Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரைப் பிரிந்த புலம்பெயர் தமிழனின் ஏக்கம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தேசத்தில் வாழும் என் உறவினர் ஒருவரின் மேடை நிகழ்ச்சி ஒன்றுக்காக என்னால் புனையப்பட்ட வரிகளுக்கு அவரே குரல் வடிவம் கொடுத்துள்ளார். அதன் வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அக்காணொளியில் அவர் பிறந்த மண்ணே பின்னணியாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் காட்டப்பட்டுள்ள அரசமரம் இன்று எம்மோடு இல்லை.

Imraan0282.jpg

ஒரு முறை

என் மண் போக வேண்டும்

விடுமுறை

தான் ஒன்று தாறீரோ

நான் தின்று வழ்ந்த மண்ணது

எனைத் தின்னும்

பாக்கியம் இழந்திடுமோ

எட்ட நின்று ஊர் பார்த்தால்

பச்சை கொடியசைக்கும் ஆலமரம்

காலாற ஒரு கல்

கவ்வுகின்ற தென்றல்

முப்பொழுது போனாலும்

முகம் சுழிக்கா திண்ணை அது

ஒரு முறை

என் மண் போக வேண்டும்

விடுமுறை

தான் ஒன்று தாறீரோ

திட்டம் போட்டு அறுந்த விழுதால்

பிட்டம் தெறித்து விட

சொட்ட சொட்ட அழுதது

மறக்கவில்லை

அங்கே

அற்ப காலம் தங்கினாலும்

என்னை

சிற்பம் போல் செதுக்கிய

கற்பகத் தான் காலடி தான் என் சொர்க்கம்

ஒரு முறை

என் மண் போக வேண்டும்

விடுமுறை

தான் ஒன்று தாறீரோ

நடு வளையில் ஏணை கட்டி

என்னை

சீரங்கம் சீராட்டிய மாளிகை

ஊரில் ஓரம் போய் இருப்பதாய் அறிந்தேன்

நெஞ்சு பதறுதம்மா

பிஞ்சுத் தோடம்பழத்தை

அஞ்சாமல் பிடுங்கியதும்

புழு தின்ற இலந்தையை கூட

புழுகி புழுகி சுவைத்ததும்

இதே கைகள் தானே

அந்த மண்ணில்

ஒரு பிடி அள்ளத் தவறின்

அறுத்தெறிவேன் என் கரங்களை

ஆண்டவனே

ஒற்றை வரம் தாரும்

ஒரு முறை என் மண் அள்ள

மறுப்பின்றி அனுமதி தாரும்

உன் கால் தொழுது

காலனிடம் கொடுத்திடுவேன்

என்னுயிரை

ஒரு முறை

என் மண் போக வேண்டும்

விடுமுறை

தான் ஒன்று தாறீரோ

குறிப்பு - நண்பர்கள் யாராவது இப்பதிவை திரட்டியில் இணைத்து விடுங்கள்.

http://www.mathisutha.com/2011/12/blog-post_14.html

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள், நல்ல ஒரு கவிதை!

தாய் மண்ணை நோக்கிய ஏக்கத்தை அழகாகச் சொல்கின்றது, கவிதை.

உங்கள் கவிதையின் இசை வடிவத்தை இங்கு இணைக்க முயற்சிக்கின்றேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அய்யா நான் கவிஞன் அல்ல படித்ததில் பிடித்தது இனைத்தேன்(copy paste) அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

அழகான வரிகள், புலம்பெயர்ந்தவர்களின் மனக்குமுறலின் வெளிப்பாடு கவிதைவரிகளில்....

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கவிதைகளிலும் கதைகளிலும் தான். நிஜத்தில்.. ஊருக்குப் போக.. எந்த புலம்பெயர் தமிழனுக்கும் விருப்பமில்லை. காரணம்.. போருக்கு முன்னரே புலம்பெயர் தமிழர்களில் பலர் பொருளாதார அகதிகளாக புலம்பெயர தயாராக இருந்தவர்களே..! அந்த வகையில்.. இந்தக் கவிதைகளுக்குள் இருக்கும்.. உண்மை உணர்வுகளை தேசத்தின் மீதான பற்றுதலின் வெளிப்பாடாக அதிகம் கணிக்க முடியவில்லை. இருந்தாலும்.. ஒரு ஒப்புக்கு அப்படி இருப்பதாக கூட்டத்தோடு கூட்டமாக நின்று கும்மாளம் அடிக்கவே முடிகிறது..! மற்றும்படி வரிவடிவில்.. கவிதை அழகு..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கவிதைகளிலும் கதைகளிலும் தான்.

நிஜத்தில்.. ஊருக்குப் போக.. எந்த புலம்பெயர் தமிழனுக்கும் விருப்பமில்லை. காரணம்.. போருக்கு முன்னரே புலம்பெயர் தமிழர்களில் பலர் பொருளாதார அகதிகளாக புலம்பெயர தயாராக இருந்தவர்களே..! அந்த வகையில்.. இந்தக் கவிதைகளுக்குள் இருக்கும்.. உண்மை உணர்வுகளை தேசத்தின் மீதான பற்றுதலின் வெளிப்பாடாக அதிகம் கணிக்க முடியவில்லை. இருந்தாலும்.. ஒரு ஒப்புக்கு அப்படி இருப்பதாக கூட்டத்தோடு கூட்டமாக நின்று கும்மாளம் அடிக்கவே முடிகிறது..!

மற்றும்படி வரிவடிவில்.. கவிதை அழகு..! :):icon_idea:

இவை பற்றிய தங்களது புரிதலினை மாற்ற நான் என்ன செய்யவேண்டும்.

தீக்குளித்தால்தான் நம்புவீர்களா??? :( :( :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

"எல்லாம் கவிதைகளிலும் கதைகளிலும் தான். நிஜத்தில்.. ஊருக்குப் போக.. எந்த புலம்பெயர் தமிழனுக்கும் விருப்பமில்லை."

___

அண்ணா நெடுக்கண்ணை! ஊருக்கு போக உங்களுக்கு விருப்பமா இல்லையா என்பதை மட்டுமே சொல்ல முடியும், மற்றவர்கள் விருப்பத்தைப்பற்றி எப்படி நிங்கள் உறுதிப்பட கூறுவீர்கள்.

___

இந்த கவிதைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்புகள் சில உள்ளன , இந்த கவிதை இங்குள்ளதை பார்க்கும்போது ஆச்சரியமாகவுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

லிங்கமண்ணா ஒருவேளை இந்தக்கவிதையை எழுதிய மதிசுதாவும் உங்களோடு இந்தக் கோயிலடியில் ஒட்டுக்குந்தியவரோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

"லிங்கமண்ணா ஒருவேளை இந்தக்கவிதையை எழுதிய மதிசுதாவும் உங்களோடு இந்தக் கோயிலடியில் ஒட்டுக்குந்தியவரோ?"

___

குந்தியிருக்கலாம் ஆனால் என்னுடன் சேர்ந்து குந்தியிருக்க சந்தர்ப்பமே இல்லை, உந்த கவிதையில் வரும் காட்சிகள் நான் பிறந்த(இலக்கணாவத்தை) ஊரைச்சேர்ந்தவை.

2011-12-12.png

♔ம.தி.சுதா♔

மகேஸ்வரி தில்லையம்பலம் சுதாகரன் ஆகிய நான் கடந்த ஒன்றரை வருடங்களாக யாழ்ப்பாணத்திலிருந்து மதியோடை என்ற வலைத் தளத்தினூடாக எனக்குத் தெரிந்த அனைத்து துறைகளில் இருந்தும் எழுதிவருகிறேன். ஈழப் போரால் இலட்சியக் கல்வியைத் தொலைத்து நடுவீதியில் நிற்கும் ஆயிரம் ஆயிரம் இளைஞர்களில் நானும் ஒருவன். இந்த உலகத்தில் போரையும், போதைப் பொருளையும் அதற்காதரவானோரையும் களைய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தான் எழுத வந்தேன். இறுதிவரை அது தான் என் இலக்காகும். இந்தச் சந்தர்ப்பத்தை கொடுத்து என் ஏறுமுகத்திற்கு ஏணி வைத்திருக்கும் தமிழ்மணத்திற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Tamil+poets+and+writers.jpg

கடந்த நூற்றாண்டிலிருந்து தமிழன் என்று ஒரு சொல் சொன்னால் ஈழம் என்ற ஒரு தேசம் தான் அனைவர் கண்ணிலும் வரும். அந்தளவுக்கு அந்தச் சொல்லுக்கே வலுச் சேர்த்தவர்கள் ஈழத்தமிழர்களே.

இது என்றைக்குமே அழிக்க முடியாத வரலாறாகும். அந்தச் சொல்லுக்கு வலுச் சேர்க்க முழுத் தமிழர்களும் பங்கெடுத்தாலும் அதன் வடுக்களை முற்று முழுதாகத் தாங்கி நிற்பவர்கள் வன்னித் தமிழர்களே (வன்னியில் வசித்தோரும் உள்ளடங்கும்). அவர்களது மீள் கட்டுமானத்திற்காக பல புலம் பெயர்ந்த தமிழர்கள் உழைக்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் உள்ள என் உறவினர் ஒருவர் எம் மக்களுக்கு உதவுவதற்காக சிறிய தூரம் பஸ்சில் செல்ல வேண்டியிருந்தால் அதை நடந்து கடந்து விட்டு அந்தப் பணத்தை இங்கு அனுப்புவதாகக் கூறும் போது என் மெய் சிலிர்த்தது.ஒரு சில புலம்பெயர்ந்தவர்கள் எம்மை வைத்து பணம் சேகரித்து ஏப்பம் விட்டுக் கொண்டிருப்பதும் மன வருத்தமே.

இந்தத் தமிழ் நாட்டு பிரபலங்கள் இருக்கிறார்களே அவர்களில் பெரும்பாலனவர் என்ன செய்கிறார்கள் தெரியுமா? ஈழத்து ஏக்கத்தில் எம்மீது அப்பழுக்கற்ற பாசம் கொண்டிருக்கும் தமிழக மக்களை தம் பணம் சம்பாதிக்கும் கருவிகளாக மாற்றி விட்டார்கள்.இப்போது புதிய சந்தைப்படுத்தால் முறை என்னவென்றால் தம் படங்களில் எப்படியாவது ஈழத்தைப் புகுத்துவதாகும்.

7 ம் அறிவில் அந்த வசனத்தைப் புகுத்தும் போதே எனக்குக் கடுப்பேறியது. கடுப்பேறியதற்குரிய காரணம் அந்த வசனத்தில் வந்த ஒரு பகுதியான “அடிக்கணும் திருப்பி அடிக்கணும்” எல்லாரும் இதைத் தானே சொல்கிறீர்கள். அடிப்பதென்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இது ரம்போ படமல்ல கல்லெறிந்து ஹெலி (உலங்கு வானூர்தி) விழுத்துவதற்கு. எவ்வளவு காலம் தான் எங்களை உசுப்பேத்தி உசுப்பேத்தியே குளிர் காய்வீர்கள். அந்த வரிகளுக்காகவே புலம் பெயர் தேசத்தில் படம் பார்க்காதவனையும் உதயநிதி பார்க்க வைத்து விட்டார். அதற்காக நான் இட்ட முகநூல் கருத்து இது தான்.

7ம் அறிவு விளம்பரம் - அடிக்கணும் திருப்பி அடிக்கணும் ஒருத்தனை 9 பேர் தாக்கினது வீரமில்ல துரோகம்... அடுத்து உதய நிதியின் பெயர் ஒட்டல்.. எப்படி இருக்கிறது விளம்பரம்.. பணத்துக்காக எதுவும் செய்வாங்களாம் நாங்க அதைத் தூக்கி வச்சு வீர வசனம் பேசி சாகணுமாம்.. திரு உதயநிதி அவர்களே அந்த 9 பேரில் உங்க தாத்தாக்கும் அப்பனுக்கும் பெரும் பங்கிருக்கிறதை மறந்திட்டிங்களா? அந்த நேரம் ஒருவர் முதல்வர், மற்றவர் மேயராம் இப்ப வந்துட்டாங்க பணம் உழைக்க... தயவு செய்து மற்றவங்க உணர்வை வித்துப் பிழைக்காமல் உங்க உழைப்பை விற்று பிழையுங்கள்.

poet+yugabharathi.jpg

ராஜப்பாட்டை படத்தில் யுகபாரதி ஒரு வசனம் எழுதியிருந்தார். அதுவும் காதல் பாடலில், அதை ஓரளவு நான் பொறுத்துக் கொண்டேன் காரணம் அந்தச் சொல்லை மறக்கப்படமூடியாத இசையுடன் கூடிய பாடல் வரிகளுக்குள் புகுத்தி விட்டாரே என பொறுத்துக் கொண்டேன். ஆனால் அதைக் கூட பலரால் ஏற்றுக் கொள்ள முடியாவில்லை. அதற்கு யுகபாரதி தனது வலைத்தளத்தில் என்ன கூறியிருக்கிறார தெரியுமா?

“பூவெல்லாம் உன்வாசம் திரைப்படத்தில் காதல் வந்ததே பாடலில் கவிஞர்.வைரமுத்து இலங்கையில் நடக்கின்ற போரை நிறுத்து காதல் வந்ததே என்று எழுதியதைப் போலத்தான் இதுவும்.தனி நாடு என்னும் இலக்குக்காக முள்வேலியும் முடிவில்லா போரையும் தொடர வேண்டிய இச்சூழலில் பாடலின் அர்த்தத்தில் பிழை ஏற்படுத்தி தமிழ் உணர்வுகளின் இதயத்தை காயப்படுத்த வேண்டாமே.இப்பாடலை உச்சிமோர்ந்து வரவேற்கும் தோழர்களிடம் இப்பாடலுக்கான மெய்யான பொருளை கேட்டுத் தெளிவு பெறுங்கள்.கருத்துக் கூற வேண்டும் என்பதற்காகக் கூறப்படும் கருத்துக்கள் களங்கமுடையன என்பதை யாவரும் அறிவோம். “

அப்படியானால் நீங்களும் போரை விரும்புகிறீர்களா யுகபாரதி. போர் என்றால் எப்படி இருக்குமென்று தெரியுமா? குருதி எப்படி ஒரு வெடுக்கு நாற்றம் வீசும் என்று மணந்திருக்கிறீர்களா?

poet+vairamuthu+family.jpg

இவர் சொல்வதற்காக வைரமுத்துவைக் கூட நான் முன்னிலைப்படுத்தப் போவதில்லை காரணம் அவரும் ஒரு முறை படித்திருந்தார் “புலிக்கொடி பொறித்த சோழமாந்தார்கள் எலிக்கறி பொரிப்பதுவோ“ என்றார். நான் அப்போதே ஒரு பதிவில் இட்டேன். வன்னித் தமிழன் எலிக்கறி பொரித்து வைத்திருக்கிறன் அதை பூனையிடம் கொடுக்க கார்க்கியை அனுப்புறிங்களா? என்று கேட்டேன். இவை இடம்பெற்றது செல்வராகவன் படமான “ஆயிரத்தில் ஒருவன்“ படத்திலாகும். அது கூட மறை முகத்தில் ஈழத்தின் இறுதிப் போரை மையப்படுத்தி இணையத்தில் உருவான கதைகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படமாகும்.

poet+thamarai.jpg

இதே போலத் தான் கவிஞர் தாமரையும் ஒரு கவியில் தலைவன் வரவேண்டும் மீண்டும் ஈழம் மலர வேண்டுமென்று ஒரு முறை கவி புனைந்திருந்தார். அதற்கு நான் கருத்திட்டிருந்தேன் அவர் வந்தால் உங்கள் கணவரை போருக்கு அனுப்பவிர்களா ? என்று கருத்திட்டேன். எதையும் சொல்லில் சொல்லி விட்டுப் போகலாம் அதை அனுபவிக்கும் போது தான் தெரியும்.

அதற்காக கவிஞர்கள் போருக்கெதிராக கவி புனையவில்லை என்று நான் கூற வரவில்லை. “ஈழத்தில் போர் ஓய வேண்டும்“ “சந்திரிக்காவும் பிரபாகரனும் சம்மந்தியாகணும்“ என்றெல்லாம் பொதுமைப்பாடான வசனங்கள் எழுதப்பட்டிருக்கிறது.

மேற்குறிப்பிட்டுள்ள கவிஞர்களே நான் உங்கள் கவி வரிகளை அதிகமாய் நேசிக்கிறேன்.ஆனால் போர் என்ற அந்தக் கொடிய அரக்கனை நான் என்றுமே வழி மொழியப் போவதில்லை. இது பற்றிக் கதைத்ததற்காக தந்தையுடனேயே கருத்து முரண்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் கதைக்காமல் இருந்திருக்கிறேன்.உங்கள் எழுத்துக்கள் என்றும் பலம் வாய்ந்தவை அதை போருக்கெதிராக மட்டுமே பிரயோகியுங்கள் இன்னும் உங்கள் கவி வலுப்படும்.

என் சக தமிழ் உறவுகளுக்கும் ஒரு அன்பான வேண்டு கோள் இப்படியான வசனங்களைத் தூக்கிப் பிடித்து நீங்களும் பரப்புரையில் ஈடுபட்டு அவர்களை பணக்காரர்கள் ஆக்க முனையாதிர்கள். இது ஒவ்வொருவரதும் உணர்வு அது விலைமதிப்பற்றது அதை மற்றவன் பாழாக்க அனுமதிக்கக் கூடாது.

பதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...

user.png ♔ம.தி.சுதா♔

வணக்கம் உறவுகளே....

நான் ஏன் இப்படி ஒரு பதிவை எழுத வேண்டும் எனக்கே மனமில்லை தான். என் பதிவுகளுக்காக பலரிடம் பல வார்த்தைகளில் ஏச்சு வாங்கியிருக்கிறேன் ஆனால் நான் யாரையும் ஏசப் போவதில்லை காரணம் என் எழுத்துக்களுக்கு நான் தான் சொந்தக்காரன் என் தாயாரல்ல. நான் இப்போதிருக்கும் நிலமை தங்களுக்கே தெரியும் பதிவுலகத்திலிருந்து விலத்தியே இருக்கிறேன் தட்டச்சுக் கூட மடியில் வைத்தே தட்டச்சிட வேண்டிய நிலை. சரி அப்படி என்ன தான் நடந்தது.

sprit.gif

முந்த நாள் (வியாழன்) எனது இரண்டு பதிவுக்கு அந்த கற்புக்கரசி SON OF BITCH என அடித்திருந்தார். இதே வாக்கியத்தை ஒரு ஆண் பாவித்தால் கூட ஓரளவு ஏற்றுக் கொண்டிருப்பேன் காரணம் பல அந்நிய நாட்டுவாசிகளுக்கு குடியுரிமை பெறுவதற்காக சொந்த நாட்டுக்காரன் சொற்றிலேயே மண்ணள்ளிப் போட்டு வாழ்கிறார்கள் அவர்களுக்கு வன்னியின் உண்மை நிலவரம் சொல்லி மற்றவருக்கு போர் மீது உள்ள பற்றுதல் மாயையை அழிப்பது எள்ளளவும் பிடிக்காது அதனால் அப்படி ஏசக் கூடும். அம்மா நாட்டுப்பற்றாளரே உங்கள் கோபத்தை என் மீது காட்டுங்கள்.

உண்மையாக இது வரை எந்தவொரு யாழ்ப்பாணத்துப் பெண்ணும் தூசணம் சொல்லி நான் கேட்டதில்லை (அதற்காக மற்ற ஊரை சுட்டலிங்க அந்தப் பொண்ணும் யாழ்ப்பாணம் தான் அதனால் சொல்கிறேன்) சில வேளை அந்நிய நாட்டு வாசம் அந்த பழக்கவழக்கத்தை பழக்கியிருக்கலாம்.

இதே பெண் தான் சென்ற மார்கழி வீட்டு வாசலில் கோலம் போடுறதை விட்டு மங்குனி அமைச்சர் மற்றும் சேட்டைக்காரன் புளொக்கில போய் காறித் துப்பி தலையில் சாணியால் தப்பி அனுப்பப்பட்டார்.

இந்த உலகத்திலேயே சுதாவின் கருத்துக்களுக்குப் பயந்து கருத்து மட்டுறுத்தலுக்கு மாறிக் கொண்ட ஒரே பதிவர் இந்த இரட்டைச் சத பிஞ்ச இடுப்பழகியாகத் தானிருக்கும். தம்பி கூர்மதியன் கூட அவரோட புளொக்கில் என்ன நடந்தது என கேட்டிருந்தார் (அந்த கருத்தையும் காக்கா கொண்டு போயிட்டுது) நான் நாகரிகமாகவே சொன்னேன்

NOTURNO_ARTSLA.gif

“என்னை ஏசுவதற்கு தங்களுக்கு 100 வீத உரிமையிருக்கிறது காரணம் என் எழுத்துக்களுக்கு நான் தான் உரிமையாளன் ஆனால் என் அம்மாவல்ல” அதற்கவர் வலைச்சரத்தில் பதிலிட்டிருந்தார் “தனக்கு யாரும் அறிவுரை சொல்லத் தேவையில்லையாம்”.

ஏன் நான் கடுப்பானேன்.

நேற்று காலை (வெள்ளிக் கிழமை) என்னை வைத்தியசாலை அழைத்துச் செல்லும் நண்பன் வராத காரணத்தால் சரி யாருக்காச்சும் சுடு சோறு கொடுப்பமா என போனால் சிபி செந்தில்குமாரின் பதிவு தட்டுப்பட்டது அங்கே(பதிவின் தொடுப்பிற்கு இங்கே சொடுக்குங்கள்) நானும் , விக்கி உலகமும், நிரூபனும், சீபி யும் கும்மியடித்துக் கொண்டிருந்தோம் அப்போ நிரூபன் திடீரென கேட்டார் எங்கு சுதா உங்களது புறோபைல் வருகுதில்லை என்றார். பதை பதைத்தப் போய் டாஸ்போட்டை திறந்தால் ஏதோ தவறு என சொன்னது புளொக்கை பார்த்தேன் அந்த யுஆர்எல் இல் புளொக் இல்லை என்றது. குழம்பி விட்டேன் உடனே நிருபனை உதவி கேட்டேன் எனது கடவுச் சொல்லைக் கொடுத்தேன் அதற்கு முன் எனது மெயிலில் இருந்து sign out all other sessions ஐ கொடுத்தேன் நிருபனின் வேகம் என்னை சிலிர்க்க வைத்தது ஏற்கனவே சூரியாகண்ணன், சசிக்குமார் போன்றவர்களின் புண்ணியத்தில் எனது நிரந்தர கைப்பேசி இலக்கம் மற்றும் கடவுக் கேள்வி என்பவற்றைக் கொடுத்திருந்தேன் அதுமட்டுமல்ல மாற்றீட்டு மின்னஞ்சலும் நினைவில் இருந்தது 2 நிமிட போராட்டம்.. ஒரு சத்திர சிகிச்சை செய்யும் மன நிலை 2 மணித்தியாலம் போல இருந்தது காதலி, குழந்தை, நண்பன் எல்லாம் என் புளொக் தானே. கூகுல் நிருபனை கேட்ட verification code எல்லாவற்றையும் அனுப்பிக் கொண்டிருந்தேன். நிருபன் சொன்னார் இப்போ ஓடிப் போய் புளொக்கின் பயனர் பெயரை மாற்றுங்கள் என்றார். அவர் நுழையும் போது சரியாக ஒரு நிமிடத்திற்கு முன் அவஸ்திரேலியாவின் பேர்த் நகரிலிருந்து உள் நுழைந்திருக்கிறார்களாம்.

திருடரே புளொக்கை திருடினால் முதலில் only me கொடுப்பதை விட கணக்கை உங்கள் வசப்படுத்தணும் அதுக்குப் பிறகு நீங்கள் விருப்பம் போல edit பண்ணலாம். ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் அவுஸ்திரேலிய மகாராணியாரே நாங்கள் காட்டுக்குள் தான் வளர்ந்தவர்கள் அனால் அதி உச்ச நாகரீகமும் உலகில் பிழைப்பை ஓட்டக் கூடிய தொழில் நுட்ப அறிவும் கொண்டவர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

எங்களுக்குள் நடந்த பிரச்சனை என்ன ?

1 - வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல் என்ற பதிவை சென்ற வருடம் போர்க்கால சூழலில் நாங்கள் பட்ட அவலத்தை போருக்கெதிரான பிரச்சாரத்திற்காக எழுதியிருந்தேன்.

amami+1.jpg

அவர் கருத்தை பார்த்தீர்களா ?

நான் பிரபுதேவா காதலித்த பெண்களை பற்றி எழுதுகிறேனாம். உங்களால முடிஞ்சால் எழுதுங்கஅப்புறம் ஏன் பொறாமை “ஐயர் வீட்டில் கோழி முட்டை விற்கக் கூடாதென அவுஸ்திரேலிய ஐதிகம் சொல்லுதா ?”

ஹலோ மேடம் நாங்க பெயரெடுக்கணுமுண்ண வன்னி என்று பெயர் மட்டும் போடத் தேவையில்லை காரணம் அதன் கந்தக நெடி மாறாத மனிதர்கள் உங்களைப் போல் இங்கு பூசி மெழுகிக் கொண்டு இருந்துவிட்டு விமான நிலையத்தில் விசா குத்திய பிறகு நாட்டுப் பற்று ஒட்டிக் கொண்ட மனிதர்களில்லை எழுத வெளிக்கிட்டால் சில வேளை உங்க குடியுரிமையிலும் மண் விழலாம் மறந்திடாதிங்கோ.

புலிகள் இருக்கும் வரை பொத்திக் கொண்டிருந்தவர்களாம் நாங்கள். எங்களைப் பற்றி கதைக்க முதல் உங்களைப் பற்றி சிந்தியுங்கள் பற்றுக் கொண்ட நீங்கள் மட்டும் என் தூர தேசம் ஓடினீர்கள்.

2 - சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு என்ற பதிவில் எம் மாற்றீட்டுத் திறமையை காட்ட முகாமில் சில மக்கள் செய்யததை எழுதியிருந்தேன்.

“Son of a bitch.

வன்னி என்று போட்டாலே எல்லோரும் வந்து படிப்பார்கள் என்ற எண்ணத்தில் யாரோ ஒரு மடையன் எழுதி இருப்பதை யாருமே தட்டிக் கேட்பதில்லையா?

பிறந்த பிள்ளைக்கு போட கொலோன் கிடைப்பதே கஷ்டம். இதில இவர் சாராயம் காய்ச்சுவாராம்.

கசிப்பு காசிறவங்களை இயக்கம் பிடிச்சு சிறையில் போடுவது தெரியாதா?

யாரோ ஒரு லூசன் இப்படி செய்ததை வன்னி மக்கள் எல்லாம் செய்த மாதிரியான மாயையை ஏற்படுத்தும் படி எழுதி இருப்பது கண்டனத்துக்குரியது.

இதில் சிலதைச் சொல்லலாம் பலதை சொல்ல இயலாதாம்.”

வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய புண்ணியவானை சொல்லவேண்டும். இந்த மாதிரி கண்றாவியான எழுத்து கண்ணில் படாமல் இருந்திருக்கும்.

பாடித்த இரண்டு பதிவுகளுமே போதும் எவ்வளவு புரட்டு இங்கே இருக்கிறது என்று. இதற்கு மேலும் படிப்பதற்கு விருப்பமில்லை.

என் உடனடி ரியாக்சனை உமக்கு தெரியப்படுத்திய ஒரு சின்ன சந்தோசத்துடன் போகிறன்.

சகோதரம் என்று எல்லாம் என் பதிவில் வந்து பின்னூட்டம் போடவேண்டாம். இப்படி ஒரு சகோதரம் இருந்தால், அவனை கொல்லுவேனே தவிர விட்டுவைக்க மாட்டேன்.

இது மட்டுமல்ல நான் வன்னி மக்களை கேவலப்படுத்துகிறேனாம் என வலைச்சரத்தில் கூறியிருக்கிறார். திருமதி அவர்களே நான் நுனி கிளையில் இருந்து அடி கிளையில் வெட்டினால் உமக்கென்ன. விளங்குகிறது எங்களின் நிழலில் தானே உங்க பொளப்பு ஓடுது. அவா எதுவும் எழுதுவாவம் தப்பில்லை ”நசமா போக” ”கண்ட கழுதைக்கெல்லாம் எழுதும் விக்கிபீடியா” இதெல்லாம் அவரது வசனம் தான் அப்படியானால் அந்த கழுதைகள் பட்டியலில் தானே வன்னி மக்களும் விக்கிபீடியாவில் இருக்கிறார்கள்.

என் அம்மா பற்றி கதைக்க யாருக்கும் தகுதியில்லை முதலில் நீங்கள் ஒரு பெண் தானா என பரி சோதித்துக் கொள்ளங்கள்.

எங்கள் வீரத்தை விமர்சிக்க உங்களுக்கு தகுதியில்லை எதற்கும் நீங்கள் ஒரு நல்ல மனநல வைத்தியரை பார்க்கலாம். ஏனெனில் ஒரு பெண் கடைசி வரையும் இப்படி கதைக்க சந்தர்ப்பமே இல்லை.

நான் அக்கா தங்கையென மதிக்கும் சகோதரிகளே தாய்க் குலங்களே என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் எனது இச்செயற்பாட்டுக்கு என்ன காரணம் என தங்களுக்கு விளங்கியிருக்கும்.

நான் எதிரியாக இதுவரை கருதாதா அம்-மணியே என் கணக்கை மட்டுமல்ல ஒற்றை hair கூட தங்களால் பிடுங்க முடியாது. நாங்கள் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டவர்கள், தன்னம்பிக்கை உள்ளவர்கள், மனிதநேயம் கொண்டவர்கள் முக்கியமாக கடவுளை நம்புபவர்கள். நேற்று எனக்கு உதவிய கடவுளுக்கும் அந்த நேரம் கடவுள் போல வந்து அடையாளம் கண்டு காப்பாற்றிய நிருபனுக்கும் கோடி நன்றிகள் அத்துடன்

சோர்ந்திருந்த என் கரங்களுக்கு இந்தளவு பலம் கொடுத்து இவ்வளவு தட்டச்சிட வைத்து மீண்டும் பதிவுலகம் கொண்டு வந்த அவுஸ்திரேலியாவில் உள்ள பிரபல பெண் பதிவர் அனாமிகா துவாரகனுக்கும் என் நன்றிகள். உங்களை தமிழ் மணம் வாக்குப்பட்டை அன்புடன் அழைக்கிறது ஒடியாருங்கள்.

நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் அடங்கமாட்டோம் அங்கு நடந்த அநீதிகளை உலகக்குக் காட்ட வைக்கத் தான் எங்களை கடவுள் தப்ப வைத்தவன் அவனுக்கான நன்றிக்கடனாகவாவது கடைசி வரை கத்திக் கொண்டே இருப்போம். நாங்கள் வேலியைப் பற்றி கதைத்தாலென்ன மாட்டைப் பற்றிக் கதைத்தாலென்ன நாங்கள் பயிர்களின் பிரதிநிதிகள்...

”மன்னிப்புக் கேட்கத் தெரிந்தவன் மனிதன் மன்னிக்கத் தெரிந்தவன் கடவுள்”

என் அம்மா எனக்கு கடவுள் தான்..

குறிப்பு - இந்த அம்மணியிடம் 27 கருத்துக்கள் இட்டேன் அத்தனையும் பிரசுரிக்கப்படவில்லை அதன் பிறகே பதிவிட வேண்டும் என முடிவெடுத்தேன். யாரும் சந்தேகிக்க வேண்டாம் இவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் உருவம் கொண்டவர் தான். நீங்கள் என் அம்மாவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டால் இந்தப் பதிவை தணிக்கைப்படுத்த தயாராகவே இருக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.