Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போட்டி மாவீரர் தினத்தைக் கைவிடும்படி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வேண்டுகோள்!

Featured Replies

இன்று பிரான்ஸில் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நாள். இப் போரில் உயிர் நீத்த அனைத்து போர் வீரர்களையும் நினைவு கூரும் பொது விடுமுறை நாள். பிரான்ஸ் ஜனாதிபதி, உலகப் போரில் பிரான்ஸுக்காகப் போராடி உயிர் நீத்த முகம் தெரியாத போர் வீரர்களுக்காக அமைக்கப் பட்டிருந்த அணையா விளக்கு உள்ள இடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். இது பரிசில் ஒரு பொது இடத்தில் உள்ளது.

பொது இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதுபோல் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒதுக்குப் புறமான பொது இடத்தில் அனுமதி பெற்றால் ஆயிரக் கணக்கில் செலவழித்து மண்டபம் எடுக்கத் தேவையில்லை. மக்களிடம் வசூல் பண்ண அடிபடத் தேவையில்லை.

பொது இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதுபோல் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒதுக்குப் புறமான பொது இடத்தில் அனுமதி பெற்றால் ஆயிரக் கணக்கில் செலவழித்து மண்டபம் எடுக்கத் தேவையில்லை. மக்களிடம் வசூல் பண்ண அடிபடத் தேவையில்லை.

நக்கலு.

.

பொது இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதுபோல் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒதுக்குப் புறமான பொது இடத்தில் அனுமதி பெற்றால் ஆயிரக் கணக்கில் செலவழித்து மண்டபம் எடுக்கத் தேவையில்லை. மக்களிடம் வசூல் பண்ண அடிபடத் தேவையில்லை.

ஒதுக்குப்புறமான இடம் என்று லாச்சப்பிலையா குறிப்பிடுகிறீர்கள்.........??????????/ மண்ணில் விளைந்த முத்துக்களை வணங்க தமிழீழ மண்ணைத்தவிர உலகில் எங்கே தான் இடமுண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொட்டில் பழக்கம் சுடுகாடுவரைக்கும் எண்டதைப்போலை.......அங்கை புக்கைமோதகம் பாதி வாழைப்பழத்துக்கு.......இழுபறிப்பட்டதெல்லாம் ஞாபகத்துக்கு வருகுது.

இது எல்லாம் எப்போதோ தெரிந்த விடயங்கள்.

இப்படி நடக்காவிட்டால் தான் அதிசயம் .

நான் இப்ப வந்து எழுதவில்லை எப்போதோ எழுதிவிட்டேன்.

"படித்த பொறுக்கிகளும் படிக்காத ரவுடிகளும்" பொறுப்பில் இருக்கின்றார்கள் என்று,அதை முழு தமிழரும் உணரும் காலம் நெருங்குகின்றது .

இங்கும் இந்த நாளை அனுசரித்தார்கள், 2 நிமிடங்கள் நகரத்தில் உள்ள பெரும்பாலான வேலைத்தளங்களில் மௌன அஞ்சலியும் செலுத்தப் பட்டது.

ஐப்பசி மாதத் தொடக்கத்திலேயே சிவப்புப் பொப்பி பூவை அடையாளச் சின்னமாக அதிகமானோர் coat ல் அணிந்து தமது ஆதரவை வெளிப்படுத்துவது வழக்கம். எமது மாவீரர்களும், கார்த்திகைப் பூ ஞாபகங்களும் தான் வந்துபோகும்... :(

  • தொடங்கியவர்

பரமேஸ்வரன் அறிக்கை - தேசியத்திற்கு எதிராக செயற்படுவோர்களது செயற்பாடுகள் உடைத்தெரியப்படும்

[பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் அவர்கள் சமகாலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குழப்பங்களுக்குசில விளக்கங்களோடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.]

இன்று தோன்றியுள்ள இறுக்கமான காலகட்டத்தில் எதிரி மிக தந்திரமாக எமக்குள்ளேயே நடமாடத் தொடங்கியுள்ளான்.

அவன் எம்மை விட தேசியப் பற்றுள்ளவனாக தன்னை அடையாளப்பபடுத்திக்கொண்டு பல சந்தர்ப்பவாதிகளை தம்முடன்இணத்துக்கொண்டு செயற்படத் தொடங்கியுள்ளான். அவனது குறிக்கோள் புலம் பெயர் மக்களை பல குழுஉடைத்துப்போடுவதுதான். தேசியத்திற்கு எதிராக செயற்படும் அனைவரும் மிக விரைவில் மக்கள் முன் நிறுத்தப்படுவார்கள் பலவிடயங்களில் நாம் வெகு நாட்களாக பொறுமைகாத்து வருகின்றோம்.

ஆனால் துரோகங்கள் வெளிப்படையாக அரங்கேறுகின்றன. தெரிந்தும் தெரியாமலும் தேசத்தின் ஒற்றுமைக்கு எதிராக நிற்பவர்கள்அனைவரும் ஒதுங்கிக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். கால ஓட்டத்தில் அனைவருடைய முகங்களும் வெளிச்சத்திற்கு வரும் அப்போது அவமானப்பட்டு நிற்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றோம். பொய்கள் பல காலம் தாக்குப்பிடிக்க முடியாது உண்மைகள்உடைத்துக்கொண்டு வெளிவரும் நாட்கள் தொலைவில் இல்லை.

உண்மையான போட்டிகள் என்பது எதிரியை வீழ்த்துவதில்தான் இருக்க வேண்டும். தமிழர்கள் முளுவதும் பரந்து வாழும் அனைத்துநாடுகளிலும் எதிரி மாற்றத்தை விரும்புகின்றான். அதை நிறைவேற்ற பலர் தெரியாமலும் சிலர் தெரிந்தும் களம் இறங்கியுள்ளார்கள்.அவன் விரும்பும் மாற்றத்தை நிறைவேற்றினால் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் எதிரி தப்பிவிடுவான். எம்மை வைத்தேஎமது கண்னை குத்த எதிரி தீர்மானித்து விட்டான். யார் யாரே விட்ட பிழைகளை சாதகமாக்கிக்கொண்டு உலகெங்கிலும் எமதுதேசியத் தலைவரால் வளர்த்தெடுக்கப்பட் கட்டமைப்பை அனைத்து நாடுகளிலும் உடைத்தெரிய எதிரி வெறிகொண்டுவலைவீசுகின்றான்.

எதிரி மிகச்சரியாக கணக்குப்போட்டு எவனை விலைக்கு வாங்க வேண்டும் எவனை அடித்து வழிக்கு கொண்டுவர வேண்டும் என்பதுபல துரோகிகள் ஊடாக அறிந்து வைத்துள்ளான். அவைகள் அப்பட்டமாக அரங்கேற்றப்படுகின்றன. செயற்பாட்டாளர்கள் பிழைவிட்டிருந்தால்?! நன்றாக அறிந்துகொள்ளுங்கள் பிழைகள் என்றும் திருத்தக்கூடியவைகள். ஆனால் எதிரியின் வஞ்சக வலைக்குள்விழுந்து துரோகிகளாகி விடாதீர்கள் வீழ்ந்துபோனால் காலம் என்றும் உங்களை மன்னிக்காது.

தமிழர்களின் பொது எதிரியாக சிங்களத்தை வீழ்த்த இன்று தேசியம் பேசுபவர்களிடம் ஏதாவது தொலைநோக்கு அல்லது குறுகியநோக்கு திட்டங்கள் உண்டா? இனி ஜனநாயகம் இனி எல்லாம் வெளிப்படை என ஒக்காலமிடும் இவர்களிடம் எதிரிக்கு எதிரானவெளிப்படையான திட்டம் என்ன? எதிரியை அழிக்க, குற்றவாளிக் கூண்டில் ஏற்ற இவர்களிடம் உள்ள திட்டங்கள் என்னென்ன?எவருக்காவது தெரியுமா? கணக்கு, அதற்கு இருக்கா கணக்கு, இதற்கு இருக்கா கணக்கு!. மக்களிடம் பணம் சேகரித்தேன்விடுதலைப்புலிகளுக்கு கடந்தகாலங்களில் பணம் ஒரு ரூபாய் அனுப்பினதாக ஒப்புக்கொண்டாலும் அவன் நாளை சிறைதான் செல்லவேண்டும், பணம் என்றால் பிணம் கூட எழும்பி வரும் என எதிரியின் கணக்கு அதனாலேயே செயற்பாட்டாளர்கள் மீது பண மோசடிஎன அவனது திட்டத்தை யார் யார் ஊடாகவே செயற்படுத்த முனைகின்றான்.

ஒரு நாட்டில் ஒரு செயற்பாட்டாளர்கள் அல்லது இருவர் என்றால் சிரிது யோசிக்கலாம் ஆனால் சொல்லி வைத்தாற் போல்உலகின் அனைத்து நாடுகளிலும் ஒரே பாணியையே கையாளப்படுகின்றது. கணக்கு கேள் காட்ட மாட்டார்கள் காரணம் பணம்விடுதலைப்புலிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது, கணக்கு காட்டினால் சிறை காட்டாவிட்டால் துரோகி பணத்தை அடித்துவிட்டான் எனஓரங்கட்டிவிடாலம் இதுதான் இதுவேதான் எதிரியின் தந்திரமாக கணக்கு மக்களே பல ஆண்டுகள் கடந்த பின்பே எதிரியின்சூட்சுமத்தை புரிந்துகொள்ள முடியும் எவ்வளவு சொன்னாலும் சில விடயங்கள் மட்டும் விளங்கவே விளங்காது.

இறுதியாக மக்களே சற்று நிறுத்தி ஆழமாக உங்களுக்குள்ளேயே அக்கேள்விகளை கேளுங்கள். குழப்பி விடுவதற்கு பலர் வருவார்கள்அவதானமாக இருங்கள். அழுத்தமாக கூறுவதானால் பழைய செயற்பாட்டாளர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் புதிதாகஎவரையும் அனுமதிக்காதீர்கள், ஆதரிக்காதீர்கள் அதுவே நீங்கள் தேசியத்திற்கு செய்யும் நன்மை. யார் உண்மையாகவேலைத்திட்டங்களுடன் வருகின்றார்கள் என மட்டும் பாருங்கள் எதிரிக்கு வெளிப்படையாக திமிராக எவன் சவால் விடுகின்றார்கள்என மட்டும் பாருங்கள் அத்திட்டங்களுக்கு மட்டும் முளுமையாக அறிந்துகொண்டு உதவி செய்யுங்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமைச் செயலகம் என்பது தேசியத் தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த செயலகமே. அதை வேறுபெயர்களில் எவரும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். அப்படி பயன்படுத்துபவர்களை தேசத்திற்கு எதிரானவர்களான மட்டுமேபாருங்கள். மேலும் பல ஆதாரங்களுடன் உங்கள் முன் விரைவில் வருவேன்.

நன்றி

என்றும் உங்களுடன்

சு.பரமேஸ்வரன்

11/11/2011

புலத்து செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகளை மக்கள் ஆரம்பத்திலேயே கண்டிக்காமல், கைகட்டி வாய் பொத்தி பார்த்துக் கொண்டிருந்ததன் விளைவு. இன்று அசல், போலி யாரென்று தெரியவில்லை.

இங்கு கூட நெல்லையன் போன்ற சிலர் புலத்துச் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகளை விமர்சித்த பொழுது, கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.

இன்று பிரான்ஸில் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நாள். இப் போரில் உயிர் நீத்த அனைத்து போர் பொது இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதுபோல் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒதுக்குப் புறமான பொது இடத்தில் அனுமதி பெற்றால் ஆயிரக் கணக்கில் செலவழித்து மண்டபம் எடுக்கத் தேவையில்லை. மக்களிடம் வசூல் பண்ண அடிபடத் தேவையில்லை.

பண, பதவி என்று பிரிந்து நின்று அடிபடுபவர்களை ஒதுக்கி விட்டு பொது இடங்களில் ஒன்று கூடி அஞ்சலி செலுத்துவதே சிறந்தவழி. மற்றைய இனத்தவர்களுக்கும் எங்கள் பிரச்சனை தெரிய வரும்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

*

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிரான்ஸில் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நாள். இப் போரில் உயிர் நீத்த அனைத்து போர் வீரர்களையும் நினைவு கூரும் பொது விடுமுறை நாள். பிரான்ஸ் ஜனாதிபதி, உலகப் போரில் பிரான்ஸுக்காகப் போராடி உயிர் நீத்த முகம் தெரியாத போர் வீரர்களுக்காக அமைக்கப் பட்டிருந்த அணையா விளக்கு உள்ள இடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். இது பரிசில் ஒரு பொது இடத்தில் உள்ளது.

பொது இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதுபோல் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒதுக்குப் புறமான பொது இடத்தில் அனுமதி பெற்றால் ஆயிரக் கணக்கில் செலவழித்து மண்டபம் எடுக்கத் தேவையில்லை. மக்களிடம் வசூல் பண்ண அடிபடத் தேவையில்லை.

பிரான்சின் மாவீரர் தினத்துக்கு அவர்கள் இடம் ஒதுக்கியுள்ளனர். ஆனால் எமக்கும் அது போன்று ஒரு இடத்தை தருவார்களா?

ஆயிரக்கணக்கில் ஏன் சில நாடுகளில் லட்சக்கணக்கில் மக்கள் திரளும் இது போன்ற நிகழ்வுகளை புலம் பெயர்ந்த தேசங்களில் பொது இடங்களில் நடாத்துவது சாத்தியமற்றது. அத்துடன் அனுமதியும் தரப்படமாட்டாது. அதைவிட குளிரும் மழையும் பனியுமாக இருக்கும் காலம் என்பதால் பெரும் இடைஞ்சலாக இருக்கும்.

எனக்கு புரியாத ஒருவிடயம் மாவீரர் தினத்தில் 2009க்கு பின் காசு உழைக்கிறார்கள் என்பது. யாராவது காசு கொடுத்தவர்கள் எழுதுங்கள் பார்க்கலாம். அப்படி கொடுக்காமல் எப்படி உழைக்கிறார் உழைக்கிறார்கள் என சொல்லமுடியும்.

அதற்கான செலவு எவ்வளவு தெரியுமா யாருக்காவது?

தமிழரின் உரிமையைக் கொள்ளையிடுபவர்கள்

பணம் கொள்ளையிடப்படுவதாக கோசம் போடுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் எப்போதோ தெரிந்த விடயங்கள்.

இப்படி நடக்காவிட்டால் தான் அதிசயம் .

நான் இப்ப வந்து எழுதவில்லை எப்போதோ எழுதிவிட்டேன்.

"படித்த பொறுக்கிகளும் படிக்காத ரவுடிகளும்" பொறுப்பில் இருக்கின்றார்கள் என்று,அதை முழு தமிழரும் உணரும் காலம் நெருங்குகின்றது .

இதை யாரின் துணையும் இன்றி நீங்களாகவே கண்டுபிடித்தீர்கள?

உங்களுடைய நண்பர்கள் யாரும் உதவிக்கு வரவில்லையா?

நாங்கள் ஒரு இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு கண்டுகொண்டதை நீங்கள் இப்போதாவது கண்டுபிடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

இது எல்லா நாட்டிலும் தான் நடக்குது தமிழர் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? தமிழர் மனிதரை மிஞ்சியவர்களா?

இதை கண்டு பிடிப்பதற்கு ஐந்து அறிவு போதும்..........

எமது ஆறு அறிவை பயன்படுத்தி அதை தடுத்து சமூகத்தை நகர்த்தவேண்டும். அதற்கான கருத்துக்கள் ஏதும் இருந்தால் முன்வையுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.