Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

<p><p>என்னையும் சேர்க்க வேண்டாம்

இதுக்கும் ஒரு பச்சையா?

இதுக்குள்ள ஏதும் தத்துவம் இருந்து நமக்குதான் புரியவில்லையோ?

  • Replies 306
  • Views 28.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இந்த முயற்சிக்கு அனுமதி தந்த யாழ் நிர்வாகத்திற்கு முதற்கண் வணக்கமும், நன்றியும்.

அடுத்ததாக தமது நேரத்தை செலவளித்து இந்த முயற்சிக்கு ஆதரவாக கருத்துக்கள் தந்து ஆக்கமும், ஊக்கமும் வழங்கிய கருத்தாளர்களிற்கு நன்றி.

தமது நேரத்தை செலவளித்து இந்த முயற்சிக்கு எதிராக கருத்துக்களை இங்கு முன் வைத்த கருத்தாளர்களிற்கும் நன்றி. உங்கள் கருத்துக்கள் பல்வேறு வகைகளில் எம்மை சிந்திக்க வைத்து இந்த முயற்சிக்கான எமது அனுசரணை பற்றிய முடிவுகளை எடுப்பதற்கு பல்வேறு வகைகளில் உதவின.

நாம் இந்த முயற்சியை கைவிடவில்லை. ஆனால், பின் தள்ளி போடலாம் என தீர்மானித்து உள்ளோம். எம்மால் அடுத்த வருடமும் இங்கு நிலைத்து இருந்து அனுசரணையை வழங்க சந்தர்ப்பம் ஏற்பட்டால் அப்போது இந்த முயற்சியை சாத்தியம் ஆக்கலாம் என நினைக்கின்றோம்.

எமது இந்த வருடத்திற்கான அனுசரணையில் உங்களால் முடியுமா? ஒரு அறிவுரை = 1 டாலர் இது சனவரி 2012இற்கு ஆனதாகவும், தொடர்ந்து வரும் மாதங்களில்/காலாண்டுகளில் கருத்து வேறுபாடுகள் இன்றி எல்லா யாழ் கள கருத்தாளர்களும் பங்குபற்றி பங்களிப்பு வழங்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு காலாண்டிலும் சிறிய,சிறிய வெவ்வேறு அனுசரணைகளை வழங்கலாம் என்றும் தீர்மானித்து உள்ளோம்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

----

நாம் இந்த முயற்சியை கைவிடவில்லை. ஆனால், பின் தள்ளி போடலாம் என தீர்மானித்து உள்ளோம். எம்மால் அடுத்த வருடமும் இங்கு நிலைத்து இருந்து அனுசரணையை வழங்க சந்தர்ப்பம் ஏற்பட்டால் அப்போது இந்த முயற்சியை சாத்தியம் ஆக்கலாம் என நினைக்கின்றோம்.

----

தமிழரில் உள்ள குணம், குட்டையை குழப்புவது.

ஆழம் தெரிந்து காலை, விட்டீர்கள் என்று நினைத்தேன்.

இப்போது... பின் வாங்குவது தவறு.

உங்கள் முடிவை, மீள் பரிசீலனை செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ளை அடிபிடி ஜாஸ்தியா இருக்கு..! :blink: ஆகவே முதல் பரிசு எனக்கே கிடைக்கும்படி ஆவன செய்ய வேண்டுகிறேன்..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ளை அடிபிடி ஜாஸ்தியா இருக்கு..! :blink: ஆகவே முதல் பரிசு எனக்கே கிடைக்கும்படி ஆவன செய்ய வேண்டுகிறேன்..! :icon_mrgreen:

முதல் பரிசு, செருப்படியாம்... :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பரிசு, செருப்படியாம்... :D:lol:

:o ஓ.. இப்பத்தானே விளங்குது ஏன் கொஞ்சப்பேர் ஜகா வாங்கினம் எண்டு..! :unsure: நானாத்தான் வந்து மாட்டுப்பட்டிட்டனா? :unsure:

இதுக்குள்ளை அடிபிடி ஜாஸ்தியா இருக்கு..! :blink: ஆகவே முதல் பரிசு எனக்கே கிடைக்கும்படி ஆவன செய்ய வேண்டுகிறேன்..! :icon_mrgreen:

இன்று வெள்ளிக்கிழமை எனவே இந்த பரிசை இப்போதைக்கு ஏற்கவும் :rolleyes:

37 ஆம் நிமிடம் தொடக்கம் 57 ஆம் நிமிடம் வரையான பகுதி சிறப்பு ப்பரிசாக வழங்கப்படுகின்றது :D

  • கருத்துக்கள உறவுகள்

:o ஓ.. இப்பத்தானே விளங்குது ஏன் கொஞ்சப்பேர் ஜகா வாங்கினம் எண்டு..! :unsure: நானாத்தான் வந்து மாட்டுப்பட்டிட்டனா? :unsure:

என்ன... செய்யிறது இசை, விதி யாரை விட்டு வைத்தது :rolleyes: .

உங்களின் பூர்வஜென்ம பலனின் படி, வாங்குறதை.... புதுச் செருப்பாலை வாங்குங்கள். :D:lol::icon_mrgreen::icon_idea:

  • தொடங்கியவர்

தமிழ் சிறி கருத்து களத்தில் வெவ்வேறு கருத்துக்கள் வருவது அது கருத்து களம் என்பதை காட்டுகின்றது. இங்கு நாங்கள் இந்த முயற்சியை பின் தள்ளி போட்டமைக்கான பிரதான காரணங்கள் :

கருத்தாளர்கள் கருத்து களத்தின் பங்காளிகள். அவர்களில் ஒருவருக்கு மாதம் ஒரு தடவை ஊக்கம் கொடுத்து அன்பளிப்பு சான்றிதழ் வழங்குவது யாழ் கருத்து களம் முன்னேற உதவும் என்று நினைத்தோம்.

ஆனால் அதை பெற்று கொள்ள அவர் முன்வராவிட்டால் முயற்சி தேக்க நிலை அடையும் என நினைக்கின்றோம். ஒருவர் பின் நிற்பது தொடர்ந்து வரும் மாதங்களில் தெரிவு செய்யப்படும் மற்றவர்களுக்கும் அன்பளிப்பு சான்றிதழை புறக்கணிக்க வேண்டும் அல்லது தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தை அவர்களிற்கு கொடுக்கலாம். அவ்வாறே அன்பளிப்பு சான்றிதழை பெறுபவரை யாராவது விமர்சனம் செய்து அவருக்கு இடைஞ்சல் வரக்கூடுமோ என்றும் யோசிக்கின்றோம்.

இங்கு யாழ் தகவல் சேவை மடல் ஊடாகவே கருத்தாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும். இதற்கு அனைவரும் எவ்வளவு ஒத்துழைப்பு தருவார்கள் என்பது சந்தேகமாக இருக்கின்றது. மாதம் ஒரு தடவை தெரிவு செய்யப்படுபவர் எமது மடலுக்கு பதில் அளிக்காவிட்டால் அல்லது அன்பளிப்பை பெறுவதற்கான மின்னஞ்சல் முகவரி, நாடு விபரத்தை அறிய தராவிட்டால் அது இந்த முயற்சியில் ஒரு தேக்க நிலையை உருவாக்கும்.

அடுத்த வருடம் என்றால் நாம் இந்த வருடம் வழங்கும் அனுசரணை எமது நிறுவனத்தின் மீதான நம்பிக்கை தன்மையை கருத்தாளர்களிற்கு இப்போது உள்ளதை விட அதிகம் ஊக்குவிக்கும் என்று நினைக்கின்றோம். அச்சமயத்தில் இந்த முயற்சியை மேற்கொள்வது இலகுவாக அமையும் என நினைக்கின்றோம்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்து, நீங்கள் கனக்க யோசிக்கிறீங்கள்... புரிந்து கொள்கின்றேன்.

ஆனால்... சொன்ன வார்த்தை, தவறப் படாது.

நீங்கள் அறிவித்த பரிசில்களை கொடுத்தே... ஆக வேண்டும்.

மீறி, யாரும் எதிர்ப்பு தெரிவித்தால்....

யாழ் களமாளுமன்றம் தனது, நடவடிக்கையை... (கீ) போட்டில் எடுக்கும்.

  • தொடங்கியவர்

சரி தமிழ் சிறி ஒரு சவால்.

நீங்கள் மேலே எழுதியுள்ள கருத்து இல:85 இற்கு ஆக குறைந்தது 10 பச்சை வாக்குகள் கிடைத்தால்/கிடைத்ததும் நாம் பரீட்சார்த்தமாக சனவரி 2012 மாதத்திற்கான அனுசரணையை இந்த முயற்சி சம்பந்தமாக எடுக்கின்றோம்.

பச்சை வாக்குகள் என்பவை Genuine ஆனவை அல்ல என்பதை ஒரு விதத்தில் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தாலும் மறுபுறத்தில் அதையும் யாழ் கருத்து களத்தை ஊக்கப்படுத்தும் அம்சமாகவே பார்க்கவும் வேண்டி உள்ளது.

உங்களிற்கு 10 பச்சை வாக்குகள் கிடைப்பது 10 வெவ்வேறு உறுப்பினர்கள் ( ஒருவர் பல என்றாலும் இங்கு அந்த பலதையும் யாழ் கருத்து களத்தை முன்னேற்றும்/ஆர்வத்தின் ஒரு அம்சமாகவே பார்க்க வேண்டி உள்ளது. ) ஏறக்குறைய உங்கள் கருத்தை ஆமோதிப்பது போல் அமையும்.

Testing 2 :-> Success :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

கருத்து இல:85 இற்கு இது வரை ஐந்து பச்சை புள்ளிகளே கிடைத்து உள்ளன.

நாம் குறித்த இந்த அனுசரணையை செய்தாலும்/செய்யாவிட்டாலும் எமது திட்டப்படி தீர்மானிக்கப்பட்ட வெவ்வேறு பிரிவுகளில் மாதம் ஒரு தடவை 12 கருத்துக்களை தெரிவு செய்து அவற்றில் அதிக பச்சை புள்ளிகள் பெறும் கருத்திற்கு ஊக்கம் அளிக்கலாம் என்று நினைத்தோம். நாம் 12 கருத்துக்களை தெரிவு செய்வது கனடாவில் இயங்கும் வியாபார நிறுவனம் எனும் வகையில் சட்டரீதியாக எமக்கு எதிர்காலத்தில் தீங்குகள் ஏற்படாத வகையில் அனுசரணையை செய்வதற்கு உதவும் என்றும், சிறந்த தெரிவை பச்சை புள்ளிகளின் அடிப்படையில் தீர்மானிப்பது எல்லா கருத்தாளர்களின் பங்களிப்பு/participation, ஊக்கம், ஆதரவு இவற்றின் அடிப்படையில் ஒரு சமநிலையையும்/balance ஏற்படுத்தும் என்றும் நினைத்தோம்.

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்து பரிசு திட்டத்தை கைவிடப் போகிறார் போல்... உள்ளது.

ஒருவருக்கும் பரிசு வேண்டாமா... என்பதை, நீங்களே தீர்மானியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு பச்சை போட்டிட்டன்.......

ஒரு புது முயற்சி ஒன்று வரும் போது அது நல்லதா கெட்டதா என்று ஏதும் தெரியாமல் ஒரேயடியாக அப்புது

முயற்சியை நிராகரிச்சு ஒன்றுமே இல்லாமல் ஆக்கியாச்சு உங்களுக்கு பிடிக்கலை எண்டால் விலகி இருக்கலாம்

பந்தி பந்தியாக கருத்து எழுதி இம் முயற்சியை நிறுத்திய இருவரும் எதை தான் சாதிச்சீங்க இதனால்

பயனடைய கூடியவர்களுக்கும் பயனடைய முடியாமல் பண்ணிடீங்க வாழ்க உங்கள் சேவை ..

இனிமேல் இப்பிடியான புது முயற்சிகள் எடுக்கும் எல்லோருமே நிறைய யோசிப்பார்கள்...... என்னவோ போங்க..

நன்றிகள் சகாரா அக்காவுக்கும் தமிழ் சிறி அண்ணாக்கும் கடைசி வரைக்கும் ஆதரிச்சதுக்கு

  • தொடங்கியவர்

கருத்து இல: 85 இற்கு இதுவரை 9 வாக்குகள் கிடைத்துள்ளன. நாம் முன்பு குறிப்பிட்டது போல் எமது தயக்கத்திற்கான பிரதான காரணம் இந்த அனுசரணைக்கு கருத்தாளர்களின் பங்களிப்பு எவ்வளவு தூரம் காணப்படும் என்பதுவே. இதனாலேயே கருத்து இல: 85 இற்கு 10 பச்சை புள்ளிகள் கேட்டோம். பலர் ஆர்வத்துடன் பங்கு பற்றினால் மட்டுமே இந்த முயற்சியை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும். இம் மாதம் நிறைவு அடைவதற்கு இன்னும் ஐந்து நாட்கள் உள்ளன. பரீட்சார்த்த முயற்சியில் ஈடுபடுவதற்கு கருத்தாளர்களின் பங்களிப்பை,ஆர்வத்தினை தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பத்தாவதை நான்போடுகின்றேன்.

ஒரு முயற்சியை பரீசீலிக்காமலே முடக்கக்கூடாது என்பதற்காக. தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்து பரிசு திட்டத்தை கைவிடப் போகிறார் போல்... உள்ளது.

ஒருவருக்கும் பரிசு வேண்டாமா... என்பதை, நீங்களே தீர்மானியுங்கள்.

சிறி எனக்கும் பரிசுக்கும் வெகு தூரம்.என்றாலும் இவரின் முயற்சிக்கு நான் முட்டுக்கட்டை இல்லை.அதால உங்களுக்கு ஒன்டு குத்தியுள்ளேன்.பச்சை தான். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்து, நீங்கள் கனக்க யோசிக்கிறீங்கள்... புரிந்து கொள்கின்றேன்.

ஆனால்... சொன்ன வார்த்தை, தவறப் படாது.

நீங்கள் அறிவித்த பரிசில்களை கொடுத்தே... ஆக வேண்டும்.

மீறி, யாரும் எதிர்ப்பு தெரிவித்தால்....

யாழ் களமாளுமன்றம் தனது, நடவடிக்கையை... (கீ) போட்டில் எடுக்கும்.

:lol: :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

இந்த முயற்சி முன் எடுக்கப்படுவதற்கு ஆதரவும்,பங்களிப்பும் தரும் எல்லாருக்கும் நன்றி.

வாழிய வாழியவே பகுதியில் இதற்கு என ஒரு தலைப்பை தொடங்கலாம் என்று நினைக்கின்றோம். யாழ் இணையம், யாழ் கருத்தாளர்கள், அனுசரணையாளர், சிறந்த கருத்துக்களை எழுதியோர் ஆகியோரை பிரசன்னம் செய்யும் வகையிலான ஒரு கவர்ச்சிகரமான/சுவாரசியமான title/தலைப்பு பெயர் இதற்கு தேவை. இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர் எனும் பெயரை மாற்றி நீங்கள் பிரேரணை செய்யும் ஒரு பெயருக்கு வாழிய வாழியவே பகுதியில் பின்னர் ஒரு தலைப்பு ஆரம்பிக்கப்படும். ஒவ்வொரு மாதமும் 2012 Feb தொடக்கம் 2013 Jan வரை 6 ம் திகதி அளவில் முன்னைய மாதத்தின் தெரிவுகள் (12 சிறந்த கருத்துக்கள் + அத்துடன் வெகுமதியை பெற்று கொள்ளும் கருத்து ) இந்த பகுதியில் இடப்படும்.

வாழிய வாழியவே பகுதியில் இப்படியான ஒரு தலைப்பை வரும் மாதம் Feb 6ம் திகதி தொடங்குவதற்கு யாழ் இணையம், யாழ் கருத்தாளர்கள், அனுசரணையாளர், சிறந்த கருத்துக்களை எழுதியோர் ஆகியோரை பிரசன்னம் செய்யும் வகையிலான ஒரு கவர்ச்சிகரமான/சுவாரசியமான(சற்று நகைச்சுவையாக இருந்தாலும் பரவாயில்லை) title/தலைப்பு பெயரை சிபாரிசு/பிரேரணை செய்து இந்த முயற்சிக்கு ஊக்கம் அளிக்குமாறு கேட்டு கொள்கின்றோம்.

இங்கு ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் நீங்கள் விரும்பும் மூன்று கருத்துக்களின் லிங்குகளை (முன்பு குறிப்பிடப்பட்ட பிரிவுகள் மட்டும் அத்துடன் ஒரு கருத்தாளருக்கு மூன்று லிங்குகள் மட்டும்) இணைத்து மற்றவர்களின் கருத்துக்களை பிரேரணை செய்யலாம். நீங்கள் பிரேரணை செய்யும் கருத்துக்களில் நமது நிறுவனத்திற்கு எதிர்காலத்தில் சட்டரீதியாக ஏதும் தீங்கு ஏற்படாத வகையிலான 12 கருத்துக்களை நாம் தெரிவு செய்வோம். அந்த 12 கருத்துக்களில் அதிக பச்சை புள்ளி பெறும் கருத்து வெகுமதியை பெறும்.

அனுசரணை பற்றிய மிகுதி விரிவான விபரம் பின்னர் தொடரும்.

அதற்கு முதலில் நல்லதொரு பெயரிலான தலைப்பை வாழிய வாழியவே பகுதியில் வரும் மாதம் 6 ம் திகதி ஆரம்பிப்பதற்கு பெயர் சூட்டுவதில் உங்கள் உதவியை தாருங்கள்.

நன்றி

Edited by போக்குவரத்து

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்தின் பரிசுத் திட்டத்தை, தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல ஆதரவளித்த...

புலி, சுண்டல், அபராஜிதன், விசுகு, சஜீவன், தமிழரசு ஆகியோருக்கும், மற்றைய கள உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.thanks.gif

பரிசு வழங்க, மனமுவந்து முன் வந்த... போக்குவரத்துக்கு யாழ் களமாளுமன்றின் சார்பில் விசேட நன்றிகள். :)

THANKS2520smiley2520rainbow2520wave.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

----

வாழிய வாழியவே பகுதியில் இப்படியான ஒரு தலைப்பை வரும் மாதம் Feb 6ம் திகதி தொடங்குவதற்கு யாழ் இணையம், யாழ் கருத்தாளர்கள், அனுசரணையாளர், சிறந்த கருத்துக்களை எழுதியோர் ஆகியோரை பிரசன்னம் செய்யும் வகையிலான ஒரு கவர்ச்சிகரமான/சுவாரசியமான(சற்று நகைச்சுவையாக இருந்தாலும் பரவாயில்லை) title/தலைப்பு பெயரை சிபாரிசு/பிரேரணை செய்து இந்த முயற்சிக்கு ஊக்கம் அளிக்குமாறு கேட்டு கொள்கின்றோம்.

----

அதற்கு முதலில் நல்லதொரு பெயரிலான தலைப்பை வாழிய வாழியவே பகுதியில் வரும் மாதம் 6 ம் திகதி ஆரம்பிப்பதற்கு பெயர் சூட்டுவதில் உங்கள் உதவியை தாருங்கள்.

நன்றி

போக்குவரத்து கேட்டுக் கொண்டதிற்கு இணங்க....

எனது மனதில் பட்ட தலைப்பு இது.

இவர் தான்... யாழின் பொற்கிளி.(ழி) :D

  • தொடங்கியவர்

கிளி பச்சை நிறம். பச்சை புள்ளிகளின் எண்ணிக்கையில் தெரிவு நடைபெற உள்ளது. ஆகவே, பொற்கிளி எனும் பதம் நன்றாக உள்ளது. இதை சற்று விரிவாக்கம் செய்து

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் பொற்கிளி(ழி)கள் பன்னிரண்டு!!!!!!!!!!!!

இந்த தலைப்பு எப்படி உள்ளது? இந்த பரீட்சார்த்த முயற்சி 12 தடவைகள் எடுக்கப்பட உள்ளது, அத்துடன் 12 கருத்துக்கள் ஒவ்வொரு தடவையும் தெரிவு செய்யப்பட உள்ளது. எனவே பொற்கிளிகள் பன்னிரண்டு என்பதை சேர்க்கலாம். CarDriving.CA எனும் பதத்தை சேர்ப்பது எமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் என நினைக்கின்றோம். நகைச்சுவைக்காக 'ழி' யை அடைப்புள்ளே போடலாம்.

இதில் ஆட்சேபணை ஏதும் இருப்பின் அல்லது திருத்தம் ஏதும் செய்ய வேண்டுமாயின் உங்கள் கருத்துக்களை அறியத் தாருங்கள்.

நன்றி

Edited by போக்குவரத்து

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறீ ...பாராட்டுக்கள். இவர் ......தெரிவித்த சொற்பதத்தை ஆதரிக்கிறேன்

பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.