Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேர்த்தில் ஏட்டிக்குப் போட்டியாக சிங்களவர்களும் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SL%20protest-perth.jpg

தமிழர்களுக்குச் சார்பாக செய்திகளை வெளியிடுவதாக கூறி கொமன்வெல்த் மாநாடு நடைபெறும் பேர்த் நகரில், ஏபிசி தொலைச்சாட்சி நிலையத்துக்கு முன்பாக சிங்களவர்கள் நேற்று போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு சார்பான வகையில் செய்திகளை வெளியிடுவதாக இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஏபிசி அலைவரிசை மீது குற்றம்சாட்டியதுடன், கண்டனம் தெரிவித்து முழக்கங்களையும் எழுப்பியிருந்தனர்.

அத்துடன் இதுதொடர்பாக தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையிலான கடிதம் ஒன்றையும் போராட்டத்தில் ஈடுபட்ட சிங்களவர்கள் ஏபிசி தொலைக்காட்சி நிறுவன அதிகாரிகளிடம் கையளித்திருந்தனர்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணப்படங்களை அவுஸ்ரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பியிருந்தது.

SL%20protest-perth1.jpg

SL%20protest-perth2.jpg

அத்துடன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் சிறிலங்காவின் தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்க ஆகியோருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான செய்திகளையும் ஏபிசி முக்கியத்துவப்படுத்தி வந்தது.

அவுஸ்ரேலியாவின் பிரதான செய்தி ஊடகமாக ஏபிசியில் வெளியாகின்ற போர்க்குற்றம் தொடர்பான செய்திகள் சிறிலங்கா அரசுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே, அங்குள்ள சிறிலங்கா தூதரகத்தின் ஏற்பாட்டில் சிங்களவர்களைக் கொண்டு இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள சிறிலங்கா அதிபரை கைது செய்யக் கோரி நேற்று முன்தினம் பேர்த் நகரில் தமிழர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அதற்குப் போட்டியாக சிறிலங்கா அரசு சிங்களவர்களை இறக்கிவிட்டு இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20111030104960

போர்க்குற்றத்துக்கு ஆதரவாளரான இந்தச் சிங்களப் பயங்கரவாதிகளை அவுஸ்த்ரேலிய அரசு நாடு கடத்துமா, ஜெயிலில் அடைக்குமா, அல்லது கிறிஸ்மஸ் தீவில் அடைக்குமா?

போர்க்குற்றத்துக்கு ஆதரவாளரான இந்தச் சிங்களப் பயங்கரவாதிகளை அவுஸ்த்ரேலிய அரசு நாடு கடத்துமா, ஜெயிலில் அடைக்குமா, அல்லது கிறிஸ்மஸ் தீவில் அடைக்குமா?

அவர்களுக்குத்தான் நிரந்தர வதிவிடம் வழங்கி மேலும் அவர்களை ஊக்கிவிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கொலைக்களம் இந்தத் தொலைக்காட்சியில் வந்தவுடன் சிட்னியிலும், மெல்பேர்னிலும் கடந்த யூலை மாதம் சிங்களவர்கள் இந்ததொலைக்காட்சி நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆனால் தொடர்ந்து இந்தத் தொலைக்காட்சியில் சிறிலங்காவின் மனித உரிமைமீறல்கள், முள்ளிவாய்க்காலில் இருந்த மீனா கிருஸ்ணமுர்த்தி, ஜெகன் ஆகியோரின் செவ்விகளை வெளியிட்டு வருகின்றது. எத்தனை ஆர்ப்பாடங்கள் சிங்களம் செய்தாலும் ABC ஊடகம் தொடர்ந்து கடமையைச் செய்யும்.

ABC என்ன லங்கா புவத்தா?

போர்க்குற்றத்துக்கு ஆதரவாளரான இந்தச் சிங்களப் பயங்கரவாதிகளை அவுஸ்த்ரேலிய அரசு நாடு கடத்துமா, ஜெயிலில் அடைக்குமா, அல்லது கிறிஸ்மஸ் தீவில் அடைக்குமா?

உண்மையான, நியாமான, மனச்சாட்சியான கோரிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கொலைக்களம் இந்தத் தொலைக்காட்சியில் வந்தவுடன் சிட்னியிலும், மெல்பேர்னிலும் கடந்த யூலை மாதம் சிங்களவர்கள் இந்ததொலைக்காட்சி நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆனால் தொடர்ந்து இந்தத் தொலைக்காட்சியில் சிறிலங்காவின் மனித உரிமைமீறல்கள், முள்ளிவாய்க்காலில் இருந்த மீனா கிருஸ்ணமுர்த்தி, ஜெகன் ஆகியோரின் செவ்விகளை வெளியிட்டு வருகின்றது. எத்தனை ஆர்ப்பாடங்கள் சிங்களம் செய்தாலும் ABC ஊடகம் தொடர்ந்து கடமையைச் செய்யும்.

ABC என்ன லங்கா புவத்தா?

தமிழர்கள் இவ்வூடகங்களுக்கு தமது ஆதரவை வழங்க வேண்டும்.சிங்களவர்கள் இனப்படுகொலையையும் செய்து விட்டு என்ன தினாவெட்டாக ஊர்வலங்கள் செய்கிறார்கள்.நாம் பாதிக்கப்பட்டவர்கள்.சளைக்காமல் எமக்கு மேலும் நண்பர்களை உருவாக்கி எமது சார்பான உலக அபிப்பிராயங்களை அதிகரிக்க வேண்டும்.

அவுஸ்திரேலிய பத்திரிகையில் வந்த சித்திரப்படம்

308358_10150552518264128_722674127_11595967_1566870092_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

செய்யிற படு கொலைகளைச் செய்து... ஒரு இனத்தையே...., அழிவின் விழிம்பில் கொண்டு வந்து நிறுத்தி விட்டு,

இப்படியான ஆர்ப்பாட்டம் செய்ய்ய, சிங்களவனுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.