Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தின் சிவனாலயங்கள் பாகம் 02

Featured Replies

800pxkoneswaram.jpg

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலையில் உள்ளது திருக்கோணேஸ்வரம் . இது திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் இங்கு நடைபெறும் தெப்பத்திருவிழா பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாகும் . இந்தத் திருவிழாவை வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களே நடாத்துவார்கள் . தெப்பத்திருவிழா அன்று திருகோணமலையைச் சுற்றியள்ள அனைத்துக் கிராமங்களில் உள்ள படகுகளும் அணிவகுக்க , எம்பெருமான் தெப்பத்தில் கடலைச்சுற்றி வருவார் . இக்கோயிலின் தீர்த்தம் பாவனாசம் என அழைக்கப் படுகின்றது. இதன் அர்த்தம் இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் செய்த பாவங்கள் எல்லாம் கழுவித் தீர்க்க வல்லதுமாகும்.

இலங்கையின் கிழக்கு மாகணத்தின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக திருக்கோணேஸ்வரமும் விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன.

கி.பி. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்ஸ்ரான் ரைண்டீசா கோயிலை இடித்து கோவிலில் இருந்த கல்வெட்டுப் பிரதியொன்றினை போர்த்துக்கேய மன்னனுக்கு அனுப்பி வைத்தான்.கோயிலின் மூல விக்கிரகம் நகர உலா சென்றபோது போர்த்துக்கேயர் கோவில் குருமார் போன்று வேடம் தரித்து கோயிலினுள் புகுந்து அதன் சொத்துக்களை கொள்ளையிட்டதுடன் கோயிலையும் அழித்தனர். அழிக்கப்பட கற்களைக் கொண்டு திருகோணமலைக் கோட்டையையும் கட்டினர். இந்தக்காலப்பகுதியில் பல பெளத்த இந்து ஆலயங்கள் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோட்டை சுவரில் "முன்னே குளக்கோட்டன் ..." எனும் கல்வெட்டு காணப்படுவதும், கயல் சின்னம் (பாண்டியருடயது) பொறிக்கபெற்றிருப்பதும் இக்கோவிலின் தொன் பெருமையை உணர்த்தும்.

காலவோட்டத்தில் கல்வெட்டு சிதைந்த போதும் பலர் அக்கல்வெட்டினை பலர் வெற்றிடம் நிரப்பி புரிந்து கொள்ள முயற்சி செய்துள்ளனர். அவற்றில் ஒன்றே கீழ்க் காணுவது:

"முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை

பின்னே பறங்கி பிரிக்கவே

பூனைக்கண் புகைக்கண் செங்கண் ஆண்ட பின்

தானே வடுகாய் விடும் "

440px1.jpg

இங்கு குளக்கோட்டன் என்பானே இக்கோவிலிற்கு திருப்பணி செய்தான் எனப்படுகிறது. குளமும் (கந்தளாய்க் குளம்), கோட்டமும் கட்டுவித்ததால் இயற்பெயர் மறைந்து குளக்கோட்டன் எனும் பெயர் வழங்குவதாயிற்று.

திருகோணமலையிலிருந்து கொழும்பு செல்லும் வழியில் தம்பலகாமம் எனும் தமிழ் கிராமம் உள்ளது. இங்கே ஆதி கோணேச்சரம் என ஒரு கோயில் உள்ளது. போர்த்துக்கேயர் திருகோணமலையில் ஆலயத்தை அழித்தபோது சில நலன் விரும்பிகள் சில விக்கிரகங்களை மறைத்து காப்பாற்றினர். அவ்வாறு காப்பாற்றப்பட்ட விக்கிரகமே பின்பு தம்பலகாமத்தில் பிரதிட்டைசெய்யப்பட்டது. ஆதிகோணேச்சரம் என்றறியப்படும் இக்கோவிலை தம்பலகாமத்தில் காணலாம்.

மீண்டும் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு சுமார் 450 வருடங்களின் பின்னர் 1952 ல் திருகோணமலையில் உள்ள பெரியார்களால் மீள கட்டுவிக்கப்பட்டது. முன்னைய கோயிலுடன் ஒப்பிடும் போது இப்போது இருக்கும் கோயில் மிகச்சிறியதே.

இது திருஞான சம்பந்தர் தன் ஞானக் கண்ணால் கோணமாமலையாரை கண்டு களித்து பாடியருளியது.

"சேதுவின்கண் செங்கண்மால் பூசைசெய்த சிவ பெருமானைப் பாடிப் பணிந்து போற்றி வாழ்ந்திருந்த காலத்தில், ஆழிபுடைசூழ்ந்து ஒலிக்கும் ஈழத்தில் மன்னு திருக்கோண மலையை மகிழ்ந்த செங்கண்மழவிடையாரை " வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம்.

scene8.jpg

இதிலே,

" குரைகடலோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே "

என்றும்,

" குடி தனை நெருக்கி பெருக்கமாய் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே "

என்றும்,

" தெழித்துமுன் னரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் செம்பொனு மிப்பியுஞ் சுமந்து கொழித்து வன்றிரைகள் கரையிடைச் சேர்க்குங் கோணமாமலை அமர்ந்தாரே "

என்றும்,

" கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே "

என்றும்,

" விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வன்செருத்தி செண்பகத்தின் குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமாமலை அமர்ந்தாரே "

என்றும்

" துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக் குன்றுமொண் கானல் வாசம் வந்துலவுங் கோணமாமலை அமர்ந்தாரே " என்றும் கோவிலை போற்றி பாடுகிறார்.

மூலம் விக்கிபீடியா

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

சமயகுரவர்கள்

DSC05658.JPG

கருவறை - கோணேசலிங்கம்

DSC05670.JPG

போர்த்துக்கேயரால் முன்னைய ஆலயம் இடிக்கப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் அதன் கற்தூண்

DSC05724.JPG

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் நுணாவிலான் உங்கள் பிற்சேர்க்கைக்கு :) :) :) .

மிக்க நன்றி கோமகன்.

முன்னைய கோணேசர் கோவில் ஆயிரம் கால் மண்டபம் கொண்டதாம். அதனையே போர்த்துக்கீசர் உடைத்தார்கள். இரவு முழுதும் விளக்குகள் எரியுமாம். கோவிலின் வரும்ப‌டிக்கென்றே இராஜராஜ சோழன் பெருமளவு வயற்காணிகளை கோவிலுக்கு கொடுத்ததோடு, பூஜைக்கென்று வட இந்திய பிராமணர்களை சதுர்வேதி மங்களம் என்னும் பெயர் கொடுத்த இடத்தில் குடியேற்றினான்.

கோணேசர் நகர் வலம் வரும் நாட்களில், எங்கும் தோரண‌ங்களும், மின் விளக்குகளும், மணல் தூவிய வீதிகளுமாக ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

நீங்கள் இணைத்த மூன்றாவது படம் "இராவணன் வெட்டு" என்று சொல்லப்படுகின்றது.

கோவிலைச் சூழ போர்த்துக்கீசர் கட்டிய பிரெட்ரிக் கோட்டையின் வாயிற் சுவரில் பாண்டிய மன்னனின் இலட்சினையான இரட்டை மீன் சின்னம் உள்ளது.

கோவிலை உடைத்து அவர்கள் எடுத்த ஒரு கல்லிலேயே இச்சின்னம் இருந்து பின் அவர்கள் கோட்டை கட்ட அக்கல்லை பாவிக்க கோட்டையின் முகப்பிற்கு வந்து சேர்ந்தது.

சோழர்கள் மாத்திரம் அல்ல பாண்டியரும் இக்கோவிலைப் பராமரித்துள்ளனர்.

மூன்று புறமும் மிகவும் ஆழமான கடலால் சூழப்பட்ட மலை உச்சியில் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் இருந்து பார்க்கும் போது திருமலையின் அநேக பகுதிகள் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

‘நிரைகழல் அரவம் சிலம்பொலி அலம்பும்

நிமலர் நீறணி திருமேனி…...

கரைகெழு சந்தும் காரகிற் பிளவும்….

அளப்பரும் கனமணி வரன்றி …

குரைகடல் ஓதம் நித்திலம் கொழிக்கும்….

கோணமாமலை அமர்ந்தாரே!’

திருகோணமலையின் இயற்கை வளம் , மேலுள்ள பாடலில் அழகாகச் சொல்லப்படுகின்றது, கோமகன்!

தொடரட்டும் உங்கள், சிவப்பணி!>

*தேவாரப்பாடல் பெற்ற தலமான திருகோணேஸ்வரத்தின் தீர்த்தோற்சவ நாளை முன்னிட்டு

இப்பதிவு: தீர்த்தத்தின் பெயர்: பாவநாசம்(செய்கின்ற பாவதோஷங்கள் நீராடினால்

விலகும் ஆனால் உள்மன சுத்தத்தோடு நீராடவேண்டும்)*

**

சிவஸ்தலம் பெயர் : திருக்கோணமலை இறைவன் பெயர் : திருக்கோணேஸ்வரர் இறைவி

பெயர் : மாதுமையாள் எப்படிப் போவது : திருக்கோணேஸ்வரத்திற்கு இரயில் மூலம்

கொழும்பிலிருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்தும் போகலாம். பேருந்து வசதிகளும்

உள்ளது. திருக்கோணமலை இரயில் நிலையத்திலிருந்து கோயிலுக்கு நடந்து

போகலாம். சிவஸ்தலம்

பெயர் : திருக்கோணமலை பூமத்தியரேகை

அட்சரேகை-8.570964 தீர்க்கரேகை-81.231322

*தல* *வரலாறு*

-

இக்கோயிலின் *வரலாறு* 3287 ஆண்டுப் பழமை வாய்ந்ததாகும். இதற்கு திரிகூடம்

என்றும் பெயருண்டு.

- சுவாமிக்கு விளக்கேற்றுவதற்குப் போதியளவு நெய்யும் திரியும் கிடைப்பதற்கு

வழிவகுத்தவர்கள், தாமரைத் தண்டின் நூலெடுத்து திரிசெய்தார்கள்; அந்த ஊர்

இன்றும் "திரிதாய்" என்று வழங்குகின்றது.

- போத்துக்கேயர் 1624 ஆம் ஆண்டில் இத்திருக்கோயிலை பாழ்செய்துள்ளனர். அன்று

அருணகிரிநாதர் மனமுருகிக்கண்ட தலத்தாறு கோபுரத்தழகைப் பறங்கியர்களின் தளபதியும்

பார்த்துருகியுள்ளான். அவன் தன் படையில் ஓவியம் வல்லானைக் கொண்டு அவற்றின் அழகை

ஓரளவு வரைந்து எடுத்துக்கொண்ட பின்பே கோயிலைத் தரைமட்டமாக்க உத்தரவு

பிறப்பித்தான்.

- அந்தக் கோபுரத்தழகைக் காட்டும் சித்திரம் இன்றும் விஸ்பன் நகரில் உள்ளது

என்பர்.

- சுதந்திரம் பெற்றபின் 1950ஆம் ஆண்டில், கோயில் இருந்த நிலத்தில் ஆலயம்

அமைக்க முற்பட்டுக் காசியிலிருந்து சிவலிங்கப்பெருமானை எழுந்தருளச்

செய்தார்கள்.

- அக்காலத்தில் நகரசபையார் கிணறு தோண்ட முயன்றபோது மூன்றடி தோண்டிய வேளையில்

சிவனருளோ என்று கண்டவர்கள் அதிசயிக்கும் வண்ணம் மாதுமையாள் சமேத கோணேசுவரப்

பெருமானோடு, சந்திரசேகரர், பார்வதியார், பிள்ளையார், அஸ்திரதேவர் முதலாய

தெய்வத்திருவுருவங்கள் வெளிப்பட்டன.

- அவையாவும் அண்மைக் காலத்திலமைக்கப் பெற்ற திருக்கோயிலில் ஆங்காங்கே

எழுந்தருளச் செய்யப்பெற்றுள்ளன.

- முன்னொரு காலத்திலேயே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருக்கோணமலையிலே

உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெருங்கோயில்கள் இருந்தன

என்பர்.

- கோயிலை பறங்கியர் பாழ்படுத்திய வேளையில் பக்தர்களாகிய பாசுபதவிரதிகளும்

பணியாளரும் பதைத்துருகித் திருக்கோயிலிலிருந்த திருவுருவங்களை எடுத்துச் சென்று

அயலிலுள்ள கிணறுகளிலும் குளங்களிலும் பாதுகாப்புக்காக இட்டார்கள். அவர்கள் ஒரு

திருவுருவத்தை அயலூரான தம்பலகாமம் என்னும் மருதவளம் நிறைந்த ஊரில் மறைத்து

வைத்து மிகவும் இரகசியமாக வழிபாடு செய்து வந்தவர்கள்; அந்த இடத்தை ஆதிகோணநாயகர்

கோயில் என வழங்கி வணங்கினார்கள். அது ஆதி கோணநாயகர் ஆலயமாகவே பழைய கோணேசுவரர்

ஆலயத்துக்குச் சொந்தமான மானியங்களிற் பெரும்பகுதி தம்பலகாமத்திற்கு சேர்ந்தன.

- முதற்பராந்தக சோழனுக்கு அஞ்சிய பாண்டியன் இலங்கையில் பாதுகாப்புக்காக

புகுந்திருந்த காலத்தில் தம்பலகாமத்தில் திருப்பணிகள் செய்ததாக

*வரலாறு*கூறுகிறது.

சிறப்புக்கள்

-

உலகப்புகழ் பெற்ற திருக்கோணமலை மாவட்டத்தில் அறுபதுக்கும் அதிகமான

சைவக்கோயில்கள் உள்ளன.

- சைவம் கமழும் தமிழ்த் திருநாமங்கள் தாங்கிய பழைய ஊர்களில் செந்நெல்லும்,

கரும்பும், தென்னையும் செழித்து வளருகின்றன.

- மிகப்பழைய காலத்து, இதிகாச நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்றன என்பதற்கு

நிரம்பிய ஆதாரங்கள் இங்கே உள்ளன.

- குளக்கோட்டு மன்னன் செய்த தொண்டுகள் பலவற்றின் சுவடுகள் இன்றும் அறியக்

கூடியனவாயுள்ளன.

- இங்கே எங்கு நோக்கினாலும் சைவத் தமிழ்ப் பெயர்களே கேட்கின்றன.

- இன்றைக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே திருக்கோணேஸ்வரம் தேவாரம் பெற்ற

திருத்தலமாக ஒளிவீசியது.

- பாண்டியன் திருக்கோணமலையில் 'இணைக்கயல்' பொறித்துள்ளமை வரலாற்றுப்

பெருமையாகும்.

- ஐம்பொன்னாலான அழகு மிக்க மூர்த்தங்கள் இருக்கும் மண்டபம் - தேவ மண்டபம்,

கண்கொள்ளாக்காட்சி தருவதாகும்.

- பறங்கியருக்குப் பின் ஆங்கியேர் காலத்தில் கிடைத்த வழிபாட்டு

அனுமதியின்போது நடைபெற்ற மலைபூசை ஆகாச வெளியில் இன்றும் நடைபெற்று வருகின்றது.

- நாடொறும் ஆறுகால பூசை ஆகம விதிகளின்படி தவறாமல் நடைபெறுகின்றன.

- திருக்கோணேசப் பெருமானின் விழாக்களில் வெளிவாரியாக நடைபெறுவது ஆடி அமாவாசை

விழாவாகும். கடலில் தீர்த்தமாடுவதற்கு பெருமான் எழுந்தருளும்போது, நகரிலுள்ள

ஆலயங்களின் மூர்த்திகளும் தீர்த்தமாட அங்கே எழுந்தருளுவார்கள்.

- ஆடி மாதம் போலவே, மகாமகத் தீர்த்த விழா, பங்குனி மாதத்தில் பூங்காவன

மற்றும் தெப்பத் திருவிழா, மார்கழியில் திருவெம்பாவை விழா ஆகியன சிறப்பாக

கொண்டாடப்படுகிறது.

- நவராத்தி நாட்களில் ஸ்ரீ சக்ரபூஜை வெகுசிறப்பாக நடைபெறுகிறது.

- ஆதிகோண நாயகர் திருக்கோயில் கற்கோயிலாகும்.

- திருக்கோணேஸ்வரத்தின் தொல்புகழ் பாடும் தேவாரம், திருப்புகழ் தவிர பல

புராணங்களும், பிரபந்தங்களும், கல்வெட்டுச் செய்திகளும் உள்ளன.

அமைவிடம் இலங்கையின் கீழ்த் திசையில் அமைந்துள்ள இயற்கை எழில் மிக்க நகரம்

திருகோணமலை. இலங்கையின் மிகப் பெரிய நதியாகிய மகாவலிகங்கை அவ்விடத்திற் கடலுடன்

கலப்பதால் அப்பிரதேசம் நீர் வளமும் நில வளமும் பெற்றுச் சிறந்து

விளங்குகின்றது. அங்கு சுவாமிமலை என்று வழங்குகின்ற உயர்ந்த குன்றம் ஒன்று

கொட்டியார விரிகுடாவை நோக்கியவாறு அமைந்துள்ளது. அதன் உச்சியிலே

திருக்கோணேச்சரக் கோயில் உள்ளது. அது அண்மைக் காலத்தில் எழுப்பப்பட்ட புதிய

கோயிலாகும்.

பண்டைய *வரலாறு* வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கோயில் ஒன்று சமுத்திர

ஓரத்தில் அந்த மலையின் அடிவாரத்தில் இருந்ததென நம்பப்படுகின்றது. அது கி மு 306

இல் நிகழ்ந்த கடல் கோளினாற் சமுத்திரத்தினுள் மூழ்கிவிட்டது. தெனன்று என்னும்

வரலாற்றாசிரியர் எழுதிய இலங்கைச் சரித்திரம் என்னும் நூல் இவ்வாறு

நிகழ்ந்ததெனக் கூறுகின்றது. ஆழ்கடலில் அமர்ந்திருக்குங் கோணேச்சரப்

பெருமானுக்கு இன்றும் மலைப் பூசை ஒன்று செய்யப்படுவதை நாம் காணலாம். மலையின்

அடியில் ஆழ்கடலுக்கு எதிரே மலைக்குகை போன்று பண்டைக்கோயிலின் மூலத்தானத்தின்

ஒரு பகுதி இன்னமும் எஞ்சியிருக்கின்றது. அது பல்லவர் காலக் குகைக் கோயில்

போன்றது. அக்கோயிலின் மிகுதி சமுத்திரத்தின் அடியில் உள்ளதென 1961 இல் ஆழ்கடல்

ஆராய்ச்சி செய்த மக்வில்சன் என்பர் கூறியுள்ளார்.

இராவணன் தென் இலங்கையை ஆட்சி செய்த காலத்திலே தட்சிண கைலாயம் எனப்

போற்றப்படுகின்ற திருக்கோணேச்சரத்தைப் பூசித்து வந்தான் என்று மட்டக்களப்பு

மான்மியம் என்னும் நூல் கூறுகின்றது. இராவணன் தன் தாயாருக்குச் சிவலிங்கம்

ஒன்று பெற விரும்பிப் பெயர்த்த மலை தட்சிண கைலாயமாகிய கோணமாமலை என்று தட்சிண

கலாய புராணங் கூறுகின்றது. இதற்குச் சான்று பகர்வது போன்று இம்மலைப் பாறையில்

இராவணன் வெட்டு என்ற பெயருடன் மலைப் பிளவு ஒன்று இன்னமும் இருக்கின்றது.

இராவணன் கிறிஸ்து யுகத்துக்கு மிகவும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்தவன் என்றும்

அவனுடைய காலத்துக்குப் பின் கடல்கோள் ஒன்று நிகழ்ந்தது என்றும் ராஜாவளிய

என்னும் புத்த சமய வரலாற்று நூல் கூறுகின்றது.

கடல்கோளுக்குப் பின் மீண்டுஞ் சுவாமிமலை உச்சியில் அமைக்கப்பட்ட கோயில் கி பி

7ம் நூற்றாண்டிற் சீருஞ் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தது. இதனையே

திருஞானசம்பந்தர் மூர்த்தி நாயனார் தாயினும் நல்ல தலைவர் என்னும் தேவாரத்தில்

கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த கோணாமலையமர்ந்தாரே என்று போற்றிப்

பாடியுள்ளார். சோழர் பாண்டியர் ஆரியச் சக்கரவர்த்திகள் முதலானோர் இக்கோயிலை

ஆதரித்தனர். குளக்கோட்டு மன்னன் குளந்தொட்டு வளம் பெருக்கித் திருப்பணிகள்

பலவுஞ் செய்வித்தவன் என்பது *வரலாறு*. இவன் திருக்கோணேச்சர ஆலயத்துக்குத்

திருப்பணி மட்டுமன்றிச் சோதிட முற்கூறலுடன் அமைந்த கல்வெட்டு ஒன்றினையுஞ்

செய்வித்தான். அது கோட்டை வாயிலிலுள்ள கற் தூண்களிற் பதிக்கப்பட்டு இன்னமும்

இருக்கின்றது. அதனை ஈண்டு நோக்குதல் சாலப் பொருத்தமானது.

முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே மன்னவபின்

பொண்ணா ததனை யியற்றவழித் தேவைத்து எண்ணாரே பின்னரசர் கள்.

என்பது அக்கல்வெட்டு. குளக்கோட்டனின் திருப்பணியால் அமைந்த இவ்வாலயத்தைப்

பறங்கியர் உடைப்பார்கள். பின்னர் அரசர்கள் இதனைப் பேணமாட்டார்கள் என்று இதன்

எதிர்காலம் பற்றி இங்கு குறிப்பிட்டிருத்தல் வியப்புக்குரியது.

இக்காலத்திற் சிவராத்திரி தினத்திற் கோணேச்சரப் பெருமானுக்கு நகர்வலம் வருதல்

என்னும் திருவிழா ஒன்று சிறப்பாக நடைபெறுகின்றது. அக்காலத்திலும் இத்தகைய

திருவிழாக்கள் நடைபெற்றன. இவ்வாறாக 1624ம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு நாளில்

நகர்வலம் வருந் திருவிழா ஒன்று நடைபெற்றது. இதற்காக மாதுமை அம்பாள் சமேத

திருக்கோணேச்சரப் பெருமான் திருவுலாவாக அடியார்களுடன் கோயிலிலிருந்து நகருக்கு

எழுந்தருளினார். அவ்வேளையிற் போர்த்துக்கேயப் படைவீரர் பிராமணர்கள் போல வேடந்

தாங்கிக் கும்பிடப்போவது போன்று கோயிலினுட் புகுந்தனர். அந்நேரத்திற் கோயிலின்

உள்ளே பூசகர்கள் சிலரும் வேலையாளரும் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

கொன்ஸ்ரன்ரயின்டீசா என்பவனுடுடைய தலைமையிற் சென்ற இப்போர்வீரர்கள்

எதிர்த்தவர்களை வெட்டிக்கொன்றுவிட்டு கோயிலிலிருந்த தங்க வெள்ளி நகைகளையும்

விலைமதிப்புமிக்க பிறபொருள்களையும் சூறையாடிக்கொண்டு சென்றனர். அதன் பின்னர்

அடியார்கள் சில விக்கிரகங்களை அகற்றி மறைத்து வைத்தனர். போர்த்துக்கேயர்

பீரங்கிகளுடன் மீண்டும் வந்து கோயிலை முற்றாக அழித்தனர். போர்த்துக்கேயர்

அழித்த கோயிலில் ஆயிரங்கால் மண்டபமும் பெரியதொரு தீர்த்தக்கேணியும் பிற

மண்டபங்களும் இருந்தன என்பது அவர்கள் வரலாற்றுச் சான்றாக வரைந்து வைத்த படம்

ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது. கொன்ஸ்ரன்ரயின்டீசா செய்த சிவத்துரோகத்துக்காக

அவன் 1630ம் ஆண்டு வேறு சிலர் செய்த சூழ்ச்சியில் அகப்பட்டுக் கொல்லப்பட்டான்.

புதிய கோயிலின் *வரலாறு* 1944ம் ஆண்டு திருகோணமலைக் கோட்டையினுள்ளே

நீர்த்தேக்கம் ஒன்று அமைப்பதற்கு அகழ்வு வேலை செய்தபொழுது விஷ்ணு மகாலட்ஷ்மி

விக்கிரகங்கள் கிடைத்தன. 1956ம் ஆண்டு ஆடி மாதத்திற் சுவாமிமலைக்கு அண்மையிற்

கடற்கரை வீதியருகே கிணறு ஒன்று வெட்டப்பட்டபொழுது மூன்று விக்கிரகங்கள்

கிடைத்தன. வேறோர் இடத்தில் அகழ்ந்தபொழுது மேலும் இரண்டு விக்கிரகங்கள்

கிடைத்தன. இந்த விக்கிரகங்கள் எல்லாம் 1952ம் ஆண்டிற் பிரதிட்டை செய்யப்பட்டன.

1950.07.03 அன்று கலாநிதி பாலேந்திரா அவர்களின் தலைமையிலே திருக்கோணேச்சர ஆலயத்

திருப்பணிச் சபை ஆரம்பமானது. இச்சபையின் பெருமுயர்சியாற் பழைய கோயில் இருந்த

இடத்தில் மீண்டுந் திருக்கோணேச்சரர் ஆலயம் அமைக்கப்பட்டு 1963.03.03 அன்று மகா

கும்பாபிடேகம் நிறைவெய்தியது. பழைய கோயிலுடன் ஒப்பிடும்போது இது சிறிய

கோயிலாகவே இருக்கின்றது.

மூர்த்திச் சிறப்பு இக்கோயிலின் இறைவன் பெயர் திருக்கோணேச்சரர் இறைவி பெயர்

மாதுமை அம்பாள். தலவிருட்சம் கல் ஆலமரம். இப்பொழுதுள்ள கோயிலை அடுத்து

இம்மலையின் வட முனையிற் பாறையினுள் வேர்வைத்து இந்த ஆலமரம் செழிப்பாக வளர்ந்து

நிற்கின்றது. சோழ நாட்டிலே பழையாறை என்பது கி பி 831 இல் சோழர்களின் தலைநகரமாக

விளங்கியது. அங்கு குமராங்குசன் என்னும் அரசன் அப்பொழுது ஆட்சி செலுத்தினான்.

இவனுடைய மகள் சீர்பாததேவி. நகுலேச்சரத் தலவரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள

மாருதப்பூரவீகவல்லி என்பவளுக்கு நரசிங்கன் என்னும் மகன் ஒருவன் இருந்தான். அவன்

சீர்பாததேவியைத் திருமணஞ் செய்தான். இவர்கள் இருவரும் தம் சுற்றத்தாருடன்

இலங்கைக்கு வருவதற்குச் சோழநாட்டிலிருந்து கப்பலிற் புறப்பட்டனர். அப்பொழுது

சீர்பாததேவி இலங்கையின் நாட்டு வளத்தைப் பார்க்க விரும்பினாள். எனவே கப்பல்

இலங்கையின் கிழக்குக் கரையோரமாகப் பயணஞ் செய்டக்து.

கப்பல் திருகோணமலையை அண்மித்தபொழுது திருக்கோணேச்சரந் தென்பட்டது. அரசி

அவ்விறைவரை வணங்கினாள். அதே நேரம் கப்பலும் நங்கூரம் இட்டது போன்று நிலையாய்

நின்றது. அரசி மிகவுந் துயரைடைந்து விக்கினங்களை அகற்றுபவரான விநாயகரைத்

தொழுதாள். பின்னர் படகோட்டியைக் கப்பலின் கீழே சென்று பார்க்குமாறு பணித்தாள்.

கப்பல் தரையிற் பட்டுவிட்டதென்றே அவள் கருதினாள். எனினும் அங்கு தரை

இருக்கவில்லை. ஆயின் கடலில் மிகுந்த ஆழத்தில் விநாயகர் விக்கிரகம் ஒன்று

இருந்தது. அதனை அவள் கப்பலுக்குள் எடுத்தபின்னர் கப்பல் மீண்டும்

ஓடத்தொடங்கியது. இவ்வாறாகக் கடற்கோளால் கீழே சென்ற புராதன ஆலயத்தின் விநாயகர்

விக்கிரகம் இவ்வளவு மகிமை உடையதென்றாற் கோணேச்சரப் பெருமானின் மகிமையைக்

கூறவும் வேண்டுமா?

திருகோணேச்சரப் பெருமான் திருவுலாவுக்கு எழுந்தருளிய பின்னரே போர்த்துக்கேயர்

கோயிலினுட் புகுந்தனர் என்று முன்னர் கூறப்பட்டது. எனவே அந்த விக்கிரகங்கள்

காப்பாற்றப்பட்டிருத்தல் வேண்டும். அவை இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட விநாயகரும்

சோமாஸ்கந்தருமாக இருக்கலாம். இந்த விநாயகர் விக்கிரகம் மிகவும் சிறப்பான

அம்சங்களைக் கொண்டுள்ளது. பழைய கோயிலின் பல விக்கிரகங்கள் தற்செயலாகக் கிடைத்தன

என்பது இறைவனின் செயல். இதுவும் திருக்கோணேச்சரப் பெருமானின் மூர்த்திச்

சிறப்பினையே புலப்படுத்துகின்றது.

தலச்சிறப்பு இந்தத் தலத்தின் சிறப்புக் காரணமாகவே திருஞானசம்பந்தமூர்த்தி

நாயனார் திருக்கோணேச்சரப் பெருமான் மீது தேவாரத் திருப்பதிகம் பாடினார்.

இத்தலத்தின் மகிமையை அடியார்கள் சொல்லக்கேட்டு அவர் இப்பதிகத்தை பாடினார்.

அருணகிரிநாதர் தாம் பாடிய திருப்புகழ் ஒன்றில் "நிலைக்கு நான்மறை மகத்தான

பூசுரர் திருக் முஓனாமலை தலத்தாறு கோபுர" என்று இத்தலத்தை வருணித்துள்ளார்.

குறிஞ்சியும் முல்லையும் நெய்தலும் ஒன்று சேர்கின்ற ஓர் இடத்தில் இத்தலம்

அமைந்துள்ளது. திருக்குணமலை திருக்குணாமலை திருமலை தென் கைலாயம் கோகர்ணம்

திருகூடம் மச்சேஸ்வரம் என்பன இத்தலத்தின் பிறபெயர்கள் ஆகும்.

தீர்த்தச் சிறப்பு இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் எனப்படும். இந்தச் சொல்லின்

பொருளை நோக்கும்பொழுது இக்கோயிலின் தீர்த்தச் சிறப்பு புலப்படும். இங்கு

தீர்த்தமாடுபவர்களின் பாவம் தொலைந்து விடும் என்பது இதன் கருத்து.

சுவாமி மலையின் தென் பக்கத்தில் ஆழமான ஒரு கிணறாகப் பாவநாசத் தீர்த்தம்

இப்பொழுது இருக்கின்றது. இதனைச் சுனை என்று கூற முடியாத அளவுக்கு

போர்த்துக்கேயர் பழைய கோயிலை இடித்து அங்கிருந்த தீர்த்தக்கேணியையும்

சுனையையுந் து}ர்த்துவிட்டனர். இப்பொழுதுள்ள கேணியுந் தீர்த்தக் கிணறுஞ்

சேர்ந்த பெரிய கேணி ஒன்று முன்பு இருந்ததென ஊகிக்கப்படுகின்றது. அற்புதமான

இந்தத் தீர்த்தத்தின் ஒரு சிறு பகுதியையாயினும் பாவநாசத் தீர்த்தக் கிணற்றின்

மூலம் திருக்கோணேச்சரர் தம் அடியார்களாகிய நமக்குத் தந்தருளினாரே என்பது இந்தத்

தீர்த்தத்தின் சிறப்பு.

பூசைகள் விழாக்கள். இங்கு ஆறுகாலப் பூசைகள் இப்பொழுது நடைபெற்று வருகின்றன.

சிவராத்திரிக் காலத்திலே திருக்கோணேச்சரப் பெருமான் நகரத்தினுள்ளே திருவுலாவாக

எழுந்தருளுதல் கண்கொள்ளாக் காட்சியாகும். இக்கோயிலின் மகோற்சவம் பங்குனி

உத்தரத்திலே தொடங்கிப் 18 நாட்களுக்கு நடைபெறும்.

நூல்கள். *கோணேசர்* கல்வெட்டு இக்கோயிலின் சரித்திரத்தை உரைநடையிலும்

கூறுகின்றது. சீர்பாதகுலவரலாறு மட்டக்களப்பு மான்மியம் ராஜாவளிய மச்சபுராணம்

திருக்கோணாசலப்புராணம் இலங்கைச் சரித்திரம் (தெனன்று) தட்சின கைலாய புராணம்

திருக்கோணமலைத் திருவுருவங்கள் குடுமியா மலைச் சாசனம் திருக்கோணமலைக் கோட்டை

வாயிற் கல்வெட்டு முதலியன இக்கோயில் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைத்

தருகின்றன.. திருக்கோணேச்சரத் தேவாரத் திருப்பதிகம் கோணேஸ்வரர் குறவஞ்சி

திருக்கோணேஸ்வரர் அகவல் திருக்கோணமலை அந்தாதி முதலியன இக்கோயில் மேல் எழுந்த

இலக்கியங்களாகும்.

  • தொடங்கியவர்

மிக்க நன்றி கோமகன்.

முன்னைய கோணேசர் கோவில் ஆயிரம் கால் மண்டபம் கொண்டதாம். அதனையே போர்த்துக்கீசர் உடைத்தார்கள். இரவு முழுதும் விளக்குகள் எரியுமாம். கோவிலின் வரும்ப‌டிக்கென்றே இராஜராஜ சோழன் பெருமளவு வயற்காணிகளை கோவிலுக்கு கொடுத்ததோடு, பூஜைக்கென்று வட இந்திய பிராமணர்களை சதுர்வேதி மங்களம் என்னும் பெயர் கொடுத்த இடத்தில் குடியேற்றினான்.

கோணேசர் நகர் வலம் வரும் நாட்களில், எங்கும் தோரண‌ங்களும், மின் விளக்குகளும், மணல் தூவிய வீதிகளுமாக ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

நீங்கள் இணைத்த மூன்றாவது படம் "இராவணன் வெட்டு" என்று சொல்லப்படுகின்றது.

கோவிலைச் சூழ போர்த்துக்கீசர் கட்டிய பிரெட்ரிக் கோட்டையின் வாயிற் சுவரில் பாண்டிய மன்னனின் இலட்சினையான இரட்டை மீன் சின்னம் உள்ளது.

கோவிலை உடைத்து அவர்கள் எடுத்த ஒரு கல்லிலேயே இச்சின்னம் இருந்து பின் அவர்கள் கோட்டை கட்ட அக்கல்லை பாவிக்க கோட்டையின் முகப்பிற்கு வந்து சேர்ந்தது.

சோழர்கள் மாத்திரம் அல்ல பாண்டியரும் இக்கோவிலைப் பராமரித்துள்ளனர்.

மூன்று புறமும் மிகவும் ஆழமான கடலால் சூழப்பட்ட மலை உச்சியில் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் இருந்து பார்க்கும் போது திருமலையின் அநேக பகுதிகள் தெரியும்.

மிக்க நன்றிகள் ஈசன் உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு . மேலும் , எனது தந்தையார் பிரதம தபாலதிபராக திருகோணமலையில் வேலை செய்தபொழுது , இந்த இடங்கள் என்னை மிகவுங் கவர்ந்தவை . அதிலும் சீனன் குடா சொல்லிவேலையில்லை :) :) :) .

‘நிரைகழல் அரவம் சிலம்பொலி அலம்பும்

நிமலர் நீறணி திருமேனி…...

கரைகெழு சந்தும் காரகிற் பிளவும்….

அளப்பரும் கனமணி வரன்றி …

குரைகடல் ஓதம் நித்திலம் கொழிக்கும்….

கோணமாமலை அமர்ந்தாரே!’

திருகோணமலையின் இயற்கை வளம் , மேலுள்ள பாடலில் அழகாகச் சொல்லப்படுகின்றது, கோமகன்!

தொடரட்டும் உங்கள், சிவப்பணி!>

மிக்க நன்றிகள் புங்கையூரான் உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு :) :) :) .

மிக்க நன்றிகள் சுடலை மாடன் உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கும் , பிற்சேர்க்கைக்கும் . மேலும் , பல காத்திரமான படைப்புகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன் :) :) :) .

நல்ல தகவல்கள் சுடலை மாடன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதிவை ஆரம்பித்த கோமனுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

அத்தோடு சுடலை மாடனுக்கும் மிகுந்த நன்றிகள்

இத்திருத்தலத்தின் பெருமைகளை முழுமையாக இங்கு இணைத்தமைக்கு.

அண்மையில் திருக்கோணேச்சரம், திருக்கேதீச்சரம், மடுமாதா, திருகோணமலையின் சுடுதண்ணீர் கிணறுகள் உள்ள இடம் இப்படி பல இடங்களுக்குச் சென்று வந்தேன். பயணக்கட்டுரை எழுதலாம் என்றால் ஒரு பந்தி எழுதுவதற்குள் இராணுவம் என்ற சொல்லே அப்பந்தியின் முக்கால் பகுதியை விழுங்கிவிடும். ஆதலால் எழுதப்பிடிக்கவில்லை.. எங்களுடைய பிரதேசங்களெல்லாம் பேய்களால் விழுங்கப்பட்டிருப்பதை இன்னும் எத்தனை காலம் சென்றாலும் என்னால் இயல்பாக ஏற்றுக் கொள்ள முடியாது.

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனுக்கும் & சுடலை மாடனுக்கும் நன்றிகள்

Edited by உடையார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.