Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலாம் மீது அமெ. அதிகாரிகள் சோதனை : மத்திய அரசு கண்டனம் _

Featured Replies

வீரகேசரி இணையம் 11/13/2011 4:31:02 PM

abdul-300.jpg அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை, பாதுகாப்பு என்ற பெயரில் அமெரிக்க அதிகாரிகள் சோதனை செய்த முறைமை தொடர்பில், இந்திய மத்திய அரசு கடும் அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி அப்துல் கலாம் அமெரிக்கா சென்றிருந்தார். நியூயோர்க் கில் உள்ள ஜோன் எப் கென்னடி விமான நிலையத்தில் இந்திய விமானம் நின்றது.

இந்நேரத்தில் இங்கு வந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள். யார் இவர் எனக் கேட்டு தொடர்ந்து அவரிடம் சோதனை நடத்த வேண்டும் என்றனர்.

இவர் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். இவரிடம் சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என உடனி ருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை மீறி கலாமின் கோட் சூட் மற்றும் சப்பாத்துக்களை பறித்துச் சென்றனர்.

சில நிமிடங்கன் பின்னர் சோதனை முடிந்தது கொண்டு செல்லுங்கள் என அந்த அதிகாரிகள் கொடுத் தனர். இதற்கு கலாம் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக் கவில்லை.

அமெரிக்க அதிகாரிகளின் கெடுபிடிக்கு கலாம் இரண்டாவது தடவையாக ஆளானதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரியொருவர் கூறுகையில், 'இது மிக துரதிர்ஷ்டமானது. பாதுகாப்பு என்ற பெயரில் இந்தியாவின் உயர் பொறுப்பில் இருந்தவர்களிடம் அமெரிக்கா தனது கெடுபிடிகளைத் தளர்த்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு நடந்துகொள்வதானது இந்திய - அமெரிக்க பரஸ்பர கொள்கைக்கு இடையூறாக இருக்கும். அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் சமீபத்தில் மும்பை வந்திருந்தபோது அவரிடம் இந்தியாவில் எவ்வித சோதனையும் நடத்தப்படவில்லை. இவருக்கு விலக்களிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=34908

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள அதற்கு முழு உரிமையும் இருக்கிறது..! :rolleyes: இதில் தலையிட இந்தியாவுக்கு எந்த அருகதையும் இல்லை..! :lol::icon_mrgreen:

இவரையும் புதுடெல்லி தனது சீமானை, வைகோவை, நெடுமாறனை உள்ளடக்கிய பட்டியலில், ஒரு தமிழர் என்ற ரீதியில், உள்ளடக்கி இருக்கலாம் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கலாமோ, கந்தசாமியோ யாராக இருந்தாலும் ஒரே மாதிரியான கவனிப்பு தான் செய்யப்படும். :D

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிட்டும் இவர் அமெரிக்க அதிகாரிகளிடம் ஊழல் எதிர்ப்பு உறுதி மொழி எடுக்க வேண்டி இருந்திருப்பார்.. வெள்ளைகார அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் நைசக எஸ்கேப்பு :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு 80 களில் சிறிலங்கா தலை நகரில் ஈழத்துக்காக போராடிய விடுதலை இயக்கங்கள் குண்டுகள் வைக்காமல் பல குண்டுகள் வெடித்தன. இவற்றில் 10 க்கு மேற்பட்ட குண்டு வெடிப்புகளுக்கு றோ தான் காரணம் . சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க குண்டுகள் வைத்தது றோ. இந்தியர்கள் யாராக இருந்தாலும் கட்டாயம் சோதனை செய்யப்படல் வேண்டும். தாங்களே குண்டை வைத்து உலகில் ஐன நாயக நாடு என்று தாங்கள் மட்டுமே பீத்திக் கொள்கிற நாடு இந்தியா.

இதை பார்த்தால் சிரிப்புத்தான் வருது.

எந்தச் சொதினைக்கும் தமிழன் பயப்படமாட்டான்.

கலாமுக்கு இது கொஞ்சம் அசவ்காரியமாக இருந்தால் அடிக்கடி கொழும்புக்குப் போனால் சிங்களவன் பழக்கிவிடுவான்.

கொழும்புக்கும் போகவேண்டாம். மீன் பிடிக்கிரக்களோட வல்லத்தில போனாலே போதும்.

நியூயார்க் விமானநிலையத்தில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமிற்கு நடத்தப்பட்ட சோதனைக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்ட சம்பவம் ஒன்றும் முக்கியமான விசயமில்லை, மறந்துருங்க, மறந்துருங்க, பேசுமளவுக்கு தகுதியானதல்ல அது என்று கலாம் தெரிவித்துள்ளார்.

80 வயதான அப்துல்கலாம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். பின்னர் நாடு திரும்பும் போது நியூயார்க் ஜான் எப். கென்னடி ஏர்போர்ட்டில் முன்னாள் குடியரசுத்தலைவர் என்றும் பாராமல் அவருடைய கோட், காலணி உள்ளிட்டவற்றை அவிழ்த்து சோதனை செய்தனர்.

அமெரிக்கா மன்னிப்பு

கலாமை இதுபோல அமெரிக்கர்கள் அவமரியாதை செய்வது இது கடந்த 3 ஆண்டுகளில் 2வது முறையாகும என்பதால் நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை சார்பில் அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த செயலுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையும் மன்னிப்பு கோரியது.

இந்தநிலையில் மேற்கு வங்கமாநிலத்தில் நடைபெற்றுவரும் ஐஐடி பொன்விழாவில் பங்கேற்பதற்காக அப்துல்கலாம் இன்று கொல்கத்தா சென்றிருந்தார். அப்போது அமெரிக்காவின் செயல் குறித்தும் மன்னிப்பு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

கலாம் பெருந்தன்மை

அது குறித்து பதிலளித்த கலாம், மறந்துருங்க, மறந்துருங்க, அது ஒன்றும் மிகப்பெரிய விசயமில்லை,. பேசுவதற்கு உகந்ததல்ல என்று தனது டிரேட் மார்க் சிரிப்புடன் கூறினார் கலாம்.

இந்தியா மின்தேவை நிறைவேறும்

பின்னர் அவரிடம் கூடங்குளம் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, கூடங்குளத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அணுமின்நிலையம் பாதுகாப்பானது. இந்தியாவிற்கு 2 ஆயிரம் மெகாவாட் மின்தேவை உள்ளது எனவே கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்பட வேண்டியது அவசியம் என்றார்.

அணு உலையை பார்வையிட்டவரையில் நவீன முறையில் அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அணு உலையில் பாதுகாப்பு குறிந்து சந்தேகம் எழுப்புபவர்கள் யாராக இருந்தாலும் தன்னை சந்திக்கலாம் என்றும் அப்துல்கலாம் தெரிவித்தார். முதல் அணு உலை டிசம்பர் மாத இறுதியில் செயல்படத் தொடங்கும் என்றும் எதிர்பார்ப்பதாகவும் அவர்.

http://www.alaikal.com/news/?p=87849

  • கருத்துக்கள உறவுகள்

பின்னர் அவரிடம் கூடங்குளம் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, கூடங்குளத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அணுமின்நிலையம் பாதுகாப்பானது. இந்தியாவிற்கு 2 ஆயிரம் மெகாவாட் மின்தேவை உள்ளது எனவே கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்பட வேண்டியது அவசியம் என்றார்.

அணு உலையை பார்வையிட்டவரையில் நவீன முறையில் அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அணு உலையில் பாதுகாப்பு குறிந்து சந்தேகம் எழுப்புபவர்கள் யாராக இருந்தாலும் தன்னை சந்திக்கலாம் என்றும் அப்துல்கலாம் தெரிவித்தார். முதல் அணு உலை டிசம்பர் மாத இறுதியில் செயல்படத் தொடங்கும் என்றும் எதிர்பார்ப்பதாகவும் அவர்.

இந்தியா வல்லரசாக வேண்டும் என்றால் அது மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும். அதற்கு அணுமின் நிலையம் கட்டாயம் வேண்டும். இதனால எதிர்காலத்தில் பல ஆயிரக் கணக்கான உயிர்கள் போகத் தான் செய்யும். அது தெரிந்து தானே கேரளா இந்த திட்டத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் வேண்டாம் என்று சொன்னதால் தானே அது தமிழ் நாட்டுக்கு வந்தது. மின்சாரம் இலங்கைக்கு கொடுத்தாலும்,வேற எந்த நாட்டுக்கு கொடுத்தாலும் புண்ணிய பூமியாம் இந்திய நாட்டுக்காக சாகும் பாக்கியம் தமிழ்நாட்டு தமிழருக்கு மட்டுமே கிடைத்துள்ளது. முன்பு ஈழ தமிழருக்கு கிடைத்தது . தமிழினம் அதை நினைத்து பெருமை அடையவும். ஜெ ஹிந்த். :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=75546

கூடங்குளம் அணு மின்சாரம் இலங்கைக்கு supply செய்வதற்காகவே..!!! ஆதாரம் இதோ... !! ...

The link: http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=75546

Progress Regarding Undersea Power Transmission Line between India and Sri Lanka A Memorandum of Understanding was signed on 9th June, 2010 between the Government of India, Government of Sri Lanka, Power Grid Corporation of India Limited(PGCIL)and Ceylon Electricity Board(CEB)for carrying out the Feasibility Study for interconnection of the India-Sri Lanka Electricity Grids, which inter-alia includes setting up of High Voltage Direct Current Transmission system between the two countries involving under sea transmission as well.

Giving this information in a written reply to a question in Rajya Sabha today, Minister of State for Power Shri K.C.Venugopal said that as per the MOU, both PGCIL and CEB are ‘Executing Agencies’ for carrying out the above mentioned study and would compile data/details of their assigned activities and jointly complete the entire Feasibility Study. He said PGCIL would carry out all activities related to the land portion which falls in India and the entire sea portions, whereas CEB would carry out all activities related to Sri Lankan land portion. The Minister informed that the PGCIL has already completed the assigned work as per the MOU.

Shri Venugopal said that while CEB is carrying out the works assigned to it, it has placed a Letter of Award (LoA) on PGCIL on 16th August 2011 for carrying out some portion of their work. He said the PGCIL has started the work as per LoA of CEB. The Minister added that the entire work related to this Feasibility Study is expected to be completed by 31st December 2011, as agreed to in the Task Force and Steering Committee Meetings held on 3-4 August, 2011 in New Delhi.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலாமோ, கந்தசாமியோ யாராக இருந்தாலும் ஒரே மாதிரியான கவனிப்பு தான் செய்யப்படும். :D

:lol: :lol: :lol:

கலாமுக்கு அவமரியாதை செய்த அதிகாரிகள் பதவிநீக்கம் -அமெரிக்கா அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அமெரிக்கா சென்றபோது, பரிசோதனை என்ற பெயரில் அவருக்கு அவமரியாதை இழைத்த இரண்டு

அதிகாரிகளை பதவிநீக்கம் செய்து அமெரிக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சமீபத்தில் அப்துல்கலாம் அமெரிக்கா சென்ற போது நியூயார்க் விமான நிலையத்தில் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் கடுமையான சோதனை மேற்கொண்டனர்.சோதனை முடிந்து அவர் விமானத்தில் அமர்ந்த பிறகும் உள்கோட்டையும், ஷூவையும் கழட்டி எடுத்துச்சென்று சோதனை செய்தனர். இந்திய அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மத்திய அரசு கொடுத்த புகாரை தொடர்ந்து அமெரிக்க அரசு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியது. இதனைத் தொடர்ந்து கென்னடி விமான நிலையத்தில் பணிபுரிந்த சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளையும் தற்காலிக பணிநீக்கம் செய்து அமெரிக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

http://www.alaikal.com/news/?p=88149

அப்துல் கலாம் ஒரு இந்தியனாக இருப்பதால் தான் இந்த நிலை.

ஏனெனில் இந்தியர்கள் இன்னும் காட்டுமிராண்டிகளாகவே இருப்பதை ஈழப் படுகொலைகளின் பின்னர் உலகம் நன்கு அறிந்துள்ளது.

Edited by ஆராவமுதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.