித்துவ வேட்கை தன் அடிப்படை வாழ்வாதாரத்தை பிளந்து விடும் என எண்ணி தமிழனின் மென்னியை திருகுகிறான். பிகாரியையும் ஒரியாக்காரனையும் மதராசியையும் வட நாட்டவன் வெறுக்கிறான், அவமதிக்கிறான். உறங்கும் எரிமலையான பஞ்சாப், எரியும் காசுமீர், அசாம், வட கிழக்கு மானிலங்கள் என எத்தனை முரண்பாடுகள். இத்தனை முரண்பாடுகளிலும் பார்ப்பனியவாதிகளும், பெரு முதலாளிகளும், அரசியல் அற்பர்களும் மட்டுமே ஒருமைப்பாடு, இந்தியா, இந்தியன் என்று அலறிக் கொண்டிருப்பதை கவனியுங்கள். பார்ப்பனியத்தை ஒழிக்க முற்படுங்கள். நீங்கள் புரட்சியெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லாமல் இந்தக் இந்தி கட்டமைப்பு தானே உதிர்ந்துவிடும்!!....

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நண்பரே உங்களின் கருத்துக்கு . நான் ஒரு நீண்டகால யாழ் கள உறுப்பினர் . நமது இனம் தவறான வழியில் சிந்தித்தால் திட்டி அழுத்தி கொட்டி எப்படியாவது அவர்களை நம் வழிக்கு கொண்டு வருவது ஒவ்வொரு தமிழனின் கடமை . அல்லது பிறரின் கருத்துக்களை ஆழமாக செவிமடுத்து அதில் தனக்கு உகந்தவற்றை ஏற்றுக்கொண்டு ஒரே பாதையில் பயணிப்பதை நான் விரும்புகிறேன் .அதை விடுத்து ஓடிப்போயி தூரத்தே நின்று கொண்டு நம் இனம் மீதே சேறு வாரி தெளிக்கும் அளவுக்கு நான் சுயமரியாதை ( இந்த வார்த்தையே இப்போது கேளிப்போருளாகி விட்டது . தவறு செய்யும் மற்றும் திசை மாறும் பலர் உபயோக படுத்தும் வார்த்தையாகி விட்டது ) உள்ளவன் அல்ல . என் இனத்திற்கு நல்லது நடந்தால் அந்த சுயமரியாதையை கூட இழக்க தயார் .

எனக்கு உள்ள ஒரே வருத்தம் . சரியான தலைமை இன்றி தமிழ் ஈழம் தற்போது தள்ளாடுகிறது . நீண்ட நாள் உறுப்பினர்கள் பலரும் என் எழுத்துக்களை அறிவர் . மான ரோசம் அற்ற மிதவாத எண்ணம் கொண்ட நானே என் தலைவன் பிரபாகரன் என மனதார பல முறை கூறியிருக்கிறேன் .

ஏனெனில் என்னைபோல, உங்களைபோல, ஈழ மகளை போல, ரதியை போல, மல்லையுரானை போல, புங்கையூரன் போல, சாவகசமா தூங்கிட்டு அப்பப்ப முழிச்சிட்டு களத்தை செப்பனிட வரும் நிழலி போல, இடைவிடாது இந்தியாவிற்கு எதிராக கிளிப்பிள்ளை போல கத்தியே சாகும் புரட்சிகர தமிழ் தேசியன் போல, எந்த பக்கம் பெசுகிரார்னே தெரியாமல் பேசும் இசைகளைஞனை போல, அவரை போல, இவரை போல, அதை போல, இதை போல, இன்னும் பல போல ஆட்டு, மாட்டு, கழுதை, புறா, கோழி, பன்றி, காடை, கௌதாரி, பேய், பிசாசு, எல்லா மந்தைகளையும் ஒரே நேர்கோட்டில் அழைத்து வந்து ஈழத்தை பற்றி மற்றும் ஈழ விடுதலையை பற்றி மட்டும் சிந்திக்க வைத்த மாபெரும் தலைவன் அவன் . அவனை எனக்கு பிடிக்கும் . ஏனெனில் அவன் தனக்கு தன் இனத்திற்கு ஒரு வீடு / தேசம் பெற நினைத்தான் . அடுத்தவன் வீட்டையோ / நாட்டையோ கெடுக்க நினைக்க வில்லை

ஒரு நாள் கூட புலிகளுக்கு எதிராக கருத்து எழுதியது இல்லை . இன்னும் சொல்ல போனால் புலிகள் செயல்பாடுகளில் பல, பல இல்லை எதுவுமே அதிகமாக எனக்கு உடன்பாடு கிடையாது . எனினும் ஒன்று மட்டும் அதிக உடன்பாடு . அர்ஜுனனுக்கு புறா மட்டும் தெரிந்தது போல அவர்களுக்கு தமிழ் ஈழம் மட்டுமே தெரிந்தது . அவர்கள் தனது மக்களுக்காக தனது குடும்பத்தை விட்டு சுகங்களை விட்டு அல்லும் பகலும் எதிரிகளிடம் போராடி கடைசியாக சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்தபட்டார்கள் . வீரத்தால் அவர்கள் இன்றும் வீரகளே. அவர்கள் போராடியது ஈழத்திற்காக . அவர்கள் நாட்டிற்காக. இந்தியாவிற்கு எதிராக அல்ல .

இங்கு பலர் எதுவுமே ஈழத்திற்கு செய்யாமல் கணினி தட்டி இந்தியாவையே வம்புக்கு இழுத்துக்கொண்டு இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. இந்தியாவை வம்பு இழுப்பதால் உங்கள் நேரம் தான் வீண் . இந்தியாவிற்கு ஒன்றும் ஆகாது.

இங்கு பலர் இந்தியா சீனாவுக்கு பயப்படுது, இலங்கை கடற்படைக்கு பயப்படுதுன்னு வடிவேலையும் மிஞ்சி உலக மகா பிதற்றல்கள் செய்கிறார்கள். அய்யா சாமிகளா நிறை குடம் தளும்பாது . இந்தியா ஒரு நிறைகுடம் . அது அமைதியாக தான் இருக்கும் .

பாவம் ஈழமகள் களத்திற்கு வாறதே இல்லை அவவை போட்டு தாக்கி இருக்கிறீங்கள்...ஒழுங்காய் ஒரு பெயரில் வந்து கருத்து எழுதத் தெரியல உங்களுக்கு அதில் வேறு பழைய ஆட்களுக்கு உங்களைத் தெரியுமாம்...யார‌து பழைய உறுப்பினர் இருந்தால் யார் இவர் என கண்டு பிடியுங்கள் பார்ப்போம் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.